Home / Obama

Obama


-ஸ்ரீ செளந்தரராஜன்

அமெரிக்காவின் 44-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமாவை இந்திய ஊடகங்கள் பலவும் 'கறுப்பர்' என அழைப்பது ஏற்புடையதல்ல!

கென்யாவைச் சேர்ந்த ஓர் இடையனுக்கும், அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் 1961-ல் பிறந்தவர்தான் பராக் ஒபாமா. இவர் தனது இரண்டாவது வயதில் இருந்தே தந்தையைப் பிரிந்து வேறு இடத்தில் வாழ்ந்து வந்தார்.

தாயாரின் குடும்பத்தினரது அரவணைப்பில் வளர்ந்த ஒபாமா கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர். இவரை வளர்த்து ஆளாக்கிய இவரது பாட்டி டன்ஹாம், அமெரிக்க தேர்தல் மும்முரமாக நடக்கும்போது, நவம்பர் 2,2008-ல் மறைந்தது தனிச் சோகம். பொது மேடையில் தனது பாட்டியின் மறைவுச் செய்தியை கண்ணீர் மல்க ஒபாமா அறிவித்தார்.

ஒபாமாவின் கல்வியும், அரசியல் வளர்ச்சியும் அபாரம். அமெரிக்காவின் பிரபல ஹாவர்டு சட்டக்கல்லூரியில் பயின்றது மட்டும் அல்ல; அக்கல்லூரியின் உன்னத இதழான 'ஹாவர்டு லா ரிவ்யூ' வின் முதல் ஆப்பிரிக்கன் - அமெரிக்கன் தலைவர் என்ற பெருமையும் இவரையேச் சாரும்.

அதன்பின், சிகாகோ மாநகரத்தில் மனித உரிமை வழக்கறிஞராக பணி புரிந்தார் ஒபாமா. 1996-ல் இருந்து எட்டு வருடங்கள் இல்லினாய்ஸ் மாகாண சட்டசபையில் செனட்டராக இருந்த இவர், இன்று வரை மத்திய சட்டசபையில் அம்மாகாணத்தின் பிரதிநிதியாக இருந்து வருபவர். இவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். இவரது மனைவியும் ஒரு வழக்கறிஞர். இவர்களுக்கு மாலியா(10), சாஷா(7) ஆகிய இரு பெண் குழ‌ந்தைகள் உள்ளனர்.

குடியரசு கட்சியின் பெரும் தவறு

இந்த நேரத்தில் மறுபுறத்தையும் பதிவு செய்ய வேண்டியது கடமை. அதாவது, சிறந்த தலைவர்கள் பலரையும் தந்த மற்றொரு கட்சியான குடியரசு கட்சியைப் பற்றியே இங்கு குறிப்பிடுகிறேன். இந்தத் தேர்தலில் தோல்வியுற்ற மெக்கெய்னும் சிறந்த தலைவர்களில் ஒருவர் என்பது மறுக்க முடியாத உண்மை. துணை அதிபர் என்ற முக்கியமான‌ பதவிக்கு எந்த விதத்திலும் பொருந்தாத சாரா பாலின் (அலாஸ்காவின் கவர்னர்) என்பவரை அறிவித்ததே, மெக்கெய்ன் இழைத்த பெரும் தவறு!

குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே, சர்ச்சைக்குரிய சாராவை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்ததில் அதிருப்தி என்றும், குடியரசு கோட்டைகளில் ஓட்டை விழுந்துவிடும் என்றும் அமெரிக்க மக்கள் கருதினர். எதிர்பார்த்தது போலவே இந்த அதிருப்தி, வாக்கெடுப்பில் எதிரொலித்தது.

நான் வசிக்கும் செயின்ட் லூயிஸ் நகரம் குடியரசு கட்சியின் கோட்டைகளுள் ஒன்று. அங்கே ஒபாமா வந்தபோது ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் ஆரவாரத்துடன் அவரை வர‌வேற்றனர். அவர்களில் பெரும்பாலோர் வெள்ளையர் என்பதே இங்கே குறிப்பிடத்தக்கது. 2000, 2004, 2008 ஆண்டுகளில் அமெரிக்காவில் தங்கி, அதிபர் தேர்தல்களை நான் மிக உன்னிப்பாக கவனித்துள்ளேன். செயின்ட் லூயிஸ் நகரத்தில் ஒபாமாவுக்கு கிடைத்த ஆதரவு ஆச்சரியத்தை அளித்தது. இந்த மாற்றத்துக்குக் காரணங்களுள் ஒன்று, சாராவை குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுத்ததே!

அமெரிக்காவை வசீகரித்த மந்திரச்சொல்!

அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, முதலில் கட்சிக்குள்ளேயே போட்டியிடப்போவது யார் என்ற போட்டி நடக்கும்.

ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளருக்கான போட்டிக் களத்தில் பராக் ஒபாமாவுக்கும், செனட்டரும் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

ஹிலாரி கிளிண்டன் தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என பல தரப்புகளும் எதிர்பார்த்தன. அந்தத் தருணத்தில் ஒபாமாவின் அறிவு செறிந்த சொற்பொழிவு ஒன்று கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களையும் வெகுவாகக் கவர்ந்தது. அவரது கண்ணியம், உயரிய நோக்கங்கள், அனுபவக் கூறுகள், தெளிந்த முற்போக்குக் கருத்துக்கள் அனைத்தும் அவர் உதிர்த்த வார்த்தைகளில் வெளிப்பட்டன.

'மாற்றம் ஒன்று அவசரத் தேவை' என்ற அவரது தாரக மந்திரம், மந்திரக் கோலாக மாறியது. அந்த மந்திரச் சொல்லின் மகத்துவம், செனட்டர் ஹிலாரி க்ளிண்டனையே ஒபாமாவின் தலைமை ஏற்க வழிவகுத்தது. ஒபாமாவுக்கு ஆதரவும் நிதியும் குவிந்தன. ஒபாமா என்றால் 'உண்மை' என்று அமெரிக்க மக்களின் நம்பிக்கை அகராதியில் புதிய சொல் இடம்பெற்றது.

'கறுப்பர்' - தடை செய்வோம்!

'கறுப்பர்' என்றச் சொல்லுக்குத் தடை விதித்துவிடலாம் என்பதே என்னைப் போன்ற சிலரது வாதம்.

நமது ஊடகங்களில் பெரும்பானவை 'கறுப்பர்' எனக் குறிப்பிடுகின்றனர். (இங்கிலாந்தும் அப்படிக் கூறுவதை நாம் பொருட்படுத்த வேண்டாம்.) அமெரிக்கவில் இத்தகையை போக்கானது, மாபெரும் தவறாகும்.

ஆப்பிரிக்கவிலிருந்து அடிமைகளாக இறக்குமதி செய்யப்பட்ட கறுப்பு நிறத்தினரை, 'நிக்கர்' என்ற அவலச் சொல்லால்லும், பிறகு 'நீக்ரோ' என்ற இனப் பெயராலும் அழைத்தனர். அதன்பின், 'கறுப்பர்' என்ற நிறப் பெயராலும் அழைத்த காலமெல்லாம் காற்றில் கரைந்து போயின. அமெரிக்காவில் இந்த இழிச்சொல்லை பயன்படுத்தினால், வெள்ளையர்களும் முகம் சுளிப்பார்கள்; இடத்தை காலிசெய்வார்கள்.

'கறுப்பர்' என்பது அமெரிக்காவில் அநாகரீகம். மாறாக, 'ஆப்பிரிக்கன் - அமெரிக்கன்' என்றச் சொல்லே அங்கு வழக்கத்தில் உள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவுக்காக தங்கப் பதக்கங்களைக் குவிப்பது முதல் எல்லாத் துறைகளிலும் ஆப்பிரிக்கன் - அமெரிக்கர்கள் தலைசிறந்து விளங்குகிறார்கள். உலகப் புகழ்பெற்ற தளபதி கோலின் பாவல், ஜார்ஜ் புஷ்சின் ஆலோசகரும், தற்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருமான காண்டலீஸா ரைஸ் போன்றவர்களெல்லாம் இந்த இனத்தினரே!

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, அமெரிக்காவின் 44-வது அதிபர் பராக் ஒபாமாவை 'ஆப்பிரிக்கன் - அமெரிக்கன்' என்றே அனைவரும் அழைக்க வேண்டும் என்பதே எனது அன்பான வேண்டுகோள்!

அமெரிக்க அதிபர் தேர்தல் 2008: ஸைட்லைட்டுக்கள்

பொது தேர்தல் என்றாலே கணிப்புகள், கருத்து வேறுபாடுகள், குற்றங்குறைகளை மிகைப்படுத்துவது/கற்பனை செய்வது, தாவாக்கள் என்றெல்லம் அமர்க்களங்கள் அமெரிக்கவிலும் உண்டு. ஒருவர் பாயின் அடியில் புகுந்தால், மற்றவர் கோலத்தின் அடியில் புகுவர். எல்லாம் மயில் ராவணன் கதை தான்.

நேரில் கண்டு களித்த இரு நிகழ்வுகளையும், ஒரு அமெரிக்க குணாதிசயத்தையும் இங்கு கவனிப்போம். மிஸெளரி மாநிலம் ஆரம்பகாலத்திலிருந்தே ரிபப்ளிகன் கோட்டை. பொதுவாக கிருத்துவ மதப்பற்று, பழங்கால நோக்குகள் நிறைந்த நன்னாடு! அம்மாநிலத்தின் மானகரமான் சைன்ட் லூயீஸ்ஸில் சற்றே முற்போக்குவாதம் அவ்வப்போழுது தலை தூக்கும். அங்கு திரு.ஒபாமா வந்த போது நூறாயிரம் பேர் கூடி ஆரவாரித்த்த்தைப் பற்றி முன்பே பார்த்தோம். அதற்கு சில நாட்கள் முன்பு உஅப அதிபர் பதவிக்கு போட்டியிடும் கவர்னர் ஸேரா பாலினுக்கும், ஸெனேட்டர் ஜார்ஜ். ஆர். பிடனுக்கும் அந்த ஊரில் விவாதம் நடந்தது. மேடை அமைத்தது, அங்கு உள்ள பிரபல வாஷிங்க்டன் யூனிவர்சிட்டி. அமெரிக்காவில் பல்கலைக்கழகங்கள், புலவர்கள், இதழாளர்கள், தொலைக்காட்சிகளுக்கு இருக்கும் சுயாதீனம் மகத்தானது. தொலைக்காட்சி துறையை சார்ந்த அமைப்பாளரின் நெருடலான வினாக்களுக்கு திரு.பைடன் அமரிக்கையாக, தெளிவாக விடை அளித்தார். பாலின் அம்மையாரோ, "ஆஹா! ஓஹோ!" என்று தடபுடலாக பதில் அளித்தார். தெளிவு இல்லை என்று சொல்லமுடியாது! கருத்து இருந்தால் தானே தெளிவு! அமைப்பாளர் நமுட்டு விஷமமாகக் கேட்ட கேள்விகளை அவர் புரிந்து கொல்லவில்லை என்று பட்டவர்த்தனமாக தெரிந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளால் இழுபறி மாநிலங்களில் மக்கெய்ன் கணிசமாக ஆதரவு இழந்தார். ஆதாயம், ஒபாமாவுக்கு.

நாட்டு நடப்பு யாவற்றையும், பிரலலங்கள் யாவரையும் பொழுது ஒரு வண்ணமாக, நாளொரு மேனியாக கலாட்டா செய்வதில் அமெரிக்கர்களுக்கு ஈடு, இணை கிடையாது. தொலைக்காட்சிகள் யாருக்கும் இந்த விஷயத்தில் இரக்கம் காட்டுவது இல்லை. ( ஆங்கிலேயருக்கும் இந்த குணாதிசயம் உண்டு. ஆனால், பூடகமாக செய்வார்கள். தன்னையே எள்ளல் செய்து கொள்வார்கள். எளிதில் புரியாது.) இந்துரிஉஅர்களுக்கு நகைச்சுவை போதாது என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. ஏதோ! விகடன் போன்ற இதழ்கள் இருப்பதால், தமிழன் ஓரளவு தப்பித்தான்.

2008 ஆம் ஆண்டு அமெரிக்கப் புத்துணர்ச்சிக்கு அந்நாட்டு வர‌லாற்றிலேயே ஒரு எதிர்பாராத வரவு இருப்பதின் முன்பகுதியே திரு. ஒபாமாவின் வெற்றி. ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் அமைந்த நாடின் விடுதலைக்கும், ஆப்ரஹாம் லிங்கன் தலைமையில் அமைந்த அடிமைகளின் விடுதலைக்கும் ஈடானது இந்த அமெரிக்காவின் ந்வீன சகாப்தம். தற்காலம் அமெரிக்கவின் தேவை அமரிக்கை, தன்னடக்கம், மேலும் தார்மீகப் போக்கு.

இனி ந‌ட‌க்க‌ப்போவ‌து என்ன‌?

அர‌சிய‌ல் ஆருட‌ம் பொய்க்கும். ஹேஷ்ய‌ங்க‌ள் நாட்டு ந‌ட‌ப்பு, உல‌க‌ எதிர்ப்பார்ப்பு என்ற‌ புட‌ங்க‌ளில் வார்ப்பெடுக்க‌ வேண்டிய‌வை. இத்த‌ருண‌த்தில், நாம் ஐந்து கூறுக‌ளில் ந‌ட‌க்க‌ப்போவ‌தைப் ப‌ற்றி ஆராய‌லாம்.

(1) ஏதொ ஒரு நாள் ஒரு அமெரிக்க‌ வெள்ளைய‌ப்பெண்ணின் உட‌ன் உற‌வாடி ஓடிவிட்ட‌ ஒபாமாவின் கென்ய‌நாட்டு த‌ந்தையை ம‌ற‌ப்ப‌து ந‌ல‌னே. அவ‌ர் ம‌ரித்தும் போய்விட்டார். அந்த‌ நினைவுக‌ள் ஒபாமாவுக்கு ம‌ட்டும், த‌னி ம‌னித‌ன் என்ற‌ முறையில் த‌ங்க‌ட்டும். அதிப‌ர் ஒபாமா தான் அமெரிக்க‌த்த‌லைவ‌ர், எல்லா ம‌க்க‌ளுக்கும் பொதுவான‌வ‌ர் என்ப‌தை ஒரு நாளும் ம‌ற‌க்க‌மாட்டார். அதை நாம் ம‌திக்க‌க் க‌ற்றுக்கொள்ள‌ வேண்டும்.

(2) இன்று ந‌வ்ம்ப‌ர் 8, 2008, ச‌னிக்கிழ‌மை. நாளை ஞாயிறு அன்று ஜோனாத‌ன் மாஹ்ல‌ர் என்ற‌ அறிஞ‌ர் ந்யூ யார்க் டைம்ஸ்ஸில் எழுதப் போகும் க‌ட்டுரையில் ஜேம்ஸ் மாடிஸ‌ன் என்ற‌ அர‌சிய‌ல் அறிஞ‌ர் கூறிய‌தை, " சாத‌னை ஆர்வ‌த்தை க‌ட்டுப்பாட்டில் வைப்ப‌து தான் சாதனை" அழுத்தமாக சொல்லப்போகிறார். இதை விட ஒபாமாவுக்கு பொன்னான அறிவுரை தேவையில்லை. அவருக்கு ஆணவம் தலைக்கேறிவிடுமோ என்ற அச்சம் இயல்பாகவே எழுகிறது. அவர் நிணைவில் வைத்துக்கொள்ள வேண்டியதெல்லாம், அவரது தந்தைக்கு உரிய வயதான எதிராளி மக்கெய்ன் அவர்களின் கனிவான் பேச்சு, தோற்ற பிறகு. அவர்ஹு உத்துழைப்பை இவர் தேடி அடையவேண்டும்.

(3) ஸெனேட்டில் ஒபாமாவின் கட்சி பலம் பெற்றாலும், எதிர்கட்சியை அடக்கியாளும் வலிமை பெறவில்லை. எனவே, ஒரு பழங்கதையை. மாஹ்லர் சொல்வது போல, இவர் மறக்கலாகுது, அது என்ன கதை? ஜார்ஜ் வாஷிங்டன் செனேட் அமைத்ததை, அவரது கூட்டாளி தாமஸ் ஜெஃபர்ஸன் குறை கூறினாராம். இருவரும் காஃபி குடித்துக்கொண்டிருந்தனர். வாஷிங்டன் கேட்டாராம், "நீங்கள் ஏன் காஃபியை கோப்பையில் குடிக்காமல், அடித்தட்டில் ஆத்துகிறீகள்?"" என்று. பதில், " சூடு தணிக்க". வாஷிங்டன் சொன்னாராம், " ஸெனேட் என்ற மேல் சபை, கீழ் சட்ட சபையின் சீட்டைத் தணிக்க என்று. இந்த யதார்த்த்தை ஒபாமா மறக்கலாகுது. மறந்தால், தடுக்கி விழுவார்.

(4) அமெரிக்க இதழ்களின் ஆளுமையை நவம்பர் 7, 2008 அன்று நோபல் பரிசு பெற்ற பால் க்ரூக்மென் அவர்கள் எழுதிய கட்டுரைக்கு வந்த 427 கருத்துக்களிலிருந்து அறியலாம். படித்துக்கொண்டு இருக்கும்போதே 27 சில வினாடிகளில் 27 கருத்துக்கள் பதிவாயின. முதல் கருத்து, அதிபர் புஷ் மகராசனின் டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து, "ஒபாமா மையத்துக்கு செல்லவேண்டாம்; அவர் மையத்தை எடுத்து ஆள வேண்டும்" என்பதே.

பால் க்ரூக்மென் ப‌க‌ர்வ‌தை க‌வ‌னமாக் ஒபாமா கேட்க‌வேண்டும். இந்த தேர்தல் அரசு கொள்கையின் மேல் மக்களின் கணிப்பு. முற்போக்குக்கு ஆரவாராமான் வர்வேற்பு. தார்மீகம் நல்லதொரு பொருளியல் கூற்று. ஆமை நடையும் ஆகாது; முய‌ல் பாய்ச்சலும் ஆகாது. எது எப்படி இருந்தாலும் செயலில் இறஙக வேண்டும். அரசு செலவு அதிகரித்தால் தப்பில்லை, அது மக்கள் நலத்தை நாடும் வரை. ஒபாமா அச்சப்படவேண்டியது ஒன்று உண்டு. அதன் பெயர்."அச்சம்". இதற்கு மேல் அவருக்கு அறிவுரை தேவையில்ல.

(5) ஒபாமாவின் ஆட்சி நேற்றே உண்மையில் தொடங்கி விட்டது. இதுவும் வரலாறு காணாத நிகழ்ச்சி. அவர் பொருளியல் நிபுணர்களை, மற்ற துறை ஆலோச்கர்களை தேடும் முறை நேர்த்தியாக உள்ளது. உப அதிபரோ அனுபவசாலி. பண்புள்ளவர். சுருங்கச்சொல்லின், ஒபாமா என்ற அமெரிக்க அதிபரை உலகம் வர‌வேற்கிறது, கண்ணில் விள்க்கெண்ணய் போட்டுக்கொண்டு. எல்லாம் அவரது சமர்த்தை பொறுத்து நடக்கும். ஒரு உபசெய்தி நல்ல சூசகத்தை அறிவிக்கிறது. ஒபாமா தம்பதியினர், அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் அழைப்பின் பேரில் திங்கள் அன்று செல்லும்பொது, அவரது குழந்தைகள் வாரா. அவர்கள் பள்ளிக்கு போகவேண்டாமா? இந்த பொறுப்புணர்ச்சியே ஒபாமாவின் சிறந்த பண்பாக விளங்கட்டும்.

 



     RSS of this page