Home / JeMoPoems

JeMoPoems


கவிதைகள் –விமரிசகனின் சிபாரிசு

February 2, 2007 – 7:53 am

[இந்நூலில் அறிமுக வாசகனுக்காகவே படைப்புகளின் பட்டியல் அளிக்கப்படுகிறது. ஆகவே எல்லாவகையான எழுத்துக்களையும் உள்ளிட்டு அவை தயாரிக்கப்பட்டன. ஆனால் கவிதையில் சற்று திட்டவட்டமான ஓர் அழகியல் அளவுகோல் கைக்கொள்ளபப்ட்டது. நவீனக்கவிதை அடைந்த சிறப்பம்சம் என்னவென்றால் அது புலமையை தவிர்த்து இயங்கமுடியும் என்ற வடிவத்தை அடைந்தமையே. ஆகவே சற்று மொழிப்பயிற்சியும் வாழ்க்கையை கூர்ந்து நோக்கும் நுண்ணுணர்வும் இருக்கும் எவரும் நல்ல கவிதைகள் சில எழுதிவிடமுடியும். சில சிறந்த கவிதைகளாகவே இருக்க முடியும். அப்படி வருடத்தில் நூறு தொகுப்புக்குமேல் தமிழில் வருகின்றன. பெரும்பாலான தொகைகளில் ஒருசில நல்ல கவிதைகளாவது உள்ளன.

ஆனால் கவிஞன் என்பவன் அப்படி கவிதை எழுதும் ஒருவனல்ல. கவிஞன் தனகே உரிய மொழி கொண்டவன். தனக்கான வாழ்க்கை நோக்கு கொண்டவன். வாழ்க்கையை கவிதைமூலமே அறிய முயல்பவன். அதன் மூலம் மறுக்கமுடியாத ஆளுமை கொண்டவன்

அப்படிபப்ட்ட நவீன கவிஞர்களின் பட்டியல் ஒன்று உருவாக்கி அவர்களின் எல்லா போக்குகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கவிதைகளை தெரிவுசெய்துள்ளேன். அதில் கோட்பாட்டுநிலை, ஆண்-பெண் என்ரெல்லாம் எந்த பிரத்நிதித்துவத்தையும் கருத்தில்கொள்ளவில்லை

வாசகர்கள் இதிலுள்ள நாற்பது கவிஞர்களின் கவிதைகளை தேடிபடித்து இதை ஒரு தொடக்கமாகக் கொள்ளலாம். கவிதையில் மட்டும் உச்சியிலிருந்தே தொடங்குவது நல்லது. காரணம் அது நம் நுண்ணுணர்வுகளை தெளிவுபடுத்தி எது கவிதை என கற்பித்துவிடும். கவிதையே கவிதைக்கு வழிகாட்டியாகும்]

ந.பிச்சமூர்த்தி

கொக்கு
சாகுருவி
*
க.நா.சுப்ரமணியம்

கஞ்சன் ஜங்கா
பூனைக்குட்டி

*
நகுலன்

கொல்லிப்பாவை2
ஸ்டேஷன்
ஒருமரம்
அம்மாவுக்கு எண்பது வயதாகிவிட்டது
கடைசிக்கவிதை
*
பசுவய்யா

பந்து
ஓவியத்தில் எரியும் சுடர்
பறக்கத்துடி
வருத்தம்
மூடுபல்லக்கு
காற்று
பூர்த்தி பெறா ஓவியம்
*
சி மணி

பழக்கம்
அறைவெளி
கோணம்
இறப்பு
*
பிரமிள்

வண்ணத்துபூச்சியும் கடலும்
காவியம்
சுவர்கள்
உள்தகவல்
முதல்முகத்தின் தங்கைக்கு
பசுந்தரை
உன்பெயர்
மோகினி
மண்டபம்
பியானோ
தெற்குவாசல்
*
எஸ். வைத்தீஸ்வரன்

மனிதனுக்கு
பாதமலர்
*
அபி

காலம் -புழுதி
காலம்- சுள்ளி
மாலை- காத்திருத்தல்
மாலை- எது
மாலை – தணிவு
கனவு அன்ரும் இன்றும்
விடைகள்
*

ஞானக்கூத்தன்

அம்மாவின் பொய்கள்
அன்றுவேறுகிழமை
மேசை நடராஜர்
திண்ணை இருளில்
பவழமல்லி
வகுப்புக்கு வந்த எலும்புக்கூடு
குப்பைத்துணை
*

சு வில்வரத்தினம்*

நெற்றிமண்
மெய்த்தலம்
நதிமூலம்
புள்வாய்த்தூது
*
மு.புஷ்பராஜன்*

இக்கணத்தில் வாழ்ந்துவிடு
பீனிக்ஸ்
*
கல்யாண்ஜி

உள்ளங்கைக்குள் ஏந்தக்கூடிய முட்டை
முளைகள் மென்மையானவை அல்லவா?
நீரில் மூழ்கிய சிறுவனுடையதும்…
*
கலாப்ரியா

சினேகிதனின் தாழ்வான வீடு
பத்மநாபம்
திறங்கெட்ட்டு
பிழைத்த தென்னந்தோப்பு
*
தேவதேவன்

ஒருசிறுகுருவி
அமைதி என்பது
உப்பளம்
பயணம்
எத்தனை அழுக்கான இவ்வுலகின்
யாரோ இருவன் என எப்படிச் சொல்வேன்
வீடும் வீடும்
சீட்டாட்டம்
அந்த அறையில் மூவர் குடியிருந்தனர்
தூரிகை

*
தேவதச்சன்

காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை….
உலகம் ஆரம்பிக்கும் ஓசைகள்..
*
ஆத்மாநாம்

முத்தம் கொடுங்கள்
காரணம்
தரிசனம்
*
ராஜ சுந்தரராஜன்

வறட்சி
காயம்
சிலுவை
தகுதி
ஆரோகணம்
எல்லை
அம்மா
துண்டிப்பு
*
விக்ரமாதித்யன்

சுவடுகள்
வீடு பத்திரமான இடம்
திசைகள்
தட்சிணாமூர்த்தியான…
பொருள்வயின் பிரிவு
கூண்டுப்புலிகள்
*
சேரன்*

இரண்டவது சூரிய உதயம்
நாங்கள் எதை இழந்தோம்
காதல்வரி
குருதி சுக்கிலம் செம்மது
சேயுடனான உறவு முறிந்தபோது..
கேள்
தீ
எரிந்துகொண்டிருக்கும் நேரம்
*
சோலைக்கிளி*

நான் சந்தோஷமாய் இருந்த அன்று
பொன் ஆறின் ஒரு கதை
*
இளவாலை விஜயேந்திரன்*

நாளைய நாளும் நேற்றைய நேற்றும்
சுதந்திர நாட்டின் பிரஜைகள்
*
சுகுமாரன்

கையில் அள்ளிய நீர்
உன்பெயர்
தனிமை இரக்கம்
இசைதரும் படிமங்கள்
என் கண்கள்
முதல் பெண்ணுக்கு சிலவரிகள்
நதியின்பெயர் பூர்ணா
*
சமயவேல்

ஆறுமுகக் கிழவன் பாடுகிறான்
அவனும் அவனும்
சந்தி
*
ரா ஸ்ரீனிவாசன்

சூரியனைத்தவிர
தெருப்பக்கம் மல்லிகைக் கொடியருகே
*
மனுஷ்யபுத்திரன்

அம்மா இல்லாத ரம்சான்
இறந்தவனின் ஆடைகள்
மறுமுனையில்
ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு
திசையறிதல்..
அந்தரங்கம்
*

மு.சுயம்புலிங்கம்

தீட்டுகக்றை படிந்த பூ அழிந்த சேலைகள்
நூறுநூறு புதிய பறவைகள் இலைக்கூட்டங்களில் விசிலடிக்கும்
மழை
எஜமானர்கள்
பிறந்த ஊர்
ரசம் அழிந்த கண்ணாடிகள்

*
உமா மகேஸ்வரி

பூத்தொடுத்தல்
முதல் மழைக்கு
தொட்டி மண்ணுக்குள் இட்ட..
ஓடையில் தெளியும் பறவை நிழல்
நதியின் கண்ணாடியில்…
*
சிவரமணி*

யுத்தகால இரவொன்றில்..
முனைப்பு
*
கி.பி.அரவிந்தன்*

சொல் யாராக இருக்கலாம் நான்?
ஆண்டபரம்பரை
*
ரமேஷ் பிரேம்

நீர்
அந்தர நதி
*
யூமா வாசுகி

பெண்ணைப்பற்றி கடவுள்..
நீர்விளையாட்டு
ஒருமனிதன் முயலாக
தோழமை இருள்
வழிக்குறிப்புகள்
அறிக்கை
*
எம்.யுவன்

கண்ட காட்சி
கதைசொல்லி
ஏதோ ஓர் இரவில்
பேட்டி
ஜ்வாலையின் நாட்டியம்
நவீன வாழ்க்கைக்கு என் சித்தப்பாவின் பங்களிப்பு
பிறழ்ச்சி
*
க.மோகனரங்கன்

கல்திறந்த கணம்
பரிசில்பாடல்
தூது
காகிதத்தில் கிளைத்த காடு
*
வி.அமலன் ஸ்டேன்லி

நிஜம்
ரகசியக்காதல்
அடர்வற்ற மந்தாரைச்செடியின்…
வாழ்தலுக்கிடையில்..
கயலிதழி
*
திருமாவளவன்*

கடல்
இலையுதிர்காலம்
பசலை படர்ந்த நிலம்
*
அழகிய பெரியவன்

பறவைகளுடன் பேசுதல்
நீ நிகழ்ந்தபொழுது
மரத்தினிலே துளிர்ப்பு இல்லை
*
பாலைநிலவன்

நடனமும் நித்ய நாடகமும்
அகத்தீ
துயில்கொள்ளா அழுகை
*
ஸ்ரீநேசன்

அமானுஷ்ய வேளை
உதிரும் இரவு
*
ஜெ.·ப்ரான்ஸிஸ் கிருபா

உயிர் பிரியும் கணத்தில்
தெரிந்தோ தெரியாமலோ
தீயின் இறகு
மழைபெய்யும்போதெல்லாம்
*
முகுந்த் நாகராஜன்

அகி
ரயில்பூக்கள்
விளையாட்டுப்பிள்ளைகள்
அம்மாவின் தோழி
காயத்ரி
தோசைத்தெய்வம்

நீள்கவிதை

நரகம் சி மணி
வடக்குவாசல் பிரமிள்
உயிர்மீட்சி ராஜ சுந்தர ராஜன்
பேரழகிகளின் தேசம் பிரேம் ரமேஷ்
நான் நீ மற்றும் நாம் எம் யுவன்
அரசி மனுஷ்யபுத்திரன்




     RSS of this page