கரும்பு தின்னு!
எந்த வேலையையும் அதைச் செய்வதில் உள்ள சந்தோஷத்துக்காகச் செய்யுங்கள்; பணம் பிறகு ஒரு நாள் தானாக வரும்.
காரணம்..
முடிவை மட்டும் வெளியிடுங்கள். அந்த முடிவை எடுத்ததற்கான காரணத்தை வெளியிடாதீர்கள். காரணம், பல நேரங்களில் முடிவு சரியாக இருக்கும்; காரணம் தப்பாக இருக்கும்.
முதல்வன்
ஞானத்தின் மூத்த குழந்தை.. எச்சரிக்கை!
நேரம்டா!
எல்லா நேரமும் நல்ல நேரம்தான்.. சரியான காரியத்தைச் செய்வதற்கு! எல்லா நேரமும் கெட்ட நேரம்தான்.. தப்பான காரியத்தைச் செய்வதற்கு!
ரொம்ப நல்லவன்டா!
ஆண்டவன் ரொம்ப நல்லவன். மரத்தடியில் ஆள் இல்லாதபோதுதான் தேங்காயை விழச் செய்கிறான்!
வித்து
பூனை வயிற்றில் எது பிறந்தாலும், அது எலியைப் பிடிக்கும்!
தொடர்ந்தால் தொடர்க!
காப்பி அடிப்பவரைப் பார்த்து பயம் வேண்டாம்; உங்கள் அடிச்சுவட்டையே பின்பற்றி வருகிற எவராலும் உங்களைக் கடந்து முன்னேறிவிட முடியாது!
சுருக்!
சுருக்கங்கள் நெற்றியில் விழலாம்; இதயத்தில் வேண்டாம்!
திருத்...ந்துவோம்!
எல்லோரும் உலகைத் திருத்த நினைக்கிறார்களே தவிர, தன்னைத் திருத்திக்கொள்ள நினைப்பதில்லை.
கேட்காதே!
அடிக்கடி மன்னிப்புக் கேட்பவன், அடிக்கடி தோல்வியைத் தழுவுகிறான்.
ஆளுமை
புத்திசாலிக் கணவனை அப்பாவிப் பெண்ணால் ஆள முடியும்; ஆனால், அசட்டுக் கணவனை புத்திசாலிப் பெண்ணால் மட்டுமே ஆள முடியும்!
பழி
உன் மீது ஒருவன் உப்பை அள்ளிப் போட்டால், உன் உடம்பில் புண்கள் இருந்தாலன்றி உனக்கு ஒரு தீங்கும் நேராது.
இந்த மையா? அந்த மையா?
நீங்கள், உங்கள் நம்பிக்கையும் தைரியமும் எவ்வளவோ அவ்வளவு இளமையானவர்; சந்தேகமும் பயமும் எவ்வளவோ அத்தனை முதுமையானவர்!
தை... தை..!
ஒவ்வொரு குழந்தையும் ஒரு மேதை; ஒவ்வொரு மேதையும் ஒரு குழந்தை!
பணத்துக்காக..
பணத்துக்காகக் கடவுளுக்கு ஊழியம் செய்பவன், இன்னும் அதிகப் பணம் கிடைத்தால் சைத்தானுக்கும் ஊழியம் செய்வான்.
எலி.. கிலி!
'பூனை குறுக்கே போனால் அபசகுனம்' என்று நம்புவதற்கு நீங்கள் என்ன எலியா?
நேரத்தைப் பயிர் செய்!
எந்த ஒன்றுக்கும் உங்களுக்கு நேரம் கிடைக்காது; உருவாக்கிக் கொள்ள வேண்டியதுதான்!
மாட்டாதே!
முகஸ்துதி செய்; நம்ப மாட்டான். விமர்சனம் செய்; விரும்ப மாட்டான். அலட்சியம் செய்; மன்னிக்க மாட்டான்.
உற்சாகப்படுத்து; மறக்க மாட்டான்.
புலம்பல்ஸ்
அற்ப துக்கங்கள் வாய்விட்டுப் புலம்பும்; பெரிய துக்கங்கள் மௌனமாக இருக்கும்.
குறையன்றுமில்லை..
குறையற்றவர்களை நேசிப்பது மட்டுமே அன்பு அல்ல.. குறையுள்ளவர்களையும் குறையற்றவர்களாகக் காண்பது!