| | | |
Uploading ....
http://nhm.in/printedbook/920
| தி.மு.க (DMK) | by R. Muthukumar | Pages: 80 | ISBN:
978-81-8368-967-0 | Category: Political
பெரியார் - அண்ணா
இடையே முதல் விரிசல் ஏன் விழுந்தது? பெரியார், மணியம்மையைத் திருமணம்
செய்ததுதான் திமுக உருவானதற்கு நிஜக்காரணமா? திராவிடநாடு கோரிக்கையை
திமுக ஏன் கைவிட்டது? ஆட்சியைப் பிடிப்பதற்காகத்தான் திமுக மொழிப்
போராட்டத்தை ஊக்குவித்ததா? கருணாநிதி முதல்வரானதன் பின்னணியில்
எம்.ஜி.ஆர் இருந்தாரா? வாரிசு அரசியல்தான் வைகோவை வெளியேற்றியதா?
தி.மு.கவின் வெற்றி ரகசியம் என்ன?
http://nhm.in/printedbook/921
| அ.தி.மு.க (ADMK) | by R. Muthukumar | Pages: 80 | ISBN:
978-81-8368-968-7 | Category: Political |
மு.க. முத்துவின்
திரைப் பிரவேசம் எம்.ஜி.ஆரை ஆத்திரப்படுத்தியதா? தி.மு.க.வில் அமைச்சர்
பதவி மறுக்கப்பட்டதுதான் எம்.ஜி.ஆரின் பிரிவுக்குக் காரணமா? சத்துணவுத்
திட்டம்தான் எம்.ஜி.ஆரை ஆட்சிக் கட்டிலில் நிலையாக அமரவைத்ததா?
எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சியைக் கைப்பற்ற ஜெயலலிதாவுக்கு உதவியது யார்? ஊழல்கள் அம்பலமான
பிறகும் 2001ல் அதிமுக ஆட்சியைப் பிடித்தது எப்படி? தமிழகத்தின்
தவிர்க்கமுடியாத அரசியல் சக்திகளுள் ஒன்றாக அ.தி.மு.க மாறியதற்கு
ஜெயலலிதாவின் பங்களிப்பு என்ன?
http://nhm.in/printedbook/922
| பா.ம.க (PMK) | by R. Muthukumar | Pages: 80 | ISBN: 978-81-8368-969-4
| Category: Political |
வன்னியர்களின்
நிஜமான கோரிக்கைகள் என்னென்ன? அவர்களுடைய நம்பிக்கை நட்சத்திரமாக பா.ம.க
உருவானது எப்படி? சமூகநீதி, இட ஒதுக்கீடு கோஷங்கள் பா.ம.கவுக்கு எந்த
அளவுக்கு வெற்றியைக் கொடுத்தன? தமிழ்மொழி, திரைத்துறையின் பக்கம்
பாமகவின் கவனம் திரும்பியது ஏன்? மது, புகைக்கு
எதிரான போராட்டங்கள்தான் பாமகவின் இருப்பை உறுதி செய்கின்றனவா?
தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக பா.ம.க உருவாகிவருகிறதா?
ம.தி.மு.க (MDMK)
| by J. Ramki | Pages: 80 | ISBN: 978-81-8368-970-0 | Category:
Political
ஈழப்பயணம்தான்
வைகோவை தி.மு.கவிலிருந்து வெளியேற்றியதா? விடுதலைப்புலிகளை ஆதரிப்பதுதான்
ம.தி.மு.கவின் பலமா? நடைப்பயணங்கள் சாதித்தது என்ன? வைகோவின் பொடா
சிறைவாசம் கட்சிக்கு அனுதாபத்தைக் கொடுத்ததா? திமுக, அதிமுகவுடன்
மீண்டும் மீண்டும் அணி அமைத்ததுதான் சறுக்கலுக்குக் காரணமா? தமிழகத்தின்
மூன்றாவது பெரியகட்சி என்ற அந்தஸ்து ஏன் மதிமுகவுக்குக் கிடைக்கவில்லை?
http://nhm.in/printedbook/924
| எய்ட்ஸ் (HIV) | by Nagore Rumi | Pages: 80 | ISBN: 978-81-8368-987-8
| Category: Health |
ஹெச்.ஐ.வி.க்கும்
எய்ட்ஸுக்கும் உள்ள வேறுபாடு என்ன? ஹெச்.ஐ.வி. கிருமிகள் எப்படிப்
பரவுகின்றன? எய்ட்ஸ் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்னென்ன?
எய்ட்ஸுக்கான பரிசோதனைகள் என்னென்ன? தமிழகத்தில் இலவச பரிசோதனை மையங்கள்
எங்கு உள்ளன?
உயிர்க்கொல்லி
நோயான எய்ட்ஸ் குறித்த பல சந்தேகங்களைத் தீர்த்து வைத்து, அந்த நோயைப்
பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது இந்தப் புத்தகம்.
http://nhm.in/printedbook/925
| யோகாசனங்கள் (Yogasanangal) | by Dr Ra.Manivasagam | Pages: 80 | ISBN:
978-81-8368-988-5 | Category: Health |
யோகாசனங்கள்
செய்வதால் நோய்கள் குணமாகுமா? யார் வேண்டுமானாலும் யோகாசனங்கள்
செய்யலாமா? யோகாசனங்களை எப்போது, எவ்வளவு நேரம் செய்யலாம்?
பிராணாயாமத்தால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? சரியான முறையில்
யோகாசனங்களைச் செய்வது எப்படி? என்ற பல கேள்விகளுக்குப் படங்களுடன்
செயல்முறை விளக்கமாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
http://nhm.in/printedbook/926
| சித்த மருத்துவம் (Siddha Maruthuvam) | by Dr . Arun Chinnaia | Pages:
80 | ISBN: 978-81-8368-989-2 | Category: Health |
சித்த மருத்துவம்
சொல்லும் மனித உடல் ரகசியங்கள் யாவை? மனித உடலில் ஏற்படும் முக்கியமான
நோய்கள்/பாதிப்புகள் என்னென்ன? நோய்களுக்கான மருந்துகள் என்னென்ன?
அவற்றைத் தயாரிப்பது எப்படி? மருந்துகளை எப்போது, எவ்வளவு சாப்பிட
வேண்டும்? என்பது போன்ற, பல விஷயங்களைத் தெளிவுபடுத்தி, சித்த
மருத்துவத்தின் சிறப்புகளை எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
http://nhm.in/printedbook/927
| தலைவலி (Thalaivali) | by G.S.S. | Pages: 80 | ISBN: 978-81-8368-990-8
| Category: Health |
தலைவலிக்கான
காரணங்கள் என்னென்ன? எத்தனை வகையான தலைவலிகள் உள்ளன? தலைவலி வராமல்
தவிர்ப்பது எப்படி? தலைவலி வந்தால் என்ன செய்வது? தலைவலிக்கான சிகிச்சை
முறைகள் என்னென்ன? இதுபோன்ற, தலைவலி தொடர்பான எத்தனையோ
கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கிறது இந்தப் புத்தகம்.
http://nhm.in/printedbook/928
| கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி? (Cholesterol Kuraippathu Eppadi?) | by
Dr S. Muthu chella kumar | Pages: 128 | ISBN: 978-81-8368-974-8 |
Category: Health |
கொழுப்பின்
வகைகள் என்னென்ன? அவற்றில் எது உடலுக்கு நல்லது? கொலஸ்ட்ரால் என்றால்
என்ன? அது நல்லதா? கெட்டதா? கெட்ட கொலஸ்ட்ராலால் ஏற்படும் பாதிப்புகள்
என்னென்ன? சமையலில் சேர்க்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய எண்ணெய்கள்
என்னென்ன? கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் என்னென்ன? என்பது உள்ளிட்ட
கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் பற்றிய அடிப்படைத் தகவல்களை விளக்கிச்
சொல்லும் இந்தப் புத்தகம், நல்ல கொலஸ்ட்ராலை தேவையான அளவு பயன்படுத்தி,
கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உணவு மற்றும் வாழ்க்கை முறையில்
செய்துகொள்ளவேண்டிய மாற்றங்கள் என்னென்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
http://nhm.in/printedbook/943
| சோனியா (Sonia) | by Ajithan | Pages: 80 | ISBN: 978-81-8493-029-0 |
Category: Political
ராஜீவ் - சோனியா
காதலுக்கு இந்திரா சம்மதித்தாரா? இந்திராவுக்கும் சோனியாவுக்கும் உறவு
எப்படி இருந்தது? தீவிர அரசியலுக்குள் சோனியாவை இழுத்து வந்தது எது?
போஃபர்ஸுக்கும் சோனியாவுக்கும் என்ன சம்பந்தம்? பிரதமர் பதவியை ஏற்க
மறுத்ததன் பின்னணி என்ன?
http://nhm.in/printedbook/944
| 123: இந்தியா - அமெரிக்கா அனுசக்தி ஒப்பந்தம் (123: India - America
Anusakthi Oppandham ) | by Badri Seshadri | Pages: 80 | ISBN:
978-81-8493-030-6 | Category: Political
அமெரிக்காவுடன்
மட்டும்தான் அணுசக்தி ஒப்பந்தம் போடமுடியுமா? மின்சாரத்துக்கும் 123
ஒப்பந்தத்துக்கும் என்ன தொடர்பு? எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு
என்ன காரணம்? ஹைட் சட்டம் என்ன சொல்கிறது? அணு மின்சாரம் இந்தியாவின்
தேவைகளைப் பூர்த்தி செய்யுமா?
http://nhm.in/printedbook/945
| ஜெயலலிதா (Jeyalalitha) | by J. Ramki | Pages: 80 | ISBN:
978-81-8493-028-3 | Category: Biography |
எம்.ஜி.ஆர் ஏன்
ஜெயலலிதாவுக்கு கொ.ப.செ பதவியைக் கொடுத்தார்? ஜெயலலிதாவை ஒருகட்டத்தில்
எம்.ஜி.ஆர் புறக்கணித்தார் என்பது உண்மையா? ஜெயலலிதா ஆர்.எம்.வீ
மோதலுக்கு என்ன காரணம்? ஒட்டுமொத்த அதிமுகவும் ஜெயலலிதாவின்
கட்டுப்பாட்டுக்குள் வந்தது எப்படி? முடக்கப்பட்ட இரட்டை இலையை
மீட்டெடுத்தது எப்படி? தன்னம்பிக்கை என்பது ஜெயலலிதாவின் பலமா? பலவீனமா?
http://nhm.in/printedbook/946
| எல்.டி.டி.ஈ (LTTE) | by Marudhan | Pages: 80 | ISBN:
978-81-8493-031-3 | Category: Political |
இலங்கைத் தமிழர்
பிரச்னையின் ஆணி வேர் எது? விடுதலைப் புலிகள் உருவானதன் பின்னணி என்ன? தனி
அரசாங்கம் போல எல்.டி.டி.ஈ இயங்குவது எப்படி? விடுதலைப் புலிகள் மீதான
முக்கியக் குற்றச்சாட்டுகள் என்னென்ன? இலங்கைப் பிரச்னையில் இந்தியாவின்
நிலைப்பாடு என்ன? தனி ஈழம் சாத்தியமா?
|
|
|
| | | |
|