| | | |
Home /
History of Time in Tamil
Uploading ....
காலத்தின் வரலாறு என்ற புத்தகத்தின் அதிகாரபூர்வமற்ற தமிழாக்கம், ஒலி
வடிவில் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. பல பதிவுகள் இன்னும்
தயாராகவில்லை. அவை வலையில் பதிந்தவுடன் இணைப்புக் கொடுக்கப்படும். இதுவரை
வந்த பதிவுகளின் தொகுப்பு கீழே இருக்கிறது.
- தொடக்கம். இந்த
பிரபஞ்சம் அல்லது அண்டம் என்பதைப் பற்றி இதற்கு முன் தத்துவ ஞானிகளும்,
விஞ்ஞானிகளும் என்ன சொன்னார்கள், தற்போது அறிவியலாளர்கள் என்ன
சொல்கிறார்கள் என்பது பற்றிய தகவல்கள் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
-
இடமும் காலமும். இரண்டாம் அத்தியாயம். இடம் மற்றும் காலம் (Space and
Time) பற்றி விஞ்ஞானிகள் சொல்வது என்ன என்பதைப் பற்றிய பதிவுகள்.
- அண்டத்தில் இருக்கும் விண்மீன்கள் விலகிச் செல்கின்றன, விரிந்து செல்லும் அண்டம்.
இதை
எப்படி கண்டுபிடித்தோம், இதனால் அண்டம் உருவான விதம் பற்றி என்ன சொல்ல
முடியும் என்பது பற்றிய விவரங்களை இந்தப் பகுதிகளில் பார்க்கலாம்.
-
குவாண்டம் இயற்பியல் நிச்சயமற்ற கோட்பாடு. (uncertainity principle)
குவாண்டம் இயற்பியல் பற்றி, (குறிப்பாக இந்த புத்தகத்தின் பிற்பகுதிகளில்
வரும் கருத்துக்களை புரிந்து கொள்ளும் அளவிற்கு தேவையானவற்றை ) இந்த
பகுதிகளில் கேட்கலாம்.
-
இயற்கையில் இருக்கும் எலக்ட்ரான் , புரோட்டான் போன்ற துகள்களைப்
பற்றியும், ஈர்ப்பு விசை, மின்காந்த விசை போன்ற அடிப்படை விசை
(fundamental forces) பற்றியும் இந்த பகுதிகளில் பார்க்கலாம்.
-
கருங்குழிகள். மிகப் பெரிய விண்மீனானது, ஈர்ப்பு விசை மூலம் கருங்குழி
என்ற பொருளாக மாறுவது எப்படி, அதன் தன்மை என்ன என்பது பற்றிய பதிவுகள்.
-
கருங்குழி ஒளியைக் கூட விழுங்கும் தன்மை கொண்டது. அதிலிருந்து ஒளி
வெளிவரும் என்று பின்னர் நிரூபிக்கப் பட்டது. இதற்கு குவாண்டம்
இயற்பியல்தான் அடிப்படைக் காரணம். அது எப்படி என விளக்கும் பதிவுகள்.
- பிரபஞ்சம்
ஆரம்பித்த விதம் பற்றியும், அது எப்படி முடிவடையும் என்பது பற்றியும்
விஞ்ஞானிகளின் கருத்துக்களை இங்கு பார்க்கலாம். இது கொஞ்சம் பெரிய
அத்தியாயம் என்பதால் 11 ஒலிப்பதிவுகள் இருக்கின்றன.
-
நேரம் அல்லது காலம், எப்பொழுதும் முன்னால்தான் போகிறது. நம்மால் பழைய
காலத்திற்கு செல்லவே முடியாது. அது ஏன், இது நாம் ‘உணர்வது' மட்டும்தானா,
அல்லது அறிவியலில் இதைப் போல வேறு எதுவும் உண்டா என்பதை விளக்கும்
பதிவுகள்.
-
இயற்பியல் கொள்கைகளை ஒன்றுசேர்த்தல். இப்போது ஈர்ப்பு விசை, மின்காந்த
விசை, குவாண்டம் இயற்பியல், சார்பியல் என்று பல வேறு சமன்பாடுகள்
இருக்கின்றன. இவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரே ஒரு சமன்பாடு கொண்டு வர
முடியுமா? அது எப்படி இருக்கும், அதனால் என்ன பயன் என்ற விவாதங்கள்.
(ஜனவரி 2009 பதிவுகள்)
- . முடிவுரை. இதுவரை பார்த்த பதிவுகளின் சுருக்கம். (ஜனவரி 2009 பதிவுகள்)
ஐந்தாம் அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி . ப்ரோட்டானை உருவாக்கும் குவார்க்
துகள்கள் பற்றியும், சுழற்சி என்ற SPINபற்றியும், பார்க்கலாம். அரை
சுழற்சி என்ற ஒரு வித்தியாசமான பண்பை பற்றியும் கேட்கலாம். சுமார் 7 MB, 7 நிமிடங்கள். bht.5.2.mp3
பிரபஞ்சத்தில் இருக்கும் அடிப்படை துகள்கள், மற்றும் அடிப்படை விசைகள்
பற்றிய பதிவுகள். ஐந்தாம் அத்தியாயத்தின் முதல் பகுதி . பழைய காலத்தில்
என்ன நினைத்தார்கள், என்ன விதமான கண்டுபிடிப்புகளினால் விஞ்ஞான
முன்னேற்றங்கள் வந்தன என்பது பற்றி இதில் கேட்கலாம். எலக்ட்ரான்கள்,
ப்ரோட்டான், நியூட்ரான் ஆகியவற்றை கண்டுபிடித்த கதை. சுமார் 7 MB, 8 நிமிடங்கள். bht.5.1.mp3
நான்காம் அத்தியாயத்தின் மூன்றாம் (கடைசி) பகுதி. எலக்ட்ரான்களை ”அலைகள்”
என்ற கோணத்தில் பார்க்கும்பொழுது, அணுக்களின் அமைப்பை குவாண்டம் இயற்பியல்
எளிதாக விளக்குகிறது. bht.4.2.mp3
நான்காம் அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி. இதில் குவாண்டம் இயற்பியலில்
ஹைசன்பர்க் கொள்கையைப் பற்றி ஐன்ஸ்டைனைன் கருத்துக்கள், பிற விஞ்ஞானிகளின்
கருத்துக்கள், அலை-துகள் கோட்பாடு ஆகியவற்றைப் பற்றி பார்க்கலாம். bht.4.3.mp3
நான்காம் அத்தியாயம். குவாண்டம் இயற்பியல் எப்படி தொடங்கியது என்பதைப் பற்றிய ஒலிப் பதிவு. அளவு 9 MB, நேரம் 8 நிமிடங்கள். bht.4.1.mp3
காலத்தின் வரலாறு - மூன்றாம் அத்தியாயம் முடிந்தவுடன் சில விளக்கங்களை
இங்கு பார்க்கலாம். இவை புத்தகத்தில் இல்லை, ஆனால், மூன்றால் அத்தியாயத்தை
நன்றாகப் புரிந்துகொள்ள இது உதவும். அளவு சுமார் 2 MB , நேரம் சுமார் 2 நிமிடங்கள். bht.3.7.mp3
மூன்றாம் அத்தியாயத்தின் ஆறாவது (கடைசி) பகுதி. இதில், இந்த புத்தகத்தை
எழுதிய ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் முதன்முதலாக இந்தத் துறையில் எப்படி
நுழைந்தார், இந்த அண்டமானது ஒரு புள்ளியில் இருந்துதான் தொடங்கி இருக்க
வேண்டும் என்பதை நிரூபித்தார் என்பதை கேட்கலாம். அளவு சுமார் 6 MB, நேரம் சுமார் 6 நிமிடங்கள். bht.3.6.mp3
மூன்றாம் அத்தியாயத்தி ஐந்தாம் பகுதி. ‘விரிந்து செல்லும் அண்டம்'
(Expanding Universe)என்ற கொள்கைக்கு மாறாக விஞ்ஞானிகள் என்ன தத்துவங்களை
கொண்டு வந்தார்கள், அவை எவ்வாறு தவறு என்று நிரூபிக்கப்பட்டன என்பதை இதில்
கேட்கலாம். அளவு சுமார் MB, நேரம் சுமார் 10 நிமிடங்கள். bht.3.5.mp3
மூன்றாம் அத்தியாயத்தின் நான்காம் பகுதி. அண்டம் எப்போதும் (எதிர்
காலத்திலும்) விரிந்து செல்லுமா, சுருங்க வாய்ப்பு உண்டா என்பதை
பார்க்கலாம். அளவு சுமார் 10 MB, நேரம் சுமார் 10 நிமிடங்கள். bht.3.4.mp3
மூன்றாம் அத்தியாத்தின் மூன்றாம் பகுதி. இந்தப் பதிவில், ரஷ்ய நாட்டு
விஞ்ஞானியான ஃபிரைய்ட்மன் என்பவர் கணித சமன்பாட்டின் மூலம் (ஹப்பிள் கண்டு
பிடிப்பிற்கு முன்பே), “அண்டம் விரிந்து செல்கிறது” என்பதை சொன்னது பற்றிய
கதையைக் கேட்கலாம். அளவு சுமார் 8 MB, நேரம் 9 நிமிடங்கள். bht.3.3.mp3
காலத்தின் வரலாறு என்ற புத்தகத்தின் அதிகாரபூர்வமற்ற தமிழாக்கம், ஒலி
வடிவில் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. பல பதிவுகள் இன்னும்
தயாராகவில்லை. அவை வலையில் பதிந்தவுடன் இணைப்புக் கொடுக்கப்படும். இதுவரை
வந்த பதிவுகளின் தொகுப்பு கீழே இருக்கிறது. - தொடக்கம்.
இந்த பிரபஞ்சம் அல்லது அண்டம் என்பதைப் பற்றி இதற்கு முன் தத்துவ
ஞானிகளும், விஞ்ஞானிகளும் என்ன சொன்னார்கள், தற்போது அறிவியலாளர்கள் என்ன
சொல்கிறார்கள் என்பது பற்றிய தகவல்கள் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
-
இடமும் காலமும். இரண்டாம் அத்தியாயம். இடம் மற்றும் காலம் (Space and
Time) பற்றி விஞ்ஞானிகள் சொல்வது என்ன என்பதைப் பற்றிய பதிவுகள்.
- அண்டத்தில் இருக்கும் விண்மீன்கள் விலகிச் செல்கின்றன, விரிந்து செல்லும் அண்டம்.
இதை
எப்படி கண்டுபிடித்தோம், இதனால் அண்டம் உருவான விதம் பற்றி என்ன சொல்ல
முடியும் என்பது பற்றிய விவரங்களை இந்தப் பகுதிகளில் பார்க்கலாம்.
-
குவாண்டம் இயற்பியல் நிச்சயமற்ற கோட்பாடு. (uncertainity principle)
குவாண்டம் இயற்பியல் பற்றி, (குறிப்பாக இந்த புத்தகத்தின் பிற்பகுதிகளில்
வரும் கருத்துக்களை புரிந்து கொள்ளும் அளவிற்கு தேவையானவற்றை ) இந்த
பகுதிகளில் கேட்கலாம்.
-
இயற்கையில் இருக்கும் எலக்ட்ரான் , புரோட்டான் போன்ற துகள்களைப்
பற்றியும், ஈர்ப்பு விசை, மின்காந்த விசை போன்ற அடிப்படை விசை
(fundamental forces) பற்றியும் இந்த பகுதிகளில் பார்க்கலாம்.
-
கருங்குழிகள். மிகப் பெரிய விண்மீனானது, ஈர்ப்பு விசை மூலம் கருங்குழி
என்ற பொருளாக மாறுவது எப்படி, அதன் தன்மை என்ன என்பது பற்றிய பதிவுகள்.
-
கருங்குழி ஒளியைக் கூட விழுங்கும் தன்மை கொண்டது. அதிலிருந்து ஒளி
வெளிவரும் என்று பின்னர் நிரூபிக்கப் பட்டது. இதற்கு குவாண்டம்
இயற்பியல்தான் அடிப்படைக் காரணம். அது எப்படி என விளக்கும் பதிவுகள்.
- பிரபஞ்சம்
ஆரம்பித்த விதம் பற்றியும், அது எப்படி முடிவடையும் என்பது பற்றியும்
விஞ்ஞானிகளின் கருத்துக்களை இங்கு பார்க்கலாம். இது கொஞ்சம் பெரிய
அத்தியாயம் என்பதால் 11 ஒலிப்பதிவுகள் இருக்கின்றன.
-
நேரம் அல்லது காலம், எப்பொழுதும் முன்னால்தான் போகிறது. நம்மால் பழைய
காலத்திற்கு செல்லவே முடியாது. அது ஏன், இது நாம் ‘உணர்வது' மட்டும்தானா,
அல்லது அறிவியலில் இதைப் போல வேறு எதுவும் உண்டா என்பதை விளக்கும்
பதிவுகள்.
-
இயற்பியல் கொள்கைகளை ஒன்றுசேர்த்தல். இப்போது ஈர்ப்பு விசை, மின்காந்த
விசை, குவாண்டம் இயற்பியல், சார்பியல் என்று பல வேறு சமன்பாடுகள்
இருக்கின்றன. இவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரே ஒரு சமன்பாடு கொண்டு வர
முடியுமா? அது எப்படி இருக்கும், அதனால் என்ன பயன் என்ற விவாதங்கள்.
(ஜனவரி 2009 பதிவுகள்)
- . முடிவுரை. இதுவரை பார்த்த பதிவுகளின் சுருக்கம். (ஜனவரி 2009 பதிவுகள்)
மூன்றாம் அத்தியாயத்தின் ஒரு பகுதி. இந்தப் பதிவில், விண்மீன் கூட்டங்கள்
ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்கின்றன என்பதை எப்படி கண்டுபிடித்தார்கள்
என்பதை பார்க்கலாம். நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டைனின் கொள்கைப் படி கொஞ்சம்
யோசித்திருந்தால், அண்டம் விரிவடைகிறது என்பதை முன்பே கணித்திருக்க
முடியும் என்பதையும் பார்க்கலாம். அளவு சுமார் 7.5 MB , நேரம் சுமார் 8 நிமிடங்கள். bht.3.2.mp3
மூன்றாவது அத்தியாயத்தில், "அண்டத்தில் இருக்கும் விண்மீன் கூட்டங்கள்
(galaxies) ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்கின்றன" என்பதை விஞ்ஞானிகள்
எப்படிக் கண்டு பிடித்தார்கள், ”அப்படி விலகிச் செல்வதால்அண்டத்தின்
தோற்றத்தைப் பற்றி என்ன விதமான முடிவுக்கு வரலாம்” ஆகியவற்றை விளக்கும்
ஒலிப் பதிவுகள். முதல் பகுதியில் விண்மீன் கூட்டங்களுக்கு இடையே இருக்கும்
தொலைவை (distance between galaxies) கணக்கிடுவது எப்படி என்று பார்க்கலாம். முதல் பகுதியின் அளவு சுமார் 7.4 MB, நேரம் சுமார் 8 நிமிடங்கள். bht.3.1.mp3
இது இரண்டாவது அத்தியாயத்தின் கடைசிப் பகுதி. இது சுமார் 6 MB அளவும், 7
நிமிடங்களும் இருக்கும். எப்படி நான்கு பரிமாணத்தில் பார்த்தால், பூமி
சூரியனை சுற்றாமல் நேராக செல்கிறது, ஒளியை எப்படி நிறை வளைக்கிறது என்பது
பற்றிய விவரங்கள். bht.2.4.mp3
- பொருளின் வேகத்திற்கும், நிறைக்கும் உள்ள தொடர்பு.
- தொலைவை அளக்க ஒளியின் வேகத்தைப் பயன்படுத்துதல்.
- ஒளிக்கூம்பு (Light Cone).
ஆகியவற்றைப் பற்றிய ஒலிப் பதிவு. சுமார் 9.3 MB, 10 நிமிடங்கள் வரும். bht.2.3.mp3
சென்ற ஒலிப் பதிவில் கொஞ்சம் வேகமாகப் பேசிவிட்டேன் என்று நினைக்கிறேன்.
இப்பதிவில் அடுத்த இரண்டு மூன்று பக்கங்களையும், சற்று மெதுவாக
பார்க்கலாம். (6 MB, சுமார் 10 நிமிடங்கள் இருக்கும்). bht.2.2.mp3
முதல் அத்தியாயமான ‘அண்டத்தை பற்றிய நமது புரிதல்கள்' என்பதைத் தொடர்ந்து,
இரண்டாவது பகுதியான “இடமும் காலமும்” என்பதைப் பற்றி கேட்கலாம். இரண்டாவது பகுதியின் அறிமுகம் (Introduction) . சுமார் 1.3 MB, 2 நிமிடங்கள் வரும். bht.2.0.mp3இடமும் காலமும் - ஒலிப் பதிவு. சுமார் 6.8 MB, 9 நிமிடங்கள் வரும். bht.2.1.mp3பின் குறிப்பு:
சென்னையில் எனக்கு தெரிந்தவர் ஒருவர் பார்ட் டைம் வேலை தேடுகிறார்.
விவரங்கள் கீழே. உங்களில் யாருக்காவது வேலை வாய்ப்பு பற்றி தெரிந்தால் சொல்லவும். நன்றி. சென்னையில் part time வேலை தேவை. (மதியம் 2 மணி முதல் இரவு வரை) வேலை
தேடுபவர் பற்றிய விவரங்கள்: S. ஜீலானி, சென்னையில் பச்சையப்பா கல்லூரியில்
மதியம் 1 மணி வரை part time படிக்கிறார். தற்போது தான் (2008 மார்ச்
மாதம்) +2 முடித்திருக்கிறார். தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல்:
Erode.jeelani@gmail.com, செல் பேசி: 97150 13350
கீழே இருக்கும் பொத்தானை 'க்ளிக்' செய்தால், ஒலிப்பதிவைக் கேட்கலாம். சுமார் 7.7 MB, 12 நிமிடங்கள் வரும். bht.1.4.mp3
கீழே இருக்கும் பொத்தானை 'க்ளிக்' செய்தால், ஒலிப்பதிவைக் கேட்கலாம். முதல் இரு பகுதிகளை கேட்க, இதற்கு முந்திய பதிவுகளைப் பார்க்கவும். சுமார் 6.3 MB, 10 நிமிடங்கள் வரும். bht.1.3.mp3
இந்த ஆங்கிலப் புத்தகத்தில் 185
பக்கங்கள் உள்ளன. நான் முதல் 14 பக்கங்கள் (முதல் அத்தியாயத்தை) சுமார் 4
பகுதிகளாக தமிழில் பேசிய ஒலிப் பதிவு ஏறக்குறைய தயாராக இருக்கிறது. இது
ஆங்கிலப் புத்தகத்தை ‘தழுவி' இருக்கும். ஒவ்வொரு வரியையும் மொழி
பெயர்க்கவில்லை. அதற்கு பதிலாக ஒவ்வொரு பத்தியையும் (paragraph) படித்து
பிறகு தமிழில் எனக்கு புரிந்த வரை பதிந்து இருக்கிறேன். உங்களுக்கு
ஆங்கிலப் புத்தகம் கிடைத்தால் வாங்கிப் படியுங்கள், இது மிக மிக
சுவாரஸ்யமான புத்தகம். பகுதி -2. சுமார் 8.4 MB, 13 நிமிடங்கள் வரும். bht.1.2.mp3
Posted by
S. Ramanathan
at
9:29 PM
ஒன்பதாவது அத்தியாயத்தின் ஐந்தாம் (பகுதி). இந்த அத்தியாயத்தில், இதுவரை கேட்டதன் சுருக்கம். சுமார் 3 MB, 3.5 நிமிடங்கள். SNAPDRIVE Link: bht.9.5.mp3Esnip Link:
ஒன்பதாம் அத்தியாயத்தின் நான்காம் பகுதி. அண்டம் சுருங்கினாலும், சீரின்மை
அதிகரித்துக் கொண்டுதான் செல்லும் என்பது பற்றி சொல்லும் பதிவு. அண்டம்
சுருங்கினால், அதில் உயிரினங்கள் வாழ முடியாது என்பது பற்றியும் கேட்கலாம். சுமார் 6 , சுமார் 6 நிமிடங்கள்; SNAP DRIVE LINK bht.9.4.mp3ESNIP Link
காலம் செல்லும் பாதை/திசை என்ற ஒன்பதாவது அத்தியாயத்தின் மூன்றாவது பகுதி.
தெர்மோ டைனமிக் காலம் என்ற ஒன்று ஏன் இருக்கிறது? இதைப் பற்றி சார்பியல்
கொள்கை மட்டும் வைத்துப் பார்த்தால் விடை தெரியாது என்பதைப் பற்றியும்,
சார்பியல் மற்றும் குவாண்டம் இயற்பியல் இரண்டையும் சேர்த்து பார்த்தால்
விடை வரும் என்பது பற்றியும் பார்க்கலாம். இந்த சமயத்தில், அண்டம்
விரிவதற்கு பதில் சுருங்கினால், சயன்ஸ் பிக்ஷன் படத்தில் பார்ப்பது போல
எல்லாம் தலைகீழாக நடக்குமா என்ற கேள்வியும் வருகிறது. சுமார் 6.3 MB, 7 நிமிடங்கள். SNAP DRIVE LINK: bht.9.3.mp3ESNIP link:
ஒன்பதாம் அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி. இதில் எண்ட்ரோபி/சீரின்மை
அதிகமாகும் திசையில் செல்லும் காலம் பற்றி பார்க்கலாம். அண்டத்தில் சீர்
அதிகமாகும்படி இருந்தால், அதில் வாழும் மனிதர்களுக்கு எதிர்காலம் தெரியும்
ஆனால் கடந்தகாலம் தெரியாது என்பதையும் பார்க்கலாம். மனிதர்கள் உணரும்
காலத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதும், கம்யூட்டர் மெமரியைப் பற்றி
ஆராய்ச்சி செய்வதும் சமம் என்பதையும் பார்க்கலாம். சுமார் 4.4 MB, 5 நிமிடங்கள். Esnip links: SNAPDRIVE Links: bht.9.2.mp3
காலம் செல்லும் திசை / காலம் செல்லும் பாதை (The arrow of time) என்ற
ஒன்பதாவது அத்தியாயத்தின் முதல் பகுதி. இதில் விஞ்ஞான ரீதியாக
பார்க்கும்பொழுது, மூன்று விதமான காலங்கள் உண்டு. ஒன்று நாம் உணரும்
காலம், இரண்டாவது சீரின்மை (எண்ட்ரோபி) அதிகரிக்கும் காலம், மூன்றாவது
அண்டம் விரிந்து செல்லும் காலம் ஆகியவற்றை ஸ்டீபன் ஹாக்கிங்
விளக்குகிறார். இவை அனைத்தும் ஒரே திசையில்தான் இருக்கும் என்றும்
சொல்கிறார். சுமார் 6.3MB, 7 நிமிடங்கள். ESnip Link SNAPDrive Link; bht.9.1.mp3
எட்டாவது அத்தியாயத்தின் இரண்டாம் பாதி. பகுதி 7 முதல் 11 வரை. இத்துடன்
எட்டாவது அத்தியாயம் முடிந்தது. அடுத்து வருவது ‘காலம் செல்லும் பாதை'
அல்லது ‘காலம் செல்லும் திசை' (The arrow of time) என்ற ஒன்பதாவது
அத்தியாயம். ESNIP LINKS: SNAP DRIVE LINKS: bht.8.7.mp3bht.8.8.mp3bht.8.9.mp3bht.8.10.mp3bht.8.11.mp3
எட்டாவது அத்தியாயத்தின் முதல் ஆறு பகுதிகள்! மொத்தமாக வலையில்
ஏற்றப்படுகின்றன. இவை 5.4 MB முதல் 7 MB வரை இருக்கும். சுமார் 5
நிமிடங்கள் முதல் 7 நிமிடங்கள் வரை செல்லும். இன்னும் நான்கு பதிவுகள்
வரும். இது கொஞ்சம் பெரிய Chapter. ESNIP LINKS: SNAPDRIVE LINKS: bht.8.1.mp3bht.8.2.mp3bht.8.3.mp3bht.8.4.mp3bht.8.5.mp3bht.8.6.mp3
ஏழாவது அத்தியாயத்தின் நான்காம் (கடைசிப்) பகுதி. இதில், கருங்குழியில்
இருந்து வரும் ஆற்றலை, நாம் பயன்படுத்த ஏதாவது வழி உண்டா என்பதையும்,
ஆதிகாலக்கருங்குழி கண்டு பிடிக்காவிட்டாலும், நாம் அதைப் பற்றி
யோசிப்பதால், அண்டத்தைப் பற்றி என்ன புரிந்து கொள்ள முடிகிறது என்பதைப்
பற்றியும் கேட்கலாம். சுமார் 7.3 MB , 8 நிமிடங்கள். SNAPDRIVE LINK bht.7.4.mp3
ஏழாவது அத்தியாயத்தின் மூன்றாம் பகுதி. கருங்குழியில் இருந்து ( நிகழ்வு
விளிம்பிற்கு வெளியே இருந்து) எப்படி துகள்கள் வருகின்றன என்பதை மேலும்
விளக்கும் பதிவு. சிறிய கருங்குழியிலிருந்து அதிகமாக துகள்கள் வரும்
என்பதையும் கேட்கலாம். சுமார் 8.2MB, 9 நிமிடங்கள் SNAPDRIVE.NET bht.7.3.mp3
ஏழாவது அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி. கருங்குழிக்கு என்ட்ரோபி உண்டு
என்பதைப் பற்றியும், அது எப்படி துகள்களை உமிழ முடிகிறது என்பதைப்
பற்றியும் கேட்கலாம். சுமார் 7.72 MB , 8 நிமிடங்கள். Snapdrive Link: bht.7.2.mp3
கருங்குழிகள் உண்மையில் துகள்களை வெளிவிடும் என்று விளக்கும் ஏழாவது
அத்தியாயத்தின் முதல் பகுதி. இதில் ‘நிகழ்வு விளிம்பு' என்ற Even Horizon
எப்படி அறிவியலில் Entropy என்ற வேறு ஒரு பண்பைப் போல இருக்கிறது என்பதை
கேட்கலாம். கருங்குழிக்கு என்ட்ரோபி இல்லை என்று சொன்னால் என்ன பிரச்சனை?
இருக்கிறது என்று சொன்னால் என்ன பிரச்சனை? என்பதைப் பற்றியும் கேட்கலாம். சுமார் 9.8 MB அளவு, 10 நிமிட நேரம் இருக்கும். இந்த
ஒலிப்பதிவுகளை www.esnips.com என்ற தளத்தில் ஏற்றி இருக்கிறேன். ஆனால்,
esnips பல சமயங்களில் காலை வாருவதால், www.snapdrive.net என்ற தளத்திலும்
ஏற்றுகிறேன். இதை download செய்து கேட்கமுடியும். snapdrive இணைப்பு. bht.7.1.mp3பழைய ஒலிப் பதிவுகளையும் snapdriveல் சில நாட்களில் ஏற்றி, இணைப்புகளைக் கொடுக்கிறேன்..
கருங்குழி: ஆறாம் அத்தியாயத்தின் ஐந்தாம் பகுதி (கடைசிப் பகுதி).
கருங்குழி இருப்பது பற்றி நமக்கு இதுவரை எவ்வளவு ஆதாரம் இருக்கிறது என்பது
பற்றியும், ‘ஆதிகாலத்து கருங்குழி' (primordial black hole) என்ற வகை
கருங்குழிகள் குறைந்த நிறையில் கூட இருக்கலாம் என்பது பற்றியும்
கேட்கலாம். சுமார் 9.6 MB, 10 நிமிடங்கள்.
கருங்குழி: ஆறாம் அத்தியாயத்தின் நான்காம் பகுதி. கருங்குழிகள் உருண்டையாக
(perfect sphere) இருக்கும் என்பது பற்றியும், அதன் நிறையும் சுழற்சியும்
மட்டுமே கருங்குழியைப் பற்றிய விவரங்கள் என்பது பற்றியும் பார்க்கலாம்.
இதன் மூலம் ”விவர இழப்பு” (information loss) வருவதையும் பார்க்கலாம். சுமார் 7.3 MB, 8 நிமிடங்கள். bht.6.5.mp3
கருங்குழி: ஆறாம் அத்தியாயத்தின் மூன்றாம் பகுதி. நிகழ்வு விளிம்பிக்குள்
நடப்பவை நமக்கு தெரியாது என்பது பற்றி சில விவரமான கருத்துக்கள்,
கருங்குழிக்குள் செல்லும் மனிதர் ‘பிய்த்து எறியப்பட்டு இறப்பார்' என்பது
பற்றியும், பார்க்கலாம். சுமார் 6.7 MB, 7 நிமிடங்கள். bht.6.4.mp3
காலத்தின் வரலாறு: ஆறாம் அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி. விண்மீனின்
முடிவில் ‘white dwarf' ஆகவோ, நியூட்ரான் ஸ்டாராகவோ, கருங்குழியாகவோ
ஆகிவிடும் என்பதை பார்க்கலாம். நிகழ்வு விளிம்பு என்றால் என்ன என்பதைப்
பற்றியும் பார்க்கலாம். சுமார் 7.6 MB, 6 நிமிடங்கள். bht.6.3.mp3
கருங்குழி பற்றிய ஆறாவது அத்தியாயத்தின் முதல் பகுதி. ஒளியின் தன்மை
பற்றியும், விண்மீன்களின் தோற்றம் மற்றும் மறைவு பற்றியும், கருங்குழி
பற்றி சரியான கோணத்தில் முதல் முதலில் யோசித்த இந்தியாவை சேர்ந்த
சந்திரசேகர் பற்றியும் இதில் கேட்கலாம். சுமார் 8.5 MB, 9 நிமிடங்கள். bht.6.2.mp3
ஐந்தாம் அத்தியாயத்தின் கடைசி (6வது) பகுதி. இதில் C, P, T என்ற மூன்று
வகையான ஒத்திசைவு (Symmetry) என்றால் என்ன என்பதையும், அதை வலிமை குறைந்த
அணுக்கரு விசை (weak nuclear force) பின்பற்றுவதில்லை என்பதையும்
பார்க்க்லாம். இதன் மூலம், அண்டத்தில் ஏன் பொருள் (matter) அதிகம்
இருக்கிறது, எதிர்பொருள் ஏறக்குறைய இல்லவே இல்லை (antimatter) என்பதை அறிய
முடிகிறது. சுமார் 7.5 MB, 8 நிமிடங்கள். bht.6.1.mp3
ஐந்தாம் அத்தியாயத்தின் ஐந்தாம் பகுதி. கிராண்ட் யூனிஃபைடு தியரி (Grand
Unified Theory) பற்றி சில நிமிடங்கள் பார்க்கலாம். அண்டத்தில் பொருள்
(matter)அதிகமாக இருக்கிறதா? அது ஏன்? எதிர்துகள் (antiparticle,
antimatter) அதிகம் இல்லையே என்ற கேள்விகள் எழுகின்றன. சுமார் 8 .4 MB , 9 நிமிடங்கள். bht.5.5.mp3
ஐந்தாம் அத்தியாயத்தின் நான்காம் பகுதி. இதில் அடிப்படை விசைகள்
பற்றியும், குவார்க் மற்றும் க்ளூ-ஆன் என்ற துகள் பற்றியும் பார்க்கலாம். சுமார் 9 MB, 10 நிமிடங்கள். bht.5.4.mp3 பின் குறிப்பு:
அடுத்த பதிவுகள் ஜனவரி 2009ல் தான் வரும் என்று நினைக்கிறேன். தொடரை
நடுவில் தொங்கவிட்டுப் போவதற்கு மனமில்லை, என்றாலும் பிற வேலைகளில் அதிக
தேக்கம் இருப்பதால் கொஞ்ச நாள் பிளாக் எழுதப் போவதில்லை. இதுவரை
ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி.
ஐந்தாம் அத்தியாயத்தின் மூன்றாம்
பகுதி. ‘பொருள் துகள்' (matter particle) மற்றும் 'விசை எடுத்து செல்லும்
துகள்கள்' (force carrying particle) பற்றிய விவரங்கள். ஏன் ஒரு
எலக்ட்ரானும் ப்ரோட்டானும் அவ்வளவு சுலபமாக மோதி அழிவதில்லை. எலக்ட்ரானின்
எதிர்துகளான பாசிட்ரான் கண்டு பிடித்த கதை. ஒவ்வொரு துகளுக்கும் எதிர்
துகள் உண்டு, குறைந்த தூரம், மற்றும் அதிக தூரம் தாக்கம் ஏற்படுத்தும்
விசைகள் (short range and long range forces) ஆகியவற்றைப் பற்றி கேட்கலாம். சுமார் 6 MB , 7 நிமிடங்கள். bht.5.3.mp3
|
|
|
| | | |
|