Home / My Books

My Books


கவனம் இங்கே அதிகம் தேவை!

ஆசிரியர்: லஷ்மி மோகன்

குடும்பத்தின் சந்தோஷம் குழந்தைகள். குழந்தை வளர்ப்பு சாதாரண விஷயமா என்ன? சவால்தான்! சாதாரண குழந்தைக்கே இப்படி என்றால், மன வளர்ச்சி முழுமை அடையாத குழந்தை பிறந்துவிட்டால்? கவலைப்பட வேண்டிய விஷயமல்ல இது. மாறாக, கவனம் செலுத்த வேண்டிய விஷயம். மன வளர்ச்சி முழுமை அடையாத குழந்தைகள் பிறக்க என்ன காரணம்? இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது எப்படி? கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளவேண்டிய சிறப்பு நிடவடிக்கைகள் என்ன? - தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.

இந்த வகைக் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன, அவர்களை வளர்க்க வேண்டிய, கையாள வேண்டிய வழிமுறைகள் என்ன, அவர்களுக்கான கல்வித் திட்டங்கள் என்று மிக விரிவாகப் பேசும் இப்புத்தகம், மன வளர்ச்சி முழுமை அடையாத குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு பயனுள்ள கையேடு!

விலை: ரூ.60 | Pages: 120








thalai.jpg  

பைம்பொழில் மீரான் அவர்கள் எழுதிய “தலை நிமிர்ந்த தமிழச்சிகள்” எனும் நூலை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது.

இலக்கியம், திரைத்துறை, அரசியல் உட்பட பல துறைகளில் சிறந்து விளங்கிய தமிழச்சிகளைப் பற்றிய ஒரு அறிமுகமாக மலர்ந்துள்ளது இந்த நூல்.

ஒளவையார் (அவ்வப்போது அவ்வையார் என்கிறார்) , காரைக்காலம்மையார், ருக்மணி தேவி அருண்டேல், வீணை தனம், கே.பி. சுந்தராம்மாள், குந்தவை, மனோரமா, மணியம்மையார் நாகம்மையார் உட்பட சுமார் ஐம்பது பேரைக் குறித்த விளக்கமான குறிப்புகள் இந்த நூலில் கிடைக்கின்றன.

ஒரு அவசரமான தகவல் புரிதலுக்கு இந்த நூல் பெருமளவில் உதவி செய்கிறது. தேர்ந்தெடுத்த நபர்களைக் குறித்த தகவல்களைச் சேமித்திருப்பதிலும், சலிக்காத நடையைக் கொண்டிருப்பதிலும் நூலாசிரியரின் உழைப்பு தெரிகிறது.

ஆணாதிக்க சமுதாயத்தில் பதிவு செய்ய மறந்து போன பெண்களைக் குறித்த வரலாறுகள் என்று முன்னுரையில் சொல்லும் பைம்பொழில் மீரானின் கூற்று முழுமையாக ஒத்துக் கொள்வதற்கில்லை. நூலில் இருக்கும் ஒளவையாரோ, மனோரமாவோ, கே.பி சுந்தராம்மாளோ மற்ற பல நபர்களோ இருட்டடிப்பு செய்யப்பட்ட நபர்கள் அல்ல என்பது கண்கூடு.

எனினும், ஒரு தொகுப்பாகக் கிடைக்கும் போது பல செளகரியங்கள் உள்ளன. பாதுகாத்து வைப்பது உட்பட.

ஓர் அவசர தகவல் சரிபார்த்தலுக்கு உதவும் நூலாகவும் இதை கணக்கில் கொள்ளலாம்.

நூலில் உள்ளடக்கம் இல்லாதது ஒரு மிகப்பெரிய குறை. அதிலும் குறிப்பாக இத்தகைய தொகுப்புகளில் உள்ளடக்கம் மிக மிக தேவையானது.

தோழமை வெளியீடாக வந்துள்ள இந்த நூல் தகவல் விரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.

தோழமை வெளியீடு
பக்கங்கள் 320
விலை ரூ.150/-
தொடர்பு எண் : 944302967


ஒண்டிக்கட்டை உலகம்

ஆசிரியர் : சிபி கே. சாலமன்

உங்கள் பேச்சிலர் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றமுடியும். வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாத மகத்தான அனுபவமாக்கிவிட முடியும். சோற்றுக்கும் காபிக்கும் சிங்கியடிக்காமல் சொகுசாக வாழமுடியும். உங்களுக்கு ஏற்ற அறையைப் பிடிப்பது எப்படி?

உங்கள் பொருள்கள் பாழாகாமல், களவுபோகாமல் காப்பாற்றுவது எப்படி?

முரண்படும் ரூம்மேட்களோடு இணக்கமாவது எப்படி? சுயமாகச் சமைத்துச் சாப்பிடுவது எப்படி?

ஹவுஸ் ஓனரின் பிக்கல் பிடுங்கல்களைச் சமாளிப்பது எப்படி?

ஓய்வுப் பொழுதை உருப்படியாக்குவது எப்படி?

எதிர்காலத்தைச் சிறப்பாகத் திட்டமிடுவது எப்படி?

இது போல் உங்கள் மனதில் தோன்றும் அத்தனைக் கேள்விகளுக்கும் இப்புத்தகத்தில் விடை உண்டு. ஒண்டிக்கட்டை உலகத்தின் ஒவ்வொரு பக்கமும் சுவாரசியமான வாசிப்புக்கு உகந்தது.

விலை: ரூ.70 | பக்கங்கள் :144


பாமரனின் பகிரங்கக் கடிதங்கள்:
எழுத்தாளர் பாமரனின் பகிரங்கக் கடிதங்கள்:

இருபதாம் நூற்றாண்டின் 'இசை நந்தன்' ராசையாவுக்கு...
திரையுலக தருமி - 'மேதை’ மணிரத்னத்துக்கு,
இந்தியன் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷங்கருக்கு....!
தேசபக்தத் திலகம் சேரன் ஐயா சமூகத்துக்கு
இயக்குநர் எவரெஸ்ட் - ஆல்ப்ஸ் - தொட்டபெட்டா கே.பாலசந்தர் அய்யா அவர்களுக்கு...!

மற்றும் பலருக்கு!

தலைமுறை - புதிய தலைமுறை தொழிமுனைவோர் 37 பேரின் நேர்காணல்கள்

img_3166-small.jpg

( சுந்தர புத்தன் )
கூட்டமாக இருக்கும் ரயில் பெட்டியில் நெருக்கி நுழைகையின் உரசிச் செல்லும் மக்களில் சில கவிஞர்கள் இருக்கக் கூடும், சில ஓவியர்கள் இருக்கக் கூடும், சில விமர்சகர்கள் இருக்கக் கூடும்.

தூரத்து புதர்மறைவில் கிடக்கும் பொருளை மோந்து பார்த்து முன்னேறும் மோப்ப நாயின் சக்தியுடன், முகத்தைப் பார்த்து கலைஞர்களை அடையாளம் காணும் வலிமை மனுக்குலத்துக்கு வாய்க்கவில்லை.

எனவே தான் அறிமுகங்கள் அவசியமாகின்றன. பாட்டியின் சுருக்குப் பைக்குள் துழாவும் விரல்களுக்கு சுருக்குப் பையே உலகம். இந்த சுருக்குப் பைகளைப் போல உலகம் அமைந்து போன கலைஞர்கள் ஏராளம் ஏராளம்.

அத்தகையவர்களை அறிமுக வெளிச்சத்தில் பிடித்து நிறுத்தும் பணியைச் செய்ய பெரும்பாலான திறமை சாலிகளால் முடிவதில்லை. மனிதாபிமானமும், சக கலைஞனை மதிக்கும் பரந்த மனமும் இருப்பவர்களால் மட்டுமே அத்தகைய பணியைச் செய்ய இயலும்.

அந்த வகையில் இலக்கிய உலகின் முன்னால் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் பணியைச் செய்திருக்கிறது சுந்தர புத்தன் அவர்களின் “தலைமுறை”.

புதிய பார்வை இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்திருக்கும் இந்த நூலில் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் சிலர் வெளிச்சப்பரப்புக்குள் வந்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய தொல் குடிகளின் பாரம்பரிய இசைக்கருவியை மீட்டும் குமார் அம்பாயிரம், கார்ட்டூன்களை வீரியக் கருவியாய் பயன்படுத்தும் முகிலன், மலையாள கலாகிராமத்து உஞ்ஞி கண்ணன், குறும்பட ரேவதி, கிழக்கு பதிப்பக பத்ரி என சம்பந்தம் இல்லாத பல துறைகளிலுள்ளவர்களை முன்னிலைப்படுத்தியிருக்கும் பாங்கு வியக்க வைக்கிறது.

சுந்தரபுத்தன், பேராச்சி கண்ணன், ரவி சுப்ரமணியம், கார்முகில், அண்ணாமலை, கனகசபை என ஆறு பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்திருக்கும் இந்த நூலில் சுமார் முப்பது பேருடைய அறிமுகம் கிடைக்கிறது.

இந்த நூலை பலர் எழுதியிருந்தாலும் கட்டுரைகளுக்கிடையே மிகப்பெரிய நடை வித்தியாசம் இல்லாமல் இருப்பது உறுத்தலற்ற வாசிப்புக்கு பெரிதும் உதவுகின்றது. எனினும் எழுத்தாளர்களின் கட்டுரைக் கட்டமைப்பில் மெலிதான ஒரு வித்தியாசத்தை உணராமல் இருக்க முடியவில்லை.

அறிமுக நூலுக்குரிய ஒரு சலிப்புத் தன்மை ஏற்படாமல் இலக்கியக் கட்டுரைகளை எழுதும் நேர்த்தியுடன் இந்த கட்டுரைகள் எழுதப்பட்டிருப்பது ரசிக்கும் படி அமைந்திருக்கிறது.

எனினும் அறிமுகமாகாத இளைஞர் அறிமுகம் என்னும் கொள்கையுடன் வெளிவந்திருக்கும் நூலில் ஜாக்குவார் தங்கம், பிரான்சிஸ் கிருபா போன்ற பரவலாய் அறியப்பட்ட நபர்களும் இடம் பெற்றிருப்பது சற்றே முரண்.

அருவி வெளியீடாய் வெளி வந்திருக்கும் இந்த நூல் கட்டமைப்பு, வடிவமைப்பு நேர்த்தியில் குறைபாடுகளின்றி சிறப்பாக வந்திருக்கிறது என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

அருவி வெளியீடு
பக்கம் 112
விலை ரூ. 40
9444302967

ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது

‘பெண்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்’, ‘பெண்புத்தி பின்புத்தி’ என்பது போன்ற பழமொழிகள்/பொதுமொழிகள் உருவானதற்கு ஒரே காரணமாக, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் முன்வைப்பது ஆண்கள் சமைப்பதில்லை என்பது தான். “நச்சரிக்கும் வீட்டு வேலைகளைப் பெண்கள் தலையில் கட்டிவிட்டு, வீடு, சமையல் போன்ற தளைகள் அவர்கள் கால்களைப் பிடித்து இழுத்துக் கொண்டே இருக்கும் பொழுது எப்படி மற்ற உலக விசயங்களில் அவர்களால் கவனம் செலுத்த முடியும்? பழமொழிகள் எதிர்பார்க்கும் முன்யோசனைக்காரிகளாய் அவர்களால் எப்படிப் பிரகாசிக்க முடியும்?” என்ற கேள்வியை முன்வைக்கிறது இந்தப் புத்தகம்.

“ஆதிகாலம் முதலே சமைப்பது ஆணின் தொழில். ஏமாற்றிப் பெண்கள் தலையில் ஏற்றிவிட்டார்கள்” என்று தொடங்குகிறது “ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது” புத்தகம். மானுட இனத்தின் தோற்றம், பரிணாம வளர்ச்சி என்று சரித்திரங்களிலிருந்து சமையல் வரை மெல்ல மெல்ல அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர்.

தானே சமைத்துச் சாப்பிடவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுமே என்ற ஒரே காரணத்திற்காக, வெளிநாடுகளுக்குப் போகத் தயங்கும் என் தோழனிடம் “ஒரு மனிதன் தான் உயிர் வாழத் தேவையான உணவைத் தானே சமைக்கத் தெரியாவிட்டால், அவன் வாழ்வதற்கே தகுதியில்லாதவன்” என்று பழிச்சண்டை போட்டுக் கொண்டிருக்கும் என் கையில் இந்த மாதிரி, “சமையல் என்பதே முழுதாக, மொத்தமாக ஆணின் வேலை தான்; பெண்கள் செய்யத் தேவையே இல்லை” என்று சொல்லும் புத்தகம் கிடைத்தால் விட முடியுமா? (என்னத்த சொல்ல, தோழனுக்குத் தமிழ் படிக்கத் தெரியாது. ஆங்கிலப் பெயர்ப்பு இருக்கான்னு கேட்க வேண்டும்..)

சமையல் பெண்பாற்தொழில் ஆனதன் காரணங்களை வேண்டிய மட்டும் அலசிய பின்னர், சமைத்தல் வரலாற்றுக்குள்ளும், உணவின் அரசியலுக்குள்ளும் புகுந்து வேகமெடுக்கிறது புத்தகம். இந்திய சமையல் என்று இன்று அழைக்கப்படும் சமையலில் எப்படி ஒவ்வொரு கட்டத்தில் அரேபியர், சிரியர்கள், கிரீஸ், சீனர்கள், போர்த்துகீசியர்கள் என்று பல நாட்டு விளைபொருட்களும் சமையல் முறைகளும் எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை விளக்குகிறார் நூலாசிரியர். ஒருசில உணவுவகைகளை விட்டு ஒதுங்குதல், ஒதுக்குதல் மூலம் எப்படி மனிதர்களிடையே உயர்வு-தாழ்வு கற்பிக்கப்படுகிறது என்னும் உணவின் அரசியலையும் தொட்டுச் செல்லத் தயங்கவில்லை.

வரலாற்றை அடுத்து சமையலறையின் சுற்றுக் காரியங்களை விளக்குகிறார். அடுக்களையின் ஒழுங்கு, சுத்தம், பாத்திரங்கள் அடுக்கும் முறை, தரை மொழுகுதல், கழுவுதல், பொருட்களைத் தேவையான சமயத்தில் வாங்கி நிரப்புவது என்று ஒவ்வொரு சின்னச் சின்ன தகவலையும் திறம்படத் தொகுத்துத் தருகிறார். வீட்டை விட்டு முதன்முதல் வெளியூர் சென்று நாங்கள் சமையலறை அமைத்தபொழுது செய்யவிட்டுப் போன விவரங்கள் கூட இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. “எங்கள் உறவினர் வீட்டில், திருமணமாகி தனிக்குடித்தனம் போகும் பெண்ணுக்கு ரூல்ட் நோட் போட்டு சின்னச் சின்ன சமையற்குறிப்புகள் எழுதிக் கொடுத்திருந்தார் அவர் தாயார்.” என்று எப்போதோ படித்த மங்கையர் மலர் சிறுகுறிப்பு நினைவுக்கு வருகிறது. ரூல்டு நோட்களை விட, நண்பனின்/சகோதரனின் திருமணத்தில் பரிசளிக்க மிக நல்ல புத்தகம் இது தான்.

சமையலறை ஒழுங்குக்கு அடுத்து சமையலறைக் காதல் மிக அழகான பகுதி. கணவனும் மனைவியுமாக சமைக்கும் பொழுது பேசும் ஒவ்வொரு வார்த்தையுமே கவிதை தான் என்பதைப் படிக்கையில், எங்கள் வீட்டில் அம்மாவும் அப்பாவும் (கொஞ்சம் அலுத்துக் கொண்டாலும்) சேர்ந்து சமைக்கும் நாட்களின் நினைவு வந்து போவதைத் தடுக்க முடிவதில்லை. என்ன இருந்தாலும் அடுக்களைக் காதல் அழகு தான் :)


அரிசிக்கும் பருப்புக்கும் தெரியாது -
சமைப்பது ஆணா பெண்ணா என்பது.
யார் மூட்டினாலும் அடுப்பு எரியத்தான் செய்கிறது.
அரிசி வேகத்தான் செய்கிறது. ஆனாலும் சமைப்பது
பெண்களின் வேலை தான் என்கிற மனப்பதிவு
ஆண்டாண்டு காலமாய் நமக்குள் அழுத்தமாய்க் கிடக்கிறது.
…..
அம்மாவையும் மனைவியையும்
மகளையும் உயிரினும் மேலாய் நேசிக்கிற
நாம் அவர்களின் விடுதலை பற்றி
நிஜமாகவே அக்கறை கொண்டுள்ளோமா?

- ச. தமிழ்ச்செல்வன்

அழகு என்றதும் அடுத்த அத்தியாயம் சமையலின் அழகியல் பேசுகிறது. ஒவ்வொரு பதார்த்தமும் காய் நறுக்கும் அளவுகளில் தொடங்கி, மசாலா அளவுகள், மஞ்சள் பொடி அளவுகள் என்று ஒவ்வொரு கட்டத்திலும் அழகுக்கான கூறுகள் கொட்டிக் கிடப்பதை நூலாசிரியர் விளக்கும்போது, பழக்கத்தின் காரணமான செய்முறை மூலமே கற்கும் இது போன்ற விவரங்களை முழுமையாக பட்டியலிட ஏன் வேறு புத்தகங்கள் இல்லை என்ற கேள்வி எழுகிறது.

சமையலின் வரலாறு, சுற்றுக் காரியங்கள், அழகியல் என்று எல்லா வெளிவிவகாரங்கள் மூலம் கொஞ்சங் கொஞ்சமாக இழுத்து, சமையலறையின் உள்ளே கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர். அடுப்பின் வகைகள், அவற்றைப் பயன்படுத்தும் முறைகள், தேவையான பாத்திரங்கள், கரண்டிகள் போன்ற சமையல் சார்ந்த பொருட்களை அறிமுகப்படுத்தி அப்படியே தொடர்ந்து, குழம்பு, ரசம் போன்றவற்றிற்கான மசாலா பொடிகள், வடகங்கள், இட்லி, தோசைப் பொடிகள் ஊறுகாய் வகைகள் போன்ற முன் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளின் சமையற்குறிப்பையும் முன்வைக்கிறார்.

சமையலின் முன் தயாரிப்புகளையும், சமைப்பதற்கான காரண காரியங்களையும் கொஞ்சம் விரிவாகவே அலசும் இந்நூல், தினசரி சமையலுக்கான குறிப்புகளைக் குறைவாகவே கொண்டிருக்கிறது. சாதம், குழம்பு, ரசம், பொரியல், கூட்டு, தோசை, இட்லி, சப்பாத்தி, பூரி, குருமா, உப்புமா போன்ற சுலபவகை குறிப்புகளுடன் நிறுத்திக் கொள்கிறார் நூலாசிரியர். எப்படியும், இந்த அடிப்படை சமையல் குறிப்புகள் தெளிவாகிவிட்டால், அடுத்தடுத்து வெவ்வேறு பெரிய புத்தகங்களைப் படித்து நன்றாக சமைக்கத் தொடங்கிவிடலாம் என்பதும் உண்மை தான். அடிப்படை சமையற்குறிப்புகள் கூட பொதுவான சமையற்குறிப்பு புத்தகங்கள் சொல்வது போன்ற மேலோட்டமான - அதாவது ஏற்கனவே வெந்நீர் வைக்கும் அளவுக்காவது தெரிந்தவர்களுக்கான- குறிப்பாக இல்லாமல், சமையல் பற்றி ஏதும் தெரியாதவர்களுக்கான சின்னச் சின்ன விவரங்களையும் சேர்த்துச் சொல்கிறது.

நடனம், இசை, தையல், எம்ப்ராய்டரி போன்ற நுண்கலைகளும், மாரல் ஸ்டடிடீஸ், கணக்கு போன்ற தினசரி வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களையும் கொண்டு விளங்கும் நமது பாட திட்டத்தில் சமையல் கலைக்கு ஏன் இடமில்லை? ஏதேதோ வேதியல் வினைகளை அடுப்புகளுடனும், ஆசிட்களுடனும் சின்ன வயதிலேயே சோதித்துப் பார்க்க முடிந்த குழந்தைகள் ஏன் சமையல் மட்டும் கற்பதில்லை?

இந்த நூல் எனக்குள் ஏற்படுத்திய இந்தக் கேள்விக்குப் பதில் பல வகையாக இருக்கின்றன. சமையல் வேலைகளை, பெரிய மனம் கொண்டு ஆண்கள் இப்போதெல்லாம் பகிர்ந்து கொண்டாலும், அடிப்படையில் இந்தப் பெண்கள் தொழிலை ஆண்களுக்கு எப்படிச் சொல்லிக் கொடுக்க முடியும்? கோ-எட் பள்ளிகளில் இதைச் செய்யாமலும் ஒதுக்குவதும் சிரமம்.

இன்னுமொரு காரணம், பொதுவாக சமையல் ஒவ்வொரு இனக் குழு சார்ந்த பயிற்சியாக இருக்கிறது. அந்தந்த இனக் குழுவில் இருப்பவர்கள் அவர்தம் வழிமுறைகளுக்கும், வீட்டு வழக்கங்களுக்கும் ஏற்ப சமையலின் சில சின்னச் சின்ன விவரங்களைக் கற்கிறார்கள். முற்காலத்தில் பெண்களே தத்தம் கணவன் வீடுகளுக்குப் போனபின்னால் தான் சமையல் கற்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கணவன் வீட்டாரின் ருசிகளுக்கும் வழக்கத்திற்கும் ஏற்றாற்போல், சமைத்து புகுந்த வீட்டுப் பெருமையையும் பிறந்தவீட்டுப் புகழையும் கட்டிக் காக்க அவர்களுக்கு இந்த வழி அவசியமாக இருந்திருக்க வேண்டும். இந்தக் காரணத்துக்காகவும் ஒரு பொதுவான சமையலறை, பள்ளிகளில் சாத்தியமில்லாமல் போயிருக்கலாம்.

எப்படியோ, இனிமேல் சமையலென்று ஒரு பாடத்தைச் சேர்ப்பதாக இருந்தால், புத்தகம் தனியாக அச்சடிக்க வேண்டாம். “

இந்தப் புத்தகத்தின் வரவேற்பைப் பார்த்தபின், ஆண்களுக்கான சமையற்பட்டறைகளை உருவாக்கும் யோசனை ஆசிரியருக்கு இருந்திருக்கும் என்பது முன்னுரையில் தெரிகிறது. டிசம்பர் 2006இல் முதற்பதிப்பு கண்ட புத்தகத்தின் சமையற்பயிற்சி பட்டறை ஜனவரியிலேயே சாத்தியமாகி இருக்கிறது. இன்னும் இது போன்ற பயிற்சிப் பட்டறைகள் எண்ணிக்கை அதிகமாக ஆக, நூலாசிரியர் கற்பனை செய்யும் ‘சமையலறைக் காதல்கள்’ சீக்கிரமே தமிழகமெங்கும் சாத்தியமாகிவிடும் என்றே தோன்றுகிறது.

புத்தகம் : ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது ஆசிரியர் : ச. தமிழ்ச்செல்வன்
வெளியிட்டோர் : வாசல், 4 Oடி/4, முதல் தெரு, வசந்த நகர், மதுரை - 625 003
செல் - 98421 02133 விலை : ரூ 45/-


From: http://eniyoruvithiseivom.blogspot.com/2008/04/blog-post.html
நாளைக்கு மழை பெய்யும் - போப்பு எழுதிய பதினான்கு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு
போப்பு - இவரின் இயற்பெயர் புருஷோத்தமன். பதினாறு ஆண்டுகளுக்கு முன் எழுதி வெளி வந்த இவரது முதலாவது சிறுகதைக்கேஆண்டின் சிறந்த சிறுகதைக்கான "இலக்கிய சிந்தனை" விருதினை பெற்றவர். இதற்கிடையில் இவர் எழுதிய சிறந்த கதைகளின் தொகுப்பே இந்த புத்தகம். விகடன் பிரசுரமாகிய இந்த புத்தகத்தில் உள்ள எந்த கதையும் விகடன் உட்பட எந்த புத்தகத்திலும் வெளிவந்தது கிடையாது.

தேவானை அதை, ஒத்திகை, மெயில் தாம்பத்தியம், பியர், குழந்தை, தம்மக்குடும்பன், இங்கே அழுத்தவும், தாயம்மாள், பூனைகளின் மாநாடு, கூடாரம், ஒரு முதல் இரவின் விடிகாலை, குரைப்பின்முடிவில், நாளைக்கு மழை பெய்யும், ஈரம் என்ற பதினான்கு சிறுகதைகளின் தொகுப்புதான் இந்த நாளைக்கு மழை பெய்யும்.

இந்த புத்தகத்தின் பதிப்பாளரின் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளபடி இவருடைய கதைகள் தமிழின் பாரம்பரியச் செழுமையும், மொழி வளமும், அரசியல், கலாசாரம், மனித உணர்வுகள், தியாகங்கள், வீரம் எனப் பலவகைப்பட்ட குரல்களை கலாபூர்வமாக பதிவு செய்து நம்மை சிந்திக்க வைக்கிறது.

இவரது கதைகள் கிராமம் முதல் நகரங்கள் வரை நம் பார்வையை விரிய செய்து வெவ்வேறு உணர்வு நிலைகளில் பயணிக்கச் செய்கிறது, இவர், தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் சிங்கப்பூரில் சில காலங்கள் வாழ்ந்த அனுபவமும் இதற்க்கு களம் அமைத்து கொடுத்திருகின்றது.

இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகள் இரண்டு, அதில் ஒன்று நாளைக்கு மழை பெய்யும், கிராமத்தில் வானத்தையும் மண்ணையும் நம்ம்பியே வாழ்ந்த மனிதன் நகரத்திற்கு புலம் பெயரும் போது ஏற்ப்படும் அவஸ்தைகளை நம் கண்முன்னே நிறுத்தும் இந்த கதை. கதையின் ஒரு சில வரிகளை இங்கே எழுதுகிறேன்.

இவ்வளவு எட்டத்தில் இருந்தாலும் பார்த்த கண் வாங்காமல் பார்த்தபடியே இருக்கிறது வானம். பார்க்க பொறுக்காத வானம் ஒரு நாளைக்கு பெய்யும்.
எந்த விதிகளுக்கு இணங்கியும் அல்ல. வெப்பமும் அழுகின நாற்றமும், கவ்வும் தூசியும் உயர்ந்து தன்னில் படர்ந்து விடுமோ என்று பயந்து பெய்யும். இதுவரை தான் சகித்த புழுக்கம் தாங்காமல் பெய்யும். சடச்சட சடச்சட சடச்சட என ஒன்று ஆயிரம் ஓராயிரம் கோடி துளிகள் பெய்யும். மின்னல், இடி என ஆர்பரித்து அல்ல. நின்று, அடைந்து பெய்யும். அனைத்து கசடுகளையும் கடலில் கொண்டு சேர்க்க நாளைக்கு மழை பெய்யும்.

இன்னொரு கதை ஈரம் - ஒரு சங்கில் கடலை உணர்வது போல இந்தக் கதையின் மூலமாக மழையின் ஈரத்தை நாம் உணர்வது நிச்சயம். மழையினை அனுபவித்து உணரும் கணவனும் மழையின் ஈரத்தையே ஒரு அசௌகாரியமாக நினைக்கும் மனைவியும் ஒரு மழை காலத்தில். இதுதான் கதை.
இந்த கதையிளிருந்தும் சில வரிகள், சாலைகள் குளிக்க பண்ணின யானை போல கறுப்பாக மினுமினுப்பில் இருந்தது. சாலையோர அறிப்பிலும் ஒரு சுத்தமும் நேர்த்தியும் இருந்தது.
ஜட்ஜ் பங்களா காம்பவுண்டு மரங்களில் இருந்து உதிர்ந்து சாலையில் பரவிய மஞ்சள் பூக்கள் ஒரு விழா குதுகலத்தைத் தந்தது. பங்களா சுவரின் முடிவு வரை சென்று திரும்பி வந்து வண்டியின் சக்கரம் பூக்கள் மீது ஏறாத வண்ணம் வளைத்து வளைத்து ஓட்டினான். வீடு திரும்பியதும், பேண்ட் பாக்கெட்டினுள் கையை விட்டா நுழைவிலேயே சரசரத்த பாலிதீன் பை விரல்களுக்கு நெலுநேளுப்பைக் கொடுத்தது. படபடப்புடன் வாசுகி கவனிக்கிறாளா என அடுப்படியை பார்த்தபடியே படுக்கை அறையில் நுழைந்தான். ஈரம்மான ரூபாய் நோட்டுக்களை பதமாக எடுத்து மெத்தையில் வைத்து நீவினான்.
"ஐயோ .... அதையும் என் ஈரமாக்குரிங்க இந்த மழை காலத்தில" என்றாள் வாசுகி. மெத்தையின் மீது இருந்த நோட்டுக்களை எடுத்து கையில் ஒற்றிக் கொண்டு அவன் மீது பார்வை ஏதும் வீசாமல் அடுக்களைக்குள் எட்டுக்கள் வைத்து போனாள் ...... கையில் ஒற்றின காகிதங்களில் கவனமாக.

வண்ணதாசன் ஒரு கதையில் சொல்ல்வது போல, மழையிடம் எந்த கேள்விகளும் இல்லை. சொல்ல போனால் எல்லா கேள்விகளுக்கும் மழையே பதில்.
இவருடைய கதை சொல்லும் விதம் எந்த கருத்துகளையும் நம்மிடம் திணிக்கும் விதமாக இல்லாதது. இந்த கதைகளை அனுபவித்து படிப்பது மூலம் நாம் நிறைய உணர முடிகிறது. .
ஒரு முறை படித்து விடுங்கள்.

http://www.vikatan.com/Publication/new_pub/images%5CEV.jpg  http://www.viruba.com/tamil%5C123%5Cviruba%5CImages%5CBooks%5CFpage%5CVB0002171.jpg

எழில்வரதன்...
தர்மபுரி மாவட்டம், லளிகம் கிராமத்துக்காரர். இயற்பெயர் வரதராஜன். பிழைப்புக்காக கிராமம் விட்டு நகரம் நகர்ந்த மனுஷன். இயந்திரங்களின் இடைவிடாத இயக்கத்துக்கும் இரைச்சலுக்கும் நடுவில் வேலை.

உறவுச் சங்கிலியின் பலவீனப்பட்ட இணைப்புகளையும், வலி கண்ட சிதிலத்தையும் அடையாளப்படுத்தி, வாழ்வின் சுவாரசியங்களை மகிழ்வோடு சொல்லும் ஒரு கதை சொல்லி, வாராவாரம் வருகிறார் ஒரு சிறுகதையுடன்!
உணர்ச்சியும் சிந்தனையும் பிணைந்த எழுத்து நடை, எதிர்பார்க்கவே முடியாத கதைப்போக்கு. புத்தம் புது வாசிப்பு அனுபவம் தரும் சிறுகதைகள்.
- எழில் வரதன்(elilvarathan@sify.com)
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
தமிழில் அருகிப் போன அங்கத நடை கதை சொலல்பாணி எழில்வரதனின் இச்சிறுகதைத் தொகுப்பெங்கும் அடர்ந்து கிடக்கிறது. சிக்கெடுக்க இயலாத பின்னலுக்குள் கிடக்கும் மனித வாழ்வைக் கூட வாய்கொள்ளாச் சிரிப்புடனும் கிண்டலான சலிப்புடனும் விவரித்துப்போகிற கதையோட்டம் தமிழுக்கு வெகு புதிது.

'ரதிப்பெண்கள் திரியும் அங்காடித் தெரு' நூலின் அறிமுக விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் கடந்த பிப்ரவரி 6 அன்று எழுத்தாளர்கள் பிரபஞ்சன், பாவண்ணன், சி.மோகன் மற்றும் பதிப்பாளர் சந்தியா நடராசன் ஆகியோர் பங்கேற்புடன் ஒசூரில் நடந்தது.

எந்த இதழிலும் பிரசுரம் காணாத பதினைந்து சிறுகதைகள் கொண்ட 'ரதிப்பெண்கள் திரியும் அங்காடித் தெரு' என்னும் முதல் தொகுப்பின் மூலம் வாசகர்களின் கவனத்தில் உடனடியாகப் பதிந்த புதிய இளந்தலைமுறைப் படைப்பாளி எழில்வரதன். வறுமையும் நெருக்கடிகளும் எல்லாத் தருணங்களிலும் நிலவும் அடித்தட்டையும் நடுத்தட்டையும் சேர்ந்த உலகத்துக்குரிய பிரச்சினைகளே இவரது கதைகளில் படைப்பு மையங்களாக உள்ளன.

எழில்வரதனுடைய கதைகளெங்கும் பரவியிருக்கும் சின்னச் சின்னக் குடும்பச் சித்திரங்கள் பல தருணங்களில் நம்மை அதிர்ச்சியில் உறையவைத்துவிடுகின்றன. சில, துக்கத்தில் ஆழ்த்துகின்றன. சில, நம்ப முடியாத வகையில் தடுமாறவைக்கின்றன. எல்லாக் கதைகளிலும் பெண்கள் பெருமளவில் துயரங்களை ஏற்றுக்கொள்கிறவர்களாக இடம் பெறுகிறார்கள். வாழ்க்கையின் எதார்த்தத்தையும் வெப்பத்தையும் புரிந்துகொண்டு அனுசரித்துப்போகிறவர்களா, நாளை நிகழப்போகும் விடியலுக்காக இரவின் வேதனைகளைப் பல்லைக் கடித்துச் சகித்துக்கொள்கிறவர்களா எனப் புரிந்துகொள்ள முடியாத புதிராக இருப்பவர்கள் இப்பெண்கள். எழில்வரதனின் எழுத்து இப்புதிரின் சித்திரங்களை அசாதாரணமான வகையில் துல்லியமாகத் தீட்டுவதில் வலிமை பெற்றனவாக விளங்குகின்றன. தெருவெங்கும் வெளிச்சமும் என் வீட்டில் இருட்டும் ஏன் என்கிற கேள்வியின் விளிம்புவரை வந்தடைகிற ஆண்கள் அக்கேள்வியின் ஆழத்துக்குள் செல்ல இயலாதவர்களாகப் போதையிலும் கசப்பிலும் திசைதிரும்பிப் போய்விடுகிறார்கள்.

'நீரடி ரகசியம்' இவருடைய முக்கியமான கதைகளில் ஒன்று. பள்ளிக்குப் போக வேண்டிய மகன் ஊருக்கு வெளியே எங்கோ சேற்றுத் தண்ணீரில் ஆட்டம் போட்டு ஏமாற்றுவதைக் கண்டறிந்து வேதனையில் மூழ்குகிறார் ஒரு தந்தை. மகனோடு பழகிப் பழகிச் சேற்றுத் தண்ணீர்க் குளியல் தந்தைக்குப் பிரியமுள்ளதாக மாறும்போது கல்வியின் இன்பத்தைக் கண்டறிந்து ருசிமாற்றம் கொள்கிறான் மகன். அந்த அனுபவம் மிகப் பெரிய தரிசனமாக உருக்கொள்கிறது. ஈடுபாடு என்பது புறம் சார்ந்த ஒன்றல்ல. அகம் சார்ந்த ஆழ்ந்த உணர்வு நிலை. எதிலும் லயித்து இன்பத்தை உள்வாங்கிக்கொள்ளும் சக்தி நிலை. அது வாய்க்கப்பெற்றவனால் எல்லாவற்றுக்குள்ளும் கண்ணுக்குப் புலப்படாத ரகசிய வழிகளைத் திறந்துகொண்டு வேக வேகமாகச் செல்ல முடியும். வாசகர்கள் கண்டுணரும் அளவுக்கு எளிமையான முறையில் அத்தரிசனத்தைத் தீட்டிக் காட்டுகிறார் எழில்வரதன். இந்த எளிமையும் நுட்பமும் இவரை முக்கியப் படைப்பாளியாக அடையாளப்படுத்துகின்றன.

வாழ்வின் மலைச் சரிவில் நிராசையிலும் இயலாமையிலும் கரிந்து மட்கி, பொதுப் பார்வையிலிருந்து தப்பி விடவே சாத்தியமான குலைவுகளின் பல சித்திரங்களைத் துல்லியமான நிறங்களோடும் நுட்பங்களோடும் தீட்டிக் காட்ட உதவியாக உள்ள எழுத்தாற்றலே எழில்வரதனுடைய மிகப் பெரிய பலம் என்று சொல்லலாம். ஒரே விதமான விவரணை மொழியில் அனைத்தையும் சொல்ல எண்ணும் ஆர்வத்தை அவரது பலவீனம் என்று குறிப்பிடலாம்.

வணிகப்பத்திரிகையில் வெளியாவதுதான் படைப்பாக்கத்தின் அங்கீகாரம் என்ற கற்பிதங்களைப் பொருட்படுத்தாது பிரசுர நோக்கமின்றியே தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார் எழில் வரதன். கிள்ளிக் கொடுக்கச் சொன்னால் அள்ளிக் கொடுக்குமொரு கிராமத்துத் தாய் போல கொடுத்துக்கொண்டேயிருக்கிறான் தினம் பல கதைகளை. கீதையின் நீளத்தைவிடவும் ஆழம் கூடவேண்டும் என்பதைத் தொடரும் தன் எழுத்தின் வழியாகவே எழில்வரதன் கண்டடைந்திருப்பதை வாசிப்பினூடே நீங்களும் உணரக்கூடும் - ஆதவன் தீட்சண்யா.

எழில்வரதனின் பயணம் விரிவானது. விரைவானது. ஆனால் இக்காலத்திற்கே உரிய எந்த டென்சனும் இல்லாமல் நிதானமாக 'டீ ஆற்றும் ஜென்'னாகக் கவிதை ஆற்றுகிறார். வார்த்தைச் செதுக்கல் இல்லை. பத்திகளைக் கட்டும் பதற்றம் இல்லை. படிமம் செய்யும் பகட்டு இல்லை. கவிதை கவிதையாகக் கருவைச் சுமந்து கர்ப்பினித் தாயாக மெருகு பொழிய நடந்து போகிறது. ஆறு மலையை உடைத்து உருட்டிக்கொண்டு போகும் சிறு கல்லாக உருண்டு உருண்டு போகிறது. பிரபஞ்சத்தின் புள்ளிகள் அனைத்திலும் தன்னைக் கரைத்து 'யாது நான் இங்கு' என்று கேட்கும் எழில்வரதனின் வரவு முக்கியமான பதிவு.

ஆதிமங்கலத்து விசேஷங்கள் - க.சீ.சிவகுமார்

சிரிப்பூட்டும் கிராமம்!

‘ஆதிமங்கலம்’ என்ற கற்பனை கிராமத்துக்குள் அறிவியல் தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகமாகும்போது என்னென்ன கூத்தெல்லாம் நடந்தன என்பதே இந்தப் புத்தகத்தின் சாரம். ஒவ்வொரு நிகழ்ச்சியும் தெறித்துத் தெறித்துச் சிரிக்கவைக்கும்! நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதுவதற்கு கூர்ந்த கவனிப்பும் தனித்துவமான நடையும் வாழ்க்கையின் மீது புகார் இல்லாத மனநிலையும் வேண்டும். சர்க்கஸில் கோமாளியைப் பார்த்துச் சிரிக்கிறோம். பல கோமாளிகள் மற்ற சாகச வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பவராக இருப்பார்கள்! அதைப் போல நகைச்சுவையாக நகரும் ‘ஆதிமங்கலத்து விசேஷங்கள்’, தீவிரமான விஷயங்களையும் நுட்பமாக சுட்டிக்காட்டிச் செல்கிறது.
    மோட்டார் பைக்கைப் பார்த்து அலறியடித்துக் கொண்டு ஓடும் கிராம மக்கள், திரையில் சண்டையிடும் கதாநாயகனையும் வில்லனையும் விலக்க முயற்சிக்கும் பஞ்சாயத்துத் தலைவர்... என அறிவியல் சாதனங்கள் கிராமத்துக்குள் நுழையும்போது உண்டாகும் அனுபவங்களை வரிக்கு வரி சிரிக்கும்படி எழுதி இருக்கிறார் க.சீ.சிவகுமார். அத்துடன், ‘ஒளியன்’,  ‘கறியுண்ணி’ போன்ற புதிய சொல்லாக்கங்களை ஆங்காங்கே தெளித்திருப்பதும் புதுமை. இந்த விஞ்ஞான ஜோக்குக் கச்சேரிக்கு டிராட்ஸ்கி மருதுவின் ஓவியங்கள் ரசனை பொங்கும் பக்க வாத்தியம். இந்தப் புத்தகம் கிராமத்து வாழ்க்கையை மண்வாசனை மாறாமல் பதிவுசெய்துள்ளது. இதனை வாசிப்பவர் கிராமவாசியாக இருந்தால், ‘நம் அனுபவத்தில் கண்ட சம்பவமாக இருக்கிறதே’ என்று பழைய நினைவுகளை அசைபோட வைக்கும். நகரவாசிகளை ‘ஆஹா..! எவ்வளவு வெள்ளந்தியான, சுவாரசியமான அனுபவங்கள்’ என வியக்கவைக்கும். ‘ஜூனியர் விகடன்’ இதழில் தொடராக வெளிவந்தபோது ஆதிமங்கலத்து விசேஷங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. புத்தகமாக, மொத்தமாக வைத்துப் படிக்கும்போது உங்கள் ஆதிமங்கலத்துப் பயணம் இன்னும்கூட சுவாரசியம் மிக்கதாக இருக்கும்.

எமர்ஜென்சி நடந்தது என்ன - வி.கிருஷ்ணா ஆனந்த்


சுதந்திர இந்தியாவில் நடந்த ஒரு சுதந்திரப் போர்

நாட்டின் சுதந்திரத்துக்காக ஒரு சத்தியாகிரகப் போரை சந்தித்தவர்கள், சுதந்திர இந்தியாவில் மீண்டும் ஒரு போராட்டத்தை சந்தித்தார்கள். ஆனால், ஆளும் தரப்பு பிரிட்டிஷாரின் அடக்குமுறையைவிட அதிக உத்வேகத்தோடு இரும்புக்கரம் கொண்டு அடக்குமுறையைக் கையாண்டது. இதிலும் ஆளும் தரப்புக்கு எதிராக சத்தியாகிரகப் போர் வழிமுறையை ஜனநாயக விரும்பிகள் கையாண்டார்கள். அப்படிப்பட்ட சூழலில் நாட்டில் நிகழ்ந்த நிகவுகள் என்ன? அவற்றின் சூத்ரதாரியாக இருந்து செயல்பட்டது யார்? அவற்றின் விளைவுகள் எத்தகையதாக இருந்தன? - போன்ற தகவல்களை இந்தத் தலைமுறை அறிந்துகொள்ளும் வகையில் நெருக்கடிகால சரித்திரச் சம்பவங்கள் கோர்வையாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இந்த நூலில் காட்டப்பட்டுள்ள விஷயங்களை படித்து உள்வாங்கிக் கொண்டால், அரசியல் நிலவரங்களை உணர்ந்துகொண்ட மனிதனாக நம்மை உயர்த்திக்கொள்ள முடியும்.




ஃபைவ் ஸ்டார் பலகாரக் கடை - ஜுனியர் விகடனில் க்ரேசி மோகன் எழுதிய கட்டுரைத் தொகுப்பு






‘ஜூனியர் விகடன்’ தொடங்கப்பட்ட வருடத்தில், வெவ்வேறு தலைப்புகளில் கிரேஸி மோகன் தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் இப்போது நூல் வடிவம் பெறுகிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் நூலாசிரியரின் ‘நகைச்சுவை கைவண்ணம்’ மிளிர்வதை உணரலாம். காமெடி கட்டுரைகளைப் படிப்போம்... கவலையை மறந்து சிரிப்போம்!







ஏழு தலை நகரம் - எஸ்.ராமகிருஷ்ணனின் குழந்தைகளுக்கான நாவல் (பெரியவர்களும் படிக்கலாம்)

வயதும் படிப்பும் வளர வளர வேறு வேறு உலகங்களில் சுற்றியலைந்து ஏதோ எழுதிப் படித்து இன்று ஒரு எழுத்தாளனாக உருவாகியிருக்கிறேன். ஆனாலும் பரணில் தூக்கி எறிந்த விளையாட்டுப்  பொம்மை போல சிறு வயது கதைகள் தூசு படிந்துக் கிடப்பதை ஒரு நாளில் கண்டுணர்ந்தேன். ஒரு எழுத்தாளனாக நாவல்கள் எழுதுவது, உலக இலக்கியம் பற்றி எழுதுவது  இவை யாவையும் தாண்டி எனது பால்ய கால கதைகளின் சாலையில் கொஞ்சம் சுற்றி வர வேண்டும் என்ற ஆசை துளிர்க்கத் துவங்கியது. அப்படித்தான் இந்தக் குழந்தைகளுக்கான நாவலை எழுதத் துவங்கினேன்.

கானா - நாகூர் ரூமி

சென்னைப் பட்டணத்தின் பிரத்தியேக அடையாளங்களுள் ஒன்றான "கானா' பாடல்களுக்கும் இலக்கிய அந்தஸ்து உண்டு என்று தீர்மானமாக நம்பும் ஆசாத், கானா மட்டுமல்லாமல் மரபுப்பா வகைகளிலும் தீவிரப் பயிற்சியும் தேர்ச்சியும் மிக்கவர். உருது மொழியில் உள்ள கஸல் பாடல்களை அதன் சந்தம் பிசகாமல் அப்படியே தமிழில் கொண்டுவரும் அசுர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
ராயர் காபி கிளப், தினம் ஒரு கவிதை, மரத்தடி, சந்தவசந்தம், தமிழ் உலகம் போன்ற இணையத் தமிழ் மடலாற் குழுமங்களில் ஆர்வமுடன் பங்கேற்கும் ஆசாத், பணி நிமித்தம் தற்சமயம் வசிப்பது சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில்.














தவிப்பு - ஞாநி வேற்றுமையில் ஒற்றுமை
பத்திரிகை, நாடகம், தொலைக்காட்சி, இளைஞர்களுக்கான - பெண்ணிய - ஆளுமைப் பயிற்சி வகுப்புகள் என்று எந்தத் துறையில் இயங்கினாலும் அதில் தன் தனி முத்திரையைப் பதித்துவரும் எழுத்தாளர் ஞாநியின் விறுவிறுப்பான நடையும் சிந்தனை மிகுந்த கருத்துக்களும் வாசகர்களின் மனதைக் கவரும் என்பது நிச்சயம்

விடுதலைப்புலிகள்
ஆசிரியர் : மருதன்

உலகின் ஒவ்வொரு கோடியிலும் விடுதலை வேட்கையுள்ள எத்தனையோ ஆயுதப் போராட்டக் குழுக்கள் பரவியுள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ) மிகவும் வித்தியாசமானவர்கள். அவர்களிடம் கடற்படை உண்டு. விமானப்படைகூட உண்டு.

உறுதியான தலைமை, ஒழுக்கம் மிகுந்த படையாளிகள், குறைந்த தளவாடங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தும் தன்மை. இதெல்லாம் விடுதலைப் புலிகளின் திறனுக்குச் சான்று. தங்களது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளில் ஓர் இறையாண்மை மிக்க அரசாங்கமாக அவர்கள் நடந்துகொள்வது ஆச்சரியமான விஷயம். தற்கொலைப்படை என்னும் ஆயுதத்தைக் கொண்டு இலங்கை, இந்திய அரசுகளின் முக்கியமான பல தலைவர்களை புலிகள் கொன்றுள்ளனர். பிற போராளி இயக்கங்கள் என்று எதுவுமே இருக்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு தீர்த்துக்கட்டியுள்ளனர். பல்வேறு தளங்களில் கொடூரமான கொலைகள், குழந்தைப் போராளிகளைப் படையில் வைத்திருப்பது, இலங்கை ராணுவத்துக்கு எதிரான தங்களது போரை நடத்த, புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து மிரட்டிப் பணம் வசூல் செய்வது போன்ற பல குற்றச்சாட்டுகள் இவர்கள்மீது.

ஆனாலும் ஈழத் தமிழர்கள் பலரும் இன்று விடுதலைப் புலிகளை விட்டால் வேறு கதியில்லை என்ற நிலையில் உள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்கம், அந்த இயக்கத்தை உருவாக்கி இன்றுவரை நடத்திவரும் பிரபாகரன் என்ற மனிதர், இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக நடந்துவரும் மொழி/இனப் போரின் பின்னணி, இந்தியாவின் தலையீடு எனப் பலவற்றையும் தொகுத்து புரியும் வகையில் எளிமையாகத் தருகிறது இந்தப் புத்தகம்.

விடுதலைப் புலிகளின் திறனுக்குச் சான்று. தங்களது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளில் ஓர் இறையாண்மை மிக்க அரசாங்கமாக அவர்கள் நடந்துகொள்வது ஆச்சரியமான விஷயம். தற்கொலைப்படை என்னும் ஆயுதத்தைக் கொண்டு இலங்கை, இந்திய அரசுகளின் முக்கியமான பல தலைவர்களை புலிகள் கொன்றுள்ளனர். பிற போராளி இயக்கங்கள் என்று எதுவுமே இருக்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு தீர்த்துக்கட்டியுள்ளனர். பல்வேறு தளங்களில் கொடூரமான கொலைகள், குழந்தைப் போராளிகளைப் படையில் வைத்திருப்பது, இலங்கை ராணுவத்துக்கு எதிரான தங்களது போரை நடத்த, புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து மிரட்டிப் பணம் வசூல் செய்வது போன்ற பல குற்றச்சாட்டுகள் இவர்கள்மீது.ியும் வகையில் எளிமையாகத் தருகிறது இந்தப் புத்தகம்.

கோபுலு ஜோக்ஸ் பாகம் - 2: விகடன் பிரசுரம்
அளவு குறையாத சிரிப்பு

ஒரு மனிதன் வாய் விட்டு சிரிக்கும்போதுதான் அவனுடைய மனம் புத்துணர்ச்சி அடைகிறது. பல்வேறு நெருக்கடிகளில் சிக்கிச் சிதைந்து போயுள்ள இக்கால மனிதன் தன் நெருக்கடி வாழ்க்கையை மறந்து மகிழ்ச்சியாக இருப்பதற்கு எத்தனை விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறான். இதனைப் புரிந்துகொண்ட தொலைக்காட்சிகள்கூட நெடுந்தொடர்களுக்குக் கொடுத்து வரும் முக்கியத்துவத்துக்கு இணையாக இப்போது நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கும் கொடுக்கின்றன.
    நகைச்சுவைத் துணுக்குகள் வெளியிடாத பத்திரிகைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பத்திரிகைகளும் நகைச்சுவைக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகின்றன. தொடக்கக் காலத்திலிருந்தே விகடன் இப்பணியில் முன்னோடியாக இருந்து வருகிறது. அட்டையிலேயே ஜோக்குகளை வெளியிட்டு வாசகர்களை மகிழ்வித்ததில் விகடனுக்குப் பெரும் பங்கு உண்டு.
    மாலி, ராஜு வரிசையில் கோபுலுவும் நகைச்சுவைக் கொப்பளிக்கும் பல ‘ஜோக்’குகளை விகடன் வாசகர்களுக்காக சிருஷ்டித்தார். 1950 முதல் 1964 வரையில் உள்ள காலகட்டத்தில் இவர் உருவாக்கிய ஜோக்குகளை இன்று படித்தாலும் வாய் விட்டு சிரிக்க முடிகிறது. விகடனில் வெளியான கோபுலுவின் ஜோக்குகள் தொகுக்கப்பட்டு முதல் பாகம் ஏற்கெனவே வெளியானது. இதோ, இரண்டாவது பாகம் உங்கள் கைகளில்... படித்து, சிரித்து மகிழுங்கள்!

தினமணி டூன் - 2

தினமணி மதியின் அரசியல் நகைச்சுவை (காட்ச் பிடி மாதிரி ஒரு பதம்!) கார்டூன்கள்

கிழக்கு வெளியிட்டிருக்கும் இவரது மற்றொரு புத்தக பின்னட்டையில்:

நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக் ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி.

ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வாங்குகிறவர்கள் இருப்பது போல,மதிக்காவே 'தினமணி'வாங்குகிறவர்கல் உண்டு.

மதியின் 'தினமணி'முதல் பக்க பாக்கெட் கார்டூன்களின் தேர்ந்தெடுத்த தொகுப்பு இது.

ஒரு வகையில் மதியின் கார்ட்டூன்கள் நமது சமூகத்தின் மனச்சாட்சி.அதனாலேயே புரட்டத் தொடங்கியதுமே நம்மால் ஒன்றிப்போய்விட முடிகிறது!
உதாரணம்:
பாவம், போற வழில யாரோ தவற விட்டுட்டாங்க போலிருக்குது..!
ஏதோ 'கலைமாமணி' விருதாம்!

ராயர் காப்பி கிளப்

ஆசிரியர்: இரா. முருகன்

இணையத்தில் வெளியான இரா. முருகனின் கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தின் மகிழ்ச்சியைத் தமிழுக்கு மீட்டுத் தருவது முருகனின் எழுத்துகள். ஒரு குழந்தையின் குதூகலமும் ஆர்வம் கொப்பளிக்கும் பார்வையும், அதே சமயம் முதிர்ந்த சமூக விஞ்ஞானி முன்வைக்கும் மெலிதான அலசல் பார்வையும் இணைந்து வெளிப்படும் எழுத்து அவருடையது என்று முன்னுரையில் மதிப்பிடுகிறார் திண்ணை ஆசிரியர் கோ. ராஜாராம்.



பூக்குட்டி அட்டைபடம்


குழந்தைகளுக்காக தமிழில் தரமான அழகான புத்தகங்கள் இல்லையே என்ற குறையை நீக்க இந்தப் புத்தகம் தயாரிப்பிலும் வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் உன்னதமாக அமைக்கப்பட்டுள்ளது. எளிய நடையில் குழந்தைகளுக்கு சுலபமாக படித்துக்காட்டவும் தமிழ் கற்றுத் தரவும் உதவக்கூடிய கதைப் புத்தகம் இது.












மீண்டும் ஜீனோஇந்தக் கதையில் ஜீனோ என்ற இயந்திர நாய் மனித சமுதாயம் சுபிட்சமடைய ராணி நிலாவுக்கு உதவுகிறது. அதற்காக அது செய்யும் சாகசங்கள் மிக அற்புதம்.

மனிதர்களைவிட இயந்திரங்கள் உண்மையாய்ப் பாசாங்கு செய்யாமல் இந்த தேசத்தைக் காக்க முடியும். ஆள்வோர் தன் கடமைகளைச் சரியாகச் செய்யாமல் சுயநல வேட்கை கொண்டு நாட்டை வேட்டைக் காடாக்கி வரும் இந்த நாளில்...? அதற்கு மாற்று என்ன? இப்படி யோசித்ததின் பலனே இந்தப் புதிய சிந்தனை.


























மதன் ஜோக்ஸ் (பாகம் 3)

ஜூனியர் விகடன் தொடங்கப்பட்ட சமயத்தில் மதன் வரைந்த ஜோக்குகளும், கார்ட்டூன்களும் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த ஜோக்குகளின் தொகுப்புத்தான் இப்போது நூல் வடிவத்தில்.

ஜூ.வி.யின் வெள்ளிவிழா ஆண்டில் இந்தத் தொகுப்பு வெளியாவது இனிமையான ஒரு நிகழ்வு.






     RSS of this page