1 | "புறங்காட்டினான்
மகன் என்பது உண்மையானால் அவனுக்குப் பாலூட்டிய மார்பினை அறுப்பேன்" என்று
வீரத்தாய் பாடினதாகப் படிச்சி இருக்கோம். இந்தப் பாட்டை எழுதிய பெண்
கவிஞர் யார்? | 1 அ) ஒளவையார் ஆ) ஒக்கூர் மாசாத்தியார் இ) காக்கைப்பாடினியார் ஈ) பொன்முடியார் |
2 | பக்தி இலக்க்கியப் பெண் கவிஞர்கள் என்றால் உடனே நினைவுக்கு வருபவர்கள் இருவர் = ஆண்டாள், காரைக்கால் அம்மையார்! ஆண்டாள் பன்னிரு ஆழ்வார்களில் ஒருத்தி (8%) நாயன்மார்கள் அறுபத்து மூவருள், மூன்று பேர் பெண்கள் (4%). அதில் ஒருவர் காரைக்கால் அம்மையார். மற்ற இருவர் யார்? | 1 அ) இசைஞானியார்/ மங்கையர்க்கரசியார் ஆ) மங்கையர்க்கரசியார்/ தண்டியடிகள் இ) தண்டியடிகள்/ கவுந்தியடிகள் ஈ) திலகவதியார்/ வாயிலார் |
3 | இந்தப் புதுக்கோட்டைப் பெண்மணி தான் இந்தியாவின் முதல் பெண் டாக்டர்! தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுப்பட்ட இவர், தம் இறுதி நாட்களில் கேன்சர் ஆராய்ச்சிக்கும் பெரிதும் பாடுபட்டார்! - இவர் பெயர் என்ன? | 3 அ) டாக்டர். வி. சாந்தா ஆ) டாக்டர். பத்மா சுப்ரமணியம் இ) டாக்டர். கமலா செல்வராஜ் ஈ) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி |
4 | பாரதியார் தன் குருநாதராக இந்தப் பெண்மணியை ஏற்றுக் கொண்டார்! இவர் பெயர் என்ன? | 4 அ) அன்னி பெசன்ட் ஆ) சாரதா மணி தேவி இ) சரோஜினி நாயுடு ஈ) நிவேதிதா தேவி |
5 | அப்துல் கலாமை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தத் தமிழ்ப் பெண்ணின் பெயர் என்ன? (சாரி, நோ சாய்ஸ் :-) | 5
Capt. Lakshmi Seghal |
6 | பரதநாட்டியம்
என்றாலே தேவதாசிகள் ஆடுவது என்ற நிலையை மாற்றி, நாட்டியக் கலைஞர்களுக்குச்
சமூக மதிப்பு பெற்றுத் தந்த தமிழ்ப் பெண் இவர்! சிருங்கார ரசம் எனப்படும்
காதல் சுவையை நாட்டியத்தில் சென்சார் செய்த போது, சபாக்களை எதிர்த்த
பெண்மணி. தமிழிசைக்கு இவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டி "இசைப்
பேரறிஞர்" என்ற விருதைத் தமிழிசைச் சங்கம் இவருக்கு அளித்தது! இந்த
"அழகிய" பெண்மணி யார்? | 6 அ) ருக்மணி தேவி அருண்டேல் ஆ) எம்.எஸ்.சுப்புலட்சுமி இ) பாலசரஸ்வதி ஈ) கே.பி. சுந்தராம்பாள் |
7 | இந்தத்
தமிழ்ப் பெண் முரடனாய் இருந்த தன் கணவனைப் பக்தனாக மாற்றினாள். பின்னர்
ஆழ்வாராகவே உயர்த்தினாள். பேரழகியான இவள், அழகை ஆபத்தான ஆயுதமாக இல்லாமல்,
ஆன்மீக அயுதமாக மாற்றிக் காட்டினாள். அந்த நன்றிக் கடனாக,
இன்றைக்கும் ஆலயங்களில், மனைவியோடு காட்சி தரும் ஆழ்வார் இவர் ஒருவரே -
திருமங்கையாழ்வார்! இவர் மனைவியான அந்த புரட்சிப் பெண்மணி யார்? | 7 அ) அத்துழாய் ஆ) அமுதவல்லி இ) தடாதகை ஈ) குமுதவல்லி |
8 | இன்று
அனைத்துச் சாதி அர்ச்சகர்கள் பயிற்சி பெற்று கருவறை நுழையலாம் என்ற
அளவுக்குத் தான் வந்திருக்கு! ஆனால் பல நூற்றாண்டுக்கு முன்னரே இது
வழக்கில் இருந்தது தான்! இன்னும் ஒரு படி மேலே போய், பெண்களும்
கருவறைக்குள் சென்று பூசை செய்த நிகழ்வுகள் நம் சைவ சமயத்தில் உண்டு! இவள்
பூசைக்குச் செல்கிறாள். கருவறை லிங்கத்தின் மேல் மாலை சார்த்த எக்கிய போது
சேலை நழுவுகிறது. முழங்கைகளால் சேலையைத் தாங்கிக் கொண்டு, மாலை போட
முடியாமல் கசிந்துருக, லிங்கம் தன் தலையை அவள் உயரத்துக்குச் சாய்த்து
மாலையை ஏற்றுக் கொள்கிறது. இந்தப் பெண் யார்? (கொஞ்சம் கடினமான கேள்வியா இருந்தா, க்ளூ கேளுங்க :-) | 8 அ) திலகவதியார் (அப்பரின் தமக்கை) ஆ) மண்டோதரி இ) தாடகை ஈ) புனிதவதி (காரைக்கால் அம்மையார்) உ) பரவை நாச்சியார் ஊ) சங்கிலி நாச்சியார் |
9 | இரண்டாண்டுகளுக்கு
முன் நடந்த ஆசிய விளையாட்டுகளில் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தை
வென்ற பெண் இவர். ஆனால் இவர் பெண்ணல்ல என்ற ஒரு விவகாரம் கிளம்பி,
விசாரணைக்குப் பின், பாலியல் மருத்துவச் சோதனையில் தவறியதாகச் சொல்லி,
பதக்கத்தைப் பறித்துக் கொண்டார்கள். :-( இவர் முழுப்பெயர் என்ன? (நோ சாய்ஸ்!) | 9 செல்வி. சாந்தி செளந்திரராஜன் Better Luck next time, Shanthi! We wish you all the best! Just dont give up your logical fight! |
10 | இந்தச்
சென்னைப் பெண்மணி, அமெரிக்காவைக் கை நடுவிரலுக்கு ஒப்பிட்டுப் பேசப் போய்,
உலகெங்கும் உள்ள வலைப்பதிவர்கள் இவருக்கு கண்டனம் தெரிவித்துக் களேபரம்
செய்தார்கள். பதிவுலகில் அப்பவே ஒரே அடிதடி தான் போல!:-) கடைசியில் இந்தத் தமிழ்ப் பெண்மணி மன்னிப்பு கேட்ட பின் எல்லாச் சர்ச்சைகளும் அடங்கியது! இவர் யாரு-ன்னு தெரியுதுங்களா? | 10 அ) பத்திரிகையாளர், வாசந்தி ஆ) இந்திரா நூயி இ) திலகவதி IPS ஈ) கனிமொழி |