Home / kosu

kosu


கொசு – 26

அத்தியாயம் இருபத்தி ஆறு குளித்த ஈரத்தில் அடித்த விபூதி, பொழுதுபோல் மெல்லப் புலர்ந்தது. அம்மா அதிசயமாகப் பார்த்தாள். வாய்விட்டு முருகா என்று சொல்லிக்கொண்டு அவன் கண்மூடி விபூதி பூசியதில்லை. அவசரத்தில் ஒரு கோடு இழுத்துக்கொண்டே காலில் செருப்பை மாட்டிக்கொள்ளும் வேகம் அங்கே தினசரிக் காட்சி. உழைப்பே கடவுள். வியர்வையே விபூதி. ஒரு பதவி கிடைத்துவிட்ட பிறகு பளிச்சென்று வெள்ளைச் சட்டை அணிந்து விபூதி துலங்கத் தன் மகன் கால் மேல் கால் போட்டு அமர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி [...]

கொசு – 25

அத்தியாயம் இருபத்தி ஐந்து வண்டியில் காற்று இறங்கியிருந்தது. ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்த வண்டி. பஞ்சர் ஆகாமல் வெறுமனே காற்று மட்டும் இறங்குவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும்? டியூப் பலவீனமடைந்திருக்கலாம். யாராவது வேலை மெனக்கெட்டு காற்றைப் பிடுங்கிவிட்டிருக்கலாம். இயல்பாகவே காற்றழுத்தம் குறைந்திருக்கலாம். கவனிக்கத் தவறியிருக்கலாம். எதுவானாலும் கொஞ்சதூரம் தள்ளிக்கொண்டு நடந்துதான் ஆகவேண்டும். எனவே, நடந்தான். குழப்பமாக இருந்தது. கோபமும் துக்கமுமாகப் பொங்கிக்கொண்டு வந்தது. பச்சக் என்று பரோட்டா மாவைக் கல்லில் வீசி அடித்தமாதிரி முகத்தில் ஓர் அவமானப் படலம் [...]

கொசு – 24

அத்தியாயம் இருபத்தி நான்கு நிராயுதபாணியாகப் போர்க்களத்தில் நிற்பது போலிருந்தது முத்துராமனுக்கு. சுற்றி இருக்கிற அத்தனை பேரும் ஆயுதம் தரித்திருக்கிறார்கள். சொற்கள் சிலருக்கு ஆயுதங்களாகி இருக்கின்றன. செயல்கள் சிலருக்கு. அம்மாவுக்குக் கண்ணீர். அப்பாவுக்கு மௌனம். தன்னுடைய செயலற்ற தன்மை ஒரு மொண்ணையான இட்லித் தட்டு கேடயமாகப் பட்டது அவனுக்கு. ஆனால் கண்ணை மூடும் கணமெல்லாம் உள்ளுக்குள் தான் ஓயாமல் வாள் வீசிக்கொண்டிருக்கும் காட்சிதான் பிரதானமாகத் தென்படுகிறது. எதன்மீது என்பதுதான் புரியவில்லை. கனவுகள் சுவாரசியமாக இருக்கின்றன. எதிர்காலம் குறித்த கனவுகள். [...]

கொசு – 23

அத்தியாயம் இருபத்தி மூன்று பயமும் கவலையுமாக இருந்தது. யோசித்துப் பார்த்தால் எல்லாமே அபத்தமாகத் தோன்றியது. திடீரென்று வாழ்க்கையில் நுழைந்த அரசியல்வாதிகளின் அத்தியாயம். இரண்டு பேர். இரண்டு துருவங்கள். இரண்டு வாய்ப்புகள் என்று முத்துராமன் நினைத்தான். இரண்டு பிரச்னைகளாக அவர்கள் இருந்தார்கள். பிரச்னை என்று நினைத்தால் வீடு உள்பட எதுவுமே பிரச்னைதான். ஏன் இது வாய்ப்பாக இருக்கக்கூடாது? இயல்பில் இல்லாவிட்டாலும் வாய்ப்பாக மாற்ற முடியாதா என்ன? அப்படித்தான் அவன் நினைத்தான். அதையேதான் விரும்பவும் செய்தான். ஆனால் ஒன்றை அடுத்து [...]

கொசு – 22

அத்தியாயம் இருபத்திரண்டு ‘சேச்சே. என்னண்ணே நீங்க? அந்தாளு ஒரு கொசு. அவனுக்குப் போயி துப்பாக்கி அது இதுன்னுகிட்டு. வெத்துவேட்டுண்ணே. இன்னியவரைக்கும் உங்க மூஞ்சி முன்னால வந்து நின்னு ஒரு வார்த்த பேசியிருப்பாரா? உங்கள பாத்தாலே பேதியாயிரும்ணே. தள்ளி நின்னுக்கினு கொலைக்கறாரு. தொண்டத்தண்ணி வத்தினா தன்னால அடங்கிருவாரு.’ முதலில் ஒரு கணம் பயந்தாலும் முத்துராமன் சுதாரித்துக்கொண்டான். கொன்றுவிடு என்பது ஒரு வெறுப்பில் சொல்லப்படும் வார்த்தை. அதன் பின்விளைவுகள் குறித்து யோசிக்கத் தெரியாத அளவுக்கு எம்.எல்.ஏ. தங்கவேலு அத்தனை அடிமுட்டாள் [...]

கொசு – 21

அத்தியாயம் இருபத்தி ஒன்று ‘ஒனக்கு என்னா வயசாவுது? ஒவயசுல நான் மூணு புள்ள பெத்தவன். தெரியுமா? நீயாச்சும் குடிசைல வாள்றவன். நான் பக்கா ப்ளாட்•பார்ம். எங்கப்பன் எப்ப மச்சுவூடு கட்னான்னு தெரியுமா ஒனக்கு? எப்பிடி கட்டினான்னாச்சும் தெரியுமா? எங்கப்பன் வூடு கட்னது இருக்கட்டும். நான் எப்பிடி ஓட்டல் கட்னேன் தெரியுமா? அப்பன்காசுன்னு ஊருக்குள்ளார சொல்லுவாங்க. அது இல்ல நெசம். அடிச்ச காசு அது! எங்க அடிச்சேன், எப்பிடி அடிச்சேன், எவன் வயத்துல அடிச்சேன்னு தெரிஞ்சா பேதியாயிருவ சாக்ரதை! [...]

கொசு – 20

அத்தியாயம் இருபது கடற்கரையில் அதிசயமாகக் கூட்டம் இல்லாதிருந்தது. தவிரவும் கவியத் தொடங்கியிருந்த இருளுக்குள் ஒளிய இடம் தேடி அலைகள் நெருக்கியடித்து முந்தியதில் கருமையின் இருவேறு வண்ணங்கள் மேலும் கீழுமாகக் கண்முன் விரிந்தன. உப்புச் சுவையுடன் வீசிய காற்றில் மேனி பிசுபிசுத்தது. இதமான சூழல் நிரந்தரமானால் எத்தனை நன்றாக இருக்கும் என்று முத்துராமன் நினைத்தான். பரவசத்தில் சட்டென்று அருகே அமர்ந்திருந்த சாந்தியின் இரு கன்னங்களை ஏந்தி முத்தமிட நெருங்குபவன் போல் அருகே தன் முகத்தைக் கொண்டுவந்தான். ‘ஐயோ..’ என்றாள் [...]

கொசு – 19

அத்தியாயம் பத்தொன்பது ‘அதுல பாருங்க தம்பி, ஆங்.. பேரென்ன சொன்னீக? முத்துராமன். நல்ல பேரு. நா என்ன சொல்லவாரேன்னா, அரசியலுக்கு வர்றதுன்னா பதினாறு வயசுல வந்துரணும். இருவது வயசுல செயிலுக்குப் போயி பாத்துரணும். அப்பத்தேன் முப்பதுல கட்சிக்காரன் மதிக்க ஆரம்பிப்பான். நாப்பதுல மக்களுக்கு நம்மளத் தெரிய ஆரமிக்கும். அம்பதுல மினிஸ்டர் ஆயி அறுவதுல சாவறதுக்குள்ள கொஞ்சம் சொத்து சேத்துவெச்சிட்டுப் போயி சேரலாம். நடுக்கா, நாலஞ்சு போராட்டம், தடியடின்னு பேப்பர்ல நம்ம பேரு வந்திச்சின்னா ஒரு கவனம் கெடைக்கும். [...]

கொசு – 18

அத்தியாயம் பதினெட்டு முத்துராமன் திருநெல்வேலி ஜங்ஷனில் இறங்கியபோது, வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. மாநாடுகளுக்கும் மழைக்கும் பூர்வ ஜென்ம பந்தம் ஏதாவது இருக்கக்கூடும். அவனுக்கு நினைவு தெரிந்து கட்சி நடத்திய முக்கிய மாநாடுகள் அனைத்துக்கும் மழை ஒரு தூறல் அளவிலாவது சாட்சியாக இருந்திருக்கிறது. பலத்த மழை பொழியும்போதுதான் மேடையில் தலைவர்களுக்கு வீரம் அதிகரித்தது. விரல் நீட்டி எச்சரிக்கும் சந்தர்ப்பங்களில் வாகாக ஒரு இடி இடித்தால் கூட்டத்தில் விசில் பறக்கும். வீர உரை சம்பவத்துக்கு பொருத்தமாக, இயற்கை வழங்கும் [...]

கொசு – 17

அத்தியாயம் பதினேழு வேண்டுமென்றேதான் அவனுக்கு இனிய தமிழ் அசைவ உணவகத்தில் ஒருவேளை சாப்பிட்டுவிட்டுப் போனாலென்ன என்று தோன்றியது. முதலில் அங்கே சாப்பாடு. பிறகு இருபத்தி மூன்று சி பிடித்து எழும்பூர். ஆல்பர்ட் தியேட்டரில் இறங்கி நாலு தப்படி நடந்தால் சாந்தியின் குடிசைப் பகுதி. ஏனோ ஊருக்குப் போவதற்குமுன் ஒருமுறை பார்த்துவிட்டுப் போகலாம் என்று நினைத்தான். அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ தெரிந்தால் என்ன நினைப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தான். சரியல்ல என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் சரியானவற்றை மட்டுமே விரும்புவதாக [...]


கொசு – 16

அத்தியாயம் பதினாறு எம்.எல்.ஏ.வின் வீடு வேளச்சேரிக்கும் மடிப்பாக்கத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் மிகச் சமீபத்தில் முளைத்திருந்த ஒரு புதிய காலனியில் இருந்தது. நினைவு தெரிந்த நாளாக அந்த இடத்தில் மாபெரும் குப்பை மேடு ஒன்று காட்சியளிக்கும். எத்தனை நூற்றாண்டுகளாகக் கொட்டப்பட்ட குப்பை என்று கண்டுபிடிப்பது சிரமம். சென்னை நகரத்து மக்கள் தலைமுறை தலைமுறையாக வாங்கி உபயோகித்து வீசிய பொருள்களின் மிக நீண்ட பட்டியலை அங்கு ஓர் ஆராய்ச்சி மேற்கொள்வதன் மூலம் பெற்றுவிட முடியும். முன்பொரு காலத்தில் ஒரு வாரப்பத்திரிகை [...]

கொசு – 15

அத்தியாயம் பதினைந்து ‘சரி வுடுப்பா. மேட்டரு இதான். வேலைய நிறுத்தணும். மேலிடத்து உத்தரவு. மீறி செஞ்சிங்கன்னா இன்னொருதபா சும்மா இருக்கமாட்டோம். டேய், வாங்கடா..’ அவர்கள் போய்விட்டார்கள். ஆற்றங்கரையில் குப்பத்து இளைஞர்கள் மட்டும் நின்றுகொண்டிருந்தார்கள். அதிர்ச்சி கலந்த வியப்பு. பதற்றம் கலந்த கவலை. கோபம் கலந்த குழப்பம். என்றைக்கோ யார் முயற்சியாலோ அந்தப் பிராந்தியத்தின் குப்பைகளைச் சேகரிக்கக் கொண்டுவந்து போடப்பட்ட குப்பைத் தொட்டிக்குள்ளிருந்து நாயொன்று தலைநீட்டி எட்டிப்பார்த்தது.  ‘வழ்ழ்’ என்றது. குப்பைகள் தொட்டியை மீறத் தொடங்கும்போது, தொட்டிகள் நாய்களின் [...]

கொசு – 14

அத்தியாயம் பதினான்கு அம்மாவிடம், அப்பாவிடம், சாந்தியிடம், தம்பியிடம். இன்னும் யோசித்தால் வட்டச் செயலாளரிடம், எம்.எல்.ஏவிடம், நண்பர்களிடம் என்று தனக்குத் தெரிந்த வட்டத்தில் இருக்கிற அத்தனை பேரிடமும் பேசவும் விவாதிக்கவும் தெளிவு பெறவும் நிறைய விஷயங்கள் இருப்பதாக முத்துராமனுக்கு எப்போதும் தோன்றும். ஆனால் பேசத் தொடங்கியதும் ஏதோ ஒன்று தடுத்துவிடுகிறது. சொல்ல வருவதைப் பளிச்சென்று போட்டு உடைக்க முடிந்ததில்லை இதுவரை. என்ன தயக்கம்? அதுதான் புரியவில்லை. அவன் தன் அம்மாவிடம் சொல்ல விரும்பிய விஷயம் மிக எளிமையானது. அம்மா, [...]

கொசு – 13

அத்தியாயம் பதிமூன்று முத்துராமன் வீட்டுக்கு வந்தபோது தம்பி மட்டும்தான் இருந்தான். குப்புறப் படுத்துகொண்டு சினிக்கூத்து படித்துக்கொண்டிருந்தான். அவனுடைய உலகம் சினிமா பத்திரிகைகளால் ஆனது. அக்கப்போர்களும் அடிதடி விவகாரங்களும். நடிகர்களின் சொத்து விவரங்களும் நடிகைகளின் காதல் மற்றும் விவாகரத்து சங்கதிகளும். தன்னைப்போல் அரசியலில் அவனுக்குக் கனவுகள் ஏதும் இருக்கிறதா என்பதை அறிய முத்துராமன் பல சமயம் முயற்சி செய்து பார்த்திருக்கிறான். கட்சி மீட்டிங்குகளுக்கு வருவதிலோ, தேர்தல்காலப் பணிகளை ஆர்வமுடன் பார்ப்பதிலோ அவன் குறை வைத்ததில்லை. ஆனால் அரசியலில் அவனது [...]

கொசு – 11

அத்தியாயம் பதினொன்று எப்போது உறங்கினான் என்று தெரியவில்லை. ஆனால் கண் விழித்தபோது மணி ஏழரையாகியிருந்தது. விடிந்ததும் முதல் நினைவாக முந்தைய நாள் கோடம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தில் சாந்தியுடன் பேசியதுதான் முந்திக்கொண்டு வந்து நின்றது. ஆர்வமும் தயக்கமும் காரணமற்ற பயமும் பதற்றமுமாகப் பேசியதெல்லாம் சரிதான் என்று உறக்கம் வரும்வரை தோன்றியது. ஆனால் இதென்ன? விழித்து எழுகிற நேரத்தில் அத்தனையும் அபத்தமாக அல்லவா தெரிகிறது? முத்துராமனுக்குக் கொஞ்சம் வெட்கமாக இருந்தது. தன் தெளிவின்மையை வலுக்கட்டாயமாக அவளது சிந்தனைக்குள் திணித்துவிட்டோமோ என்று [...]

கொசு – 10

அத்தியாயம் பத்து பேசவேண்டும், வா என்று வரச்சொல்லி ஆளனுப்பியபோது சந்தோஷமாகத்தான் இருந்தது. வருவாள். பேசலாம். பேசாமலும் இருக்கலாம். ஆனால் பார்க்கலாம். பேச விருப்பமும் சந்தர்ப்பமும் கூடி வந்தால் பேசலாம். நினைத்ததைத்தான் பேச வேண்டுமென்பது கூட இல்லை. ஏதாவது பேசினால் கூட நன்றாகத்தான் இருக்கும். பேசாமல் வெறுமனே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டுத் திரும்பினால் அதனைக் காட்டிலும். ஆனால் கிளம்பியபோது எதுவோ ஒன்று தடுத்தது. எதற்கு வரச்சொன்னோம் என்று நினைத்தான். பேசியே தீரவேண்டிய விஷயம் என்று ஏதுமில்லை. என்னமோ ஒரு பயம், [...]

கொசு – 09

அத்தியாயம் ஒன்பது முத்துராமனுக்கு அது மிகவும் புதிய அனுபவமாக இருந்தது. அவனுக்குத் தெரிந்த அவனுடைய அப்பா, ஒரு காலத்தில் மிகத் தீவிரமான கட்சிக்காரர். வாரம் ஒரு நாள் அல்லது இரண்டு நாள்கள் இரவில் வீடு தங்குவார். அந்தத் தினங்களிலும் அவரைப் பார்க்க யாராவது வந்துவிடுவார்கள். வாசலில் இதே கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து அவர் கட்சி அரசியல் பேசிவிட்டு, வந்தவரை வழியனுப்பிவைத்துவிட்டு அப்படியே படுத்துவிடுவார். முத்துராமன் கண் விழிக்கும் காலைப் பொழுதுகளில் அநேகமாக அவர் வீட்டை விட்டுப் புறப்பட்டிருப்பார். [...]

கொசு – 08

அத்தியாயம் எட்டு மண்ணும் கல்லும் மனிதர்களும் லாரிகளில் வந்து இறங்கியபோது, முத்துராமன் வேட்டியை மடித்துக் கட்டி, வானம் பார்த்து வணங்கியபடி தன் குடிசையை விட்டு வெளியே வந்தான். பரபரவென்று லாரிகளின் பின்புறத் தடுப்புகள் திறக்கப்பட்டு பலத்த ஓசையுடன் கல்லும் மண்ணும் சரிந்தது. தேர்தல் இல்லாத நேரத்திலும் தெய்வம் கண் திறந்து பார்க்கும். யாரங்கே, கூப்பிட்டுக்கொண்டிருக்க அவசியம் இல்லை. வீட்டு வேலைகள் முடிந்தால் யாரும் வந்து உதவிக்குக் கைகொடுக்கலாம். முன்னதாகத் தன் காலனியின் இளைஞர்களை ஒருங்கிணைத்து ஆற்றங்கரை ஓரத்தில் [...]

கொசு – 07

அத்தியாயம் ஏழு முதலில் புகைதான் தென்பட்டது. அர்த்தமற்ற கூச்சல்களும் தபதபவென்று ஓடும் சத்தமும் வெளியை நிறைத்திருந்தது. முத்துராமனும் சாந்தியும் குப்பத்தை நெருங்கியபோது ஒரு பாதி எரிந்து நாசமாகி சேறும் கரியுமாகக் கிடக்க, இன்னொரு பக்கத்தில் தீயை அணைக்க மக்கள் போராடிக்கொண்டிருப்பது தெரிந்தது. வீதியெங்கும் துணி மூட்டைகளும் பாத்திரங்களுமாக உருண்டு கிடக்க, பெண்களின் ஒப்பாரியில் அடி வயிறு பிசைந்தது. ‘டேய், எல்லா குடிசைங்கள்ளயும் உள்ள பூந்து பாருங்கடா.. பெருசு எதாச்சும் தூங்கிக்கினு கெடக்கப்போவுது!’ யாரோ குரலெழுப்பியபடி ஓடினார்கள். வீசியடிக்கும் [...]

கொசு – 06

அத்தியாயம் ஆறு குவார்ட்டர் விட்டது போல கிர்ர்ரென்றிருந்தது முத்துராமனுக்கு. ஆல்பர்ட் தியேட்டரில் டிக்கெட் வாங்கியிருக்கிறோம் என்று நண்பர்கள் சொன்னபோது உடனே சாந்தியின் ஞாபகம் வந்தது பெரிய விஷயமில்லை. தியேட்டர் வாசலில் அவளைச் சந்திக்க நேர்ந்ததில்தான் அவன் திக்குமுக்காடிப் போயிருந்தான். பார்த்ததும் உடனடியாக ஒரு புன்னகை தருவதில் பிரச்னை ஏதுமிருக்கவில்லை. ஆனால் அடுத்தக் கணம் என்ன பேசுவது என்று புரியாமல் சற்றுத் திணறிவிட்டான். நல்லாருக்கியா என்று கேட்கலாமா? அபத்தம். பார்த்துவிட்டு வந்து மூன்று நாள்தான் ஆகிறது. அப்பா, அம்மா [...]


கொசு – 05

அத்தியாயம் ஐந்து அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் அண்டு நற்பணி மன்றம் (ரிஜிஸ்டர்டு) போர்டு வைத்துக் கொடி பறந்த தூண் அருகே வெளேரென்று வேட்டி கட்டி இரண்டு பேர் வந்து இறங்கினார்கள். பக்கவாட்டு ஸ்டாண்டு போட்டு நிறுத்திய பைக்கின் முன்புறம் சிறிதாகக் கட்சிக்கொடி பறந்தது. பன்னிரண்டு வருடங்களாகப் பறக்கிற கொடி. ஒரு லைசென்ஸின் பணியைச் செவ்வனே செய்யும் சிறந்த மாற்று. பின்னால் வந்து நின்ற வெள்ளை நிற அம்பாசிடரிலிருந்து வட்டச் செயலாளர் இறங்கினார். ஒரு பக்கத் துணையாக [...]

கொசு – 04

அத்தியாயம் நான்கு இனிய தமிழ் அசைவ உணவகத்தின் வெளிப்புறத் தோற்றத்தை வைத்து, அதன் மேல் மாடியின் பின்புறம் அமைந்திருந்த வட்டச் செயலாளரின் அலுவலக அறையை எடைபோட்டுவிட முடியாது. ஸ்தாபிதம் 1967 என்கிற காரை பெயர்ந்த புடைப்பு எழுத்துகளைப் போலவே அவரது அறையும் அநேகமாகக் கண்ணில் தென்படாது. உடைந்து, கால் ஆடும் மேசைகளும் உட்புறம் பச்சை மிகுந்த தம்ளர்களும் அழுக்கும் ஈரமுமாகக் கால்வைக்க முடியாத அளவுக்குப் பராமரிக்கப்படுகிற கைகழுவும் இடமும் பசியோடு உணவருந்த வருகிறவர்களுக்கு ஒரு பொருட்டில்லை. சாப்பிட்ட [...]

கொசு – 03

அத்தியாயம் மூன்று வட்டச் செயலாளர் தூங்கி விழித்தபோது மணி மூன்றாகியிருந்தது. அவரைப் பார்ப்பதற்கு முத்துராமன் வந்திருப்பதாகப் பையன் வந்து சொன்னான். இப்ப நான் எங்க இருக்கேன் என்று தனக்குள் கேட்டுக்கொண்டார். தூங்கி எழும்போதெல்லாம் வந்துவிடுகிற குழப்பம். யாரும் கேட்பதற்கில்லை என்கிற சுதந்தரத்தில், வயசுக் காலத்தில் கையில் புரளத் தொடங்கியிருந்த காசு கொடுத்த தன்னம்பிக்கையில், தன் வாழ்வில் அவர் செய்துகொண்ட புதிய ஏற்பாடு தொடக்கத்தில் நம்பிக்கையளிக்கும் விதத்தில்தான் இருந்தது. தொழில் சிறந்த காலம் அது. சைதாப்பேட்டையின் காய்கறி மார்க்கெட் [...]

கொசு – 02

அத்தியாயம் இரண்டு இருபத்தி மூன்று வயதில் தனக்கு மீண்டும் வேறொரு பெயர் வைக்கப்படும் என்று சாந்தி நினைத்துப் பார்த்ததில்லை. இந்தப் பெயருக்கு என்ன குறைச்சல்? சிறியதாக, நன்றாகத்தானே இருக்கிறது? தவிரவும் அந்நாளில் சாந்தி நிலையம் என்ற படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் ஆசைப்பட்டு வைத்ததாக அம்மா சொல்லியிருக்கிறாள். ரேஷன் கார்டில் இருக்கிற பெயர். பாதியில் விட்ட பள்ளிக்கூடம் கொடுத்தனுப்பிய சர்டிபிகேட்டில் இருக்கிற பெயர். வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கிற பெயர். ஊரும் உறவும் குறைந்தது ஒரு கோடி முறையாவது [...]

கொசு – 01

அத்தியாயம் ஒன்று கழுதையின் முதுகிலிருந்து மூட்டையை இறக்கிக் கீழே போட்டாள் பொற்கொடி. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் பாலத்தில் தடதடத்துக் கடந்துபோனது. கீழே நகர்ந்துகொண்டிருந்த நீரில் துண்டை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்த நான்கு பொடியன்களும் அண்ணாந்து பார்த்துக் கையசைத்தார்கள். ஓடும் ரயிலின் ஜன்னல் வழியே யாரோ கழுவித் தெளித்த நீரின் துளிகள் காற்றில் அலைந்து ஆற்றில் உதிர்ந்தன. "பொற்கொடி, முத்துராமனுக்குப் பொண்ணு பாக்கப் போறாங்களாம்டி. வூட்டு வாசல்ல குவாலிஸ் வந்து நிக்குது. அல்லாரும் கெளம்பிக்கினு கீறாங்ங்க. பெர்சு நம்மாண்டல்லாம் சொல்லிச்சா [...]

 



     RSS of this page