என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்.
பசித்துயர் 10/5/2010
1:23:29
AM
தரமணியில்
கரப்பான்பூச்சிகள் 10/1/2010 5:00:58 AM
மகத்தான போராளி. 9/26/2010
9:54:14
AM
பெங்களுர் சந்திப்பு 9/25/2010
1:17:08
PM
அபத்த இலக்கியம். 9/25/2010
4:44:41
AM
மத்தவிலாசம். 9/24/2010
3:31:23
AM
மத்தவிலாசம். 9/24/2010
3:31:15
AM
நிகழ்வுகள் 9/19/2010
1:50:38
AM
நேர்காணல் வீடியோ 9/14/2010
11:16:21
AM
ஒளிராத நட்சத்திரம் 9/14/2010
12:55:31
AM
விருது 9/12/2010
10:02:57
PM
ஷாஜியின் நூலரங்கு 9/11/2010
3:14:52
AM
ஒரு வாழ்க்கையின்
துகள்கள் 9/9/2010 1:42:12 AM
நன்றி 9/6/2010
9:00:24
PM
புள்ளியும் கோடும் 9/1/2010
10:47:37
AM
நூலாறு. 8/30/2010
10:02:43
PM
இது வேறு சினிமா. 8/29/2010
10:58:50
PM
ஜல்லிக்கட்டு 8/28/2010
12:34:46
PM
எனது நூல்
வெளியீட்டு விழா 8/24/2010 9:05:32 PM
வயது நாலு. 8/24/2010
12:23:59
PM
காட்சிப்பிழை 8/19/2010
10:22:48
AM
மழை இருட்டு 8/15/2010
6:41:50
AM
இரண்டு குறுங்கதைகள் 8/12/2010
9:44:25
AM
ஒரு மகத்தான பயணம். 8/9/2010
6:13:11
AM
மற்றவள் 8/6/2010
10:28:02
AM
கதைகளைத் தின்னும்
ஆடு. 8/5/2010 12:15:48 PM
பொம்மலாட்ட சினிமா. 7/30/2010
11:58:40
PM
புத்தகம் படிப்பது
எப்படி? 7/27/2010 1:28:03 PM
ஆடுகளின் நடனம் 7/25/2010
12:29:04
PM
காட்சிகளின்
புதிர்பாதை 7/21/2010 10:37:08 AM
கனவின் மிச்சம் 7/16/2010
12:00:04
PM
வளரும் புத்தகங்கள். 7/15/2010
8:46:53
AM
என் உரை 7/12/2010
11:36:01
AM
ஆயிரம் கொக்குகள் 7/10/2010
10:28:46
AM
தேவதாஸைக்
காதலிப்பவர்கள் 7/7/2010 11:09:52 AM
கால்பந்தாட்டம் 7/4/2010
12:35:48
PM
அஸ்தபோவ்
ரயில்நிலையம். 7/1/2010 10:31:57 AM
தொலைத்த ஆடைகள் 6/28/2010
10:15:31
PM
வீடில்லாத
புத்தகங்கள் 6/26/2010 10:54:47 PM
தும்பை பூத்த பாதை 6/26/2010
12:19:48
AM
மாதுளையின் பாடல். 6/24/2010
12:46:28
AM
கனகசபை 6/22/2010
4:07:28
AM
26 நாளில் ஒரு காதல் 6/19/2010
12:34:14
PM
திரை பார்த்தல் 6/19/2010
12:36:50
AM
நினைவு ஒளிர்கிறது 6/17/2010
7:32:23
AM
விருந்தாளிகளின்
தலையணை 6/14/2010 6:45:17 AM
ராபர்ட் ருவாக் 6/6/2010
3:48:20
AM
அன்பு தியோ. 6/5/2010
3:36:54
AM
குறும்படங்கள் பத்து 6/2/2010
9:20:29
AM
காட்சி பதிவுகள். 6/2/2010
9:18:50
AM
ஆங்கில மொழியாக்கம் 5/31/2010 11:19:32
AM
கீட்ஸ் எனும்
நட்சத்திரம் 5/31/2010 6:32:08
AM
அறிவிப்பு 5/31/2010 5:01:39
AM\
பெசோவின் புத்தகம் Date: 5/31/2010
4:08:13 AM
இடைச்சொல்: நம்மில் ஒரு கொலையாளி
இடைச்சொல்: நாரத ராமாயணம் - பகடியும் புனிதமறுப்பும்
இடைச்சொல்: வாழிவின் பகடையாட்டம்: சம்பத்தின் இடைவெளி
காந்தம் Date: 5/14/2010 10:56:34 PM
சம்பத்தின்
இடைவெளி Date: 5/14/2010 10:30:41 PM
திரைப்பட
விழா Date: 5/12/2010 3:23:53 AM
காலத்தை
செதுக்குதல் Date: 5/11/2010 11:31:19 AM
அருவிக்காக
காத்திருப்பது Date: 5/2/2010 10:07:02 AM
அறிவிப்பு Date: 4/27/2010 8:06:12 AM
அ.
முத்துலிங்கம் Date: 4/26/2010 9:19:50 PM
எண்ணும்
மனிதன் Date: 4/24/2010 6:03:23 AM
ஹொகுசாயின்
அலைகள் Date: 4/21/2010 12:54:06 PM
பெண்
வேஷம். Date: 4/19/2010 12:15:24 AM
நடனத்திற்குப்
பிறகு Date: 4/15/2010 10:38:12 PM
தற்செயல் Date: 4/14/2010 12:01:37 PM
பிறந்த
நாள் Date: 4/12/2010 9:37:05 PM
எல்
வயலின் Date: 4/10/2010 9:07:29 PM
ஜராதுஷ்ட்ரா. Date: 4/7/2010 9:21:59 PM
வெண்ணிற
இரவுகள். Date: 4/5/2010 11:16:11 PM
ஹரித்துவாரில்
பெய்யும் மழை Date: 3/31/2010
10:34:53 AM
அறிவிப்பு Date: 3/30/2010 8:58:32 AM
யானை
பார்த்தல் Date: 3/26/2010 10:36:41 PM
குரசேவாவின்
நூறுவயது. Date: 3/24/2010 2:00:35 AM
கால்களால்
சிந்திக்கிறேன்.Date: 3/19/2010 12:19:06 AM
கோமாளியும்
கதை சொல்லியும் Date: 3/18/2010 12:27:00 AM
சினிமா
இணையதளங்கள் Date: 3/17/2010 9:58:21 AM
மௌனப்பனி. Date: 3/15/2010 12:32:58 AM
அழைக்கும்
நிழல் Date: 3/12/2010 12:54:34 AM
காருகுறிச்சியார். Date: 3/9/2010 11:40:05 PM
மனசாட்சியின்
பாலம் Date: 3/9/2010 3:25:50 AM
நாரத
ராமாயணம். Date: 3/4/2010 8:27:27 AM
எலிக்கடி. Date: 2/27/2010 4:34:23 AM
சிறு
குறிப்பு Date: 2/25/2010 6:30:32 AM
இணையத்தில்
கர்ண மோட்சம் Date: 2/23/2010 9:47:20 PM
சில
பாடல்கள் Date: 2/20/2010 10:30:11 AM
இரவு
விளக்குகள் Date: 2/16/2010 2:36:46 AM
சிறு செடி Date: 2/13/2010 8:56:40 PM
மலை
தோன்றுகிறது Date: 2/12/2010 9:51:06 PM
அறிவிப்பு Date: 2/10/2010 1:07:10 AM
புர்ரா Date: 2/7/2010 11:47:05 AM
பத்து
குறும்படங்கள் Date: 2/4/2010 10:45:23 AM
சிதறி
வீழ்ந்த நட்சத்திரம். Date: 2/3/2010 9:25:44 AM
துயரத்தின்
சாலை. Date: 2/2/2010 7:31:15 AM
பாலா. நெட். Date: 2/1/2010 12:31:55 AM
மைனா
அலையும் பகல் Date: 2/1/2010 12:26:51 AM
மோனோநோகி. Date: 1/27/2010 1:16:41 AM
அவன் இவன் Date: 1/26/2010 10:48:20 AM
சொல்லிய கதை Date: 1/26/2010 10:47:17 AM
கர்ண
மோட்சம் தேசிய விருது Date: 1/24/2010 6:35:39 PM
யானையின்
கண்ணீர். Date: 1/21/2010 8:38:46 AM
ஆங்கிலம்
பிடிக்காத பூனை Date: 1/19/2010 3:47:43 AM
கசக்கும்
காமம். Date: 1/14/2010 1:04:13 AM
அடோனிஸ் Date: 1/13/2010 10:25:39 PM
ஜெயகாந்தன்
விழா. Date: 1/13/2010 8:16:59 AM
கண்காட்சிக்கு
பிறகு. Date: 1/11/2010 11:17:41 PM
இணைய கிருமி Date: 1/11/2010 11:15:30 PM
பெருநகரப்
பாணன். Date: 1/8/2010 10:29:29 AM
தஸ்தாயெவ்ஸ்கியின்
சங்கீதம் Date: 1/7/2010 11:20:41 AM
செல்லம்மாள்
பாரதி Date: 1/5/2010 4:32:47 AM
புத்தக
பரிந்துரை Date: 1/5/2010 2:40:19 AM
மா-னீ Date: 1/2/2010 11:52:28 PM
உப
பாண்டவம் புதிய பதிப்பு. Date: 1/1/2010
10:16:14 PM
தமிழ்
காமிக்ஸ் Date: 1/1/2010 10:07:54 PM
இரண்டு
குறுங்கதைகள். Date: 12/31/2009 9:42:16 AM
எனது புதிய
புத்தகங்கள் கிடைக்குமிடம் Date: 12/30/2009
12:16:22 PM
அறிவிப்புகள் Date: 12/30/2009 8:22:12 AM
எஷ்னாபூரின்
புலி. Date: 12/27/2009 1:19:57 PM
ஏழு
குறும்படங்கள் Date: 12/25/2009 8:29:15 PM
விக்ரமாதித்யன் Date: 12/25/2009 7:12:46 PM
சலித்து
போன கடவுள் Date: 12/22/2009 2:15:45 AM
பசித்த மழை. Date: 12/19/2009 11:19:01 PM
குளிர்காலப்
புத்தகங்கள் Date: 12/19/2009 10:53:41 AM
குறத்தி
முடுக்கின் கனவுகள் Date: 12/15/2009 10:38:08 AM
நன்றி. Date: 12/13/2009 12:37:13 PM
மனசாட்சியின்
கண்கள் Date: 12/10/2009 1:11:19 AM
போர்
செய்யும் புத்தன். Date: 12/7/2009 10:20:51 AM
வாசக
பர்வம். Date: 12/2/2009 12:32:12 PM
பேசத்தெரிந்த
நிழல்கள் Date: 12/2/2009 12:27:22 PM
நகுலன்
வீட்டில் யாருமில்லை Date: 12/2/2009 12:21:41 PM
மலைகள்
சப்தமிடுவதில்லை. Date: 12/2/2009 12:17:12 PM
புத்தக
வெளியீட்டு விழா Date: 12/1/2009 9:49:16 PM
மழை என்ன
செய்யும் Date: 12/1/2009 7:47:30 AM
நினைவின்
கலகம். Date: 11/28/2009 9:41:49 PM
பீதோவனின்
காதல். Date: 11/23/2009 11:07:01 AM
பால்
காகின் Date: 11/20/2009 6:26:01 AM
பௌத்த
சினிமா. Date: 11/17/2009 7:28:01 AM
உன்னத
மனிதர். Date: 11/13/2009 9:56:11 AM
இரண்டு
ஆசான்கள்Date: 11/10/2009 3:14:12 AM
மிருகத்தனம்Date: 11/8/2009 10:51:30 PM
ஒய்வுDate: 11/6/2009 2:32:09 AM
துறவியும்
மீனும்Date: 11/1/2009 1:42:38 AM
தனுஷ்கோடிDate: 10/26/2009 6:53:02 AM
இயல்பு.Date: 10/21/2009 12:18:23 PM
சிற்பியின்
நரகம்.Date: 10/17/2009 8:18:41 AM
இருள்
விலகும் கதைகள்Date: 10/15/2009 2:34:23 AM
கனவெங்கும்
காமிக்ஸ்.Date: 10/14/2009 12:16:00 AM
அணங்குDate: 10/7/2009 9:46:28 AM
திரையில்
ஒரு விசாரணை.Date: 10/1/2009 11:23:50 AM
ஷெல்
சில்வர்ஸ்டைன்Date: 9/28/2009 12:11:31 AM
அர்திமிசியா.Date: 9/26/2009 12:05:21 AM
எரிந்த
கூந்தல். Date: 9/21/2009 1:15:13 PM
தனிமை
கடந்து.Date: 9/16/2009 12:21:15 PM
பாஷோவின்
மேகம்.Date: 9/12/2009 1:30:25 AM
எழுத்தின்
நாயகர்கள்.Date: 9/11/2009 2:20:06 AM
உறங்க
மறுப்பவனின் கனவுகள்Date: 9/7/2009 11:36:28 PM
கனவில்
பூக்கும் தாமரைகள்Date: 9/5/2009 4:14:14 AM
இணைய
எழுத்து Date: 9/2/2009 1:41:44 AM
உப
பாண்டவம் நான்காம் பதிப்பு.Date: 8/26/2009
9:57:30 AM
பார்க்க-
படிக்க-இணையதளங்கள். Date: 8/23/2009 1:09:56
PM
சூரியனோடு
பேசும் சோளம்Date: 8/21/2009 9:34:43 PM
மதுரை
சந்திப்புDate: 8/17/2009 9:11:04 AM
சிரிப்பதற்காக
அல்லDate: 8/16/2009 12:24:08 PM
விழிக்கும்
ஏரிDate: 8/12/2009 12:51:06 PM
சினிமா
உருவாகிறது.Date: 8/9/2009 2:14:31 PM
புத்தக
உரையாடல்Date: 8/6/2009 11:32:53 AM
அகிரா
குரசோவா உரையாடல்.Date: 8/3/2009 12:24:37 PM
பத்து
இணையதளங்கள்Date: 8/1/2009 1:06:56 PM
அறிவிப்புDate: 7/30/2009 8:19:12 AM
தஸ்தாயெவ்ஸ்கியோடு
அலைந்த நாட்கள்.Date: 7/28/2009 1:53:22 PM
சேவற்சண்டைDate: 7/26/2009 7:30:59 AM
மரபினைத்
தொடரும் கலைDate: 7/23/2009 6:55:40 AM
எலுமிச்சை
அரசியல்Date: 7/21/2009 5:11:59 AM
எப்படி
படிக்கிறீர்கள்?Date: 7/16/2009 8:59:45 AM
சாம்பலும்
பனியும் Date: 7/7/2009 10:58:19 AM
ஐந்து
வலைப்பக்கங்கள் Date: 7/6/2009 8:52:35 AM
ஈரக்காகிதம் Date: 7/4/2009 6:54:16 AM
சிறுநடை. Date: 6/30/2009 11:35:09 PM
ஐமாக்ஸ். Date: 6/23/2009 11:59:30 AM
எழுத
நினைத்த நாவல் Date: 6/19/2009 12:01:31 AM
குட்டி
இளவரசன் Date: 6/17/2009 12:40:05 PM
நூறு
சிறந்த சிறுகதைகள்Date: 6/14/2009 12:25:09 AM
கேணி Date: 6/12/2009 10:37:21 AM
அண்டா
ஹாஹசம். Date: 6/9/2009 12:06:32 PM
கலாப்ரியா
Date: 6/6/2009 8:25:29 PM
பிலோ
இருதயநாத் Date: 6/6/2009 2:27:09 PM
அந்தரத்தில்
சர்க்கஸ் 6/3/2009 12:46:36 AM
நவ
கண்டம் 6/2/2009 2:01:19 AM
பதிலற்ற
மின்னஞ்சல்கள் 5/30/2009 9:34:31 AM
சாப்பாட்டு
புராணம். 5/26/2009 10:58:22 PM
யானையின்
பல் 5/26/2009 10:50:40 PM
ஜென்
கவிதைகள். 5/19/2009 8:20:46 PM
சிறிது
வெளிச்சம் 5/18/2009 10:58:26 PM
கோடை
பதிவுகள் 2 5/13/2009 9:31:52 PM
கோடை
பதிவுகள் 1 5/13/2009 9:30:42 PM
கோடை
பயணம் 5/6/2009 12:12:39 PM
கொட்டுக்காரர்கள். 5/3/2009 1:12:43 PM
வில்லா
கேதர் 5/1/2009 9:33:12 AM
ஒடும்
ஆறு. 4/27/2009 12:05:24 AM
என்ன
விளையாடுவது? 4/23/2009 12:27:56 PM
சிற்பமொழி 4/19/2009 4:47:39 AM
செகாவ்வும்
கார்க்கியும் 4/14/2009 12:50:47 PM
தண்ணீரோடு
பேசுங்கள். 4/12/2009 5:03:52 AM
சிவகங்கை
சீமை 4/8/2009 11:40:44 PM
டால்ஸ்டாயின்
மௌனபடம் 4/5/2009 7:33:31 AM
எனது
புத்தகங்கள் 4/5/2009 12:02:19 AM
பறத்தலின்
ஆனந்தம் 4/2/2009 12:31:24 AM
ரயிலோடும்
தூரம் Date: 3/31/2009 12:30:08 AM
உதவும்
இணையதளங்கள். Date: 3/28/2009 11:57:43 AM
சேகர்கபூரின்
இந்திய காமிக்ஸ். Date: 3/27/2009 1:56:45 AM
கசப்பு
பழங்கள் . Date: 3/21/2009 12:47:28 PM
ரிச்சர்ட்
பெயின்மென Date: 3/16/2009 5:59:38 AM
பதில்
இல்லாத பரிட்சை. Date: 3/13/2009 7:26:43 AM
உலகசினிமாவில்
ஒவியர்கள். Date: 3/11/2009 5:45:28 AM
ஜெகதி Date: 3/10/2009 9:23:26 AM
பாடு
புஜ்ஜி பாடு. Date: 3/9/2009 2:00:48 AM
மறக்கப்பட்ட
பெண் Date: 3/7/2009 1:40:35 AM
சிரித்தால்
மட்டும் போதுமா ? Date: 3/5/2009 9:56:33 PM
இந்திய
சரித்திரக் களஞ்சியம் Date: 3/3/2009 10:39:42 PM
நகுலனின்
பத்துக் கவிதைகள் Date: 2/25/2009 11:52:10 AM
ஆஸ்கார்
நாயகன் ரஹ்மான். Date: 2/23/2009 11:07:36 PM
கழுமரம் Date: 2/23/2009 11:28:26 AM
கற்கத்தவறிய
பாடம். Date: 2/21/2009 5:20:15 AM
சிற்றுண்டி
சினிமா Date: 2/14/2009 4:57:10 AM
அப்பா
புகைக்கிறார் Date: 2/14/2009 3:41:31 AM
காவல்
கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் - 2. Date: 2/12/2009 10:33:40 AM
காவல்
கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் - 1. Date: 2/12/2009 10:25:18 AM
இரண்டு
ஆஸ்கார் படங்கள் Date: 2/11/2009 2:52:03 AM
தினம் ஒரு
கதை Date: 2/10/2009 10:08:22 AM
இரண்டு
திரைக்கதையாசிரியர்கள். Date: 2/8/2009 11:51:37
AM
கண்ணகியின்
நிழலில் Date: 2/4/2009 1:31:18 PM
வெயில்படல் Date: 1/30/2009 12:31:48 AM
மைக்கேல்
கலாசோ Date: 1/26/2009 8:09:34 AM
அறிவிப்புகள் Date: 1/23/2009 7:53:23 AM
நவீன ஓவியம் Date: 1/19/2009 8:52:13 PM
பாட்டிகளின்
கடவுள் Date: 1/19/2009 1:05:50 AM
காதில்லாத
அரசன் Date: 1/17/2009 12:09:03 AM
பொய்
சொல்லும் பூனை Date: 1/14/2009 11:58:28 PM
புத்தக
கண்காட்சியில் சில மணி நேரம். Date: 1/11/2009
9:03:43 PM
நடந்து
தீராத கால்கள். Date: 1/8/2009 10:32:52 AM
நன்றி Date: 1/6/2009 12:09:23 AM
2008
விருப்ப பட்டியல் Date: 1/2/2009 10:29:38 AM
தாமரை
பூத்த குளம். Date: 12/29/2008 3:37:58 AM
மூன்று
லட்சம் பார்வைகள் Date: 12/29/2008 12:15:09 AM
வலி தரும்
முள். Date: 12/27/2008 1:11:32 AM
தாய்முகம் Date: 12/26/2008 12:01:11 PMகடைசிப்
பெண் Date: 12/24/2008 6:04:33 AM
இளையராஜாவின்
திருவாசகம் கேட்டபோது. Date: 12/23/2008 5:09:46
AM
சினிமாவும்
ஜெயகாந்தனும் Date: 12/23/2008 4:45:09 AM
காட்சிக்
கூண்டு Date: 12/23/2008 4:34:15 AM
கூர்க்காவின்
பகல் Date: 12/14/2008 8:23:56 AM
ஒத்திகை. Date: 12/10/2008 11:40:42 AM
விசித்ரி Date: 12/8/2008 6:56:25 AM
துயர்மிகு
பொழுது Date: 12/7/2008 5:14:25 AM
ஜீ.வி. ஐயர் Date: 12/7/2008 1:56:52 AM
அ.
எக்பர்ட் சச்சிதானந்தம். Date: 12/3/2008
12:40:42 AM
இதாலோ செவோ Date: 12/2/2008 12:34:04 AM
ஷோலே -
அசலா ? நகலா ? Date: 11/30/2008 2:50:29 AM
விர்தியானா Date: 11/28/2008 3:49:55 AM
நான்கு
குறும்படங்கள் Date: 11/23/2008 8:09:02 AM
செர்ஜியோ
லியோனி. Date: 11/21/2008 1:34:48 AM
சிறந்த
இந்தியப்படம் பரிசு Date: 11/20/2008 9:59:46 AM
பள்ளித்தமிழ். Date: 11/18/2008 3:43:36 AM
எழுதத்
தெரிந்த புலி Date: 11/16/2008 1:11:53 AM
துயிலும்
பெண் Date: 11/14/2008 10:50:01 PM
இந்த
வாரம் படித்தவை Date: 11/11/2008 11:40:19 AM
புத்தகம்
செல்லும் திசை Date: 11/7/2008 10:44:41 AM
குறும்படங்கள் Date: 11/2/2008 10:43:04 AM
சினிமா
முத்தம். Date: 11/2/2008 3:39:47 AM
ஷாஜியின்
வலைப்பக்கம். Date: 10/29/2008 9:17:48 AM
ஆந்த்ரே
வாஜ்தா Date: 10/27/2008 11:48:47 AM
நினைவில்
வந்த கவிதை. Date: 10/25/2008 10:20:49 AM
நாகார்ஜுனனின்
வலைப்பக்கம். Date: 10/22/2008 6:25:59 AM
போய்வாருங்கள்
பொருட்களே. Date: 10/21/2008 10:41:32 AM
காற்றில்
யாரோ நடக்கிறார்கள். Date: 10/13/2008 12:47:59
PM
எண்கள்
இல்லாத மொழி Date: 10/9/2008 1:21:00 PM
இரண்டு
புகைப்படங்கள் Date: 10/7/2008 8:45:26 AM
சித்திரப்புலி Date: 10/3/2008 10:02:31 AM
நூரெம்பெர்க்
விசாரணை. Date: 10/2/2008 2:46:04 AM
காந்தியின்
கடிகாரம் Date: 10/1/2008 12:40:44 PM
இரண்டு
லட்சம் பார்வைகள் Date: 9/25/2008 11:35:53 PM
ஒரிடத்தில்
ஒரு பயில்வான் Date: 9/24/2008 1:55:11 AM
RSS feed
செய்தியோடை வசதி Date: 9/23/2008 10:28:47 PM
ஜப்பானில்
ரஜினி. Date: 9/23/2008 1:36:50 PM
நூறு
சிறந்த நாவல்கள். Date: 9/16/2008 2:27:29 PM
நூறு
சிறந்த மொழிபெயர்ப்பு நாவல்கள் Date: 9/16/2008
2:21:41 PM
சிங்கிஸ்
ஐத்மதேவ். Date: 9/15/2008 2:54:24 PM
எழுதாத
கடிதம். Date: 9/15/2008 3:20:02 AM
ஜெயகாந்தனின்
திரைப்படங்கள். Date: 9/12/2008 1:01:16 PM
கப்பல்
ஏறிய ஒட்டகச்சிவிங்கி Date: 9/8/2008 1:53:50
AM
இதிகாசங்களை
வாசிப்பது எப்படி? Date: 9/2/2008 9:17:36 AM
எப்போதாவது
இசைகேட்பவன். Date: 8/31/2008 6:37:52 AM
கதையின்
நாவு Date: 8/29/2008 1:58:49 AM
கின்ஸ்கி Date: 8/25/2008 1:53:56 PM
மகாகவி
பாரதியின் கடிதங்கள் Date: 8/20/2008 7:30:42 AM
நம்பிக்கையின்
மீதேறி நடந்து Date: 8/17/2008 8:30:23 AM
எரியும்
பனிக்காடு Date: 8/13/2008 3:54:20 AM
குஞ்நுண்ணி
கவிதைகள். Date: 8/11/2008 11:28:42 AM
பேச்சின்
வாலைப் பிடித்தபடி.. Date: 8/9/2008 8:03:03 AM
சந்திரபாபு
- தட்டுங்கள் திறக்கப்படும். Date: 8/7/2008
5:11:28 AM
இல்மொழி Date: 8/6/2008 5:31:55 AM
கணிதமேதை
வாழ்ந்த வீடு Date: 8/5/2008 7:40:19 AM
அறிவிப்பு Date: 8/5/2008 5:13:19 AM
சாலை
திறந்து கிடக்கிறது. Date: 7/30/2008 11:40:23 AM
குற்றாலத்து
சிங்கன் சிங்கி. Date: 7/29/2008 3:18:36 AM
ஹென்றி
கார்த்தியே பிரஸான் Date: 7/28/2008 7:25:35 AM
படித்ததும்
பிடித்ததும் 2 Date: 7/24/2008 12:48:37 PM
நூறு
உலகத் திரைப்படங்கள் Date: 7/22/2008 3:00:49 AM
சிற்றுரையும்
பேருரையும். Date: 7/21/2008 11:02:30 AM
பதேர்
பாஞ்சாலி Date: 7/20/2008 3:24:18 AM
நான்கு
அறிமுகங்கள் Date: 7/19/2008 12:16:41 PM
மூன்று
கடிதங்கள் Date: 7/18/2008 8:34:13 AM
சிங்கப்பூரில்
ஐந்து நாட்கள் Date: 7/17/2008 7:25:27 AM
ராஞ்சிபூரின்
மழை Date: 7/10/2008 8:05:53 AM
பால்
காகின் Date: 7/6/2008 11:23:07 AM
சிங்கப்பூர்
எழுத்தாளர்கள் . Date: 7/6/2008 7:15:45 AM
நெடுங்குருதி
- 2 Date: 7/6/2008 6:59:48 AM
நெடுங்குருதி Date: 7/6/2008 6:46:04 AM
ஈழத்தின்
பாடல் Date: 7/5/2008 7:03:27 AM
பி.விஜயலெட்சுமியின்
சிகிட்சை குறிப்புகள் Date: 7/4/2008 9:58:57 AM
திரை
வெளி. Date: 6/30/2008 2:09:39 PM
பல்லி
ஜென்மம் Date: 6/28/2008 7:34:20 AM
கர்ணமோட்சம் Date: 6/28/2008 1:03:56 AM
சிப்பியின்
வயிற்றில் முத்து Date: 6/27/2008 1:50:51 PM
சிகேகே
இலக்கிய விருது. Date: 6/23/2008 6:35:28 AM
டால்ஸ்டாயோடு
நடந்தேன் 2 Date: 6/20/2008 9:57:22 AM
டால்ஸ்டாயோடு
நடந்தேன் 1 Date: 6/20/2008 9:48:43 AM
கவிதையும்
கோவிலும் Date: 6/15/2008 12:46:06 PM
அறிந்த
அவசரம் Date: 6/12/2008 2:50:48 AM
படித்ததும்
பிடித்ததும் 1 Date: 6/10/2008 12:24:43 PM
Read
Singapore -2008 . சிங்கப்பூர் தேர்வு Date: 6/9/2008 12:04:14 PM
ஒரு
லட்சம் பார்வைகள் Date: 6/9/2008 3:20:40 AM
சிறுநுரை. Date: 6/7/2008 10:48:48 AM
பொதுக்குளியல். Date: 6/5/2008 10:07:05 AM
பிழை
திருத்துபவரின் மனைவி Date: 6/2/2008 4:30:25
AM
இசையறியும்
ஒட்டகம். Date: 5/31/2008 2:06:29 AM
இலக்கிய
இணையதளங்கள். Date: 5/30/2008 12:09:04 PM
அக்கால
மதராஸ் Date: 5/30/2008 5:02:18 AM
டி.ஹெச்.
லாரன்ஸின் ஒவியங்கள். Date: 5/29/2008 2:54:08 PM
நூறு
சிறந்த புத்தகங்கள் Date: 5/27/2008 6:26:17 AM
டோனி
மாரிசன் Date: 5/26/2008 12:17:41 PM
ஏழு
கவிதைகள் Date: 5/25/2008 1:56:25 PM
உதறிச்
செல்லும் அடையாளம் Date: 5/25/2008 5:21:00 AM
யாமம்
நாவலுக்கு விருது Date: 5/21/2008 4:39:10 AM
கரைக்க
முடியாத நிழல் Date: 5/20/2008 3:10:56 AM
ஆட்ரி
ஹெபர்னைக் காதலிப்பவர்கள். Date: 5/16/2008
12:42:59 PM
காமத்துக்கு
ஆயிரம் உடைகள் Date: 5/14/2008 11:30:24 PM
காந்தியின்
நினைவில். Date: 5/2/2008 1:55:36 PMசோம்பல்
நாயகன் Date: 4/30/2008 6:11:29 AM
குயிலியேட்டா
மசினா Date: 4/27/2008 9:16:31 AM
மூவர்
கோவில். Date: 4/25/2008 5:59:47 AM
ஹசர்
தினார் Date: 4/22/2008 11:03:04 PM
கீயிங்கே
வனத் திருடன் Date: 4/20/2008 11:16:36 PM
டென்சிங் -
எவரெஸ்டின் தனிமை. Date: 4/15/2008 7:42:34 AM
விரும்பி
கேட்டவை Date: 4/15/2008 4:41:20 AM
வெர்மரின்
தேவதை. Date: 4/9/2008 9:08:52 AM
இணையதளங்கள்
- 3 Date: 4/7/2008 4:27:54 AM
நடையால்
வென்ற உலகம Date: 4/5/2008 8:21:58 AM
நீலக்குடை Date: 4/3/2008 1:36:43 AM
கரப்பான்பூச்சிகள்
காதலிப்பதில்லை. Date: 4/1/2008 8:31:09 AM
தொஷிரோ
மிபுனே Date: 3/28/2008 7:19:43 AM
எறும்பின்
கால்கள் Date: 3/27/2008 6:53:51 AM
திரைக்கு
பின்னால் Date: 3/25/2008 8:59:37 AM
எழுத்தின்
அடையாளம். Date: 3/24/2008 8:11:32 AM
நெட் கெல்லி Date: 3/22/2008 8:19:44 AM
தேவதச்சனின்
கவியுலகம் Date: 3/21/2008 6:49:56 AM
பிரார்த்தனைக்கு
அப்பால். Date: 3/19/2008 7:24:12 AM
ஹாங் இசை. Date: 3/18/2008 11:54:03 PM
ஷேக்ஸ்பியரின்
நிழலில் Date: 3/18/2008 11:52:51 PM
நெடுந்தனிமை
Date: 3/15/2008 3:15:24 AM
இரண்டு
குறுங்கதைகள் Date: 3/14/2008 5:23:19 AM
திரையில்
ஒடிய ரயில் Date: 3/12/2008 11:33:06 PM
ஊரும்
வெயிலும் Date: 3/12/2008 12:17:34 AM
நாயர் சான் Date: 3/11/2008 8:30:15 AM
இலக்கிய
வேதாளம் Date: 3/11/2008 8:28:32 AM
கொலையும்
செய்வான் சாப்ளின் Date: 3/9/2008 3:31:51 AM
கேள்வியரங்கம் Date: 3/9/2008 3:28:13 AM
பழகிய பாரதி Date: 3/9/2008 3:22:59 AM
யுவான்சுவாங்
: சுவடு அழிந்த பாதை. Date: 3/9/2008 3:19:52 AM
சுஜாதாவிற்கான
அஞ்சலி. Date: 3/9/2008 3:16:26 AM
ஜோதா
அக்பர் - விளம்பர உப்புமா Date: 3/9/2008
3:12:36 AM
மறந்து போன
மௌனி Date: 3/8/2008 11:08:58 AM
அலன் ராபே
கிரியே Date: 3/8/2008 10:30:42 AM
அவமானத்தின் முன் மண்டியிடல் Date: 3/8/2008
10:27:30 AM
எழுதுவது
ஏன்? Date: 3/8/2008 10:20:31 AM
தெய்வம்
தந்த வீடு Date: 3/8/2008 9:53:07 AM
நகுலன்
இல்லாத பொழுது. Date: 3/8/2008 7:15:28 AM
துப்பறியும் கதைகளில் உரையாடல்களே நாவலின் போக்கினை
உக்கிரப்படுத்தக் கூடியவை. ஆகவே உரையாடல்களில் ஒவ்வொரு சொற்களும்
முக்கியமானவை.
இந்தியாவின் புகழ்பெற்ற இயற்கையியலாளர் மா.கிருஷ்ணன்
எழுதிய கதிரேசன் செட்டியாரின் காதல் என்ற துப்பறியும் நாவல் 1996ம்
வெளியானது. பதிமூன்று வருசங்களுக்கு மேலாகியும் உரிய கவனமற்றுப்போன அந்த
நாவல் 2009ம் வருசம் புதிய பதிப்பு கண்டிருக்கிறது.
மா. கிருஷ்ணன்
தமிழின் முன்னோடி நாவலாசிரியர் ஆ. மாதவைய்யாவின் மகன். தாவரவியலும்
சட்டமும் படித்துவிட்டு சுண்டூர் சமஸ்தானத்தில் பணியாற்றியிருக்கிறார்.
புகைப்படம் எடுப்பதிலும் ஓவியத்திலும் ஆர்வம் கொண்ட கிருஷ்ணன்
'ஸ்டேட்ஸ்மென்' இதழில் எழுதிய இயற்கையுலகம் பற்றிய கட்டுரைகள் மிக
முக்கியமானவை. கானுயிர் வாழ்க்கை பற்றிய கிருஷ்ணனின் கட்டுரைகள் தியடோர்
பாஸ்கரன் அவர்களால் தொகுக்கப்பட்டு 'மழைக்காலமும் குயிலோசையும்' என்ற
தலைப்பில் தனிநூலாக வெளியாகி உள்ளது.
தனது அப்பாவைப் போல நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணம்
கிருஷ்ணனுக்குள் நீண்ட காலமாக இருந்திருக்கக் கூடும். ஓய்வுபெற்ற தனது
முதிய வயதில் இதை எழுதத் துவங்கியிருக்கிறார். 1995ம் ஆண்டு எழுதத்
துவங்கிய நாவல் 96ம் ஆண்டு முதற்பதிப்பு வெளியாகியிருக்கிறது. நாவலுக்கு
முன்னுரையோ, சிறப்புக் குறிப்புகளோ எதையும் அவர் எழுதவில்லை.
பல வருசங்களுக்கு முன்பாக வடுவூர் துரைச்சாமி
அய்யங்காரின் துப்பறியும் நாவல்களை வாசித்திருக்கிறேன். அதன்
கதைப்போக்கும், துப்பறியும் முறையும் புகழ்பெற்ற பெரிமேசன், ஷெர்லாக்
ஹோம்ஸ் ஆங்கில நாவல்களின் தழுவல் எழுத்து என்பதை முழுமையாக உணர முடிந்தது.
அசலான துப்பறியும் நாவல்கள் தமிழில் குறைவே.
கிருஷ்ணனின் நாவல் செவ்வியல் துப்பறியும் கதை மரபைச்
சேர்ந்தது. நேரடியாக இது கொலையில் துவங்கிவிடுகிறது. கொலையாளி யார், என்ன
காரணம் என்பதை ஆராய்வதன் வழியே கதை வளர்கிறது. இந்த எளிய கதையை
சுவாரஸ்யமாக்குவது கிருஷ்ணனின் நுட்பமான விவரிப்புகள் மற்றும் தன்னைச்
சுற்றிய வாழ்வின் மீதான அவரது ஆழ்ந்த அவதானிப்புகள். கதைக்களமாக அவர்
எடுத்துக் கொண்ட கதிரேசன் செட்டியாரின் வாழ்வு இதன் சரியான உதாரணம்.
ரங்கூன், பினாங்கு என்று வட்டித்தொழில் செய்யச் சென்று பெரும்பொருள் ஈட்டி
திரும்பி, ஊரில் மீதமுள்ள காலத்தைப் போக்க நினைக்கும் செட்டியார்களில்
ஒருவராகவே கதிரேசனும் அறிமுகமாகிறார்.
அன்றாட வாழ்வின் உள்ளே புதையுண்டு போயிருக்கும் கடந்த
காலமும் அதன் மறக்க முடியாத நினைவுகளுமே நாவலை வளப்படுத்துகின்றன.
எதிர்பாராத திருப்பங்களை உண்டாக்கும் லாவகமும், கதாபாத்திரங்களின்
அகஉளைச்சல்களைத் துல்லியமாக சித்தரிப்பதிலும் இந்நாவல் வெகு தனித்துவமானதாக
உள்ளது.
கதிரேசன் செட்டியார் பல ஆண்டு காலம் கல்கத்தா,
சிங்கப்பூர் என்று தொழில் காரணமாக வாழ்ந்தவர். தனது ஓய்வுக் காலத்தைச்
சொந்த ஊரில் கழிக்கலாம் என்று நினைத்து சின்னமடை என்ற கிரா மத்தில் ஒரு
தென்னந்தோப்பை விலைக்கு வாங்கிக் கொண்டு தனியாக வாழ்ந்து வருகிறார். அவரது
மனைவி வள்ளியம்மை சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து
போய்விடுகிறார். அந்த மனச்சோர்வும் தனிமையுமாக எதிலும் பிடிப்பற்றுத்
தனித்து வாழ்ந்து வருகிறார்.
அவரது வீட்டில்
சண்முகம் என்ற வேலைக்காரன் பல வருசமாக கூடவே இருக்கிறான். சமையல் வேலைக்கு
முத்து என்ற சமையற்காரனும் அவனுக்கு உதவி செய்ய கண்ணம்மா என்ற
பணிப்பெண்ணும் இருக்கிறாள். கார் ஓட்டுவதற்காக தங்கவேலு என்ற டிரைவர்
அவ்வப்போது வந்து போகிறான்.
கதை துவங்கும் போது ஒரு நள்ளிரவில் கதிரேசன் செட்டியார்
தூக்கமற்றுப் போய் படுக்கையில் தத்தளிக்கிறார். அவரது வளர்ப்பு நாயைக் கூட
காணவில்லையே என்று தேடுகிறார். நாயும் பணியாளரும் எங்கே போனார்கள் என்று
தெரியாத குழப்பம் ஏற்படுகிறது . எங்கே தேடுவது என்று புரியாமல் படுக்கையில்
உழன்றபடியே மீண்டும் உறங்கிவிடுகிறார்.
விடிகாலை தனது அவுட் ஹவுசில் வேலையாள் சண்முகம் கொலை
செய்யப்பட்டிருப்பதையும் அவரது வளர்ப்பு நாயும் கூட
கொல்லப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைகிறார். இந்தக் கொலையே நாவலின்
மையப்புள்ளி. இந்தக் கொலையை விசாரிப்பதற்காக துரைசாமி என்ற காவல்துறை
அதிகாரி வீடு தேடி வருகிறார். அவருடன் முகைதீன், பெருமாள்சாமி என்ற இரண்டு
அனுபவம் மிக்க போலீஸ்காரர்கள் உடன்வருகிறார்கள்.
அவர்கள் தடயங்களைப் பதிவு செய்கிறார்கள். யார் இந்தக்
கொலை செய்தது, ஏன் கொலை நடைபெற்றது என்பதை விசாரிக்கத் துவங்குகிறார்கள்.
கதை ஒவ்வொரு முடிச்சாக மர்மத்தை வளர்க்கிறது. பின்பு அந்த மர்மத்தை
சுவாரஸ்யமாக அவிழ்க்கிறது.
வீட்டு வேலைக்காரர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்.
ஒவ்வொருவர் மீதுமாக சந்தேகம் உருவாவதும், அவர்கள் இந்தக் கொலையைச்
செய்திருக்கக் கூடும் என்றும் கதை வளர்கிறது. மரபான துப்பறியும் நாவல்கள்
போன்று எதிர்பாராத தடயங்கள் வழியே மர்மம் அவிழத் துவங்குகிறது. 27
அத்தியாயங்கள். இருநூற்றுஇருபத்தியேழு பக்கங்களாக விரியும் நாவல் கடைசிவரை
தீர்க்கப்படாத மர்மமும் சுவாரஸ்யத்தையும் கொண்டிருப்பது வாசிப்பில் பெரும்
மகிழ்ச்சியை உருவாக்குகிறது.
துப்பறியும் நாவல்கள் பொதுவாக அதன் விசித்திரமான
பின்புலத்தால்தான் வசீகரமாகின்றன. இந்த நாவலில் சர்க்கஸ் மற்றும் அதில்
வேலை செய்தவர்கள் சர்க்கஸ் மூடப்பட்ட பிறகு என்னவாகிறார்கள் என்ற பின்புலம்
அழகாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அது போலவே கதை நிகழும் செட்டியாரின்
வீடும் அங்குள்ள கதாபாத்திரங்களின் ரகசியமான மனநிலைகளும் துப்பறியும் கதையை
வேகமூட்டுகின்றன.
இந்தக் கதையின் நாயகனான கதிரேசன் செட்டியார்
சிங்கப்பூரில் வசித்தவர். மனைவியை இழந்தவர். பணக்காரர். அவரது கடந்தகாலம்
சற்றே மர்மாக உள்ளது. ஆகவே இந்தக் கொலைக்கும் அவரது வாழ்க்கைக்கும் உள்ள
ரகசிய தொடர்பு கதையை முன்நகர்த்துகிறது. கதையின் தனிச்சிறப்பு, கதிரேசன்
செட்டியாரிடம் வேலை செய்பவர்களின் அகஉலகம். சண்முகம், முத்து, கண்ணம்மா,
தங்கவேலு என்று ஒவ்வொருவரும் முழுமையாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் மற்றவர் அறியாமல் தங்களுக்குள் ஒரு ரகசியத்தை மறைத்துக்
கொண்டிருக்கிறார்கள். அது வெளிப்பட்டு விடுமோ என்ற தயக்கமும் பயமும்
அவர்களிடம் உள்ளது.
அது போலவே கொலையை விசாரணை செய்யும் போலீஸ்காரர்களான
பெருமாள்சாமியும் துரைசாமியும் எளிய விஷயங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக
மர்மத்தை அவிழ்க்கத் துவங்குகிறார்கள். குறிப்பாக கோவில் நகை திருட்டில்
பிடிபடும் திருடனுக்கும் இக்கொலைக்குமான தொடர்பும், திருட்டு நகைகளை
விற்றுவாங்குவதில் உள்ள ஏமாற்றுத்தனங்களும் அவர் களை போலீஸ் விசாரிக்கும்
முறையும் மிக அற்புதமாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
கொலை செய்யப்பட்ட கத்தியும் அது அங்கே எப்படி வந்தது
என்பதைப் பற்றிய புதிரை அவர் விவரிக்கும்போது மிக உயர்வான துப்பறியும்
கதையை வாசிக்கும் சந்தோஷம் பெருக்கிடுகிறது.
மா.கிருஷ்ணன் நிறைய துப்பறியும் நாவல்களை வாசிக்கும்
பழக்கம் கொண்டிருக்கக்கூடும். இவரது கதை சொல்லும் முறை சார்ல்ஸ்
டிக்கென்ஸின் விவரணைகளும் எட்கர் ஆலன்போவின் இருண்மையும் கொண்டதைப் போல
உருக்கொண்டிருக்கிறது.
கதையில் இடம் பெறும் நாய் கோம்பை என்பதில் துவங்கி அதை
எப்படி பழக்குகிறார்கள், அதன் இயல்பு என்ன? அதற்கு என்ன விஷம்
கொடுக்கப்பட்டது என்பதையும் சித்த வைத்தியர் ஒருவரின் வழியே மூலிகைகள்,
அதன் செயல்பாடுகளை விவரிக்கையிலும் கிருஷ்ணன் தான் ஒரு இயற்கையியலாளர்
என்பதை நிரூபணம் செய்கிறார்.
துப்பறியும்
கதைகளில் உரையாடல்களே நாவலின் போக்கினை உக்கிரப்படுத்தக்கூடியவை. ஆகவே
உரையாடல்களில் ஒவ்வொரு சொற்களும் முக்கியமானவை. அதை கிருஷ்ணன் நன்றாக
உணர்ந்திருக்கிறார். போலீஸ்காரர்களின் விசாரணையும், வீட்டு
வேலைக்காரர்களின் இயல்பான உரையாடல்களும் கச்சிதமாக
உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதிலிருந்து நாவலின் மர்மங்கள் அவிழத்
துவங்குகின்றன.
ஒரு கொலையை விசாரிப்பது என்பது காலத்தினுள் மறுபிரவேசம்
செய்வது போன்றது. பொதுவாக கொலைக்கு வெளிப்படையாக அறியப்படாத காரணம் ஒன்று
எப்போதுமேயிருக்கிறது. அதையே நாவலின் முடிவில் வாசகன் அறிந்து கொள்கிறான்.
அந்த உண்மையை நோக்கி அவனை அழைத்துச் செல்வதே துப்பறியும் கதைகளின் முக்கிய
செயல்பாடு. இந்நாவலிலும் அந்த உண்மை வாசகனை வியப்பூட்டுகிறது.
தஸ்தாயெவ்ஸ்கியின் முக்கிய நாவல்களில் கொலை எப்போதுமே
ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. அதை அவர் உளவியல் நெருக்கடியின் உச்சநிலை
என்று குறிப்பிடுகிறார். கரமசோவ் சகோதரர்கள் கதையில் வரும் கொலை இதற்கு
ஒரு எடுத்துக்காட்டு. அது அகவிசாரணையின் துவக்கப் புள்ளியாக இருக்கிறது.
கொலை ஒரு குற்றம் என்பதிலிருந்து நழுவி கொலையின் முன்னால் வாழ்க்கை
எவ்விதமாக அர்த்தம் கொள்ளப்படுகிறது. மனிதர்களின் ரகசியங்கள் அவர்கள்
மரணத்தோடு முடிந்துவிடக்கூடியதில்லை என்றே தஸ்தாயெவ்ஸ்கி குறிப்பிடுகிறார்.
அங்கே கொலையாளி என்பவன் ஆழ்ந்த மனச்சிக்கல் கொண்டவன்.
கைவிடப்பட்டவன். கொலையே அவனை நியாயப்படுத்துகிறது. ஆனால் பொதுவான க்ரைம்
நாவல்களில் கொலை பொருளாதார ஆதாயங்களுக்காகவோ, பெண்மோகத்தினாலோ,
கூலிப்பணத்திற்காகவோ நடை பெறுகிறது. அங்கே கொலையாளியின் மன எழுச்சியும்
தவிப்பும் முக்கியம் கொள்வதேயில்லை. தேர்ந்த துப்பறியும் நாவல்களில்
கொலையாளியின் மனநிலை மிக நுட்பமாக விவரிக்கப்படுகின்றன. ஹிட்ச்காக்கின்
திரைப்படங்கள் இதற்கு சரியான உதாரணங்கள்.
பின்நவீனத்துவ கதை எழுத்தின் நாயகராகக் கொண்டாப்படும்
போர்ஹே துப்பறியும் கதைகளை மிக முக்கிய கதை வடிவமாகக் கருதுகிறார். அவர்
புனைபெயரில் பிஜாய் கசாரஸ் என்ற நண்பருடன் இணைந்து துப்பறியும் நாவல்களை
எழுதியிருக்கிறார். போர்ஹேயின் துப்பறியும் நாவல்கள் மரபான துப்பறியும்
எழுத்திலிருந்து பெரிதும் மாறுபட்டவை. அவர் கொலையை ஒரு துவக்கப்புள்ளியாகக்
கொண்டு அதிலிருந்து பல்வேறு சாத்தியங்களை விவரிக்கிறார்.
துப்பறியும் நாவல்களை வாசிப்பது இலக்கிய விரோதமான
காரியம் என்பது போன்ற புனிதத்தன்மை எப்போதுமே தமிழ் சிறுபத்திரிகை சூழலில்
இருந்து வருகிறது. ஆனால் வெகுஜனவாசிப்பில் துப்பறியும் நாவல்களே அதிக வாசக
வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. சில வருசங்களுக்கு முன்பு மாதம் நூறு க்ரைம்
நாவல்களுக்கும் மேலாக வெளியாகிக் குவிந்தன. அதில் பெரும்பான்மை வணிகத்
தந்திரங்களால் மிக மேலோட்டமாக எழுதிக் குவிக்கப்பட்டவை.
கொலைக் குற்றத்தை அறிந்து கொள்வதில் மக்களுக்கு
இயல்பாகவே ஆர்வமிருந்து வருகிறது. குறிப்பாக கொலையின் பின்புலத்தைப் பற்றிய
சந்தேகங்களை அவர்களாக கற்பனை செய்துகொண்டு அரட்டை அடிப்பதைத் தங்களின்
விருப்பமான பொழுதுபோக்காகக் கொண்டிருக்கிறார்கள். ஐம்பது வருசங்களுக்கு
முன்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற முக்கியமான கொலைச் சம்பவங்கள்
கொலைசிந்துகளாக மாறி, பொது இடங்களில் டேப் அடித்துப் பாடப்பட்டுள்ளன.
புகழ்பெற்ற கொலைவழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணை
நடைபெற்ற நாட்களில் தினசரி கோர்ட்டில் என்ன நடந்தது என்பதைப் பற்றி மாலை
நாளிதழ்களில் சிறப்புப் பகுதிகள் இடம் பெற்றுள்ளன. கொலையாளி யார் என்ற
உண்மை தெரிய வந்தபோது அந்தச் செய்தி நகரையே பர பரப்பாக்கியிருக்கிறது.
இப்படியான கொலை மர்மங்கள் காலம் காலமாகத் தமிழ் கலாச்சாரத்தின் பொது
ருசியாக இருந்து வந்திருக்கிறது.
இதன் ஒரு பகுதியாகவே தமிழ் நாவலின் துவக்க காலத்தில்
ஆங்கிலத் துப்பறியும் நாவல்களைத் தழுவி எழுதுவதும், அதே பாணியில் உள்ளுர்
கொலை வழக்குகள் பற்றிய துப்பறியும் கதைகளை எழுதுவதும் பரபரப்பாக
நடந்தேறியிருக்கிறது. இன்று வாசிக்கையில் அந்த நாவல்களில் விரல்விட்டு
எண்ணக்கூடியவை தவிர, மற்ற யாவும் துப்பறியும் கதைகளின் அடிப்படைகள் கூட
அறியாமல் எழுதப்பட்ட மலினமான எழுத்துக்கள் என்றே படுகிறது.
தீவிரமாக இயங்கிய தமிழ் இலக்கிய வாதிகள் பலருக்கும்
துப்பறியும் நாவல் வாசிப்பதில் மிகுந்த ஆர்வமிருந்திருக்கிறது.
புதுமைப்பித்தன், கு.ப.ரா. போன்றவர்கள் இதை வெளிப்படையாகத்
தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் எவரும் தனியாகத் துப்பறியும் நாவல்கள் எழுத
முற்படவில்லை. புதுமைப்பித்தன் துப்பறிவதைப் பகடி செய்து சிறுகதைகள்
எழுதியிருக்கிறார்.
தமிழ் பொதுவாசக தளத்தில் துப்பறியும் கதைகள் மீதான
ஈர்ப்பை உருவாக்கியதில் சுஜாதாவே முக்கியமானவர். இவர் அதுவரை தமிழ் சூழலில்
பின்பற்றப்பட்டு வந்த பிரிட்டிஷ் துப்பறியும் கதைபாணியிலிருந்து விலகி
அமெரிக்கத் துப்பறியும் கதைகளின் பாணியில் தனது கதைகளை எழுதத் துவங்கினார்.
அதன்வெற்றி இருபது வருசங்களுக்கும் மேலாகத் துப்பறியும் கதைகளுக்கான தனி
வாசக வட்டத்தை தமிழில் உருவாக்கியது.
நாவல் வரலாற்றில்
துப்பறியும் நாவல்களுக்கு என்று தனியிடம் இருக்கிறது. இவை வெறும் மலினமான
உணர்ச்சி தூண்டல்களுக்காக எழுதப்பட்டவையல்ல. மாறாக, ஆழமான உளவியல்
சிக்கல்களை, இருண்ட மனநிலையை விவரிக்கக் கூடியவை. துப்பறியும் நாவல்
வாசிப்பின் சுவாரஸ்யம் கொலையாளியாவதற்கான சாத்தியமும் சந்தேகமும் கொலைச்
சூழலில் இருந்த பலருக்கும் பொருந்தக்கூடியதாக இருப்பதே. நம்மில் ஒரு
கொலையாளி இருக்கிறான் என்பதையே துப்பறியும் நாவல்கள் வெளிப்படுத்துகின்றன.
கொலையை முன்வைத்து சுவாரஸ்யமாகக் கதை சொல்லும் முறை
பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பே புகழ்பெறத் துவங்கியது. அதன் முன்புவரை
கொலை என்பது ஒரு தீவினை. அது குறித்துப் பொது தளங்களில் பேசுவதோ, எழுதுவதோ
பாவத்திற்கு உரியது. மனதைத் தீவினை நோக்கிக் கொண்டு செல்லக்கூடியது என்றே
நினைத்தார்கள். மத அமைப்புகள் கொலைச் செய்திகளைப் பாவத்தின் தண்டனை என்று
பிரசங்கம் செய்தன. அரசும் அதிகாரமும் கொலையை நியாயப்படுத்துவதைக்
கண்காணித்ததோடு மீறுபவர்களைத் தண்டிக்கவும் செய்தன.
இந்தச் சூழலில் பதினெட்டாம் நூற்றாண்டில் நாவல் எனும்
நீள்கதைவடிவம் புகழ்பெறத் துவங்கியபோது அது உயர்மட்ட வாழ்வையும் அதன்
அழகியலையுமே பிரதானமாக வெளிப்படுத்தியது. அதற்கு மாற்றாக அடித்தட்டு
மக்களின் உலகையும் இருண்ட உலகமாகக் கருதப்பட்ட வேசைகள், குற்றவாளிகள், கொலை
போன்ற விலக்கப்பட்ட தளங்களையும் முன்வைத்து நாவல்கள் உருவாகத் துவங்கின.
அதிலிருந்தே நாவல் அதிக வாசகர்களின் விருப்பத்திற்குரிய இலக்கிய வடிவமாக
உருமாறியது.
பிரிட்டனின் காவல்துறையில் பிரபுக்களும் உயர்குடியைச்
சேர்ந்தவர்களும் மட்டுமே காலம் காலமாக அனுமதிக்கப்பட்டார்கள். அந்த நிலை
மாறி பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அடித்தட்டு மக்களில்
உடல்உறுதியும் தகுதியும் கொண்டவர்கள் பாதுகாப்புப் பணிக்குச் சேர்த்து
கொள்ளப்பட்டார்கள்.
அடித்தட்டு மக்களின் வருகையால் காவல்துறை அதன் பெருமையை
இழந்து விட்டது, அவர்களால் அறிவார்த்தமாகச் செயல்பட முடியாது என்று
பிரித்தானிய பிரபுக்கள் நினைத்தார்கள். அந்த மனப்பாங்கினால் உருவாக்கப்பட்ட
கதாபாத்திரமே துப்பறியும் நிபுணர்.
போலீஸால் கண்டுபிடிக்கப்பட முடியாத குற்றங்களைத்
தனிநபராக ஒருவர் கண்டுபிடிப்பார். அவர் அறிவாளி. அதிகம் பேசாதவர்.
உயர்குடியைச் சேர்ந்தவர். வக்கீலாகவோ அல்லது காவல்துறையில் இருந்து விலகிய
ஒருவராகவோ இருப்பார் என்று துப்பறிவாளர் பிம்பம் உருவாக்கப்பட்டது.
அவர் குற்றத்தைக் காவல்துறையின் சட்டதிட்டங்களை மீறி
தானாக உருவாக்கிய முறைகளைக் கொண்டு புத்திசாலித்தனமாகக் கையாண்டு உண்மையை
அறிவார். அவரை யாரோ பணம் கொடுத்து இந்த வேலையை செய்ய வைப்பார்கள். அவரைக்
கண்டு காவல்துறையே பயப்படும் என்ற உயர்குடி தந்திரத்தில் உருவான
துப்பறிவாளர் பிம்பம் பின்னாளில் உலகம் முழுவதும் புகழ்பெற்ற கதாபாத்திரமாக
வளர்ந்து பெருகியது.
உலகம் முழுவதுமே
பரபரப்பான துப்பறியும் நாவல்களும் இலக்கிய நாவல்களும் எதிரெதிர்
திசைகளில்தான் பயணம் செய்கின்றன. நான் துப்பறியும் கதைகளை நிறைய
வாசித்திருக்கிறேன். எனக்கு விருப்பமான துப்பறியும் எழுத்தாளர்
ஷேக்ஸ்பியர். இவரது ஹாம்லெட், மெக்பெத், ஒத்தலோ போன்ற நாடகங்கள்
துப்பறியும் கதைகளின் உயர்வான செவ்வியல் வடிவங்களே.
எனக்கு மிகவும் விருப்பமான துப்பறியும் கதைகளில் ஒன்று,
ஆயிரத்தோரு அற்புத இரவுகளில் இடம் பெற்றுள்ளது. இதுதான் துப்பறியும்
கதைகளின் முன்னோடி என்றும் கூட குறிப்பிடப்படுகிறது. சாவின் முன்னால்
அமர்ந்தபடியே தினம் ஒரு கதை சொல்லும் ஷெகர்ஷாத் ஒரு நாள் இக்கதையைச்
சொல்கிறார். அக் கதையின் பெயர் மூன்று ஆப்பிள்கள்.
கதையில் மீனவன் ஒருவன் தன் வலையில் மாட்டிக் கொண்ட ஒரு
பெட்டகத்தைக் கரைக்குக் கொண்டு வருகிறான். அதைத் திறக்கமுடியவில்லை. அதை
கலீபா ஹரூன்ரஷீத்திடம் ஒப்படைக்கிறான். அவர் அந்தப் பெட்டகத்தைத் திறந்த
போது அதன் உள்ளே ஒரு இளம்பெண்ணின் உடல் மூன்று துண்டுகளாக வெட்டி
வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். யார் அந்தப் பெண்? யார்
அவளைக் கொலை செய்தது என்பதை மூன்று நாட்களுக்குள் கண்டுபிடிக்கும் படியாக
தனது மந்திரி ஜபாரிடம் ஒப்படைக்கிறார்.
ஜபாரும் தனக்குத் தெரிந்த அத்தனை தந்திரங்களையும்
பயன்படுத்தி விசாரிக்கிறார். கொலையாளியை அறிந்துகொள்ள முடியவில்லை.
இதற்காகத் தன்னை கலிபா தண்டிக்கக்கூடும் என்று பயப்படுகிறார். இந்த சூழலில்
கலீபாவைத் தேடி ஒரு முதியவரும் ஒரு இளைஞனும் வருகிறார்கள்.
இருவருமே தாங்களே அந்தப் பெண்ணைக் கொன்றவர்கள்
என்கிறார்கள். முதியவர் அந்தப் பெண் தனது மகள் என்றும் அவளைத் தானே கொலை
செய்ததாகக் குறிப்பிடுகிறார். ஆனால் இளைஞனோ, கொலை செய்யப்பட்டவள் தனது
மனைவி என்றும் அவள் மீதான சந்தேகத்தில் தானே அவளைக் கொலை
செய்துவிட்டதாகவும் சொல்கிறான். எப்படி வெட்டிக் கொன்றேன், அவள் உடலின்
அங்க அடையாளங்கள் என்று விரிவாகச் சொல்கிறான். இதைக் கேட்ட முதியவர்
தன்னைக் காப்பாற்ற வேண்டி குற்றத்தை அவன் ஒத்துக் கொள்வதாகச் சொல்கிறார்.
இரண்டில் எது உண்மை என்று கலீபாவால் அறிந்துகொள்ள
முடியவில்லை. அவர் இளைஞனிடம் ஏன் மனைவியைக் கொன்றாய் என்று விசாரிக்கிறார்.
தனது மனைவி ஒரு நாள் அரிய வகை ஆப்பிள் வேண்டும் என்று தன்னிடம்
கேட்டதாகவும் அவளுக்காகத் தான் ஆப்பிளைத் தேடி அருகாமை நகருக்குப் பயணம்
செய்து அங்கே கலீபாவின் தோட்டத்திலிருந்து மூன்று ஆப்பிள்களை வாங்கி
வந்ததாகவும், அவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கி வந்த ஆப்பிள்களைத் தன் மனைவி
சாப்பிடவேயில்லை.
மாறாக, அதே ஆப்பிள்களைத் தனது வீட்டில் இருந்த அடிமை
ரகசியமாகக் கொண்டு போவதைக் கண்டதாகவும் அன்றிலிருந்து தன் மனைவியின் நடத்தை
மீது சந்தேகம் வந்து அவளைக் கண்காணித்தபோது அவள் ஒழுக்கம் கெட்டவள் என்று
நம்பி அவளைக் கொலை செய்துவிட்டதாகச் சொல்கிறான்.
ஜபார் அந்த அடிமைக்கும் இளைஞனின் மனைவிக்கும் தொடர்பு
இருந்ததா என்று நேரடியாக விசாரிக்கிறார். அப்போது இன்னொரு உண்மை
புலப்படுகிறது. அந்த ஆப்பிளைத் திருடியது வேறு ஒருவன். அவனிடமிருந்து
மிரட்டி அதை அடிமை பெற்றிருக்கிறான் என்று தெரியவருகிறது. ஆனால் அந்த அடிமை
இப்போது எங்கேயிருக்கிறான் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
முடிவில் ஜபார் சோர்ந்துபோய் வீடு திரும்புகிறார். அங்கே
அரிய வகை மூன்று ஆப்பிள்கள் இருப்பதைக் காண்கிறார். அவை எப்படிக் கிடைத்தன
என்று தன் மகனிடம் விசாரித்தபோது அதை தங்கள் வேலைக்கார அடிமை
கொண்டுவந்ததாகச் சொல்கிறான்.
அப்படியானால்
அந்தப் பெண்ணின் கொலைக்குக் காரணமாக இருந்தவன் தனது வேலைக்கார அடிமையே
என்று கண்டுபிடிக்கிறார். அவனைக் கைது செய்து விசாரித்த போது உண்மை
தெரியவருகிறது. அந்தக் கொலைக்குக் காரணமாக இருந்ததாக அடிமை
தண்டிக்கப்படுகிறான்.
இந்தக் கதையில் யாரும் துப்பறிந்து கொலையாளியைக்
கண்டுபிடிக்கவில்லை. ஆனால் கொலையின் மர்மம் எதிர்பாராத வகையில்
அவிழ்க்கப்படுகிறது. கதாபாத்திரங்கள் தங்கள் செயலிற்கான தகுந்த காரணம்
ஒன்றைச் சொல்கிறார்கள். அது நியாயப்படுத்தப்படுகிறது.
இது போன்றே காதலும் ரகசியமும் ஒன்றுசேர்ந்த கதை சொல்லும்
முறையே கிருஷ்ணன் நாவலிலும் காணப்படுகிறது. ஒரு பெண்ணின் மீதான காதல் அவள்
பொருட்டு ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டும் என்பதை கிருஷ்ணன் அழுத்தமாக
வெளிப்படுத்தியிருக்கிறார்.
பொதுவாக, தமிழின் பொழுதுபோக்கு நாவல்களின் கதை சொல்லும்
முறை மற்றும் அது தரும் வாசிப்பனுபவம் பற்றி ஆழ்ந்த விமர்சனக் கட்டுரைகள்
அதிகம் எழுதப்படவில்லை.
அமைப்பியல் முறை விமர்சனத்துறையை உருவாக்கிய ரஷ்ய
மொழியியல் அறிஞர்கள் துப்பறியும் கதைகளின் வழியே தான் கதை சொல்லும்
முறைகளையும் அதன் வாசிப்பு நுட்பங்களையும் அடையாளப்படுத்தினார்கள்.
விமர்சகர் டெரிதா எட்கர் ஆலன் போவின் மறைக்கப்பட்ட கடிதம் கதையை மாறுபட்ட
வாசிப்பிற்கு உள்ளாக்கி அதன்வழியே தனது விமர்சனக் கோட்பாட்டினை
நிறுவியிருக்கிறார்.
கிருஷ்ணன் நாவல் விரிவாக விவாதிக்கப்படவும், ஆழ்ந்து
ரசிக்கப்படவும் வேண்டிய ஒன்றாகும். அதன் வரிகள் துப்பறியும்
திரைப்படங்களைக் காண்பது போல கண்முன்னே காட்சிகளாக விரிகின்றன. மதுரையும்
அதன் சுற்றுப்புறங்களும், எளிய கதாபாத்திரங்களும் அவர்களின் ரகசிய
செயல்பாடுகளும் நம்மை நாவலோடு அதிகம் நெருக்கம் கொள்ளச் செய்கின்றன.
தமிழில் எழுதப்பட்ட அசலான ஒரு துப்பறியும் நாவலை வாசித்த
திருப்தி இந்த நாவலில் பூரணமாகக் கிடைக்கிறது. தரமான பதிப்பில், அழகான
வடிவமைப்பில், அவரே வரைந்த சித்திரங்களுடன் வெளியாகி உள்ள கதிரேசன்
செட்டியாரின் காதல் நாவல் தேடி வாசிக்க வேண்டிய முக்கிய படைப்பாகும்.
‘கொலை என்பது ஒரு ஊடகம். அதன் வழியே மனித உறவுகள்
முன்அறியாதபடி உருமாற்றம் கொள்கின்றன, திகைக்க வைக்கின்றன’ என்கிறார்
ரேமண்ட் சிண்ட்லர். கிருஷ்ணனின் நாவல் தரும் அனுபவமும் இதுவே.
*
ஓவியங்கள் : அனந்தபத்மநாபன்
புதுமைப்பித்தனின் நாரத ராமாயணம் மொத்தம் 46 பக்கங்களே
கொண்டது. இந்நூல் வெளியாகி அறுபது வருசங்களுக்கும் மேலாகிறது.
புதுமைப்பித்தனின் சிறுகதைகள், இலக்கிய கட்டுரைகள் கொண்டாடப்பட்ட அளவில்
நாரத ராமாயணம் பெரிதாகக் கொண்டாடப்படவில்லை. அப்படி ஒரு புத்தகம்
எழுதியிருக்கிறார் என்று கூட பலரும் அறிந்திருக்கவில்லை. புதுமைப்பித்தனின்
பகடி எழுத்தின் உன்னதம் இதுவே என்பேன்.
இது வெறுமனே ராமாயணத்தைக்கேலி செய்யும் ஒரு
புனைவுமட்டுமில்லை. மாறாக- ராமாயணத்தை முன்வைத்து புதுமைப்பித்தன் இந்திய
அரசியலை, சமகால தமிழக அரசியலை விமர்சனம் செய்கிறார். நமது கலாச்சாரத்தில்
இதிகாசங்கள் உருவாக்கி வைத்துள்ள புனிதபிம்பங்களை உடைத்து எறிகிறார். அதே
நேரம், புனைவின் வழியாக ஒரு கதை எப்படி உருமாற்றம் கொள்கிறது என்பதற்கும்
நாரத ராமாயணம் சாட்சி போலிருக்கிறது.
ராமாயண
பாவைக்கூத்து நிகழ்ச்சிகளை என் பால்யவயதில் பலமுறை பார்த்திருக்கிறேன்.
பத்துநாட்கள் ஊரிலே தங்கி பாவைக் கூத்து நிகழ்த்துவார்கள்.
பொம்மலாட்டத்தில் ஒருவகையிது. தோலில் சித்திரங்கள் எழுதி அதை விளக்கு
வெளிச்சத்தில் காட்டி நிழல் உருவங்களாகத் திரையில் தோன்றும்.
பாவைக்கூத்தின் பிரதான கதை ராமாயணமே. ராமாயணக் கதையைப் புத்தகவடிவில்
படித்தவர்கள் பத்து சதவீதம் கூட இருக்கமாட்டார்கள். பெரும்பாலும் வாய்
மொழியாகச் சொல்லிக் கேட்டது. நிகழ்த்து கலைகளாக நடத்தும்போது பார்த்து
அறிந்தது போன்றே இதிகாசம் எளிய மனிதனைச் சென்று சேர்ந்திருக்கிறது.
முன்னூறுக்கும் மேற்பட்ட ராமாயண வடிவங்கள் இருப்பதாக
ஏ.ஜே.ராமானுஜம் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். வாசித்து அறிந்த
ராமாயணப் பிரதியிலிருந்து பாவைக்கூத்தின் ராமாயணம் முற்றிலும் மாறுபட்டது.
இது எளிய மக்களுக்கான கதைவடிவமாக உருமாறியிருக்கிறது. இங்கே ராமனின்
தெய்வாம்சம் பெரிதாக முன் வைக்கப்படுவதில்லை. மாறாக, ராமனும் சாதாரண மனிதனே
என்பதையே முதன்மைப்படுத்துகிறது.
பாவைக்கூத்தில் ராமன் ஒரு பக்கம் புனிதப்படுத்தப்படுவது
போலவே மறுபக்கம் மிகவும் கேலி செய்யப்படுகிறான். பொதுவாக, நாட்டார்கலை
வடிங்கள் யாவும் புனிதங்களைக் கேலி செய்கின்றன. அதன் ஒரு பகுதியாகவே
இதையும் பார்க்கிறேன்.
பாவைக்கூத்தில் சீதையுடன் ராமன் பஞ்சவடிக்குச்
செல்கிறான். அங்கே அவர்கள் பரண் அமைத்து வசிக்கிறார்கள். காட்டில் ராமன்
தனியே அலைந்து திரிகிறான். அப்போது உச்சிக்குடுமி, ஊழை மூக்கன் என்ற இரண்டு
வேடிக்கை கதாபாத்திரங்களைச் சந்திக்கிறான். அவர்கள் ராமன் வரும்வழியில்
காலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். ராமன் தனக்கு வழிவிட
வேண்டும் என்று கேட்டும் அவர்கள் வழியை விடுவதில்லை. முடிந்தால் என் காலைத்
தாண்டிப் பார் என்று சவால்விடுவார்கள். ராமன் எதற்கு வீண்சண்டை என்றதும்
’ஏ ராமா.. உன் உடம்பைப் பாரு. ஒரே வெண்ணை, ஒரே கொழுப்பு. நீ பயந்துபோய் ஊரை
விட்டு வந்தவன்’ என்று கேலி செய்வார்கள்.
ராமன் அவர்களோடு சண்டை போடுவதில்லை. மாறாக, சிரிப்பான்.
அவர்கள் வம்புச்சண்டைக்கு இழுக்க முற்சிப்பார்கள். அந்தக் காட்சியில் ராமன்
மீதான அத்தனை புனிதங்களும் விமர்சிக்கப்படும்.
அதேபோலவே சூர்ப்பனகையின் மூக்கை லட்சுமணன் அறுத்த போது
காட்டிற்குள் நுழைந்த இரண்டு போலீஸ்காரர்கள் சூர்ப்பனகையை விசாரணை
செய்கிறார்கள். அவள் ராவணன் தங்கை என்றதும் ’பெரிய இடத்து விவகாரம்
எப்.ஐ.ஆரை மாத்திப்போடு’ என்பார்கள். உடனே லட்சுமணன் தான் ராமனின் தம்பி
என்றதும் ’இது அதை விடப் பெரிய இடம். கேஸே பதியாதே’ என்று போலீஸ்காரர்கள்
தடுமாறுவார்கள். முடிவாக ஒரு போலீஸ்காரன் சூர்ப்பனகையிடம் ’கோர்ட் கேஸ்னு
அலைஞ்சா பத்து வருசமாகிடும். நீ உன் அண்ணனிடம் போய் நியாயம் கேள்’ என்று
அனுப்பிவிடுகிறான். இப்படி நாட்டார்கதை மரபான காவியக்கதை சொல்லும் முறையைக்
குறுக்கீடு செய்து உடைப்பதுடன் புதிய கதை சொல்லும் முறை ஒன்றை அதற்கு
மாற்றாகப் பொருத்துகின்றன.
சமகாலம் செவ்வியல்
பிரதியின் உள்ளே எப்படி நுழைகிறது என்பதற்கு நாட்டார் கதை மரபில் நிறைய
சாட்சிகள் உள்ளன. பக்த பிரகலா தன் நாடகத்தில் லீலாவதிக்குப் பிரவசம்
பார்க்க வந்த தாதி தான் இப்போதுதான் சதாம் உசேன் மனைவிக்குப் பிரசவம்
பார்த்து விட்டு வருவதாகவும் அங்கே அமெரிக்காக்காரன் தொல்லை தாங்க முடியலை
என்று சொல்லிக் கேலி செய்கிறாள்.
புதுமைப்பித்தனின் நாரத ராமாயணம் இதுபோன்ற சங்கேதக்
குரல் ஒன்றையே முன்வைக்கிறது. தமிழக அரசியலில் ராமாயணம் வெறும் இலக்கியப்
பிரதி என்பதைத் தாண்டிய முக்கியத்துவம் கொண்டது. திராவிட இயக்கம் ராமாயணப்
பிரதிகளை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்தது. கடவுள்
மறுப்புக் கொள்கையில் தீவிரம் கொண்டோர் ராவண காவியம் எழுதினார்கள்.
அண்ணாதுரை கம்பரசம் எழுதி கம்பனைக் கடுமையாக விமர்சித்தார். இன்னொரு பக்கம்
டி.கே.சி. கம்பன் பாடல்களை ரசித்து அதைத் தனி இலக்கியவகையாக
உருவாக்கினார். ராமாயணம் நடந்த கதையா? எழுதப்பட்ட காவியமா? புனித நூலா?
இதிகாசமா? என்ற சர்ச்சைகள் இன்றும் இந்தியா வெங்கும் முடிவற்றுத்
தொடர்கின்றன. நீதிமன்றம் வரை சென்று முடிவற்ற வழக்குகள் நடக்கின்றன.
நவீன இலக்கியத்தின் வருகை இதிகாசங்களைப் புதிய
கண்ணோட்டத்தில் புதிய வெளிச்சத்தில் பார்க்கச் செய்தது. மறுபிரதிகள்
நிறைய உருவாகத் துவங்கின. அதிலும் குறிப்பாக, மகாபாரதம் மற்றும் ராமாயண
கதாபாத்திரங்களை விமர்சனம் செய்வதும் அவர்களது செயலுக்கான புதிய
நியாயங்கள், புதிய கண்ணோட்டங்களை உருவாக்குவதையும் மேற்கொண்டது.
அதிக கவனம் கொள்ளப்படாத லட்சுமணன் மனைவி ஊர்மிளை பற்றி
வங்காளத்தில் நாவல் எழுதப் பட்டிருக்கிறது. பீமன் பார்வையில் மகாபாரதத்தைப்
பார்க்கும்படி எம்.டி.வாசுதேவன் நாயர் நாவல் எழுதியிருக்கிறார். நான் உப
பாண்டவம் என மகாபாரதத்தை புதிய கதையாடல் வழியாக உருமாற்றம்
செய்திருக்கிறேன்
தமிழில் ராமாயணம் இலக்கியப் பிரதி தாண்டி
நிகழ்த்துகலைகள், கதை பாடல்கள் என பல வடிவம் கொண்டிருக்கிறது. நவீன
கவிதையில் கூட நகுலன் ஐந்து மூன்று என்று விபீஷணன், கும்பர்கணன் பற்றி
நீள்கவிதை எழுதியிருக்கிறார். மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என்று
பலமொழிகளிலும் ராமாயணம் மீதான மறுவாசிப்பும் அதிலிருந்து உருவான
புனைகதைகளும் நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. அயோனி என்று வோல்கா எழுதிய
சீதையைப் பற்றிய நவீன கதை மிக முக்கியமானது. இந்தியாவிற்கு வெளியிலும் ஆசிய
நாடுகளில் குறிப்பாக இந்தோனேஷியாவில் ராமாயணக் கதையின் முற்றிலும்
மாறுபட்ட பிரதிகள் காணப்படுகின்றன. சமண மதம் சைன ராமாயணம் என்ற பிரதியை
வைத்திருக்கிறது. இதுபோலவே ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்ட ஓவிய மரபும்
கதைபாடல் மரபும், இந்தியாவெங்கும் காணப்படுகின்றன. தமிழ் நாட்டில் கூட
திருபுவனம் கோவிலில் ராமாயணக்கதை வரிசை வரிசையாக சிற்பமாக
உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதிகாசங்கள் யாவுமே நினைவு தொகுப்புகள்தான். அவை
உருமாறிக் கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு காலமும் அதற்கான சில விசயங்களை
இதிகாசத்தின் உள்ளே சொருகிவிடுகிறது. சிலவற்றை நீக்கியும் விடுகிறது.
ஒவ்வொரு காலத்தின் இதிகாசத்தின் ஏதோவொரு பகுதி முக்கிய கவனம் பெறுகிறது.
சில பகுதிகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. இதிகாசம் சதா வளர்ந்து
கொண்டேயிருக்கும் பேரியக்கம்.. அவை கதைகளின் வழியாக ஒரு நிலப்பரப்பின்
நினைவுத்தொகுப்பைக் கொண்டிருக்கின்றன.
புதுமைப்பித்தன்
அகலிகையைப் பற்றிய புதிய கண்ணோட்டத்துடன் ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார்.
அதிலே அவருக்குக் காவியங்களின் புனித தன்மையை விமர்சிக்கும் ஒரு
கலகக்குரல் இருப்பதைக் காண முடிகிறது. கு.அழகிரிசாமி திரிவேணி சங்கமம் என்ற
கதையில் ராமனைப் பற்றி எழுதும்போது அடையும் நெகிழ்ச்சியும் உவகையும்
புதுமைப்பித்தனிடம் காணமுடிவதில்லை. புதுமைப்பித்தன் எதையும் கேலி செய்யக்
கூடியவர். அந்தக் கேலி வெற்று சிரிப்பல்ல. மாறாக, அது விமர்சனம்.
உள்ளார்ந்த கோபம். மற்றும் அது சார்ந்த அரசியலை விமர்சிக்கும் குறியீடு.
நாரத ராமாயணம் அந்த வகையில் மிக முக்கியமான ஒரு பதிவு.
இன்று பின்நவீனத்துவ கதை சொல்லல் கதையின் வடிவம் மற்றும் சொல்முறையை
முக்கியமாக கொள்கிறது. அதிலும் பாலிம்சஸ்ட் எனப்படும் ஒன்றின் மேல்
மற்றொன்றாக நினைவுகளை எழுதிக்காட்டும் முறைகளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறது.
பிரதியின் மீதான பிரதி என்பதே பின்நவீனத்துவ கதை சொல்லில் முக்கியம்.
போர்ஹேயின் சிறு கதைகளை அதற்கு உதாரணமாக சொல்லலாம். அவர் டான்குவிகாத்தேயை
புதிய கதையாக உருமாற்றிக் காட்டுகிறார். அது போலவே அல் முட்டாசிம், டிலான்
உக்பார் போன்ற சிறுகதைகளும் பிரதியின் மீதான புனைவுபிரதிகளே.
ராமாயணம் போலவே ஒரு பிரதி சீனாவில் பழைய ஏடாகக் கண்டு
எடுக்கப்பட்டது என்று கதையைச் சொல்லத் துவங்கும் புதுமைப்பித் தன் இந்த
நூலில் நாரதர் முக்கிய கதாபாத்திரமாக இருப்பதால் அது நாரத ராமாயணம் என்று
அடையாளம் காட்டுகிறார். பாதி ஏடுகள் சிதைந்து போயிருப்பதால் அதை முழுமையாக
அறிய முடியவில்லை என்பதோடு அதைத் தன்னால் முடிந்தமட்டும் சீன மொழியில்
இருந்து தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருப்பதாக தெரிவிக்கிறார். இந்த
மொழிபெயர்ப்பாளர் குறிப்பிலே தமிழர்கள் நூலின் காலத்தைக் கணிப்பதில்
வல்லவர் என்பதால் அவர்கள் தனது நாரத ராமாயணத்தை எந்த காலத்தின் பிரதி என்று
முடிவு செய்யட்டும் என்று பகடி செய்கிறார்.
நாரத ராமாயணம் வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் ஒரு
இலக்கியப் பிரதி. வரிக்கு வரி கேலி. கிண்டல். எழுதித் தேர்ந்த கையால்
உருவான அசல் படைப்பு. ராமனது காலம் துவங்கி காலனிய இந்தியா வரையான
நினைவுகளையே இந்த நூல் பேசுகிறது. தனது கடந்தகாலம் அறியாத சமூகம் எப்படி
உருவாகிறது என்பதைச் சுட்டிக்காட்டும் அதே வேளையில் காலம் எப்படி உரு
மாற்றுகிறது என்பதையும் அடையாளம் காட்டுகிறது. இன்று இப்பிரதியை
வாசிக்கையில் பெர்ட்டோ லூசியின் லாஸ்ட் எம்பரர் படம் நிறைய இடங்களில்
நினைவிற்கு வருகிறது.
நாரத ராமாயணத்தில் வரும் ஸ்ரீராமன் அவதாரமில்லை. வயதான
ஒரு மனிதன். அதுவும் சாகசங்கள் செய்து முடித்து இன்று அந்தப் பழைய பசுமையான
நினைவுகளை மட்டுமே நினைத்துக் கொண்டு தனிமையில் வாழ்பவர். அவருக்குப்
பொழுது போகவில்லை மனைவி அவரை மதிப்பதில்லை. தம்பிகள் பிரிந்து அவரவர்
வாழ்க்கையைப் பார்த்துப் போய்விட்டார்கள். மனைவி தன்னை இளக்காரமாக
நினைக்கிறாள் என்று உள்ளுற வருத்தம் கொண்ட ராமன் எப்படியாவது இன்னொரு முறை
தனதுவில்திறனைக் காட்டி தோள் தினவு தீர்க்க ஏதாவது வீர சாகசம் செய்ய
வேண்டும் என்று விரும்புகிறார்.
இதே ஆசை
ஹனுமனிடமும் இருக்கிறது. அவனுக்குக் கடந்தகால நினைவுகள் இப்போது துல்லியமாக
இல்லை. யாரை யார் கொன்றார்கள் என்பதில் நிறைய தடுமாற்றங்கள் இருக்கின்றன.
ஆகவே அவனும் இன்னொரு வீர சாகசத்திற்காக ஏங்குகிறான்.
ஆகவே அவர்கள் வயதான சீதையை அழைத்துக் கொண்டு
காட்டிற்குப் போக திட்டமிடுகிறார்கள். தெற்கே உள்ள அரக்கர்களை முற்றிலும்
அழித்துவிட்டதால் வடக்கே மிச்சம் உள்ள அரக்கர்களைக் கொல்வது என்று முடிவு
செய்து தன் மனைவியை அழைத்துக்கொண்டு ராமன் புறப்படத் திட்டமிடுகிறான். சீதை
வரமறுக்கிறாள்.
அங்கே மனஸ்தாபம் என்ற வாய்க் கால் மெல்ல வளர்ந்து
பெரிதாகி விட்டது. என புதுமைப்பித்தனின் ஒரு வரி இடம்பெறுகிறது.
காவியத்தைப் போலவே உயர்ந்த கவித்துவமிக்க வரியது.
தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உடன்வரும்படி சீதையை
ராமன் உத்தரவு இடுகிறார். பயணம் ஏற்பாடாகிறது. லட்சுமணன் இந்த முறை
துணைக்கு வரவில்லை. அனுமன் உடன் கிளம்புகிறான். அவர்கள் ஒரு வனத்திற்குப்
போகிறார்கள். அங்கே லட்சுமணன் இல்லாத காரணத்தால் பர்ணசாலை அமைக்க
அனுமனுக்குத் தெரியவில்லை.
சீதை கடுங்குளிரில் நடுங்குகிறாள். அவளை ஏதாவது அரக்கன்
வந்து தூக்கிப் போகட்டும் என்று மறைந்திருந்து ராமன் கண்காணிக்கிறான். ஒரு
அரக்கனும் வரவேயில்லை. சீதை ஆத்திரம் கொண்டு திட்டுகிறாள். ராமன் மனம்
வெதும்பி தற்கொலை செய்துகொண்டு விடலாமா என்று சரயூ ஆற்றில் குதிக்க, அங்கே
தண்ணீரில்லை. இப்படி பகடி மேல் பகடியாக விரியும் பிரதி தலைமுறைகளைத் தாண்டி
நீளும்போது மெல்ல பகடி மறைந்து வரலாறு எப்படி உருவாகிறது. யார்
அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார்கள். வீழ்ச்சி ஒரு குடும்பத்தை என்ன செய்கிறது
என்று ஆழ்ந்த வேதனையூட்டும் பிரதியாகிறது. அதுவே புதுமைப்பித்தனின்
உயர்ந்த எழுத்தின் சாட்சியம்.
ராமன் கதையை எப்போது விவரிக்கும்போதும் பட்டாபிசேகத்தோடு
முடித்துக் கொள்வதே கதை மரபு. உத்திர ராமாயணம் போன்ற பிரதிகள் சீதையை
ராமன் சந்தேகம் கொண்டு வனவாசம் அனுப்பியது. அங்கே ராமனின் பிள்ளைகளான
லவன்-குசன் பிறந்து வளர்ந்ததைப் பற்றியும், அவர்களுக்கும் ராமனுக்குமான
உறவையும் பேசுகின்றன. ஆனால் அதை இந்திய சமூகம் பெரிதாக கவனம் கொள்ளவேயில்லை
நாரத ராமாயணம் ராமனின் முதுமையில் துவங்கி சமகாலம் வரை
நீள்கிறது. வம்சாவழியின் கதையைச் சொல்வதாக நீண்டு காலனி ஆட்சி எப்படி
துவக்கியது, அதன் காரணமாக நடைபெற்ற மாற்றங்கள், ஏற்பட்ட தனிமனித
வீழ்ச்சிகள், அதன் துயரைப் பகடியாக விவரிக்கிறது. சிரிப்பின் உச்சம் அழுகை
என்பார்கள். நாரத ராமாயணத்தை வாசித்து முடிக்கையில் அடையும் சந்தோஷத்துடன்
இழப்பின் வலியும் ஒன்று சேர்கிறது.
உடல் உபாதைகளின் முன்பு புனிதர்கள் தோற்றுப்
போகிறார்கள். இது எல்லா காலத்திலும் கண் முன்னே நடைபெறுகிறது. அதுதான்
புதுமைப்பித்தன் அடையாளங்காட்டும் புள்ளியுமாகும்.
பாலின்பத்தின் உச்சநிலையை பிரெஞ்சில் petit mort
என்கிறார்கள். அதன் பொருள் “minideaths” அதாவது நிமிச நேர மரணம். சாவு
குறித்த பயத்திலிருந்தே பாலின்ப வேட்கை உருவாகிறது என்கிறார்கள்
உளவியலாளர்கள்.
பாலுறவும் சாவும் ஒன்றோடு ஒன்று நேரடியாகத் தொடர்பு
கொண்டது. தன்னை விருத்தி செய்து கொள்வதற்காகவே பாலின்பத்தை நாடுகிறான்
மனிதன். அது சாவிலிருந்து தாண்டிச் செல்ல முனையும் எத்தனிப்பே. பாலுறவின்
ஈடுபாடும் சலிப்பும் சாவு குறித்த எண்ணங்களின் வழியேதான் தூண்டப்படுகிறது
என்கிறார் சிக்மண்ட் பிராய்ட். இந்தியப் புராணீகத்தில் யமன்-யமி உரையாடல்
என்று ஒரு பகுதியிருக்கிறது. சாவின் கடவுளான யமன் பாலின்பம் குறித்து தனது
தங்கை யமியோடு கொள்ளும் விவாதம் அது. அதில் உடல்களுக்குத் தனித்த அடையாளம்
எதுவுமில்லை. அவை வெறும் கருவிகள். ஆகவே உடலின்பம் என்பது உடலைக் கடந்து
செல்வதற்கான எத்தனிப்பு என்றே குறிப்பிடப்படுகிறது.
சாவு பற்றிய பயமே வாழ்வை இறுகப் பற்றிக் கொள்ளச்
செய்கிறது. அந்தப் பற்றுதலைச் சாத்தியமாக்குவதில் முதல்காரணி பாலுறவே. இந்த
இரண்டு புள்ளிகளில்தான் சம்பத்தின் இடைவெளி நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
சம்பத் நாலைந்து
சிறுகதைகளும் ஒரேயொரு நாவல் மட்டுமே எழுதியிருக்கிறார். அநேகமாக எல்லா
கதைகளிலும் சம்பத்தான் கதா நாயகன் அல்லது சம்பத்தின் சுய அனுபவத்திலிருந்து
உருவான ஒருவனைப் பற்றியது. அந்தக் கதைகள் வெவ்வேறு காலங்களில்
வெளியாகியிருந்தபோதும் அதன் உள்ளே தொடர்ச்சி காணப்படுகிறது. நிலை கொள்ள
முடியாத மனதின் தத்தளிப்பும் காரணமற்ற வேதனையுமே அவரது அகவுலகம்.
சாமியார் ஜளவிற்குப் போகிறார் என்ற சம்பத்தின் நீண்ட
சிறுகதை ஒன்றிற்கும் இடைவெளி நாவலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
அதுதான் வளர்ந்து நாவலாகி இருக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது. சம்பத்தை
வாட்டிய இரண்டு முக்கிய பிரச்சினைகள் ஒன்று, பாலின்பம். இரண்டாவது, சாவு.
இரண்டைப் பற்றியும் ஆழ்ந்து யோசித்திருக்கிறார். சுவரில் செல்லும் எறும்பை
உற்றுக் கவனிப்பதைப் போல தன் உடலின் மாற்றங்களை உன்னிப்பாகக்
கவனித்திருக்கிறார்.
அந்த அவதானிப்பில் இருந்து உருவான சந்தேகங்கள்,
கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொள்ள யாருமின்றி தனக்குத் தானே சொல்லிக்
கொண்டிருந்திருக்கிறார். அவை பல நேரங்களில் அவரைப் பிரமிக்க வைக்கின்றன. பல
நேரம் நீங்காத துக்கம் கொள்ளச் செய்கின்றன.
சாவு குறித்த சித்தாந்தங்கள், தத்துவக் கேள்விகள் மீது
அவருக்கு நாட்டமில்லை. அவர் ஒரு கலைஞராகத் தனது தேடலின் வழியே அதைக்
குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்று எத்தனிக்கிறார். அதையும்
வாழ்வனுபவத்திலிருந்தே அறியவேண்டும் என முயற்சிக்கிறார். ஒரு வகையில்
சாவைப் புரிந்து கொள்வதன் வழியே தனது வாழ்வின் நிஜமான அர்த்தத்தை தெரிந்து
கொள்ளப் போராடியிருக்கிறார் என்றேபடுகிறது. சாவு குறித்த மகத்தான உண்மை
ஒன்றைத் தான் அறிந்து கொண்டுவிட்டதாகவே சம்பத் கருதுகிறார். அதை
வெளிப்படுத்துவதிலும் பகிர்ந்து கொள்வதிலும் அவருக்கு ஏற்பட்ட தடு
மாற்றங்களே நாவலாகியிருக்கிறது.
சம்பத்தின் இடைவெளி நாவல் உமாபதி நடத்திய 'தெறிகள்' என்ற
காலண்டிதழில் வெளியானது. மிகச் சிறிய நாவல். 110 பக்கங்கள் கொண்டது.
1984ம் ஆண்டு இதை 'க்ரியா' பதிப்பகம் வெளியிட்டது. அதன் பிறகு இன்று வரை
மறுபதிப்பு வரவேயில்லை.
சாவு குறித்த பயம் பெரும்பான்மை எழுத்தாளர்களுக்குத்
தீவிரமாக இருந்திருக்கிறது. அந்த ஒற்றை மையத்தில் உழன்றபடியே தான்
வாழ்க்கையை ஆராய்ந்திருக்கிறார்கள். குறிப்பாக, தஸ்தாயெவ்ஸ்கி போல சாவின்
அருகாமையை உணர்ந்த எழுத்தாளர் வேறு எவருமேயில்லை. அவர் சாவின்
பிடியிலிருந்து தப்பி வந்த பிறகு வாழ்வைக் கொண்டாடத் துவங்குகிறார். உலகம்
மிகப் புதிதாகத் தெரிகிறது. எல்லா கசப்பு வெறுப்புகளைத் தாண்டி மனிதர்கள்
மீதான அவரது அன்பும் அக்கறையும் எழுத்தில் ஆழமாகப் பதிவு
செய்யப்பட்டிருக்கிறது.
சம்பத்தை உலுக்கிய கேள்வி சாவை எப்படிப் புரிந்துகொள்வது
என்ற கேள்வியே. அது குறித்து மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரையும்
சந்தித்து விளக்கம் கேட்கிறார். அவர்கள் பாடப்புத்தகங்களில் உள்ள
விபரங்களைத் தாண்டி எதையும் தருவதில்லை என்று சலித்து கொள்கிறார்.
சாவு வீட்டிற்குச் சென்று அருகில் அமர்ந்து
பார்க்கிறார். அப்போது துயரத்தையும் அழுகையையும் அறிந்துகொள்ள
முடிகின்றதேயன்றி மரணத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவரை அது
அலைக்கழிக்கிறது. உறக்கமற்றுச் செய்கிறது. சாவு குறித்த நிஜம் என்று
எதையும் அறுதியிட்டு வரையறை செய்ய முடியாத போது அதைப் பற்றிய கற்பனைகள்
அதிகமாகத் தேவைப்படுகிறது. அந்தக் கற்பனைகளைக் கூட நம்மவர்கள் செய்ய
மறுக்கிறார்களே என்று அலுத்துக் கொள்கிறார்.
சாவின் மீதான
மனஉளைச்சலில் ஆழ்ந்து போயிருந்தவர் பிரெஞ்ச் எழுத்தாளரான மார்சல் புரூஸ்.
அவரால் தனது தாயின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவேயில்லை. அந்த மரணம் அவரை
ஆழ்ந்து யோசிக்க வைக்கிறது. அதிலிருந்து கடந்த காலத்தின் நினைவடுக்குகளை
மீட்கத் துவங்குகிறார். அவருக்கும் காமமும் சாவும் நெருக்கமானவை என்றே
படுகிறது. இதே தளத்தில் இதே உண்மைகளைச் சொன்ன இன்னொருவர் ஆல்பெர் காம்யூ.
அவரது
'அந்நியன்' நாவல் சாவு வெறும் சடங்காகிவிட்டது. அதன் வெறுமை நம்மை
எப்படிப் பாதிக்கிறது. அதிலிருந்து எப்படி விடுபடுவது என்று தெரியவில்லை.
சாவு எப்போதுமே உள்ளூர ஒரு நெருக்கடியை உருவாக்குகிறது. அது மனிதனின்
இயல்பை மாற்றிவிடக்கூடியது என்கிறார் காம்யூ. அதனால்தான் 'அந்நியன்'
நாவலில் வரும் மெர்சோ தன் தாய் இறந்துபோன இரண்டு நாட்களில் உல்லாசமாகப்
பெண்களுடன் கழிக்க விரும்புகிறான். மனது காமத்தை அன்றி வேறு எதிலும்
சாந்தம் கொள்வதில்லை என்பது பொதுவான விதி போலும்.
இடைவெளி நாவலின் நாயகன் தினகரன். அவன் சம்பத்தின்
சாயலில் உருவானவன். தினசரி வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் குறித்து அவன்
ஆழ்ந்து யோசிக்கக் கூடியவன். அதில் தனது மனநெருக்கடியின் தீர்வு
ஒளிந்திருக்கிறதா என்று பரிசீலனை செய்து பார்க்கிறான். நாவலின் முதல்
பக்கத்திலே அவரது மனத்தீவிரம் தெளிவாகச் சொல்லப்பட்டுவிடுகிறது. சாவு
கடைசிபட்ச உண்மை என்பது எவ்வளவு நிஜமோ அவ்வளவு உண்மை உயிர்வாழ்தலின் ருசி
என்றும் சம்பத் விவரிக்கிறார்.
தினகரன் நாற்பது வயதானவன். தோல் ஏற்றுமதி செய்யும்
கம்பெனியில் வேலை. சாவு, வாழ்வு, பிரபஞ்சம், காதல் என்று தீவிரமாக எதை
எதையோ யோசித்துக் கொண்டிருப்பவன். லௌகீக வாழ்வில் அவன் திறமைசாலியில்லை.
தலைமுடி கொட்டிப் போய்விட்டது. அடிக்கடி தலைச்சுற்றல் வருகிறது.
தினகரனுக்கு தஸ்தாயெவ்ஸ்கியைப் பிடித்திருக்கிறது.
அதுவும் குறிப்பாக அவர் இயேசு கிறிஸ்து குறித்து எழுதிய
விமர்சனம் அவனை ரொம்பவும் யோசிக்க வைத்திருக்கிறது. காரணம், தினகரனுக்கு
இயேசுவை ரொம்பவும் பிடிக்கும். தஸ்தாயெவ்ஸ்கி சாவை சமூக
பிரச்சனையாக்கிவிட்டார் என்று அவனுக்கு உள்ளூர வருத்தமிருக்கிறது. ஆனால்
தஸ்தாயெவ்ஸ்கியால் சாவு குறித்து அறுதியாக ஏதாவது சொல்லியிருக்க முடியும்.
ஏனோ அவர் அதை வெளிப்படுத்திக் கொள்ளவேயில்லை என்று அவன் நினைக்கிறான்.
தஸ்தாயெவ்ஸ்கியைப் படித்த காரணத்தால் அவனுக்குத் தினசரி
பேப்பர்களில் வரும் கொலை வழக்குகள் மீது மனது தானே ஈர்ப்பு
கொண்டுவிடுகிறது. எது அந்த மரணத்தின் ஆதார காரணம் என்று அவனாகவே கற்பனை
செய்து கொள்கிறான். அது அவனுக்கு வாழ்வின் புதிராட்டத்தின் மீது வசீகரம்
கொள்ள வைக்கிறது. சூதாட்டப் பலகையில் சுழன்று நிற்கும் முள்ளைப் போல அவன்
வாழ்வு, சாவைக் காண்கிறான்
தினகரன் மனைவி பத்மா
அவனைப் புரிந்து கொள்ளவில்லை. அவளுக்கு தினகரன் பைத்தியம் என்ற
எண்ணமிருக்கிறது. தினகரனுக்கு பத்மாவைத் தவிர கல்பனா என்ற பெண்ணோடு
ஸ்நேகமிருக்கிறது. அது பத்மாவிற்குப் பிடிப்பதில்லை. புத்தகங்கள் ரொம்ப
ஆபத்தான விசயம். அதை ஜாக்கிரரையாகக் கையாள வேண்டும் என்று நினைக்கிறாள்
பத்மா. அதனால்தான் அவளது மகன் டி.ஹெச்.லாரன்ஸ் படிப்பதை அவளால் தாங்கிக்
கொள்ள முடியவில்லை. வெடித்துக் கத்துகிறாள். அவளது ஒரே ஆறுதல் பாலுறவு
மட்டுமே. அதில் கூட தினகரன் நிறைய கற்பிதங்களையும் மாய கற்பனையும்
கொண்டிருக்கிறான் என்பதே அவளது எண்ணம். அந்த சிந்தனைக் குழப்பம் படிப்பதால்
தான் உருவாகிறது என்றே நம்புகிறாள். தினகரனுக்கு ஆறுதல் தருகின்ற ஒரே
பொருள் கடல். அவன் கடலின் முன்னால் தன் இருப்பு கரைந்து போவதை உணர்கிறான்.
தினகரனின் பிரச்சினை சாவு குறித்து அவன் தர்க்கரீதியாகப்
புரிந்துகொள்ள வேண்டும் என்பதே. அதை வெறும் நிகழ்வாகக் கருதுவதில்லை. அதே
நேரம் அது குறித்த அதீத பயம் எதுவும் அவனிடம் இல்லை. அவன் மனது கருத்தியல்
ரீதியாகப் புரிந்துகொள்ள எத்தனிக்கிறது. அதற்குத் தடையாக உள்ளது எது என்பதை
ஆராய்கிறது.
இந்த தடுமாற்றங்களுடன் அவனது தினசரி வாழ்க்கையைக் கொண்டு
செலுத்த முடியவில்லை. உராய்வும் பிரச்சினைகளும் அதிகமாகின்றன. அவன் தான்
ஒரு பிர பஞ்ச உண்மையைத் தேடிக் கொண்டிருப்பதாக நம்புகிறான். அதில் தன்னை
முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறான். அவனால் முழுமையாக இயற்கையில் தன்னைக்
கரைத்துக் கொள்ள முடிவதில்லை. அவன் விலகி நின்று பார்க்கும் மனநிலையே
கொண்டிருக்கிறான். அவனது கனவில் ஒரு சிறுமி கயிறு தாண்டி விளையாடுகிறாள்.
அவன் பிடியிலிருந்து நழுவி ஏதேதோ சம்பவங்கள் நடக்கின்றன. அந்தக் கனவு அவனை
நிம்மதியற்றுப் போக செய்கிறது. வாழ்க்கை நிகழ்வுகள் அபத்தமானவை என்று சில
வேளைகளில் நினைக்கிறான். அதனால் அதன் மீது அதிக ஈடுபாடு காட்ட மறுக்கிறான்.
விஞ்ஞானம் சாவு குறித்த அறிவார்ந்த விளக்கங்களை
முன்வைக்கும்போது கலைகள் சாவு குறித்த கற்பனைகளையே முன்வைக்கின்றன. இந்தக்
கற்பனையின் எழுச்சியும் வேகமும் அறிவார்ந்த தன்மைகளை ஒன்றுமில்லாமல்
செய்துவிடுகின்றன. தினகரன் விசயத்தில் நடப்பதும் அப்படியே.
அவன் சாவு குறித்த தனது
குழப்பங்களுக்குத் தீர்வாக மதத்தையோ, ஞான குருக்களையோ நம்ப மறுக்கிறான்.
அதற்கு மாற்றாக எளிய வாழ்க்கை அனுபவங்களில் இருந்து அவன் உணர்ந்து கொள்வதை
ஒரு கருத்துருவமாக மாற்றுகிறான். புதுமைப்பித்தனின் 'மகாமசானம்' கதையில்
ஒரு மனிதன் சாலையோரம் செத்துக் கொண்டிருப்பான்.
அதை ஒரு குழந்தை வேடிக்கை பார்த்தபடியே இருக்கிறது.
செத்துக் கொண்டிருப்பவனுக்காக இன்னொரு பிச்சைக்காரன் காசு கேட்பான். உடனே
குழந்தை நீ அவனுக்குப் பொரிகடலை வாங்கித் தந்தால் பிழைத்துக் கொள்வான்
என்று தனக்குத் தெரிந்த அறிவுரை ஒன்றைச் சொல்லும். அதே வேளையில்
குழந்தையின் அப்பா வாங்கி வந்த மாம்பழத்தை முகர்ந்து பார்த்து விட்டு என்ன
மணம் என்று குழந்தை வியந்து கொள்வதும் நடக்கிறது. சாவின் முன்னால்
குழந்தையின் இயல்பு மாறுவதில்லை என்பது போன்ற காட்சியது. கிட்டத்தட்ட
அந்தக் குழந்தையின் மனநிலையில் தான் தினகரன் இருக்கிறான். அவனைச் சாவு
தொடர்ந்து யோசிக்க வைக்கிறது. குழப்பம் கொள்ளச் செய்கிறது. ஆனால் அதை
விட்டுவிட முயலவில்லை. ஆசையாகப் பின்தொடர்கிறான்.
மௌனியின் கதைகளில் சாவு ஒரு தீராத பிரச்சினை. ஆனால் அவர்
அதைத் தத்துவார்த்த தளத்திற்குக் கொண்டு போய்விடுகிறார். அதனால் அவரது
கதைகளில் இல்லாமல் போவது இருப்பதைப் போன்று நினைவுகளின் வழியே மீள்உருக்
கொண்டுவிடுகிறது. சாயைகளாக நடமாடுகின்றன. மௌனி ஒரு சாவை கடந்து போவதாக
மட்டுமே கருதுகிறார். சம்பத்திற்கு அது போதுமானதாகயில்லை. சம்பத் இன்னும்
ஆழமாக அதற்கான பிரத்யேக விடை ஒன்று இருக்கக்கூடும் என்று நம்புகிறார். அதை
நோக்கித் தீவிரமாகச் செல்கிறார்.
ஜே.கிருஷ்ணமூர்த்தி சாவைப் பற்றிக் குறிப்பிடும்போது அது
ஒரு சொல். அந்தச் சொல்லை ஒரு பய முறுத்தும் உருவமாக மாற்றி
வைத்திருக்கிறோம். ஆகவே தான் மனது அந்த சொல்லை நினைத்தவுடன் பயம் கொள்ளச்
செய்கிறது. வாழ்வது, சாவது என இரண்டைப் பற்றியும் அதிகமான கற்பிதங்களே
நம்மிடம் இருக்கின்றன. எப்படி அதைப் பிரித்துப் பார்க்கிறோம். எப்படிப்
புரிந்துகொள்கிறோம் என்பதற்கு இடையில் பயம் புகுந்து கொண்டிருக்கிறது.
பயமில்லாமல் இதைப் பற்றி நாம் யோசிப்பதேயில்லை என்கிறார். வாழ்வு பற்றிய
புரியாமையே சாவு பற்றிய புரியாமையாக உருமாறியிருக்கிறது என்றே
சுட்டிக்காட்டுகிறார். தினகரன் அதையே வேறு வகையில் கண்டு உணர்கிறான்.
தினகரனை வசீகரிப்பது எதிர் பாராமை. அது எங்கே
முழுமையாகக் கிடைக்கிறதோ அதை நோக்கிச் செல்கிறான். அது சூதாட்டமாகவோ,
குதிரை பந்தயமாகவோ எதுவாயினும் அதில் அவனை ஈர்ப்பது எதிர்பாராத அதன்
முடிவுகள். அதற்கான காத்திருத்தல்கள் மற்றும் விடாப்பிடியான அதன் மீதான
ஆசை. இந்தச் சுழல் தினகரனை ஆழத்திற்கு இழுத்துப் போகிறது.
பாதி விழிப்பு, பாதி கனவு இரண்டுக்கும் இடைப்பட்ட
மனநிலையில்தான் தினகரன் சஞ்சரிக்கிறான். அதனால்தான் அவனால் நட்சத்திரங்களை
அவ்வளவு நெருக்கமாக நேசிக்க முடிகிறது. அது போலவே அல்பமான விசயங்களில் கூட
தீவிரமாக அக்கறை கொள்ள சாத்தியமாகிறது. சம்பத் கண்டுபிடித்த இடை வெளி என்ற
கருத்துருவம் வெறும் சொல் அளவில் நின்று போகிறது. அதைத் தாண்டிய ஆழமான
அனுபவ தாக்கத்தை உருவாக்குவதில்லை. ஆனால். தினகரன் அதற்குத் தரும்
விளக்கமும், தர்க்கமும் அதை நோக்கி நம்மை ஈர்ப்பது மட்டுமே நிஜம்.
மனதை உன்னிப்பாகக் கவனிப்பது ஒரு கலை. அதில் மிகத்
தேர்ச்சி பெற்றவன் தினகரன் என்பது நாவல் முழுவதும் தெளிவாகக்
காட்டப்படுகிறது. எழுதி முடிக்கப்பட்ட பிரதியை மறுபடி வாசிப்பவனைப் போல
அவன் தனது மனதின் ஒவ்வொரு சிறு அசைவையும் துல்லியமாக படிக்கிறான்.
விளக்கிச் சொல்கிறான். அவன் மனதின் இருண்ட பக்கங்கள் என்று தனியே
எதுவுமில்லை. அவன் தனது ரகசியங்களை முன்னிலைப்படுத்தியே தனது நிகழ்கால
வாழ்வைப் பரிசீலனை செய்து பார்க்கிறான்.
ஒரு வகையில் சம்பத்தின் இடைவெளி தினசரி வாழ்க்கையை நாம்
எவ்வளவு மொண்ணையாகப் புரிந்து வைத்திருக்கிறோம், எவ்வளவு அலுப்பூட்டும்
அர்த்தமற்ற செயல்களால் நிரப்பிக் கொண்டிருக்கிறோம் என்பதைச்
சுட்டிக்காட்டுகிறது. உடல் பற்றிய நமது புரிதல் அற்பமானது. ஒருபோதும்
உடலின் புதிர்த்தன்மைகளை நோக்கி நாம் நகரவேயில்லை.
உடலை உணரும் தருணங்களான பாலின்பத்தில் கூட நாம்
கற்பிதங்களின் வழியே உடலைச் சுற்றிப் புனைவுகளையே ஏற்படுத்திக் கொள்கிறாம்.
ஆகவே உடலின் சூட்சுமங்கள். அதன் ஊடாடும் வெளிகள் பற்றி நமக்கு அறிமுகம்
ஏற்படுவதேயில்லை. காலம் பற்றிய நமது பிரக்ஞையற்ற நிலையே இதற்கு முக்கிய
காரணம். காலத்தை தீவிரமாகப் புரிந்துகொள்ள முயற்சிப்பவன் இந்தக்
குழப்பங்களுக்கு உள்ளாவதில் இருந்து தப்ப முடியாது என்பதை இடைவெளி நாவல்
நுட்பமாக விளக்கிக் காட்டுகிறது.
நவீன நாவல்கள் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளை அதிகம்
முன்வைத்தபோது இது போன்ற கருத்தியல் சார்ந்து வாழ்வைத் தீவிரமாக அணுகி
ஆராயும் முயற்சி கொண்ட நாவல் தமிழில் வெகு குறைவே. நகுலனின் புனைகதைகளை
மட்டுமே சம்பத்தின் எழுத்திற்கு அருகாமையில் சொல்ல முடிகிறது. சம்பத்தின்
எழுத்து நிறைய இடங்களில் இதாலோ செவோவின் எழுத்துமுறையையும் புனைவுலகையும்
நினைவுபடுத்துகிறது. இரு வரும் ஒருவகையான ப்ளாக் ஹ்யூமர் வகையை எழுத்தில்
உருவாக்குகிறார்கள்.
தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களை யதார்த்தமான நாவல் என்பதோடு
தத்துவார்த்தமான எழுத்தும் என்றும் இணைத்தே வகைப்படுத்துகிறார்கள்.
சம்பத்தின் இடைவெளி ஒன்றை மட்டுமே தமிழில் அப்படி வகைப்படுத்த முடியும்.