| | | |
Uploading ....
Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - 'ஹரிமொழி' ஹரி கிருஷ்ணன்'ஹரியண்ணா' என்று பிரபலமாக இணையத்தில் அறியப்படும் ஹரி கிருஷ்ணன் அவர்களைத் தென்றல் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. 'பேராசிரியர் நினைவுகள்' தொடரில் ஆரம்பித்து இன்றைய 'மகாபாரதம் - சில குறிப்புகள்' வரை தென்றலுக்குத் தொடர்ந்து சிறந்த பங்களிப்புத் தந்துகொண்டிருப்பவர். சங்கப்பாடல்களிலும், கம்பனிலும், பாரதியிலும் தோய்ந்தவர். 'வாழும் நிகண்டு' என்று சொல்லுமளவுக்கு இலக்கணத்திலும், யாப்பிலும் தேர்ந்தவர். பண்டைத் தமிழிலக்கியத்தில் ஆழங்காற்பட்டவர். 'அனுமன் அந்தாதி', 'கௌமார சதகம்', 'அனுமன்: வார்ப்பும், வனப்பும்', 'ஒரு கோப்பைத் தேநீரும் கொஞ்சம் கவிதையும்', 'ஓடிப் போனானா?' போன்றவை இவரது நூல்கள். இணைய உலகில் 18 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான பக்கங்களுக்கு பல ஆய்வுக் கட்டுரைகளை, இலக்கண, இலக்கிய விளக்கங்களை, விமர்சனங்களை எழுதியிருக்கிறார். "சந்தேகமா, கூப்பிடு ஹரிகியை" என்று சொல்லுமளவிற்கு இணையத் தமிழுலகில் பிரபலமானவர். 'சந்தவசந்தம்' விழாவில் கலந்துகொள்ளச் சென்னை வந்திருந்தவரைச் சந்தித்து உரையாடினோம். அதிலிருந்து...
கே: இலக்கிய ஆர்வம் முகிழ்த்தது எப்போது? ப: அதற்கு முழுமுதற் காரணம் என் அம்மா. அவர் ஆர்மியில் பணியாற்றியவர். இலக்கியம் படித்தவர். அடிப்படையில் ஒரு கவிஞர். கல்லூரியில் படிக்கும்போதே நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஒருமுறை அம்புலிமாமாவில் 'வாசுவும் தாணுவும்' என்ற சிறுகதையை நான் அம்மாவிற்கு எழுத்துக்கூட்டிப் படித்தேன். "ஓ... படிக்க ஆரம்பிச்சுட்டியா, அப்போ இந்தப் புத்தகத்தைப் படி" என்று என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். அது ராஜாஜி எழுதிய 'சக்கரவர்த்தித் திருமகன்'. அதைப் படிக்கப் படிக்க அதுவொரு பரவச உலகைக் காண்பித்தது. 6, 7 வயதுள்ள சிறுவன் படித்தாலும் புரிந்து கொள்ளுமளவிற்கு எளிமையாக அந்த நடை இருந்திருப்பது இப்போது புரிகிறது. அடுத்து 'வியாசர் விருந்து' படித்தேன். திரௌபதியை திரெ-ள-பதி என்று படிப்பேன். எங்களுக்கு டைப்பிங் இன்ஸ்டிடியூட் ஒன்று இருந்தது. அங்கு வரும் மாணவர்கள் எல்லாம் நான் படிப்பதைக் கேட்டுச் சிரித்துவிட்டுப் பின்னர் சரியாகச் சொல்லிக் கொடுத்தார்கள். அப்படி ஆரம்பித்ததுதான் வாசிப்பு என்பது.
அடுத்து அம்மா கொடுத்தது 'பாரதியார் கவிதைகள்' குழந்தைகளுக்கான கையடக்கப் பதிப்பு. பாடப் புத்தகத்தில் இருந்த பாடல்கள் சில அதில் இருந்ததால் ஆர்வத்துடன் படித்தேன். அடுத்து சக்தி வை. கோவிந்தனின் பதிப்பில் பல கவிதைகளைப் படித்துக் காட்டினார். அதன் சந்த நயமும் கவிச்சுவையும் என்னைக் கவர்ந்தன. பாரதியால் நான் ஈர்க்கப்பட்டேன். சந்தத்தின் நயமும் மரபின் நுணுக்கங்களும் புலப்பட 13, 14 வயதில் நானும் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். நடக்கும்போது எழும் 'சரக் சரக்' என்னும் செருப்பின் ஒலிக்குக்கூட கவிதைகள் எழுதிப் பார்த்திருக்கிறேன்.
கே: சென்னை நங்கநல்லூர் வாசம் உங்களுக்கு ஒரு முக்கியமான கட்டம் அல்லவா? ப: ஆமாம். நங்கநல்லூரில் ஒரு பெரும் நண்பர் குழு எனக்கு இருந்தது. எல்லோரும் என்னையொத்த அல்லது சற்றே மூத்த இளைஞர்கள். பா. வீரராகவன், ரமணன், கிருஷ்ணன், குடந்தை கீதப்ரியன், நங்கை சிவன், சுந்தர்ராமன் என்று பெரிய குழு. ஆளுக்கொரு வெண்பா சொல்வது, ஈற்றடிக்கு வெண்பா அமைப்பது, பேச்சையே வெண்பாவாக்குவது என்றெல்லாம் விளையாடுவோம். உதாரணமாக, ஒருவர் "செருப்பு தொலைந்து போய்விட்டது" என்றால், "செருப்புக்கும் உண்டோ திருட்டு" என்பார் ஒருவர். "பருப்புக்கும் உண்டோ லிமிட்டு" என்பார் மற்றொருவர். "ஈற்றடி வேண்டாம் இனி" என்பார் இன்னொருவர். ஒருவர் "ஏனோ அறுப்பு இது" என்க, "தாங்கும் கழுத்தென்று தான்" என்பார் இன்னொருவர். இப்படி கேலியும் கிண்டலுமாய், அது ஒரு தமிழ் விளையாட்டாய்த் தொடரும்.
நான் பியூசி படித்துக் கொண்டிருந்த நேரத்தில் நங்கநல்லூரில் ராஜராஜேஸ்வரி கோயில் கட்டி பஞ்சமுக ஆஞ்சநேயரைப் பிரதிஷ்டை செய்தார்கள். அந்தக் காலக்கட்டத்தில் எழுதியது 'அனுமன் அந்தாதி'. 'கௌமார சதகம்' அப்போது எழுதப்பட்டதுதான். அட்டநாக பந்தம் எல்லாம் எழுதியிருக்கிறேன். எங்கள் இலக்கிய ஆர்வத்தைப் பார்த்துவிட்டு ரமணனுடைய அக்கா மாமனார் ஒருவர், அவரிடம் இருந்த நூல் சேகரத்தை எங்களுக்குக் கொடுத்தார். அதிலிருந்த தண்டியலங்கார உதாரணச் செய்யுளை அடிப்படையாக வைத்து அந்த அட்டநாக பந்தத்தை எழுதினேன். அந்தக் காலகட்டத்தில் அதெல்லாம் ஒரு சவால். அந்த ஆர்வத்தில் இலக்கண நூல்களை முழுமையாகப் பயில ஆரம்பித்தேன். தொடர்ந்து கவியரங்கங்களில் பங்கேற்க ஆரம்பித்தேன். அப்படித்தான் பாரதி கலைக்கழகத்துடன் தொடர்பு ஏற்பட்டது.
கே: ஓ. அதுபற்றிச் சொல்லுங்கள்.. ப: பியூசியில் என்னுடன் படித்த விஜயராகவனின் தந்தை கவிஞர். இளங்கார்வண்ணன். அவரது வீட்டில்தான் கழகத்தின் முதல் கவியரங்கம் நடந்தது. அந்தக் காலத்தில் கழகத்தின் கவியரங்கில் பங்கேற்றுவிட முடியாது. ஒரு லெவலில் உள்ளவர்கள் மட்டுமே நுழைய முடியும். இளங்கார்வண்ணன் மூலம் நான் கலைக்கழகக் கவியரங்குகளில் கவிதை வாசிக்க ஆரம்பித்தேன்.
கே: நல்லூர் இலக்கிய வட்டம் ஆரம்பித்தது எப்போது, எப்படி? ப: நான் கலைக்கழகத்திற்குத் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தேன். அதைப் பார்த்த (இசைக்கவி) ரமணன், நாமும் நம் ஊரில் ஒன்று ஆரம்பிக்கலாம் என்று சொல்ல ஆரம்பித்ததுதான் 'நல்லூர் இலக்கிய வட்டம்'. ஆரம்பத்தில் அதற்குப் பெயர் கூட வைக்கவில்லை. தலைவர், பொருளாளர், செயலாளர் என்று யாரும் கிடையாது. செயல்படுபவன் செயலாளர், அவ்வளவுதான். கவியரங்கத் தலைவரை நியமிப்பது, அவர்களை அழைத்து வருவது, திரும்பக் கொண்டுபோய் விடுவது போன்றவற்றை நான் செய்தேன். அது எனக்கு நிறைய அனுபவத்தையும், பலரது அறிமுகத்தையும் பெற்றுத்தந்தது.
பார்வையாளர்களாக ஒருமுறை வந்தார் நாகநந்தி (பேரா. தி. வேணுகோபாலன்). மிகக் கடுமையான விமர்சகர். எங்களுக்கு அந்தக் கடுமை தாங்காது. அந்த வயது அப்படி. கவிமாமணிகள் மஹி, இலந்தை ராமசாமி ஆகியோரும் வருவார்கள். எப்படிக் கவிதையை மாறுபட்ட வகையில் விதவிதமாக எழுதலாம் என்பதை அவர்களிடம் கற்க முடிந்தது.
கே: உங்கள் இலக்கிய நிகழ்வுகளுக்காக பல பிரபலங்களைச் சந்தித்திருப்பீர்கள். அந்த அனுபவம் குறித்துச் சொல்லுங்கள்.. ப: நல்லூர் இலக்கிய வட்டத்தின் ஓராண்டு நிறைவை ஒட்டி ஒரு சிறு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். முதல்நாள் கவிதை படித்து பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்தல்; மறுநாள் பரிசளிப்பு விழா என்று திட்டம். முதல்நாள் விழாவுக்கு கொத்தமங்கலம் சுப்புவை அழைத்திருந்தோம். அவர், "தட்டிக்கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டிப் பார்க்க நான் வரமாட்டேன்" என்று சொல்லி விட்டார். அதனால் மறுநாள் நடக்க இருந்த பரிசளிப்பு விழாவுக்கு அவரைத் தலைமை தாங்க அழைத்தோம். முத நாள் சுரதா தலைமையில் கவியரங்கமும், பரிசுக் கவிதைகள் தேர்வும் நடந்தன. மறுநாள் பரிசளிப்பு விழாவில் சுப்பு கலந்து கொண்டு வாழ்த்தினார். அது டிசம்பர் 25, 1972. நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே ராஜாஜி காலமானதாகச் செய்தி வந்தது. நிகழ்ச்சியை முடிக்க சிலர் வந்து அவசரப்படுத்தினார்கள். அவர்களைச் சமாளித்து நிகழ்ச்சியை முடித்தோம்.
பின்னர் கொத்தமங்கலம் சுப்புவிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்து அதில் அவர் கையெழுத்தைக் கேட்டேன். "பேரைச் சொல்லு" என்றார். "ஹரி கிருஷ்ணன்" என்றேன். "ஹரிகிருஷ்ணா என்ற பெயர் அமெரிக்காவில் எதிரொலிக்கும்" என்று எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தார். அப்போது ஹரே கிருஷ்ணா இயக்கம் அமெரிக்காவில் பிரபலமாக இருந்தது. அதை வைத்து அவர் அப்படி எழுதினாரா அல்லது 'ஹ'னாவுக்கு 'அ'னவாக அப்படி அவர் எழுதினாரா என்பது தெரியவில்லை. ஆனால் கவி வாக்கு பலித்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
கே: இணையத்திற்கு எழுத வந்தது எப்போது, எப்படி? ப: அது எப்படி நேர்ந்ததென்றே சொல்ல முடியாது. 1997ல் ஒரு கம்ப்யூட்டர் வாங்கினேன். அப்போது இணையப் பயன்பாட்டிற்கு வாடகை 100 மணி நேரத்திற்கு 5000 ரூபாய் என்ற நிலை. அதனால் இணையத்தில் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த என் மாமா பையனுக்கு 100 மணி நேரம் இலவசமாகக் கிடைத்தது. அவர் அதை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது யாஹூ மிகப் பிரபலமாக இருந்தது. அதில் 'பாரதி' என்று தேட Forumhub குழு ஒன்று அறிமுகமானது. அதில் ஒருவர் பாரதி குறித்த சந்தேகம் ஒன்றைக் கேட்டிருந்தார். நான் அதற்கு விரிவாக விளக்கமளித்தேன். அதுதான் ஆரம்பம். அப்போதெல்லாம் ஆங்கிலம்தான். பின்னர் 'காதம்பரி'யைப் பயன்படுத்தினேன். அதன் பின்னர்தான் டிஸ்கி எழுத்துரு.
ஃபோரம்ஹப்பில் வெண்பாவிற்காக 'வெண்பா வடிக்கலாம் வா' என்றொரு குழு. அதில் நிறைய வெண்பாக்களை எழுதிப் போட்டேன். அதிலிருந்தவர்கள் வியந்து போனார்கள். உலகின் பல இடங்களில் பல பொறுப்புகளில் இருப்பவர்கள். 'யார் இது?' என்று என்னை கவனிக்கத் தொடங்கினார்கள்.
கே: இணைய உலகில் "ஹரிகி என்றாலே சண்டைக்காரர்" என்ற ஒரு இமேஜ் இருக்கிறது. அது ஏன்? ப: அதற்குக் காரணம் என்னவென்றால், ஒரு படைப்பின் அல்லது செய்தியின் மூலத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அல்லது தான் நம்புவதையே சரி என்று நினைத்து சிலர் தங்கள் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்ததுதான். அப்போது தவிர்க்க முடியாமல் நான் அதற்கு எதிர்வினையாற்ற நேர்ந்தது. உதாரணமாக ஒரு குழு விவாதத்தில் ஒருவர் "பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்று பாரதி, மசூதிகளையெல்லாம் இடித்துவிட்டுக் கோயில்களைக் கட்டச் சொல்லியிருக்கிறார்" என்று எழுதியிருந்தார். நான் அதற்கு விளக்கமாக மறுப்புத் தெரிவித்து எழுதினேன். பாரதி எத்தனை இடங்களில் முஸ்லிம்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார், அவர்களைச் சகோதரர்கள் என்று பேசியிருக்கிறார் என்பவற்றை விளக்கமாக எழுதியிருந்தேன். சீனி விஸ்வநாதனின் தொகுப்புகள் எல்லாம் வராத காலகட்டம் அது. பாரதி பாடல், உரைநடை அனைத்தும் என்னிடம் இருந்தன. அவற்றில் பல எனக்கு மனப்பாடமாகவே தெரியும் என்பதால் நான் உடனுக்குடன் மறுப்பெழுதினேன். அது தொடர்ந்தது. இப்படி உண்மையை விளக்கிச் சொல்ல ஆரம்பித்ததும் முதலில் கருத்துச் சொன்னவர்களுக்கு நான் சண்டைக்காரனாகி விட்டேன்.
இப்படித்தான் பலரும் ஏதாவது பாடலையொ, கருத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ எடுத்துக்கொண்டு பேசுவார்கள். ஆனால் அதன் உண்மையான பொருளுக்கும் அதற்கும் தொடர்போ முழுமையோ இருக்காது.
உதாரணமாக,
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ
என்ற பாடலை எடுத்துக் கொண்டு, சட்டியும் சட்டுவமும் கறிச்சுவையை அறியுமா என்று கேட்பார்கள்.
சரிதான். ஆனால் சட்டியும், சட்டுவமும் இல்லாமல் கறி சமைக்க முடியுமோ? அதைச் சிந்தித்துப் பார்க்கமாட்டார்கள். கறி சமைக்கும்வரை சட்டியும், சட்டுவமும் தேவை. ஆனால் சமைத்து முடித்ததும் தேவையில்லை. ஆன்மா, உடல்பற்றிக் கவிஞன் சொல்லியிருக்கும் நுட்பமான பொருள் இது. இதை விட்டுவிட்டு வேறெதையாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
கே: அப்படி இணைய குழு விவாதங்களில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் ஏதாவது ஒன்றிரண்டைச் சொல்லுங்களேன்... ப: ஒருமுறை பாரதியார். ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பற்றிக் கண்டித்து ஏதும் எழுதவில்லை என்று ஒரு சர்ச்சை. நான் அலுத்துப் போய் விலகியிருந்த காலம் அது. ஆனந்த கணேஷ் இதற்கு நீங்கள் அவசியம் விளக்கம் எழுத வேண்டும் என்று என்னை கேட்டுக்கொண்டார். அதனால் எழுதினேன்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது 1919ல். 1918-1920 காலகட்டத்தில் பாரதி எழுத்திற்குத் தடை இருந்தது. அப்போது அவரே எழுதினாலும், யார் பிரசுரிப்பார்கள்? 1920ல்தான் தடை நீங்கியது. அதை அவரே குறிப்பிட்டிருக்கிறார். பின்னால் அவர் பத்திரிகை ஆசிரியரானார். அப்போதும் அன்றன்றைய நிகழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான் எழுத முடியுமே தவிர பழைய விஷயங்களை அல்ல. ஆகவே ஜாலியன் வாலாபாக் பற்றி எழுதாததில் பாரதிக்கு உள்நோக்கம் ஏதுமில்லை. அவருக்கு என்ன உள்நோக்கம் இருந்திருக்க முடியும் என்று நீங்கள் சொல்லுங்கள் என்று கேட்டேன். பதில் வரவில்லை.
அப்போது இணையத்தில் மரத்தடி என்றொரு குழுமம். மதி கந்தசாமி, ஹரன் பிரசன்னா, ஆசிப் மீரான், சுபமூகா, ஐயப்பன் போன்றோர் அதில் இருந்தனர். அவர்கள் அழைத்ததால் அதில் எழுதத் தொடங்கினேன். ஹரன் பிரசன்னாவின் உண்மையான பெயர் ஹரிஹரன் பிரசன்னா. நானும் ஹரி, அவரும் ஹரி என்பதால் வரும் பெயர்க் குழப்பம் நீங்க அவர் 'ஹரி'யை நீக்கி ஹரன் பிரசன்னா ஆனார். அதுபோல இணைய உலகில் "ஹரியண்ணா" என்ற பதத்தை முதலில் கையாண்டவர் ஆசிப் மீரான். அதன் பின்னர் பலரும் அப்படியே கூப்பிட ஆரம்பித்தனர். "சந்தேகமா, ஹரியைக் கேள்" என்று வந்தது அப்போதுதான். அடுத்து இரா. முருகன் ஆரம்பித்த 'ராயர் காபி கிளப்' குழுமத்தில் எழுத அழைத்தார். ஜெயமோகனின் சங்க சித்திரங்கள்வரை என் விமர்சனம் தொட்டது.
'நேசமுடன்' ஆர் வெங்கடேஷ் தமிழ் சிஃபியில் தமிழ் பிரிவுத் தலைவராக இருந்தார். அவர் என்னை சிஃபிக்கு எழுதச் சொன்னார். அதிலும், தமிழோவியத்திலும் பாரதியார் பற்றிய பல கட்டுரைத் தொடர்களை எழுதினேன். குறிப்பாக வேல்ஸ் இளவரசருக்கான அவரது வரவேற்புக் குறித்தும் ஆராய்ந்து அதில் கட்டுரைகள் எழுதினேன்.
உண்மையில் "ஜனகணமன" என்பது வேல்ஸ் இளவரசருக்காக இயற்றப்பட்டது. தான் எழுதியிருந்த பல பாடல்களில் ஒன்றை வேல்ஸ் இளவரசருக்காக தாகூர் கொடுத்துவிட்டார். அவரால் மறுக்க முடியவில்லை. அது கண்ணனுக்கோ வேறு யாருக்கோ எழுதப்பட்டது. பாடல் வரிகளைப் பார்த்தால் இரண்டுக்குமே அது பொதுவாக இருக்கும். அந்தப் பாடலின் பொருளை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் 'தேர்' என்றெல்லாம் வரும். ஆனால் பாரதிக்கு அப்படியில்லை. மனப்பூர்வமாகத்தான் எழுதியிருக்கிறார். இப்படி பல விஷயங்களை ஆராய்ச்சி செய்து, ஒப்பிட்டு எழுதியிருக்கிறேன். சொல்வதென்றால் சொல்லிக் கொண்டே போகலாம்.கே: கம்ப ராமாயணத்தில் ஆர்வம் வந்தது எப்படி? ப: எதையுமே திட்டமிட்டுச் செய்தேன் என்று சொல்ல முடியாது. கல்லூரியில் "கும்பகர்ணன் வதைப் படலம்" பாடமாக இருந்தது. அப்போதுதான் நங்கநல்லூருக்கு வீடு கட்டிக் கொண்டு வந்தார் எங்கள் பேராசிரியர் நாகநந்தி. அவர் அற்புதமாகக் கம்பராமாயணத்தை நடத்துவார். அதனால் அதைப் படிக்க ஆர்வம் ஏற்பட்டது. நண்பர் ஒருவரின் லைப்ரரி கார்டை வாங்கிக் கொண்டு தேவநேயப் பாவாணர் நூலகத்திற்குச் சென்று புத்தகங்களை எடுத்து வருவேன். திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதால் பாடல்களைக் குறிப்பேட்டில் எழுதி வைப்பது வழக்கம். அப்படி ஒருமுறை யுத்த காண்டத்தை எடுத்துக் கொண்டு வந்து கும்பகர்ணன் வதைப்படலம் வரைக்கும் காப்பி செய்து விட்டேன். அதை ஒருமுறை ரொம்பப் பெருமையாக பேராசிரியரிடம் காண்பித்தேன். "என்ன காரியம் பண்றே, ஸ்டாப் இட்" என்று கடுமையாகச் சொன்னார்.
நான் ஆடிப் போய்விட்டேன். "இதை இப்படிச் செய்யக் கூடாது. நீங்கள் தலைகீழாக ஆரம்பிக்கிறீர்கள். கேக்கைக் கொடுத்தால் க்ரீமையா முதலில் சாப்பிடுவது; பின் மற்றதெல்லாம் எப்படிச் சுவைக்கும்? ஒரு வருஷம் வரைக்கும் இதைத் தொடாதீர்கள்" என்றார். நானும் படிப்பை முடித்து, வேலை, தொழில், வாழ்க்கையின் நிர்ப்பந்தங்கள் என்று சில ஆண்டுகளுக்கு அந்தப் பக்கமே போக முடியவில்லை.
ஒருநாள் நாகநந்தி அவர்களைப் பார்த்தபோது, கம்பராமாயணம் படிக்க ஆசையாக இருக்கிறது என்றேன். "உனக்கு என்ன புத்தகம்தானே வேண்டும்? எப்போது வேண்டுமானாலும் வந்து எடுத்துக்கொள்" என்றார்.
மறுநாள் வீட்டிற்குச் சென்றபோது தன் புத்தக அலமாரியைத் திறந்து, எது வேண்டுமோ எடுத்துக் கொள் என்றார். அவரிடம் வை.மு.கோ. பதிப்பு, உ.வே.சா. பதிப்பு எல்லாம் இருந்தது. நான் சற்றுத் தயங்கி வர்த்தமானன் பதிப்பை எடுத்துக் கொண்டேன். உடனே அவர், "ஒ.. இதுவா. உனக்கு வாங்கின விலைக்கே கொடுத்து விடுகிறேன்" என்றார். அது அவருக்கு இலவசமாக அவரது நண்பர் ஜெ. ஸ்ரீசந்திரனால் அளிக்கப்பட்டிருந்தது. வர்த்தமானன் பதிப்பக உரிமையாளரான அவரே அதை எழுதி வெளியிட்டிருந்தார். அதை எடுத்துச் சென்று இங்கொன்றும் அங்கொன்றுமாகப் படித்தேன். முழுக்கப் படிக்கும் ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது.
ஒருமுறை மதுரபாரதி (தென்றல் முதன்மை ஆசிரியர்) வீட்டுக்குச் சென்றிருந்தபோது, "கம்ப ராமாயணம் நீ முழுக்கப் படித்திருக்கிறாயா?" என்று கேட்டேன். அவர் "இல்லை" என்றதும் இருவரும் சேர்ந்து படிக்க முடிவு செய்தோம். இறுதிவரை படித்து முடித்தோம். ஒரே நாளில் 10 மணி நேரம் வரை தொடர்ந்து 900 பாடல்கள் எல்லாம் கூடப் படித்திருக்கிறோம். தேவைப்படும் இடங்களில் கருத்துப் பரிமாறிக் கொள்வோம். ஆறு மாதத்தில் நிறைவு செய்தோம்.
கே: சென்னை ஆன்லைனில் பணி புரிந்த அனுபவம் பற்றி... ப: அதில் தினந்தோறும் ஆங்கிலக் கட்டுரை எழுதும் பொறுப்பு எனக்குத் தற்காலிகமாக வந்தது. நானும் தயங்காமல் 'Time Management in Mahabharata' என்ற தொடரை ஆரம்பித்தேன். நல்ல வரவேற்பு. பாராட்டி நிறையக் கடிதங்கள் வர ஆரம்பித்தன. அதுமுதல் அந்தப் பத்தியை என்னையே எழுதச் சொல்லிவிட்டார்கள்.
முதலில் ஹனுமான் பற்றி எழுதினேன். Hanuman a Manager, Hanuman a Secretary, Hanuman an Ambassador என்றெல்லாம் எழுதினேன். வால்மீகி ராமாயணத்துடனும் ஒப்பிட்டு எழுதுவேன். ஐந்து வருடங்கள் தினந்தோறும் எழுதினேன். 14 பாத்திரங்களை மிக விரிவாக ஆராய்ந்து எழுதியினேன். சீதையைப் பற்றி மட்டும் 360 கட்டுரைகள். அதிலும் அக்கினிப் பிரவேசம் குறித்தே 60 கட்டுரைகள். அதில் சீதை தரப்பின் நியாயத்தோடு சேர்த்து ராமன் தரப்பு நியாயத்தையும் எடுத்துச் சொல்லியிருந்தேன். அதை யாரும் செய்ய மாட்டார்கள். அதற்கு நல்ல வரவேற்பு.
நான் அதைத் தமிழில் ராயர் காபி கிளப்பில் எழுதினேன். எனக்குக் கவிதைப் பயிற்சி இருந்ததால் கருத்துக்களை நறுக்குத் தெறித்தாற்போல் எழுத முடிந்தது. அதைப் படித்த பா. ராகவன் அதைக் கிழக்கு பதிப்பகத்தின்மூலம் வெளியிடுவதாகச் சொன்னார். நான் "அது ரொம்பப் பெரியதாக இருக்குமே" என்றேன். "நீங்கள் எவ்வளவு பெரிதாக எழுதுகிறீர்களோ அவ்வளவு பெரிதாக வெளியிடுகிறோம்" என்றார். அப்படி வெளியானதுதான் 'அனுமன்: வார்ப்பும் வனப்பும்'.
கே: ராயர் காபி கிளப்பில் நீங்களும் இரா. முருகனும் இணைந்து எழுதிய "நகரம் நானூறு" சுவாரஸ்யமானது. அதன் பின்னணியைச் சொல்லுங்களேன்... ப: ராயர் காபி க்ளப்பில் இரா.முருகன் மத்தளராயன் என்ற பெயரில் வெண்பாக்களை எழுத, நானும் எழுத ஆரம்பித்தேன். அப்படி எழுதியவைதான் "நகரம் நானூறு" வெண்பாக்கள். பிச்சைக்காரர், வண்டியோட்டி, அனுமார் வேஷதாரி என்று பலதரப்பட்ட நகரத்தின் காட்சிகளைக் கொண்டதாக இருந்தது.
ஒருமுறை எக்மோர் ஸ்டேஷனுக்கு வெளியே இருந்த வீரன் அழகுமுத்துக் கோன் சிலையைப் பார்த்தேன். அதில் அவன் கை வாளை உயர்த்திப் பிடித்திருக்க அதன்மேல் ஒரு காகம்! வாளைக் கண்டால் காக்கை பயப்பட வேண்டும். ஆனால் இங்கேயோ கத்தியின்மேல் காகம். அதை வைத்து "உயர்த்திய வாள் காக்கை அமரும் களம்" என்பதாக ஒரு வெண்பாவை எழுதினேன். அதை போட்டோவாகப் போட்டால் இன்னமும் எஃபெக்டிவாக இருக்குமே என்று தோன்றியது. அப்படிச் சில காட்சிகளை படமாக எடுத்து, பொருத்தமான கவிதையோடு போட, அதற்கு நல்ல வரவேற்பு.
ஒருநாள் நல்ல மழை. பக்கத்து வீட்டில் குயில் ஒன்று கூவிக் கொண்டிருந்தது. குயில் மழைக்காலத்தில் கூவுவது அரிது. "குயில் கூவுமோ மழை நாளிலே" என்று சொல்வழக்கே உண்டு.
சன்ன மழைத்தூறல்; சாத்திவைத்த சன்னல்கள் முன்னோட்ட மேக முழக்கங்கள் - இன்னும் சருகுதிரும் தாழ்கிளையில் தன்னுள்தான் ஆழ்ந்து குரலுடைந்து கூவும் குயில்
என்று ஒரு வெண்பா எழுதினேன். இதுவரை 100 பாடல்களுக்கு மேல் எழுதிவிட்டேன். முடித்தபின் புத்தகமாக வரக்கூடும். இல்லாவிட்டால் என் கவிதைகளை மட்டுமாவது தொகுத்து மின்னூலாகக் கொண்டு வரும் எண்ணம் உண்டு.
கே: உங்களுடைய பாரதி பற்றிய "ஓடிப்போனானா?" நூல் மிக முக்கியமானது. அந்த நூலின் பின்னணி என்ன? ப: பாரதி கலைக்கழகத்தின் பாரதி சுராஜ் அவ்வப்போது "பாரதி பாண்டிச்சேரிக்கு ஓடிப் போய்விட்டான்" என்று விமர்சிப்பார். நீங்கள் எப்படி அப்படிச் சொல்லலாம் என்று எனக்கும் அவருக்கும் ஒரு கடிதப் போரே நடந்தது. அதற்காக நான் தேடி வைத்திருந்த குறிப்புகளையும், மேலும் சில விவரங்களையும் சேர்த்து எழுதப்பட்டதுதான் 'ஓடிப் போனானா?' தொடர். தமிழ் ஹிந்துவில்வெளியாகிப் பின்னர் நூலாக்கம் பெற்றது.
மிக அதிகமாகத் தமிழில் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்று பார்த்தால் அது பாரதியினுடையதுதான். மிக அதிகமாகக் குழப்பப்பட்டதும் அவர் வரலாறுதான். அவரவர் மனம்போனபடி பாரதியின் வாழ்க்கை, பாடல்கள் குறித்து எழுதியிருக்கிறார்கள். பாரதியார் பற்றிய காவல் துறையினரின் அறிக்கைகள், சி.ஐ.டி. குறிப்புகளைத் தொகுத்து ஒருவர் நூல் வெளியிட்டிருக்கிறார். அதைப் படித்தபோதுதான் பல விஷயங்கள் எனக்குப் புரிய ஆரம்பித்தன. 'ஓடிப் போனானா?' எழுதுவதற்கு அதுவும், சீனி. விஸ்வநாதன் எழுதிய பாரதி பற்றிய மூன்றாவது தொகுதியும் பெரிதும் உதவின.
கே: பெங்களூரில் நீங்கள் நடத்திவரும் கம்பராமாயண முற்றோதல் பற்றிச் சொல்லுங்கள்.. ப: ஏற்கனவே நானும் மதுரபாரதியும் இணைந்து அதனைச் செய்திருக்கிறோம். மீண்டும் செய்யும் சூழல் எழுத்தாளர் சொக்கன் மூலம் உருவானது. ஒரு தமிழ்ப்புத்தாண்டு அன்று 'சுந்தரகாண்டம்' படிக்கலாம் என்று அவர் சொன்னார். "ஏன் சுந்தர காண்டம் மட்டும்? முழு ராமாயணத்தையும் படிக்கலாமே" என்றேன் நான். அப்படித்தான் அது ஆரம்பித்தது. 10 பேர்வரை ஆர்வத்துடன் தவறாது கலந்து கொள்கிறார்கள். அதிலும் தமிழே தெரியாத மலையாளம் மட்டும் தெரிந்த ஒருவர் இதனைக் கேட்பதற்காக என்றே வந்தார். நடக்குமிடம் பெங்களூரிலிருந்து சற்றுத் தொலைவில் இருக்கிறது. நகரின் மையப்பகுதியில் இருந்தால் மேலும் பலர் வரக்கூடும்.
இதை யூட்யூப் வீடியோவாகப் பதிவேற்றி வருகிறோம். அதைப் பார்த்துவிட்டு UPSC தேர்வு எழுதும் மாணவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டனர். எங்களுக்கு கும்பகர்ணன் வதைப் படலம் பாடமாக இருக்கிறது. உங்களுடைய பதிவுகள் எளிமையாகப் புரியும் வகையில் இருக்கின்றன. எங்களுக்காக அதை நீங்கள் முன்கூட்டிப் படித்து விளக்க முடியுமா என்று கேட்டனர். நாங்கள் அந்தப் படலம்வரை செல்ல நிறைய நாட்கள் இருந்தன. அவர்களுக்கோ டிசம்பரில் தேர்வு. அந்த மாணவர்களுக்காக முதலில் அதை எடுத்து மூன்று அமர்வுகளில் படித்து முடித்தோம். ஃபிரான்ஸில் இந்த முற்றோதலைச் சிலர் செய்திருக்கின்றனர். அவர்கள் இங்கு வந்து பார்த்துவிட்டுச் சென்றனர்.
பொதுவாக முற்றோதல் என்றால் பாட்டைப் படித்துக்கொண்டே போவார்கள். பொருள் சொல்ல மாட்டார்கள். இன்றைக்கு மரபுக் கவிதைகளை வாய்விட்டுப் படித்தல் என்பதே அருகிப் போய்விட்டது. அதனால் பெங்களூரு முற்றோதலுக்கு வருபவர்கள் முதலில் வாய்விட்டுப் படிக்க வேண்டும். அதன் பிறகு நானோ, ஜடாயுவோ பொருள் சொல்வோம் என்று முடிவுசெய்து, இன்றுவரை அப்படி நடந்து வருகிறது. பாடலுக்குப் பொருள் விளக்கம், இலக்கணக் குறிப்பு, வால்மீகி ராமாயணத்துடன் ஒப்பீடு என்று எல்லாம் கொண்டு சிறப்பாக நடந்து வருகிறது. இன்றைய இளைஞர்களுக்கு இந்த ருசியை ஏற்படுத்தியதில் ஒரு நிறைவுதான். .
கே: இந்த முற்றோதலினால் ஏற்படும் பயன் என்ன என்று கேட்பவர்களுக்கு உங்கள் பதில் என்ன? ப: இந்த விதை எதிர்காலத்தில் பலன் தரும் என்று நம்புகிறேன். ஒரு சிலராவது எதிர்காலத்தில் இதே போன்று ஒரு முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தக்கூடும். இலக்கியம் வாசிப்பவர்களிடம் மூலத்தைப் படிக்கும் தூண்டலை ஏற்படுத்துவதுதான் எனது நோக்கம். இக்காலத்தில் மூலத்தைப் படிப்பதில்லை. அப்படி மறைய மறைய நாம் இந்த மண்ணின் பலத்தை, கலாசாரத்தை இழந்துகொண்டே வருகிறோம். அவரவர் தங்கள் கருத்தைக் கூறக்கூற, நாளைக்கு கம்பனின் கருத்து மறைந்து சொன்னவரின் கருத்துதான் உண்மை என்றாகிவிடும். அதைத் தவிர்க்க மூலத்தைப் படிக்க வேண்டும்.
நான் வாழ்க்கையின் மிக கஷ்டமான காலகட்டத்தில், வேலையிழந்து மிகக் கஷ்டமான சூழலில் இருந்தபோது எனக்கென்று இருந்தது சென்னை ஆன் லைனில் நான் தினசரி எழுதிவந்த அந்த கட்டுரைத் தொடர்தான். அந்தச் சூழலில் என்னைத் தூக்கி நிறுத்தியது கம்பன்தான். பாரதி எனக்கு அடிப்படை அமைத்துக் கொடுத்தான் என்றால் வாழ்க்கையில் உறுதுணையாக வந்தது கம்பன். அதற்கு நன்றி பாராட்டுதலாக இந்த முற்றோதலை வைத்துக் கொள்ளலாம். எனது கவனமெல்லாம் இப்போது கம்ப ராமாயணத்தில்தான் இருக்கிறது. அதனால் ராமாயணம், மஹாபாரதம், பாரதி, வள்ளுவர், சங்க இலக்கியம் தவிர்த்துப் பிறவற்றிலிருந்து நான் விலகித்தான் இருக்கிறேன்.
கே: கம்பனில் பல பாடல்கள் இடைச்செருகல் என்று சிலர் சொல்லியிருக்கின்றனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன? ப: எனக்கு உடன்பாடில்லை. கவிச்சுவையை வைத்தோ அல்லது தனது அபிப்பிராயத்தை வைத்தோ இதெல்லாம் இடைச்செருகல், இதெல்லாம் மூலப்பாடல் என்று சொல்வது சரியானதாகாது. சுவையை வைத்து ஒரு பாடலின் தரத்தைத் தீர்மானிக்க முடியாது. பத்தாயிரம் பாடல்களில் அபாரமான காவியத்தைப் பாடும்போது எல்லாப் பாடல்களின் சுவையும் ஒரே தளத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆயிரக்கணக்கான பாடல்களைச் சுவையின் அடிப்படையில் இடைச்செருகல் என்று நீக்கிவிட்டால் பின்னர் முழுமைபெறாத, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் சிதறுண்ட பாடல்கள் மட்டுமே எஞ்சும்.
இந்த நூல்களைப் பதிப்பித்தவர்கள் சாதாரணமான ஆட்கள் இல்லை. உ.வே.சா., வை.மு.கோ. போன்றவர்கள் பல ஊர்களிலிருந்தும் சுவடிகளைத் திரட்டி, புலவர்களை வைத்து ஒப்புநோக்கி, பிழைநீக்கி, மாறுபாடுகளை ஆராய்ந்து பின்னர் பதிப்பித்திருக்கிறார்கள். சில பாடல்கள் இடைச்செருகலாக இருந்தாலும், பிரதிகளை ஒப்புநோக்கும்போது தெரிந்துவிடும். மற்றபடி, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பாடல்கள் இடைச்செருகல்களாக இருக்கவே முடியாது.
கே: பேராசிரியரிடம் நீங்கள் மிகவும் வியக்கும் பண்பு? ப: அவர் நாத்திகவாதி என்றாலும் ராமாயணத்தைப் பற்றி அவர் பேச ஆரம்பித்தால் ஒரு பௌராணிகர் கூட அப்படிப் பேசமுடியாது. அந்த அளவு ஈடுபாட்டோடு பேசுவார். திருவாசகம் பற்றிப் பேசும்போது, "திருவாசகத்தைப் படிக்கப் படிக்க என் கண்களில் நீர் பெருகுகிறது. என் மனைவிகூட, 'உங்களுக்கு எதற்குத் திருவாசகமும் கண்ணீரும். நீங்கதான் நாத்திகராயிற்றே' என்று கேலி செய்கிறார்" என்று எங்களிடம் சொல்வார். "படித்தால் கண்ணீர் வருகிறது. அது இயல்பாக இருக்கிறது. அதற்காக அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்பது அர்த்தமல்ல" என்பார். 62 வயதில் அவர் காலமாகி விட்டார். ஐந்தாவது அட்டாக்கில் ஆஸ்திரேலியாவில் அவருடைய மகன் பார்த்திபன் இல்லத்தில் அவர் காலமானார். அவர் கண்கலங்கி யாரும் பார்த்ததில்லை. ஆனால், நங்கநல்லூரை விட்டுப் புறப்படும்போது மனம் கலங்கினார். "நீண்டநாள் வாழ வேண்டுமென்று ஆசிர்வதிக்காதீர்கள். ஆனால் வாழும் ஒவ்வொரு நாளும் பயனுள்ள நாளாய் இருக்க வேண்டும் என்று சொல்லி வாழ்த்துங்கள்" என்று சொல்லிக் கண்கலங்கி விடைபெற்றார்.
ஒரு புயலைப்போல அவர் ஆஸ்திரேலியாவைக் கலக்கினார். அங்கே அத்தனை சொற்பொழிவுகள், கூட்டங்கள், கருத்தரங்குகள். அவையெல்லாம் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நாகநந்தி மணிமண்டபத்தில் இவற்றைக் கேட்கலாம். அவரது மனைவி திருமதி. சரஸ்வதி வேணுகோபாலன், அவற்றைப் புதிய கேசட்டுகளில் ஆண்டுதோறும் பதிவு செய்து பாதுகாத்து வந்தார். 60 மணி நேரப் பேச்சுக்கள். பேராசிரியர் மறைந்தாலும் அவரது குரல், கருத்து சாகாவரம் பெற்றதாக இன்றைக்கும் உள்ளது. பலருக்கும் பயன்படுகிறது.
கே: எதிர்காலத் திட்டங்கள் என்ன? ப: பரதன், குகன் ஆகிய பாத்திரங்களைப் பற்றி எழுதத் திட்டமுண்டு. எனது ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழில் தரவும் எண்ணமுண்டு. ஆங்கிலத்தில் 60 பக்கங்களில் எழுதியது தமிழில் 500 பக்கத்திற்கு மேல் வரலாம். 'அனுமன்: வார்ப்பும் வனப்பும்' அப்படித்தான் ஆனது. தமிழில் எழுதும்போது விரிவாக, எழுதவேண்டி இருக்கிறது. நேஷனல் ஜியாகிரஃபிக் சானலுக்காக டாகுமெண்டரிகளை தமிழில் மொழிபெயர்க்கிறேன். தென்றலில் கட்டுரை எழுதுகிறேன்.
வெளியே கார்த்திகை தீபங்கள் பிரகாசிக்கின்றன, ஹரி கிருஷ்ணனின் சொற்களைப் போலவே. சந்திப்புக்கு நன்றி கூறி நாமும் விடை பெற்றோம்.
சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்
*****
ஜயேந்திரர் கொடுத்த வெள்ளிக்காசு 1983ல் காஞ்சிப் பெரியவர் ஜயேந்திரர் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் ஒரு கவியரங்கம் ஏற்பாடு செய்திருந்தார். கவிஞர் வாலி தலைமை. மூத்த கவிஞர்கள் கலை, சக்தி, இயற்கை என்று சந்த நயங்களைக் காட்டும் கவிதைகளை வாசித்தனர். ஜயேந்திரர் தனக்கேயுரிய பாணியில் கவிதைகளுக்குக் கருத்துச் சொல்லி வந்தார். எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்போ 'திருக்குறளில் அறம்'. நான் அதுவரை மரபுக்கவிதைகள் மட்டுமே எழுதியிருந்தேன். புதுக்கவிதை எழுதியது கிடையாது. அன்று முயற்சி செய்தேன். இது சரி, இது தவறு என்று சொல்லமுடியாத தன்மை கொண்டது அறம் என்பதை வைத்து,
அறநோக்கி வீடணன் அண்ணனைப் பிரிந்தான்; அறநோக்கி கும்பகர்ணன் அவனோடு இருந்தான்
என்று சொல்லி, இரண்டுமே அறம்தான் என்பதை விளக்கினேன். நான் இரண்டாவது நபராகக் கவிதை வாசித்தேன். முதலில் வாசித்தவரின் கவிதையைக் கேட்டு, "ம்..ம்... விஷயத்துக்கு வாங்கோ... ஆகட்டும் மேலே...." என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த ஜயேந்திரர், இந்த வரிகளைக் கேட்டதும், "அம்பி... அதைத் திருப்பி வாசி" என்றார். உடனே நான் அதை மீண்டும் வாசித்தேன். உற்றுக் கேட்டவர், உடனே "இங்க வா" என்று சொல்லித் தன்னருகே அழைத்தார். "கவிதை ரொம்ப நன்னாருக்கு. வார்த்தை எல்லாம் ரொம்ப சிறப்பா அமைஞ்சிருக்கு" என்று சொல்லிப் பாராட்டி, வெள்ளிக்காசு ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். என்னால் மறக்கமுடியாத சம்பவம் இது.
- ஹரி கிருஷ்ணன்
*****
ஆவி துணையிருக்க… 'நேசமுடன்' ஆர். வெங்கடேஷ் அப்போது விகடன் பிரசுரத்தின் வைஸ் பிரசிடெண்ட் ஆக இருந்தார். விகடன், அப்போது என்சைக்ளோ பீடியா தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. சுதா சேஷையன் அதற்குத் தலைமைப் பொறுப்பேற்றார். அப்போது வெஙகடேஷ் என்னை அழைத்து 'ஒரு பார்வை பார்த்தால் போதும் வாருங்கள்' என்று சொல்லி அழைத்தார். நானும் சென்றேன். சுதா சேஷையனோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அவர் என்னிடம், "நீங்கள் சாவிலிருந்து தொடங்குங்கள்" என்றார். நானும் உடனே, "ஆவி துணையிருக்க ஆகாத தொன்றில்லை. சாவில் தொடங்குவேன் சாற்று" என்றேன்.
அவர் சொன்னது 'ச' என்ற எழுத்திலிருந்து தொடங்குங்கள் என்றுதான். ஆனால் பேச்சு வழக்கில் "'சா'விலிருந்து தொடங்குங்கள்' என்று சொல்லி விட்டார். நானும் அதற்கு என்னையுமறியாமல் உடனடியாக பதில் சொல்லி விட்டேன். "ஆனந்த விகடன் துணையிருக்கும் போது என்னால் ஆகாதது ஒன்றுமில்லை. 'சா' என்ற எழுத்திலும் கூடத் தொடங்க முடியும்" என்பது ஒரு பொருள். ஆத்மா துணையாக இருக்கும்போது சாவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை" என்றும் பொருள் கொள்ளலாம்.
- ஹரி கிருஷ்ணன்
பாரதி வரலாறு பதியப்பட்டிருக்கும் விதத்தில் உள்ள குறைகளைக் காட்டுவதற்கே இந்த முயற்சி. ஒன்று ஒரேயடியான துதிபாடல். இல்லாவிட்டால், நேர்மையான அணுகுமுறை என்று காட்டிக் கொள்ளவாவது பாசாங்கான குறைகூறல். மிகச் சிறந்த முறையில் பதிவு செய்திருப்பவர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஆதாரபூர்வமான மிகப்பல ஆவணங்களின் அடிப்படையில் இந்தப் பதிவை அளிக்கிறேன். [மேலும்..»] இந்த முறை நகரத்தில் திரியும் யானைகளின் உலா. சென்னைக்கு யானை; பெங்களூருக்கு ஒட்டகம். பெங்களூர் ஒட்டையை பின்னொரு நாள்பார்ப்போம். இப்போதைக்கு சென்னை நகரத்து யானைகள் இடம்பெறுகின்றன. [மேலும்..»] ‘பசும்புல் தலைகாண்பரிது‘ என்று சொன்ன மைலாப்பூர்காரர் இப்போது மைலாப்பூருக்கு வந்து பார்த்தால் விசும்பின் துளி வீழ்ந்துகொண்டிருந்தாலும் பசும்புல் தலை காண்பது அரிது என்ற புது உண்மையை உணர்ந்துகொள்வார். பெங்களூரில் பத்துப் பதினைந்து அருகம்புல் கொண்ட கட்டு ஐந்து ரூபாய்க்கு விற்கிறது! [மேலும்..»] மழைக் காலத்தில் கூவுகின்ற குயில் ஒரு அற்புதமான வாழ்க்கைச் சித்திரமல்லவா! துணையைத் தேடிக் கூவுகிறது குயில் (mating call). பருவம் கடந்து போனபின்பும் இந்தக் குயில் கூவிக்கொண்டிருக்கிறது.[மேலும்..»] நன்கு ஆலோசித்துத் திட்டமிடப்பட்டு எழுப்பப்பட்டுள்ள (நகர) மதில் சுவரைச் சுற்றிலும் உள்ள பாறைகளை எல்லாம் பிளந்து, மிக ஆழமாக உருவாக்கப்பட்ட அகழிகளில் பொங்கி எழுவதும், மீள வீழ்வதுமாகத் திரியும் பெரிய முதலைகளைப் பார்த்தால், அடக்க முடியாத மதம்பிடித்த யானைகள் (தம்முடைய மதமயக்கத்தினால்) பெரிய கப்பல்கள் இயங்குகின்ற கடலி்ல் வீழ்ந்து, அதிலிருந்து மீளமுடியாமல்... (Verses 16-20) [மேலும்..»] 2000ம் ஆண்டு நவராத்ரியில் அன்னை புவனேஸ்வரியின்மேல் நான் ஒரு நவரத்ன மணிமாலை இயற்ற வேண்டும் என்று இணையப் பிதாமகர் டாக்டர் ஜெயபாரதி விரும்பினார். டாக்டர் ஜேபி, வழக்கமான யாப்பு விதிகளைக் காட்டிலும் சில அதிகமான, சிறப்பான விதிகளையும் சேர்த்தார். ஐந்தாவது பாடல் தொடங்கி ஒன்பதாவது பாடல் வரையில் ஒவ்வொரு பாடலிலும் பயிலவேண்டிய தொனி, அதன் தன்மை, அதில் பதிக்கப்பட வேண்டிய பீஜாட்சரங்கள், எந்த அட்சரத்துக்குப் பிறகு எந்த அட்சரம் வரவேண்டும் என்றெல்லாம் விரிவாக எடுத்துச் சொன்னார். முக்கியமான விஷயம் என்னவென்றால்.... [மேலும்..»] துறவி என்பவன் அன்னையின் சம்மதத்தோடுதான் துறவேற்க முடியும் என்பது நமக்குத் தெரிந்த ஒன்று. ஒரு பக்கம் பந்தங்களை இறுத்துக் கொணடு விடுபட்டுப் போகும் உறுதியான நிலையில் ஒரு சிறுவன்; மறுபக்கம், வாழ்க்கையில் இழக்க இனி ஏதும் இல்லை என்று நினைத்திருந்தவளுக்கு, ‘தன் வாழ்க்கைக்கு ஒரேஒரு பிடிப்பாக மிகுந்திருக்கும் இந்தப் பிள்ளையையும் இழந்தே ஆகவேண்டும்’ என்ற கட்டாயச் சூழல்.[மேலும்..»] இதுதான் மண்ணிலே தென்படும் விண் என்ற தகுதிக்கு எதுவெல்லாம் வரக்கூடும்? ஒருசிலவற்றை வெண்பா வடிவத்தில் தந்திருக்கிறேன். சந்தவசந்தக் குழுவில் நடந்த கவியரங்கில் பங்கேற்றபோது இட்டவை இவை. [மேலும்..»] “நீதிமன்றத்தில் தாம் பிரிட்டிஷ் விசுவாசி என்று வாக்கு மூலம் தருகிறார் அந்த அப்பாவி! இதைக் கண்டித்துப் புதுவையிலிருந்து பாரதியாரின் ‘இந்தியா’ தலையங்கம் எழுதுகிறது! வீரமாக எதிர்த்து நின்றிருக்க வேண்டாமா? [மேலும்..»] 'இந்தியா' பத்திரிகையின் - சர்ச்சைக்குரியதாக வண்ணம் தீட்டப்படும் - அந்தக் குறிப்பிட்ட தலையங்கத்துக்குத் திரும்புவோம். இந்தத் தலையங்கத்தின் சில துண்டுகளை மட்டும் ஆய்ந்த ஆய்வாளர்கள், எழுதியவனின் இதயம் வெளிப்படும் முக்கியமான பகுதிகளைக் கவனிக்கத் தவறிவிட்டார்கள். இப்படிப்பட்ட ஆய்வுகளில் மேற்கோள் காட்டும்போது ஒரு சில பகுதிகளைத்தான் காட்டமுடியும். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். என்றாலும், தான் காட்டும் மேற்கோளின் தன்மை, அந்தப் பகுதியைத் தனியாகப் படித்தால் உண்டாகக் கூடிய - மையப்புள்ளியின்று விலகக் கூடிய - கருத்து உருவாக்கம் போன்றவற்றை மனத்தில் கொள்ளாமல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விட்டனவோ என்ற ஐயம் தோன்றுவதைத் தவிர்க்க... [மேலும்..»] எனவே, பாரதி சீனிவாசனை 'சிக்க வைத்துவிட்டான்' என்ற வாதம் அடிபட்டுப் போகிறது. 'தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்க வைத்துவிட்டுத் தாம் தூரப் போய்விட்டமை' என்னும் வாதம் வெறும் அபவாதமாக நிற்கிறது. சீனிவாசன், பாரதியை நம்பியோ, சார்ந்தோ இருக்கவில்லை. நம்பியிருத்தல் என்ற சொல்லுக்கு என்ன பொருள் இருக்க முடியும்? ஒரு ஆபத்து ஏற்பட்டால் காப்பாற்றுவார் என்பது நம்பிக்கையாக இருக்க முடியும்; ஒரு கஷ்டம் நேர்ந்தால், பொருளாதார ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ துணை நிற்பார் என்று நினைப்பது நம்பிக்கையாக இருக்க முடியும். இன்னும் இது போன்ற சில விஷயங்களில் ஒரு மனிதன்...[மேலும்..»] முனைவர் இறையரசன் மேற்கோள் காட்டியுள்ள 'இந்தியா கேஸ்' என்ற தலைப்பிட்ட 'இந்தியா' பத்திரிகையின் தலையங்கத்தின் இரண்டு பகுதிகளும் அப்படித்தான் ஆகியிருக்கின்றன. இந்த இரண்டு பகுதிகளும் - தலையங்கத்தின் மூன்றாவது பத்தியிலிருந்து ஒரே ஒரு வாக்கியத்தின் ஒரே ஒரு பகுதியும், கடைசிப் பத்தி முழுமையும் - உருவாக்கும் எண்ணம் என்வென்றால், 'சீனிவாசன் ஒரு தேசபக்த விரோதி. மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததன் மூலம் தேச பக்திக்கு விரோதமான ஒரு செயலைச் செய்துவிட்டார். நாம் அப்படிச் செய்யக் கூடாது. (அல்லது, 'அந்த இடத்தில் நாம் இருந்திருந்தால் அவ்வாறு செய்திருக்க மாட்டோம்.')... [மேலும்..»] இதுவரையில் இந்தத் தலைப்பில் ஆய்ந்தவர்கள் எல்லோரும் சீனிவாசனுடைய வாக்குமூலத்தை ஊன்றிப் படிக்கவில்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. சீனி. விசுவநாதன் வெளியிட்டிருக்கும் 'கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்' (தொகுதி 3) இந்த வாக்குமூலத்தின் முழு வடிவத்தைத் தந்திருக்கிறது. இந்த வாக்குமூலத்தில் ஒரு மிக முக்கியமான பகுதி எப்படி இத்தனை நாள், இவ்வளவு தேர்ந்த ஆய்வாளர்களின் கண்களில் படாமல் போனது என்ற வியப்பே மேலிடுகிறது. முரப்பாக்கம் சீனிவாசன் தன் வாக்குமூலத்தில் சொல்கிறார்... [மேலும்..»] சரி. பாரதிதான் மிகத் தீவிரமாகவும், கடுமையாகவும் அரசாங்கத்தை விமரிசித்தான். அவன் மீது நடவடிக்கை எடுக்க முயன்றார்கள். இது உண்மையானால், 'மிகவும் மிதமான போக்கை உடையவர்,' என்று அறியப்பட்ட ஜீ. சுப்பிரமணிய ஐயர் கைதுசெய்யப்படுவானேன், 'வெதுவெதுப்பான வாக்கியங்களை' எழுதிவிட்டு, highly defamatory என்று சொல்லிக்கொள்ளும் ஹிந்துவின் ஆசிரியரான கஸ்தூரிரங்க ஐயங்காரும் கைதாகலாம் என்று அஞ்சப்படுவானேன்? [மேலும்..»] இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலை எழுந்தவுடன், எம் பி திருமலாசாரியார் உடனே முரப்பாக்கம் சீனிவாசனை உரிமையாளர் மற்றும் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விடுவித்து, தன்னையே அந்த இரண்டு பொறுப்புகளுக்கும் பதிவுசெய்துகொள்கிறார். அதாவது 1908ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள். இதற்குப் பத்து நாள் முன்னால் - ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதியன்று - ஒரு விசித்திரமான பத்திரம் கையெழுத்தாகிறது. 'இந்தியா' பத்திரிகையின் உரிமையாளரும், ஆசிரியருமான மு. சீனிவாசன் அப்பத்திரிகையின் குமாஸ்தாவாக நியமிக்கப்படுகிறார். சி ஐ டி குறிப்பில் இதுவும் பதியப்பட்டிருக்கிறது.[மேலும்..»] என்னுடைய ஆதங்கமெல்லாம் இந்தக் குறிப்பிட்ட பகுதியைப் பற்றியது மட்டும்தான். 'வாரண்டு 'இந்தியா' ஆசிரியருக்கென இருந்ததைக் கவனித்தார். 'ஆசிரியர்தானே? நான் இல்லை,' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்,' என்ற ரா அ ப வாசகங்களும், எஸ் ஜி ராமானுஜலு நாயுடு அவர்களுடைய (மேற்காணும்) சித்திரிப்பும், பாரதி 'தன்னையே நம்பியிருந்த ஒருவரை ஆபத்தில் சிக்க வைத்துவிட்டு, தான் தப்பி ஓடிவிட்டான்,' என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன. ஐயா பெரியவர்களே! எந்த ஊரிலாவது வாரண்டு பதவிப் பெயரில் பிறப்பிக்கப்படுவதைக் கண்டிருக்கிறீர்களா? [மேலும்..»] 'இந்தியா பத்திரிகை சென்னையில் வெளி வர ஆரம்பித்த கொஞ்ச நாட்களுக்கெல்லாம் பாரதியார் அதில் வந்து சேர்ந்தார்,' என்று மண்டயம் ஸ்ரீனிவாசாசாரியார், 'சித்திர பாரதி'க்கு எழுதிய முன்னுரையில் சொல்கிறார். சீனி. விசுவநாதனின் ஆய்வின்படி, இந்தியா பத்திரிகை தொடங்கப்பட்டு ஏறத்தாழ ஆறு மாத காலத்துக்குப் பின்னால் 'பால பாரத' பத்திரிகை 'இந்தியா' பத்திரிகையின் நிறுவனர்களால் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியா பத்திரிகையின் நிர்வாகிகளில் ஒருவர் சொல்கிறார், 'பாரதியின் ஆங்கில எழுத்தை அவர் இந்தியாவில் எழுதத் தொடங்கும் முன்பிருந்தே அவர் ‘பாலபாரத’ பத்திரிகையில் எழுதி வந்ததன் மூலம் அறிவேன்,' என்று! [மேலும்..»] பத்திரிகை உலகத்துக்கு அப்போதுதான் வந்திருக்கும் இளைஞனிடம் தலையங்கம் எழுதும் பொறுப்பைத் தூக்கி யாரும் ஒப்படைக்க மாட்டார்கள். இதைச் இங்கே சொல்வதற்குக் காரணம் உண்டு. அது பாரதியைப் பற்றி நிலவும் தவறான கருத்துகளில் இன்னொன்று. தன்னைத் தலையங்கம் எழுத விடாத காரணத்தால்தான் பாரதி சுதேசமித்திரனிலிருந்து விலகி, இந்தியா பத்திரிகையில் சேர்ந்தார் என்று கவிஞர் வைரமுத்து 'கவிராஜன் கதை'யில் எழுதியிருக்கிறார். அது கவிஞர் வைரமுத்து அவர்களின் சொந்தக் கருத்தோ, ஆய்வோ அன்று; அப்படி அவர் எழுதியதற்குக் காரணம் உண்டு... [மேலும்..»] இலக்கியம், பொது போட்டி எந்த ஆண்டு நடந்ததாகச் சொல்லப்படுகிறது? 1914ல். பாரதியும் பாரதிதாசனும் சந்திப்பதற்கு முன்னால், அல்லது சந்தித்திருந்தால், ஓரிரு மாதப் பழக்கம் கூட ஆகியிருக்காத (பாரதிதாசன் கவிதை இயற்றக்கூடியவர் என்பதை பாரதி அறிந்திராத) சந்தர்ப்பத்தில் இந்தப் போட்டி நடந்திருக்கிறது. ‘இந்தப் போட்டியில் நீங்கள் பங்குகொண்டுதான் ஆகவேண்டும்’ என்று வலியுறுத்தும் அளவுக்கு இரண்டு பேரும் நட்புள்ளவர்களாக இருந்திருக்கும் சாத்தியம் எவ்வளவு என்பதையும் சிந்திக்க வேண்டு்ம். [மேலும்..»] நான் அர்ஜுனனோடு போர் தொடுக்க விரும்புகிறேன். ஆகவே எனக்கு பிரமாஸ்திரப் பயிற்சி அளியுங்கள்’ என்று குருவிடம் ஒரு சீடன் போய்க் கேட்கிறான். ‘உங்களுடைய எல்லாச் சீடர்களும் உங்களுடைய மகனைப் போலத்தானே நீங்கள் கருதுகிறீர்கள், அன்பு செலுத்துகிறீர்கள்’ என்று சொல்லி, தனக்குப் பயிற்சி அளிக்க வேண்டுகின்ற கர்ணன், ஒன்றைக் கவனித்தானோ?... [மேலும்..»] ஒரு லிட்டர் பாலும்; ஒரு லிட்டர் தண்ணீரும் ஏறத்தாழ ஒரே விலைக்கு விற்கப்படும் காலமும் வந்துள்ளதல்லவா... நகரத்தில் தென்படும் தண்ணீர் வியாபாரச் சூழல் குறித்த வெண்பாக்கள்...[மேலும்..»] திறமையைக் காட்டுகிறேன் என்று வந்த சமயத்தில் யாரும் 'அப்பன் பேர் என்ன, நீ என்ன பிறப்பு' என்று கேட்கவில்லை. 'என்கூட ஒண்டிக்கு ஒண்டி வா' என்று அறைகூவும்போது, இளவரசனோடு மோதவேண்டுமானால், உன் தகுதி என்ன என்று கேட்டார்கள். கேட்கத்தான் கேட்பார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்த ஜனநாயக சூழலை மறந்துவிட்டு, அரசர்கள் ஆண்ட அந்த சூழலுக்கு மனத்தை எடுத்துச் சென்று, அந்தச் சூழலில் இந்தக் கணத்தை நிறுத்திப் பாருங்கள். [மேலும்..»] இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். பாஞ்சாலனுடைய பிள்ளையான திருஷ்டத்யும்னனும் துரோணருடைய சீடன்தான். தன்னைக் கொல்வதற்காகவே பாஞ்சாலன் யாகம் செய்து பிறந்தவன் இவன் என்பது தெரிந்தே துரோணர் அவனைப் பயிற்றுவித்தார். இதற்குள் போவது, துரோணருடைய குணசித்திர அலசலாகிப் போகும் என்பதால் இப்போதைக்குத் தவிர்க்கிறேன். எதற்காக இதைச் சொன்னேன் என்றால், தன்னைக் கொல்வதற்காக பிறந்த பிள்ளைக்குக்கூட வித்தை பயிற்றுவிக்க துரோணர் மறுக்கவில்லை. அவன் குருவம்சத்துக்கு நெருக்கமானவரின் பிள்ளை என்ற காரணம் ஒன்றே அவருக்குப் போதுமானதாக இருந்தது. [மேலும்..»] கர்ணன் மட்டுமில்லை, திருஷ்டத்யும்னனும் கவசத்தோடு தோன்றியவன்தான். இப்போதைக்கு இந்தக் குறிப்பை மட்டும் சொல்லி வைக்கிறேன். எனவே, இயற்கையான கவசத்தோடு தோன்றிய ஒரே ஒருவன் கர்ணன் என்பது சரியில்லை. திருஷ்டத்யும்னனுக்கு இருந்ததும் natural mail என்றுதான் மொழிபெயர்ப்பாளர் குறிப்பிடுகிறார். இயற்கையாக, உடலோடு ஒட்டிப் பிறந்த கவசம். திருஷ்டத்யும்னன், பாஞ்சாலியின் சகோதரன். அவளோடு அக்னியில் தோன்றியவன். தோன்றும்போதே இளம்பருவத்தினராக அக்னியிலிருந்து தோன்றினார்கள். உரிய இடத்தில் வியாச பாரத விவரங்களைக் கொடுக்கிறேன்.[மேலும்..»] ஆகவே, கர்ணன் பிறப்பால் உயர்குடியில் தோன்றி, வளர்ப்பால் தாழ்ந்தவனாகி, அதன் காரணத்தாலேயே தனக்கு இயற்கையாகக் கிட்டியிருக்கவேண்டிய உரிமைகளை எல்லாம் இழந்துவிட்டான் என்று விவரிப்பது a mere sympathy seeking argument and has got no validity more than that. [மேலும்..»] அந்த மதிலில், (தொலைதூரத்துக்கு அம்புகளை எறியக் கூடிய மிகப் பெரிய) விற்கள் பொருத்தப்பட்டிருந்தன. கூர்மை மிகுந்த, கொல்லக் கூடிய வாளையும், கோடரிகளையும், இரும்புத் தடிகளையும், சக்கரங்களையும், எறியீட்டிகளையும், உலக்கைகளையும் வீசக்கூடிய கணக்கில் அடங்காத எந்திரப் பொறிகள் அமைக்கப்பட்டிருந்தன... (Verse 11-15) [மேலும்..»] துரோணர் சாதியைக் காரணம் காட்டிக் கர்ணனுக்குக் கற்பிக்க மறுப்பதாக பவன்ஸ் பதிப்பில் கமலா சுப்பிரமணியம் எழுதியிருப்பதும், விக்கிபீடியாவில் சொல்லியிருப்பதும், இந்தக் கட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்ட காரணத்தால் எழுந்துள்ள பேச்சுகள். இவற்றுக்கு அடிப்படை இல்லை. [மேலும்..»] வியாச பாரதம், வில்லி பாரதம், பாஞ்சாலி சபதம் போன்ற மஹாபாரதத் தலைப்புகளில் நண்பர்கள் அவ்வப்போது தனிமடல்களிலும், சிற்சில குழுக்களிலும் ஐயங்கள் எழுப்பி வருகிறார்கள். அவற்றுக்கு நான் அளித்துவரும் விடைகளை ஒரு பொதுத் தளத்தில் இட்டு வைப்பது நல்லது என்று பலரும் அபிப்பிராயப்பட்ட காரணத்தால், தமிழ்இந்து தளமே அதற்குப் பொருத்தமான தளம் என்று கருதி இங்கே அந்த விவாதங்களை இடத் தொடங்குகிறேன். [மேலும்..»] ‘இதன் முடிவு எது’ என்று அறிவால் ஆராய்ந்து தெளிந்துகொள்ள முடியாத காரணத்தால், இந்த மதிற்சுவர் வேதங்களையும் ஒக்கும். வானத்தைச் சென்று அடையும் காரணத்தால், (விண்ணில் உலாவுகின்ற) தேவர்களையும் ஒக்கும். வலிய பொறிகளைத் தம்முள் அடக்கியிருக்கும் காரணத்தால் முனிவர்களை ஒக்கும். நகரத்துக்குப் பாதுகாவலாக இருக்கின்ற காரணத்தால், கலைமான் வாகனத்தைக் கொண்டவளான துர்க்கையையும் ஒக்கும். மிகப் பெரிய அளவில் அமைந்த எல்லாப் பொருள்களையும் ஒக்கும். எல்லோராலும் எளிதில் அடைய முடியாத (உச்சியைக் கொண்ட) தன்மையால், ஈசனையும் இது ஒக்கும். (நகரப் படலம் பாடல்கள் 06-10; Verses 06-10) [மேலும்..»] இது ராம ராஜ்ஜியம் நடைபெற்ற இடம். இதைவிட அயோத்தியின் சிறப்பைக் குறித்து நான் சொல்ல வேறு என்ன இருக்கிறது! (நகரப் படலம் பாடல்கள் 01-05 Verses 01-05 of Canto of City) [மேலும்..»] திருமாலுடைய சங்கம் (பாஞ்சஜன்யம்), சக்கரம் (சுதர்சனம்), தண்டம் (கௌமோதகி - கதை), வில் (சார்ங்கம்), வாள் (நாந்தகம்) ஆகிய ஐந்து ஆயுதங்களையும் பொன்னால் செய்வித்துச் சங்கிலியில் கோத்து அணிவிக்கப்பட்ட ஐம்படைத் தாலி குழந்தைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்தது... (பாடல்கள் 56-61 End of Canto of Country) [மேலும்..»] ‘செவிநுகர் கனிகள்’ என்ற ஆட்சியே பின்னால் பாரதியை ‘இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே’ என்று பாடவைத்தது. பின்னால், அயோத்தியா காண்டத்தில், இராமனைத் திரும்ப அழைத்து வருவதற்காகப் பயணப்படுவதை மக்களுக்கு அறிவிக்குமாறு சத்ருக்கனனிடம் பரதன் சொல்கிறான்... பாடல்கள் 51-56)[மேலும்..»] நாட்டுப் படலம் (51-55) Canto of the Country (51-55) நாட்டில் வறுமை முதலியன இல்லாமை வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்; திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்; உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்; ஒண்மை இல்லை, பல் கேள்வி ஓங்கலால். 53 சொற்பொருள்: வண்மை – வள்ளல் தன்மை, கொடைச் சிறப்பு. ஒண்மை – அறிவுடைமை. அங்கே வறுமை என்பதே இல்லை ஆகையால், வள்ளல்களின் சிறப்பு வெளியே தெரிவதில்லை. எதிரிகள், நாட்டின்மேல் போர்தொடுத்து வருபவர்கள் என்று யாருமே இல்லாத காரணத்தால், நாட்டின் வீரர்களுக்குத் தங்களுடைய பராக்கிரமத்தை வெளிக்காட்டும் சந்தர்ப்பமே இல்லை. பொய் பேசுபவர்கள்... [மேலும்..»] இளம்பெண்களின் இனிமை நிறைந்த, குழறலான மழலைப் பேச்சை ஒத்துக் குயில்கள் கூவின. அவர்களுடைய நடையின் ஒசிவைப் பார்த்தே மயில்கள் நடனம் பழகிக் கொள்கின்றன. அவர்களுடைய பற்களின் வெண்மையையும் பிரகாசத்தையும் ஒத்த முத்துகளையே சங்கினங்கள் ஈனுகின்றன (பாடல்கள் 46-50) [மேலும்..»] எல்லா வீடுகளிலும் அகில் கட்டைகளை எரிக்கும் புகையும், சமையல் செய்யும்போது விறகுகளை எரிக்கும் புகையும், கரும்பு ஆலைகளில் கருப்பஞ் சாற்றைக் காய்ச்சும்போது எழுகின்ற புகையும், நான்கு மறைகளையும் ஓதியபடி வளர்க்கும் ஓமங்களில் எழும் புகையும் அடர்த்தியாகப் பரந்து, சூழ்ந்து, மேகங்களைப் போல் படர்ந்து வானின் எல்லாப் பரப்பையும் கவித்தன. (Verses 41-45) [மேலும்..»] மிக முக்கியமான குறிப்பு ஒன்றைக் கவி இங்கே பேசுகிறான். பெண்களுக்கு முழுமையான கல்வி இருந்தது என்பதும், ‘பொருந்து செல்வம்‘ என்று அவன் அழுத்தந் திருத்தமாக அடிக்கோடிட்டுச் சொல்வதைப்போல், பெண்களுக்கென்று தனிப்பட்ட செல்வவளம் இருந்தது; அதன் காரணமாக.... (பாடல்கள் 36-40)[மேலும்..»] (பாடல்கள் 31 முதல் 36 வரை) பெரிய மலைகளில் அடர்ந்து வளர்ந்திருக்கும் மூங்கில்களின்மேல் பலத்த காற்று வீசுதால் அவை நாலாபுறமும் அலைபடுகின்றன. அவ்வாறு ஆகும் சமயத்தில் அருகிலிருக்கும் மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் பெரியபெரிய தேன்கூடுகளின்மேல் படுவதனால் அவை உடைகின்றன. தேன்கூடுகள் உடைவதனால், அவற்றிலிருந்து பெருகிஓடும் தேன், மலைச் சரிவுகளில் ஓடிவருவது ஏதோ ஒரு நீண்ட பாம்பு மலையின் மேலிருந்து தொங்குவதைப் போல் காட்சியளிக்கிறது...[மேலும்..»] திணை மயக்கம் எப்போதும் தவறாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. இன்றைய மொழியில் சொன்னால், ‘கழிவறையில் கிடக்கும் பால்செம்பு; படுக்கையறையில் வைக்கப்பட்டிருக்கும் காஸ் அடுப்பு‘ என்பனவெல்லாம் பொருத்தமற்ற வருணனைகள் என்பதை ஒப்புக் கொள்வோம். திணை மயக்கம் என்று இலக்கணம் குறிப்பிடுவது இதைத்தான். ஆனாலும், நல்ல எழுத்தாளனிடம் திணைமயக்கமும் ஒரு உத்தியாகப் பயன்படும். ‘(கைகழுவி வாய்) கொப்புளிக்கும் பிறையின் (வாஷ் பேஸின்) மேல் ஸ்வாமி படம் மாட்டப்பட்டிருந்தது’ என்று எழுதினால் சிரிப்போம். ஆனால், ‘குளியலறையில் புத்தக அலமாரி இருந்தது’ என்று சொன்னால், ( [மேலும்..»] கோபம் கொண்ட இடிகளே இந்த உருவத்தில் வந்திருக்கின்றன‘ என்று நினைக்கும்படியாகவும்; விரிந்து திரண்டிருக்கும் இருட்டு, இரண்டாகப் பிரிந்து, இரண்டு கூறுகளாக மாறி ஒன்றை ஒன்று முறைமுறையாக (மாறிமாறி) நெருக்கி முட்டித் தள்ளி எருமைக் கடாக்கள் பொருதுநிற்க,(கம்பராமாயணம், பால காண்டம், நாட்டுப் படலம் பாடல்கள் 16-20. கோசல நாட்டு வர்ணனை) [மேலும்..»] கம்பராமாயணம், பால காண்டம், நாட்டுப் படலம் பாடல்கள் 11-15. கோசல நாட்டு வர்ணனை. கரிய நிறத்ததான கடல் அலைகளில் (கூட) சரயு நதியில் பெருகிவரும் புதிய நீரில் முங்கிக் குளிக்கும் பெண்கள் சூடியிருக்கும் பூவும், பூசியிருக்கும் கஸ்தூரியும் கலந்து அந்த மணமே வீசுகிறது என்றால், தேன்போன்ற இனிமையான மழலைச் சொல் பேசுவதும் (கொஞ்சிப் பேசுவதும்); கூர்மை மிகுந்த கடைக்கண் பார்வையை வீசுவதுமாக, அங்கே (கரைகளில்) நிற்கும் இளைஞர்கள் விருப்பத்துடன் (மனமார்ந்த காதலுடன்) பார்த்தபடி நிற்கும் (நீராடும்) பெண்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுச் சொல்ல முடியுமா? [மேலும்..»] கம்பராமாயணம், பாலகாண்டம், ஆற்றுப்படலத்தின் 3 ஆம் மற்றும் இறுதிப் பகுதி. இந்தப் பாடலில் நதி, யானையாகச் சித்திரிக்கப்படுகிறது. மதகின் கதவுகளை நதி முட்டுகிறது; யானையோ கோட்டைகளின் கதவுகளை முட்டிப் பெயர்க்கக் கூடியது. நதி ஓடிவரும் வேகத்தைக் கண்டு உழவர்கள் கைகளை உயரத் தூக்கியபடி கதறுகிறார்கள்; யானை ஓடிவரும்போதும் அப்படித்தான் மக்கள் கதறுவார்கள். நீர்த்தேக்கங்களின் முன்புறம் உள்ள ஓடைகள் நிரம்பிப் பொங்கி வழியுமாறு ஆற்றின் வெள்ளம் பெருகுகிறது; யானைக்கோ மத்தகத்தின் மீது அணிவிக்கப்பட்ட அணிகலனின் ஒளி வெள்ளம் பொங்கிக் கொண்டு இருக்கும். நதியிலும் வண்டுகள் மொய்க்கின்றன; யானையின் மதநீரின் மேலும் வண்டுகள் மொய்க்கும். நெருக்கமாகக் கட்டப்பட்டுள்ள மணிகள்... [மேலும்..»] கம்பராமாயணம், பாலகாண்டம், ஆற்றுப்படலத்தின் இரண்டாம் பகுதி; பாடல்கள் 11-15. பருத்த முகங்களையும், (நீரில் புரள்வதால்) களிப்பையும் உடைய (அல்லது, நீரில் சிந்திக் கிடக்கும் கள்ளைபங {தேனை} பருகிய) யானைகள், குதிரைகள், பலவிதமான மிருகங்கள் என்று இவற்றையெல்லாம் அடித்து உருட்டிக் கொண்டு செல்கிறது வெள்ளம். இவற்றினோடு அழகான கொடிகளும் வந்து சேர்ந்து தங்குவதால் (அல்லது விலை மதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்ட கொடிகள் பறக்கின்ற தேர்களும் வந்து சேர்வதால்) அந்த ஆறு, கடல்மேல் போர் தொடுப்தற்காகப் படையைத் திரட்டிக்கொண்டு போவதைப் போல இருந்தது.[மேலும்..»] பால காண்டம் 1. ஆற்றுப் படலம் – The Canto of the River மழை பொழிதல் ஆசலம் புரி ஐம் பொறி வாளியும், காசு அலம்பு முலையவர் கண் எனும் பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக் கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்: 1 சொற்பொருள்: ஆசலம்: சஞ்சலம். காசு – வைர மணிகள் (வைரமணிகளால் கோக்கப்பட்ட ஆரங்கள்) பூசல் – போர். சஞ்சலத்துக்கு மனிதனை உள்ளாக்கக்கூடிய ஐந்து புலன்களாகிய அம்புகளும்; எப்போதும் ஒன்றோடு ஒன்று மோதுவதால் ஒலியை எழுப்புகின்ற வைரமணிகள் பதிக்கப்பட்ட ஆரங்களை அணிந்த பெண்களுடைய கண்களாகிய போர் அம்புகளும், ஒருபோதும் ஒழுக்க... [மேலும்..»] உலகம் யாவையும் தாம் உளவாக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார் அவர் தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. எல்லா உலகங்களையும் ‘உள’ எனும்படியாக ஆக்கல், அவற்றைத் தத்தம் தன்மையில் தொடரச் செய்தல், அழித்தல் ஆகிய முடிவற்ற விளையாட்டுகளைத் தொழில்களாக உடையவர் எவரோ அவரே தலைவர். நாம் அவரையே சரண் அடைகிறோம். [மேலும்..»] "கல்லறைமேல் வீடெழுப்பும் ஊருக்குள் விந்தையுண்டோ அன்னியத்தில்!" வாழ்ந்திருந்த மக்களிடம் மண்பிடுங்கி வீடெழுப்பி வாழ்கின்ற மக்கள் வசிக்கின்றார் - பாழுலகில் தப்படியை வைப்பதற்கும் சாணகலம் மிஞ்சாக்கால் இப்படியும் உண்டே இடம். [மேலும்..»] "வேலைக்குச் செல்கையிலே வீண்தடையேன் - கூலாகப் போகத்தடை ஏனோ?" [மேலும்..»] "தோளெல்லாம் போட்ட குழந்தைகள் போணியைக் கண்டால்தான்" [மேலும்..»] "பூனையுடன் பால்குடிக்கும் பிள்ளைபோல் பற்று." "வீடெல்லாம் துள்ளி இறையும் துளிப்புலி" [மேலும்..»] "நானும் இரா முருகனும் நகரக் காட்சிகளை நானூறு வெண்பாக்களாகத் தீட்டுவதாகத் திட்டமிட்டோம். நான் எழுதியவற்றை நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்வரையில் குழுக்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். இடையில் நின்று போயிருந்த இந்த முயற்சியை இப்போது தொடர்கின்றேன். ஒரே ஒரு வித்தியாசத்துடன். எந்தக் காட்சி என்னை எழுதத் தூண்டியதோ அந்தக் காட்சியின் புகைப்படத்தையும் இணைக்கிறேன். நான் எடுத்த படங்கள்தாம்." [மேலும்..»] "அதுதான் அவன் கும்பனுக்களித்த standing ovation. கம்ப இராமாயணம் முழுவதிலும் வேறெங்கும் பார்க்க முடியாத இராமனின் மெய்ப்பாடு. ஒரு போர்வீரனாக, கடமையே கண்ணினாகத் தொண்டாற்றிய பிறகு, இராம பக்தனாகவே காட்சியளிக்கிறான் கும்பகன்னன். " [மேலும்..»] " அண்ணனே, இந்த உலகினைப் பேர்த்து எடுக்கலாம். அல்லது உலகைச் சுற்றி ஒரு வேலி போடவும் செய்யலாம். ஆனால், இராமனை வெல்வது என்பது எளிதா? " [மேலும்..»] "வான்மீகியின் படைப்பில் முரடனாகவும் ஒரு சில வெற்றிகளைப் பெற்ற போதினும், தூங்கித் தூங்கியே தன் ஆயுளைக் கழித்தவனாகவும் சித்திரிக்கப்படும் கும்பகருணன், கம்பன் கைகளில் தனிப் பொலிவும் உயர்வும் பெறுகிறான். " [மேலும்..»] அனுமனைச் சிறிய திருவடி என்று அழைப்பது தமிழ் மரபு என்று பார்த்தோம். அப்படியானால் பெரிய திருவடி என்றொருவர் இருக்க வேண்டும். ஆமாம். வைணவ சம்பிரதாயங்களை அறிந்தவர்கள் கருடனுக்கே பெரிய திருவடி என்ற பெயர் வழங்கப்படுகிறது என்றறிவார்கள். 'இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக்கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்' என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது. வாகனத்தின் மீது ஏறி அமர்கின்ற போது அதன் மீது திருவடி படுகின்ற தன்மையால் திருவடி என்னும் சிறப்புப் பெயர் விளங்குகிறது. 'தாவடி ஓட்டும் மயிலிலும்' என்று அருணகிரி நாதர் முருகன் திருவடி... [மேலும்..»] பாதங்கள் இவை என்னில்… இறைவனுடைய திருவடியைப் பாடுவதென்றால் ஒரு தனி மகிழ்ச்சி பிய்த்துக் கொண்டு போகும் கவிஞர்களுக்கு. ‘மொத்தம் மூணு இடங்களில் அவனுடைய திருவடி பட்டது’ என்று சொல்கிறார் அருணகிரி நாதர். ‘தாவடி ஓட்டும் மயிலிலும்’ அவன் பயணப்படுவதற்காக ஏறி உட்கார்கிறான் பார், மயில், அது மேல அவன் அடியிணை பட்டது. அங்கே மட்டுமா பட்டது? இல்லை; தேவர்களின் பகையை அழித்தவன்; இந்திரனுக்கு அவன் உயிரையும், இந்திராணிக்கு அவள் மாங்கல்யத்தையும் மீட்டுத் தந்தவன் ஆகையினாலே தேவர்கள் எல்லோரும் அவன் பாதத்தில் விழுந்து வணங்குகிறார்கள். அந்தக் காரணத்தினாலே அவர்கள் தலையிலும் பட்டது. ‘தாவடி ஓட்டும் மயிலிலும், தேவர்கள் தலையிலும்’....[மேலும்..»] மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அரக்கு மாளிகை வாசம் Aug 2015 பாண்டவர்கள் வாரணாவதத்தை அடைந்ததும் அங்கிருந்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து ஜயகோஷத்துடன் வரவேற்றனர். புரோசனன் இட்டுச்சென்று காட்டிய அந்த மாளிகைக்குள் புகுந்ததுமே தர்மபுத்திரர் அங்கே அரக்கு வாசனை வீசுவதை உணர்ந்தார். புதிதாக வண்ணமடித்த வீட்டுக்குள் போகும் யாரும் இதை உணர்ந்திருக்கிறோம். அங்கே பெயின்ட்வாசம் வீசும், அதைப்போலத்தான். அதுமட்டுமல்ல. "யுதிஷ்டிரர் அந்த வீட்டைப் பார்த்து, நெய், அரக்குகளோடு சேர்ந்த கொழுப்பின் நாற்றத்தை மோந்து, இது நெருப்பினுக்காகச் செய்யப்பட்டது என்பதைப்பற்றி பீமஸேனனுக்குச மேலும்... கண்ணா நீ கைதேர்ந்த நடிகன்... Dec 2014 பதினெட்டாம் நாள் யுத்தத்தில் சல்ய வதம் நடந்து, துரியோதனனையும் கொன்ற பிறகு, கிருஷ்ணன், அர்ஜுனனைப் பார்த்து, தேரைவிட்டு இறங்கச் சொல்லி, அர்ஜுனன் இறங்கியதும் தேர் தீப்பற்றி எரிகிறதே... மேலும்... |
| | காலமே நாளையைப் பற்றி சிந்தித்தால் Oct 2014 மகனை அப்போதுதான் இழந்திருந்த அர்ஜுனன், ஜயத்ரதனை மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் முன்னால் கொல்வதாகவும், அப்படிச் செய்யத் தவறினால், தான் தீயில் விழுந்து இறப்பதாகவும் செய்த சபதம், சற்றே... மேலும்... |
| | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள் Aug 2014 'பாண்டவர்களுடைய வனவாச சமயத்தில், கந்தர்வர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட துரியோதனனை பீமார்ஜுனர்கள் மீட்டு வந்த சமயத்தில், அவமானத்தால் அவன் உயிர்விடத் துணிந்த சமயத்தில்... மேலும்... |
| | | | விடை தெரிந்தால் சொல்லலாம் Apr 2014 நாம் சென்ற இதழில் முடித்திருந்த இறுதி வாக்கியத்தைப் பார்க்கும் போது, மகாபாரதத்தில் அப்படியென்ன மூத்த பிள்ளைச் சிக்கல் என்று கேட்கத் தோன்றலாம். நம்மில் மிகப் பலருக்கு, பொதுவாக நிலவிவரும்... மேலும்... (1 Comment) |
| மூத்தவனே அவனி காத்தவனா Mar 2014 மக்களாட்சி மலர்ந்துவி்ட்ட காலத்தில் வசி்க்கும் நமக்கு, மன்னராட்சிக் காலத்தில் நிலவிய முறைமைகள்-அதிலும் குறிப்பாக இந்தியத் திருநாட்டில் நிலவிய நிலமைகள்-மிகவும் மசங்கலாகவே... மேலும்... (2 Comments) |
| | | துரோணரின் சீடன் Dec 2013 மகாபாரதத்திலுள்ள கதாபாத்திரங்கள் ஆயிரக்கணக்கில் விரிவடைவதால், அடிப்படைக் குவிமையத்திலுளள பாத்திரங்களைத் தவிர்த்து, மற்ற *எல்லாப்* பாத்திரங்களைக் குறித்தும் முழுமையான அல்லது... மேலும்... |
| பாரதம் - சில பயணக் குறிப்புகள் Nov 2013 எந்த ஒரு கதையோ, காவியமோ, புதினமோ, இதிகாசமோ, எதுவானாலும் சரி ஒவ்வொன்றிலும் அடிப்படையாக நூல் பிசகாமல் கவனித்து வர வேண்டியது, அதன் கால ஓட்டம். எது முதலில் நடந்தது... மேலும்... |
| மகாபாரதம் – சில பயணக் குறிப்புகள் Oct 2013 நீண்ட காலமாக என் குருவைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். பேசி முடித்ததும் குரு தட்சிணை நினைவுக்கு வந்தது. கூடவே துரோணரின் நினைவும் வந்தது. 'கட்டை விரலை குரு தட்சிணையாகப் பெற்றவர்'... மேலும்... (1 Comment) |
| பேராசிரியர் நினைவுகள்: சமர்ப்பணம் Sep 2013 ஊர்விட்டு ஊர் நேர்முகத் தேர்வுக்காக வந்தவர், வந்த இடத்தில் சாப்பிடும் சமயத்தில் சட்டை முழுதும் சாம்பார் கோலத்தில், இன்னும் அரைமணி நேரத்துக்குள் இன்டர்வியூவுக்குத் திரும்ப வேண்டிய நெருக்கடியில்... மேலும்... |
| | | | பேராசிரியர் நினைவுகள்: சொல்வதெல்லாம் உண்மை May 2013 தொடங்குமுன், இந்தத் தொடருக்குத் தென்றல் வாசகர்கள் அளித்து வரும் பெரிய ஆதரவுக்காக நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். சென்ற இதழில் வெளிவந்த கட்டுரைக்கு மறுமொழி அளித்திருக்கும் அம்புஜம்... மேலும்... (1 Comment) |
| | ஒட்பம் என்பதன் நுட்பம் Mar 2013 சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் 1960களில் செய்த கதாகாலட்சேபங்கள், அன்னாளில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டு, தற்போது குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன. மேலும்... |
| | | | மருந்து மரமென்ன மாய மரமா? Nov 2012 பரோபகாரிகளை மூன்றுவிதமாகப் பிரித்தார் வள்ளுவர். முதல்வகை ஊருணி, ஊருக்கு நீரைக் கொடுத்து, தன் பாதுகாப்பை உறுதி செய்துகொள்கிறது. இரண்டாவது வகை, பயன் மரமோ... மேலும்...(1 Comment) |
| | பேரறிவாளன் திரு Sep 2012 ஒப்புரவு அதிகாரத்தில் மூன்று குறட்பாக்கள் ஒன்றையொன்று தொடர்ந்து, ஒரே பொருளில் திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதைப் பற்றி என்னை ஆசிரியர் கேட்டதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். மேலும்... (1 Comment) |
| | | சீனிக்கு ஒரு மாலை Jun 2012 பாரதி பாடல்களுக்கு ஒரு செம்பதிப்பு வரவேண்டியதன் அவசியத்தைப் பேரா. தி. வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்கள் வலியுறுத்திக் கொண்டிருந்ததையும், இப்போதுள்ள பதிப்புகளில் காணப்படும் பிழைகளும், பாரதி கொடுத்த தலைப்பைப்... மேலும்... (1 Comment) |
| | | பேராசிரியர் நினைவுகள்: கையிலே உள்ளது வெண்ணெய் Mar 2012 பாரதியின் குயில் பாட்டில் வரும் குயில், தமிழ்க் கவிதையின் குறியீடே என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்; பாரதியின் வேறு பாடல்களிலும் எழுத்துகளிலும் 'நாம் மேற்கொண்டுள்ள இந்த முடிவுக்கு ஆதாரம் இருக்கிறதா' என்று... மேலும்... (2 Comments) |
| | காதல் காதல் காதல் Jan 2012 பாரதியின் குயில் பாட்டில் உள்ள குறியீடுகளை அலசிக் கொண்டிருந்தோம். குயிலைக் கவிதை என்பதாகவும், இளைஞனை (பாரதி 'நான்' என்றே அந்த இளைஞனைக் குறிப்பிட்டாலும், அது பொதுவாக) நல்ல கவிஞர்கள் அனைவரையும்... மேலும்... (1 Comment) |
| பேராசிரியர் நினைவுகள்: வாலுக்குப் போவதெங்கே! Dec 2011 குயில் பாட்டில் குயில் கவிதையே என்றும், காளை, மரபை ஒரு வெளிப்பாடாக அல்லாமல், செக்குமாட்டுத்தனமாக, யாப்பிலக்கணப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளதை அரை அங்குலமும் பிசகாமல் செய்நேர்த்தியை மட்டுமே... மேலும்... (1 Comment) |
| | | | பேராசிரியர் நினைவுகள்: முன்பிறவிக் கதை Aug 2011 குயில் பாட்டின் மர்ம முடிச்சுகள் என்று இதுவரையில் நாம் பார்த்து வந்த அத்தனைக் குறிப்புகளையும் - ஒவ்வொரு புள்ளியையும் - ஒருங்கிணைக்கும் கோடாகக் குயிலின் பூர்வ ஜன்மக் கதை விளங்குகிறது. வேதாந்தமாக விரித்துப்... மேலும்... |
| பேராசிரியர் நினைவுகள்: குயிலின் கதை Jul 2011 பாரதியின் குயில் பாட்டில் உள்ளோட்டமான அந்த மையக்கருதான் என்ன? தன் கவிதாவேசத்தை வெளிப்படுத்துவதற்காக எழுதிய பாடலாக இருந்திருக்குமாயின், பாரதியால், கம்பன் ராமாயணத்தைத் தெரிவுசெய்ததுபோல் செய்திருக்க முடியும். மேலும்... |
| | | பேராசிரியர் நினைவுகள்: இடை விலகலாமா? Apr 2011 பேராசிரியரைப் பற்றிய இந்தத் தொடரில் நான் அவருடைய 'சுபமங்களா' சொற்பொழிவுத் தொடரை எந்தத் துணிவில் தொடங்கினேன் என்பது தெரியாது. சொல்லப் போனால், தொடக்கத்தில் சற்றுத் தயக்கமாகவும், பயமாகவும் கூட இருந்தது. மேலும்... |
| | பேராசிரியர் நினைவுகள்: வெல்லுஞ் சொல் Feb 2011 முப்பது, நாற்பதாண்டுகளுக்கு முன்னால், அநேகமாக எல்லா தமிழ்த் திரைப்படங்களிலும்--தமிழாசிரியாரை கோமாளியாகத்தான் சித்திரிப்பார்கள். கோட், தலைப்பாகை, முட்டை முட்டையாக மூக்குக்கண்ணாடி, அசமந்தப் பார்வை... மேலும்... |
| | | பேராசிரியர் நினைவுகள்: கதலி முதல் காணி வரை Oct 2010 இப்போது, பாரதியின் சொல்லாட்சியில் இரண்டு வேறுபட்ட, எதிரெதிரான நிலைகளைப் பார்த்திருக்கிறோம். ஒன்று, கதலி என்ற மிக அரிய பயன்பாடு. மற்றது காணி என்ற மிகப் பரவலாக அறியப்பட்ட, ஆனால் பெரும்பாலும் இதன் பொருள்... மேலும்... |
| | | கம்பனும் ஷேக்ஸ்பியரும் Jul 2010 வரலாறுகளும் செவிவழிச் செய்திகளும் ஒன்றிக் கலந்து புராணங்களாவதும் புனிதமாகப் போற்றப்படுவதும் இயல்பான ஒன்றுதான். அதைக் கேள்வி கேட்பது நம் நோக்கமன்று என்று தொடர்ந்தார் ஆசிரியர். மேலும்... (2 Comments) |
| | | | பேராசிரியர் என்ற ஆய்வாளர் Mar 2010 பேராசிரியர் நாகநந்தி அவர்களை நினைத்தால், பெருகிவரும் நினைவுகளில் எதைத் தேர்வது என்று புரியவில்லை. அவருடைய குணங்களில் குறிப்பிட்டுச்... மேலும்... (1 Comment) |
| கூவல் அடக்கிய குயில் Feb 2010 தான் தற்செயலாகச் செய்த ஒரு காரியம், தவறாகப் பொருளுணரப்பட்டுவிட்டது; மாணவர்கள் எல்லோரும் ஏதோ நடிபபுக்காகத் தான் கண்ணீர் விடுவதாக நினைத்துக்கொண்டுவிட்டார்கள்... மேலும்... (2 Comments) |
| தேடாமல் கிடைத்த சொத்து Jan 2010 இடம், சென்னை நகரை ஒட்டிய, இப்போது மிகப் பிரபலமாக இருக்கும் நங்கநல்லூர். காலம். நங்கநல்லூர் என்பது, ஏதோ விலங்குகளின் சரணாலயம் என்று நினைக்கும்... மேலும்... (5 Comments) |
| இந்திரனே சாலும் கரி Nov 2009 ஆத்மா, உடல் என்பது ஒரு கருவி. மனம் என்பது ஒரு கருவி. போராளி அமர்ந்திருக்கும் தேரில் பூட்டப்பட்ட குதிரைகளையும் அவற்றைச் செலுத்தும் தேர்ப்பாகனையும் ஒத்தவை இவை... மேலும்... (3 Comments) |
| அகல் விசும்புளார் கோமான் - 2 Oct 2009 "அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை குறளுக்குச் சற்றுப் பின்னர் வருவோம். அதற்கு முன்னால், 'ஐந்தவித்தான் ஆற்றலுக்கு' மணக்குடவர் உரையைக் கொஞ்சம் படியும் ஆத்மா. மேலும்... (1 Comment) |
| ஐந்தவித்தான் ஆற்றல் Aug 2009 ஒற்றைக்கு ஒற்றையாக நின்று போரிடும் சமயங்களில் இவற்றை எய்வதில்லை; எய்வதில் பயனுமில்லை. எந்தத் திசையில் பாயும் என்று எய்பவனுக்கே தெரியாத போது, ஒரேயோர் ஆள்மீது வீச... மேலும்... (1 Comment) |
| படித்திரு, திளைத்திரு, விழித்திரு Jun 2009 'பாரதி கனகலிங்கத்துக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசிக்கவே இல்லையா' என்ற கேள்விக்கு விடை காணும் நோக்கில், வள்ளுவப் பண்டாரத்துக்கு பாரதி பூணூல் அணிவித்த நிகழ்வைக் கனகலிங்கம் எவ்வாறு விவரிக்கிறார்... மேலும்... (1 Comment) |
| கேள்விகளெல்லாம் கேள்விகள்தாமா? May 2009 கனகலிங்கத்துக்கு பாரதி பூணூல் அணிவித்ததன் தொடர்பாகச் செய்யப்பட்டுள்ள ஓர் ஆய்வைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ‘பாரதி 125' பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள... மேலும்... (1 Comment) |
| ஆராய்ச்சிகளும் பீறாய்ச்சிகளும் Apr 2009 சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை புத்தகக் கண்காட்சியில் உலவிக் கொண்டிருந்தபோது ஓர் உரையாடல் காதில் விழுந்தது. ‘எந்தக் கடைக்குப் போனாலும் ஒண்ணு திருக்குறள் வச்சிருக்கான். மேலும்... |
| தன்வசம் மீள்வோம் Mar 2009 சென்ற இதழ்வரையில் நாம், காட்சி அமைப்பு, கம்பன் வால்மீகியிலிருந்து வேறுபட்டுச் சித்திரித்திருக்கும் பாங்கு, ஒவ்வொரு பாத்திரத்தின் வாயிலாகவும் ராமன் மேற்கொண்ட வனவாசம் ‘தாயுடைய பணியால்' என்று... மேலும்... (2 Comments) |
| ஆனந்தக் கனவு கலைகையில்... Feb 2009 'காட்டுக்குப் போ' என்று உன்னைப் பணித்தவன் அரசன் அல்லன். ஆகவே நீ காட்டுக்குப் போகவேண்டிய கட்டாயம் எதுவுமில்லை' என்று வசிஷ்டன் ராமனிடத்திலே வாதிடுவதைப் பார்த்தோம். மேலும்... |
| மயங்கியவர் யாரோ! Jan 2009 பரவச நிலையில் நின்று கவிஞன் பேசுகையில் சொல்வீழ்ச்சி மட்டுமன்றி, பொருள்வீழ்ச்சியும் நடப்பது உண்டு; அவ்வாறு நடப்பது இயற்கையானதே என்பதை விளக்குவதற்காக, கம்பனுடைய ஒரு பாடலை... மேலும்... |
| தசரதனிடம் பெறாத விடை Dec 2008 'மன்னவன் பணியன்று' என்று தொடங்கும் கம்பராமாயணப் பாடலைப் பார்த்துக்கொண்டிருந்தோம். நிறுத்தப் புள்ளிகளை இடம்மாற்றிப் போட்டால் அந்தப் பாடலில் எப்படிப்பட்டதொரு உட்பொருள்... மேலும்... |
| பணியானது, பணிவானதா? Nov 2008 கவிஞன் தன்னை மறந்த, இழந்த நிலையில் கவிதையுள் சொல்வீழ்ச்சி எப்படி நிகழ்கிறதோ, அப்படியே--அதுபோலவே--அவனையறியாத பொருள்வீழ்ச்சி ஒன்றும் நிகழத்தான் செய்கிறது... மேலும்... (2 Comments) |
| விழைபொருளும் விளைபொருளும் Oct 2008 தன் மனத்தில் தோன்றுகிற காட்சியில் லயித்துத் தன்வசமிழந்த நிலையில், கவிஞனுடைய கட்டுப்பாட்டிலிருந்து விலகி, சொல்லை அவன் ஆளும் தன்மை மறைந்து, அவனுடைய நனவழிந்த... மேலும்... |
| வென்ற தோல்வி Sep 2008 சூழ்ந்த பரவசமாய்' என்ற தலைப்போடு கவிதை இயற்றப்படும் கணங்களில், இயற்றுபவனுடைய உள்ளத்தில் நிகழும் மாயங்களையும், அது எடுக்கும் பரிமாணங்களையும் பேசத் தொடங்கினோம். மேலும்... |
| ஒளியில் மறைந்த ஒளி Aug 2008 கவிதையை வாசிப்பவனுக்கும் சரி, அவனைவிடவும் முக்கியமாய், எழுதுபவனுக்கும் சரி, மனத்தில் மேலோங்கி நிற்பது எதுவென்றால், பாவம் என்று சொல்லப்படும் உணர்வுநிலைதான். மேலும்... (1 Comment) |
| | | சூழ்ந்த பரவசமாய் May 2008 கவிதையை இயற்ற-எழுத-எது காரண மாய் இருக்கிறது என்ற கேள்வி வெகுகாலமாக நிலவி வருகிறது. வெளியிலே நிகழும் நிகழ்வுகளோ, தோன்றும் காட்சிகளோ உள்ளத்தில் எழுப்பும் எழுச்சி எந்த ஒரு கவிதைக்கும் முதல் காரணமாக இருக்கிறது. மேலும்... |
| பற்றி இறுக்காத பற்று Mar 2008 ஒரு மான்குட்டியின் காரணத்தால் மாமுனிவரான ஜடபரதர் பிறவிச் சுழலில் சிக்கிக் கொண்டார் என்று பார்த்தோம். அப்போதுதான் பிறந்த மான்குட்டியை மரணத்தின் கைகளில் இருந்து... மேலும்... (1 Comment) |
| அரசர் துறக்காத மான்குட்டி Feb 2008 பாரத நாட்டின் முனிவர்கள் வரிசையில் மிகப் பெரிதும் போற்றப்படுபவர் ஜட பரதர். பரதர் என்ற பெயரில் அரசராக விளங்கியவர். நாபி என்ற அரசனின் பெயரால்... மேலும்... |
| எதை விடுவது, எதைப் பிடிப்பது Jan 2008 அன்பு, ஆசை என்ற இரண்டு சொற்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இரண்டும் ஒரே தன்மையைத்தான் குறிக்கின்றனவா அல்லது இரண்டும் சுட்டுவது வேறுவேறு குணங்களையா... மேலும்... |
| தாழ்மரமும் கொடியும் Dec 2007 'ஆசையெனும் கொடிக்கு ஒரு தாழ்மரமே போன்றான்' என்று தன் குருநாதனாகிய குள்ளச்சாமியை பாரதி பாடுவதாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். இதில் ஆசை ஒரு கொடியாகவும்... மேலும்...(3 Comments) |
| தாழ்மரமும் கொடியும் Nov 2007 முந்தைய இதழ்களில் நாம் எழுதி வந்த ரெளத்திரம் பழகு தொடரில் 'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' என்ற குறளை வேறொரு கோணத்திலிருந்து அணுகியிருந்தோம். வாசகர் சுதாமா அது குறித்து எழுதியிருப்பதில்... மேலும்... (1 Comment) |
| ரெளத்திரம் பழகு Sep 2007 சிச்சு முடிச்சாச்சா சார்?' என்று நண்பர் தொடங்கினார். 'இப்ப சொல்லு. இன்னாச் சொல் முற்றிலும் ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றா, இல்லை ஏற்றுக்கொள்ள வேண்டியதும், இன்சொல்லுக்கு ஒருபடி குறைவானதுமா?' மேலும்... |
| ரௌத்திரம் பழகு - பாகம் 2 Aug 2007 உவமை என்பது ஓர் அணி. அதை அழகுக்காகத்தான் கவிஞர்கள் கையாள் கிறார்கள். பெரும்பாலான கவிஞர்கள் பயன்படுத்தியிருக்கும் பெரும்பாலான உவமைகளை ஓர் எல்லைக்கு அப்பால் விரிக்க முடியாது. மேலும்... |
| ரெளத்திரம் பழகு Jul 2007 அந்தக் காலத்தில் டைப்ரைட்டர் இயங்கும் ஒலியைக் கேட்டிருக்கிறீர்களோ? நல்ல வேகத்துடன், ஒரே சீராய், தாளக்கட்டு தவறாமல் இயக்கும் வித்தைக்கு ஸ்டகாடோ டச் என்று பெயர். கை தயங்காது. விரல் தடுக்காது. மேலும்... |
| | | | | மதுரபாரதியின் புத்தம் சரணம் - (May 2006) | பகுதி: நூல் அறிமுகம் | ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவனான பாரதியின் வாழ்க்கை வரலாற்றை வேறுவேறு நூல்களின் வழியே படிப்பவர்களுக்கு ஒரே சம்பவத்தை வெவ்வேறு ஆசிரியர்கள் எப்படி முரண்படச் சித்திரிக்கிறார்கள் என்பது தெரியும்.மேலும்... |
|
|
| | கடப்பைக் கல்மேல் ஒரு கால்சுவடு - (Sep 2003) | பகுதி: சிறுகதை | மின் வண்டி திரிசூலத்தைத் தாண்டியிருக்கும். கிழிந்துபோன கட்டம்போட்ட கம்பளிப் போர்வையும், மடக்கக் கூடிய அலுமினிய ஊன்று கோலும், இடுங்கிப் போய் பாதாளமானதும், திறந்திருக்கும் சின்ன இமை இடுக்கு...மேலும்... |
|
|
| | படிக்காத குதிரை! - (Aug 2003) | பகுதி: சிறுகதை | ஸ்கூட்டரில் நானும் நண்பனும் போய்க் கொண்டிருக்கிறோம். வண்டி, கிண்டி குதிரைகள் ஆஸ்பத்திரியைத் தாண்டியது. மொழுமொழுவென்று, ஆரோக்கியமான பளபளப்புடன் வரிசையாகக் குதிரைகள்...மேலும்... |
|
| | காற்று சொல்லிய கதைகள் - (Oct 2001) | பகுதி: இளந்தென்றல் | முன்பு வானத்தில் இருந்த தண்ணீரை யாரும் எடுக்கவே முடியாது. மேகங்கள் வெறுமனே அலைந்துகொண்டிருக்கும். ஒரு நாள் மேகங்களின் கடவுள் வானில் சுற்றியலைந்து கொண்டிருந்தது.மேலும்... |
|
|
| | புயலிலே ஒரு தோணி - (Aug 2001) | பகுதி: பொது | தமிழ் நாவலாசிரியர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவரான ப. சிங்காரம், நேதாஜியின் I.N.A. எனும் இந்திய தேசிய இராணுவத்தின் வீரர்களை, அதன் அன்றைய செயல்பாட்டைப் பின்புலமாகக் கொண்டு இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார்.மேலும்... |
|
|
| | பஞ்சாங்க யுகத்துக் கணினி - (Apr 2001) | பகுதி: பொது | 'பழம் பஞ்சாங்கம்' என்று அடிக்கொரு தரம் அலுத்துக்கொள்வார் நண்பர். 'கம்ப்யூட்டர் யுகம் சார் இது. இப்ப போயி இந்தப் பழம் பஞ்சாங்கம் இப்படிச் சொல்கிறது' என்று யாரைப் பற்றியாவது சொல்வார். ஆனால் கணினி யுகத்தில் பஞ்சாங்கம் - பாம்புப் பஞ்சாங்கம் மட்டும் எவ்வளவு விற்கிறது தெரியுமா?மேலும்... |
|
http://www.vallamai.com/author/hariharikrishnan1/ https://docs.google.com/viewer?url=https://venkatramanan.wiki.zoho.com/_attach/1.0/Kamban-Vizha-Malar.pdf http://www.tamilhindu.com/author/harikrishnan/
|
|
|
| | | |
|