Home / Ra ki Rangarajan

Ra ki Rangarajan


சில சண்டைகள், சில தகவல்கள்

கர்நாடக சங்கீதத்தின் மேம்பாட்டுக்காகப் பாடுபடும் பத்திரிகைகளில் ஒன்று 'ஸங்கீத ஸரிகமபதநி'.

நல்லி குப்புசாமி செட்டியார் இதன் நலைமைப் புரவலர்.(மாத இதழ் என்று சொல்லிக்கொள்கிறதேயொழிய அப்படி யெஎன்றும் இது ரெகுலராக வருவதாய்த் தெரியவில்லை.)

ரொம்ப மேதாவித்தனமான சங்கீத நுணுக்கங்களுக்குள் புகுந்து என்னைப் போன்ற சாமானியனின் மூளையை

சிரமப்படுத்துவதில்லை இந்த இதழ். சங்தீ மேதைகளின் வாழ்க்கை வரவாறுகளை சிறு சிறு துணுக்குகளுடன் சேர்த்துத் தருகிறது. அதே சமயம், கொஞ்சம் வம்பு தும்புகளையும் வெளியிடுகிறது.

உதாரணமாக, ஓர் இதழில் குன்னக்குடி வைத்தியநாதன் மாட்டிக் கொண்டிருக்கிறார். இவர் இசை நாடக மன்றத்தின் தலைவராக இருந்தபோது தனக்கு வேண்டப்பட்ட சிலரின் பெயர்களைக் கலைமாமணி விருதுக்கு

சிபாரிசு செய்தாராம். தகுதியுள்ள பலரின் பெயர்களை நீக்கிவிட்டாராம். இது பற்றி விளக்கம் கேட்டுப் பத்துக் கேள்லிகள் கேட்டார்களாம். பதில் இல்லையாம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி மறுபடியும் அந்தக் கேள்விகளை அனுப்பிய பின் குன்னக்குடி பதில் எழுதினாராம். 'நீங்கள் தகலல் அறியும் உரிமை சட்டத்தின்படி சில தகவல்கள் கோரியிருக்கிறீர்கள். இயல் இசை நாடக மன்றம் அந்த சட்டத்துக்கு உட்படுமா என சட்ட நிபுணர்களிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம். பதில் வந்ததும் இது பற்றி முடிவெடுக்கிறோம். என்று அவர் எழுதியிருக்கிறார்.

இதன் இன்னோர் இதழில், சென்னை நகரைத் தவிர வேறு ஊர்களில் கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சிளைக் கேட்க முடியவில்லை என்று டி.ன். சிவராமகிருஷ்ணன் என்ற ரசிகர் அங்கவாய்த்திருக்கிறார். அங்கலாய்ப்போடு

நின்று விடாமல் காரசாரமாத் திட்டியிருக்கிறார். 'அரக்கோணம், ஆரணி, காட்பாடி, விழுப்புரம் - ஏன், தமிழ்

நாட்டில் பல நகரங்கள் சங்கீதம் என்றால் என்னவென்றே தெரியாத பாலைவனப் பகுதிகள். இங்கெல்லாம் ஆலயங்களில் சங்கீதக் கச்சேரிகள் நடைபெறுவதில்லை. இவற்றை நடத்தும் சபாக்களும் இல்லை. இங்குள்ளவர்களுக்குக் 'கர்நாடக சங்கீதம்.' என்றால் என்னவென்றே தெரியாது,' என்று எழுதியிருக்கிறார்! அந்த ஊர்க்காரர்கள் பாயப் போகிறார்களே என்று பயப் படவில்லை.

தலையங்கங்கள் சபாக்காரர்களையும் வித்வான்களையும் சகட்டு மேனிக்கு சாடுகின்றன.

இவ்வாறு, 'ஸங்கீத ஸரிகமபதநி' விவகாரமான விஷயங்களை அங்கங்கே தாளித்திருந்த போதிலும், சங்கீத ரசிகர்களுக்குத் தெிரியாத பல செய்திளைத் தருகிறது. ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கும் பஞ்சமில்லை. பழைய ஓலை சுவடிகளில் திவ்வியப் பிரபந்தத்தின் நாலாயிரம் பாடல்களுக்கும் பண்களும் தாளங்களும் குறிப்பிட்டிருந்ததாயும், அச்சுப் பதிப்பில் அவை மறைத்து விட்டன என்றும் ஒரு கட்டுரை குற்றம் சாட்டுகிறது.அன்னமாச்சாரியாரைப் பற்றிய ஒரு கட்டுரையிலிருந்து அவருக்கு நேரடி சிஷ்யர்கள் இல்லை என்றும், மகன் பெத்த திருமலாச்சார்லுவும் பேரன் சின்ன திருமலாச்சசார்லுவும் அவரது, கீர்த்தனங்களை செப்புத் தகடுகளில் பதித்து பாடல் இயற்றப்பட்ட நாள், தேதி, நட்சத்திரம், வருடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, பாடல் முடிந்ததற்குஅடையாளமாக இருபுறமும் சங்கு சக்கர அடையாள சின்னங்களையும் பொறித்தார்கள் ன்று தெரிகிறது.

'தஞ்சை நால்வர்' குறித்த கட்டுரையில் காணப்படும் சுவையான விடீயங்கள்: நால்வாரில் மூன்றாவது சகோதரரான சிவானந்தம், தஞ்சை மன்னர் சிவாஜியின் நெருங்கிய நண்பராக விளங்கினார். ஹோலிப் பண்டியகையின் போது அந்த மன்னர் சிவானந்தத்தின் வீட்டுக்கு சென்று அவர் மீது வண்ண நீர் தெளித்துக் கொண்டாடினால். ஆண்களும் நாட்டியமாடலாம் என்ற முறையை சிவானந்தம் முதன் முதல் தொடங்கி, திருமறைக்காட்டில் பண்டார வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கு நாட்டியம் கற்றுத் தந்து அரசவையில் அரங்கேற்றம் செய்து வைத்தார். ஆண்கள் மட்டுமே ஆடி வந்த கதக்களி நடனத்தில் பரத நாட்டிய உத்தி சேர்த்து, 'மோகினி ஆட்டம்' என்ற நடனத்தை மலையாள நாட்டில் நிலைபெற செய்தவர் இவர்.

எம்.எம்.தண்டபாணிதேசிகர்' பட்டினத்தார்' திரைப்படத்தில் பட்டினத்தாராக நடித்துப் பாடியதைப் பார்த்து, பக்தி மேலீட்டால் பலர் சன்னியாசியாக மாறினார்கள்.'அலையாயுதே கண்ணா' வை இயற்றிய ஊத்துக்காடு வேங்கட சுப்பயரின் சொந்த ஊர் ஊத்துக்காடு அல்ல.மன்னார்குடியில் பிறந்தவர். இளம் வயதில் பெற்றோரை இழந்ததால் ஊத்துக் காட்டில் உள்ள மாமன் வீட்டில் வளர்ந்தார். திருமண வீடுகளில் பாடப்படும் 'கெளரி கல்யாணமே வைபோகமே' இவர் இயற்றியது. மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதரின் தம்பி பாலுஸ்வாமி தீட்சிதர், சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற ஒரு பாண்டு வாத்திய கோஷ்டியைப் பார்த்தார். அந்தக் குழுவில் இசைக்கப்பபட்ட வயலின் வாத்தியத்தில் மோகம் கொண்டு, மணலி சின்னஸ்வாமி முதலியார் கொடுத்த ஆதரவில், மூன்று வருடகாலம் அந்த வாத்தியத்தைப் பயின்றார். அதன் பிறகே கர்நாடக சங்கீதத்தில் வயலின் புழக்கத்துக்கு வந்தது.

நல்ல நாள், கிழமை, ராகு காலம் முதவியவற்றில் மதுரை மணி ஐயருக்கு மிகந்த நம்பிக்கை உண்டு. 'நவக்கிரகங்கள்தான் நம்மை வழி நடத்தி செல்கின்றன. ஆகவே கிரகங்களின் சக்தி என்னை என்ன செய்யும் என்ற கருத்துக் கொண்ட கிரஹபலமேமி என்ற பாட்டைப் பாட மாட்டேன்' என்று சொன்னவர் அவர். நிதிசாலசுகமா என்ற கல்யாணி ராகப் பாடலையும் அவர் பாடமாட்டார். 'அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு பாட வந்து, கச்சேரி முடிந்ததும் மீதிப் பணத்தைக் கை நீட்டி வாங்கி கொள்கிற நாம் இப்படலை பாடத் தகுதியற்றவர்' என்ற கூறி சிரிப்பார். அபூர்வமாக ஒரே ஒரு இதழில் காணப்பட்ட ஜோக்: 'என் அப்பா சங்கீத வித்வான். அம்மாவும் பாடுவாள். அண்ணனுக்கு மிருதங்கம் வாசிக்கத் தெரியும். அண்ணி வீணை வாசிப்பாள்...' 'சரி, நீ என்ன பண்ணறே?' 'தனிக் குடித்தனம் வந்துட்டேன். வேறென்ன பண்றது?'

ரா.கி.ரங்கராஜன்

ஹாஸ்ய எழுத்தாளர்கள் ஹாஸ்யமாகத்தான் பேச வேண்டும் என்கிற அவசியமில்லை. இந்தப் பயிலரங்கத்தில் சுஜாதா, நகைச்சுவையின் பல்வேறு கூறுகளைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்து பேசினார். பிற இளைஞர்கள் தங்களது அனுபவங்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். நான் பழைய காலத்து ஆசாமி. பெருங்காய டப்பா; ஆனாலும் இப்போதும் கொஞ்சம் வாசனை இருக்கும் என்றே தோன்றுகிறது.

நகைச்சுவை எழுத்தாளர்கள்தான் ஆங்கிலத்தில் எவ்வளவு பேர்! ஜெரோம் கே.ஜெரோம், ஜேம்ஸ் தர்பர், மார்க் ட்வெய்ன், ரிச்சர்ட் கார்டன், சார்லஸ் டிக்கென்ஸ் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு தொழிலை வைத்து நாவல்கள் பலவற்றை கார்டன் எழுதினார் என்றால், சிரிக்க வைத்து கூடவே சிந்திக்கவும் வைத்த கட்டுரைகளை ஜெரோம் கே. ஜெரோம், தர்பார் போன்றவர்கள் எழுதினார்கள். அப்புறம் இருக்கவே இருக்கிறார், சம்பவக் குவியல்களில் ஹாஸ்யத்தைப் புகுத்தின பி.ஜி.உட்ஹவுஸ்.

சுஜாதா

உட்ஹவுஸ் படைத்த பெர்ட்டி ஊஸ்டர் என்கிற சீமானும், அவர் கீழ் பணிபுரியும் ஜீவ்ஸும் பிரபலமான கதாபாத்திரங்கள். வெள்ளைப் பன்றி வளர்ப்பு இங்கிலாந்தில் ஒரு செழிப்பான தொழில். அதை மையமாக வைத்து எழுதின நாவல் Pigs have wings.

அதில் ஒரு சம்பவம். பெர்ட்டி ஊஸ்டருக்கு ஒரு சமயத்தில் பணம் தேவைப்படுகிறது. கடன் கேட்பதற்காகப் பணக்கார மாமா வீட்டுக்கு வருகிறான். அந்த மாமா பன்றிப் பிரியர். கொழு கொழுவென்ற வெள்ளைப் பன்றிகளை வளர்த்து-அதில் மனசைப் பறி கொடுத்தவர். அங்கு வந்து தங்கியிருக்கும் பெர்ட்டி ஊஸ்டர் சும்மா இருக்க வேண்டியதுதானே? கடன் கேட்பதுதானே நோக்கம்? பொழுது போகாது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவன், கூழாங்கற்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பன்றிமீது வீசுகிறான்! தற்செயலாக அப்போது எட்டிப் பார்த்த மாமா இந்தக் காட்சியைக் கண்டு, கடுங்கோபம் கொண்டு கடன் கொடுக்க மறுத்துவிடுகிறார்! ஊஸ்டர் சிக்கலில் மாட்டிக்கொள்வதும், தப்பிக்க ஜீவ்ஸிடம் யோசனை கேட்பதும்... இப்படிப் போகிறது கதை.

ஜீவ்ஸ

ஆள் மாறாட்டம்; ஒரே சாயலை உடைய இரண்டு பேர்; ஒரே பெயரை வைத்து தான் தேடின ஆசாமி இவர்தானென்று தவறாக நினைப்பது-இத்தகையவைகளை வைத்து புனையப்பட்ட நகைச்சுவைக் கதைகள், நாடகங்கள் ஏராளம். எல்லவற்றுக்கும் ஆதாரமான புராதனமான கதை, ''The Importance of Being Earnest". ஆஸ்கார் ஒயில்ட் எழுதின நாவல். சீரியஸ் எழுத்தாளரான இவர்கூட, முற்ற முழுக்க impersonation ஆள் மாறாட்டம் இவைகளை வைத்து நகைச்சுவை மிளிர எழுதி இருக்கிறார்.

ஜெரோம்

ஜெரோம் கே. ஜெரோம், மார்க் ட்வெய்ன் இவர்கள் இரண்டுபேருமே சற்று உயர்ரக ஹாஸ்யப் படைப்பாளிகள். (முதலாமவர் எழுதின ''படகில் மூன்று பேர்'' கதை மிகப் பிரபலமானது.) ஜெரோம் ஒரு தடவை வாசக சாலைக்குப் போனாராம். மெடிகல் என்சைக்ளோபீடியா புஸ்தகத்தைப் புரட்டிப் பார்த்திருக்கிறார். மிக அபாயமான வியாதிகளுக்கான ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி விவரமாக எழுதப்பட்டிருந்ததைப் படித்ததும், அவரைப் பயம் பற்றிக்கொண்டது. ஏனென்றால், அந்த அறிகுறிகள் எல்லாம் தனக்கு இருந்தாற்போல் தோன்றியது. சுவாரஸ்யமான, புன்னகை பூக்க வைக்கும் கட்டுரை இது.

மார்க் ட்வெயின் படைத்த 'டாமி சாயர்' பாத்திரம் - சாயரின் சாகசங்கள் - மிகப் பிரபலமானது. மிக வித்தியாசமான கோணத்தில் சிந்தனை செய்து வேடிக்கையாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். எறும்புகள் மகா சுறுசுறுப்பானவை என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அப்படி இல்லையாம். எறும்புகள் மிகவும் சோம்பேறிகள். நிறைய சுமைகளைக் காரணமின்றி தூக்கிக்கொண்டு இங்குமங்கும் சென்று திரும்பத் திரும்பத் தள்ளாடும். இதே கோணத்தில் ''ஆராய்ச்சி'' செய்து எழுதப்பட்ட மிக வித்தியாசமான நகைச்சுவைக் கட்டுரை அது.

மார்க் ட்வெயின்

இதற்கு மாறாக, அன்றாடம் நாம் பார்க்கும் சம்பவங்களை நயமாக எழுதினார் ஸ்டீபன் லீகாக். பாங்கில் கணக்கு துவக்குபவரைப் பற்றி இவருடைய கட்டுரை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும். ஒரு மனிதர் புதுக் கணக்கு ஆரம்பிப்பதற்காக பாங்குக்கு மிதப்பாகச் சென்றிருக்கிறார். 'கவுண்ட்டரில்' உள்ள பலரைப் பார்த்து, மானேஜரிடம் பேசி கையிலிருந்த பணத்தைச் செலுத்தி கணக்கு ஆரம்பித்துவிட்டார். வெளியே வந்து பார்த்தால், கையில் துளியும் பணமில்லை! வீட்டுக்குப் போகக்கூட சில்லறை இல்லை! மறுபடியும் பாங்குக்குப் போய், போட்ட தொகையை - சற்று முன்னர் கட்டப்பட்ட பணத்தை - எடுக்க முன்வருகிறார். அவரை வினோதமாகப் பார்த்த கிளார்க் ''எவ்வளவு?'' என்று கேட்க, ''பூராவும்!'' என்று சொல்லி, முழுப் பணத்தையும் எடுத்துவிடுகிறார். ஒரு சாதாரண மனிதனின் விந்தையான - அதே சமயம் இயல்பான என்று கூடச் சொல்லலாம் - மனோபாவம் கட்டுரையில் நன்கு வெளிப்படுகிறது.

தமிழிலும், மேலே குறிப்பிட்டதுபோல் பல நகைச்சுவை எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம். கல்கி கிருஷ்ணமூர்த்தியை முன்னோடியாகச் சொல்ல வேண்டும். அவர் எழுதின இலங்கைப் பயண கட்டுரையை முதலில் வாசித்த போது எனக்கு ஏற்பட்ட பிரமிப்பு! பயணத்தைப் பற்றின பல விவரங்களை அபாரமான நகைச்சுவையுடன் தெளிவான நடையில் எழுதி இருந்தார். அப்போது சித்திரக்காரர் மாலி விகடனில் பணிபுரிந்து வந்தார்; அவர் படம் போட்டிருந்தார். மாலி ஒரு moody type. நடுவில் அவர் படம் வரைவதை நிறுத்தி இருந்தார். என்ன காரணமென்று கேட்டதற்கு, ''கிருஷ்ணமூர்த்தி எழுதணும்; படம் போடணும்'' என்றார். அந்தத் தருணத்தில் கல்கி விகடனில் பணி புரியவில்லை.

சார்லஸ்
டிக்கென்ஸ்

கேரக்டர்களை - அதாவது தனிப்பட்ட குணநலன்களை - வைத்து ஹாஸ்யமாக நாடோடி எழுதினார். ''இப்படியும் ஒரு பிருகிருதி'' முழுக்க முழுக்க குணசித்திர ஹாஸ்யக் கட்டுரைகள். ''என்னைக் கேளுங்கோன்னா!'' சற்று வித்தியாசமான கட்டுரைத் தொகுதி. நாடோடி போலவே எஸ்.வி.வியும் ஒரு குடும்பத்தை வைத்து-பெத்தம்மாள், வாசுதேவய்யர் - உல்லாச வேளை என்ற புத்தகம் எழுதி இருக்கிறார். பெந்தம்மாள் பஸ்ஸிலோ டிராமிலோ பயணம் செய்யும்போது, கண்டக்டர் எச்சில் படுத்தி டிக்கெட்டைக் கிழித்துத் தருகிறார். அவள் அப்போது தன்னுடைய ஆசாரமான பின்னணியைக் குறிப்பிட்டு கண்டக்டருடன் சண்டை போட்டதைத் தத்ரூபமாக எழுதியிருக்கிறார். அப்போது பஸ்ஸில் உள்ள பல பயணிகளும், அவளுக்கு ஆதரவு தருகிறார்கள். இந்தக் கட்டுரை வெளியானது 1940களில் என்று நினைக்கிறேன்.


பார்த்தசாரதி பெருமாள், கற்பகாம்பிகை, மதுரை மீனாட்சி, திருப்பரங்குன்றம் முருகன் முதலான எல்லாரும் தெய்வங்கள் நான் வழிபடும் கடவுளர்கள். ஆனால் பிள்ளையார் அப்படியல்ல. அவர் என் தோழர்.

சின்ன வயசில் பள்ளிக்கூடப் பரீட்சைக்குப் போகும்போது வழியில் காணும் பிள்ளையார்களுக்கெல்லாம் நின்று என் நெற்றியில் குட்டுப் போட்டுவிட்டுச் செல்ல ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை அவர் என்னைக் கைவிட்டது கிடையாது. (இந்தக் குட்டுப் போட்டுக் கொள்ளும் முறையில் விஞ்ஞான உண்மையொன்று இருப்பதாக அமெரிக்காவில் இருக்கும் ஒரு நண்பர் சொன்னார். நெற்றிப் பொட்டில் அந்தக் குறிப்பிட்ட பிரதேசத்தில் மூளையைச் சுறுசுறுப்படைய வைக்கும் நரம்புகள் இருக்கின்றனவாம். குட்டுப் போட்டுக் கொண்டால் அவை 'ஆக்டிவேட்' ஆகின்றன என்றும், இதுபோன்ற பல வழிபாட்டு முறைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருவதாகவும் அவர் சொன்னார்.

ஆறாம் வகுப்போ, ஏழாம் வகுப்போ படித்த சமயம், என் அப்பா என்னை அடிக்க வந்தததும், நான் தப்பியோடி, அருகிலிருந்து ஒரு பிள்ளையார் கோவிலுக்குள் போய் ஒளிந்துகொண்டதும், துரத்திக் கொண்டு வந்த அப்பா, கோவில் வாசலில் நின்று, ''ஒய் குருக்கள்! அந்தப் பயலை வெளியே விரட்டும்!'' என்று சத்தம் போட்டதும் (முன்பே இரண்டொரு முறை சொல்லியிருக்கிறேன்) ஞாபகம் வருகிறது. (ஆசார வைஷ்ணவராகையால்தான் பிள்ளையார் கோவிலுக்குள் நுழையக் கூடாதென்ற கொள்கை வைத்திருந்தார் என்று ரொம்ப நாள் கழித்துத் தான் தெரிந்தது)

கும்பகோணத்தில் என் வீட்டுக்குப் பக்கத்தில் காவேரியில் கும்பேசுவர சுவாமி படித்துறை இருந்தது. அதை ஒட்டி ஒரு பழைய பெரிய மண்டபம், ஊரிலுள்ள பண்டாரம், பரதேசிகளுக்கெல்லாம் அதுதான் வாசஸ்தலம். ஆனால் பிள்ளையார் சதுர்த்தி சமயத்தில் பத்துநாள் போல அங்கே ஒட்டடை அடித்து, பெருக்கித் தண்ணீர் தெளித்துச் சுத்தம் செய்வார்கள். அங்கே சங்கீதக் கச்சேரிகள் நடைபெறும். இரண்டாவது மூன்றாவது நிலையில் உள்ள வித்வான்கள் பாடுவார்கள். மண்டபம் நிறையக் கூட்டம் இருக்கும். தவறாமல் எல்லா நாட்களும் அங்கே போய் உட்கார்ந்துவிடுவேன் சிநேகிதர்களோடு.

ஆனால் என் தந்தை காலமான சமயம் ஒரு சதுர்த்தி உற்சவர் வந்த போது, 'தீட்டு' என்பதால் அங்கெல்லாம் போகக் கூடாதென்று விட்டில் தடுத்துவிட்டார்கள். இருந்தாலும், திருட்டுத்தனமாக ஒரு நாள் போய்விட்டேன். அந்த ஒரு கச்சேரி மட்டும் எனக்கு ரொம்ப ஆழமாய் இருக்கிறது. சிவந்த மேனியும், கட்டுக்குடுமி, சந்தனப் பொட்டும், வைரக் கடுக்கனும், சில்க் முழுக்கைச் சட்டையுமாக ஒருவர் அன்று பாடினார். பெயர் நினைவில்லை. நாற்பது வயதிருக்கும். அருமையான சாரீரம். பிரமாதமாகப் பாடத் தொடங்கினார். மேல் ஸ்தாயியில் சஞ்சாரம் செய்யக் கையை உயர்த்தியபோதுதான் அவரும் கவனித்தார். அவையினரும் நீளத்துக்குப் பெரிதாய்க் கிழித்திருந்தது. சலவையிலிருந்து வந்திருந்த சட்டையைச் சரியாய்ப் பார்க்காமல் அப்படியே மாட்டிக் கொண்டு வந்திருந்தார். பாவம். அதன் பிறகு அவருக்கு மூடே போய்விட்டது. கையை உயர்த்தாமல் பாடுவதென்பது எந்த மகா வித்வானாலும் முடியாத காரியம். (பார்க்கப் போனால் மகா வித்வானாக இருக்க இருக்க, கை ரொம்பவுமே மேலே உயரும்) இந்த வித்வானிகளின் நிலை ரொம்பப் பரிதாபமாகிவிட்டது அன்றைக்கு. கொஞ்சம் உற்சாகம் வரும். தன்னை மறந்து பாடுவார். கை உயரும். உடனே கிழிசல் ஞாபகம் வந்து கையைத் தழைத்துக் கொண்டு போய்விடுவார்.

எனக்கு அது ஒரு மறக்க முடியாத வினாயக சதுர்த்தி. அந்த வித்வானுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.

சென்னையில் குடியேறிய பிறகு சில வருடங்கள் பிள்ளையாரை மறந்திருந்தேன். ஆனால் அவர் என்னை மறக்கவில்லை. புரசைவாக்கம் வெள்ளாளத் தெருவில் தன் கோவிலுக்கு எதிரிலேயே நான் குடியிருக்கும்படி பண்ணிவிட்டார். தெருவில் இறங்கினால் அந்தச் சின்னப் பிள்ளையார் கோவிலுக்கு ஒரு கும்பிடு போடாமல் போகமுடியாது. (அந்தக் கோவிலை இப்போது மிக அழகாக கட்டியிருக்கிறார்கள்) அலுவலக நண்பர்கள் எல்லாருமே அந்தப் பகுதியில் வசித்து வந்ததால், குமுதம் காலனியில் ஒன்றாகக் குடித்தனம் போனபோது, அங்கே காம்பவுண்டுக்கு உட்புறமாக ஒரு பிள்ளையார் மூர்த்தி பிரதிஷ்டை செய்துவிட வேண்டும் என்று முனைந்தோம். பிள்ளையார் சிலை எங்கே கிடைக்கும் என்பது தெரியாமல், மகாபலிபுரத்துக்குப் போகிறவர்களிடமெல்லாம் சொல்லி அனுப்பினோம். இதற்குள் ஒருவர், ''பிள்ளையாரை விலைக்கு வாங்கி வைப்பது கிடையாது. எங்கிருந்தாவது திருடிக் கொண்டுவந்துதான் வைக்க வேண்டும். அதுதான் சம்பிராதாயம்'' என்று சொன்னார்.

பிள்ளையாரிடம் எல்லாருக்குமே அபார பக்திதான் என்றாலும், திருட்டில் இறங்கும் அளவுக்கு யாருக்கும் துணிச்சல் இருக்கவில்லை. எப்படியோ பாடுபட்டு, ஒரு பிள்ளையார் சிலை வாங்கி, மூன்றடி உயரத்தில் ஒரு மேடையும் ஒரு கீற்றுக் கூரையும் போட்டு, தினம் தினம் 'முறை' வைத்துக் கொண்டு பூஜை (!) செய்தோம். அது சரிப்பட்டு வராததால் ஒரு குருக்களை ஏற்பாடு செய்தோம். பிறகு நண்பரொருவர் நன்கொடை வசூல் செய்து, தன் கைப்பணமும் நிறைய போட்டு, அழகான பெரிய மண்டபத்துடன் கோவில் கட்டிவிட்டார். சதுர்த்தி உற்சவம் அமர்க்களமாக நடைபெற்று வருகிறது. (என்று நினைக்கிறேன்)

வீட்டில் எப்போதும் ஒரு பிள்ளையார் படம் இருக்கிறது. மூக்குக் கண்ணாடியைக் காணவில்லையா, ஸ்கூலிலிருந்து குழந்தை வருவதற்கு லேட்டாகிவிட்டதா, கிரிக்கெட்டில் இந்தியா நன்றாகக விளையாடவேண்டுமா, இரண்டு நாளாய் ஜுரமா, கிரைண்டர் மக்கர் செய்கிறதா - எதுவானாலும் 'பிள்ளையாருக்குக் காசு வை' என்பதே எங்கள் தாரக மந்திரம். காசு வைத்ததும் நல்லபடி அருள் செய்வார் எங்கள் பிள்ளையார். உண்டியலில் ஒரு ரூபாயும், இரண்டு ரூபாயும், பத்து ரூபாயும் (அந்தந்த நிலைமைக்கு ஏற்றபடி) சேர்ந்து, வருடமுடிவில் நானூறு ஐந்நூறு ரூபாய் வரை சேர்ந்துவிடும். பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவில்களுக்கு அந்தத் தொகையைப் பிரித்துக் கொடுப்போம். சினேகிதர்களிடம் கொடுத்து அவர்கள் வீட்டருகே உள்ள கோவில்களுக்கும் கொடுக்கச் சொல்வோம்.

ஒருமுறை காலனி தோட்டக்காரனிடம் முப்பது ரூபாய் போல் சில்லறையாகக் கொடுத்து, ''பக்கத்தில் இருக்கிற பிள்ளையார் கோவில்களில் உண்டிகளில் போட்டுவிட்டு வா'' என்று அனுப்பினேன். ரொம்ப நேரம் கழித்துத் திரும்பினான் - தள்ளாடியபடி.

''என்னடா, போட்டாயா?'' என்றான்.

''என்னடா, பேச்சு ஒரு மாதிரியா இருக்கு?''

''ஆழ்தான் பாழ்ட்டேங்கிறேன்ல?'' என்றான்.

சொல்லிவிட்டு. போழ்ட்டான். அதழ்கு மேலே கேழ்ட்டு என்ன பிரயோழ்ணம்?

ந்தப் பகுதியில் நான் எழுதும் கட்டுரைக்கு, கட்டுரையிலும் ஒரு பாராவுக்கு, பாராவிலும் ஒரு வாக்கியத்துக்கு, வாக்கியத்திலும் ஒரு வார்த்தைக்கு இப்படியொரு பயங்கர பாதிப்பு இருக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. ஒரு வகையில் பெருமையாக இருக்கிறது. இன்னொரு வகையில் ஜாக்கிரதையாக எழுத வேண்டுமென்ற பயமும் ஏற்படுகிறது.

விஷயம் யாதெனில்,

K4 போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகும் சாலையில் சொறி நாய்கள் நாலைந்து தாவி வருகின்றன என்றும், பிடித்துச் செல்வார் யாருமில்லை என்றும், 'மாற்ற முடியாத விஷயங்கள்' என்ற பட்டியலில் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தேன்.

ஞாயிற்றுக் கிழமை காலைதான் பத்திரிகை வெளிவந்திருக்கும். பகலுக்குள் மூன்று பெண்மணிகள் வெவ்வேறு நேரத்தில், வெவ் று இடத்திலிருந்து போன் செய்தார்கள். பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டார்கள் என்று சொல்லமாட்டேன். ஆனால் அப்படி நான் எழுதியது ரொம்பத் தவறு என்று மட்டும் அழுத்தமாகச் சொன்னார்கள். 'சொறி நாய்' என்றால் வெளிநாய் என்று அர்த்தம் செய்து கொண்டு கார்ப்பரேஷன்காரர்கள் அவைகளைப் பிடித்துக் கொண்டு போய் ரொம்பக் குரூரமான முறையில் கொன்று விடுகிறார்கள் என்றார் ஒரு சகோதரி. (Stray Dog என்பதைத்தான் நான் சொறி நாய் என்று குறிப்பிட்டுவிட்டேன். தெரு நாய் என்று சொல்லியிருக்கலாமோ என்னவோ)

இரண்டாவது சகோதரியும், நாய்கள் கொலை செய்யப்படும் முறை ரொம்பக் கோரம் என்றார். அவர் விவரித்த முறைகளை இங்கே நான் விவரித்தால், பலவீன இதயமுள்ளவர்களுக்கு பயங்கர சொப்பனம் வரும்.

''இந்த நாய்கள் குறுக்கே தாவி ஓடுவதைப் பார்த்தால் பயமாயிருக்கிறதே'' என்றேன்.

''நீங்கள் பயப்படவே வேண்டாம். ஒரு கவளம் சோறு போட்டால் வாலைக் குழைத்துக் கொண்டு உங்கள் பின்னாலேயே வரும்'' என்றார்.

''பின்னாலேயே வீட்டுக்கு வந்தால்?'' என்றேன்.

''வரட்டுமே? வளர்த்துவிட்டுப் போங்களேன். வீட்டுக்கு ஒரு நாய் வளர்க்கலாம். நான் தெருவில் கிடந்த ஒரு அனாதை நாய்க் குட்டியை வீட்டுக்கு எடுத்து வந்து சோறு ஊட்டி வளர்த்தேன். எவ்வளவு விசுவாசமாயும் பிரியமாயும் பழகுகிறது தெரியுமா? நான் சுவாமி சன்னதியில் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லும்போது, ஸ்தோத்திரம் முடியும் வரை பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறது,'' என்றார். தொடர்ந்து, ''நாய்கள் விஷயத்தில் மட்டுமில்லை, மாடுகளை லாரியில் ஏற்றி அனுப்புகிறார்களே, அது இன்னொரு கொடுமை'' என்றார்.

''மாடுகளை வியாபாரம் செய்வது சட்டப்படி தடை செய்யப்படவில்லையே?'' என்று கேட்டேன்.

''இல்லை. ஆனால் பண்ணைக்குப் போகிற மாடா, கசாப்புக்குப் போகிற மாடா என்று சொல்லிப் பெர்மிட் வாங்க வேண்டும். ஒரு லாரியில் ஐந்து ஆறு மாடுகள்தான் ஏற்றலாம். ஆனால் நாற்பது மாடுகள் கூட ஏற்றுகிறார்கள். இடம் போதவில்லையென்றால் காலை ஒடித்துப் படுக்கப் போட்டுவிடுகிறார்கள். கேரளாவுக்குப் போன மாடுகளை எம்.எல்.ஏ. தாமரைக்கனி தடுத்து நிறுத்தினார் என்று செய்தி வந்ததே பார்த்தீர்கள் இல்லையா?'' என்றார்.

பார்த்தேன். மாடு விஷயம் இருக்கட்டும். நாய் விஷயம் சொல்லுங்கள். இப்போதுதான் தெரு நாய்களுக்குக் கருத்தடை செய்கிறார்களே, அப்புறம் எப்படி குரூரமாகச் கொல்வதாகச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.

''ஆமாம். ஒரு நாய்க்குக் கருத்தடை செய்தால் நூறு நாய்கள் பிறப்பதைத் தடுக்க முடியும். ஆனால் குரூரமாய்க் கொலை செய்வதுதான் அதிகம். மேனகாகாந்தி கடுமையாகத் தலையிட்ட பிறகு குரூரம் கொஞ்சம் குறைந்திருக்கிறது'' என்றார்.

''சரி, இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.

''அனாதை நாயிடம் அன்பு காட்டுங்கள் என்று எழுதுங்கள். நாய்களுக்காக வீட்டு வாசலில் ஒரு குவளையில் தண்ணீர் வைக்கும்படி சொல்லுங்கள். நாய்களிடம் பிரியம் காட்டும்படி எடுத்துச் சொல்லுங்கள் போதும்'' என்றார் சகோதரி.

பதினைந்து இருபது வருடங்களுக்கு முன் என் நண்பரொருவரின் பதினாலு வயதுத் தம்பி, ஒரு தெரு நாயிடம் பிரியம் காட்டப் போய், அது அவன் கையைப் பிராண்டி, பத்து நாள்கழித்து அவனுக்குக் காய்ச்சல் வந்ததும், ஜெனரல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனதும் அவனைக் கூண்டு மாதிரியான இடத்தில் அடைத்து வைத்ததும், அவனுக்கு அருகில் கூட யாரும் போகக் கூடாதென்று டாக்டர்கள் தடுத்ததும், மூன்று நாள் கதறிக் கதறியே அவன் உயிர் விட்டதும், உறவினர்கள் எல்லாருக்கும் கட்டாயமாகத் தடுப்பு ஊசி போடப்பட்டதும் எனக்கு நினைவு வந்தது. ஆனால் அது லட்சத்தில் ஒரு கேஸாக இருக்கலாம் - லட்சத்தில் ஒரு நாய் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது போல.

''சரி, எழுதுகிறேன். உங்கள் பெயரையும் டெலிபோன் நம்பரையும் சொல்லுங்கள். யாராவது அனாதை நாயைக் கண்டால் உங்களுக்குத் தெரிவிக்கும்படி எழுதுகிறேன்,'' என்றேன்.

டெலிபோன் நம்பரையும் பெயரையும் சொன்னார். ''ஆனால் இதைப் பிரசுரிக்க வேண்டாம். நான் ஏற்கனவே ஏராளமான நாய்களைக் காப்பாற்றி வருகிறேன். அத்துடன் விரைவில் பெங்களூருக்குப் போய்விட எண்ணம்,'' என்றார்.

''வேறே யாரைத் தொடர்பு கொள்ளச் சொல்லட்டும்?'' என்று கேட்டேன்.

''பிராணி நல அமைப்பைத் தொடர்பு கொள்ளலாம். ஒரு வேடிக்கை சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஆனால் சத்தியமான விஷயம்.''

நான் எழுதி முடித்துவிட்டு, திருத்தம் செய்து கொண்டிருந்த போது, ஒருவர் வந்தார். திடகாத்திரமான மனிதர். நான் முன்புறத்தில் இருந்ததால், ''பாலகிருஷ்ணன் என்று இங்கே யாரும் இருக்கிறார்களா?'' என்று கேட்டார்.

''மாடியில் இருக்கிறார்'' என்றேன்.

நாலு படி ஏறியவர் திரும்பி வந்தார். ''மாடியில் நாய் இருக்கிறதா?'' என்று பயத்துடன் கேட்டார்.

''இல்லை, தைரியமாகப் போங்கள்,'' என்றேன்.

நாய் மனிதனின் சிறந்த நண்பன் என்று சொல்கிறார்கள். இருந்தாலும் எப்படிப்பட்ட திடகாத்திர மனிதருக்கும் நாய் என்றால் ஒரு நடுக்கம்தான். யாரால் அதைப் போக்க முடியும்.

றேழு வருடங்களுக்கு முன்பு நான் அமெரிக்கா போயிருந்தபோது ('ஆரம்பிச்சிட்டான்யா!' என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது) என் மருமகப் பிள்ளையுடன் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குப் போயிருந்தேன். அங்கே அவர் ஒரு வீடியோ கேமரா வாங்கினார். வீட்டுக்கு வந்து, தொட்டிலில் அழுது கொண்டிருக்கும் குழந்தை முதல், மாவு கரைத்துக் கொண்டிருக்கும் மனைவி வரை, தெரு, தோட்டம், வாடிப் போன ரோஜாப்பூ உள்படப் படம் பிடித்துத் தள்ளினார். என் மகளும் அவள் பங்குக்கு என்னென்னவோ எடுத்தாள்.

மூன்று மாதம் ஆகிவிட்டது. ஒருநாள், ''என்ன இது, சரியாவே வரலே?'' என்ற மாப்பிள்ளையின் முணுமுணுப்புக் கேட்டது. ''நீங்க எப்பவும் இப்படித்தான்! ஒரு பொருளை எப்படி ஹாண்டில் பண்ணணும் என்றே தெரியாது!'' என்று என் பெண் அவரைக் குற்றம் சாட்டினாள். ''ஒரு வாரமாய் நீதான் அதை உபயோகித்தாய்! என்ன செய்து தொலைத்தாயோ!'' என்று அவர் அவளைக் கோபித்தார்.

''சரி, வாங்கின கடையில் திருப்பிக் கொடுத்து விடலாம்!'' என்று மாப்பிள்ளை சொன்னதைக் கேட்டு ஆச்சரியமாயிருந்தது எனக்கு. ''வாங்கி மூன்று மாதமாகிவிட்டது. ஏராளமாய் உபயோகித்தாயிற்று! இனிமேல் எப்படி வாங்கிக் கொள்வான்?'' என்றேன்.

''நாளைக்கு என்னுடன் வந்து பாருங்கள்'' என்றவர், கடையில் வாங்கிய பில்லைத் தேடி எடுத்துக் கொண்டார்.

மறுநாள் அவருடன் போனேன். சூப்பர் மார்க்கெட்டில் நு ாந்தவர், நேரே ஒரு கவுன்ட்டருக்குப் போனார். அங்கிருந்த பெண்ணிடம், காமிராவைக் கொடுத்து, பில்லைக் காட்டினார். அந்தப் பெண் மறுபேச்சுப் பேசாமல், ஒரு பைசா குறைக்காமல் பில்லில் இருந்த தொகையைத் தந்துவிட்டாள்.

போன வாரம் இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஒரு சினேகிதரிடம் சொன்னபோது, அவர் சொன்னார். ''என் உறவுக்காரர் ஒருவருக்கும் அமெரிக்காவில் இதேபோல் அனுபவம். இந்தியாவுக்குத் திரும்புகிற தினத்தன்று ஒரு பான்ட் வாங்கினார். இங்கே வந்து பிரித்தபோது ஓரிடத்தில் தையல் சரியில்லை என்று தெரிந்தது. பான்ட்டை அப்படியே மடித்துப் பெட்டியில் வைத்துவிட்டார். எட்டுமாதம் கழித்து மறுபடி அமெரிக்கா போகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதே கடைக்குப் போய், பான்ட்டைக் கொடுத்து, பில்லைக் காட்டிப் பணத்தைத் திரும்ப வாங்கிவிட்டார். எட்டு மாதம் கழித்து!''

அமெரிக்காரனின் பணமென்ன, பவிஷென்ன, நம்ம ஊர் சாதா வியாபாரிகளுடன் ஒப்பிடலாமா? கூடாதுதான். இருந்தாலும் அடிப்படையான நியாயங்களைக் கூட இங்கே சில பேர் கடைப் பிடிப்பதில்லை என்பதைச் சொல்ல வேண்டும்.

மூன்று மாதங்களுக்கு முன்னால் மதுரையில் ஒரு கேசட் கடைக்குப் போயிருந்தேன். பிரபலமான பெரிய கடை. என்னமோ ஒரு 'கானம்' என்று பெயர். ஒரு டஜனுக்கு மேல் பலவிதமான கேசட்டுகளைத் தேர்ந்தெடுத்து, முதலாளியின் மேஜை மீது வைத்துக் கொண்டிருந்தேன். எல்லாவற்றுக்கும் பில் போடும்படி சொன்னேன். ஐந்நூறு அறுநூறு ரூபாய்போல ஆயிற்று.

பணத்தைக் கொடுத்துவிட்டு, வீட்டுக்கு வந்து ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்தபோது, நான் தேர்ந்தெடுக்காத கேசட் ஒன்றும் இருந்ததைக் கண்டேன். சூலமங்கலம் சகோதரிகளின் 'கந்த ஷஷ்டி கவசம்'. அதை வேறு யாரோ எடுத்து மேஜை மீது வைத்திருக்கிறார்கள். நான் எடுத்து வைத்திருந்த கேசட்டுகளுடன் அது கலந்துவிட்டது. அதற்கும் சேர்த்துப் பணம் கொடுத்திருக்கிறேன் என்று தெரிந்தது. அதே சூலமங்கலம் சகோதரிகள் பாடிய கஷ்ட கவசம் ஏற்கனவே சென்னையில் என்னிடம் ஒன்று இருக்கிறது. மதுரையில் என் பிள்ளையிடமும் ஒன்று இருக்கிறது.

''நாளை நான் என் பாங்க்குக்கு அந்த வழியாகத்தான் போக வேண்டும். திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். அநேகமாய் பணம் தரமாட்டார்கள். வேறு ஏதாவது சுவாமி பாட்டாக வாங்கி வருகிறேன்,'' என்றான் என் பிள்ளை.

அடுத்த நாள் ஞாபகமாகக் கேசட்டும் பில்லும் எடுத்துக் கொண்டு போனான். கேசட்டின் செலஃபன் காகிதம் கூடப் பிரிக்கவில்லை சாயந்தரம் அவன் திரும்பி வந்ததும், ''என்ன பாட்டு வாங்கி வந்தாய்?'' என்று கேட்டேன்.

''எதுவுமில்லை. பணமும் திருப்பித் தரமாட்டார்களாம், வேறு கேசட்டும் கொடுக்க மாட்டார்களாம். விற்றது விற்றதுதான் என்கிறார்கள்,'' என்றான்.

அதிர்ச்சியாக இருந்தது எனக்கு.

ஆனால் இன்னோர் அனுபவத்தைச் சொல்கிறேன்.

போன மாதம் எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. (நானும் சின்ன மனிதன். விபத்தும் சின்ன விபத்து. ஆகவே பேப்பரிலோ டிவியிலோ நியூஸ் வரவில்லை)

அண்ணா நகரில் மிகப் பிரபலமான ஓட்டலில் மாடியேறிப் போனேன். ஊரிலிருந்து வந்திருந்த குழந்தைகளுக்காக நாலு பிளேட் சாம்பார் வடை வாங்கிக் கொண்டேன். அழகிய சிறு பிளாஸ்டிக் பெட்டிகளில் வைத்துத் தந்தார்கள். அவர்கள் கொடுத்த காகிதப் பையில் போட்டு எடுத்துக் கொண்டு கீழே வந்தவன், நடைபாதையை அடையும் இடத்தில் ஒரு படியை 'மிஸ்' பண்ணிவிட்டேன். கால் நழுவி விழுந்ததில், ஒரு பாக்கெட் வெளியே கொட்டிவிட்டது. மற்றவை, பைக்குள்ளேயே கவிழ்ந்துவிட்டன. நல்ல வேளையாக அருகிலிருந்த ஒருவர் என்னைப் பிடித்துக் கொண்டதால், முழங்காலில் லேசான சிராய்ப்பு மட்டும்தான்.

''மேலே போய் வேறே கேளுங்கள்'' என்றார் என்னைப் பிடித்துக் கொண்டவர். அருகிலே இருந்த இன்னொருவர், ''அதெல்லாம் தரமாட்டார்கள். காசு கொடுத்துத்தான் வேற வாங்க வேண்டும்.'' என்றார். அவநம்பிக்கையோடு மேலே போய் நடந்ததைச் சொன்னேன்.

''நீங்கள் கைதவறிக் கொட்டியதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?'' என்று கேஷியர் சொல்லவில்லை. சர்வரை கூப்பிட்டு, வேறே தரச் சொன்னார். கொட்டினது, கவிழ்ந்தது எல்லாவற்றையும் தூரப் போட்டுவிட்டு, நாலு பிளேட் சாம்பார் வடை புதிதாய்த் தந்தார்கள்.

சென்னையிலும், வெளியூர்களிலும் இவர்கள் பல கிளைகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முருகன் அருள் மட்டும் காரணமல்ல.

''இந்தியர்களாகிய நீங்கள் ரொம்ப சுயநலக்காரர்கள். உங்கள் குடும்ப வாழ்க்கையைப் பார்த்தாலே தெரிகிறது,'' என்றாராம் அந்த பிரிட்டிஷ்காரர்.

''எப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று ரோஷமாகக் கேட்டாராம் என் நண்பர்.

''பின்னே என்ன? நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வது ஏதோ இன்ஷ்யூரன்ஸ் பாலிஸி எடுத்துக் கொள்கிற மாதிரி இருக்கிறது. பிற்காலத்தில் நமக்கு ஆதரவு வேண்டும், நம்மைக் காப்பாற்ற ஆள் வேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே குழந்தை பெற்றுப் படிக்க வைத்து வளர்க்கிறீர்கள்,'' என்று மேலும் அவர் குற்றம் சாட்டினாராம்.

''உலகம் பூராவும் அப்படித்தானே?''

''இல்லை. அமெரிக்கர்கள், பிரிட்டிஷ்காரர்கள், ஐரோப்பியர்கள் முதலிய நாங்கள் அப்படிச் செய்வதில்லை. பதினைந்து பதினாறு வயதானதும் உன் வாழ்க்கையை நீயே பார்த்து கொள் என்று குழந்தைகளை வெட்டி விடுகிறோம்.''

''வெட்டி விட்டு?''

''எங்கள் வாழ்க்கையின் பிற்காலத்தைத் திட்டமிட்டு சீர் செய்து கொள்கிறோம். பிள்ளைகளை வீட்டைவிட்டு அனுப்பி வைக்கும் போது, பெற்றோருக்கு நாற்பது வயது ஆகியிருக்கும். பாக்கிக் காலம் பூராவையும் தங்களுக்காகவே செலவிட்டுக் கொள்வதால், வயோதிக காலத்தில் மகனுடைய கையையோ, மகளுடைய கையையோ எதிர்பார்த்து நிற்க வேண்டிய தேவையில்லை. இந்தியர்களைப் பாருங்கள். வளர்த்தேன், படிக்க வைத்தேன், ஆளாக்கினேன். இன்றைக்கு என்னை அம்போ என்று விட்டு விட்டுப் போய்விட்டான் என்று புலம்புகிறார்கள்!'' என்றாராம் அந்த பிரிட்டிஷ்காரர்.

என்னிடம் இதைச் சொன்ன நண்பர், ''பாசம், பிரியம் என்பதெல்லாம் வெள்ளைக்காரர்களுக்கு கிடையாது. நாங்கள் அப்படி இல்லை என்று அவரிடம் சொல்லி வைத்தேன். ஆனால், சமீபகாலமாக முதியோர்களின் பரிதாப நிலைமையைக் கவனித்தால் வெள்ளைக்கார முறை சரிதானோ என்று தோன்றுகிறது'' என்றார்.

இந்த நண்பர் சிறு தொழிற்சாலையொன்றை நடத்தி வருகிறார். ஒழிந்த வேளையில் ஒரு தொண்டு நிறுவனத்தில் பணிகளில் பங்கேற்கிறார்.

அவர் விவரித்த பல கண்ணீர்க் கதைகளில் இரண்டை மட்டும் இங்கே சொல்கிறேன்.

1. ஃபிளாட்பாரத்தில் வயதான பெண்மணி ஒருத்தி மயக்கம் போட்டுக் கிடப்பதாக ஒரு ஃபோன் வந்தது. அழைத்து வாருங்கள் என்று சொன்னோம். ஆட்டோவில் அழைத்து வந்தார் அந்த இளைஞர். 'நடைபாதையில் இந்த அம்மாள் கிடப்பதைத் தற்செயலாகப் பார்த்தேன்' என்று சொன்னார். அவருடைய பெயர், முகவரியை குறித்துக் கொண்டு அவரை அனுப்பிவிட்டு, அந்த அம்மாளுக்கு வைத்திய உதவிகள் செய்தோம். இரண்டு மூன்று நாட்களில் எழுந்து உட்கார்ந்து பேசும் அளவுக்கு அவர் குணம் அடைந்தார்.

''என்னை இங்கே அழைத்து வந்தவர் எங்கே?'' என்று கேட்டார். ''அவர் யாரோ புண்ணியவான். இங்கே உங்களைக் கொண்டு வந்து விட்டு விட்டுப் போனார்'' என்றோம்.

''அவன் யாரோ இல்லீங்க. என்னுடைய சொந்தப் பிள்ளை. பெண்டாட்டியுடன் சேர்ந்து என்னை அடித்து உதைத்து வாசலில் தள்ளிவிட்டான்!'' என்று கண்ணீர் விட்டார் அந்த அம்மாள்.

பிறகுதான் புரிந்தது. அடித்தது உதைத்ததோடு இல்லை. சாப்பாட்டில் நிறைய மயக்க மருந்தைச் சேர்த்துக் கொடுத்து, பேச முடியாத நிலையை ஏற்படுத்தி எங்களிடம் கொண்டு வந்து தள்ளியிருக்கிறான் என்பது.

அவன் கொடுத்திருந்த பெயர், விலாசம் பொய்யானது. அந்த அம்மாள் சரியான விலாசம் சொல்லியதும், அந்த இளைஞனைப் பிடித்து வந்து, அம்மாவை அழைத்துக் கொண்டு போகும்படி சொன்னோம்.

''என் அம்மா அங்கே வந்தால் என் பெண்டாட்டியை இங்கே கொண்டு வந்து விட வேண்டியிருக்கும். எது தேவலை? நீங்களே சொல்லுங்கள்'' என்றான் அவன்! ''உங்கள் குடும்பப் பிரச்சனையை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்லி, அம்மா, பிள்ளை இருவரையும் அனுப்பிவிட்டோம்.

2. ஒரு பால்ய விதவை. வசதியுள்ளவர். வாழ்க்கையில் பிடிப்பு வேண்டும் என்பதற்காக, உறவுக்காரர்களின் குழந்தைகளை ஒவ்வொருவராக அழைத்து வந்து வீட்டில் வைத்துக் கொண்டு படிப்பு, வேலை, கல்யாணம் என்று அவர்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதிலேயே தன் வாழ்க்கையைச் செலவழித்திருக்கிறார். கிட்டத்தட்ட இருபத்தைந்து சொந்தக்காரக் குழந்தைகளை அந்த மாதிரி ஆளாக்கியிருப்பார். வயது எண்பத்தைந்துக்கு மேலாயிற்று. கடுமையான நோய் பாதித்தது. எல்லோரும் அவரைப் பற்றிக் கதை கதையாக நல்லதையே சொன்னார்களே தவிர, யாரும் தங்களுடன் வைத்துக் கொள்ளத் தயாராயில்லை. எங்களிடம் கொண்டு வந்து ஒப்படைத்தார்கள். அது சாயங்கால நேரம். ''நான் இனிமேல் இங்கே தான் இருக்க வேண்டுாமா?'' என்று கேட்டார். ''ஆமாம்மா. நாங்கள் நன்றாய்ப் பார்த்துக் கொள்கிறோம்'' என்றோம். சரியென்று சொல்லிப் படுத்துக் கொண்டார். காலையில் பார்த்தால் இறந்துப் போயிருந்தார். ராத்திரி பூரா எவ்வளவு மனம் புழுங்கினாரோ! அவ்வளவு பேருக்கு அவ்வளவு உதவிகள் செய்தும் இந்த நிர்க்கதிக்கு ஆளானோமே என்று எத்தனை வேதனைப்பட்டாரோ, பாவம்! ஒரே ராத்திரியில் அவருடைய உயிர் பிரிந்துவிட்டது.

மேற்கண்ட இரு நிகழ்ச்சிகளைக் கூறிய நண்பர் ''எங்கள் தொண்டு நிறுவனத்தில் நாங்கள் யாரிடமும் பணம் வாங்குவதில்லை. உண்மையாகவே அனாதைகளாக இருப்பவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்கிறோம். ஆனால் பணம் படைத்த வயோதிகர்கள் நிறையக் கட்டணம் செலுத்தி வசதியான முதியோர் இல்லங்களில் சேர்ந்து கொள்கிறார்கள். முதியோர் இல்லங்களும் தற்போது ஒரு பிஸினஸாக ஆகிவிட்டன. சில சமயம், நாலைந்து பென்ஷன்காரர்கள் சேர்ந்து ஒரு வீடு அமர்த்தி, சமையலுக்கும் மற்ற வேலைகளுக்கும் ஆள் போட்டுக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். எப்படியாயினும் பழைய கூட்டுக் குடும்பத் தத்துவம் காற்றிலே பறந்துவிட்டது. இது கமர்ஷியல் யுகம். அவனவனுக்குத் தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதே பெரிய காரியமாக இருக்கும் போது அப்பாவாவது, அம்மாவாவது! அந்த பிரிட்டிஷ்காரர் சொன்னது போல, இளம் வயதிலேயே பாசங்களை அறுத்துக் கொண்டு தன்னுடைய வயோதிக காலத்துக்கு ஏற்பாடு செய்து கொள்வதுததான் மேல் என்று தோன்றுகிறது'' என்று வருத்தத்துடன் சொல்லிப் பெருமூச்சு விட்டார்.

''அப்படியெல்லாம் நம்பிக்கை இழக்காதீர்கள். நம்முடைய பண்பாடு, பாவ, புண்ணிய உயர்வு, பெரியவர்களிடம் பக்தி இவையெல்லாம் ஒரு நாளும் மறையாது'' என்று தத்துவம் பேசி விடை கொடுத்தேன் நண்பருக்கு.

இருந்தாலும் அன்று ராத்திரி பூரா தூக்கமில்லை.

 கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன்


தேவன் அறக்கட்டளை விழாவுக்காக பாரதீய வித்யா பவனுக்குப்ப போயிருக்கவும் வேண்டாம். கால்தவறிக் கீழே விழுந்திருக்கவும் வேண்டாம்.

அண்ணா நகருக்குக் குடி வந்த பிறகு எனக்கு இது இரண்டாவது விழுகை. (இப்படியொரு சொல் தமிழில் இருக்கிறதா என்று பேராசிரியர் டாக்டர் மறைமலைதான் சொல்ல வேண்டும்.)

இந்தத் தடவையும் சதி செய்த வில்லன் ஒரு சிவப்புக் கம்பளம்தான். இரண்டு வரிசைகளுக்கும் நடுவே வாசலிலிருந்து மேடை வரை நீளமாக விரித்திருந்த சிவப்பு விரிப்புத்தான். "ஆகா! நமக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு!" என்ற அகங்காரத்துடன் முதல் வரிசையை நோக்கி மார்பை நிமிர்த்திக் கொண்டு நடந்ததால், விரிப்பில் இருந்த சிறிய சுருக்கத்தைக் கவனிக்கத் தவறிவிட்டேன். (விழாக்களுக்குச் செல்லும் வயோதிகர்கள் இதைச் சிவப்புப எழுத்தில் எழுதி வைத்துக் கொள்வது நலம்.)

ஒரு இடறு இடறி இரண்டு நாற்காலிகளைத் தாண்டி மூன்றாவது நாற்காலியில் போய் விழுந்தேன். அதில் அமர்ந்திருந்தவர் நல்ல காலமாக ஓர் ஆண்மகன், பெண்ணாக இருந்தால் மேலும் மூன்று நாற்காலிகள் தூரத்துக்கு என்னை எட்டித் தள்ளி விட்டிருப்பார். இந்த நல்லவர், கிழம் நழுவிக் காலில் விழுந்தது என்று அனுதாபப்பட்டவராக என்னை அன்போடு தாங்கிப் பிடித்துக் கொண்டு தன் நாற்காலியிலேயே உட்காரும்படி சொல்லிவிட்டு, வேறொரு இருக்கைக்குப் பெருந்தன்மையுடன் போய்விட்டார்.

"என்ன? என்ன?" என்று பலர் கேட்டார்கள். " யார் விழுந்தது, ரா.கி. ராங்ராஜனா?" என்று சிலர் கேட்டார்கள். "ரா.கி. ரங்கராஜனா? யார் அவர்?" என்று என் பின்னால் ஒருவர் சொல்வதும் காதில் விழுந்தது. ஆகவே இதை நல்ல பப்ளிஸிட்டி என்றும் சொல்ல முடியாது.

வானதி திருநாவுக்கரசு "என்னப்பா? என்ன ஆச்சு?" என்று கேட்டார். தேவன் அறக்கட்டளையின் செயலாளர் சாருகேசியும் எழுத்தாளர் வாதூலனும் வந்து காப்பி சாப்பிடுகிறீர்களா?" என்று பரிவோடு கேட்டார்கள். சற்றுப் படபடப்பாக இருந்ததால் சரி என்றேன். உடனே சென்றார்கள். உடனே மறைந்தார்கள். விழா முடிந்த பிறகுதான் வந்தார்கள். "அடி ஒன்றும் பலம் இல்லையே?" என்றார்கள். காப்பியைப் பற்றி அவர்களும் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. பாவம், அவர்களுக்குத் தலைக்குமேல் வேலை அப்போது.

ஜ.ரா. சுந்தரரேசன் என் நெருங்கிய நண்பர் என்று ரொம்பப் பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கிடையாது. சரியான துரோகி. உள்ளே நுழையும்போதே நான் அவரிடம், "நீங்கள் முன்னால் போங்க. நான் தங்கள் தோளைத் தொட்டாற்போல் வருகிறேன்" என்று சொல்லியிருந்தேன். ஒப்புக் கொள்கிற மாதிரி தலையாட்டியவர், என்னை முன்னால் போகவிட்டு, என் தோளைத் தொட்டாற்போல் பின்னால் வந்தார். நான் விழுந்ததும் எச்சரிக்கை அடைந்து பத்திரமாக வேறொரு வரிசையில் போய் உட்கார்ந்து கொண்டு, "அடி கிடி இல்லையே?" என்று கேட்கிற மாதிரி அங்கிருந்தே கையை வீசிச் சைகையில் கேட்டார். பக்கத்து நாற்காலி காலியாக இல்லை. இருந்திருந்தால் தூக்கி அவர்மீது அடித்திருப்பேன்.

விழா முடிந்த பிறகு என்னிடம் வந்தவர், "விழுந்ததுதான் விழுந்தீர். போட்டோவில் விழுந்திருக்கக் கூடாதோ?" என்று சிலேடை வேறே! இவரா என் சிநேகிதர்!

விழுந்து எழுந்தாவது தேவன் விழாவுக்குப் போயிருக்க வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். தேவனின் எழுத்துக்கு அடிமை நான். அத்துடன், கும்பகோணம் அரசினர் கல்லூரியில் என் தந்தையிடம் சம்ஸ்கிருதம் படித்த மாணவர் அவர். அதனால் என்மீது அவருக்குத் தனிப் ப்ரீதி, மேலும் என் முதல் சிறுகதையை ஆனந்தவிகடனில் பிரசுரித்தவரும் அவரே.

இரண்டு தமிழ்ப் புத்தகங்களை வெளியிடுவது அன்றைய நிரலில் முக்கிய நிகழ்ச்சி. ஒன்று சென்ற வருடம் கல்கியின் சார்பில் நடைபெற்ற நகைச்சுவைப் பயிலரங்கத்தில் பேசிய சிலரின் சொற்பொழிவுத் தொகுப்பு. (என் கட்டுரையும் உண்டு!) 'கல்கி வளர்த்த சிரிப்பலைகள்' என்ற இந்தப் புத்தகத்தில், கல்கியின் எழுத்திலிருந்து சில நகைச்சுவை முத்துக்களையும் தொகுத்துச் சேர்த்திருக்கிறார் வாதூலன்.

இரண்டாவது புத்தகம் 'கல்கியின் கடிதங்கள்' என்ற தலைப்புக் கொண்டது. டி.கே.சி. ராஜாஜி, கல்கி ஆகியோர் தங்களுக்குள் எழுதிக் கொண்ட கடிதங்களுடன், கல்கி தன் மனைவிக்கும், மகனுக்கும், மகளுக்கும் எழுதிய கடிதங்களும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. தொகுத்தவர் சுப்ரபாலன்.

ஆறு மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்க வேண்டும். ஆறேகால், ஆறரை, ஆறேமுக்கால் என்று நேரம் ஓடிக்கொண்டிருந்தது. புத்தகங்களை வெளியிட வேண்டிய ஹிந்து என். ராம் ஏழு மணிக்குத்தான் வந்தார். நிகழ்ச்சி நேரத்தைத் தப்பாக எண்ணி விட்டேன் என்று ஏதோ சாக்குச் சொன்னார். அதையாவது மன்னிக்கலாம். தான் இன்னும் இரு புத்தகங்களையும் வாசிக்க முடியவில்லை என்றும், ஆனால் நிச்சயமாய் நன்றாகத்தான் இருக்கும் என்று நம்புவதாகவும் சொன்னார். இது எப்படி இருக்கு!

பழம் பெரும் எழுத்தாளரான பரணீதரன் ('மெரீனா') புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார்.

ஹிந்துவில் தொடர்ச்சியாக வேடிக்கையான கட்டுரைகளை எழுதி வருகின்ற வி. கங்காதரும், ஹிந்து துணை ஆசிரியர் ஸி.வி. கோபாலகிருஷ்ணனும் (ஸிவிஜி) தேவனின் பரம ரசிகர்கள். தேவன் அறக் கட்டளை சார்பாக இருவருக்கும் பதக்கங்கள் அணிவித்துப் பாராட்டினார்கள்.

தேவனின் படைப்புக்களில் ஒவ்வோர் பகுதியாகக் குறிப்பிட்டு என்னென்ன விதத்தில் அது சிறப்பு என்று கங்காதர் பாராட்டியது பிரமிப்பைத் தரும் பேச்சாக இருந்தது. அடுத்து, ஸிவிஜியும் நன்றாகவே பேசினார்.

இந்த விழாவுக்குப் போனதில் எனக்குக் காலில் மட்டுமல்ல, மண்டையிலும் அடி. எப்படி என்கிறீர்களா?

ஒருத்தர் நம்மைப் பார்த்து 'ரொம்ப யங்காத் தெரியறீங்க' என்று புகழ்ந்தால், நம்மை வயசானவங்கன்னு அவுங்க நினைக்கிறாங்கன்னு அர்த்தமாம்.

- பொன்மொழி பொன்னப்பா.

அண்ணா நகரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஏன் எல்லாரும் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என்று இரண்டு வாரம் முன்பு கிண்டல் செய்தேன் அல்லவா? அதற்கு இங்கே பழிக்குப் பழி.

இந்த விழாவில், பரணீதரன் ஒருவரைத் தவிர மற்ற அத்தனை பேரும், முதல் வாக்கியம் முதல் கடைசி வாக்கியம் வரை ஆங்கிலத்திலேயே பேசினார்கள்! அதுவும் முழுக்க முழுக்கத் தமிழ் எழுத்தாளரான தேவனின் ரசிகர்கள் நிறைந்த தமிழர்களின் கூட்டத்தில்! தமிழிலேயே பிறந்து தமிழிலேயே வளர்ந்த அக்மார்க் தமிழர்கள், ஆங்கிலத்திலேயே சண்டை மாருதம் செய்தார்கள்!

புத்தி, புத்தி இனிமேல் எந்தப் பேச்சாளர்களையும் கேலி செய்ய மாட்டேன். கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன்.

புனிதன்

புனிதன்

நான் பத்திரிகைத் துறைக்கு வந்ததே ஒரு விபத்து மாதிரிதான்.

பள்ளிப் பருவத்திலிருந்தே எனக்கு எழுத்தில் ஆர்வம். குறிப்பாகக் கவிதைத் துறை. கி.ஆ.பெ., அவர்கள் 'தமிழ்நாடு' என்று ஓர் அரையணாப் பத்திரிகை நடத்தி வந்தார். அதில் 'ஒட்டக் கூத்தன்' என்ற புனைப்பெயரில் எனது கவிதைகள் (மரபு) இடம் பெற்றன.

முருகு சுப்பிரமணியம் அவர்களை ஆசிரியராகக் கொண்ட 'பொன்னி'யில் பாரதிதாசன் பரம்பரை என்ற சங்கப் பலகை என் கவிதைக்கு இடமளித்திருக்கிறது.

நானாக இரண்டு மேடை நாடகங்கள் எழுதி, மேடையேற்றி நடித்தும் இருக்கிறேன்.

இத்தனையும் தெரிந்திருந்தும், என் தந்தையார் எனது எழுத்தார்வத்தின் மென்னியைத் திருகியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு என்னைப் பொறியியல் துறையில் புகுந்தே ஆகவேண்டும் என்று. முதலில் கோவை பி.எஸ்.ஜி., பொறியியல் கல்லூரியில் பொறியியல் துறையில், எல்.டி.எம்.,மில் சேர்த்தார். அதை முடிக்கு முன், இரண்டாண்டு போதுமென்று இழுத்து வந்து அவரது விசைத் தறிக் கூடத்தை மேற்பார்க்க விட்டார்.

அப்போதும் என் கவனம் அந்த நாள் 'பிரசண்ட விகடன்,' 'ஆனந்த போதினி பத்திரிக்கைகளில் என் எழுத்தை அச்சேற்றி ஆனந்த படுவதிலேயே குறியாய் இருந்தது. விட்டாரா அப்பா?

முன்னாள் ராணுவத்தினர் தொழில் பயிற்சி முகாமாய் இருந்த ஐ.டி.ஐ., சிவிலியன்களுக்கு திறந்து விடப்படுவதாய் '51ல் செய்தி வர, அந்தக் கல்லூரியில் தொழில் பயிற்சி பெறும்படி சொன்னார். என்ன தொழில்?

'விண்ணப்பித்து வை. கிடைக்கிற தொழிலில் சேர்ந்து கொள்.'

விண்ணப்பித்தேன். துரதிர்ஷ்ட வசமாய் நான் பிசிக்ஸ், கணக்குப் பாடங்களில் நல்ல மார்க் எடுத்திருந்ததால், 'ரேடியோ மெக்கானிஸம்' துறையில் அரசு உதவிச் சம்பளத்தோடு (ரூ.25) இடம் கிடைத்தது.

தி.நகரில் வடக்கு உஸ்மான் ரோடை ராஜாஜி அவர்கள் குடியிருந்த பஸ்லுல்லா ரோடு வெட்டிக் கொண்டு செல்லும் அந்த மூலைத் தென்னந்தோப்புக்கு மத்தியில் இருந்தது அன்றைய ஐ.டி.ஐ.,

நான் சென்னைக்கு வந்து சேர்ந்ததே அப்போதுதான். அதற்குப் பிறகு நான் என் சொந்த ஊரான தர்மபுரி வாசத்தை இழந்துவிட நேரும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவில்லை.

தமிழ்வாணன் சீண்டல்

என் தோழர், குரு,
வழிகாட்டி தமிழ்வாணன்

உஸ்மான் ரோடு குறுக்குத் தெருக்களில் ஒன்றான வியாசராவ் தெருவில் பிரம்மசாரி தமிழ்வாணன், தன் சகோதரர் ஆனாருனாவுடன் குடியிருந்தார். ஆனாருனா நடத்தி வந்த மெஸ்ஸில் ராயவரம் நடராசன் சாப்பிட்டு வந்தார்.

நடராசன் எனது ரேடியோமெக்கானிஸம் வகுப்பு தோழர். எங்கள் விடுதி (பேரக்ஸ்)சில் எனக்கு அடுத்த கட்டில் அவருடையது. நாங்கள் இருவரும் நல்ல தோழர்கள். அவர்தான் ஒருநாள் என்னை அழைத்துச் சென்று தமிழ்வாணனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ' இவர் கூடப் பத்திரிக்கைக்கு எழுதுவார் அண்ணே,' என்றார்.

தமிழ்வாணன் என்னை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, 'என்ன எழுதுவீங்க' என்று கேட்டார்.

'கவிதைதான் எழுதுவேன்,' என்றேன் மகா கர்வத்தோடு.

உடனே கைதட்டி ஒரு கேலிச் சிரிப்பு சிரித்தாரே பார்க்க வேண்டும், எனக்கு மரண அடி. தொடர்ந்து, 'இப்பல்லாம் கவிதையை யார்சார் படிக்கிறாங்க? நீங்க ஏழெட்டு கதை எழுதிட்டு வந்து கொடுத்துட்டுப் போங்க. அதிலே ஏதாவது ஒண்ணை செலகட் பண்ணிக் கல்கண்டிலே வெளியிடலாம்,' என்றார்.

தமிழ்வாணன் மட்டும் என்னை இப்படிச் சீண்டி விடாமல் இருந்திருந்தால், நான் பத்திரிகைத் துறைக்கு வந்திருப்பேனா? என்பது சந்தேகம்தான்.

அவர் அப்படிச் சொன்னதும், எனக்குள்ளிருந்து ஓர் உத்வேகம். பேரறிஞர்களின் அங்கீகாரம் பெற்றுப் பெரியவர்களுக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து, சிறுவர்களுக்கான கதைகள் ஏழெட்டு எழுதித் தந்தால், அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் போடுவதாய் ஒருத்தர் சொல்லப் போச்சா? அதையும் பார்த்விடுவோம்!

தமிழ்வாணன் வீட்டிலிருந்து என் விடுதிக்கு இரண்டு கி.மீ., தூரத்துக்குள்தான் இருக்கும். வந்து சேர்வதற்குள் இரண்டு சிறுவர் கதைகளுக்கான பிளாட் உதயமாயிற்று. அப்போதே முனைப்பாக உட்கார்ந்து எழுதி முடித்து விட்டேன் இரண்டு கதைகளையும்.

மறுநாள் ராயவரம் நடராசனிடம் இரண்டு கதைகளையும் கொடுத்து, 'கொண்டு போய் உங்கள் தமிழ்வாணனிடம் கொடுத்து விடு,' என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.

அதற்குப் பிறகு இரண்டு வாரத்துக்கு மேல் நான் தமிழ்வாணன் இருந்த திசையிலேயே திரும்பவில்லை. பிறகு, ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை, நான் என் விடுதியில் இருந்து பனகல் பார்க் சென்று கொண்டிருந்தேன். பின்னாலிருந்து யாரோ என் பெயர் சொல்லிக் கூப்பிடுவது கேட்டது.

திரும்பிப் பார்த்தால், தமிழ்வாணன்! அவரது அட்டகாச சிரிப்போடு என்னை நெருங்கி வந்து தோளில் தட்டிக்கொடுத்தார். 'என்ன நீ, கல்கண்டு பார்க்கலையா?' என்றார்.

'நான் அதெல்லாம் பார்க்கிற வழக்கமில்லை,' என்றேன் விறைப்பாக.

மறுபடியும் அதே சிரிப்பு. 'சரி, இப்பபார்,' என்று அந்த வாரத்துக் கல்கண்டை என் முகத்தெதிரே நீட்டினார்.

ஓவியர் ரவியின் அட்டைப் படம். உள்ளே புரட்டினேன். அட்டையும், அடுத்த பக்கமும் புரட்டியவுடனே என் கதை. சிறுவர்களுக்காக நான் எழுதிய முதல் கதை! 'சண்முகம்' என்ற பெயரில் வெளிவந்திருந்தது.

நான் அவரை வியப்புடன் நிமிர்ந்து பார்த்தேன். 'உம்... மேலே புரட்டு...' புரட்டினேன். நடுப் பக்கத்துக்கு அப்பால் என்னுடைய அடுத்த கதை. 'சுந்தரம் என்ற பெயரில். நான் கொடுத்தனுப்பிய இரண்டு கதைகளையும் வெளியிட்டு இருந்தார். சண்முகம் +சுந்தரம் =சண்முக சுந்தரம் - என் இயற்பெயர்.

அன்றிலிருந்து தமிழ்வாணனுக்கும் எனக்கும் நட்பு இறுகியது.
ஜ.ரா. சுந்தரேசன், ரா.கி. ரங்கராஜன், புனிதன்

கல்கண்டு உதவியாசிரியர்
ஒருநாள், 'படித்து முடித்த பிறகு என்ன செய்யப் போறே?' என்றார் என்னிடம் கொஞ்சம் சீரியஸாக.

'ஏதாவது வேலை தேடணும்...' என்று இழுத்தேன்.

என் குடும்ப சூழ்நிலை காரணமாக நான் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு -படிப்பு முடியுமுன்னரே- ஆளாகியிருந்த நேரம் அது.

'நீ என் கூடவே இருந்துடு,' என்றார்.

'சரி. இப்ப நான் என் கல்யாணத்துக்கு ஊருக்குப் போக வேண்டியிருக்கு. அதான் சொல்லிக்கிட்டுப் போக வந்தேன்,' என்று விடைபெற்றேன்.

நான் திருமணம் முடித்துக் கொண்டு உறவிலே பெண்- திரும்பி வந்து தமிழ்வாணனைப் பார்க்கக் குமுதம் அலுவலகம் சென்றேன்.

சிந்தாதிரிப் பேட்டை அருணாசல நாயக்கன் தெருவிலிருந்து குமுதம் அலுவலகம், இப்போதுள்ள கெல்லீஸ் கட்டிடத்துக்குப் பெயர்ந்த வேளை அது.

தமிழ்வாணனின் உதவியாளராக, கல்கண்டு துணையாசிரியராக, அப்போது ரா.கி.ரங்கராஜன் இருந்தார்.

ஆசிரியரும், துணையாசிரியரும் 'வா, போ' என்று ஒருமையில் பேசிக்கொள்வது வேடிக்கையாக இருக்கும். விசாரித்தபோது தெரிந்தது. இங்கு வருமுன்னர் இருவரும் 'சக்தி' பத்திரிகையில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள் என்று! ரா.கி.ர., அப்போதெல்லாம் கொஞ்சம் 'ரிசர்வ் டைப்,' அவரிடம் பேசுவதற்கு எனக்கு கூச்சமாய் இருக்கும்.

தமிழ்வாணனுக்கு அடுத்த சீட் ரா.கி.ர.,வுடையது. நான் போயிருந்த சமையம் அந்த சீட் காலியாக இருந்தது. 'ரங்கராஜன் சார் வரலியா? என்று தமிழ்வாணனிடம் கேட்டேன்.

மணியடித்து ஆபிஸ் பையனை வரவழைத்து, 'அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்தரைக் கொண்டா,' என்றார்.

பையன் ரிஜிஸ்தரைத் கொண்டு வந்து என் முன் பிரித்து வைத்தான். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. 1952, ஜூன் மாத ஆரம்பத்திலேயே என் பெயர் பதிவாகியிருந்தது. நான் இரண்டாவது வாரம்தான் சேர்ந்தேன்.

சற்றுப் பொறுத்து, 'சரி, வா. முதலாளியைப் பார்த்து விட்டு வரலாம்,' என்று கூட்டிப் போனார்.

அப்போதுதான் நான் முதன் முதலாக ஆசிரியர் எஸ்.ஏ.பி., அவர்களை நேருக்கு நேர் நெருக்கத்தில் பார்த்தது. ஏதோ காலங் காலமாய் உடனிருந்து பழகியவரைப் போன்ற அன்னியோன்னியத்துடன் அவர் புன்னைகைத்து கை குலுக்கியபோது, சிலிர்த்துப் போனேன். 'தமிழ்வாணன் உங்களைப் பற்றிச் சொன்னார். நல்லா செய்யுங்க. செய்வீங்கன்னு நம்பிக்கை இருக்கு, என்றார்.

அதற்கு மேல் அங்கு இருக்கத் தேவையில்லை என்ற பாவைனையில் தமிழ்வாணன் என்னை ஜாடையாக நோக்கித் தலையசைத்தார். நானும் எழுந்து கொண்டேன். அவருடன் வெளி நடந்தேன்.

அப்போது எனக்குப் பத்திரிகைத் துறையில் முன் அனுபவம் என்று சொல்லப் போனால், பள்ளியில் படிப்பு முடித்த கையோடு வந்த தேர்தலுக்கான, ஓட்டர் லிஸ்ட் புரூப் பார்த்த அனுபவம்தான். தாலுகா ஆபிஸில் ஓய்வு பெற்ற தாசில்தார் முனுசாமி முதலியார் புரூப் திருத்த நல்ல பயிற்சி அளித்திருந்தார். அதுவே பெரிய தகுதி போல் த.வா., பாராட்டினார்.

மற்றபடி பத்திரிக்கை தயாரிக்கத் தேவையான அத்தனை அறிவுக்கும் அஸ்திவாரம் போட்டவர் தமிழ்வாணன்தான்.

குமுதம் நாற்காலி

தமிழ்வாணனிடம் பயிற்சி பெற்றுக் குமுதத்துக்கு வந்தால், தன் பளு ஓரளவு குறையும் என்று ஆசிரியர் எஸ்.ஏ.பி., கருதினார்.

குமுதம் மாதம் மூன்று இதழாக வந்துகொண்டிருந்தது அப்போது.

ஆசிரியருக்கு முழு நேரத் துணையாசிரியராய் ரா.கி.ர., பணியாற்றினாலும். ரிசர்வ் வங்கியில் பணி புரிந்த ஆனந்த தீர்த்தனும், வக்கீலாய் இருந்த ராம. நாரயணனும், இருவரும் பகுதி நேரத் துணைகளாய் இருந்து வந்தனர்.


நாங்கள் மூவரும்
கண்ணாடி
அணியாமல் ஒரு
காலத்தில்
இருந்திருக்கிறோமா?
இதில் நிற்கும் ஜ.ரா.சு.,
அன்று பிரம்மச்சாரி.
இப்போது தன் மூன்று
பிள்ளைகளுக்கும்
திருமணம்
செய்து முடித்துப்
பேரன்களும்
எடுத்து விட்டார்.

ஜ.ரா. சுந்தரேசன் நான் குடியிருந்த வெள்ளாளர் தெருவிலேயே ஓர் அறையில் தங்கி ரேடியோ அஸம்பிளிங் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.கல்கண்டுக்கு கதைகள் நாடகங்கள் எழுதி வந்தார். அதனால், எனக்கு அவருடைய பரிச்சயம் ஏற்பட்டது. இருவரும் ஒரே ஜில்லாக்காரர்கள் என்பதால் பாசம் சுரக்க, 'டா' உறவில் பழக ஆரம்பித்தோம். இன்று வரை அது நீடிப்பது வேறு விஷயம்.

குமுதத்தில் '53 வாக்கில் ஒரு சிறுகதைப் போட்டி வைத்திருற்தார்கள். அந்தப் போட்டியில் ஜ.ரா.சு., கலந்து கொண்டார். பரிசு பெற்றார். அலுவலகத்துக்கு ஜ.ரா.சு., வரப்போக, ஆசிரியர் அவரைக் கவனித்திருந்திருக்கிறார். அவரது எழுத்தும் பிடித்துப் போயிற்று. தமிழ்வாணனிடம் சொல்லிவிட்டுக் குமுதத்தில் இணைத்துக் கொண்டார்.

என்னதான் கல்கண்டில் 'தேசபந்து'வாகக் கொட்டி முழக்கினாலும், பெரியவர்களுக்கு எழுதவேண்டும்; காதல் கதைகள் தரவேண்டும் என்ற ஏக்கம் எனக்கு உள்ளுர இருந்து வந்தது.

நான் கொஞ்சம் வெள்ளை. எதையும் மனசுக்குள் மறைத்து வைக்கத் தெரியாதவன். பட்டதைப் பட்டென்று சொல்லி, கேட்டு, கண்டித்துப் பலரின் வெறுப்புக்கு ஆளான அனுபவம் உண்டு.

அப்படித்தான் ஆசிரியரிடம் நேரில் சென்று, 'எனக்கும் குமுதத்தில் இடம் வேணும்,' என்று கேட்டுவிட்டேன்.

அப்புறம் எனக்கும் ஒருவழியாய் குமுதத்தில் துணையாசிரியர் நாற்காலி போடப்பட்டது.

நானும், சுந்தரேசனும் ஏதும் பிரச்சனை கிளாப்பா விட்டாலும், எங்களை வைத்துக் கொண்டு ஆசிரியரும் ரா.கி.ர.,வும் சிண்டு முடியும் தோரணையில் கலாட்டா செய்வது வேடிக்கையாய் இருக்கும்.

'சீனியர் ஜ.ரா.சு., என்ன சொல்றார்?' என்பார் ரா.கி.,

'அதெப்படி? குமுதம் ஆபீஸ்ல முதல்ல சேர்ந்தவர் புனிதன்தானே? அதனால அவர்தான் சீனியர்,' என்று வக்காலத்து வாங்குவார் ஆசிரியர்.

இது பல சந்தர்ப்பங்களில் பலவித சீண்டல்களாய் வெளிவரும்.

நாம் மூவர்

அன்றைய குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி., அமர்வதற்கு ரா.கி.ரங்கராஜன், புனிதன், ஜ.ரா.சுந்தரேசன் ஆகிய நாங்கள் மூவரும் முக்காலியானோம். முக்காலியில் எந்தக் காலுக்குப் பொறுப்புக் குறைச்சல்?

வெளியுலகத்தில் அதிக சர்குலேஷன் உள்ள பத்திரிகைகளில் எல்லாம் அத்தனை பேர் ஆசிரியர் குழுவில் இடம்பெற்று, தனித்தனி அறைகள், எடுபிடிகள், ஆளம்புகள் என்று அமர்க்களப்படும்போது, இங்கு ஒரே ஒரு ஹாலில் மூன்று மேசை நாற்காலியைப் போட்டுக் கொண்டு, எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் எப்படி இந்தியாவிலேயே அதிக வினியோகம் உள்ள பத்திரிகை என்று பாராளுமன்றத்திலேயே சுட்டிக் காட்டும் அளவுக்குக் கொண்டு செலுத்த முடிந்தது?

முதல் காரணம் ஆசிரியர் வியத்தகு மேதையாய் இருந்து, வேறு எவருக்கும் கட்டுப்படத்தேவை இல்லாத உரிமையாளராகவும் அமைந்தது. கால நேரம், சொந்த விருப்பு வெருப்பு, உடலுபாதை ஏதும் பொருட்படுத்தாமல் ஆசிரியரின் எண்ணத்தை ஈடேற்றி வைப்பதே குறிக்கோளாய்க் கொண்டு, பாடுபட்டு உழைத்தோமே நாங்கள் மூவர், அது இரண்டாவது காரணம்.

ஆசிரியரின் கூர்ந்த மதியாகட்டும், அவரது படிப்பறிவாகட்டும், அனுபவங்களைக் கிரகித்துச் சொல்லும் நுணுக்கமாகட்டும், இந்தக் காரணத்தால் இது இப்படித்தான் நடக்கும் என்று அறுதியிட்டுச் சொல்லும் கணிப்பாகட்டும், அவருக்கு முன்னால், நாங்கள் சிசுக்கள்தான்.

'உங்களுக்கு எந்தக் குழப்பமும் வேண்டாம். நான் வழிகாட்டுகிறேன். நீங்கள் சும்மா என் பின்னால் வந்தால் போதும்,' என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார். அதுவே, எங்களுக்குச் சுமையேதும் இல்லை என்று எண்ண வைத்து லேசாக்கியது.

ஓர் இதழை ஒருவர் கவனித்தால் போதும், மற்ற இருவரும் இதழ் பொறுப்பிலிருந்து விடுபட்டு அடுத்த வேலையைக் கவனிக்கலாம் என்று கழற்றி விட்டு விட்டார். இதனால் ஒவ்வொருவரும் ஒரு வாரம் பணியாற்றினால், இரண்டு வாரம் ஓய்வு என்ற பிரமையில், அந்த ஒரு வார வேலையில் முனைப்பாக ஈடுபட ஒரு தார்மீக உந்து சக்தி பிறந்தது. ஈடுபட்டோம்.

எவரிடம் எந்தத் திறன் ஒளிந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து, வெளிக் கொணர்வதில், அவருக்கு இணையாக இன்னொருவரைச் சுட்டிக் காட்ட இயலவில்லை.
புனிதன்

தினமும் காலையில் வந்ததும், ஒரு 'பெப்டாக்' கொடுப்பார். அதிலே பத்திரிகை பற்றிய கனவுகளை விதைப்பார். அவற்றை நனவாக்க வேண்டும் என்ற ஆவலை, நிறைவேற்றி பார்க்க வேண்டும் என்ற வேகத்தை ஏற்படுத்தும் வகையில் சொல்வார்.

இவை எல்லாவற்றுக்கும் மேல் அவருக்குப் பிடித்த மாதிரியில் நாங்கள் ஏதாவது எழுதி முடித்தால், தட்டிக் கொடுத்து மனசாரப் பாராட்டிப் புகழ்ந்ததையெல்லாம் எப்படி மறக்க முடியும்? இன்று வரை நினைத்துப் பெருமிதப்பட வைக்கிறது.

இந்த இடத்தில் எனக்கு நேர்ந்த அனுபவத்தை மட்டும்தான் என்னால் தர முடியும். இதுதான் அந்தக் காலத்துக் குமுதம் என்று எனக்குத் தோன்றுகிறது. இதோ சில அனுவங்கள்.

மக்கள் படிப்பு

இதழ் முடித்த நேரத்தில் ஒரு விச்ராந்தி முகத்தில் தெரியும். அதை 'விடாயேற்றி உற்சவம்' என்று வேடிக்கையாய் குறிப்பிட்டுச் சிரிப்பார் ஆசிரியர்.

இந்த உற்சவம் எங்களுக்கு மட்டும்தானே தவிர, ஒவ்வோர் இதழிலும் அவர் முகம் தெரியத் தனிப்பட அவர் படும்பாடு ஏதும் எங்களுக்குத் தெரியாது. தெரியாதவாறு மறைத்துக் கொள்வார்.

அந்த ஓய்வு நாட்களில் எங்களுக்கு நோகாமல் அப்படியொரு பயிற்சி கொடுப்பார். படிப்றிவுப் பயிற்சி. எனக்கு ஸ்டீன்பெக், பி.ஜி.உட்ஹவுஸ், ஓ ஹென்றி சிறுகதைகள் அவரது நூலகத்திலிருந்து எடுத்துக்கொடுப்பார். இவற்றை ஆபீஸ் நேரத்திலேயே- மாடியில் மீட்டிங் ஹாலில் உட்கார்ந்து படிக்க வேண்டும். அடுத்த நாள் அதில் ரசித்த கட்டங்களைச் சொல்லி, எந்த எழுத்து முறையால் அது எடுபடுகிறது என்று சுட்டிக் காட்டி ஒரு விவாதம் நடக்கும். அடுத்து எழுதும் கதையில் அந்த உத்திகையாளப்பட வேண்டும்.

இதோடு நிறுத்தாமல் வெளியுலகத் தொடர்பு தேவை என்று இன்னொரு நாள் ஊர்சுற்ற அனுப்புவார்! வெறுமனே சுற்றிப் பார்த்து நமக்கு என்ன ஆச்சு? ஏதாவது வித்தியாசமான மக்களைக் கவனியுங்கள் அவரை பேட்டி எடுங்கள். படம் எடுத்து வர ஏற்பாடு செய்யுங்கள். இரண்டொரு பக்கம் போடலாம்,' என்றார்.

மக்களை பேட்டி முடித்த பிறகு, படம் எடுப்பதற்காக அப்புறமாய் ஒரு போட்டோகிராபரைப் பிடித்து அனுப்பி, நேரத்துக்குக் கிடைக்காமல் அவஸ்தைப் பட்ட முன் அனுபவம் எனக்கு இருந்தது.

அப்போது எனது நண்பர் ஒருவர் யாஷிகா கேமரா ஒன்று எனக்காக சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்து கொடுத்தார். நான் அதற்குமுன் படம் எடுத்ததில்லை. யாஷியா கிடைத்ததும், உற்சாகம் பிய்த்துக் கொண்டது. தோளில் காமெராவை மாட்டிக் கொண்டு, தென் சென்னைப் பகுதியில் சுற்றினேன். சினிமாத் தொழிலாளர்களின் குடிசைக் குடியிருப்புப் பகுதியிலே ஒரு போர்டு கண்ணில் பட்டது.

இங்கே பாம்புகள் படப்பிடிப்புக்கு வாடைகைக்கு விடப்படும்.

'நம்ம பச்சா கூடப் பாம்பு புடிப்பான் சார்!' என்றார்.
ஜ.ரா. சுந்தரேசன்
புனிதன்
ரா.கி. ரங்கராஜன்

இப்போது அவரது உற்சாகம் என்னைத் தொற்றிக் கொண்டது. 'கூப்பிடு, கூப்பிடு,' என்று காமெரா விரித்தேன்.

மூன்று வயதுதான் இருக்கும் அந்தச் சிறுவனுக்கு. சும்மா 'கொழுக் மொழுக்'கென்று இருந்தான். பாவா ஒரு பெரிய நல்ல பாம்பு ஒன்றை அவன் கையில் கொடுத்தார்.எனக்கே பயம். அவர், 'விஷப் பை எடுத்தாச்சு சார். பயப்படாதே,' என்றார்.

பையன் பாம்பைத் தூக்கிப் பிடித்தான். அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. பாம்பை இறக்கி விட்டானோ என்னவோ! பையன் கன்னத்தில் ஓங்கி ஒரு போடு போட்ட அதே தருணம், என் காமெரா 'கிளிக்' செய்து விட்டது.

பிரிண்ட் போட்டுப் பார்த்தால், அந்த உயிர்த் துடிப்பான காட்சி அந்தி வெளிச்சத்தில் காண்ட்ராஸ்ட்டாய் அற்புதமாய் வந்திருந்தது. ஆசிரியர் அதைப் பார்த்து அடைந்த சந்தோஷம்... நண்பர்கள், ஓவியர்வர்ணம் அனைவரையும் கூப்பிட்டுக் காட்டிப் பாராட்டி, 'யார் எடுத்தது தெரியுமா? நம்ம கார்ஷ் ஆப் ஒட்டாவா,' என்றது நேற்றுப்போல் இருக்கிறது.

அந்தத் தெம்பிலே குமுதம் அட்டைக்காகவும் நான் அவ்வப்போது வண்ணப் படங்கள் எடுத்தேன். 'தணிகை' என்ற பெயரில் அவை அன்றைய குமுதம் இதழ்களில் இடம் பெற்றன.

சுந்தர பாகவதர் ஆனேன்

நாங்கள் முவரும் கட்டாயம் ஆளுக்கு ஒரு கதை ஒவ்வோர் இதழுக்கும் எழுதியாக வேண்டும். எல்லாரும் எல்லாவிதமான கதையும் எழுத வேண்டும்.

மொத்தம் ஐந்து கதைகள் ஒவ்வோர் இதழிலும் இடம்பெறும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரசம். நகைச்சுவை, கிராமம், இளைமைத் துள்ளல், க்ரைம் விஞ்ஞானம் அல்லது இவற்றில் காதல் ரசம் தூக்கல். இந்த ஐந்து கதைகளில் இரண்டு கதைகள் மட்டுமே வெளியாருக்கு ஒதுக்கியது. மற்ற மூன்றும் நாங்கள்.இந்த இதழுக்கு எழுதிய கதை வகை, அடுத்த இதழுக்கு எழுதலாகாது. நாங்கள் எழுத வேண்டிய கதைக்கருவைக் கையகலச் சீட்டில் எழுதிக் கொடுத்து 'அப்ருவல்' பெற்றுக் கொண்ட பிறகு, அதை ஆசிரியர் அவர்களுடன் பேசி விளக்கம் பெற்று, எந்த உத்தியில் எழுதுவது என்று தீர்மானித்து, பிறகே எழுத வேண்டும். 'இது நம்ம பத்திரிகை. நமக்குப் பிடிச்ச கதையை நாமதான் எழுதணும். நம்மாலதான் கதைகள்' என்றே அறிவிப்புக் கொடுத்தார்.
ஜ.ரா. சுந்தரேசன்

ஒருமுறை என் பங்காக நகைச்சுவைக் கதை எழுத வேண்டும். ஆசிரியருடன் பேசி முடித்தக் கதை உருவாக்கியாயிற்று. என்ன உத்தியில் எழுதுவது? அன்று காலை ஒரு காலட்சேபம் பற்றி விரிவாக அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதை நினைவூட்டி, அதே காலட்சேப உத்தியில் எழுதும்படி சொல்லிவிட்டார்.கதைப் பிரதியை அவர் படித்த பிறகுதான் அச்சுக்கு அனுப்புவது வழக்கம். அன்று கதைப் பேசி முடித்ததும், அவர் ஊருக்குக் கிளம்ப வேண்டியிருந்ததால், 'நான் பார்க்க வேண்டியதில்லை. கம்போசுக்கு அனுப்பி விடுங்கள் வந்து பார்த்துக் கொள்கிறேன்,' என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். நாளை மறுநாள் வருவதாய்ச் சொல்லியிருந்தார்.

நானும் எழுதி அனுப்பி விட்டேன். 'மீசா புராணம்' என்பது கதைப் பெயர். மனசுக்குள் 'பக் பக்'தான். அவர் நினைத்தபடி கதை இல்லாவிட்டால், நிர்தரட்சண்யமாய் நிறுத்தி விடுவார். நாளை மறுதினம்தான் பேஜ் தயாராகும். எப்படியும் மெஷின் புரூப் பார்க்க வந்து விடுவார். என்ன ஆகுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். இரவு போயிருந்திருக்கும்.

அன்று நான் ஆபீஸ் போனபோது, என்னைப் பார்த்து ஒரேயடியாய்ச் சிரித்தார். 'நல்லாருந்தது. நடுநடுவே இந்த ஸ்டைல்ல கதை எழுதுங்க, என்றார்.

இந்த மாதிரிக் கதைகளுக்காக 'சுந்தர பாகவதர்' நாமகரணம் சூட்டிக் கொள்ளப் பெயர் கொடுத்தவர், சீனியர் ரா.கி.ர.தான்.

'எங்களுக்கு எதற்கு நகை?' என்று ஒரு சுந்தர பாகவதர் கதை. பேசிப் பேசி எழுதியதில் நீண்டு, அடுத்த இதழில் முடித்து விடலாம் என்று சொல்லி, அதிலும் முடியாமல் கட்டாயம் அடுத்த இதழில் முடியும் என்று அறிவித்து... இப்படித் தொடர்ந்து ஐந்து இதழுக்கு நீண்டது.
 

வெள்ளாளத் தெருவில் குடியிருக்கும் போது, அதே தெருவில் குடி இருந்த நடிகர் வி.எஸ்.ராகவன் எனக்கும், சுந்தரேசனுக்கும் பழக்கமானவர்தான். அவர் ஒருநாள் ஆபீஸ் வந்து, சுந்தரேசன் எதிரில் உட்கார்ந்து, அவர் கதையை நாடகமாக்கப் போவதாகக் கேட்டு ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

எந்தக் கதை என்று சுந்தரேசன் கேட்டபோது, 'சுந்தர பாகவதர்னுட்டு எழுதினா கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சேளாக்கும்? அதான் எங்களுக்கு எதற்கு நகை?' என்றதும் சுந்தரேசன் சிரித்தார்.
அதை எழுதியது நான்தான் என்று அறிந்தபோது, வி.எஸ்.ராகவன் நம்பவில்லை அப்புறம் உறுதி செய்து கொண்டு ஒருவிதமாய் கதை வாங்கிச் சென்று, 'நகையே உனக்கொரு நமஸ்காரம்!' என்ற பெயரில் நாடகமாக்கி மேடையேற்றி, எம்.ஜி.ஆர்., கையால் எனக்கும் கேடயம் வாங்கித் தந்தார். வானொலியில் தொடர் நாடகமாய் அது இடம்பெற்றது. அப்புறம் தொலைக்காட்சி நாடகமாகவும் இடம் பெற்றது.

என்னை உசுப்பி விட்டு ஒரு சவால் உணர்வை ஏற்படுத்தி, சுந்தர பாகவதர் ஆக்கியது, ஆசிரியரின் வெற்றி என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
 

கவிதையிலே கதை
அமரர் தமிழ்வாணன்

குமுதத்தில் இணைகையில் நான் வித்துவான் தேர்வு முதலாண்டு எழுதியிருந்தேன். தனியாகப் படித்து வித்துவான் பட்டம் பெற ஆவல். இந்த ஏக்கத்தை ஆசிரியரிடம் சொன்னேன்.

அவர் சற்றுப் பதறிப் போய், 'வேண்டாம் வேண்டாம். பத்திரிகைக்கு உங்கள் தமிழறிவே அதிகம். இதற்கு மேல் வேண்டாம். ஆங்கிலத்தில் ஆர்வம் காட்டுங்கள்,' என்று அறிவுரை வழங்கயதோடு, 'உங்களுக்குக்கென்ன கவிதை எழுதணும். அவ்வளவுதானே? நடுநடுவே எழுதுங்க,' என்று சமாதானம் செய்தார்.

அதன்படி 'கண்ணம்மா' என்ற பெயரில், மரபுக் கவிதைகளாய் அவ்வப்போது (அறுபதுகளில்) எழுதி வந்தேன். ஒரு முறை கதையொன்று பேசும்போது, 'இது கொஞ்சம் கவிதைத்தனமாக இருக்கே. கவிதையிலே எழுதிப் பாருங்களேன்,' என்றார்.

பாரதிதாசனின் 'பாண்டியன் பரிசு, 'எதிர்பாராத முத்தம் போன்ற கதைக் கவிதைகள் என்னைக் கவர்ந்தவை அந்தத் தூண்டுதலில் நானும் ஒரு கவிதைத் கதை தயாரித்தேன்.

பாராட்டி வெளியிட்டார். அதன் பிறகுதான் பகுதி நேரக் கவிஞனின் கவிதைக் கதையே இந்த அளவுக்கு இருக்கும் போது, முழுநேரக் கவிஞரைக் கொண்டு கவிதைக் கதை செய்யச் சொன்னால், இன்னும் சிறப்பாய் இருக்குமே என்று ஆசிரியருக்குத் தோன்றியிருக்கும் போலும்.

கவிஞர் சுரதாவை வரவழைக்க ஏற்பாடு செய்தார். அவரிடம் தேர்ந்தெடுத்து வைத்திருந்த கதையொன்றைத் தந்து, இதைக் கவிதையிலே மாற்றித் தர இயலுமா என்று கேட்டார். அவரும் பெருமையோடு ஒப்புக் கொண்டார்.

அலுவலகத்து மாடியிலேயே கவிஞர் சுரதா மீட்டிங் ஹாலில் அமர்ந்து அந்தக் கதைக் கவிதை எழுதித்தர, குமுதத்தில் இடம்பெற்றது பசுமை நினைவு.

பொள்ளாச்சியில் புனிதன்

ஒருமுறை நா.மகாலிங்கம் அவர்கள் பொள்ளாச்சியில் விவேகானந்தர் விழா நடத்தினார். அதில் சென்னையிலிருந்து கி.வா.ஜ.,வுடன் ஆசிரியரையும் அழைத்திருந்தார். அப்போதெல்லாம் பொதுக் கூட்டங்களில் பேசுவதுண்டு. பேச்சுக்காக அவர் மெனக்கெட்டு ஆயத்தம் செய்து கொள்வதை பார்க்கும் போது இத்தனை மெனக்கெடல் தேவையா? என்று தோன்றும்.

அப்படி அவர் பொள்ளாச்சியில் சென்று வந்த பிறகு, அங்கு நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் கூறினார். நினைவு கூர்ந்து, கூடுமானவரை அவர் வார்த்தையிலேயே தருகிறேன்.

'நான் மேடையிலே உட்கார்ந்திருக்கிறேன். பக்கத்திலேயே, அந்தக் காலேஜ் பிரின்சிபால் உட்கார்ந்திருந்தார். அவர் என் காதுகிட்ட வந்து. 'இப்ப உங்க புனிதன் வரப் போறார்,' என்றார்.

'நான், 'வரமாட்டார்,' என்றேன்.

ஏன் அப்படிச் சொல்றீங்க? நான் இங்க வர்றதுக்கு முன்னால அவரைப் பார்த்தேன். பின்னாலேயே வரதா சொன்னாரே,'ன்னார்.

நான், பார்த்திருக்க முடியாது. ஏன்னா, நான் ரயில் ஏர்றப்ப புளிதன்தான் ஸ்டேஷனுக்கு வந்து வழியனுப்பிச்சார். என்கிட்ட சொல்லாம அவர் எப்படி வர முடியும்? என்றதும் முகம் ஒருமாதிரியாயிடுச்சு.

'எனக்கு அப்பவே சந்தேகம்தான்னு சொன்னார்.

அவங்க காலேஜ் ஸ்டாப்பாம் அந்த ஆள். தான்தான் புனிதன்னு சொல்லிக்கிட்டு குமுதத்திலே வர்ற கதையை எடுத்து வச்சிட்டு அதைத்தான் எப்படி எழுதினேன், இன்ஸ்பிரேஷன் எது, காரெக்டர் எப்படி உருவாச்சுன்னெல்லாம் லெக்சர் வேற கொடுப்பாராம். எப்படியிருக்கு?

'அதுக்கப்புறம் யாராவது புனிதன்னு சொன்னால், 'யாரு, பொள்ளாச்சி புனிதனா?' என்று கிண்டலடிப்பார்.
 

சொல்லச் சொல்ல எழுதுவேன்
புனிதன்
 

அந்த நாளில் ஆசிரியரின் நாவல்கள் குறிப்பாக ஓவியம்- அவர் சொல்லச் சொல்ல நான்தான் பிரதியெடுப்பது வழக்கம்.

அவர் வீட்டுக்கு அழைக்கிறார் என்றால், பெரும்பாலும் எழுதுவதற்காகத்தான் இருக்கும். நீண்ட கைப்பிடியில் பலகை வைத்து, சாய்ந்து உட்கார்ந்து எழுதுவதற்கென்றே டிஸைன் செய்த அந்தப் பிரம்பு நாற்காலியில்தான், அவர் வீட்டில் என்னைப் பார்க்கலாம்.

அவர் டிக்டேட் செய்யும் அழகே அழகு! நடமாடிக் கொண்டு, நடித்துக் கொண்டுகொச்சயாய் அவர் பேசுவதை நான் இலக்கண சுத்தமாய் எழுதி விடுவேன் என்ற அவரது நம்பிக்கையை இறுதிவரை காப்பாற்றி விட்டேன்.

நான் முறைப்படி 1988ல் ஓய்வு பெற வெண்டியிருந்தது. இருந்தம், ரா.கி.ர.,வைப் போல நானும் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

முதல் ரிடையர்மெண்ட்

அந்த நேரத்தில் குமுதத்தில் அக்கறையுள்ள பலர், 'உங்களுக்கும் வயதாகி விட்டது. உங்கள் உதவியாளர்களும் ஓய்வு நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். குமுதத்தின் எதிர்காலம் என்ன?' என்கிற மாதிரி கேட்டு யோசிக்க வைத்தர்கள்.

அப்போதுதான் நிர்வாகத்தினர், புது ரத்தம் புகுத்த மாலன், பிரபஞ்சன் ஆகிய இலக்கியவாதிகளையும், ப்ரஸன்னா, ப்ரியா கல்யாணராமன் ஆகிய இளைஞர்களையும் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

இலக்கியவாதிகள் இருவருக்கும் குமுதம் சரிப்பட்டு வரவில்லை. விலகி விட்டனர். நானும் கண்ணியமாய் விலகிக் கொண்டு விட்டேன். உடனடியாய் தினமலர் வாரமலர் இதழில் தொடர்கதை எழுதும் வாய்ப்பைப் பெற்றேன்.

அதே நேரத்தில் கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரன் அவர்களும் என்னை கவுரவித்தார். கோகுலம் கவுரவ ஆசிரியராய் இருந்த அழ. வள்ளியப்பா அவர்கள் திடீர் மரணமடைந்திருந்த தருணம் அது. நான் துவக்கத்தில் தேசபந்துவாக கல்கண்டில் மிளிர்ந்ததை அவர் அறிவார். எனவே, அழ. வள்ளியாப்பா அவர்களின் இடத்தை நிரப்ப என்னை அழைத்தார். ஏதோ ஒருவகையில் பத்திரிகைப் பணி தொடர்ந்தது. வாரமலர் இதழில் அடுத்தடுத்து மேலும் மூன்று தொடர்கதைகள் எழுதினேன்.ஆனந்த விகடனில் 'அப்புறம் என்ன ஆச்சு?' என்று சுந்தர பாகவதரின் முதல் தொடர் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது. கல்கியில் தொடர்ந்து சினிமா விமர்சனம் செய்தேன் பி.எஸ்.எஸ்., என்ற பெயரில்.

நான் குமுதத்தை விட்டு விலகிய பிறகும், ஆசிரியரை விட்டு விலகவில்லை, வெள்ளிக்கிழமைதோறும் மாலை ஐந்து மணிக்கு மேல் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவருடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்புவேன்.

இரண்டாம் அப்பாயின்ட்மெண்ட்

அப்போதே ஆசிரியர் பேச்சில் தெளிவு காணாமல் போயிருந்தது. அவரது உடல் நிலை குறித்து வருத்தம் ஏற்பட்டது.

அக்டோபர் 1990ல் ஜ.ரா.சு., வீட்டுக்கு வந்தார். ஆசிரியர் என்னை மீண்டும் வேலைக்கு வரும்படி அழைத்ததாகச் சொன்னார்.

ஜ.ரா.சு., ஓய்வு பெறப் போவதாகவும், ஊரில் தமது நிலபுலன்களைக் கவனிக்க வேண்டியிருப்பதால். தொடந்து பணியாற்ற இயலாது என்றும், ரா.கி.ர.,வுக்கும் அடிக்கடி உடல் நலம் இல்லாமல் போவதால் என் துணையை ஆசிரியர் எதிர்பார்ப்பதாயும் சொன்னார்.

வீட்டில் உள்ள எவருக்கும் நான் திரும்பக் குமுதத்துக்குச் செல்வதில் விருப்பம் இல்லை. வீட்டிலிருந்தவாறே நான் சுதந்திரமாய் எழுவதுதான் எனக்கும் சுகம், அவர்களுக்கும் வசதி என்று நினைத்தார்கள். இரண்டாண்டு காலத்தில் நான் இதற்கு முன் இத்தனை தொடர்கதைகள் எழுதியதில்லையே!

இருந்தாலும் நான் நன்றி மறக்கவில்லை. முகவரி இல்லாமல் இருந்த எனக்கு, முகவரி கொடுத்தவர் ஆசிரியர். தந்தை ஸ்தானத்திலிருந்து நமது குடும்பப் பிரச்னைகளுக்கு அவர் தீர்வு காட்டியது மறக்க முடியாதது. அவரை இன்றும் என் தந்தை ஸ்தானத்தில் வைத்தே மதிக்கிறேன். அவரே என் உதவி தேவை என்று ஆள் விட்டிருக்கும்போது, நான் அதைத் தட்டிக் கழிக்கத்தயாரில்லை,' என்று மீறிக் கொண்டு சென்றேன்.

போகப் போகத்தான் தெரிந்தது, ஆசிரியர் எதை எதிர்பாத்து என்னை மீண்டும் அழைத்தார் என்பது.

பத்திரிகைக்கு இளரத்தம் தேவை என்று இன்றைய ஆசிரியர் குழுவினர் மூவரையும் கொண்டு வந்து சேர்த்தார்கள். அந்த மூரில் ஒருவரை நான் கொண்டுவந்து சேர்த்தேன்.

மூவருக்கும் பத்திரிகைத் தொழிலில் பயிற்சி தர எஞ்சியிருந்தது நான் மட்டும்தான். ரா.கி.ர.,வும் ஓய்வு பெற்று வீடு திரும்பி விட்டார். தொடர்ந்து ப்ரஸன்னாவும் விடைபெற்றுக் கொண்டார்.

ப்ருப் ரீடிங்கிலிருந்து பேஜ் மேக்கப் அமைப்பு முறை வரை அவர்கள் என்னிடம் கேட்டுக் கேட்டு தெரிந்து கொண்டார்கள். புரிய வைத்தேன். புரிந்து கொண்டார்கள்.

'சரியான நேரத்தில் நீங்கள் திரும்ப வந்து பெரிய ஒத்தாசை செய்திருக்கிறீர்கள். மறக்க முடியாது,' என்று மனம் திறந்து எனக்குப் புகழ் மாலை சூட்டினார் ஆசிரியர்.

எனக்கு அதுபோதும். ஆசிரியர் இடறி விழுந்து விட்டதாய்க் கேட்டு ஏப்ரல் 6ம் தேதி அவரைக் காண வீடு சென்றேன். மூக்கிலே கொஞ்சம் சிராய்ப்புத் தெரிந்தது.

இன்னும் இரண்டு நாளில் ஸ்டேட்ஸ் போவதாயும். அதுவரை குமுதத்தைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பைச் சிலரிடம் ஒப்படைத்துச் செல்வதாயும் சொன்னார். அனேகமாய் எனக்கு விடைதரும் விதமாய் இருந்தது அவர் பேச்சு. ஏப்ரல் 17 ஞாயிறு இரவு ப்ரியா கல்யாணராமன் போன் செய்து ஒரு சகாப்தம் முடிந்த செய்தி சொன்னார்.

ஆசிரியர் என்னை ஆளாக்கியதற்கு பிரதியாக அவர் எதிர்பார்த்த அளவுக்கு செய்து விட்டதாகவே நிறைவடைகிறேன்.

ஆசிரியர் அழைத்ததற்காக குமுதம் அலுவலகத்திற்குள் திரும்ப நுழைந்தேன். இதற்கு மேல் எனக்கு அங்கு வேலை இல்லை என்று இரண்டாம் முறையாக ஓய்வு பெற்று திரும்பி விட்டேன்.

ஆசிரியர் இல்லாத அலுவலகத்துக்குள் எட்டிப் பார்க்கவும் இப்போது மனசு இடம் தர மாட்டேன் என்கிறது.

பின்னுரை

நாற்பது ஆண்டுகள்! குமுதத்தில் எனது நாற்பது ஆண்டு கால நீண்ட பயணம் ஆசிரியர் அவக்ளின் இறுதிப் பயணத்துடன் நிறைவெய்தி விட்டது.

எத்தனை எத்தனையோ இன்ப-துன்ப அனுபவங்கள். அவற்றில் கசப்பையெல்லம் விழுங்கிக் கெண்டு, எண்ணிப் பார்த்துப் பெருமிதம் கொள்ளத்தக்க இன்ப நிகழ்வுகளில் சிலவற்றை இங்கு நினைவு கூர்ந்தேன்.

அதில் ஓரளவு தம்பட்ட ஓசை எழுப்பியிருக்கிறேன் என்பதை நான் மறுக்கவில்லை. அது சாமானியனாய் இருந்த என்னை, இந்த அளவு தம்பட்டம் அடித்துக் கொள்ளத்தக்கவனாய் மாற்றிய ஆசிரியரின் பெருமையை வெளிப்படுத்துவதற்காகத்தான் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

வீரப்பர் என்ற வி.ஐ.பி!


ளுக்கு ஆள் சந்தனக் கடத்தல் வீரப்பரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், நான் கிட்டத்தட்ட அவரை சந்தித்திருக்கிறேன் என்பதை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். (ஒரு படா கெள்ளைக்காரனுக்கு, மகா கடத்தல்காரனுக்கு, பயங்கரக் கொலைகாரனுக்கு 'அவர்' என்ன வேண்டிக்கிடக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். தமிழ் டிவிக்களும், தமிழ் தினசரிகளும் முதலில் இரண்டு வரிகள் 'அவன்' என்று குறிப்பிட்டு விட்டு, உடனே மாபெரும் தவறு செய்து விட்ட மாதிரி 'அவர்' என்று மாற்றிக்கொள்கின்றன. (தூதர்ஷனில் மட்டும் 'அவன்' என்றே கடைசிவரை சொல்லிவருவதாக ஒரு நண்பர் சொன்னார்).

எனக்கு இந்த மாதிரியான 'அவன்' 'அவர்' குழப்பமெல்லாம் கிடையாது. கன்னட நடிகர் ராஜ்குமார் நல்லபடி வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்ட பின், வீரப்பரை அவர் என்றே இங்கு குறிப்பிடுகிறேன்.

முன்னொரு காலத்தில் நான், புனிதன், ஜ.ரா. சுந்தரேசன் மூவரும் சேர்ந்து சினிமா பார்க்கப் போவது வழக்கம், குமுதத்தில் விமர்சனம் எழுதுவதற்காக. அனேகமாக கிராமத்துப் பின்னணி கொண்ட படங்களாகத்தான் இருக்கும். ஒரு நாள் நான் நண்பர்களிடம் "கிராமத்து நடுவில் சளசளவென்று சிற்றோடை ஓடுகிறது. இளம் பெண்கள் இடுப்பில் குடத்தைச் சுமந்துகொண்டு அங்கே போய் நீர் மொண்டு கொண்டு ஒய்யாரமாக வருகிறார்கள். ஆகாயத்தில் 'S' எழுதுகிற மாதிரி கையை வளைத்துக் கொண்டு ஒய்யார நடைபோடுகிறார்கள். இது போன்ற கிராமம் நிஜமாகவே இருக்கிறதா? இருந்தால் நேரில் பார்க்க வேண்டும்" என்றேன்.

அடுத்த ஒரு வாரத்தில் பல சினிமா நிருபர்களை நாங்கள் பேட்டி கண்டோம். சத்தியமங்கலத்துக்கு அருகே (கவனியுங்கள்: சத்தியமங்கலம்!) ஷுட்டிங்குகள் நடைபெறுகின்றன என்றும் அங்கே உண்மையிலேயே இது போன்ற கிராமங்கள் இருக்கின்றன என்றும் பேட்டியில் தெரிய வந்தது. சத்தியமங்கலத்துக்கு எப்படிப் போவது
என்று கேட்டோம். ஈரோடுக்கு ரயிலில் போனால் அங்கிருந்து பஸ்ஸில் போகலாம் என்றார்கள்.

அடுத்த வெள்ளிக்கிழமை இரவு ரயிலேறினோம். சனி, ஞாயிறு தங்கிவிட்டுத் திங்கள் காலை
திரும்பி விடுவதாகத் திட்டம். (நாங்கள் மூவரும் இப்படித்தான் பல ஊர்களுக்கும் போய் வந்திருக்கிறோம். திங்கள் காலையில் கொள்ளை வேலை காத்திருக்கும். அரை நாள் தாமதமானால் போச் போச்!)

ஈரோடில் சுந்தரரேசனுடைய உறவுக்காரர் ஒருவர் இருந்தார். சிறிய கைத்தறி மில் நடத்தி வந்தார். அவர் வீட்டில் குளித்து சாப்பிட்டுவிட்டு சத்தியமங்கலம் பஸ்ஸில் புறப்பட்டோம். தமிழ் நாட்டில் எந்த ஊருக்கும் முன்னறிவிப்பு இல்லாமல் போக எங்களுக்கு ஒரு வசதி இருந்தது. அதாவது, மூலை முடுக்கெல்லாம் குமுதம் விற்பனையாளர்கள் இருப்பதால் அவர்களைப் பிடித்தால் அந்த ஊரில் தங்குவதற்கான வசதிகளை செய்து கொடுப்பார்கள். (செலவுகள் எங்களுடையதுதான்.)

அந்த தைரியத்தில்தான் சத்தியமங்கலம் போனோம். விற்பனையாளரின் கடையை விசாரித்து அறிந்து அங்கே சென்றோம். அந்தோ! அவர் ஈரோடுக்குப் போயிருப்பதாகவும் வருவதற்கு இரண்டு மூன்று நாட்களாகும் என்றும் கடையிலிருந்த பையன் சொன்னான்.

ஆளுக்கொரு ஜோல்னாப் பையை மாட்டிக்கொண்டு அந்தக் கடைத் தெருவில் அசட்டு விழி விழித்துக்கொண்டு நின்றோம். "மெட்ராசிலிருந்து வந்திருக்கிறோம். சினிமா ஷூட்டிங் நடக்குமாமே, எங்கே?" என்று யாரையும் கேட்கவும் கூச்சமாக இருந்தது. தோல்வி முகத்துடன் ஈரோடு திரும்பத் தீர்மானித்து, பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தபோது, "ஸார்! இங்கே எங்கே வந்தீங்க?" என்ற குரல் கேட்டது.

"அட! நீயா?" என்றார் சுந்தரேசன். (எப்போதும் அவருக்கு அந்த ராசி உண்டு. ஸஹாரா பாலைவனத்திற்குப் போனால் கூட, ஒட்டகத்தின் பின்னாலிருந்து ஒரு ஆள் எட்டிப் பார்த்து "ஸார்! நீங்களா!" என்று கேட்பான்!)

கூப்பிட்டவர் இளைஞர். சென்னையில் ராஜேந்திரன் என்ற டாக்டரின் தம்பி. அந்த ராஜேந்திரன் ஆஸ்திரேலியாவுக்குக் போய்க் கொட்டி முழக்கிக் கொண்டிருந்தார். (இப்போதும் கொட்டி முழக்கிக் கொண்டுதான் இருப்பார்!) ராஜேந்திரனை நானும், புனிதனும் பார்த்திருக்கிறோம். அவர் தம்பியைப் பார்த்ததில்லை. சுந்தரேசன் பார்த்திருக்கிறார், பழகியிருக்கிறார்.

கொஞ்சம் கூச்சத்துடன் நாங்கள் ஷூட்டிங் பார்க்க வந்த சிறுபிள்ளைத்தனத்தைச் சொன்னோம், "அதற்கு நீங்கள் கோபிசெட்டிப் பாளையம் போயிருக்க வேண்டும். பரவாயில்லை என்னோடு வாருங்கள். கார் இருக்கிறது. என் வீட்டுக்குப் போய்விட்டு மற்றதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்" என்று அழைத்தார். இந்த மட்டில் துணை கிடைத்ததே என்று ஆண்டவனுக்கு நன்றி சொல்லியபடி காரில் ஏறினோம். "எங்கே உங்கள் வீடு?" என்று புனிதன் கேட்டார்.

"அந்தியூர்" என்றார் அவர் (மறுபடியும் கவனியுங்கள்: அந்தியூர்!) "ஒரு வேலையாக இங்கே வந்தேன். ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த சமயம் நல்ல வேளையாக உங்களைப் பார்த்தேன்" என்றார்.

அந்தியூர் அழகான ஊர். மரங்கள் நிறைந்த ஒரு சாலையில் அவருடைய பெரிய வீடு. வீட்டைவிடப் பெரிய மனது டாக்டர் ராஜேந்திரனின் அப்பாவிற்கும் அம்மாவிற்கும். அருமையான சாப்பாடு போட்டார்கள். அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு கிரிக்கெட் மேட்சை டி.வி.யில் பார்த்தேன்.

"வாருங்கள், பன்னாரி அம்மன் கோவிலுக்குப் போகலாம்" என்று காரில் எங்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டார் ராஜேந்திரனின் தம்பி. (மறுபடியும் கவனியுங்கள்: பன்னாரி!)

பிள்ளையார் கோவில் மாதிரி சின்னக் கோவில். (அந்த நாளில்). அம்மனை தரிசித்து, கோவிலை வலம் வந்தோம். "அடிக்கடி ஷூட்டிங் நடக்கிற இடம் ஒன்று அருகில் இருக்கிறது. பார்க்கலாம் வாருங்கள்" என்றார் நண்பர்.

போனோம், பார்க்கவில்லை. ஏனெனில் அங்கே அன்று எந்த ஷூட்டிங்கும் நடைபெறக் காணோம். நீளமாய்ப் பாலம் மாதிரி குறுக்கே ஒன்று தெரிந்தது. ஆற்று நீர் அதன் மீதாக மெதுவே ஓடி வழிந்து கொண்டிருந்தது. அங்கே பல டூயட் காட்சிகள் எடுத்திருப்பதாக நண்பர் சொன்னார்.

அவருடன் திரும்பி ஈரோடுக்கு பஸ் ஏறினோம். அது என்ன ரூட்டோ தெரியாது. நல்ல தூக்கம். வழியில் கண்டக்டர், "சார்! இதுதான் பாக்யராஜின் ஊர். வெள்ளங் கோவில். அதோ அப்படிப் போனால் அவருடைய வீடு" என்றார்.

ஏதோ சிவன் கோவிலைப் பற்றிச் சொல்கிறார் என்று அரைத் தூக்கத்தில் எண்ணி ஹர ஹர மகா தேவா என்று கன்னத்தில் போட்டுக் கொண்டேன்.

("வீரப்பனைப் பற்றி ஸாரி, வீரப்பரைப் பற்றி இந்தக் கட்டுரையில் ஒன்றும் காணோமே?!" என்று கேட்காதீர்கள். நான்தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே, 'கிட்டத்தட்ட சந்தித்தேன்' என்று? நான் அன்று சுற்றிய வட்டாரங்களில்தான் வீரப்பர் ஒரு காலத்தில் சுற்றியிருக்க வேண்டும்.


புனிதன்

ன் ஐம்பதாண்டுக் கால நண்பரான புனிதன் என்ற சண்முகசுந்தரம் திடீரெனக் காலமாகி விட்டார்.

அயனாவரத்தில், அவருடைய பிள்ளையின் வீட்டில், இறுதி சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, முன்பின் தெரியாத ஓர் இளைஞர் என்னிடம் வந்து, தாழ்ந்த குரலில், 'நேற்றும் ஆஸ்பத்திரியில் உங்களை கவனித்தேன். இன்றைக்கும் இங்கே வெகு நேரமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய நெருங்கிய உறவினர்கள் கூட இப்படிக் குமுறிக் குமுறி, நினைத்து நினைத்து அழவில்லை. நீங்கள் தான் இப்படி அழுகிறீர்கள்', என்றார்.

இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? 'ரொம்ப சிநேகிதம்' என்று சொன்னேன். 'சிநேகிதம்' என்று சொன்னாலும் சரி, 'ரொம்ப' என்று சேர்த்துச் சொன்னாலும் சரி, என் கனத்த இதயத்தின் நனைந்த நினைவுகளை அந்த உயிரற்ற சொற்களில் அடைத்து விட முடியாது.

அரை நூற்றாண்டுக்கு முன்பு, ஜ.ரா. சுந்தரேசன், புனிதன், நான் மூவரும் சற்று முன் பின்னாகக் குமுதத்தில் சேர்ந்தோம். பக்கத்துப் பக்கத்து மேஜைகளில் குப்பை கொட்டினோம். எனக்குப் பதவி உயர்வு (!)ஏற்பட்டபோது, என் மேஜையை சிறிது விலக்கிப் போட்டுக் கொண்டேனே தவிர வேறு அறைக்கோ வேறு இடத்துக்கோ போகவில்லை. எங்கள் மூவருக்குமாக சேர்த்து ஒரே ஒரு மின்சார விசிறிதான் சுழலும். பல நேரங்களில் நாங்கள் ஹோ ஹோவென்று சிரித்துக் கும்மாளம் போடும்போது, அடுத்த அறையில் இருக்கும் பதிப்பாளர் பார்த்தசாரதி வந்து, 'நாங்கள் வேலை பார்க்கணும் சார்! இப்படி சத்தம் போட்டால் எப்படி?' என்று கோபித்துவிட்டு செல்வார்.


அலுவலகம் மட்டுமல்ல, புரசைவாக்கம் வெள்ளாளத் தெருவில் நாங்கள் குடியிருந்த வீடுகளும் அருகருகாக இருந்ததால், எங்கள் குடும்பங்களும் கண்படக் கூடிய அளவுக்கு ஒற்றுமையுடன் வளர்ந்தன. கல்யாணங்கள் நடந்தன. குழந்தைகள் பிறந்தன. வளர்ந்தன. பேரன் பேத்திகள் முளைத்தனர். முதிர்ந்த சருகுகள் விழுந்தன. இளம் தளிர்கள் மலர்ந்தன. எல்லா சந்தர்ப்பங்களிலும் சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொண்டோம்.

பிற்பாடு குவார்ட்டர்ஸ் கிடைத்து சேர்ந்து குடியேறியபோதும் அப்படித்தான். தண்ணீர்ப் பஞ்சம் என்றால் குழாயை சரிபார்க்கும் இஞ்சினீயரையும், குவார்ட்டர்சுக்குப் பொறுப்பானவர்களையும், கிணற்றில் தூர் வாருகிறவர்களையும் சேர்ந்தே போய்ப் பார்த்து மன்றாடுவோம்.

ஒரு பிள்ளையார் கோவில் கட்ட வேண்டுமென்றால் பிள்ளையார் சிலை எங்கே கிடைக்கும் என்று சேர்ந்தே போய்த் தேடுவோம். பிள்ளையார் கிடைத்துப் பிரதிஷ்டை செய்தபின், அன்றாட 'பூஜை'யை யார் செய்வது என்று சேர்ந்தே யோசித்து 'முறை' போட்டுக் கொள்வோம்.

குடும்பப் பாசத்தில் புனிதனுக்கு நிகர் புனிதனேதான். நாங்களாவது எங்கள் குழந்தைகளைப் பற்றிக் குறை சொல்வோம். குழந்தைகளுடன் சண்டை போடுவோம். ஒரு தடவைகூடப் புனிதன் தன் குழந்தைகளைக் கண்டித்தது இல்லை. ஒரு சுடு சொல் சொன்னது கிடையாது. அவர்கள் இப்படி முன்னுக்கு வந்திருக்கிறார்களே, இவர்கள் இப்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்களே என்று மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசியோ, பொறாமையுடன் குறிப்பிட்டோ, ஒரு நாளும் நான் கேட்டதில்லை.

குறிப்பாக மனைவியிடம் அபாரப் பிரியம். மனைவியை மனைவியாக நினைக்காமல் தன் குழந்தைகளில் ஒன்றாக எண்ணுவார். அவருக்கு இவருடைய மன உறுதி கிடையாது. உள்ளம் நெகிழ்கிற போது கண்ணிலிருந்து நீர் கொட்டி விடும். போன மாதம் ஒரு நாள் நான் அவர் வீட்டுக்கு சென்றிருந்த சமயம், 'நீங்கள்ளாம் இருக்கிறதாலேதான்...' என்று கண் கலங்கினார். 'பார். பார். இப்படித்தாம்ப்பா இவள் எப்பவும்' என்று சிரித்தவாறு மனைவியை அடக்கினார்.

உல்லாசப் பயணமாகவோ, சுவாமி தரிசனத்துக்காகவோ நாங்கள் வெளியூர்களுக்குப் பல முறைகள் சேர்ந்து சென்றிருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட தொகையை அவரிடம் முன் கூட்டிக் கொடுத்து விட வேண்டும். சாப்பாட்டு செலவு, தங்கிய செலவு, ரயில் செலவு முதலியவற்றைக் குறித்து வைத்துக் கொண்டு, ஊர் திரும்பியதும் கரெக்டாய் மூன்றாக வகுத்து, மிச்சமிருந்தால் கொடுத்துவிட்டுக் கணக்கும் காட்டுவார்.

ஒரு முறை காஞ்சிபுரத்துக்குப் போய்விட்டுக் காரில் திரும்பிக் கொண்டிருந்தோம். இரவு வேளை. டிரைவர் அந்தப் பாதைக்குப் பழக்கமில்லாத புதியவர். புனிதன்தான் வழி சொல்லிக் கொண்டு வந்தார். ஓரிடத்தில் சாலைகள் பிரிந்தன. 'இப்படித் திரும்பி, நேராய்ப் போ' என்றார் புனிதன். கொஞ்ச தூரம் சென்றதும் எனக்கு சந்தேகம் வந்தது. 'ஏம்ப்பா சண்முகம், அங்கே நேராய் இல்லே போயிருக்கணும்? இப்படித்திரும்ப சொல்லிட்டியே?' என்றேன். 'கம்முனு இரு. எனக்குத் தெரியும்' என்றார். மேலும் சிறிது தூரம் போனதும் என் சந்தேகம் வலுத்தது. சுந்தரேசனிடம், 'ஏனய்யா, இவன் பாட்டுக்கு இப்படிப் போகச் சொல்கிறான். நீர் பேசாமல் இருக்கிறீரே?' என்றேன். 'அவனுக்குத் தெரியும். பேசாமல் இருங்கள்,' என்று அவரும் என்னை அடக்கிவிட்டார். கிட்டத்தட்ட ஐந்து மைல் தூரம் போனதும் எனக்குப் பொறுக்கவில்லை. அதே திசையில் போய்க் கொண்டிருந்த ஒரு ஸ்கூட்டர்காரரை நெருங்கும்படி டிரைவரிடம் சொல்லி, 'இது மெட்ராஸ் போகிற ரோடு தானே?' என்று அவரிடம் கேட்டேன். 'இல்லையே, இது பெங்களூர் போகிற ரோடு. எதிர்த் திசையில் போனால்தான் மெட்ராஸ்' என்று ஸ்கூட்டர்காரர் சொன்னதும், நாங்கள் இருவரும் புனிதனை மொத்து மொத்தென்று முதுகில் சாத்தினோம்.

எழுதுவதற்கு முன்னும் எழுதிய பின்னும் மாற்றும்படியும், திருத்தும்படியும், வெட்டும்படியும், சேர்க்கும்படியும்


ஆசிரியர் எஸ்.ஏ.பி. சொல்ல, மூவரும் கதைகளுக்காக அவரிடம் வதைபட்டிருக்கிறோம். ஆனால் அதிகம் வதை பட்டவர் புனிதன்தான். சில சந்தர்ப்பங்களில் எஸ்.ஏ.பி. அவர் கதையை என்னிடம் தந்து, 'இதை சரி பண்ணுங்கள்' என்பார். என் பங்குக்கு நானும் வதைத்துப் புனிதனின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டதுண்டு. ஆனால் மூன்று பேரில் மிகுந்த பொறுமைசாலி அவர்தான்.

அவர் எழுதிய 'பாத பூஜை' ஒரு நல்ல சிறு கதை. நாங்கள் மூவரும் எழுதிய சில நல்ல சிறுகதைகளைத்

தனியே எடுத்து, சிறு பைண்டு புத்தகமாகத் தன் மேஜையில் வைத்திருந்தார் எஸ்.ஏ.பி. அவற்றில் 'பாத பூஜை'யும் ஒன்று.

நடைமுறை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட சிறுகதைகளை ஒரு பெளராணிகரின் கதா காலஷேப பாணியில் 'சுந்தர பாகவதர்' என்ற புனைப் பெயரில் அவர் எழுதிய ஹஸ்யக் கதைகள் வாசகர்களை வெகுவாகக் கவர்ந்தன.

மற்றவர்களுக்காக அவர் கஷ்டப்பட்டிருப்பாரே தவிர, மற்றவர்களுக்கு அவர் கஷ்டம் தந்தது கிடையாது. முதல் நாள் எதையோ எடுப்பதற்காக நாற்காலியில் ஏறி நின்று கீழே விழுந்தார். அன்று இரவு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மறு நாள் நிலைமை 'கிரிட்டிகல்' என்றார்கள். அதற்கு அடுத்த நாள் காலமாகிவிட்டார். வாரக் கணக்கில் நினைவு நீச்சின்றிப் படுத்த படுக்கையாகக் கிடந்து டாக்டர்களுக்கும் நர்ஸ்களுக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கஷ்டம் தரவில்லை. நாற்பது மணி நேரம்தான் - புண்ணிய தினமான வைகுண்ட ஏகாதசியன்று போய்விட்டார்.

இறந்த பிறகும் கூட யாருக்கும் கஷ்டம் தரவில்லை. வீட்டுக்கு அருகிலேயே மயான பூமி இருந்தது. வெகு தூரம் வெய்யிலில் நடந்து போகும்படியான கஷ்டத்தை யாருக்கும் அவர் தரவில்லை.

கமல் சொன்ன வேல் கதை!

குமுதம் பத்திரிகையில் துணை ஆசிரியராக நாற்பத்திரண்டு ஆண்டு காலம் பணிபுரிந்த எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனின் எண்பதாவது பிறந்த நாளையொட்டி, ஆறு சிறுகதைத் தொகுப்புகள் சமீபத்தில் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் வெளியிடப்பட்டன. நூற்றாண்டு விழா கண்டுள்ள அல்லயன்ஸ் பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில் ஏராளமான

அறிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகை உலகத்தினர் கலந்து கொண்டனர்.

சில தெறிப்புகள்:

நடிகர் கமலஹாசன்:

'மகாநதி' படத்தில் ரா.கி.ர.வோடு எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள்தான் பல படங்களை உருவாக்க எனக்கு உதவின. அவர் பணிபுரிந்த குமுதத்தில என்னைப் பற்றிப் பல கிசுகிசுக்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், இவ்விழாவில் கலந்துகொண்ட பிறகே - பேசியவர்களின் பேச்சுக்களிலிருந்து குமுதத்தைப் பற்றிய பல கிசுகிசுக்கள் எனக்குத் தெரிய வருகின்றன, சந்தோஷம்! ரா.கி.ர. தம் சட்டைப் பையில் எப்போதும் ஒரு வேல் வைத்திருப்பார். அதைத்தான் நான் 'தெனாலி' படத்தில் பயன்படுத்தினேன்.

ஜ.ரா.சுந்தரேசன்:

'விகடன் ஆபீஸில் துணியாசிரியர்களுக்கு கார் வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். அந்த வசதி எங்களுக்கும் வேண்டும்' என்று ரா.கி.ர. ஒருமுறை குமுதம் எடிட்டர் எஸ்.ஏ.பி.யிடம் கேட்டார். அன்றிலிருந்து எடிட்டர் ஆபீஸ் வருவதை நிறுத்திவிட்டு,

கன்னிமரா நூலகத்தில் உட்கார்ந்து கொண்டு குமுதத்துக்குத் தேவையானதை எழுதிக் கொடுத்தார். இதை ரா.கி.ர.விடம் நான் தெரிவித்தபோது, பதறிப் போனவர், 'அந்த விஷயத்தை நான் வலியுறுத்தப் போவதில்லை. எடிட்டரை அலுவலகம் வரச் சொல்லுங்கள்' என்று என்னையே தூது அனுப்பினார். இப்படிப் பல முறை இருவருக்குமான தூதுவனாக நான் செயல்பட்டிருக்கிறேன்.

 

திலகவதி ஐ.பி.எஸ்:

ரா.கி.ர. எழுத எழுத, அவரது எழுத்துக்கள் மெருகேறிக்கொண்டே வருகின்றன. வெகுஜன இதழுக்கு எழுதுவதாலேயே அது இலக்கியம் இல்லை; ஆழமில்லை என்பதாக ஒரு கருத்து நிலவுவது சரியல்ல. ஏராளமாக எழுதித் தள்ளினாலும் வீரியம் குறையாத வித்து அவரது எழுத்துக்களில் உண்டு.

 

கிரேஸி மோகன் - எஸ்.வி.சேகர்:

ரா.கி.ர. மட்டும் இல்லையென்றால் எங்களது முதல் முயற்சியான 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' குமுதத்தில் தொடராக வந்திருக்காது. நாடகத் துறையில் நாங்கள் முத்திரை பதிக்க ரா.கி.ர.வே காரணம்.

சீதா ரவி:

நூறாண்டுகளுக்கு ஒரு பதிப்பகம் நல்ல நூல்களை மட்டுமே வெளியிடுவது தவம்; அதையே வெற்றிகரமாகச் செய்வது வரம். தவமும் செய்து வரமும் பெற்ற அல்லயன்ஸ் நிறுவனத்துக்கு வாழ்த்துகள்.

- நன்றி: கல்கி

எது எழுதினாலும் அது எழுதாதீர்கள்


ண்ணா நகர் க்யூ பிளாக்வாசிகள் தங்களுக்குள் 'க்யூ பிளாக் ஸிவிக் அசோசியேஷன்' என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு சுற்றுப்புறச் சுகாதாரம் முதலான பொதுப் பிரசினைகளில் ஆர்வத்துடன் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இவர்களுடைய ஆறாவது ஆண்டு விழா சென்ற மாதம் நடைபெற்றது. துணைக் கமிஷ்னர் பி. சிவனாண்டி பிரதம விருந்தினராகவும், அடியேன் ஒரு சிறப்பு அழைப்பாளராகவும் கலந்துகொள்ள ஏற்பாடு செய்திருந்தார்கள். சிவனாண்டி (நான்அங்கே இருந்த வரையில்) வராததால் நானே பிரதம விருந்தினர், சிறப்பு அழைப்பாளர் ஆகிய இரண்டு பாத்திரங்களையும் வகித்தேன்.

தாங்கள் செய்த பணிகளைப் பற்றியும், செய்ய விரும்பும் சேவைகளைப் பற்றியும் பேசினார்கள். தேனீர் வழங்கப்பட்டது. குழந்தைகள் ஆடிப் பாடினார்கள். இன்ட்டர்நெட்டின் இன்றைய முக்கியத்துவம் குறித்து ஓர் அமைப்பு ஸ்லைடுகள் மூலம் விளக்கியது.

விழாவுக்குப் போய்விட்டு வந்ததும் டைரியில் மேற்கண்ட தகவல்களைக் குறித்து வைத்திருந்தேன். விழா நடந்த தேதி மறந்துவிட்டதால் அதைப் பார்க்க வேண்டுமென்று ஷெல்ஃபைத் திறந்தேன். சின்னது, பெரியது, நீளமானது, அகலமானது கைக்கடக்கமானது, அட்டை கிழிந்தது - இப்படி ஏராளமான டைரிகள்! அவைகளைப் பார்க்கையில் எதற்காக இந்தப் பழக்கத்தை ஆரம்பித்தோம் என்ற யோசனையில் மனம் இறங்கியது.

எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தி. உண்மையே பேசுவதென்று வைத்துக் கொண்டால் ஞாபக மறதியைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று ஒரு ஞானி சொல்லியிருந்த போதிலும், நான் சராசரி மனிதன். உண்மையே பேசுவதென்று வைத்துக்கொண்டால் இந்த நாளில் கட்டுபடியாகாது.

ஆகவே ஞாபகசக்தியை வளர்த்துக் கொள்வது அவசியம் என்று முடிவு செய்து, அதற்கான புத்தகங்களைப் படித்தேன். ஆனால் அதற்கும்கூட ஞாபக சக்தி தேவைப்பட்டது. ஏனெனில் நேற்றுப் படித்தது இன்று மறந்துவிடுகிறது. இன்று படிப்பது நாளை மறந்துவிடும்.

பல புத்தகங்கள் பல விதமான பயிற்சிகளைத் தந்திருந்தன. அவற்றில் ஒன்று, டைரி எழுதுவது ஒரு நல்ல பழக்கம் என்று கூறியது. இது சுலபமான பயிற்சியாகத் தோன்றவே கஷ்டப்பட்டு பல கடைகளில் தேடி ஒரு டைரி வாங்கினேன். (டைரி வாங்குவதில் என்ன கஷ்டம் என்று நீங்கள் கேட்கலாம். நான் டைரி தேடியது ஒரு மே மாதத்தின் நடுவில். கிட்டத்தட்ட அரை வருஷம் தாண்டிய பிறகு எந்தக் கடையில் டைரி வைத்திருப்பார்கள்.)

இவ்வாறு டைரி எழுத ஆரம்பித்தது பல வருடங்களுக்கு முன்பு. புதிதாய்க் காமிரா வாங்குகிறவர்கள் வைக்கோல் வண்டி, சொறி நாய், அடுத்த வீட்டுக் குழந்தை, குடுகுடுப்பைக்காரன் (எல்லாம் பாதிப் பாதித் தலையுடன்) படம் எடுத்துத் தள்ளுவார்கள். அதுபோல நானும் முதல் சில நாட்களுக்கு வரிந்து வரிந்து எழுதினேன். கோடி வீட்டுப் பாட்டிக்குத் தேள் கொட்டியது, கறிகாய் வண்டிக்காரனுடன் நான் சண்டை போட்டது, டிவியில் 'மணாளனே மங்கையின் பாக்கியம்' பார்த்தது, பழைய வேலைக்காரி போய்ப் புது வேலைக்காரி வந்து அவளும் இரண்டு நாளில் நின்றது முதலான உலகைக் குலுக்கும் பூகம்பச் செய்திகளை விவரித்தேன். வேறு சில நாட்களில் அதற்கான ஒரு பக்கம் போதாமல் அடுத்த பக்கத்திலும் கொஞ்சம் கடன் வாங்கிக் கொண்டேன். சில சமயம் இரண்டு மூன்று நாள் எழுத மறந்து போய், அந்தப் பக்கங்கள் காலியாக இருக்கும். "ஏன் இது காலியாக இருக்கிறது?" என்று ஸிபிஐயில் என்னைக் குறுக்கு விசாரணை செய்வார்களோ என்கிற மாதிரி பயந்து, அந்தக் காலிப் பக்கங்களில் "மூன்று நாள் கழித்து எழுதுவதால் எதுவும் ஞாபகமில்லை" என்று எழுதி வைத்தேன்.


ஒரு நாள் அமெரிக்கச் சிந்தனையாளரான ஹென்றி தோரோ எழுதிய 'வால்டன்' என்ற புத்தகத்தைப் படித்தபோது, இயற்கையின் அழகுகளை ரசித்து, தனிமையின் சிறப்பைப் பற்றிச் சிந்தனை செய்து அவர் எழுதிய கட்டுரைகள் என்னை மயக்கின. "சே! இது போன்ற சிந்தனைகளை அல்லவா டைரியில் எழுதவேண்டும்? முருங்கைக்காய் சாம்பார் சாப்பிட்டதா பெரிய விஷயம்?" என்று என் மீதும், என் டைரி மீதும் எனக்கே கோபம் வந்தது. இரண்டு நாள் மெரீனா பீச்சில் அலைந்தேன். பட்டாணி சுண்டல்தான் கிடைத்ததே தவிர, பிரமிக்கத்தக்க சிந்தனை எதுவும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே வருடங்கள் ஓட ஓட, டைரிகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வந்தது.

இப்போது அந்த அடக்கைப் பார்த்தபோது திகீரென்கிறது.

இவ்வளவு டைரிகளையும் என் காலத்துக்குப் பிறகு என்ன செய்வது? மேஜை அல்லது நாற்காலியாகவோ, ஃபிரிஜ் அல்லது டிவியாகவோ, புத்தகம் அல்லது பத்திரிகையாகவோ இருந்தால் வாரிசுகள் என்னவோ பண்ணிக் கொள்ளட்டும் என்று விட்டு விடலாம். ஆனால் டைரி?

யார் யாரைப் பற்றி என்னென்ன எழுதிக் தொலைத்திருக்கிறேனோ! தற்செயலான (அல்லது வேண்டுமென்றே) பிரித்துப் பார்க்கிறவர்கள் என்னென்ன ரகசியங்களைத் தெரிந்து கொண்டு ஒருவர் மீது ஒருவர் எத்தனை சண்டைகள் போடப் போகிறார்களோ! குடும்பத்தில் நடக்கக்கூடிய குழப்பங்களைப் பற்றி நினைக்கவே நடுக்கமாயிருந்தது.

என்னைப் போலவே பற்பல வருடங்களாக டைரி எழுதி வரும் ஒரு சினேகிதரிடம் என் அச்சத்தைத் தெரிவித்தேன். "நீங்கள் உங்கள் டைரிகளை என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டேன்.

அவர் ரொம்பக் கூலாகச் சொன்னார். "என் மனைவியிடமும், பிள்ளையிடமும் முன்னதாகவே சொல்லி வைத்துவிட்டேன். நான்போனதும் என் மீதே அவ்வளவு டைரிகளையும் போட்டு..."

மேற்கொண்டு அவர் சொன்னதை இங்கே நான் சொல்லத் தயாராயில்லை. ஏனெனில் இதைப் படிக்கும் சமயத்தில் உங்கள் வீட்டில் ஏதேனும் சுப காரியம் நடந்து கொண்டிருக்கக்கூடும்.




     RSS of this page