Home / Vaazhai

Vaazhai


'வாழை'யைப் பற்றிய விகடனின் கட்டுரை ('புதிய பாதை - தெரு விளக்கு' தொடரில் முதல் அத்தியாயம்) இதர தொண்டு நிறுவனங்கள் பற்றிய pdf (1MB) இங்கே

‘கடவுளிடம் பிரார்த்திக்கும் உதடுகளைவிட, மனிதர்களுக்கு உதவி செய்யும் கைகள் மேலானவை!’
வேர்களின் விலாசம் அறியாமலேயே நனைத்துவிட்டுப்போகிற மழையாக, விழிகளின் முகவரி தெரியாமலேயே துடைத்துவிட்டுப்போகிற விரலாக வாழ்வதுதானே மனிதம்!

முட்டிமோதி முளைத்துவரும் முதல் தலைமுறை இளைஞர்கள் ஒவ்வொரு-வருக்கும், வரும் தலைமுறையில் ஒருவரையாவது வாரி வளர்த்தெடுக்க வேண்டிய கடமை இருக்கிறது என்பதைச் செய்து காட்டியிருக்கிறார்கள் ‘வாழை’ இளைஞர்கள். ‘அன்பில் செழித்த உறவு, இது தலைமுறை தாண்டிய கனவு’ என்ற இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட ‘வாழை’ இயக்கம், இப்போது 50 ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறது.

‘‘எங்க குடும்பத்தில் முதன்முதலா காலேஜ் போனவன் நான்தான். நல்லா படிச்சேன். இப்போ நல்ல வேலையில் இருக்கேன். படிப்பு என்னையும், என் குடும்பத்தையும் நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்திருக்கு. சின்ன வயசில் நான் என்னென்ன கஷ்டங்கள், தடங்கல்கள், சிரமங்களோட ஒவ்வொரு கட்டத்திலும் தயங்கி நின்னேனோ, அதே நிலைமையில் இப்போ அடுத்த தலைமுறையில் இன்னொருத்தனும் இருக்கான்னா, அவனுக்கு என்னால உதவ முடியும்னு தோணுச்சு. என்னை மாதிரியே நிறைய நண்பர்கள் இருந்-தாங்க. எல்லாரும் கைகோத்து, ஒரு சமூக மாற்றத்தைத் தொடங்கி வெச்சோம்!’’ & தடைகளையே படி-களாக மாற்றிய பெருமிதத்துடன் பேசுகிற அன்புசிவம், பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக இருக்கிறார்.
‘‘வாய்ப்புகள் வழங்கப்படாததால்-தான் பலருக்கு வாழ்க்கை சரியா அமையாமப் போயிடுது. சரிபாதி மாணவர்கள் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியாம நின்னுடறாங்க. எங்களுக்குக் கிடைக்கத் தவறியதை, நாங்கள் அடுத்த தலைமுறைக்கு முடிந்த அளவு தருவோம்’’ என்கிற பரமேஸ்வரன், சென்னை ஐ.ஐ.டி&யில் வேலை பார்க்கிறார்.

‘‘எந்தச் சமூகத்-திடமிருந்து வாழ்க்-கைக்குத் தேவையான எல்லாவற்றையும் பெற்-றோமோ, அந்தச் சமூகத்துக்குத் திருப்பிச் செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் எல்லோருக்கும் இருக்கு. வாழ்-வில் தடுமாறும்-போது, கை கொடுக்க ஒருத்தர் இருந்-திருந்தால், எல்லோரு-டைய வாழ்விலும் பல முன்னேற்றத் திருப்பங்கள் இருந்திருக்கும். அவற்றை ஏற்படுத்துகிற விருப்பம்தான், எங்கள் வாழை அமைப்பின் கூட்டு முயற்சி’’ என்கிற சந்தியா, மக்கள் தொடர்பாள-ராகப் பணிபுரிகிறார்.

 ‘‘மாணவர்களின் கல்விக்குத் தேவையான உதவிகளைச் செய்வதுடன், ஒரு வழிகாட்டியின் பொறுப்பில் அந்த மாணவர் இருப்பார். மாணவர்கள் தங்கள் வழிகாட்டிகளுக்கு வாரத்துக்கு ஒரு முறை கடிதம் எழுதுவார்கள். அதில் நலம் மட்டும் விசாரிக்காமல், டிக்ஷ்னரியிலிருந்து புதிய வார்த்தைகள் எழுதி அனுப்பு-வார்கள். மாதத்துக்கு இரண்டு முறை போனில் பேசுவார்கள். மூன்று மாதத்-துக்கு ஒரு முறை மாண-வரும் வழி-காட்டியும் நேரில் சந்தித்து உரையாடு-வார்கள். அந்தச் சந்திப்பை மாணவர்களின் ஆளுமையை வளர்க்கும் பயிற்சிப் பட்டறைகளாக, உளவியல் நிபுணர்களைக்கொண்டு நடத்துகிறோம்’’ என்று வாழை அமைப்பின் அடுத்த தலைமுறை வளர்ச்சிக்கான தத்துவத்தை விளக்குகிறார் அமைப்பின் செயலாளர் அமுதரசன்.

‘‘முதல் தலைமுறையாகப் பள்ளிக்குப் போகும் 50 மாணவர்களை எங்கள் அமைப்பு கல்வி வளர்ச்சியில் தத்-தெடுத்து இருக்கிறது. வாழையைப் பற்றிக் கேள்விப்பட்டு, தன் அறக்-கட்டளை சார்பாக 2 லட்ச ரூபாய் நிதி தந்தார் நடிகர் சூர்யா. 50 மாணவர்களை ஒரு வருடத்துக்கு வழிநடத்தத் தேவையான பணம் இதுபோன்ற சில நல்ல உள்ளங்களிடமிருந்தே கிடைத்துவிடுவதால், எங்கள் உடல் உழைப்பை இன்னும் தீவிரப்படுத்து-கிற முயற்சியில் இருக்கிறோம். விரைவில், சமமான கல்வி மறுக்கப்படும் ஏழைக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக ஒரு தரமான இருப்-பிடப் பள்ளியை வாழை உருவாக்கும்’’ என்று உறுதியாகச் சொல்கிறார் செல்வ குமார்.
‘‘வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள, படிக்க ஆர்வ-மிருந்தும் வாய்ப்பில்லாத, முதல் தலைமுறை-யாகக் கல்வி கற்கும் கல்வி- அறி-வற்ற ஏழைப் பிள்ளை-களையே தேர்வு செய்-கிறோம். கல்வி, பொருளாதார, சமூக ஏற்றங்களில் பின் தங்கி-யிருக்கிற தர்மபுரி போன்ற பகுதிகள்தான் எங்களின் முதல் இலக்கு. முதலில் பெண்ணாகரம் தாலூ-காவில் உள்ள சின்ன-வத்தலாபுரம், அளேபுரம், ஏரியூர், நெருப்பூர், செல்லமுடி ஆகிய ஐந்து கிராம பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைத் தற்போது தேர்ந்தெடுத்து இருக்கிறோம்.

90 மதிப்பெண் எடுக்கிற மாணவர்களை 99 மதிப்பெண் எடுக்கவைக்கிற சாதனையைச் செய்யாமல், சூழ்நிலையால் படிக்கத் தடுமாறும் மாணவர்களுக்குத் தோள் கொடுப்பதே எங்கள் நோக்கம். சாதி, மத, இன வேறுபாடுகள், மூட நம்பிக்கைகள், ஊழல் போன்றவை மலிந்துகிடக்கிற நம் சமூகத்தில், மண்டிக்கிடக்கும் இருட்டுக்கு எதிராக வாள் சுழற்றிப் போராட்டம் செய்யாமல், ஒரு விளக்கை ஏற்றுகிற முயற்சியே இது.

அடுத்த தலைமுறை மீது அக்கறை இருக்கிறவர்கள் வாழையில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்-கொள்ள விரும்பினால், வணக்கத்துடன் வரவேற்கிறோம். வாழை அமைப்பு பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள http://www.vazhai.org/ என்கிற இணைய தளத்துக்கு வரலாம்.

நூறு கோடியைத் தாண்டிய மக்கள் இருக்கிற ஒரு தேசத்தில், எங்களின் சிறு முயற்சி எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்று சொல்வதற்கில்லை. ஆனால், நாங்கள் வாழ்வதற்கான அர்த்தத்தை வாழை எங்களுக்கு வழங்குகிறது’’ என்று தன்னடக்கத்துடன் பேசுகிறார் வாழை அமைப்பில் ஒருவரான சுசித்ரா.

வாழையடி வாழையாக வளரட்டும் ‘வாழை’!
என்னைப் போல் உன்னைப் பார்க்கிறேன்! 



     RSS of this page