http://sramakrishnan.com/view.asp?id=215&PS=1
உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள எனது எட்டு புதிய
புத்தகங்களின் வெளியீட்டு விழா ஜனவரி 5 ம் தேதி மாலை ஆறு மணி அளவில்
சென்னையில் உள்ள பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெற உள்ளது. ( Film chamber. Near Rani Seethai Hall/Anna Flyover chennai. date. 05.01.09. time.6pm )
இந்த விழாவில் பத்மஸ்ரீ தோட்டாதரணி, வெ,இறையன்பு.
இ.ஆ.ப. , ந. முத்துசாமி, தமிழவன், திலீப்குமார், முனைவர் மணி, தேனுகா,
தோழர் மகேந்திரன், திரு. ராஜா. டாக்டர் ஆர். திருநாவுக்கரசு, பாரதி மணி,
கவிஞர் கௌரிசங்கர், கவிஞர் ரவி சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன்.
இது குறித்து மேலதிகமான விபரங்கள் அறிந்து கொள்ள உயிர்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண். 24993448.
வெளியாக உள்ள புத்தகங்கள்
பதினெட்டாம் நூற்றாண்டின் மழை : கடந்த இரண்டு ஆண்டுகளில் எழுதப்பட்ட முப்பது சிறுகதைகளின் தொகுப்பு. இது என்னுடைய எட்டாவது சிறுகதை தொகுப்பு. விலை. 180.
காற்றில் யாரோ நடக்கிறார்கள் :
சமூகம், கலாச்சாரம், கலை, இலக்கியம், குறித்து இதழ்களிலும் இணையத்திலும்
சமீபத்திய ஆண்டுகளில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. விலை. 170
கோடுகள் இல்லாத வரைபடம் : யுவான்
சுவாங், பாஹியான், வாஸ்கோட காமா, மார்கோ போலோ என்று நீளும் புகழ்பெற்ற
பதிமூன்று யாத்ரீகர்களை பற்றிய அறிமுக நூல். விலை. 50
நம் காலத்து நாவல்கள் : பத்தொன்பதாம்
நூற்றாண்டின் புகழ்பெற்ற செவ்வியல் நாவல்கள் குறித்தும், உலக
இலக்கியத்தின் முக்கிய படைப்புகள் குறித்தும் எழுதப்பட்ட கட்டுரைகளின்
தொகுப்பு. உலக இலக்கியம் குறித்து அறிந்த கொள்ள விரும்புகின்றவர்களுக்கான
முக்கிய படைப்பிது. விலை. 175
சித்திரங்களின் விசித்திரங்கள் :
வான்கோ, பிகாசோ, ரெம்பிராண்ட். பிரைடா காலோ, பால் காகின், கோயா,டாலி ,
வெர்மர், டாவின்சி, பால் செசான் என்ற பத்து முக்கிய ஒவியர்களை பற்றியும்
அவர்களை பற்றிய திரைப்படங்களையும் அறிமுகம் செய்யும் நவீன ஒவியம் குறித்த
புத்தகம். விலை. 60
அதே இரவு அதே வரிகள் : நான் நடத்திய
அட்சரம் என்ற இலக்கிய இதழில் வெளியான நோபல் பரிசு பெற்ற படைப்பாளிகளின்
நேர்காணல்கள், உலக இலக்கிய கட்டுரைகள், மொழிபெயர்ப்பு கதைகளின் தொகை நூல்.
இதில் மார்க்வெஸ், இசபெல் ஆலண்டே, போர்ஹே, குந்தர் கிராஸ், மிலாராட்
பாவிக், மிலன் குந்தேரா, காப்கா, தஸ்தாயெவ்ஸ்கி, மாபௌஸ், ஜோசே சரமாகோ,
கென்சுபரோ ஒயி, ஏ.கே.ராமானுஜம் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. விலை. 150
உலக சினிமா : நான்கு ஆண்டுகளுக்கு
முன்னதாக வெளியான உலக சினிமா புத்தகத்தை தற்போது முழுமையாக மாற்றியமைத்து
புதிய படங்கள், புதிய கட்டுரைகளுடன் திருத்தபட்ட விரிவான பதிப்பாக 800 பக்க அளவில் உருவாக்கியுள்ளேன். உலக சினிமாவை விரும்புகின்றவர்களுக்கான ரெபரென்ஸ் புத்தகம் இது. விலை. 550.
எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் : என்னுடைய முதல் கதையிலிருந்து 2004 வரை வெளியான 90 கதைகளின் ஒட்டு மொத்த தொகுப்பு. 750
பக்கம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதன் முதல்பதிப்பை கிழக்கு பதிப்பகம்
வெளியிட்டிருந்தது. தற்போது செம்பதிப்பாக உயிர்மை வெளியீட்டுள்ளது. விலை.
400