Home / EducationLoan

EducationLoan


கல்விக் கடன்: எப்படி வாங்கலாம்?

கவர் ஸ்டோரி

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாக, அடுத்து என்ன படிக்கலாம், எந்தத் துறையைத் தேர்வு செய்யலாம் என்று மாணவர்களும் பெற்றோர் களும் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள்.

டனடியாக வேலை கிடைக்கக்கூடிய படிப்பு நல்ல கல்லூரியில் கிடைக்குமா என்கிற கவலை ஒருபக்கம்... அப்படி கிடைத்துவிட்டால் படிப்புச் செலவுக்கான பணத்துக்கு எங்கே போவது என்கிற கவலை இன்னொரு பக்கம்... மகன்/மகளின் கல்லூரிப் படிப்புக்கென கொஞ்சம் பணம் சேர்த்தவர்களை விட்டுவிடலாம். அப்படி எதுவும் சேர்க்காதவர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது வங்கிகள் தரும் கல்விக் கடன்தான்.

இந்த கல்விக் கடனை எப்படி பெறுவது? எந்த வங்கிகளை அணுகலாம்?, யார் யாருக்கு இந்த கடன் கிடைக்கும், யார் யாருக்கு கிடைக்காது, எந்தெந்த கல்விக்கு கிடைக்கும், எதன் அடிப்படையில் கல்விக் கடன் தருவார்கள்? கல்விக் கடன் வாங்க வங்கியில் என்னென்ன சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்?

இதுபோல வாசகர்களுக்கு இருக்கும் பல்வேறு சந்தேகங்களுக்குப் பதில் தெரிந்து கொள்ள வங்கி வட்டாரத்தில் உள்ள பலரிடம் பேசினோம். அவர்கள் கொடுத்த விவரங்கள் இதோ உங்களுக்காக...


அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள பொதுத் துறை/தேசிய அல்லது தனியார் வங்கியில் கல்விக் கடன் பெறலாம். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் அவரவர்களுக்கு விருப்பமான, எதிர்காலத்தில் வேலைவாய்ப்புள்ள கல்விப் பிரிவை தேர்வு செய்வது கல்விக் கடனை பெறுவதற்கு அடிப்படையான விஷயம்.

பிரிவைத் தேர்வு செய்வது போல, சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வ திலும் கவனம் அவசியம். கல்லூரியில் சேர்ந்த பின்னர் அருகில் இருக்கும் வங்கி மேலாளரை அணுகி கல்விக் கடன் பெறுவதற்கான விதி முறைகள் என்னென்ன என்று தெரிந்து கொண்டு, அவர்கள் தரும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

பின்னர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கல்வி பயில சேர்ந்திருக்கும் கல்லூரி யிருந்து போனோஃபைட் என்று சொல்லப்படுகிற சேர்க்கைக் கான ரசீதையும், ஃபீஸ் ஸ்ட்ரக்சர் என்று சொல்லப் படுகிற முழுப் படிப் புக்குமான செலவு விவரம் அடங்கிய சான்றிதழ்களையும் வாங்கி  வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இது தவிர, பிளஸ்டூ மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடச் சான்றுக்காக ரேஷன் கார்டு அட்டையின் அட்டஸ்டேட் நகல், வருமானச் சான்றிதழ் ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்விக் கடன் பெற விரும்பும் மாணவர்கள் முடிந்தமட்டும் பிளஸ்டூ படித்து விடுமுறையில் இருக்கும்போதே தங்களது இருப்பிடத்திற்கு அருகில் இருக்கும் வங்கிகளுக்கு பெற்றோருடன் சென்று கல்விக் கடன் குறித்து விசாரித்துவிடுவது நல்லது.  

''கல்விக் கடன் பெற நீங்கள் சேமிப்புக் கணக்கு வைத்தி ருக்கும் வங்கிகளையே முதலில் அணுகலாம். சேமிப்புக் கணக்கு இல்லாத வங்கிகளையோ, அறிமுகமே இல்லாத வங்கி களையோ  நாடும் போது கல்விக் கடன் கிடைக்க, நேரம் நிறைய விரயமாகலாம். சிறிய ஊர்களில் இருப்பவர்கள் லீட் வங்கிகளை அணுகி கல்விக் கடன் பெற லாம்'' என்றார் ஐ.ஓ.பி. மேலாளர் கிருஷ்ணன்.


''நிச்சயம் கட்டுவேன்!''
எஸ்.செல்வராஜ், ஒட்டன்சத்திரம்.

''என் கல்விக்காக வங்கியில் 32,000 ரூபாய் கடனாக வாங்கியிருக்கிறேன். என் ஊர் ஒட்டன்சத்திரம் அருகில் டி.கே.பாளையம். மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். கல்விக் கடன் பெறுவது ஆரம்பத்தில் சிரமமாகத்தான் இருந்தது. ஆனால், நான் நல்ல மதிப்பெண்கள் வாங்கி இருந்ததால் பாரபட்சம் பார்க்காமல் கல்விக் கடன் கொடுத்தார்கள். நம்பிக்கையாக கொடுத் திருக்கும் கடனை வேலை கிடைத்ததும் நிச்சயமாக கட்டுவேன்.''


கல்விக் கடன்:
யார் யாருக்கு கிடைக்கும்?

இந்திய அரசாங்கம் கல்விக் கடன் பெற தகுதி உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்க வேண்டும் என்கிற உத்தரவை அனைத்து வங்கிகளுக்கும் பிறப்பித்திருக்கிறது. ஏழை மாணவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என யாராக இருந்தாலும் அவரவர் வாங்கிய மதிப்பெண்களுக்கு ஏற்ப கல்விக் கடன் கிடைக்கும்.

ங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கற்றுத் தரப்படும் அனைத்து படிப்புகளுக்கும் கல்விக் கடன் கிடைக்கும்.

எதிர்காலத்தில் வேலை வாய்ப்புள்ள இளங்கலை படிப்புகள் (பி.காம்., பி.எஸ்.சி., பி.ஏ., பி.சி.ஏ. போன்ற படிப்புகள்), முதுகலை படிப்புகள் (எம்.பி.ஏ., எம்.சி.ஏ., போன்ற படிப்புகள்) மற்றும் தொழிற்கல்விகள் (பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம், மேலாண்மை போன்ற படிப்புகள்), ஐ.ஐ.டி., என்.ஐ.எஃப்.டி., ஐ.ஐ.எம். போன்ற சிறப்பு கல்வி நிறுவனங்களில் இருக்கும் படிப்புகள் மற்றும் சி.ஏ., சி.எஃப்.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ. போன்ற படிப்புகளுக்கும், டிப்ளமோ படிப்புகளுக்கும் கடன் கிடைக்கும்.

ஆனால், வேலை வாய்ப்பில்லாத படிப்புகளுக்கு கல்விக் கடன் வழங்க வங்கிகள் தயங்கவே செய்யும். அது மாதிரி தரப்படும் கடன்கள் திரும்ப வருமா என வங்கிகள் அஞ்சுவதே இதற்கு காரணம். தவிர, அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் கண்டிப்பாக கிடைக்காது.

கல்விக் கடன் பெறுவதற்கு பின்வரும் தகுதிகள் அவசியமாக இருக்க வேண்டும்.

* இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.

* வேலை வாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகளாக கருதப்படும் கல்விகளைத் தேர்வு செய்திருக்க வேண்டும்.

* அரசின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந் திருக்க வேண்டும்.

* பிளஸ்டூ மதிப்பெண்கள் கூட்டு சதவிகிதத்தின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினராக இருந்தால் 50%-ம், மற்ற பிரிவினருக்கு 60%-மாகவும் இருத்தல் அவசியம்.

எவ்வளவு கிடைக்கும்?

ந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர் களுக்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை கல்விக் கடன் கிடைக்கும். வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய் வரை கல்விக் கடன் கிடைக்கும்.

இதற்கு அதிகமாக கல்விக் கடன் தேவை எனில், மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையிலோ, அவர்கள் தேர்வு செய்திருக்கும் படிப்பின் எதிர்காலத்தின் அடிப்படையிலோ அல்லது பெற்றோர்களின் வருமான விகிதம் போன்ற அடிப்படை விஷயங்களை சரி பார்த்து அதிக கல்விக் கடன் கேட்கும் மாணவனுக்கு கடன் கொடுக்கலாமா, வேண்டாமா என்பதை வங்கியே முடிவெடுக்கும்.


கல்விக் கடன்:
உத்தரவாதம் தேவையில்லை!

கல்விக் கடன் நான்கு லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் எந்தவொரு உத்தரவாதமும் தேவையில்லை. இன்றைய தேதியில் தமிழகத்தில் பல மாணவ, மாணவிகளின் தேவை இதற்குள் அடங்கிவிடும் என்பதால் கல்விக் கடன் வாங்குகிற பெற்றோர்கள் எந்தவிதமான உத்தரவாதத்தையும் தரவேண்டியதில்லை.

நான்கு லட்சத்திலிருந்து 7.5 லட்சம்வரை கல்விக் கடன் என்கிறபோது பெற்றோரில் ஒருவரோ அல்லது மூன்றாம் நபரோ தனிநபர் உத்தரவாதம் தரவேண்டி வரும். ஏழு லட்சத்துக்கு அதிகம் என்கிற போது தன் வசம் இருக்கும் சொத்துக்களில் ஏதாவது ஒன்றை பிணையமாக வைக்க வேண்டும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.

எந்த செலவு அடங்கும்?

வங்கிகள் வழங்கும் கடன் தொகையில் கீழ்க்கண்ட செலவினங்கள் முழுமையாக அடங்கும்.

* கல்லூரியில் கட்ட வேண்டிய கல்வித் தொகை.

* தேர்வுக் கட்டணம், புத்தகம் மற்றும் ஆய்வகக் கட்டணம்.

* விடுதி மற்றும் சாப்பாட்டுச் செலவுகள்.

* மாணவர்களின் கல்விச் சாதனங்கள் மற்றும் சீருடைகள்.

* படிப்பிற்கான கம்யூட்டர் வசதி மற்றும் புராஜெக்ட் செலவினங்கள்.

படிப்பில் கவனம் தேவை!

கல்விக் கடன் வாங்கி படிக்கும் மாணவர்கள் படிப்பில் முழுக் கவனம் செலுத்துவது அவசியம். ஏனெனில், செமஸ்டர் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு இடையே வங்கி மேலாளரிடம் காட்ட வேண்டும்.

ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாமல் போனால், மேற்கொண்டு தர வேண்டிய கடன் தொகை நிறுத்தப்படலாம். மீண்டும் அந்த பாடத்தில் தேர்ச்சி பெற்ற பிறகே வங்கியிடமிருந்து கல்விக் கடனை எதிர்பார்க்க முடியும்.

கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தினாலோ, ஒழுங்கீனமாக நடந்து கொள்வதன் மூலம் கல்லூரி யிலிருந்து விலக்கப்பட்டாலோ கல்விக் கடன் நிறுத்தப்படும். அப்படி நிறுத்தப்பட்டால் அதுவரை வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும்.

''நன்றியோடு கட்டுவேன்!''
எஸ்.அருண்குமார், கும்பகோணம்.

''நான் பி.எஸ்.சி. நர்ஸிங் படித்து முடித்து சென்னையில் பணியாற்றி வருகிறேன். நான் 2.18 லட்சம் ரூபாய் கல்விக் கடன் வாங்கினேன். எனக்கு கல்விக் கடன் கிடைக்காமல் போயிருந்தால் நிச்சயமாக படித்திருக்க முடியாது.

அந்த நன்றியை மறக்காமல் கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்த ஆயத்தமாகி வருகிறேன்''.

ல்விக் கடனை வழங்குவதற்காக அரசாங்கமே தனியாக ஒரு வங்கியை ஆரம்பிக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கல்விக் கடனுக்கான வங்கி ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் இந்த வங்கியில் மட்டுமே கல்விக் கடனை பெற முடியும். மற்ற வங்கிகளில் பெற முடியாது.

ல்லூரிகளில் இருந்து மாணவர்களுக்கு தரப்படும் டிகிரி சான்றிதழில், எந்தவொரு மாணவன்/மாணவி கல்விக் கடன் வாங்கி படித்திருந்தாலும் இவர்கள் இந்த வங்கியில் கல்விக் கடன் வாங்கி படித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட போகிறார்களாம். இப்படி செய்யும் பட்சத்தில் கல்விக் கடன் வாங்கி படித்த மாணவன் வேலைக்குச் செல்கிற போது அந்த நிறுவனம் வங்கியைத் தொடர்பு கொண்டு கல்விக் கடன் வாங்கியிருக்கும் மாணவன்/மாணவியோ கடனை திருப்பி செலுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாம்.


கல்விக் கடன்:
எப்படி திரும்பக் கட்டுவது?

கல்விக் கடனுக்கான அசலையோ அல்லது வட்டியையோ படிக்கிற காலத்திலேயே கட்ட வேண்டும் என எந்த வங்கியும் சொல்வதில்லை. படித்து முடித்து ஓராண்டு ஆனதும் அல்லது வேலை கிடைத்து ஆறு மாதம் கழித்தே வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த ஆரம்பித்தால் போதும். முழுக் கடனையும் திருப்பிச் செலுத்த குறைந்தது ஐந்து ஆண்டுகள் அவகாசம் தரப்படும். படித்து முடித்த பிறகு வேலை செய்யும் நிறுவனத்தின் மதிப்பு, வாங்கும் சம்பளம் அடிப்படையில் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் வரை அவகாசம் தரப்படும். இந்த முடிவு வங்கிக்கு வங்கி மாறுபடும்.

படிக்கும்போது வட்டி கட்ட தேவையில்லை!

கல்விக் கடன் வாங்கும் மாணவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால் அவர்களின் வருமான சான்றிதழை வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும். வருமான சான்றிதழை ஆரம்பத்தில் சமர்ப்பித்தால் போதுமானது. ஆண்டுக்கொருமுறை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதனால் படிக்கும் காலத்தில் வாங்கும் கடனுக்கான வட்டியை பெற்றோர்கள் கட்ட வேண்டிய அவசியம் கிடையாது.

அந்த கடனுக்கான வட்டியை மத்திய அரசாங்கம் வங்கிகளுக்கு செலுத்திவிடும். படிப்பு முடிந்து வேலைக்குச் சென்ற பிறகு வட்டியுடன் அசலையும் சேர்த்து கட்ட ஆரம்பிக்க வேண்டும். இந்த சலுகை வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு கிடையாது.

கடனை சீராக கட்டினால் சலுகை!

இடைவிடாமல் சரியாக கடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு சதவிகித வட்டி சலுகை தரப்படும். பொதுவாகவே கல்விக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாணவிகளுக்கு 0.5 சதவிகிதம் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. பெரும்பாலானவர்கள் கல்விக் கடனை மாதத் தவணை யாகத்தான் கட்டி வருகி றார்கள். விரைவில் கடனை அடைக்க நினைப்பவர்கள் வேலையின் மூலம் எப்போதெல்லாம் பணம் கைக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் கடனை அடைக்கலாம்.

வரிச் சலுகை என்ன?

திரும்பச் செலுத்தும் கல்விக் கடனுக்கு வட்டிக்கு மட்டும் 80-இ பிரிவின் கீழ் வரிச் சலுகை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு கிடையாது. யாருக் காக கல்விக் கடன் பெறப்பட் டுள்ளதோ, அவருக்குத்தான் வரிச் சலுகை கிடைக்கும். கடனை திரும்பச் செலுத்த ஆரம்பித்து எட்டு ஆண்டுகள் வரை கல்விக் கடனுக்கான வட்டிக்கு வரிச் சலுகை பெறலாம்.


கல்விக் கடன்:
கட்டாமல் போனால்..?!

மற்ற கடன்களை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமோ, அதே நடவடிக்கைகள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களுக்கும் பொருந்தும். காவல் துறை நடவடிக்கை, கோர்ட் நடவடிக்கை, பாஸ்போர்ட் முடக்கம் என்று எல்லா நடவடிக்கைகளையும் வங்கி எடுக்க முடியும். அவ்வளவு ஏன், கடன் திருப்பிக் கட்ட மறுப்பவர் பணி செய்யும் நிறுவனத்தைகூட வங்கி அணுகி, கடனை கட்டச் சொல்லலாம்.

வேலை கிடைக்காவிட்டால்..!

கல்விக் கடன் வாங்கி படித்த மாணவர், படித்து முடித்தபின் வேலை கிடைக்காவிட்டால், அது தொடர்பான விவரத்தை சம்பந்தப்பட்ட வங்கியில் தெரிவித்தால் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப் படும். எனவே, ஏதாவது சாக்கு போக்கு சொல்லி கடனை கட்டாமல் விடலாம் என்று நினைக்க வேண்டாம்.

முதுகலைக்கும் கடன்!

இளநிலை படிப்பை வங்கிக் கடனில் முடிக்கும் ஒருவர் முதுநிலைப் படிப்பைத் தொடர மீண்டும் வங்கிக் கடன் கிடைக்குமா எனில், நிச்சயம் கிடைக்கும். இது அனைத்து கல்விக்கும் பொருந்தும்.

இன்ஷூரன்ஸ் அவசியம்!

கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இன்ஷூரன்ஸ் இல்லாமல் இருந்தால், வங்கி முதலில் அவர்களை இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கச் சொல்லி அறிவுறுத்தும்.

ஏனெனில், மாணவருக்கு திடீரென்று ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அவர்கள் வாங்கியிருக்கும் கடன் தொகையை இன்ஷூரன்ஸ் இழப்பீட்டுத் தொகையிலிருந்து வங்கி எடுத்துக் கொள்ளும்.

''நம்பிக்கையை காப்பாற்றுவேன்!''
எஸ்.கோபிநாத், சிவகாசி.

''என் ஊர் சிவகாசி அருகில் உள்ள தாயில்பட்டி. மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். என் கல்விக்காக 38,000 ரூபாய் வங்கியில் கடன் வாங்கியிருக்கிறேன். இது சிறுதொகைதான் என்றாலும் கல்விக் கடன் கிடைத்ததால்தான் பெற்றோருக்கு சிரமம் தராமல் என்னால் படிக்க முடிகிறது. நம்பிக்கையுடன் வங்கி எனக்கு கடன் கொடுத்திருக்கிறது. நிச்சயமாக அந்த நம்பிக்கையை காப்பாற்றுவேன்.''


கல்விக் கடன்:
மறுக்க என்ன காரணம்?

கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவரின் தந்தையோ, பெற்றோரில் ஒருவரோ அந்த வங்கியில் ஏற்கெனவே கடன் பெற்று அதை சரிவர திருப்பிச் செலுத்தாமல் இருந்தால் (தவணை கடந்த பாக்கி) கடன் மறுக்கப்பட வாய்ப்பு அதிகம். மேலும், மாணவரின் குடும்பத்தில் ஏற்கெனவே ஒருவர் கல்விக் கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தாலோ, குறைவான மதிப்பெண் எடுத்திருந்தாலோ, அங்கீகரிக்கப்படாத கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்திருந்தாலோ கல்விக் கடன் மறுக்கப்படலாம்.

ல்லா சான்றிதழ்களையும் தந்த பிறகும் கல்விக் கடன் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணத்தை எழுத்து மூலமாக தரும்படி வங்கி அதிகாரிகளிடம் கேளுங்கள். அந்த காரணம் நியாயமானதாக இல்லை எனில், உங்களுக்கு கல்விக் கடன் கிடைக்க நிறைய வாய்ப்புண்டு.

யாரிடம் புகார் செய்வது?

''அதிக மார்க்குகளை எடுத்திருக்கிறேன். வங்கிகள் கேட்கும் எல்லா சான்றிதழையும் தந்துவிட்டேன். ஆனாலும், கல்விக் கடன் தர மறுக்கிறார்கள்'' என்கிறவர்கள், முதலில் அந்த வங்கியின் மண்டல மேலாளரை அணுகி பிரச்னையை எடுத்துச் சொல்லலாம்.  உங்கள் பிரச்னைக்கு உரிய பதிலை அவர் சொல்லவில்லை எனில், வங்கித் தலைமைக்கு மின்னஞ்சல், இ-மெயில் அல்லது தபால் மூலம் உங்கள் பிரச்னையை தெரியப்படுத்தலாம். அப்போதும் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் முறையிடலாம்.

எளிதில் கடன் கிடைக்க..!

கல்விக் கடன் கேட்டு தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள வங்கிகளை அணுகினால் எளிதில் கல்விக் கடன் கிடைக்கலாம். அதேபோல் தாங்கள் வரவு- செலவு கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தால் சீக்கிரம் கல்விக் கடன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

கல்விக் கடன் அடைபடு வதற்கு உத்தரவாதம் இல்லை என்பதாலேயே பெரும்பாலும் தனியார் வங்கிகள் கல்விக் கடனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கல்விக் கடன் என்பது நம்முடைய பிறப்புரிமை! அந்த உரிமையை பறிக்கவோ, பறிகொடுக்கவோ வேண்டாம்!

''கல்விக் கடனே தெய்வம்!''
எஸ்.கலைச்செல்வி, திண்டுக்கல்.

''நான் நான்காமாண்டு உயிரி தொழில்நுட்பவியல் துறையில் படிக்கிறேன். கல்லூரியில் படிக்க எனக்கு 2.60 லட்சம் ரூபாய் கடனாக தர சம்மதித்தார்கள். இதில் கல்லூரி மற்றும் விடுதி கட்டணம் மட்டுமே கட்ட முடிகிறது. உணவு கட்டணமும் கிடைத்திருந்தால் இன்னும் சௌகரியமாக இருந்திருக்கும். முழுக் கடனையும் வேலைக்குச் சென்றவுடன் கட்டிவிடுவேன்.  எங்களைப் போன்ற மாணவர்களுக்கு கல்விக் கடன்தான் தெய்வம்!''

என் அனுபவங்கள்:
ரா.அண்ணாமலை

- செ.கார்த்திகேயன்


பிளஸ் டூ ரிசல்ட் வந்தாச்சு... அடுத்து காலேஜில் சேர வேண்டும். கல்லூரிகள் பக்கம் போனால் அவர்கள் கேட்கும் கட்டணமோ சாதாரணமானவர்களால் கட்டக்கூடிய அளவுக்கு இல்லை... இந்நிலையில் இருக்கும் ஒரே வழி கல்விக்கடன் வாங்குவதுதான். ஆனால் அதிலும் ஆயிரத்தெட்டு சந்தேகங்கள்... எந்த படிப்புக்கெல்லாம் கடன் கிடைக்கும், எவ்வளவு தொகை கிடைக்கும், வட்டி எவ்வளவு? அதற்கான தகுதி என்ன என ஏராளமான சந்தேகங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனதில் இருக்கும். அதற்கான விடைகளைப் பார்ப்போம்.

எந்தெந்த படிப்புகளுக்கு கிடைக்கும்? கல்விக் கடன் என்பது உயர்கல்வி படிக்க கிடைக்கும் கடன். மருத்துவம், பொறியியல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.காம்., பி.எஸ்சி.,  போன்ற படிப்பு களுக்கு கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள அனைத்து படிப்புகளுக்கும் கடன் வாங்கிக் கொள்ளலாம். சில வங்கிகளில் கலைப் படிப்புகளுக்கு கல்விக் கடன் இல்லை என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் இதுபோன்ற படிப்புகளுக்கு எளிதாக வேலை கிடைக்காது என்பதால் கடன் கொடுக்க மறுக்கும் நிலை இருக்கிறது. அதுபோன்ற நிலையில் சற்று போராடினால் மட்டுமே கடன் வாங்க முடியும். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ படிப்பவர்களுக்கும் கல்விக் கடன் உண்டு.
எவ்வளவு கடன் கிடைக்கும்? நான்கு லட்சம் ரூபாய் வரை உத்தரவாதம் எதுவும் இல்லாமல் கடன் கிடைக்கும். 4 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை பெற்றோரில் ஒருவர் தனிநபர் உத்தரவாதம் கொடுக்க வேண்டிவரும். 7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் என்றால் சொத்து ஜாமீன் கொடுக்க வேண்டும். இது உள்நாடு மற்றும் வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்கு என அனைத்துக்கும் பொருந்தும்.

எப்படி வாங்குவது? பெற்றோருக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கி யில் கல்விக் கடன் பெறலாம். சில நகரங்களில் ஏதாவது ஒரு வங்கி, கல்விக் கடன் தருவதற்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் அதில் கணக்கு ஆரம்பித்து, கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.

எந்த செலவுக்கு எல்லாம் கிடைக்கும்? கல்விக் கட்டணம், விடுதி வாடகை மற்றும் சாப்பாட்டுச் செலவு, சீருடை, புத்தகங்கள், கல்விச் சுற்றுலா, மாணவருக்கு இன்ஷூரன்ஸ் பிரீமியம், கம்ப்யூட்டர்/லேப்டாப் உள்ளிட்டவைகளுக்கு கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.

எப்படி கடன் வாங்குவது? கல்லூரியில் இருந்து கல்விக் கட்டணம், விடுதி வாடகை, உணவுக் கட்டணம், சீருடைகளுக்கு எனத் தனித்தனியாக எவ்வளவு ஆகும் என்று போனஃபைட் சான்றிதழில் குறிப்பிட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு வங்கியை அணுகி விண்ணப்பிக்க வேண்டும். அதற்குரிய காசோலை கல்லூரி பெயரில் கொடுக்கப்படும். புத்தகங்கள், கம்ப்யூட்டர் போன்றவற்றை வாங்கிவிட்டு அதற்குரிய ரசீதை வங்கியில் கொடுத்தால் அந்த பணம் கிடைத்துவிடும். இது மாணவரின் கடன் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.

எப்போது கடனை திரும்பக் கட்டுவது? படிப்பு முடிந்து ஒரு வருடத் துக்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த ஆரம்பிக்கலாம். ஆனால், வேலை கிடைத்துவிட்டால் உடனே கடனைக் கட்ட ஆரம்பித்துவிட வேண்டும். முன்பு படிக்கிற காலத்தில் கடனுக்கான வட்டி கணக்கிடப்பட்டு, வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2009-க்குப் பிறகு கொடுக்கப்படும் கல்விக் கடனுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் படிக்கிற காலத்திற்கான வட்டியை மத்திய அரசே வங்கிகளுக்குக் கொடுத்து விடுகிறது. வெளிநாடுகளில் படிக்கிற மாணவர்களுக்கு இந்தச் சலுகையை வங்கிகள் தருவதில்லை. ஆனால், வெளிநாட்டுப் படிப்புக்கும், உள்நாட்டுப் படிப்புக்கும் ஒரே வட்டி விகிதம்தான்.

விரைவாக கடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவர்களுக்கு 1% வட்டி குறைக்கப்படுகிறது. மாணவிகளுக்கு வட்டியில் சுமார் 0.5% சலுகை அளிக்கப்படுகிறது. கடனை மாதத் தவணையாகக் கட்ட வேண்டும் என்பதில்லை. மாதத் தவணை காலம்போக எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அப்போ தெல்லாம் அந்த தொகையைக் கட்டி கடன் பளுவை குறைத்துக் கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்!
கல்லூரி போனோஃபைட் சான்றிதழ்.
கட்டணம் குறித்த தெளிவான தகவல்கள்.
பெற்றோரின் வருமானச் சான்றிதழ்.
இருப்பிடச் சான்றிதழ்.
பள்ளி மாற்று சான்றிதழ்.
10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி என்றால் கவுன்சிலிங் அழைப்புக் கடிதம், சேர்க்கைக் கடிதம்  உள்ளிட்டவை தேவைப்படும்.
வெளிநாட்டு படிப்பு என்றால் கூடுதலாக விசா, எந்த கல்லூரியில் படிக்க இருக்கிறார், கல்லூரி மற்றும் படிப்புக்கான அங்கீகார விவரம் போன்றவற்றையும் கொடுக்க வேண்டும்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை! எக்காரணம் கொண்டும் மாணவர்கள் ஏதாவது ஒரு பாடத்தில்கூட ஃபெயிலாகி விடக்கூடாது. ஏதாவது ஒரு பாடத்தில் ஃபெயிலானால்கூட சில வங்கிகள் அடுத்த ஆண்டுக் கான கடன் தருவதை நிறுத்திவிடும் அபாயம் இருக்கிறது. அதன்பின் அந்த பாடத்தை மீண்டும் எழுதி பாஸான பிறகுதான் கடன் கிடைக்கும். ஏதாவது ஒரு காரணத்துக்காக படிப்பை பாதியில் நிறுத்தினாலும் தொடர்ந்து கடன் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. அதுவரையில் வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்த வேண்டிவரும்.

வரிச் சலுகை! திரும்பச் செலுத்தும் கல்விக் கடனில் 80-இ பிரிவின் கீழ் வட்டிக்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச்சலுகை இல்லை. யார் படிப்புக்காக கல்விக் கடன் பெறப்பட்டுள்ளதோ, அவருக்குதான் வரிச் சலுகை உண்டு. கல்விக் கடனைக் திரும்பச் செலுத்த ஆரம்பித்து, எட்டு வருடங்கள் வரை மட்டுமே வருமான வரி விலக்கு கிடைக்கும்.

கடன் தர தயக்கம் கல்விக் கடன் கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் பொதுவாக அந்தந்த வங்கியின் மேலாளரைப் பொறுத்த விஷயமாக இருக்கிறது. குறைவாக மதிப்பெண் எடுத்திருப்பவர்களுக்கு கடன் வழங்க வங்கிகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், சட்டப்படி மாணவருக்கு உயர் கல்வி படிக்க கல்லூரியில் அனுமதி கிடைத்துவிட்டாலே அவருக்கு கடன் வழங்க வேண்டும் என்பதுதான் அரசு விதி. இருப்பினும் இந்த விதியை பெரும்பாலான வங்கிகள் சட்டை செய்வதில்லை. அதேபோல் சில படிப்புகளுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு அவ்வளவு பிரகாசமாக இருக்காது என வங்கிகள் நினைக்கலாம். அது போன்ற படிப்புகளுக்கு கடன் கிடைப்பது சற்று கடினம்தான்.  

'மாணவர்கள் கடனை சரியாக திருப்பிச் செலுத்துவது இல்லை. இதனால், வாராக் கடன் அதிகரிக்கும்’ என்கிற பயத்தாலும் வங்கிகள் கடன் கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றன. என்றாலும், முன்புபோல இல்லாமல் இப்போது நிறைய வங்கிகள் கல்விக் கடனை அதிக அளவிலேயே கொடுத்து வருகின்றன. இந்தியன் வங்கி அடுத்த ஓராண்டில் 1.5 லட்சம் மாணவர்களுக்கு 900 கோடி ரூபாய் கடன் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. மற்ற வங்கிகளும் கல்விக் கடனை போட்டி போட்டுக் கொண்டு கொடுத்து வருகின்றன.

கொடுக்கும் கடன் மீண்டும் நல்லபடியாக திரும்ப வந்து சேரும் என்கிற நம்பிக்கை மட்டும் வந்துவிட்டால் போதும்; வங்கிகள் கல்விக் கடன் கொடுக்கத் தயங்காது. படித்துவிட்டு வேலைக்கு செல்லும் மாணவர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்'' என்கிறார் முன்னணி பொதுத் துறை வங்கியின் மேலாளர் ஒருவர்.
- செ.திருக்குறள் அரசி 



     RSS of this page