| | | |
Home /
SRaShortFilms
Uploading ....
கடலும் கிழவனும்: ஹெமிங்வேயின் புகழ்பெற்ற கடலும் கிழவனும் நாவல் மிகச்சிறப்பாக அனிமேஷனில் உருவாக்கப்பட்டிருக்கிறது, இதனை உருவாக்க அலெக்சாண்டியர் பெத்ரோவ் என்ற ஒவியரும் அவரும் மகனும் இரண்டு ஆண்டுகாலம் எடுத்துக் கொண்டார்கள், 29000 சித்திரங்களை கையாலே கண்ணாடியில் வரைந்து உருவாக்கியிருக்கிறார்கள், இப்படம் சிறந்த அனிமேஷன் படத்திற்காக அகாதமி விருது பெற்றிருக்கிறது http://video.google.com/videoplay?docid=-6079824527240248060&hl=en#
கவிஞனின் ரத்தம்: 1930ம் ஆண்டு பிரபல பிரெஞ்சுக் கவிஞரும் ஒவியருமான ழான் காக்தூ இயக்கிய The Blood of a Poet என்ற திரைப்படம் வெளியானது, இதை சர்ரியலிச சினிமாவின் முக்கியப் படமாக குறிப்பிடுகிறார்கள், அந்தப்படத்தின் இணைப்பு இது, கனவுகள் போல காட்சிகள் உருவாக்கபட்டுள்ள விதம் பிரமிப்பு ஊட்டுகிறது http://youtube.com/watch?v=BAqxEq4ylb4
நிலமெங்கும் பூக்கள்: சம்ஸ்ரா திரைப்படத்தின் மூலம் பிரபலமான Pan Nalin. இயக்கிய valley of flowers திரைப்படத்தின் இணைப்பு, மிலின் சோமன் முக்கிய பாத்திரமாக நடித்திருக்கிறார் http://www.youtube.com/watch?v=9rlB5BRAHfM
சிசிலியா: Cecelia-The Balcony Girl என்ற இந்த அனிமேஷன் படம் மிகவும் வேடிக்கையானது, http://www.youtube.com/watch?v=JhKQz2TwSAE **********
முதல் நடிகன்
இந்தியாவை
மையமாகக்
கொண்டு
உருவாக்கப்பட்ட SONG
OF
INDIA,
SAVAGE DRUMS, JUNGLE BOOK, THE BLACK PANTHER, MAN EATER OF
KUMAON, ELEPHANT BOY, BLACK NARCISSUS. NORTH WEST FRONTIER போன்ற
பழைய
ஹாலிவுட்
. பிரிட்டீஷ் படங்களாகத் தேடிப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தப் படங்களை பார்த்த அமெரிக்க
மக்கள் இந்தியாவை ஏதோவொரு மாயமந்திரத்தீவைப்போல தான் நினைத்திருப்பார்கள்,
இன்று வரை இந்தியாவைப் பற்றி யதார்த்தமான படம் எதையும் ஹாலிவுட்
உருவாக்கவேயில்லை, இந்திய மக்களை ஆதிவாசிகள் போல தான்
காட்டியிருக்கிறார்கள், அவர்களை மீட்க வந்த அவதூதர்களாகவே வெள்ளைகாரர்கள்
படங்களில் வருகிறார்கள், புலிவேட்டையும். வெள்ளைக்கார அதிகாரிகள் அழகான
இந்தியப் பெண்களை எப்படிக் காதலித்தார்கள். பிரிட்டீஷ் அரசை
எதிர்த்தவர்களை எப்படி அடக்கினார்கள் என்பதே இந்தப் படங்களின்
ஆதாரப்புள்ளி, பெரும்பான்மை படங்களில் இந்தியா மீதான அவதூறுகளும்
கட்டுக்கதைகளும் துவேசமும் பொங்கிவழிகின்றது
எல்லாப்படங்களிலும் அழகான,
அதிகமாக நகை அணிந்த இளம் பெண்கள். பகட்டான உடை அணிந்த அரசர்கள். வறுமையில்
வாடும் ஏழைகள். பாம்பாட்டிகள். யானை.புலிவேட்டை. அழகான அரண்மனைகள்.
ஆடம்பரமான விருந்து. கழைக்கூத்தாடிகள். மரபிசைக் கலைஞர்கள். திருவிழா.
பல்லக்குகள். ரத ஊர்வலம். சாமியார்கள். நெருப்பு நடனம். உட்பகை. என
ஒரேவிதமான அம்சங்கள் காணப்படுகின்றன,
இந்தப்படங்களில் ஒரு பகுதி
இந்தியாவிலே படப்பிடிப்பு செய்யப்பட்டிருக்கின்றது கதையின் பிரதான
பகுதிகள் ஹாலிவுட்டிலோ லண்டனிலோ செட்டிற்குள் படமாக்கப்பட்டிருக்கிறது,
இந்தப் படங்களை காண்கையில் யார் முக்கிய கதாபாத்திரங்கள் அவர்கள்
ஆங்கிலம்பேசும் முறை. மற்றும் இந்திய இசையை இவர்கள் பயன்படுத்திக் கொண்ட
முறை. இந்தியாவைப்பற்றிய அவர்களது புரிதல் ஆகியவையே எனது பிரதான கவனமாக
இருந்தது, பெரும்பான்மை இனத்துவேச முயற்சிகளே,
அப்படி ஒரு படத்தில் தான் சாபுவை
முதன்முதலில் பார்த்தேன், சாபு தஸ்தகீர் என்று அழைக்கப்படும் அந்த
நடிகரின் உடல்வாகும் நடிப்பும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது
வேறு என்ன படங்களில்
நடித்திருக்கிறார் என்று தேடிப்பார்த்த போது தீப் ஆப் பாக்தாத் மற்றும்
மேன் ஈட்டர் ஆப் குமாயுன் என பல படங்களில் அவரே முக்கியக் கதாபாத்திரம்
என்று தெரியவந்தது, சாபுவிற்காகவே ஆறு படங்களைப் பார்த்தேன்
சாபு எனப்படும் SELAR SHAIK SABU
வின் வாழ்க்கைக் கதை அவர் நடித்த படங்களை விடவும் வியப்பானது, 1937ம்
ஆண்டு பிரபல பிரிட்டீஷ் டாகுமெண்டரி இயக்குனர் ராபர்ட் பிளாஹெடி
Toomai of the Elephants என்ற கிப்ளிங்கின் கதையைப் படமாக்க விரும்பி
மைசூர் பகுதியில் தங்கி இதற்கான நடிகனைத் தேடிக் கொண்டிருந்த போது
அரண்மனையில் உள்ள யானை கொட்டிலில் யானைகளுக்கு சேவை செய்யும் 13 வயதுப்
பையனைக் கண்டிருக்கிறார், அவனிடம் உனக்கு நடிக்க விருப்பமா என கேட்ட போது
அவன் விழித்திருக்கிறான். ஆங்கிலம் பேசத் தெரியாது. அப்பாவோ ஒரு காலத்தில்
யானைப்பாகனாக இருந்தவர். அவரும் சிறுவயதில் இறந்து போகவே மாமாவின்
உதவியோடு சாபுவும் அவனது அண்ணனும் ராஜாவின் யானைகொட்டிலுக்கு
வேலைக்கு வந்திருக்கிறார்கள், அப்போது ராஜாவிடம் 200 யானைகள் இருந்தன,
ஆகவே யானை கொட்டில் என்பது ஒரு தனி உலகமாக இயங்கி வந்தது,
திடீரென ஒரு ஆள் தன்னை சினிமாவில்
நடிக்கிறாரா என்று கேட்டது அவனால் நம்பமுடியவேயில்லை,
பிறந்ததில் இருந்த மைசூர் தவிர
வேறு எந்த ஊரையும் அறியாத அந்த உள்ளுர் பையனின் கண்கள் மற்றும் உடல்வாகு
பிளாஹெடிக்கும் மிகவும் பிடித்துப் போய்விட்டது, உடனே அவனே தனது கதையின்
நாயகன் என்று உறுதி செய்துவிட்டார், அவனோடு அவனது யானை ஹரிவர்த்தனும்
படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். பிரம்மாண்டமான தந்தங்கள்
கொண்ட மிகப்பெரிய யானையது, படத்தில் பார்க்க அவ்வளவு கம்பீரமாக உள்ளது
சாபுவிற்கு மைசூர்காடுகளில்
சுற்றிய அனுபவம் இருந்த காரணத்தால் அவனால் எலிபெண்ட் பாய் படத்தில்
இயல்பாக நடிக்க முடிந்தது, , படப்பிடிப்பிற்காக சாபு முதன் முதலில் தனது
யானையோடு லண்டன் பயணம் மேற்கொண்டான், அவனுக்கு வெளிவுலகம் விசித்திரமாக
இருந்தது, அதிலும் புகழ்பெற்ற நடிகர்கள். ஸ்டுடியோ. ஆடம்பரக் கார்கள்,
பகட்டான விருந்துகள், அழகான இளம் பெண்களின் சிரிப்பு. வசீகரம். காட்டில்
இருந்து பிடித்துவரப்பட்ட ஆதிவாசி போல தன்னை உணர்ந்ததாகவே சாபு நினைவு
கூறுகிறார்
Elephant Boy 1937ம் ஆண்டு
வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த படமாக விருது பெற்றது, வசூல் ரீதியாகவும்
படம் பெரிய வெற்றியை அடைந்தது
படத்தின் வெற்றி சாபுவை மைசூரில்
இருந்து அமெரிக்காவிற்கு இடம் பெறச் செய்தது, தயாரிப்பாளரான Alexander
Korda சாபுவோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார் அதன்படி அவரது
படங்களில் தொடர்ந்து நடிக்கத் துவங்கினான், சாபு 1940களில் அமெரிக்கப்
பிரஜையாகவே மாறிவிட்டார், அவரது யானை ஹரிவர்த்தன் லண்டன் மிருக்காட்சி
சாலைக்கு பரிசாக அனுப்பிவைக்கப்பட்டது
அமெரிக்க சினிமாவில் நடித்த முதல்
இந்திய நாயகன் சாபுவே, காட்டுவாழ்வை முதன்மையாக கொண்ட சாகசப்படங்களில்
நடிப்பது அவருக்கு எளிதாக இருந்த்து, அதனால் கிடைத்த பணமும் புகழும் அவரது
வாழ்க்கையை மாற்றியது, பேச்சு உடை, நட்பு என்று அவர் முழுக்க அமெரிக்க
மனிதனாக மாறத்துவங்கினார்
The Thief of Bagdad படத்தில்
நாயகனாக நடித்தது முதல் அவரது திரை வாழ்க்கை பெரும் வெற்றியைச் சம்பாதிக்க
துவங்கியது, தன்னோடு நடித்த நடிகையை காதலிக்க துவங்கினார், பணமும்
வசதியும் வரத்துவங்கியது, 1952ம் ஆண்டு சாபு தான் வளர்ந்த அரண்மனை
யானை கொட்டிலைப் பார்வையிட மைசூருக்கு கெடிலாக் காரில் வந்த போது மன்னரை
காண வந்ததை விட அதிக கூட்டம் வந்து திரண்டது அன்றைய செய்தி, புகழின்
உச்சிக்குச் சென்ற சாபு இரண்டாம் உலக யுத்த காலத்தில் ராணுவத்தில் இணைந்து
பதினோறு மாதம் பயிற்சி எடுத்து வான்படையில் சேவையாற்றியிருக்கிறார்
அமெரிக்க சினிமாவில் இருந்த
இனவெறி காரணமாக சாபு வேட்டைக்கார பையன் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க
மட்டுமே அழைக்கப்பட்டார், நல்ல நடிகராக அவரை ஹாலிவுட் பயன்படுத்திக்
கொள்ளவில்லை, அந்தக் கோபம் சாபுவிற்குள் இருந்தது, ஒரு நடிகராக வெற்றி
பெற்ற போதும் அவருக்கு ஹாலிவுட் இரண்டாம்தர மரியாதையே அளித்து வந்ததால்
சினிமா விட்டு ஒதுங்கி சில காலம் சர்க்கஸில் சேர்ந்து யானைகளை வைத்து
வேடிக்கை நிகழ்ச்சி காட்டியிருக்கிறார்
ஒரு நடிகை தன்னை ஏமாற்றி
கர்ப்பமாக்கி குழந்தையை கொடுத்து ஏமாற்றிவிட்டான் என்று நீதிமன்றத்தில்
சாபு மீது வழக்கு தொடர்ந்தாள், அது நிருபணம் ஆக முடியாமல் சாபு விடுதலை
செய்யப்பட்டார், மர்லின் கூப்பர் என்ற நடிகை சாபு திருமணம் செய்து
கொண்டு திரைப்படத்தில் மீண்டும் கவனம் காட்டத்துவங்கினார், 28 படங்களில்
நடித்த சாபு தனது முப்பத்தி ஒன்பதாவது வயதில் எதிர்பாராத மாரடைப்பு
காரணமாக உயிர் இழந்தார்
சாபுவின் வாழ்க்கைடிய பற்றி
வாசிக்கையில் சினிமாக்கதைகளை விட அதிக திருப்பங்கள் கொண்டதாக இருக்கிறது,
திரையில் இன்று காணும் போதும் சாபுவிடம் அலாதியான கவர்ச்சி உள்ளது,
சண்டைகாட்சிகளில் காணப்படும் நுட்பமும். வேகமும் அலாதியானது, சிக்ஸ்பேக்
உடற்கட்டு, சிரிக்கும்கண்கள் தோள்வரை புரளும் கூந்தல். வெளீர் என்ற பற்கள்
என அவரது தோற்றம் சாபுவை இளம் பெண்களின் கனவு நட்சத்திரமாக
ஆக்கியது, பலநேரங்களில் அவரது நீண்ட கேசத்தை கண்டு பெண் போல இருப்பதாக
விமர்சகர்கள் கேலி செய்திருக்கிறார்கள், ஆனால் சாபுவினைக் கண்டு மற்ற
கதாநாயகர்கள் பொறாமைப் பட வைத்தது இந்த அடர்ந்து புரளும் கேசமே,
அவரது பையன் Paul Sabu ராக்
இசைக்கலைஞராக உருவாகினார், மகள் ஜாஸ்மின் சாபு விலங்குகளுக்குப் பயிற்சி
கொடுப்பவராகவும் சண்டைப்பயிற்சிகலைஞராகவும் பணியாற்றி இறந்து போனார்
சாபுவைப் பற்றி நினைவு கொள்ளும்
ராபர்ட் பிளாஹெடி தான் நானூக் ஆப் தி நார்த் ஆவணப்பட காலம் துவங்கி
பயிற்சியில்லாத சிறுவர்களை நடிக்கவைத்திருக்கிறேன், அதில் மிகச் சிறப்பாக.
தனித்துவமாக இருந்தது சாபுவே, அவன் பெரிய நடிகன் ஆவான் என்று அவனைப்
பார்த்த முதல்நாளே எனக்கு நம்பிக்கை வந்தது என்கிறார்,
1940களில் ஐரோப்பா எங்குமே சாபு
கொண்டாடப்பட்டார், அவரைப் பள்ளி மாணவர்களுக்கு அதிகம் பிடித்திருந்த்து,
சாபுவைப் போல ஆக வேண்டும் என நினைத்து பலர் அவரைப் போல வேஷம்
புனைந்து கொண்டு சுற்றியலைந்தனர் என்கிறார் கனேடிய விமர்சகர் வில்லியம்ஸ்.
படப்பிடிப்பு நடக்குமிடத்தில்
சாபுவைக் காண யாராவது வந்தால் குளியல் அறையில் இருந்தால் கூட அப்படியே
வெளியே வந்துவிடுவார் , அவருக்கு யார் முன்னாலும் கூச்சமே கிடையாது,
பத்திரிக்கையாளர்களைத் தனது படுக்கை அறைக்கு வர வைத்தே பேசுவார் இது போல
தான் பிரபல நடிகர் ஜான் போர்டும் நடந்து கொள்வார், அவர் சாபுவை விட ஒரு
படி மேலே,
பலநேரம் நிர்வாணமாக நின்றபடியே
நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பார், ஒரு முறை ஜான் போர்டு கழிப்பறையில்
இருந்த போது வெளியே பத்திரிக்கையாளர் வந்து காத்திருப்பதாக
உதவியாளர் சொன்னதும் போர்டு அவரை உள்ளே அனுப்பிவை என்று சொல்லிவிட்டு
கேலியாக சொன்ன பதில்
Send
him
in
— I can deal with two shits at the same time.
இது போன்றவெளிப்படையான பேச்சும்
செயலும் சாபுவிடமும் இருந்தது என்று அவரை நினைவுகொள்கிறார் கோர்டா
இன்று ஹாலிவுட்டில் சென்று நடிக்க
பல முன்னணி நடிகர்கள் போட்டியிடும் சூழலில் ஐம்பது வருசங்களின் முன்பாகவே
அங்கு வெற்றிக் கொடி நாட்டிய ஒரு தென்னிந்திய நடிகரை இந்திய சினிமா மறந்து
போனது நமது சாபமே,
அவரை நினைவு கொள்ளவும்
கொண்டாடவும் இந்தப் படங்களை அவசியம் மறுமுறை காண வேணடியுள்ளது
இணைப்பு
**
சாபு ஒரு நினைவுத் தொகுப்பு (An homage to sabu)
http://www.youtube.com/watch?v=jlFKFKpT5sE
சாபுவைப்பற்றிய புகழ்மிக்கபாடல்: John Prine : Sabu
Visits The Twin Towns Alone: http://www.youtube.com/watch?v=i9GBZ2qNvDs
The Beauty of
Pixar: http://www.youtube.com/watch?v=9T8koHsigiM
Pixar Short: Day
& Night – An Inside Look: http://www.youtube.com/watch?v=Ko-27mN7Z2Y
The Life and Death
of a Pumpkin: http://www.youtube.com/watch?v=Q-1aui-wluE
Two Solutions For
One Problem – Abbas Kiarostami: http://www.youtube.com/watch?v=lRfbq0ikK_E
MY FIRST CRUSH: http://www.youtube.com/watch?v=a6FQTgCogOM
The Inception of
Movie Editing: The Art of D.W. Griffith: http://www.youtube.com/watch?v=ExLNbJs46jc
Kafka’s A Country
Doctor: http://www.youtube.com/watch?v=_XpvlrOcEcM
Franz Kafka –
Metamorphosis: http://www.youtube.com/watch?v=0O1azwOUY3g
THE DOOR: http://www.youtube.com/watch?v=m7eBpdOLRLw
Interview to Hayao
Miyazaki: http://www.youtube.com/watch?v=zJLBED-6M8I
ஒரு பிரச்சனை
இரண்டு வழிகள். – அபாஸ் கிராஸ்தமி
அபாஸ்
கிராஸ்தமி ஈரானின் முக்கியமான இயக்குனர். 1975ம் ஆண்டு அவர் இயக்கிய இந்த
நான்கு நிமிச குறும்படம் பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்களை பற்றியது.
ஒருவன் புத்தகத்தை மற்றவன் கிழித்துவிடுகிறான். உடனே மற்றவன் அவன் ஸ்கேலை
உடைத்துவிடுகிறான். உடனே ஆத்திரமாகி அவன் பேனாவை பிடுங்கி உடைக்கிறான் .
உடனே மற்றவன் தொப்பியை பிடுங்கி ஆத்திரப்படுத்துகிறான் இப்படி
சிறார்களின் உண்மையான அகவுலகை சித்தரிக்கும் அதே நேரம் சிறார்கள் எப்படி
நட்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் படம் விளக்குகிறது. இரண்டு
சிறுவர்கள் இதில் நடித்திருக்கிறார். வெகு இயல்பான நடிப்பு. காட்சி
கோணங்களும், நிகழ்வுகள் சொல்லப்பட்ட விதமும் இசையும் படத்தொகுப்பும்
அற்புதமாக உள்ளன
Two solutions for
one problem Abbas Kiarostami, 1975: http://in.youtube.com/watch?v=L7534pgShEk
மறுசந்திப்பு- டொர்னாடோ குசாபே
சமீபத்தில்
நடந்த ஒலிம்பிக்ஸ் விழாவிற்கு சில மாதங்களுக்கு முன்னால் ஐந்து முக்கிய
இயக்குனர்களை அழைத்து சீன அரசு ஐந்து குறும்படங்களை எடுத்து தரச்
சொல்லியது. அந்த படங்கள் ஒலிம்பிக்கிற்கான வரவேற்பு படங்கள் போல இருக்க
வேண்டும் என்று விரும்பியது. அந்த வரிசையில் சினிமா பாரடிஷோ படத்தை
இயக்கிய டொர்னாடோ குசாபே இயக்கிய படமே ரீ யூனியன்
ஒரு வயதான ஆசிரியர்
தனிமையில் இருப்பதை ஒரு சிறுவன் காண்கிறான். அவரிடம் முன்பு படித்த
கண்டு
மாணவர்கள் இன்று வளர்ந்து ஏதேதோ துறைகளில் பெரியவர்களாக இருக்கிறார்கள்.
அத்தனை பேரும் ஆசிரியரோடு மறுசந்திப்பிற்கு வருகை தருமாறு ஏற்பாடு
செய்கிறான். இந்த படம் கதை சொல்லும் முறையிலும் ஒளியமைப்பிலும் இசையிலும்
ஒரு சிறிய கதையின் ஊடே சீன கலாச்சாரம் சமகால வாழ்க்கை, ஒலிம்பிக்ஸ்,
ஆசிரியர் மாணவர் நட்பு என்று பல்வேறு தளங்கள் இயங்குவது மிக சிறப்பாக
உள்ளது.
Giuseppe
Tornatore- Reunion: http://in.youtube.com/watch?v=RIBpfLkbAiU
தடை செய்யப்பட்ட வாத்து – டிஸ்னி.
வால்ட்
டிஸ்னியின் இந்த அனிமேஷன் படம் பல ஆண்டுகாலமாக தடை
செய்யப்பட்டிருந்தது.
அதற்கு முக்கியமான காரணம் இந்தப்படம் ஹிட்லரை கேலி செய்து டிஸ்னியால்
உருவாக்கபட்ட படமாகும். டொனால்டு டக் கதாபாத்திரத்தின் வழியே ஹிட்லரின்
முட்டாள்தனங்கள் கேலி செய்யப்படுகின்றன. இரண்டாம் உலக யுத்த நாட்களில்
இந்த படம் தடை செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகும் பலவருசம் இது வெளியாகவே
இல்லை. சமீபத்தில் இப்படம் புத்துருவாக்கம் செய்யபட்டு
திரையிடப்பட்டிருக்கிறது.
டிஸ்னி உருவாக்கிய மிகச் சிறந்த பொலிடிகல் அனிமேஷன் படம் இது என்று
விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். அது முற்றிலும் உண்மை.
Donald Duck – Der
Fuehrer`s Face: http://in.youtube.com/watch?v=mZiRiIpZVF4
வர்ண ஜாலம். மஜித் மஜித்
ஒலிம்பிக்கிற்காக
ஈரானிய இயக்குனர் மஜித் மஜித் இயக்கிய குறும்படம் கலர்ஸ் ப்ளே. மஜித்
மஜித்தின் படங்கள் சிறுவர்களின் உலகையே தொடர்ந்து மையக்கொள்பவை. உலக
திரைப்பட விழாக்களில் அவர் பெற்ற விருதுகளின் எண்ணிக்கை நூறை
தாண்டியிருக்கும். அவ்வளவு பெரிய இயக்குனர் இந்த குறும்படத்தை
இயக்கியிருக்கிறார். ஒலிம்பிக்கை முன்னிட்டு சிறுவர்கள் தங்களின்
விருப்பமான ஆசைகளை பலூனில் எழுதி பறக்க விடுகிறார்கள். அப்படி பறக்க
விடுவதற்காக சைக்கிளில் பயணம் செய்கிறார்கள். இந்த பயணமும் பறக்கும்
பலூன்களும் சிறார்களின் சந்தோஷமும் ஒன்று சேர்ந்ததே இந்தக்குறும்படம்
சந்தோஷத்தை வெளிப்படுத்தும் சிறுவர்களின் முகங்கள், விதவிதமான சாலைகள்,
சைக்கிள்கள் என்று ஐந்து நிமிசபடத்திற்குள் எத்தனை காட்சிகள். எத்தனை
கோணங்கள். தேர்ந்த இசை, ஒளிப்பதிவு. அருமையான படத்தொகுப்பு.
Colors Fly by
Majid Majidi: http://in.youtube.com/watch?v=zjV6Qs3fGnY
தேநீரின் மணம்
ஒரு
குமிழ் பரப்பில் சிறிய புள்ளி தன் இடத்திலிருந்து நகர்ந்து நகர்ந்து
பயணிக்கிறது. அவ்வளவு தான் இந்த குறும்படம். சர்ரியலிச படம் போலவும்
குறியீட்டு தளத்தில் அமைந்த படம் என்றும் எப்படி வேண்டுமானாலும் புரிந்து
கொள்ளலாம். நவீன ஒவியம் போல வரையப்பட்டிருக்கிறது. புள்ளியின் பயணமும் அது
தடைபடும் இடங்களும் சந்திக்கும் வெளியும் வாழ்வை பற்றிய உண்மைகளை
விளக்குவதை போலவே உள்ளது.
இந்த படத்தின் பெரிய பலம் இசை. புள்ளியின் பயணமும் இசையும் பிரிக்க
முடியாதபடி ஒன்று கலந்திருக்கின்றன.
The Aroma of Tea: http://in.youtube.com/watch?v=ErPcbuHqzjU&feature=related
ஏழு குறும்படங்கள்
நேற்று
பெரியார் திடலில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை ஊடகத்துறையின் குறும்பட
போட்டியின் துவக்கவிழாவில் கலந்து கொண்டேன். இதனை ஒருங்கிணைத்த பிரின்ஸ்
பெரியார் இயக்கத்தின் துடிப்புமிக்க இளம்தலைமுறை தோழர்.சென்னை
திரைப்படக்கல்லூரியில் பயின்றவர். இந்த திரையிடல் நிகழ்விற்கு
ஐம்பதிற்கும் மேற்பட்ட குறும்பட இயக்குனர்கள் வந்திருந்தார்கள். நூறு
குறும்படங்களுக்கு மேலாகவே போட்டிக்கு வந்திருந்தன. தமிழில் இவ்வளவு
குறும்படங்கள் உருவாக்கபடுவது மிக ஆரோக்கியமான வளர்ச்சியாகும். இதன்வழியே
மாற்றுசினிமா முயற்சிக்கான புதிய களம் உருவாகி வருவதை அறிய
முடிகிறது.
தேர்ந்த தொழில்நுட்பம், கதைக்கரு, மிகையில்லாத நடிப்பு என்று தமிழ்
குறும்படங்கள் அதன் அமெச்சூர் தன்மைகளை கடந்து இன்று முழுமையாக பரிமளிக்க
துவங்கியிருக்கிறது. வளர்ந்து வரும் குறும்பட இயக்குனர்கள் அனைவருக்கும்
என் மனம் நிறைந்த அன்பும் வாழ்த்துகளும். சமீபத்தில் இணையத்தில்
நான்
பார்த்த சில குறும்படங்களின் இணைப்புகள் இவை. இவை ஒவ்வொன்றும் மிக
தனித்துவமானவை. திரைப்பட விழாக்களில் முக்கிய விருது பெற்றவை.
குறும்படங்கள் எவ்வளவு வலிமையானவை என்பதற்கு இந்த படங்கள்
எடுத்துக்காட்டு. இதில் தி ஸ்டோரி ஆப் சைன் படத்தை மட்டும் நான் பத்து
தடவைகளுக்கு மேலாக பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் அது சரியான
வார்த்தை வாழ்வில் எவ்வளவு மாற்றத்தை உருவாக்கும் என்பதை உணர
செய்கிறது.
இணைப்புகள்
1) The Story of a
Sign: http://www.youtube.com/watch?v=4-K8bpoDn-8
2)Wind – Hungarian
Winners of Palme d`Or special category.: http://www.daazo.com/film/468e3d10-910c-102c-a455-000e2e531ae0/
3)After
Rain Best Short Film in 2002: http://www.daazo.com/film/5e922afe-910a-102c-a455-000e2e531ae0/
4)Haircut: http://www.spike.com/video/haircut/2930764
5)Ten
Minutes Ahmed Imamovic – BEST SHORT FILM IN EUROPE: http://www.youtube.com/watch?v=ppAn0LNU_V8
6) PLEASE! –
Gerard Butler stars in award-winning short film: http://www.youtube.com/watch?v=AiCw8V_pF9o
7) Snap (award
winning short film): http://www.youtube.com/watch?v=NmxX2r-uD8I
**
இரண்டு
குறும்படங்கள்.
அமெரிக்க
இயக்குனரான ராமின் பஹ்ரானியின் (Ramin Bahrani)பிளாஸ்டிக் பேக் என்ற
குறும்படம் பதினெட்டு நிமிசங்கள் ஒடக்ககூடியது. இந்தப் படத்திற்கு பின்னணி
குரல் கொடுத்திருப்பவர் பிரபல இயக்குனர் வெர்னர் ஹெர்சாக்.
ஒரு
பெண் கடையில் பொருள்கள் வாங்குகிறாள். அதை ஒரு பிளாஸ்டிக் கேரிபேக்கில்
போட்டுத் தருகிறார்கள். அங்கிருந்து அந்த பிளாஸ்டிக் பேக் எங்கு
செல்கிறது. எதை எல்லாம் சந்திக்கிறது என்று அதன் முடிவில்லாத பயணமே
இந்தக் குறும்படம்.
பல நேரங்களில் பிளாஸ்டிக் என்பது இன்றைய வணிகச்
சந்தையின் குறியீடு போல அடையாளப்படுத்தபடுகிறது. சில தருணங்களில் அது
அழிவின்மையின் அடையாளமாக சுட்டிக்காட்டப்படுகிறது. இசையும்
காட்சிப்படுத்திய விதமும் அபாரமானது. ஒரு குறும்படத்தின் பின்னணி வர்ணணை
எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம். கவித்துவமாகவும்
ஆழ்ந்த உண்மையோடும் எழுதப்பட்டிருக்கிறது.
ஒருவருக்கு உதவி
செய்வதற்காகவே நான் பிறந்திருக்கிறேன் என்ற குரலுடன் பிளாஸ்டிக் பை
கண்விழிக்கிறது . அது அந்த பெண்ணோடு அவள் வீட்டிற்கு வருகிறது. அங்கே அந்த
பை பெண்ணின் மேஜையில் கிடக்கிறது. உடல்நலமற்ற பெண்ணிற்கு ஒத்தடம் கொடுக்க
பயன்படுகிறது. நாய்குட்டிக்கு தேவையான சாப்பாட்டினை போட்டு எடுத்து
வர
உதவுகிறது. பின்பு நாய்குட்டியின் கழிவை துடைத்து போடவும் பயன்படுகிறது.
வீட்டிலிருந்து
குப்பை தொட்டிக்கு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பை குப்பைகளின்
உலகிற்குள் காணமல் போகிறது. அங்கிருந்து அதன் பயணம் ஆகாசத்தை நோக்கி
திரும்புகிறது. அது இடைவிடாமல் பறந்தபடியே இருக்கிறது. தொடர்ந்து
பிளாஸ்டிக் பை இயற்கையை, மனிதர்களின் விசித்திரத் தேவைகளை, தாண்டி
முடிவில் கடலின் உள்ளே சென்று சேர்கிறது.
மனிதர்களே இல்லாத
இடங்களில் கூட பிளாஸ்டிக் பை பறந்து செல்லும் காட்சிகளை காணும்போது நமது
உபயோக கலாச்சாரம் எந்த அளவு உலகின் தூய்மையை பாதிக்கிறது என்பதை புரிந்து
கொள்ள முடிகிறது. படம் முழுவதும் சிறுசிறு காட்சிகள் வலிமையான
காட்சிபடிமங்கள் போல தோன்றி மறைகின்றன
ஒரு சாதாரண பிளாஸ்டிக் பையை
வைத்துக் கொண்டு இந்த அளவு உணர்ச்சிபூர்வமான படம் ஒன்றினை உருவாக்க
முடிந்திருப்பது இயக்குனரின் பெரிய வெற்றி. சூழலியல் பிரச்சனையை
சுட்டிக்காட்டுவதோடு மனிதர்கள் தாங்கள் உருவாக்கிய ஒன்றை தாங்களே அழிக்க
முடியாமல் போராடுவது வரையான மனநிலையை குறும்படம் சிறப்பாக அடையாளம்
காட்டுகிறது
மாபெரும் திரைச்சாதனைகளைப் புரிந்துள்ள வெர்னர்
ஹெர்சாக் இது போல இளம் இயக்குனர் ஒருவரின் குறும்படத்திற்கு பின்னணிக்
குரல் தந்துள்ளதோடு குறும்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் கூடவே
இருந்து வலிமை சேர்ந்திருப்பது சினிமாவின் மீதான அவரது ஈடுபாட்டின்
சாட்சியாகும்.
Plastic Bag: http://www.youtube.com/watch?v=YDBtCb61Sd4
**
The Windmill Farmer
Joaquin
Baldwin, இயக்கியுள்ள இந்த நான்கு நிமிச குறும்படம் ஒரு விவசாயியைப்
பற்றியது. சற்றே கனவுத்தன்மையான படமது. ஒரு விவசாயி தனது பண்ணையில்
ஆங்காங்கே விதைகளை தூவுகிறான். அதிலிருந்து காற்றாலைகள் முளைக்கத்
துவங்குகின்றன. அதைக்கண்டு அவன் மிகுந்த சந்தோஷம் அடைகிறான். காற்றாலைகள்
சுற்றுவது அவனை உற்சாகப்படுத்துகிறது.
பின்பு ஒரு நாள் காற்றாலைகள்
பலத்த மழையில் சூறையாடப்பட்டு வீசி எறியப்படுகின்றன. அவன் மிகவும்
வருத்தமடைகிறான். ஆனால் விசிறியடிக்கபட்ட காற்றலைகளின் விதைகள் ஆங்காங்கே
ஈரத்தில் புதையுண்டு மறுபடியும் முளைக்கத் துவங்குகின்றன. இப்போது எங்கு
பார்த்தாலும் காற்றாலைகளாக உள்ளன. விவசாயி மறுபடி சந்தோஷம் கொள்கிறான்.
காற்றாலையை
ஒரு தாவரம் போல உருவகபடுத்தியுள்ளது. விதையிலிருந்து காற்றாலைகள் முளைத்து
வருவதும் மின்னலும் மழையும் சேர்ந்து சூறையாடுவதும் வெகு சிறப்பாக
சித்தரிக்கபட்டிருக்கிறது. இந்த குறும்படத்திலும் இசை சிறப்பாக
கையாளப்பட்டிருக்கிறது.
The Windmill
Farmer: http://www.youtube.com/watch?v=0nd9OuX7Bd4
**
நான்கு
குறும்படங்கள்
பெர்னான்டோ
சொரன்டினோ (Fernando Sorrentino) அர்ஜென்டினாவைச் சேர்ந்த புகழ் பெற்ற
எழுத்தாளர். இவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்றை தமிழில் மொழியாக்கம் செய்து
காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. எம்.எஸ். அவர்கள் மொழியாக்கம்
செய்துள்ள இந்த தொகுப்பில் அவன் என்னை குடையால் அடித்துக்
கொண்டேயிருக்கிறான் என்ற சிறுகதை உள்ளது. இந்தக் கதை உலகப்புகழ் பெற்ற
சிறுகதையாகும். தன்னுடைய தலையில் கடந்த ஐந்தாண்டுகளாக ஒரு ஆள் குடையால்
அடித்துக் கொண்டிருக்கிறான் என்று சொல்லும் ஒரு ஆளின் வாழ்வில் நடந்த
நிகழ்வுகளை கதை விவரிக்கிறது. பூங்காவில் அமர்ந்து பேப்பர்
படித்துக்
கொண்டிருந்த ஒரு ஆளைத் திடீரென ஒருவன் குடையால் தலையில் அடிக்க
துவங்குகிறான். இதில் ஆத்திரமான பேப்பர் படிப்பவன் அவனைத் தாக்குகிறான்.
அடிபட்டு கிழே விழுந்த போதும் குடைக்காரன் தன் வலியைப் பற்றிய
கவலையின்றி
எழுந்து திரும்ப தலையில் அடிக்கத் துவங்குகிறான். குடையால் அவன் மிக
மெதுவாக அடிப்பதால் அது ஈ உட்காருவது போன்ற உணர்ச்சியை தான் தருகிறது.
ஆனால் அதற்கு ஏன் கோபப்பட்டு அவனை அடித்தோம் என்று செய்திதாள் படிப்பவன்
கவலைபடுகிறான். ஒருவேளை அவன் பைத்தியமாக இருப்பானோ என்று நினைத்து
அவனிடமிருந்து தப்பி ஒடுகிறான். குடைக்காரனும் பின்னாடியே ஒடி
வருகிறான்.
தப்பி பேருந்தில் ஏறிய போதும் அவனும் கூடவே ஏறி பேருந்திற்குள்ளும்
தலையில் குடையால் அடித்தபடியே வருகிறான். அதைக் கண்டு பேருந்தில்
வருகின்றவர்கள் பரிகாசம் செய்கிறார்கள். வீட்டிற்கு வந்து கதவைப் பூட்ட
முயன்ற போது அவனும் வீட்டிற்குள் வந்துவிடுகிறான். அதன்பிறகு எல்லா நாளும்
பகலும் இரவும் உறங்காமல் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான்.
இப்போது
அது பழகிப் போய் அவனிடம் அடிவாங்காமல் தூக்கம் வருவதில்லை என்று கதை
முடிகிறது. இந்தச் சிறுகதையை வெவ்வேறு தேசத்தை சேர்ந்த நான்கு
இயக்குனர்கள் குறும்படமாக எடுத்துள்ளார்கள். ஒரே கதை எப்படி நான்கு
இளம்
இயக்குனர்களால் மாறுபட்டு படமாக்கட்டிருக்கிறது என்பதை ஒப்பிட்டு
பார்த்துக் கொள்வதற்கு இந்தக் குறும்படங்கள் உதவி செய்யக்கூடும்.
குறும்படம்1: http://in.youtube.com/watch?v=VHaCuArM6y8&eurl=http://www.talkingpeople.net/tp/literature/translations/sorrentino/fernandosorrentino.html
குறும்படம் 2: http://in.youtube.com/watch?v=BftjbyTk-OU
குறும்படம் 3: http://in.youtube.com/watch?v=yEz150XebJk
குறும்படம் 4: http://in.youtube.com/watch?v=xrZq0jXeVmA
பத்து குறும்படங்கள்
சமீபத்தில் நான் இணையத்தில் பார்த்த குறும்படங்கள் இவை.
இதில்
ஹிந்தி திரையுலகின் முக்கிய இயக்குனரான அனுராக் காஷ்யப்பின் முதல்படம்
உள்ளது. இப்படம் அவரது சமீபத்தைய தேவ் டி, குலால் போன்ற படங்களின்
முன்னோடி முயற்சி என்பது தெளிவாக தெரிகிறது. அது போல ஈரானிய
குறும்படங்களும் முக்கியமானவையே. மும்பை மற்றும் நியூ டெல்லியில் உள்ள
தனியார் திரைப்படக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் ஹிந்தி
குறும்படங்கள் சிலவற்றையும் கண்டேன். இதில் ஒன்றிரண்டு மிக சிறப்பாக
உள்ளது. இந்த பட்டியலில் உள்ள மை நேம் இஸ் லிசா குறும்படம்
யூடியூப்பில்
அதிகம் பார்வையிடப்பட்ட குறும்படம் என்ற விருதை பெற்றிருக்கிறது. பத்து
லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதனை பார்த்திருக்கிறார்கள்.
உணர்ச்சிபூர்வமான குறும்படமது. லிட்டில் டெரரிஸ்ட் படம்
நூற்றுக்கும்
மேற்பட்ட திரைப்படவிழாக்களில் பங்கேற்றுள்ளது. சத்யஜித்ரே விருது
பெற்றிருக்கிறது. அத்துடன் அகாதமி விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
இணைப்புகள்
1) Not an every
day story ( Iranian short film ): http://www.youtube.com/watch?v=QoA9GRJbIc0
2) Little
Terrorist (2004): http://video.google.com/videoplay?docid=-7310473179454725496&hl=en#
3) Viva Sunita !: http://www.youtube.com/watch?v=U0Hc1yKRwyk
4) Touch – Short
Film: http://www.youtube.com/watch?v=FE_T-QI-JOw
5) The Slap: http://www.youtube.com/watch?v=l60bW7lhRNc
6) my name is lisa: http://www.youtube.com/watch?v=ZiRHyzjb5SI
7) Light: http://www.youtube.com/watch?v=CJZ_CtNhtAw
8) Don`t Cry for
Rahim Le Cock: http://www.youtube.com/watch?v=Io7UKTfvTG8
9)A day in the
life of India: http://www.youtube.com/watch?v=-jckhTr8wgk
10)
Last_Train_to_Mahakali. – Anurag Kashyap`s first movie: http://video.google.com/videoplay?docid=-828074971421276299&hl=en#
குறும்படங்கள் பத்து
இணையத்தில் சமீபத்தில் பார்த்த சில குறும்படங்கள்.
1) Not an every
day story: http://www.youtube.com/watch?v=QoA9GRJbIc0
2) Second Wind: http://vimeo.com/10019015
3) Melancholy
Soldier (Short Film Version): http://www.youtube.com/watch?v=6cfgXuCEwFs
4) the big shave: http://www.youtube.com/watch?v=QrCaJ-8Q1Y0
5) Replay short
film: http://www.youtube.com/watch?v=qKKGk1HZa6A
6) Lavatory –
Lovestory 2007: http://www.youtube.com/watch?v=_cHTt8RJJWQ
7) Knal – Bang –
short film: http://www.youtube.com/watch?v=zaG7_QyQQhY
8) Life Circle-
Sri Lanka Short Film: http://www.metacafe.com/watch/2599829/life_circle_sri_lanka_short_film/
9) Missing Pages –
A Short Film: http://www.youtube.com/watch?v=VBFriZnGVCQ
10) Vincent (Short
Film) By Tim Burton: http://www.youtube.com/watch?v=ASHP-vgnjAw
துறவியும் மீனும்
துறவியும்
மீனும் (The Monk and The Fish )என்ற ஐந்து நிமிச குறும்படம் ஒன்றை
இணையத்தில் பார்த்தேன். பிரெஞ்சில் உருவாக்கபட்ட அனிமேஷன் படமது. சிறந்த
இசை, காட்சிபடுத்துதல், படத்தொகுப்பு என்று பல்வேறு விருதுகள்
பெற்றிருக்கிறது. 1994ல் தயாரிக்கபட்ட இந்த குறும்படத்தைஇயக்கியவர்
Michaël Dudok de Wit ஜென் கதை போன்ற சிறிய கதையது. அதன் வழியே பௌத்த
சாரத்தினை நுட்பமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். அனிமேஷன் முறையும்,
இரவு காட்சி கோணங்களும் அற்புதமாக உள்ளன. பௌத்த மடாலயம் ஒன்றின்
அருகில்
ஒரு நீர்தேக்கமிருக்கிறது. ஒரு நாள் குள்ளமும் பருமனுமான பிக்கு
ஒருவன்
அந்த நீர்தேக்கத்தில் ஒரு மீன் துள்ளிக் கொண்டிருப்பதை காண்கிறான். உடனே
அதை பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு மடாலயத்திற்குள் சென்று தூண்டிலை
எடுத்து கொண்டு வருகிறான். தூண்டில் போட்டு காத்திருக்கிறான். அந்த மீன்
தூண்டலில் சிக்கவேயில்லை. அது துள்ளித் துள்ளி விளையாடியபடியே இருக்கிறது.
அதை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று வெறி கொண்டு தூண்டிலுக்கு
பதிலாக ஒரு பிடிவலையை கொண்டுவருகிறான் பிக்கு. அந்த வலையிலும் மீன் மாட்ட
மறுக்கிறது.
இரவெல்லாம் உறக்கமற்று மீனைப் பற்றியே நினைத்து
கொண்டிருக்கிறான். அதை பிடிக்க ஏதாவது வழியிருக்கிறதா என்று
புத்தகங்களை
தேடிப் படிக்கிறான். இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அதை பிடிக்க
முயற்சிக்கிறான். எதிலும் மீன் சிக்கவேயில்லை. உடனே தனது சக துறவிகளை
அழைத்து கொண்டு வந்து கூட்டு முயற்சியாக அதை பிடிக்க பார்க்கிறான்.
அப்போதும் மீன் அகப்பட மறுக்கிறது. ஆத்திரமான பிக்கு அந்த மீனை
துரத்துகிறான். அது தப்பி தப்பியோடுகிறது. மீனை கொல்வதற்காக ஒரு வில்லை
கொண்டு வருகிறான். அம்பு எய்து அதை பிடிப்பது என்று முயற்சிக்கிறான். அந்த
மீன் அவனோடு விளையாட்டு காட்டுவது போல நீர்த்தேக்கத்திலிருந்து துள்ளி
அடுத்த நீர்நிலைகளுக்கு போகிறது. தண்ணீருக்குள் விழுந்து புரண்டு அதை
பிடிக்க முயற்சிக்கிறான். மீன் தப்பியபடியே இருக்கிறது. அதை பின்தொடர
துவங்கிய பிக்கு அலைக்கழிப்பின் பிறகு சட்டென ஒரு உண்மையை புரிந்து
கொள்கிறான். மீனை பிடிக்க நினைப்பது முட்டாள்தனம். அதன் போக்கில் நாமும்
ஒன்று கலந்துவிட வேண்டும் அதுவே மீனை புரிந்து கொள்ள வழி என்று
நினைக்கிறான். மறுநிமிசம் அவனும் மீனும் நெருக்கமாகிவிடுகிறார்கள். மீன்
அவனோடு சேர்ந்து நீந்துகிறது. துள்ளுகிறது. இவரும் ஒன்றாக முடிவற்ற புள்ளி
நோக்கி சந்தோஷமாக வானில் தாவி மறைகிறார்கள்
படம் மீனைத்
துரத்திசெல்லும் பிக்குவை ஒரு உருவகமாகவே விளக்குகிறது. சத்தியம்
அல்லது
உண்மை தான் அந்த மீன். உண்மையை எப்படியாவது தன்வசமாக்கிவிட வேண்டும் என்று
முயற்சிக்கும் பிக்குவின் போராட்டமே இப்படம். உண்மையை எப்படி புரிந்து
கொள்வது தன்வயமாக்குவது. அதற்கு என்னவழிகள் இருக்கின்றன. அது ஏன் மனிதனை
அலைக்கழிக்கிறது. அத்தனை போராட்டத்தின் பிறகு உண்மையின் அவசியம் என்ன? அதை
எப்பிடி புரிந்து கொள்வது. இந்த படம் உண்மை எனும் மீன் மீது ஆசை கொண்டு
பௌத்தபிக்கு அலைக்கழிவதை சிறப்பாக சித்தரித்துள்ளது. இந்த பயணம் ஏதோவொரு
துறவியின் தேடுதல் அல்ல. விழிப்புணர்வு கொண்ட எல்லா துறவிக்குள்ளும் இந்த
வேட்கைதானிருக்கிறது. இந்த மீன் விழிப்புணர்வின் குறீயிடாகவும் மாறுகிறது.
பல துறவிகளில் ஏதோவொரு துறவி மட்டுமே சத்தியத்தின் மீதான தேடுதலில்
முழுமையாக ஈடுபடுகிறான், அவன் அந்த தேட்டத்தில் உறக்கமற்று போகிறான்.
தன்னை அறிய ஆரம்பிக்கிறான். அந்த அகசிக்கல் நிஜமானது. இரவில்
உறக்கமில்லாமல் மீனை பற்றியே நினைத்துக் கொண்டிருந்த பிக்கு மீனை
பிடிப்பதற்கான ஆயுதங்களை மாற்றிக் கொண்டேயிருக்கிறான். எதிலும் மீன் சிக்க
மறுக்கிறது. முற்றான உண்மையும் அந்த மீன் போலதான். அதை வசமாக்க மனிதன்
மேற்கொள்ளும் முயற்சிகள் வேடிக்கையாகவே முடிந்துவிடுகின்றன. முடிவில்
உண்மையை அறிந்தவன் தான் அதோடு ஒன்று கலந்துவிடுகிறான். பரபரப்பு. வேட்கை
யாவும் ஒடுங்கிவிடுகிறது. பின்பு அகமகிழ்வுமிக்க ஒரு பயணம் துவங்குகிறது.
அங்கே மீன் பிக்கு இருவரும் ஒன்று கலந்துவிடுகிறார்கள். இவ்வளவு எளிமையாக
புத்த போதனையை ஒரு குறும்படத்தினால் விளக்க முடிகிறது என்பது பெரிய சாதனை.
பிக்குவும் மீனும் இரண்டு குறியீடுகளாக மாறிவிடுகிறார்கள். அது பௌத்தம்
தாண்டி எதை எதையோ நினைவுபடுத்தியபடியே இருக்கிறார்கள்.
இதே
இயக்குனரின் இன்னொரு படம் அப்பாவும் மகளும். (Father &
Daughter)
இதுவும் எட்டு நிமிசங்கள் ஒடக்கூடியதே. ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன்
படமிது. காட்சிபடுத்துதல் கவித்துவமாக உள்ளது. கதாபாத்திரத்தின் மனநிலை
காட்சியின் மீது எவ்வளவு இறுக்கமாக கவ்விக் கொள்ளும்என்பதற்கு இந்த படம்
ஒரு உதாரணம். அது போலவே எளிய சித்திரங்களின் வழியே ஆழமான மனவலியை இப்படம்
உருவாக்கிவிடுகிறது. ஒரு ஏரியின் கரையில் அப்பாவும் மகளும் ஆளுக்கொரு
சைக்கிளில் பயணம் செய்கிறார்கள். அந்த பயணத்தில் சிறுமியாக உள்ள மகள் மீது
அப்பாவின் நெருக்கம் அழகாக காட்டப்படுகிறது. அப்பா ஒரு மரத்தடியில்
சைக்கிளை நிறுத்துகிறார். மகள் தானும் இறங்கி நிற்கிறாள். அப்பா மகளை
கட்டிக் கொண்டு தான் போய்வருவதாக கிளம்புகிறார். ஏரியில் ஒரு படகு
காத்திருக்கிறது. அப்பா படகில் ஏறி போவதை மகள் பார்த்தபடியே இருக்கிறாள்.
பிறகு தன் சைக்கிளில் ஏறி வீடு திரும்புகிறாள். சில மாத காலமாகிறது.
பருவநிலை மாறுகிறது. எதிர்காற்றில் அதே சிறுமி அப்பா திரும்பி வரக்கூடுமோ
என்று பார்ப்பதற்காக ஏரிக்கரைக்கு வருகிறாள். அப்பா வரவில்லை. அவள் முகம்
வாடிப்போய்விடுகிறது. சைக்கிளில் மெதுவாக வீடு திரும்புகிறாள். நாட்கள்
கடந்து போகின்றன. அப்பாவைத் தேடி அதே இடத்திற்கு மகள் வருவதும் ஏமாந்து
போவதுமாக இருக்கிறாள். மழை காற்று பனி என்று மாறிக் கொண்டேயிருக்கிறது
நிலக்காட்சி. அவள் ஆதங்கத்துடன் அப்பா திரும்பிவந்துவிடுவார் என்ற
எதிர்ப்பார்ப்புமிக்க கண்களுடன் அலைந்து கொண்டேயிருக்கிறாள். பறவைகள்
கடந்து போகின்றன. வானம் நிறம் மாறுகிறது. காட்சிகள் உருமாறுகின்றன.
ஏமாற்றத்தின் சாலையில் அவளது சைக்கிள் உருண்டபடியே இருக்கிறது. மகளுக்கு
வயதாகிறது. அவள் பெரியவளாகிறாள். அப்போதும் அதே சைக்கிளில் அப்பாவை தேடி
வருகிறாள். அப்பா பிரிந்து போன அதே இடத்தில் நின்று ஏரியை வெறித்து
பார்க்கிறாள். அப்பா வரவில்லை. அவளது முகத்தில் துயரம் கொப்பளிக்கிறது.
ஏமாற்றத்துடன் திரும்பி போகிறாள். இன்னும் கொஞ்சம் வயதாகிறது. நடுத்தரவயது
பெண்ணாகிறாள். எதிர்காற்றில் சைக்கிள் மிதித்து வர முடியவில்லை. ஆனாலும்
அப்பாவை தேடி போகிறாள். அவளை கடந்து சிறுமிகள் உற்சாகமாக ஏரி நோக்கி
போகிறார்கள். அதே மரம். அதே இடம். அப்பாவை காண காத்திருக்கிறாள்.அப்பா
வரவில்லை. ஏரி தண்ணீர் சலனமடைகிறது. பறவைகள் கடந்து போகின்றன. அவள்
விவரிக்க முடியாத துயருடன் மிக மெதுவாக வீடு திரும்புகிறாள். முடிவில்
அவளுக்கும் வயதாகிறது. அவளால் சைக்கிளை மேட்டில் ஒட்ட முடியவில்லை.
உருட்டியபடியே வருகிறாள். சைக்கிளை நிறுத்த கூட முடியவில்லை. அது அடிக்கடி
கிழே விழுகிறது. அவள் அதே மரத்தடியில் நின்று பார்க்கிறாள். ஏரி முழுவதும்
பனி உறைந்து போயிருக்கிறது. ஆசையோடு பனிக்குள் இறங்கி ஏரியை கடந்து
மறுபக்கம் பார்க்க போகிறாள். பனியில் அவள் கால்கள் வேகமாக அப்பாவை தேடி
நடக்கின்றன. ஏரி முடிவற்று பனிபாளமாக உறைந்து கிடக்கிறது.
முடிவில்
அவள் ஒரு இடத்தில் அப்பா பயணம் செய்த படகு உடைந்து கிடப்பதை காண்கிறாள்.
அதுவும் பனியில் உறைந்து போயிருக்கிறது. படகினுள் அவள் சுருண்டு படுத்து
கொள்கிறாள். அப்பா இல்லாத வெறுமை அவள் முகத்தில் தெளிவாக
புலப்படுகிறது.
அங்கிருந்து சோர்வுடன் நடக்க துவங்கும் போது அப்பாவின் உருவம்
தென்படுகிறது. அவள் சிறுமி போல ஆசையாக அவரை நோக்கி ஒடுகிறாள். அப்பா
சலனமில்லாமல் அவளை கட்டிக் கொள்வதோடு படம் நிறைவு பெறுகிறது ஒரு
மிகப்பெரிய நாவல் அளவு எழுதப்படவேண்டிய ஒரு பிரிவின் கதை எட்டு
நிமிச
குறும்படத்தில் செறிவோடும், நிறைவோடும் சொல்லப்பட்டிருக்கிறது. அப்பா
படகில் போகிறார் என்பது சாவின் குறியீடே. அப்பா இறந்து
போய்விடுகிறார்.
அதை அறியாத மகள் அப்பா திரும்பி வரக்கூடும் என்று வாழ்நாள் முழுவதும்
காத்திருக்கிறாள். முடிவில் ஏரி உறைந்து போயிருப்பதும் அதை அவள் கடப்பதும்
உருவகமான காட்சிகளே. அவளும் இறந்து போய்விடுகிறாள். சாவின் முடிவற்ற
பனிவெளியில் அவள் தன் அப்பாவை மறுபடி சந்திக்கிறாள். சாவு தான் அவளை
அப்பாவோடு ஒன்று சேர்ந்து வைக்கிறது.அப்பாவிற்கும் மகளுக்குமான அன்பையும்,
அப்பா என்ற படிமம் உருவாக்கும் மனஎழுச்சியும் உயர்கவித்துவமாக
படமாக்கபட்டிருக்கிறது.
இந்த
படத்தில் பின்புல இசையும் மகள் அப்பாவை தேடி செல்லும் போது உருமாறும்
பருவநிலை மாற்றங்களும் மகளின் சொல்லற்ற உணர்ச்சிவெளிப்பாடும் உலகின்
சிறந்த குறும்படம் இது என்பதற்கான சான்றுகள். மைக்கேல் டுடாக் ஐம்பது வயதை
கடந்த அனிமேஷன் இயக்குனர். ஒவியக்கல்லூரியில் பயின்ற இவர் குறும்பட
தயாரிப்பில் முன்னோடி கலைஞர், தற்போது லண்டனில் வசிக்கிறார். உரையாடல்கள்
இல்லாமல் இசையும் காட்சிகளும் ஒன்று கலந்த இந்த வகை அனிமேஷன் படங்கள் நவீன
சினிமாவின் உயர்சாத்தியங்களை வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் மிக
சிறந்த இரண்டு குறும்படங்கள் இவை.
இணைப்பு
The Monk and The
Fish : http://www.youtube.com/watch?v=Y37cWnjdhdM
Father &
Daughter : http://www.youtube.com/watch?v=GhieqAEi2r4
------------------------------------------------------------------------------------------
கணிதமேதையைப் பற்றிய பாடல்
கணிதமேதை
ராமானுஜத்தின் வாழ்வை விவரிக்கும் இந்தப் பாடல் அற்புதமான இசையோடு
அமைக்கப்பட்டுள்ளது, கேட்கையில் மிகுந்த உணர்ச்சிவசமாகிறது,
இப்பாடலை டவுன்லோடு செய்து கேட்கலாம்
ஆன்லைனில் கேட்க இணையப்பக்கத்தில் உள்ள ஆடியோ பிளேரை அழுத்தவும்,
பள்ளி. கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய முக்கிய பாடல்
இது.
http://www.archive.org/details/Ramanujan
கதை கேளுங்கள்
தமிழ்
ஸ்டுடியோ இணைய தளத்தில் கதை சொல்லி என்ற புதிய பகுதி செயல்பட்டு வருகிறது,
இதில் ஒவ்வொரு எழுத்தாளரும் தனக்குப் பிடித்தமான இரண்டு கதைகளை அவர்களது
குரலில் பேசிப் பதிவு செய்து வருகிறார்கள், மிகுந்த பாராட்டிற்கு உரிய
முயற்சியது. இதில் எனது நண்பரும் தமிழின் முக்கிய கவிஞருமான
மனுஷ்யபுத்திரன் தனக்குப் பிடித்த கதையாக எனது மிருகத்தனம் என்ற
சிறுகதையைச் சொல்லியிருக்கிறார், மிக நன்றாகப் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
அவருக்கும் தமிழ் ஸ்டுடியோ நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன். நீங்களும் கேட்டு மகிழுங்கள்
http://koodu.thamizhstudio.com/kadhaisolli_8.php
(கதைத் தலைப்பின் கீழே உள்ள பிளேயரைச் சொடுக்கினால் கதையைக் கேட்க
துவங்கலாம்)
எழுத்தின்
நாயகர்கள்.
உலகப்புகழ்
பெற்ற எழுத்தாளர்களான காப்கா, ஆல்பெர் காம்யூ, ஜேம்ஸ் ஐôய்ஸ்,
இசபெல்
ஆலண்டே. டோல்கின், ஐசக் அசிமோவ், அல்டாக்ஸ் ஹக்ஸ்லி, ஹென்றி மில்லர்,
எக்ஸ்சுபரி, விளாதிமிர் நபகோவ், ஹருகி முராகமி, உம்பர்ந்தோ ஈகோ, சல்மான்
ருஷ்டி, டோனி மாரிசன், மார்க்ரெட் அட்வுட் ரே பிராட்பரி. கார்சியா
லோர்க்கா, வில்லியம் பாக்னர், டெரிதா, பூகோ, பாவ்லோ கொய்லோ, போன்ற
ஆளுமைகளின் நேர்காணல்கள், அவர்களை பற்றிய ஆவணப்படங்கள்,
குறும்படங்களின்
பட்டியலிது. அவ்வப்போது இணையத்தில் தேடிப்பார்த்த இந்த படங்கள்
எழுத்தாளர்கள் குறித்த ஆவணப்பதிவுகளுக்கு முன்னோடியாக உள்ளன. முக்கிய
படைப்பாளிகள் பற்றிய எளிய அறிமுகத்திற்கும் இந்த ஆவணப்படுத்தல் மிகவும்
உதவிகரமாக உள்ளது.
***
1. Franz Kafka –
Metamorphosis: http://www.listal.com/video/3626216
2. Franz Kafka`s
In the Penal Colony: http://www.youtube.com/watch?v=StwAGxbPxlU
3. Interview with
Albert Camus: http://www.youtube.com/watch?v=xkWKHtBd6GU
4. Proust Meets
Joyce: http://www.youtube.com/watch?v=zykw6qOFMkM
5. Isabel Allende:
Tales of passion: http://www.youtube.com/watch?v=E11cDEr272Y
6. From Memory to
Fiction through History with Jose Saramago: http://www.youtube.com/watch?v=P1Dcrh2pjwY
7. JRR Tolkien on
Film: http://www.youtube.com/watch?v=RUtCtuZIAcE
8. Isaac Asimov on
The Golden Age of Science Fiction: http://www.youtube.com/watch?v=pySVYz4GfzE
9. Aldous Huxley: http://www.youtube.com/watch?v=AhHuMNS4tWM
10. Evening with
Ray Bradbury: http://www.youtube.com/watch?v=_W-r7ABrMYU
11. Dinner With
Henry Miller: http://www.youtube.com/watch?v=lz3HT72_hf4
12. Antoine de
Saint-Exupéry – NIGHT FLIGHT: http://www.youtube.com/watch?v=InMAlgLl9dg
13. Vladimir
Nabokov – The Metamorphosis: http://www.youtube.com/watch?v=boSFjzWJXcU
14. Vladimir
Nabokov discusses “Lolita: http://www.youtube.com/watch?v=Ldpj_5JNFoA
15. On Seeing the
100% Perfect Girl – Haruki Murakami: http://www.youtube.com/watch?v=IgkRsis3yGY
16. Umberto Eco: http://www.youtube.com/watch?v=W8TyYaKZ2mk
17. Salman Rushdie
Lecture: http://www.youtube.com/watch?v=7QOwGFo2_f4
18. Toni Morrison
Talks About Her Motivation For Writing: http://www.youtube.com/watch?v=_8Zgu2hrs2k
19. Margaret
Atwood on Religion’: http://www.youtube.com/watch?v=VMrz_ivl8jo
20. William
Faulkner at the University of Virginia: http://www.youtube.com/watch?v=GswCn8KkP88
21. Jacques
Derrida On Love and Being: http://www.youtube.com/watch?v=dj1BuNmhjAY
22. Foucault: http://www.youtube.com/watch?v=kAwWwQZ_3FQ
23. Tolstoy: http://www.youtube.com/watch?v=E8_Th7UdsBw
24. Paulo Coelho: http://www.youtube.com/watch?v=ByCUNiStarc
25. Federico
García Lorca: http://www.youtube.com/watch?v=eCwqZjku16A
பார்க்க-
படிக்க-இணையதளங்கள்.
சமீபத்தில் நான் பார்த்த, வாசித்த சில முக்கிய இணையதளங்கள்.
1) வொங்கர் வாய் குறும்படம்
உலகப்புகழ்பெற்ற
ஹாங்காங் திரைப்பட இயக்குனர் வொங்கர் வாய் இயக்கிய குறும்படமிது.
அற்புதமான ஒளிப்பதிவு. கனவுதன்மை மிக்க காட்சிகள். இசை சேர்ந்த
நேர்த்தியான குறும்படம் http://www.dailymotion.com/video/k2uNhEnQzp8nYwooFR
2) சிமாந்தோ அடிஸின் நேர்காணல்
ஆரஞ்சு
பரிசு பெற்ற நாவலாசிரியையான சிமாந்தோ அடிஸின் நேர்காணல் உள்ளிட்ட பல
முக்கிய எழுத்தாளர்களின் நேர்காணல்கள், கதைகள், கட்டுரைகள் கொண்ட இலக்கிய
இணையமிது. http://www.bookslut.com/features/2009_08_014928.php
3) போர்ஹே ஒரு ஆவணப்படம்
லத்தீன்
அமெரிக்க இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமையான ஜோர்ஜ் லூயி போர்ஹே பற்றிய
இந்த ஆவணப்படம் அவரது வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்து பேசுகின்றது.
The Mirror Man Directed by Philippe Molins: http://www.ubu.com/film/borges.html
4) கற்றுதரும் கணிதம்
கணிதத்தை
கற்றுக் கொள்வதில் உள்ள பிரச்சனைகள் மற்றும் அதை எளிமையாக கற்று தரும்
முறைகள் பற்றிய கல்வி சார்ந்த விளக்கபடமிது. அமெரிக்க பள்ளிகளில் கணிதம்
கற்பிக்கபடும் முறை பற்றியும் கணிதம் தொடர்பான கேள்விகளும் இந்த
விளக்கபடத்தில் இடம் பெற்றுள்ளன. தரமான கல்வி விளக்கபடங்களில் இதுவும்
ஒன்று
http://www.youtube.com/watch?v=Tr1qee-bTZI
5) மகாத்மா காந்தியின் பாதை
மகாத்மா
காந்தி வாழ்ந்த இடங்களையும் அவர் பயணம் மேற்கொண்ட நகரங்களையும் தேடி
மேற்கொள்ளப்பட்ட மறுபயணத்தின் ஆவணப்படமிது. கோட்சேயின் நேர் முகம் இதில்
இடம் பெற்றுள்ளது. காந்தி பற்றிய ஆவணப்படங்களில் சிறப்பான படமிது. http://www.gandhitopia.org/video/a-death-for-peace-mahatma
6) பூச்சிகளின் விசித்திர உலகம்
பூச்சிகள்,புழுக்கள்,
சிற்றுயிர்களின் அகவுலகையும் அதன் போராட்டங்களையும் விவரிக்கும் மிக
அற்புதமான அனிமேஷன் திரைப்பட வரிசையிது. நான்கைந்து நிமிச படங்களாக நிறைய
வெளிவந்துள்ளது. அதில் மிக முக்கியமான நான்கு இந்த இணையதளத்தில்
காணக்கிடைக்கிறது.
http://animation.front.lv/category/minuscule/
7) இதாலோ கால்வினோ சிறுகதை
இதாலோ கால்வினோவின் விஞ்ஞானபுனைகதையான காஸ்மிக் டேல்ஸ் தொகுதியில் உள்ள
சிறுகதை ஒன்றின் குறும்பட வடிவமிது.
http://www.youtube.com/watch?v=EZ9cEZhiGPw
8) சந்தோஷ் சிவனின் குறும்படம்
எய்ட்ஸ்
விழிப்புணர்விற்காக சந்தோஷ் சிவன் இயக்கிய பனிரெண்டு நிமிச குறும்படம்.
இந்த வரிசையில் மூன்று படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் லாரி
டிரைவராக பிரபுதேவா நடித்திருக்கிறார். தேர்ந்த ஒளிப்பதிவு இசை என்று
சிறப்பான குறும்படமிது.
Prarambha Part 1 : http://www.youtube.com/watch?v=wTeG4K3v_hw
9) பணக்கார நாய்
எஜமான்
மரணத்தின் பின்னால் ஒரு நாய்க்கு கோடிக்கணக்கான சொத்து கிடைக்கிறது. அந்த
நாய் பணத்தை என்ன செய்கிறது என்பதை பற்றிய அனிமேஷன் திரைப்படமிது.
http://www.youtube.com/watch?v=S3ezma9cLEs
10) விளம்பர தந்திரம்
ஒரு
சோப்பு கம்பெனி தன் விளம்பரத்திற்கான ஒரு பெண்ணை எப்படி தயார் செய்கிறது.
அவள் எப்படி உருமாற்றம் அடைகிறாள் என்பதை விளக்கும் விருது பெற்ற
குறும்படம். http://www.youtube.com/watch?v=iYhCn0jf46U
****
தீவிர வாசகர்களுக்காக நான் சிபாரிசு புதிய
புத்தகங்கள்
1. Diary
of a Bad Year by J. M. Coetzee – novel,
2.
Chicken with Plums - Marjane Satrapi - Graphic novel
3. 2666-
Roberto Bolano -novel -
4. The
Poetry of Arab Women - Anthology – Nathalie Handal
5. The
Sea by John Banville- Booker Prize Novel
6.
Satyajit Ray : Essays (1970-2005)- Author: Gaston Roberge
7. E.E.
CUMMINGS -A Biography By Christopher Sawyer-Laucanno.
8. THE
BROTHERS KARAMAZOV Fyodor Dostoevsky. New Translation- by Richard
Pevear and Larissa Volokhonsky. .2007
9. A
Drifting Boat: An Anthology of Chinese Zen Poetry. Translated by Jerome
P. Seaton
10.
Cosmos – Witold Gombrowicz -novel -
பத்து இணையதளங்கள்
கல்லில் வடித்த கவிதைகள்.: சிற்பங்கள்,
ஒவியங்கள் மற்றும் பராம்பரியமிக்க கோவில்கள், என்று தமிழக நுண்கலையின்
சிறப்புகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் இணையதளமிது. தமிழில் நான்
தொடர்ந்து வாசிக்கும் இணையதளங்களில் இதுவும் ஒன்று. ஆங்கிலத்திலும் இந்த
இணையதளம் வாசிக்க கிடைக்கிறது. புகைப்படங்கள். விளக்கங்கள்,
ஆய்வுகுறிப்புகள் என்று நேர்த்தியாகவும் நுட்பமாகவும் சிற்பக்கலை குறித்த
கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இணையதளத்தின் வடிவமைப்பே அழகாக உள்ளது.
சரித்திரம், தொல்லியல் குறித்த பல்வேறு இணைய தள இணைப்புகளும் இதில்
காணப்படுகின்றன. http://www.poetryinstone.in
உலகின் சிறந்த குறும்படங்கள்: தரமான
குறும்படங்கள் காண விரும்புகின்றவர்களுக்கான இணையதளம். திரைப்பட
விழாக்களில் பரிசு பெற்ற உலகின் முக்கிய குறும்படங்கள் இந்த இணையதளத்தில்
காட்சிக்கு கிடைக்கின்றன. குறும்படங்கள் எப்படி இருக்க வேண்டும்
என்பதற்கான முன் உதாரணங்கள் போல இந்த இணையத்தில் உள்ள குறும்படங்கள்
காட்சியளிக்கின்றன http://watchandcut.blogspot.com
மாற்று சிந்தனை உரைகள்: கல்வி,
கலாச்சாரம், விஞ்ஞானம், பொருளதாரம், தொழில் நுட்பம், சமகால நிகழ்வுகள்
குறித்து உலகின் முக்கிய சிந்தனையாளர்கள், ஆய்வாளர்களின் உரைகளின்
தொகுப்பு வீடியோபதிவுகளாக இந்த இணையத்தில் உள்ளது. யூடியூப் போல இந்த இணைய
தளத்தில் வீடியோ பகுப்பு செய்யப்பட்டுள்ளது. மாற்றுக்கல்வி
முயற்சிகள்
குறித்த தீவிரமாக வழிகாட்டுதல்கள், மற்றும் சொற்பொழிவுகள் கொண்ட
வீடியோக்கள் இதில் உள்ளன. பொழுது போக்கினைத் தாண்டி செயல்தளத்திற்கான
வழிகாட்டுதலுக்கு உதவும் சிறந்த இணையதளம், இதை தரவிறக்கம் செய்து
கொள்ளவும் முடியும். இதில் சில உரைகள் தமிழாக்கம் செய்யப்பட்டும்
காட்சிக்கு கிடைக்கின்றன. http://www.ted.com
சத்யஜித் ரே பற்றிய ஆவணப்படம்: சத்யஜித்ரே
பற்றி ஷியாம் பெனகல் எடுத்து டாகுமெண்டரி படம் இந்த இணையதளத்தில்
காணக்கிடைக்கிறது. பகுதி பகுதியாக உள்ள இதை தரவிறக்கம் செய்து கொள்ள
முடியும். திரைப்பட பயிலரங்குகள்.இந்திய சினிமா ஆளுமைகள் குறித்த
கட்டுரைகள், விமர்சனங்கள், விவாதங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
http://windsfromtheeast.blogspot.com
சமகால துருக்கி கவிதைகள்:
சமகால
துருக்கி கவிதைகளின் ஆங்கில மொழியாக்கம் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன.
துருக்கியின் நவீன கவிதை குறித்த அறிமுகம் மற்றும் முக்கிய கவிஞர்கள்
பற்றிய அறிமுகங்கள் காணப்படுகின்றன. http://www.cs.rpi.edu/~sibel/poetry/index.html
ஈரானிய சினிமா: ஈரானியத்
திரைப்படங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான இணைய இதழ். சமகால ஈரானிய சினிமா
குறித்த கட்டுரைகள். நேர்காணல்கள். இதில் காணக்கிடைக்கின்றன. http://www.film-international.com
இருமொழி இலக்கியம்: ஹிந்தி
ஆங்கிலம் என இருமொழிகளில் இயங்கும் இந்த இணைய இதழ் உலகின் சிறந்த
கவிதைகள், கதைகள் மற்றும் நேர்காணல்களை ஹிந்திக்கும் ஆங்கிலத்திற்கும்
மொழிபெயர்ப்பு செய்கிறது. அத்துடன் ஹிந்தியில் உள்ள சமகால
இலக்கியவாதிகளின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து
வெளியிடுகிறது. தீவிர இலக்கியவாசகர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டிய இணையஇதழ்.
அச்சு வடிவிலும் இந்த இதழ் வெளியிடப்படுகிறது. http://pratilipi.in/
இந்திய சினிமா : சத்யஜித்
ரே மணிகௌல், ரித்விக் கடாக் போன்ற திரை ஆளுமைகளின்
கட்டுரைகள்,
நேர்காணல்கள், அவர்களது திரைப்படங்கள் குறித்த ஆய்வுகட்டுரைகள் மற்றும்
உலக சினிமாவின் போக்குகள், திரையியல் பற்றிய சிறப்புகவனம் என்று அழகாக
உருவாக்கபட்டுள்ள இணையதளமிது. ஒளிப்பதிவு குறித்த மணிகௌலின் சிறப்பான
கட்டுரையொன்று இதில் உள்ளது. http://www.indianauteur.com
புத்தக ரசனை :
தான் வாசித்த புத்தகங்கள் குறித்து, எழுத்தாளர்கள் இலக்கிய போக்குகள்
குறித்தும் உலகு தழுவிய தனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்
எழுத்தாளர் ஜிம் முர்டாக். இவர் சிபாரிசு செய்யும் புத்தங்களும் எழுத்தும்
தேர்ந்த ரசனைக்குரியவை. http://jim-murdoch.blogspot.com/
சில்வியா பிளாத் கவிதைகள் :
சில்வியா பிளாத் தனது கவிதையினை வாசிக்கும் வீடியோ காட்சிகள்.
சில்வியாவின் குரல் மயக்கமூட்டக்கூடியது. அந்த குரலில் டாடி என்ற அவரது
கவிதையை கேட்பது அற்புதமான அனுபவமாக உள்ளது. http://www.youtube.com/watch?v=6hHjctqSBwM &http://www.youtube.com/watch?v=esBLxyTFDxE
உதவும் இணையதளங்கள்.
அன்றாடம்
இணையத்தில் ஏதாவது தேடிக்கொண்டிருக்கும் போது கண்ணில் படும் சில முக்கிய
இணையதளங்களை குறித்து வைத்துக் கொள்வது எனது பழக்கம். சில வேளைகளில்
நண்பர்கள் முக்கியமானதாக கருதும் இணையதளங்கள் குறித்து மின்னஞ்சல்
அனுப்புவார்கள். அப்படி சமீபத்தில் என் கண்ணில் பட்ட முக்கிய இணையதளங்கள்
இவை. குறிப்பாக திரைப்படத்துறை சார்ந்து பணியாற்றுபவர்களுக்கும்,
குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை இயக்குபவர்களுக்கும், சினிமாவை
கற்றுக் கொள்ளவும் சுயமாக குறும்படங்களை உருவாக்கவும்
விரும்புகின்றவர்களுக்கும் இந்த இணைப்புகள் பயன்தரக்கூடும். இலவசமாக
கிடைக்க கூடிய சில மென்பொருட்கள் பற்றிய இணையதளங்களும் இதில் உள்ளன.
திரைக்கதை எழுத விரும்புகின்றவர்களுக்கு செல்டிக்ஸ் மிகசிறப்பாக ஒரு
மென்பொருள் ஆகும். அதில் தமிழில் உள்ளிட முடியும். ஒரு சில
எழுத்துகள்
மட்டும் உருமாறுகின்றன. உலகத்திரைப்படங்கள் குறித்து வாசிக்கவும்
மேலதிகமாக அறிந்து கொள்ளவும் விரும்புகின்றவர்களுக்கு முக்கியமான இதழ்கள்
மற்றும் கட்டுரைகளின் இணைப்பு உள்ளது. புதிய தொழில்நுட்பம்,
குறும்படங்களுக்கான இலவசமான இசைத்தொகுப்பு. விவாத அரங்கம், ஒளிப்பதிவு கலை
, வீடியோ பதிவுகள் என்று மாறுபட்ட தளங்களில் உள்ள இணையதளங்கள் இவை.
***
Free download
Softwares for Film Makers
http://movies.atomiclearning.com/k12/storyboardpro/ for story boards
http://homepage.mac.com/directors_notebook/downloadboards.html – for Script writings
http://celtx.com/- for Script writings.
http://giantscreamingrobotmonkeys.com/monkeyjam/index.html – Animation tool
http://www.blender.org/ – tools for 3D creation.
http://www.jacc.ca/movieplanner/ – Movie breakdown software
http://www.virtualdub.org/ – video capture and
processing tool
http://jahshaka.org/ – Realtime Media Playback
and Visual Effects System.
http://www.cinepaint.org/- painting and image
retouching program
Search engines
http://www.meloditrax.com/ - for Music
http://www.ebook-engine.com/ – for free ebooks
http://www.art-search.com.au/- for Art
http://www.mrqe.com/ – for film Review
http://www.findanyfilm.com/search – for film Review
http://www.filmsource.piczo.com – for film Making
http://www.ask.com- for General topics.
General
http://flickchart.com/Splash.aspx
http://www.movieset.com/
http://cinematech.blogspot.com/2007/06/for-indie-filmmakers-how-to-sell-dvds.html
http://www.thefstopmag.com/index.php
Story Board
http://www.wildsound-filmmaking-feedback-events.com/storyboards.html
Cinematography
http://www.freshdv.com/2007/08/segway-steadicam-in-action.html
http://provideocoalition.com/index.php/lighting
http://www.filmmaking.net/fnetforum/
http://www.cinematography.net/
http://www.reduser.net/forum/showthread.php?t=2743
Film editing
http://www.scottsimmons.tv/blog/2007/07/19/avid-scriptsync-demo/
http://www.scottsimmons.tv/blog/2007/08/05/no-editing-needed/
Film music
& Sound
http://digital-filmmaking.blogspot.com/2007/01/artificial-sound-effects-water.html
http://www.mobygratis.com/film-music.html
http://www.offscreen.com/biblio/pages/essays/barnes_bartonfink/
http://expandedcinema.blogspot.com/
Film Studies
http://filmstudiesforfree.blogspot.com/
http://mysterymanonfilm.blogspot.com/
http://www.moviecliches.com/
Animation.
http://www.michaelbarrier.com/
http://animationwhoandwhere.blogspot.com/
http://bungleton.blogspot.com/
Magazine / Articles
http://www.kk.org/truefilms/index.php
http://www.filmmakermagazine.com/blog/
http://www.ejumpcut.org/archive/jc48.2006/index.html
http://www.moderntimes.com/palace/film_noir.html
http://www.filmref.com/
http://filmjournal.net/kinoblog
http://www.filmcatcher.com/
Film Blogs
http://acidemic.blogspot.com/
http://apatthemovies.blogspot.com/
http://blog.wired.com/underwire/movies/index.html
http://somecamerunning.typepad.com/
http://www.thehousenextdooronline.com/
http://www.hammertonail.com/
http://brightlightsfilm.blogspot.com/
http://coosacreek.org/mambo/
http://blogs.widescreenjournal.org/
http://girishshambu.com/blog/
சில
குறும்படங்கள்
சமீபமாக இணையத்தில் நான் பார்த்த சில
குறும்படங்கள் மற்றும் ஆணவப்படங்களின் இணைப்பு.
காந்தியைப் பற்றிய ஆவணப்படம்
காந்தியின் வாழ்க்கைவரலாறு குறித்த ஒரிஜினல்
படக்காட்சிகளுடன் கூடிய அரிய காணொளி
சதத் ஹசன் மண்டோ பற்றிய காணொளி
இந்தியாவின் மிக முக்கிய உருது எழுத்தாளரான
சதத் ஹசன் மண்டோ பற்றிய காணொளி, இவரது கதைகளின் பாதிப்பில் இருந்து தான்
கமலஹாசனின் ஹேராம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது, இந்தியப்பிரிவினை
குறித்து எழுதிய அற்புதமான எழுத்தாளர்
தாகூர் பற்றிய ஆவணப்படம்
சத்யஜித் ரே இயக்கிய தாகூர் பற்றிய
ஆவணப்படம், தாகூரின் 150ம் ஆண்டினை ஒட்டி நினைவு கொள்ள இதை அவசியம் காணவும்
மணிகௌல்
இந்தியாவின் மிக சிறந்த திரைப்பட
இயக்குனர்களில் ஒருவரான மணிகௌல் இயக்கிய துவிதா என்ற இந்தத் திரைப்படம்
ஒரு நாட்டுப்புறக்கதையை மையமாக கொண்டது, இதே கதையை அமோல் பலேகர் Paheli என
ஷாருக்கானை வைத்து இயக்கியிருக்கிறார்.
Duvidha – Mani Kaul, Film 1973
அம்மா அறியான்
அம்மா அறியான் ஜான் ஆபிராகமின் முக்கியத்
திரைப்படம், கேரளாவில் ஒடேசா என்ற மக்கள் திரைப்பட இயக்கம் வீதி வீதியாகச்
சென்று மக்களிடம் பணம் வசூலித்து தயாரித்த படமிது.
கசப்பு சாக்லெட்
சாக்லெட் தயாரிப்பின் பின் உள்ள கசப்பான
சரித்திரத்தைப் பேசுகிறது
ஒரு நிமிச ஷேக்ஸ்பியர்
ஒரு நிமிசத்திற்குள் ஷேக்ஸ்பியரை அறிந்து
கொள்ள செய்கிறது
கவிதை கேட்கும் சிங்கம்
சிங்கத்திற்கு கவிதை வாசித்து காட்டினால்
எப்படியிருக்கும் என்பதன் சாட்சி இது
மறுபாதி
சந்தித்துக் கொள்ளாமலே உருவாகும் மிகச்சிறிய
காதல் கதை
டால்ஸ்டாய் படங்கள்
டால்ஸ்டாயின் மரண ஊர்வலம் அவரது வீடு மற்றும்
அவரது தினசரி வாழ்க்கை குறித்த ஆவணப்படங்கள்
போர்ஹே
உலகப்புகழ் பெற்ற எழுத்தாளரான போர்ஹேயின்
நேர்காணல்
Borges Interview – English subtitles
ஈரானியக் குறும்படம்
லிப்டிற்குள் மாட்டிக் கொண்ட ஒரு பெண்ணை
பற்றிய குறும்படம், லிப்டை ஒரு கலாச்சாரக்குறியீடு போல
பயன்படுத்தியிருக்கிறார்கள்
|
|
|
| | | |
|