Home / VikatanJokes

VikatanJokes


 

ஆசிரியர்: நரபலி கொடுக்கிற ஒரு ஜாதியார் பிடாரிமலைக் காடுகளில் வசிக்கிறார்களாம். அவங்களைப் பேட்டி கண்டு, புகைப்படங்களும் எடுத்துக்கிட்டு வாங்க. பத்திரிகையிலே போடுவோம்!


''எதுக்கு காலங்கார்த்தாலே அவளிடம் சண்டைக்குப் போகிறாய்?''

''சாயங்காலம்தான் நாம் ஊருக்குக் கிளம்புகிறோமே...
நினைவில்லையா உங்களுக்கு?''


வந்தவர்கள்: ஆரஞ்சுப் பழத்தோலில் இருந்து ஒரு வித
எண்ணெய் தயாரிக்கிற தொழிற்சாலை ஒன்று தொடங்கலாம்
என்று இருக்கிறோம்... அதற்கு உங்களால் ஆன உதவி ஏதாவது..?

பிரமுகர்: ஓ எஸ்... செய்கிறேனே!
இனிமேல் நான் சாப்பிடுகிற ஆரஞ்சுப் பழத்தின் தோல்கள் எல்லாம் உங்களுக்குத்தான்!


''டாக்டர்! என் காது மோசமாயிட்டிருக்கு.
நான் இருமறது கூட எனக்குக் கேட்க மாட்டேங்குது!''

''இந்த மருந்தைச் சாப்பிடுங்க!''

''இனிமே காது சரியா கேட்குமா?''

''இல்லை... நல்ல பலமா இருமுவீங்க!''


''சார்... உங்களை குரூப் போட்டோதான் எடுக்க முடியும்!''


மானேஜர் (குமாஸ்தாவிடம்): ரொம்ப முக்கியமான சமாசாரம்!
இல்லாட்டி தூங்கிக்கிட்டிருந்த உங்களை எழுப்பி இருக்கவே மாட்டேன். வேலையிலிருந்து உங்களை டிஸ்மிஸ் பண்ணியிருக்கேன்.
அதைச் சொல்லத்தான் எழுப்பினேன்!


''என்னடா அநியாயம் இது..?
கொலு பொம்மையையெல்லாம் உருட்டித் தள்ளியிருக்கியே,
உனக்கென்ன பைத்தியமா?''

''இல்லேம்மா..! கொலுப் படிக்குக் கீழே ஒரு எலி போச்சு.
அது எங்கேயாவது ஏறிக் குதிச்சு, பொம்மைகளை எல்லாம் உருட்டிக் கீழே தள்ளிவிடப் போகிறதேன்னு, கஷ்டப்பட்டு அதை அடிச்சு விரட்டினேன்.
அதனாலே இப்படியாயிடுத்து..!''


''மாடிப் படியில் கொலு வைத்துவிட்டார்கள்.
கீழே இறங்க வேறு வழியில்லை.''

''என் வேலைக்காரன் நான் எழுதி வச்சிருக்கிற கதைகளை எல்லாம்
எடுத்துத் தூக்கி எறிஞ்சுடறான் சார்!''

''படிக்கத் தெரிஞ்ச வேலைக்காரனை வச்சுக்கிட்டாலே கஷ்டம்தான் சார்.''


இன்ஸ்பெக்டர்: திருடனைப் பிடிக்க
நாலே வழிகள்தான் இருக்கு என்கிறாயே... என்னென்ன?

போலீஸ்காரர்: கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு!


நர்ஸ்: இவர்தான் உங்க பியூன்..!

வந்தவர்: சேச்சே! இவனா இருக்காது... சரியா பார்த்துச் சொல்லுங்க...
என் பியூன் என்னைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து நிற்பானே..?


''சரியா கவனிங்க டாக்டர்!
டைபாய்டுன்னு தப்பா நினைச்சு மருந்து கொடுத்து
சில பேர் நிமோனியாவாலே போயிடறாங்களாமே..!''

''சேச்சே... என்கிட்டே அப்படி கிடையாது.
நான் டைபாய்டுன்னு மருந்து கொடுத்தால், அதிலேயேதான் போவாங்க..!''


''ஐம்பது ரூபாய் பாக்கி இருக்குதுங்களே, எப்போ வந்தால் கிடைக்கும்?''

''ஒண்ணாம் தேதி சம்பளம் வரும். அஞ்சாம் தேதி வந்து பாருங்க..!''

''ஏன் ரெண்டு மூணு தேதிகளில் வரப்படாதுங்களா?''

''வேறே ஒண்ணும் இல்லே, நீங்க கொஞ்சம் வயசானவங்களா இருக்கீங்களே, ஏன் நெரிசல்லே கஷ்டப்படணும்தான் சொன்னேன்!''


''என்னப்பா இது..?
தீபாவளிக்கு ஒரே ஒரு வெடி மட்டும் வாங்கிட்டு வந்திருக்கே?''

''ஆமாம்... நீ ஒத்தை வெடிதானே வேணும்னு கேட்டே!''





''இதுக்குத்தான் கூட்டம் ஆரம்பத்திலே
வாண வேடிக்கையெல்லாம் வேணாம்னு சொன்னேன்... கேட்டீங்களா?''


''எண்ணெய் இந்த விலை விக்குதே...
தீபாவளியை நீங்க எப்படி சமாளிக்கப் போறீங்கன்னு நினைச்சேன்...
அபார 'ஐடியா' பண்ணிட்டீங்களே..!''


''குழந்தைகளுக்கு மத்தாப்பு, பட்டாசு வாங்க கையிலே காசு இல்லீங்க...
அதான், குழந்தைகளை இங்கே கூட்டி வந்துட்டேன்!''


''இது ஸ்பெஷல் வெடிகள்! சத்தமே போடாமல் வெடிக்குமாம்!
நிறைய வாங்கிக்கொண்டு வந்திருக்கேன்..!''

''என்னது... அந்தப் பட்டாசுக் கடையிலிருந்து எல்லோருமா ஓடறாங்க?''

''பட்டாசுக்கு நடுவுல நிஜ வெடிகுண்டு இருக்கறதா ஒரு போன்கால் வந்ததாம்!''



''உங்க ஆபரேஷனைத் தீபாவளிக்குப் பிறகுதான் வெச்சிருக்கேன். உங்க வீட்டுல இந்த வருஷம் தீபாவளியே இல்லைன்னு ஆகிடக்கூடாதில்லையா...''

''என்னப்பா... இன்னிக்கு பேப்பர் ரோஸ்ட் விலை கூட இருக்கே?''

'' 'தீபாவளி மலர்' ஆச்சே!''


''எங்க மாமாவுக்கு எதையும் கரெக்டா, பர்ஃபெக்டா பண்ணணும்.
விஷ்ணு சக்கரம் விடறார் பாரு..!''



''அவசரத்துல அளவு கொடுக்காம மோதிரம் செஞ்சுட்டோம்...
உங்க விரலுக்குச் சரியா இருக்குமோ இல்லையோ?''

''கொஞ்சம் முன்னே பின்னே இருந்தா பரவாயில்லே...
நம்ம 'உத்தம்சந்த்லால் கடை'யில்தானே பெரும்பாலும் இருக்கப் போகுது!''


இது பீரங்கி வெடிப்பா... புதுசா வந்திருக்கு...
நீங்க கொடுத்த 25 ரூபாய்க்கு ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்கோம்!


''இந்த ரயில் வெடி இங்கேயும் அங்கேயும் போய்க்கிட்டு இருக்கிறதைப் பார்த்தா நம்ம அப்பா கட்சிவிட்டுக் கட்சி போறது மாதிரியே இருக்குல்லே...!''


''என்ன சார், தீபாவளி பட்டாஸாலே காயமா?''

''இல்லே சார்!
மாடி போர்ஷன் குழந்தை மைசூர்பாக்கை தலையிலே போட்டுட்டான்..!''



'' 'வேளாவேளைக்குச் சாப்பிடுங்க...
வாரம் ஒரு தடவை எண்ணெய் தேய்ச்சுக் குளிங்க.
வீட்டைப் பத்திரமா பாத்துக்குங்க'னு சொல்லிட்டுப் போறாங்களே
உங்க மனைவி... ஊருக்கா?''

''இல்லீங்க... ஜவுளிக்கடைக்கு!''


சித்தே இருடா! நான் வெடிக்கிற பட்டாசு வெடியைக் கேளுடா!



''எல்லா பசங்களும் சண்டை போடாமல் இருக்கணும்னு,
இப்படி நீளமா சாட்டை வாங்கினேன்!''


''அங்கே என்னடா செய்றீங்க?''

''அப்பா அம்மா விளையாட்டு விளையாடறோம்!''

''சரி! சண்டை போடாமல் விளையாடுங்க!''



ஆசிரியர்: நீ ஏண்டா உல்லாசப் பிரயாணத்திற்கு வர மறுக்கிறாய்?

மாணவன்: போய்விட்டு வந்த உடனே, அதைப் பற்றிக்
கட்டுரை எழுதச் சொல்வீங்களே சார்!




''அப்பா... புஸ்தகம் 35 ரூபாய்...
நோட் புக் 40 ரூபாய்...
ஸ்பெஷல் பீஸ் 30 ரூபாய்...
யூனிபாரம் 25 ரூபாய்...
பென்சில் 2 அணா...''

''பென்சில் மட்டும் அடுத்த மாதம் வாங்கிக்கோடா...
என் சம்பளம் இதுக்கே சரியா போச்சு...''


''நீங்க இவ்வளவு நல்லா பேசி
விடுதலை வாங்கித் தருவீங்க என்கிற விஷயம்
முன்னாடியே தெரிஞ்சிருந்தா, இன்னும் பெரிய இடமா பார்த்துக்
கன்னம் வச்சிருப்பேன், சார்!''



வர வர உங்களுக்கு என் மேலே அன்பே குறைஞ்சு போச்சு!
உங்க வேலையிலேயே கண்ணா இருக்கீங்களே தவிர,
நான் சொன்னா எதையும் காதிலே வாங்கிக்கவே மாட்டேங்கறீங்க!

பாகவதர்: என் சிஷ்யர்களுக்குள்ளேயே இவன்தான் புத்திசாலி.

நண்பர்: ஏன், பாடறதையே நிறுத்தி விட்டாரா?


''கார் ஓட்டக் கத்துக்க எனக்கு மூணு மாசமாச்சு சார்...''

''அப்படியா! எனக்கு மூணு கார் ஆச்சு!''


கிளார்க்: வீட்டிலே கொஞ்சம் வேலை இருக்கு,
நான் போயிட்டு வரேன்.

மானேஜர்: ரொம்ப சந்தோஷம்,
வீட்டிலேயாவது வேலையிருக்கே, போயிட்டு வாங்க..!


''நான் இந்தப் பக்கத்துக்குப் புதுசு சார்...
புதுவயல் ஸ்டேஷன் வந்ததுன்னா சொல்றீங்களா?''

''இதென்ன சார் பிரமாதம்?
நான் எந்த ஸ்டேஷன்லே இறங்கறேன்னு கவனிச்சுக்குங்க...
அதுக்கு முன் ஸ்டேஷன்லே நீங்க இறங்கணும்!''



''ஏன்பா உன் பிள்ளையைப் போட்டி இப்படி அடிக்கறே?''

''அவன் பரிட்சை ரிசல்ட் அடுத்த வாரம் வருது...
ஆனால் அப்போ நான் ஊரிலே இருக்க மாட்டேனே!''


''கோட்டூர்புரத்தின் பெயரை இப்படி மாற்றினால் என்னப்பா?''

''எப்படி?''

''போட்டூர்புரம்!''


''எனக்குத் தெரிஞ்சு பத்து வருஷம் குருவின் வேட்டி,
சட்டையெல்லாம் தோச்சுக் கொடுத்துதான்
அவர் மிருதங்கம் கத்துக்கிட்டார் சார்...''

''அதான் மிருதங்கத்தை துணி தோய்க்கறாப்லே இப்படி
பளார், பளார்னு அடிச்சு வாசிக்கிறாரோ..?!''


''இவர் சங்கீதம்னா எங்கப்பா உயிரையே விட்டுவிடுவார் சார்...''

''அப்படியா! அவர் இப்போ எங்கே இருக்கார்?''

''அவர் இப்போ இல்லே சார்... காலமாயிட்டார்!''


''எங்க சபாவிலே இன்னிக்கு சோரனூர் சகோதரர்கள் பாடறா...
போன வருஷம் மாதிரி இந்தத் தடவையும்
நீங்கதான் வந்து தலைமை தாங்கணும்.''

''இனிமே நம்மாலே தாங்க முடியாது ஸார்!''


''சங்கீத வித்வான் இருக்காரா குழந்தே?''

''சங்கீத வித்வான் யாரும் இல்லையே...
பாட்டு வாத்தியார்தான் இருக்கார்..!''


''என்ன ஸார் நீங்க மட்டும் தனியா வாசிச்சுக்கிட்டு இருக்கீங்க?''

''தனி ஆவர்த்தனம் வாசிக்கிறேன்!''


அரை மணியா கஷ்டப்பட்டு பாடி,
அபூர்வமா மேல் பஞ்சமம் பிடிச்சிருக்கேன்.
ஒருத்தராவது அப்ளாஸ் கொடுக்க மாட்டேங்கறீங்களே...


''அம்மா... வாத்தியார் நாளைக்குப் பாடப் போறாராம்!''

''அப்படீன்னா இத்தனை நாளா அவர் பாடினதே இல்லையா?''



''முதல் வரிசையிலே பார்த்தாயா...
ஞானமும் அவள் ஹஸ்பெண்டும் கச்சேரிக்கு வந்திருக்காங்க!''

''ஆமாம், சங்கீதம்னா ஞானம் இல்லாமல் வர முடியுமா?''


''மேகவராளி பாடினால் மழை வரும்...
புன்னாகவராளி பாடினால் பாம்பு வரும்னு
அந்தக் காலத்திலே கண்டுபிடிச்சிருக்கா!
கச்சேரிக்குக் கூட்டம் வர்றதுக்கு ஒரு ராகம்
கண்டுபிடிக்காமல் போனதுதான் இப்ப ரொம்ப கஷ்டமாயிருக்கு..!''






     RSS of this page