Home / BookFair2011

BookFair2011


Also look at: Chokkan's compilation of Book releases
சென்னை புத்தகக் கண்காட்சி 2009இன் பதிவுகள். திட்டமிடுவதற்கும் புருவமுயர்த்துவதற்கும் பயன்படும்!
கடந்த வருடங்களில் வலைப்பதிவுகளில், வலைத்தளங்களில், பத்திரிகைகளில் வெளிவந்த புத்தக மதிப்புரைகள், அறிமுகங்கள் (12345678910111213, 14, 15)
ஜெயமோகன் புத்தகங்கள்
இளமை விகடனில் வெளிவந்த கி.கார்த்திகேயனின் புத்தக அறிமுகங்கள்

சென்னை புத்தக கண்காட்சியில் ஜெயமோகன் புத்தகங்கள் கிடைக்குமிடங்கள்
உடுமலை.காம் – 302 (எல்லா புத்தகங்களும்)
தமிழினி பதிப்பகம்- 354 , 355 (புதிது : இரவு – நாவல்)
கிழக்கு பதிப்பகம் –
F13 (புதிது : உலோகம்- நாவல்)
 கொற்றவை மறுபதிப்பு நாளையிலிருந்து (சனிக்கிழமை முதல்) தமிழினியிலும் , உடுமலை.காமிலும் கிடைக்கும்.
 புத்தகங்களின் பட்டியல் இங்கே : 
ஜெயமோகன் நூல்கள்


புத்தகக்காட்சியின் வெளியே குறைந்த விலையில் இலக்கியச் சேவை செய்து கொண்டிருந்த விளிம்புநிலைக் கடைகளை (நடைபாதைமுனையில் கடைகள்) முதலில் பார்த்தேன். எது எடுத்தாலும் ரூ.20,30,50 என்று காப்பிரைட், ராயல்டி பிரச்சினையில்லாமல் கச்சாமுச்சாவென்று பல புத்தகங்கள். கீழ்கண்ட புத்தகங்களை  வாங்கினேன். 'பத்து பர்சென்ட் டிஸ்கவுண்ட் இருக்குன்னு சொன்னாங்களே' என்று கடைக்காரரை கலாய்க்க முயன்றால் 'தோ...டா' என்றார் அருமையான சென்னை வழக்கில். 

1) STARLIGHT STARBRIGHT - THE EARLY TAMIL CINEMA - RANDOR GUY
2) கநாசு 90 -  தொகுப்பு சா.கந்தசாமி
3) சென்னைச் சிறுகதைகள்

....ஆனால் வீட்டிற்கு வந்தவுடன் புரட்டிப் பார்த்தது முதலில் 'வரலாற்றுச் சுவடுகள்' தான். (மூடி வைத்திருந்தாலே அதீத ஆர்வம் வருவது இயற்கைதானே). அருமையான பைண்டிங்கில் வழவழ மேப்லித்தோ பேப்பரில் 864 பக்கங்களும் வண்ணமயம். இரண்டாம் உலகப் போரில் துவங்கி ரகுமான் இரண்டு ஆஸ்கர் வாங்கினது வரை தேதி வாரியாக. புரட்ட புரட்ட டைம் மெஷினில் பயணம் செய்யும் பரவச அனுபவம். ரூ.270/-க்கு விலை கொள்ளை மலிவு. இதுவே ஆங்கிலப் பதிப்பகங்களாக இருந்தால் ஆயிரத்திற்கு குறையாமல் விலை நிர்ணயித்திருப்பார்கள். இந்த நூலை மிக அழுத்தமாக பரிந்துரை செய்கிறேன். தவறாமல் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். 

சென்னைப் புத்தகக் காட்சி - சில பரிந்துரைகள்

வானதியில் வாண்டுமாமா நூல்கள் நிறைய கிடைக்கும். மர்மமாளிகையில் பலே பாலு செமத்தியான காமிக்ஸ் கலெக்‌ஷன் (விலை ரூ.150). சாண்டில்யனின் வாழ்க்கை வரலாறு கிடைத்தால் வாங்கி வைத்துக் கொள்ளலாம். மணிமேகலையிலும் கூட அப்புசாமி காமிக்ஸ் கிடைக்கும். பூம்புகாரில் பழைய புஷ்பாதங்கதுரை மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் நூல்கள் சல்லிசான விலையில் கிடைக்கிறது. உதாரணம் : சிறைக் கதைகள், ரூ.15.90. மீனாட்சி நிலையத்தில் குமரிப் பதிப்பகம் வெளியிட்ட சுஜாதாவின் சில நூல்களை (உதா : விக்ரம்) பத்து, பண்ணிரெண்டு ரூபாய்க்கு வாங்க முடிந்தது. இதே விலையில் மேலாண்மை பொன்னுச்சாமியின் அந்தக் காலத்து சிறுகதைத் தொகுப்புகளையும் இங்கே வாங்கலாம்.

சாகித்திய அகாதமியில் நிறைய இலக்கிய நூல்கள் குறைந்த விலையில் கிடைக்கும். வாசிக்க தம் இருப்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம். இருபத்தைந்து ரூபாய் புத்தகங்களை கூட (இந்த சைஸ் புத்தகங்கள் மற்ற பதிப்பகங்களில் மினிமம் ரூ.75) ஐம்பது சதவிகித தள்ளுபடியில் தள்ளி விடுகிறார்கள். வாங்கத்தான் ஆளில்லை. இராமாயணம், மகாபாரதம் வாங்கியே ஆகவேண்டுமென்றால் ராஜாஜி எழுதியவற்றை வாங்கலாம் (வானதி என்று நினைவு). மலிவு விலையில் வேண்டுமானால் விஜயபாரதத்தில் சித்பவானந்தர் எழுத்தில் வாங்கி வைத்துக் கொள்ளலாம் (ஈச் ரூ.25 ஒன்லி). சத்திய சோதனை, அக்னிச் சிறகுகள் எல்லாம் ரூ.30 ரேஞ்சில் பல ஸ்டால்களில் கிடைக்கிறது.






2010ல் படித்தவைநாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன். அதனால்தானோ என்னவோ அவருக்கு இந்த வருட சாகித்ய அகாதமி வருது வழங்கிவிட்டார்கள் :-)வாழ்த்துகள்.  [2001ல் V.S.Naipaulன் A House for Mr.Biswas படித்துக்கொண்டிருந்தபோது, அவருக்கு நோபல் பரிசு வழங்கினார்கள். எழுத்தாளர்கள் கவனிக்கவும்.] நாஞ்சில் நாடனின் இடலாக்குடி ராஜா சிறுகதை இணையத்தில் படித்தது – அற்புதம். அவரதுசொல்வனம் கட்டுரைகள் தொடர்ந்து படிப்பதால், அவர் சுட்டிக்காட்டிய  ‘திருக்குறள் உரைக்கொத்து’ என்ற நூலும் வாங்க முயன்று பொருளதிகாரம் மட்டும்தான் கிடைத்தது.

புத்தகக் கண்காட்சியில் தேடி அலைந்து கடந்த இரண்டு நாட்களில் 40 புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன்,
அதில் சில முக்கியமான புத்தகங்களைச் சிபாரிசு செய்ய விரும்புகிறேன்

1. அனொனிமா / மொழியாக்க நாவல் / தமிழில் தேவா, வெளியீடு பூபாளம் புத்தக பண்ணை விலை Rs.290 | காபிர்களின் கதைகள் தொகுப்பு ஜாகிர் ராஜா வெளியீடு ஆழி பதிப்பகம் விலை Rs.160 | 3. புத்தக ஜாதக கதைகள் வெளியீடு பூம்புகார் பதிப்பகம் விலை Rs.47 | 4. ஆயிரத்தோரு அராபிய இரவுகள் எளிமையான மொழியாக்கம் பூம்புகார் பதிப்பகம் 3 தொகுதிகள் விலை Rs. 150 | 5. சிறைப்பட்ட கற்பனை. வரவரராவ் சிறைக்கடிதங்கள் எதிர் வெளியீடு விலை Rs.150 | 6. பழைய மரப்பாலத்தில் ஒரு சம்பவம் மொழியாக்க கதைகள் துரைப்பாண்டி பாரதி புத்தகாலயம் விலை Rs.30 | 7. எழுத்தின் தேடுதல் வேட்டை நாகரத்னம் கிருஷ்ணா பிரெஞ்சிலக்கிய கட்டுரைகள் சந்தியா பதிப்பகம் விலை Rs. 85 | 8. விடுகதைத்தொகுப்பு தமிழ் பல்கலைகழகம் விலை Rs. 130 | 9. ஒத்தலோ / ஷேக்ஸ்பியர் தமிழில் புவியரசு, நியூசெஞ்சுரி வெளியீடு, விலை Rs. 85 | 10. Bridging connections an anthology of Srilankan Short stories Rajiva wijesinha – National Book trust- Rs. 85 | 11. Rousseau`s dog – David Edmonds – Harper Perennial Rs. 520 | 12. Little Star of bela Lua – Stories from brazil – Luana monterio – Harper. Rs 430 | 13. Step into a world – Anthology of New black Literature – Rs.400 | 14. Born- Einstein Letters – Macmillan – Rs.150 | 15. A monk and Two Peas – Story of Gregor Mandel – phoenix Rs.240


சென்னை புத்தகக் கண்காட்சி - மூன்றாம் பிறை

ஜெயமோகன் மணிரத்னத்துடன் வந்திருந்தார். மணிரத்னத்தைப் பார்த்த பல இளைஞர்கள் உற்சாகமாகி போட்டோ எடுத்துக்கொண்டே இருந்தார்கள். எனது 17 வயதில் பாம்பே படம் பார்க்கப் போனபோது, என் நண்பர்கள் கூட்டம் காட்டிய அதே உற்சாகம். இத்தனை வருடங்கள் கழித்து இன்னொரு தலைமுறை அதே ஆர்வத்தைக் காட்டுகிறது. ஓர் இயக்குனருக்கு ‘இருப்பு’ என்ற அளவில், இது ஒரு பெரிய வெற்றிதான். 

அறிவுஜீவி பயங்கரவாதம்இந்த ஆண்டு பப்ளிகேஷன் டிவிஷனில் பல அருமையான புத்தகங்கள் எனக்குக் கிடைத்தன. ஆசார்ய கிருபளானி எழுதிய மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு, ரோமெயின் ரோலண்டின் புத்தகம் உள்பட பல புராதனமான காந்திய நூல்கள் அங்கே இருக்கின்றன. மிகவும் மலிவான விலையில் நல்ல தயாரிப்பு. எந்த நூற்றாண்டிலோ அச்சிட்ட புத்தகங்கள் இன்னும் புதுக்கருக்கு கலையாமல் இருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளவும்.

 
இந்த வருடத்து கிழக்கு புத்தகப் பை. இது மிகப்பெரிய ஹிட் என்பதைப் பல இடங்களில் பலபேர் பேசிக்கொண்டிருந்ததில் இருந்து உணர முடிந்தது. ரொம்பப் பெரிதுமில்லை, சிறிதுமில்லை. ஒரு குட்டிச் செவ்வகப் பை. ஆனால் நிறையக் கொள்கிறது. உறுதியான பிடிமானம். நல்ல கனம் தாங்குகிறது. இந்த சைஸுக்கான ஐடியா யாருடையது என்று தெரியவில்லை. விசாரிக்க வேண்டும். ஆனால் பார்த்த அத்தனை பேரையும் காதல் கொள்ளச் செய்திருக்கிறது.
 K P Karthikeyan
5_Books_to_be_Noted_Dinamani-7-1-11
Saadat Hasan Manto & DD's CDs & DVDs
Saadat Hasan Manto & DD's CDs & DVDs

சென்னை புத்தகக் கண்காட்சி - ரெண்டாம் நாளிலிருந்து தொடங்கும் ஆட்டம்

(இட்லிவடையில் கரன்பிரசன்னா)
 ”வெளிச்சம் இல்லாவிட்டால் இருள் என்கிறார்கள். ஆனால் நான் அதை வெளிச்சம் இன்மை என்றுதான் சொல்வேன்” என்று புல்லரிக்க வைத்துக்கொண்டிருந்தார். சென்ற ஆண்டுக்கு இந்த ஆண்டு காகித விலை மட்டும் கிட்டத்தட்ட 24% விலை ஏறியிருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் பங்குகொள்ளும் பதிப்பகங்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க என்ன செய்துள்ளன? என்ன செய்யமுடியும்?  ஆர் எஸ் எஸ் புத்தகம் வாங்கினால் நான் லிச்சு ஜூஸ் வாங்கித் தருவேன் என்று பாரா சொன்னதை மக்கள் நம்பிவிட்டார்கள் போல. அடுத்தமுறை ஜெயிண்ட் வீல் வைக்க விருப்பம். பபாஸியிடம் அனுமதி கேட்டால் அவர்கள் எப்படி ரீயாக்ட் செய்வார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். ஒருவர் என்னிடம் வந்து ‘நிழல்கள் ரெகுலரா பார்ப்பேன், ஏன் அடிக்கடி எழுதுறதில்லை’ என்றார்.

தமிழ் பேப்பரில் பத்ரி சேஷாத்ரி எழுதியது   (எழுதுவது)
வில்லாதி வில்லன் தொடர் மூலம் தமிழ் பேப்பர் வாசகர்களுக்குப் பரிச்சயமான, கோவையில் வசிக்கும் பாலா ஜெயராமனைக் கிழக்கு பதிப்பக அரங்கில் 08ம் தேதி மாலை 6 மணிக்குச் சந்திக்கலாம். இந்த ஆண்டு பாலாவின் இரண்டு புத்தகங்கள் [அணுகுண்டின் அரசியல் வரலாறு, கடல் கொள்ளையர் வரலாறு] கண்காட்சிக்கு வருகின்றன என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தி.
தமிழ் பேப்பரில் இதுவரை எழுதாவிட்டாலும் பின்னணியில் நிறைய உதவிகள் புரிபவரும், கிழக்கின் முக்கியமான  எழுத்தாளர்களுள் ஒருவருமான என். சொக்கனை 11ம் தேதி மாலை 6 மணிக்குச் சந்திக்கலாம்.
டெக்னாமிக்ஸ் பத்தி எழுதும் நரேனைப் பன்னிரண்டாம் தேதி [12.01.2011] மாலை 6 மணிக்குச் சந்திக்கலாம்.

நல்லி செட்டியாரைப் பற்றி ஒரு வார்த்தை இங்கு சொல்லிவிடவேண்டும். ஐந்து வாயில்களின் முதன்மை (நடு) வாயிலின் ஸ்பான்சர் இவர்தான். ஆனால் வெறும் பணம் சார்ந்த விஷயமல்ல இது. என்றொ ஒரு நாள், யாரும் சீந்துவார் இன்றிக் கிடந்த நாள் முதலாக சென்னை புத்தகக் கண்காட்சிக்குப் பணம் அளித்து வருபவர் இவர். அதனால்தான், இவர் இன்றி சென்னை புத்தகக் கண்காட்சியின் முதல் நாள் விழா இருக்காது.

இன்று விகடன் அரங்கில் அதிக நேரம் செலவிட்டேன். விகடன் பதிப்பக ஆசிரியர் வீயெஸ்வியிடம் பேசிக்கொண்டிருந்தேன். பல அருமையான மொழிபெயர்ப்புப் புத்தகங்களைக் கொண்டுவந்துள்ளனர். முக்கியமாகச் சொல்லவேண்டியவை மால்கம் கிளாட்வெல்லின் The Tipping Point, குர்சரண் தாஸின் The Difficulty of Being Good, பாம்பே ஜெய்ஸ்ரீ, டி.எம்.கிருஷ்ணாவின் Voices Within, ரேஷ்மி பன்சாலின் Stay Hungry Stay Foolish, பல பியர்சன் / சேஜ் புத்தகங்கள். மொழிபெயர்ப்பைச் செய்வதில் உள்ள சிரமங்கள் பற்றி விரிவாகவே பேசினார். மொழிபெயர்ப்பில் அதிக கவனம் செலுத்துவதாகக் கூறினார்.
கிழக்கு பதிப்பகம், விகடன் போன்றவை மொழிபெயர்ப்பில் தீவிரமாக இறங்குவது தமிழுக்கு நல்வரவுதான்.
என் புத்தகம் ஸ்பெக்ட்ரம் சர்ச்சை வந்து இறங்கியது. கிழக்கு பதிப்பகம் ஸ்டால் F-13, 14, 15-ல் கிடைக்கும்.

இட்லிவடையில் பிரசன்னா எழுதியது

தன் வலைப்பதிவில் பா. ராகவன் எழுதியது

சென்னை புத்தகக் காட்சி 2011 – முதல் நாள்

தமிழகத்தின் எதிர்காலமே, எழுச்சித் தளபதியே, ஆருயிரே, மன்னவரே என்று ஈகா தியேட்டரில் ஆரம்பித்து சாலையெங்கும் தட்டிகளைப் பார்த்தபோது முதலில் குழப்பமாக இருந்தது. பிறகு சந்தேகமாக. இன்விடேஷனில் ஸ்டாலின் பெயர் இல்லை. அப்புறம் எதற்கு இத்தனை வரவேற்புத் தட்டிகள் என்று புரியவில்லை. ஏதாவது திடீர் ஏற்பாடாக இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் புத்தகக் காட்சி தொடங்கும் பள்ளி வளாகத்தைத் தாண்டியும் தட்டிகள் போய்க்கொண்டே இருந்தபடியால் இது வேறு யாரோ எதற்கோ வைத்திருக்கிறார்கள் என்று புரிந்துகொண்டேன்.

நம்புங்கள்! நாவல் விற்கிறது! அப்புறம், கிழக்கு தொப்பி ஒன்று புதிதாக வந்திருந்தது. இது விற்பனைக்கல்ல. விற்பனையாளர்களுக்கு... கிழக்கு வாசலில் இடதும் வலதும் கைகுலுக்கிக் கொஞ்சிக்கொண்டிருந்த ஓர் அபூர்வக் காட்சியைக் கண்டேன். அப்போது அதியமான், ‘நான் வலதுசாரி இல்லை; லிபரலிஸ்ட்’ என்று டமாரென்று இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார். நல்ல வேளை, அதியமானின் இலக்கிய பார்ட்னர் டாக்டர் ப்ரூனோ வந்தாரோ, மருதன் தப்பித்தான். புத்தகக் கண்காட்சிக்கு ஓடி வந்து அலைந்து திரிந்து பன்னெண்டு புள்ளி அஞ்சு செண்டிமீட்டர் வெர்னியர் காலிப்பர் வாங்கிய டாக்டரின் இலக்கிய ஆர்வத்தை மனமாரப் பாராட்டினேன்.
சென்னை, ஜன.2- சென்னையில் ஒரு கோடி புத்தகங்களுடன் 34-வது புத்தக கண்காட்சி 4-ந் தேதி தொடங்குகிறது.

4-ந் தேதி புத்தக கண்காட்சி
தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 34-வது சென்னை புத்தக கண்காட்சி பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. கண்காட்சி மற்றும் விற்பனை 4-ந் தேதி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. கண்காட்சியை சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தொடங்கி வைக்கிறார்.

கருணாநிதியின் பொற்கிழி
முதல்-அமைச்சர் கருணாநிதி சங்கத்திற்கு வழங்கிய ரூ.1 கோடி நிதியில் ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளை வைப்பு தொகை மூலம் கிடைத்த வட்டியில் இருந்து 6 எழுத்தாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் வழங்கப்படுகிறது. அந்த பொற்கிழியை மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் வழங்குகிறார். பொற்கிழியை கட்டுரைக்காக தமிழண்ணல், கவிதைக்கு கவிஞர் அப்துல்ரகுமான், நாடகத்திற்கு பேராசிரியர் கே.ராமானுஜம், சிறுகதை- புனை கதைக்கு சி.எஸ்.லட்சுமி, மராத்தி இலக்கியத்திற்கு அர்ஜ×ன் டாங்லே, ஆங்கில இலக்கியத்திற்கு கா.செல்லப்பன் ஆகியோர் பெறுகிறார்கள். விழாவில் தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் உள்பட பலர் வாழ்த்தி பேசுகிறார்கள்.

விருதுகள்
சங்கத்தின் சார்பில் பதிப்பக செம்மல் கணபதி விருது இந்து பப்ளிகேசன்ஸ் வி.கரு.ராமநாதனுக்கும், மணிவாசகம் பதிப்பகம் பதிப்பு செம்மல் ச.மெய்யப்பன் விருது சாந்தி புக்ஸ் இ.வேதகிரிக்கும், குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா விருது குழந்தை எழுத்தாளர் கொ.மா.கோதண்டத்திற்கும், ஆர்.கே.நாராயணன் விருது சிறந்த மொழிபெயர்ப்பாளர் ஆர்.நடராஜனுக்கும், பபாசியின் நூலகர் விருது நா.ஆவுடையப்பனுக்கும் வழங்கப்படுகிறது.

புத்தக கண்காட்சி தினமும் பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை இருக்கும். விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை இருக்கும். கண்காட்சி 17-ந்தேதி முடிய நடைபெற உள்ளது.
666 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. 376 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
வருபவர்களுக்கு வசதியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சிற்றுண்டி கூடங்களும், கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு கோடி புத்தகங்கள்
புத்தக கண்காட்சியில் ஒரு கோடி புத்தகங்கள் இடம் பெறுகின்றன. புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி உண்டு. நுழைவுக்கட்டணம் ரூ.5 ஆனால் 12 வயது வரை உள்ள சிறுவர்-சிறுமிகளுக்கு கட்டணம் கிடையாது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கட்டணம் கிடையாது. ஆனால் அதற்கான இலவச அனுமதி சீட்டுகள் 5 லட்சம் அச்சடித்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வழங்கப்பட உள்ளன. வாசகர்கள் எளிதில் வந்து செல்ல வசதியாக 5 வாயில்கள் அமைக்கப்படுகின்றன. 5 டிக்கெட் கவுண்டர்களும் திறக்கப்பட உள்ளன. தினமும் அதிர்ஷ்டசாலிகள் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகளாக புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை கலை நிகழ்ச்சிகள் பட்டிமன்றம், கருத்தரங்கு, இலக்கிய சொற்பொழிவு ஆகியவை நடைபெற உள்ளன.

பேச்சுப்போட்டி
பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 7-ந் தேதி காலை 10 மணிக்கு புரசைவாக்கம் அழகப்பா மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 10-ந்தேதி காலை 10.30 மணிக்கு ராணிமேரி கல்லூரியிலும் நடைபெற உள்ளது. போட்டிக்கான தலைப்புகள் அப்போதுதான் வழங்கப்படும். வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு பரிசாக ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் என்று வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ஆயிரம் ரூபாய் என்று கொடுக்கப்படும். இந்த பரிசு நூல்களாக வழங்கப்படும்.

ஓவியப்போட்டி
இவை தவிர 6 வயது முதல் 8 வயது உள்ள மாணவர்களுக்கும், 9 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கும், 13 முதல் 16 வயது உள்ள மாணவர்களுக்கும் ஓவியப்போட்டிகள் தனித்தனியாக நடத்தப்படும். இந்த போட்டிகள் 8-ந் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை புத்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெறும்.

இந்த தகவலை தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் சேது சொக்கலிங்கம் தெரிவித்தார். பேட்டியின் போது செயலாளர் ராம லட்சுமணன், துணைத்தலைவர்கள் ஆர்.எஸ்.சண்முகம், எம்.சுப்ரமணியம், இணைசெயலாளர் எஸ்.சண்முகநாதன், பொருளாளர் எஸ்.எஸ்.சாஜகான் ஆகியோர் உடன் இருந்தனர்.

இனிய புத்தாண்டும் சில இம்சை அரசர்களும்

ஜனவரி 4ம்தேதி [நாளை]  இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. புத்தாண்டைப் புத்தகங்களுடன் ஆரம்பிக்க விரும்புகிறவர்கள், சேத்துப்பட்டு செயிண்ட் ஜான்ஸ் பள்ளிக்கூட மைதானத்துக்கு வந்துவிடுங்கள். தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பெல்லாம் ஒரு பண்டிகையா? இதுதான். இதுமட்டும்தான்.

ஒரு காலத்தில், தமிழர்கள் புத்தகம் வாங்குவதே இல்லை; ஆயிரம் காப்பி விற்றால் அமோகம் என்று சில பழம்பெரிசுகள் எப்பப்பார் புலம்பிக்கொண்டே இருப்பார்கள். புத்தி தெளிந்து உற்று நோக்கியபோதுதான் உண்மை தெரிந்தது. தமிழர்கள் புத்தகம் வாங்காமல் இல்லை. திராபையான புத்தகங்களைத்தான் அவர்கள் வாங்குவதில்லை. இப்போதெல்லாம் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு லட்சங்களில் கூட்டமும் கோடிகளில் விற்பனையும் சர்வ சாதாரணமாயிருக்கிறது. கொஞ்சம் மெனக்கெட்டால் பெங்களூர், தில்லி புத்தகக் கண்காட்சி அளவுக்கு இதன் தரத்தை மேம்படுத்திவிட முடியும். அப்புறம் சரித்திரம், பூகோளம் இன்னபிறவற்றில் இடம்பிடிப்பது வெகு சுலபமாகிவிடும்.

கண்காட்சியின்மீது மக்கள் காட்டும் ஆர்வத்தை அமைப்பாளர்கள் புரிந்துகொண்டு சில சௌகரியங்கள் செய்து தரலாம். அதுதான் ஒவ்வொரு வருஷமும் எனக்குப் பெரும் குறையாகத் தெரிகிறது. உதாரணமாக ஒரு விஷயம் சொல்லுகிறேன். என் தந்தைக்கு எழுபத்தி ஐந்து வயது. அவர் சர்க்கரை நோயாளி. எப்படியும் முக்கால் மணிக்கு ஒருமுறை இயற்கை அன்னை அவரை அழைப்பாள். தள்ளாத வயதில் கண்காட்சிக்கு வருபவர், ஒவ்வொரு முக்கால் மணி நேரத்துக்கும் ஒருமுறை முக்கால் கிலோமீட்டர் நடந்து வெளியே போய்விட்டுத் திரும்ப வரவேண்டும்.

அப்படிப் போகிற இடமாவது ஒழுங்காக இருக்குமா என்றால் இராது. உலக மாநகராட்சி நவீன கட்டணக் கழிப்பிடங்கள் அனைத்தின் அசுத்தங்களையும் அள்ளி எடுத்துவந்து கொட்டி வைத்தது மாதிரி அது எப்படித்தான் இரண்டொரு நாளிலேயே அந்த வளாகம் மட்டும் அப்படியொரு சாக்கடைத்தனம் எய்துமோ தெரியாது. பெண்கள்? கேட்கவே வேண்டாம். புத்தகத்தை நாடி வருகிறவர்கள் சொந்த சுக சௌகரியங்களைத் துறந்துவிட்டுத்தான் வரவேண்டும் என்று கண்காட்சி அமைப்பாளர்கள் வருடம் தோறும் வன்முறைத் திணிப்பு செய்வதைக் கொஞ்சம் மாற்றிப்பார்க்கலாம்.

அடுத்த விவகாரம், க்ரெடிட் கார்ட் தொடர்பானது. மக்கள், மல்லாக்கொட்டை விற்று மடியில் பணத்தை முடிந்துகொண்டு கண்காட்சிக்கு வந்த காலம் என்றோ போய்விட்டது. சின்னச்சின்னக் கடைகள் வரை க்ரெடிட் கார்ட் புழக்கம் வந்துவிட்ட நிலையில், புத்தகக் கடையினர் மட்டும் கார்டை நீட்டினால் காச்சுமூச்சென்று கத்தத் தொடங்கிவிடுகிறார்கள். இத்தனைக்கும் கண்காட்சி வளாகத்தில் பொதுவான க்ரெடிட் கார்ட் மையம் இருக்கும். எந்த ஸ்டால்காரரும் அங்கே சென்று தேய்த்துக்கொண்டு வந்துவிட முடியும்.

ஆனால் அது எதற்கு? நேர விரயம். தவிரவும் இந்த கார்டு சமாசாரமெல்லாம் நமக்குப் பளக்கமில்லிங்க. பத்து பர்சண்டு டிஸ்கவுண்டு. காச குடுத்துட்டு புக்க எடுத்துட்டுப் போயிருங்க. காசு இல்லியா? புக்க வெச்சிருங்க. அடுத்து யாருப்பா?

இருக்கிறார்கள். இருபத்தியோராம் நூற்றாண்டிலும் இப்படிப்பட்ட பதிப்பாளர்களே மிகுதி. சென்ற ஆண்டு கண்காட்சி சமயம், என் சொத்தின் பெரும்பகுதி தீர்ந்துவிட, இறுதி நாளன்று இப்படியானதொரு சிக்கலில் மாட்டிக்கொண்டேன். ஒரு குறிப்பிட்ட புத்தகம் எனக்கு வேண்டியிருந்தது. விலை அதிகமில்லை. நாநூறோ, நாநூற்றைம்பதோதான். கையில் காசு இல்லை. ஆனால் கடன் அட்டை இருந்தது. சம்பந்தப்பட்ட பதிப்பாளர், அதைத் தொடக்கூட மாட்டேன் என்று சொல்லிவிட்டார். இப்ப காசு இல்லன்னா பரவால்ல சார். நாளைக்கு நம்ம ஆபீசுக்கு வந்து பணத்த குடுத்துட்டு வாங்கிக்கிடுங்க என்று சொல்லிவிட்டார்.

தலைபோகிற தேவை இருப்பவன் எப்படியாவது வாங்கிவிடுவான். அது பிரச்னை இல்லை. புதிய வாசகர்களை இந்த நிராகரிப்பு எத்தனை சோர்வு கொள்ளச் செய்யும் என்று ஏன் இவர்கள் சிந்திப்பதில்லை? புத்தகம் விற்பதில்லை என்னும் தேசியகீதம் பாடுவதில் மட்டும் ஒரு குறையும் வைக்கமாட்டார்கள்.

இதனோடே இன்னொரு இம்சையையும் சொல்லிவிடுகிறேன். புத்தகக் கண்காட்சி என்பது மக்களுக்குப் புத்தகங்களை அறிமுகப்படுத்தவும் வாங்க வசதி செய்யவுமான ஒரு வருடாந்திரத் திருவிழா. பத்து நாள், மிஞ்சிப்போனால் பன்னிரண்டு நாள். அவரவர் ஆபீஸ் முடித்து, அல்லது மற்ற வேலைகளை முடித்துவிட்டு மாலை வேளைகளில் பெரும்பாலும் வருவார்கள். அவர்களை நிம்மதியாகப் புத்தகங்களைப் பார்வையிட விடாமல், தினசரி யாராவது ஒரு பிளேடு பக்கிரியின் தலைமையில் பட்டிமன்றம், வெட்டிமன்றம், கழுத்தறுக்கும் கருத்தரங்கம், கவியரங்கம் என்ற பெயரில் துதிபாடும் கேலிக்கூத்து என்று மணிக்கணக்கில் வாசலிலேயே உட்காரவைத்துவிடுகிறார்கள்.போதாக்குறைக்கு உள்ளே கண்காட்சி அரங்கில் சுற்றிக்கொண்டிருக்கும் வாசகர்களையும் ஈட்டிக்காரன் மாதிரி மைக் வைத்து மிரட்டி வெளியே அந்த நாராசத்துக்குத் தள்ளப் பார்க்கிற வழக்கம்.

புத்தகக் கண்காட்சிக்கு எதற்கு இந்த சாலைச் சுந்தரி அலங்காரங்கள்?

கேட்கப்படாது. அது மரபு. அல்லது மக்கள் விரும்புகிறார்கள் என்று சொல்லிவிடக்கூடும். ஜூன் அல்லது ஜூலையில் நெய்வேலியில் ஒரு புத்தகக் கண்காட்சி நடக்கும். அங்கே புத்தகங்களுக்கு நிகராக டெல்லி அப்பளம் கடைக்கு முக்கியத்துவம் கொடுத்து நன்றாக விளம்பரம் செய்வார்கள். கூட்டம் அம்மும். சென்னையின் டெல்லி அப்பளம் இந்த மாலை நேரக் கூட்டங்கள்.

ஒழியட்டும். நமக்குப் புத்தகங்கள் முக்கியம். புதிய வாசகர்கள் ஒவ்வோர் ஆண்டும் என்னென்ன வாங்கலாம், எங்கிருந்து படிக்கத் தொடங்கலாம் என்று, அணுக சாத்தியமுள்ள எழுத்தாளர்களைக் கேட்பார்கள். அக்கறை மிக்க மூத்த எழுத்தாளர்கள் கண்காட்சி வளாகத்திலேயே அவர்களுக்கு விளக்கிச் சொல்லி வழியனுப்புவதை ஆண்டுதோறும் பார்த்திருக்கிறேன். என்னிடம் இப்படிக் கேட்கிற வாசகர்களுக்கு நான் உடனடியாக நூறு புத்தகங்களைச் சிபாரிசு செய்வது வழக்கம். மொத்தப் பட்டியலுக்கு இங்கே இடம் காணாது. இஷ்டமிருந்தால் என்னுடைய இணையத்தளத்தில் அந்தப் பட்டியலைப் பார்த்துக்கொள்ளுங்கள்.  ஓர் அவசரமான அத்தியாவசிய ஐந்துகள் மட்டும் இங்கே:

நாவல்கள்: 1. தி. ஜானகிராமனின் மோகமுள். 2. அசோகமித்திரனின் ஒற்றன். 3. சுந்தர ராமசாமியின் ஜேஜே சில குறிப்புகள் 4. கல்கியின் பொன்னியின் செல்வன் 5. ரா.கி. ரங்கராஜன் மொழிபெயர்ப்பில் ஹென்றி ஷாரியரின் பட்டாம்பூச்சி.

கதையல்லாத எழுத்து: 1. உ.வே. சாமிநாத ஐயரின் என் சரித்திரம் 2. வெ. சாமிநாத சர்மாவின் கார்ல் மார்க்ஸ் 3. தி.ஜ. ரங்கநாதன் மொழிபெயர்ப்பில் லூயி ஃபிஷரின் காந்தி 4. ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் 5. சுஜாதாவின் கணையாழியின் கடைசிப் பக்கங்கள்.

கவிதைகள் பக்கம் நான் போகத் தயாரில்லை. மேற்சொன்ன பத்து நூல்கள்தான் தமிழின் ஆகச்சிறந்த புத்தகங்களா என்றெல்லாம் கேட்காதீர்கள். இதிலிருந்து படிக்கத் தொடங்கினால் சரியான பாதையில் மேலே போகமுடியும் என்பது என் நம்பிக்கை.

வாசகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள்.



புத்தகக் கண்காட்சியில் இந்த வருடம் என்னென்ன முக்கியம் என்று நண்பர்கள் சிலர் மின்னஞ்சலில் கேட்டார்கள். உண்மையில் எனக்கு இன்னும் முழு விவரம் தெரியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவரும் சில வெளியீட்டு அழைப்பிதழ்கள், புத்தக மதிப்புரைகளின்மூலம் ஒன்றிரண்டு நூல்களைத்தான் குறித்து வைத்திருக்கிறேன். ஒன்றிரண்டு தினங்களில், புதிதாக வருகிற நூல்களுள் எனக்கு முக்கியமாகப் படுபவை குறித்து எழுதுகிறேன்.

அதற்குமுன்னால், என் நிரந்தர விருப்பத்துக்குரிய நூல்களின் பட்டியல் ஒன்றை இங்கே தருகிறேன். நாவல், சிறுகதை, வாழ்க்கை, அரசியல், கவிதை என்று கலந்து கட்டி இருக்கலாம். வகைப்படுத்தவில்லை. ஆனால், வாசிப்பு ஆர்வம் உள்ள அனைவரும் இந்நூல்களைத் தவறவிடாமல் இருப்பது நல்லது. இவற்றுக்கு அப்பாலும் நல்ல புத்தகங்கள் அநேகம் உண்டு. ஆயினும் என் முதல் விருப்பம் – சிபாரிசு இவையே.

1. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர்
2. வேதாகமம் [குறிப்பாகப் பழைய ஏற்பாடு]
3. புத்தரும் அவர் தம்மமும் – பி.ஆர். அம்பேத்கர்
4. நாலாயிர திவ்யப் பிரபந்தம்
5. பாஞ்சாலி சபதம் – பாரதியார்
6. ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்
7. சுந்தர ராமசாமி சிறுகதைகள் [முழுத் தொகுப்பு]
8. வண்ணநிலவன் சிறுகதைகள் [முழுத் தொகுப்பு]
9. வண்ணதாசன் சிறுகதைகள் [முழுத்தொகுப்பு]
10. அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்
11. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
12. சிந்தா நதி – லா.ச. ராமாமிருதம்
13. கல்லுக்குள் ஈரம் – ர.சு. நல்லபெருமாள்
14. பொன்னியின் செல்வன் – கல்கி
15. கார்ல் மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா
16. ந. பிச்சமூர்த்தி கதைகள் [முழுத்தொகுப்பு - இரண்டு பாகங்கள்]
17. புதுமைப்பித்தன் கதைகள் [முழுத்தொகுப்பு]
18. வேடந்தாங்கல் – ம.வே. சிவகுமார்
19. எனது சிறைவாசம் – அரவிந்தர்
20. கரீபியன் கடலும் கயானா தீவுகளும் – ஏ.கே. செட்டியார்
21. ஒற்றன் – அசோகமித்திரன்
22. நிலா நிழல் – சுஜாதா
23. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா
24. பசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு
25. அவன் ஆனது – சா. கந்தசாமி
26. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ஸ யோகானந்தர்
27. எடிட்டர் எஸ்.ஏ.பி – ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், புனிதன்
28. வ.ஊ.சி. நூற்றிரட்டு
29. வனவாசம் – கண்ணதாசன்
30. திலகரின் கீதைப் பேருரைகள்
31. நுண்வெளிக் கிரணங்கள் – சு.வேணுகோபால்
32. பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை – பி.ஆர். அம்பேத்கர்
33. காமராஜரை சந்தித்தேன் – சோ
34. அர்த்த சாஸ்திரம் – சாணக்கியர்
35. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன்
36. ராமானுஜர்(வாழ்க்கை வரலாறு) – ராமகிருஷ்ண மடம் வெளியீடு
37. பாரதியார் வரலாறு – சீனி விசுவநாதன்
38. இந்திய சரித்திரக் களஞ்சியம் – ப. சிவனடி
39. ஆதவன் சிறுகதைகள் [முழுத்தொகுப்பு]
40. சுப்பிரமணிய ராஜு கதைகள் [முழுத்தொகுப்பு]
41. பட்டாம்பூச்சி – ஹென்றி ஷாரியர் : மொழிபெயர்ப்பு – ரா.கி. ரங்கராஜன்
42. சுபமங்களா நேர்காணல்கள் – தொகுப்பு: இளையபாரதி
43. பாரதி புதையல் பெருந்திரட்டு – ரா.அ. பத்மநாபன்
44. காந்தி – லூயி ஃபிஷர் : தமிழில் தி.ஜ. ரங்கநாதன்
45. பாரதியார் கட்டுரைகள்
46. நானும் இந்த நூற்றாண்டும் – வாலி
47. பண்டைக்கால இந்தியா – ஏ.கே. டாங்கே
48. குருதிப்புனல் – இந்திரா பார்த்தசாரதி
49. பயணியின் சங்கீதம் – சுகுமாரன்
50. குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகர்
51. God of small things  – அருந்ததிராய்
52. Midnight’s Children – சல்மான் ருஷ்டி
53. Moor’s lost sigh – சல்மான் ருஷ்டி
54. Interpreter of Maladies – ஜும்பா லாஹ்ரி
55. Train to Pakistan – குஷ்வந்த் சிங்
56. ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் – சி.புஸ்பராஜா
57. All the president’s men – Bob Woodward
58. மதிலுகள் – பஷீர் [நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பு மட்டும்.]
59. எட்டுத் திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன்
60. If I am assasinated – ஜுல்பிகர் அலி புட்டோ
61. Courts and Judgements  – அருண்ஷோரி
62. மோகமுள் – தி. ஜானகிராமன்
63. ஜனனி – லா.ச. ராமாமிருதம்
64. பஞ்சபூதக் கதைகள் – லா.ச. ராமாமிருதம்
65. கி.ராஜநாராயணன் கதைகள்  [முழுத்தொகுப்பு]
66. அசோகமித்திரன் கட்டுரைகள் [இரண்டு பாகங்கள்]
67. இரா. முருகன் கதைகள் [முழுத்தொகுப்பு]
68. ஜீரோ டிகிரி – சாரு நிவேதிதா
69. பின் தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன்
70. ராஜிவ் காந்தி படுகொலை புலனாய்வு – டி.ஆர். கார்த்திகேயன்
71. வாடிவாசல் – சி.சு. செல்லப்பா
72. குட்டியாப்பா – நாகூர் ரூமி
73. சார்லி சாப்ளின் கதை – என். சொக்கன்
74. Made in Japan – அகியோ மொரிடா
75. வைரமுத்து கவிதைகள் [முழுத்தொகுப்பு]
76. India after Gandhi – ராமச்சந்திர குஹா
77. இரும்புக் குதிரைகள் – பாலகுமாரன்
78. மதினிமார்கள் கதை – கோணங்கி
79. காற்றில் கலந்த பேரோசை – சுந்தர ராமசாமி
80. புலிநகக் கொன்றை – பி.ஏ. கிருஷ்ணன்
81. கொரில்லா – ஷோபா சக்தி
82. ஸ்… [அண்டார்டிகா] – முகில்
83. அங்க இப்ப என்ன நேரம் – அ. முத்துலிங்கம்
84. முத்துலிங்கம் கதைகள் [முழுத்தொகுப்பு]
85. தீ – எஸ். பொன்னுத்துரை
86. சடங்கு – எஸ். பொன்னுத்துரை
87. வரலாற்றில் வாழ்தல் – எஸ். பொன்னுத்துரை
88. காந்திஜியின் இறுதி 200 நாட்கள் – வி. ராமமூர்த்தி
89. இஸ்தான்புல் – ஓரான் பாமுக்
90. A House for Mr Biswas – வி.எஸ்.நைபால்
91. Half a Life – வி.எஸ். நைபால்
92. ராஜு ஜோக்ஸ்
93. பிரம்ம ரகசியம் – ர.சு. நல்லபெருமாள்
94. அதர்வ வேதம்
95. இலியட் – தமிழில்: நாகூர் ரூமி
96. சிந்திக்கும் நாணல் – மார்க்சியமும் மாற்றுத் தத்துவங்களும் – எஸ்.வி. ராஜதுரை
97. புயலிலே ஒரு தோணி / கடலுக்கு அப்பால் – ப. சிங்காரம்
98. Muhammad : His Life Based on the Earliest Sources – மார்ட்டின் லிங்ஸ்
99. சந்திரபாபு: கண்ணீரும் புன்னகையும் – முகில்
100. நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி? – எம்.ஆர். காப்மேயர்

BookFair Dinamani 2-1-2011 news

Kalki books for 2011 bookfair-MS, Velukkudi Krishnan, Srinivasa Raghavan & Sudha Seshaiyan

Kalki books for 2011 bookfair- Indra Parthasarathy, N.Chokkan, D.Balachandar, Dr.Gomathy, Usha Ramakrishnan & vanna Nilavan

S.Ramakrishnan (Thuyil) and Thamizachi Thangapandian's 4 books
Shaji Thanimayin isai
12 Books from various authors, 1 collection of poems from Manushiyaputhiran, Ravikumar MLA's 4 books
CharuNivedhitha's-7-books-for-2011-Bookfair-released-from-Uyirmmai

Kaalachuvadu releases 2011
Kaalachuvadu releases 2011



     RSS of this page