Home / Books List1

Books List1


தலை நிமிர்ந்த தமிழர்கள்
http://www.kumudam.com/images/advertisment/pudhuthagambanner.jpg

http://www.thinaboomi.com/octo24/23raj4.htm

தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை கோட்டையில் கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதியுள்ள `சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு' என்னும் நூலை வெளியிட்ட
போது எடுத்த படம். அருகில் அமைச்சர் அன்பழகன், ஏவி.எம்.சரவணன் மற்றும் பலர் உள்ளனர்.

பிலிம்நியூஸ் ஆனந்தன் எழுதிய `சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு': முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.

சென்னை, அக்.24_

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதியுள்ள `சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு' என்னும் நூலை வெளியிட்டார். முதலமைச்சரிடமிருந்து இந்த நூலின் முதல் பிரதியை பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் பெற்றுக் கொண்டார்.

சென்னையைச் சேர்ந்த பிலிம் நியூஸ் ஆனந்தன் தமிழ்த் திரைப்படத் துறையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் தொடர்புத் துறையிலும், கலைத்துறையைச் சேர்ந்த பல்வேறு பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அரும்பணியாற்றி வருபவர் ஆவார். இவ்வகையில் 1931_ம் ஆண்டு முதலான தமிழ்த் திரைப்படங்கள் குறித்த புகைப்படங்கள், தமிழ்த் திரையுலகக் கலைஞர்கள் பற்றிய புத்தகங்கள், திரைப்படமான நாவல்கள், நாடகங்கள், தமிழ்த் திரைப்படங்கள் குறித்த பல்வேறு புத்தகங்கள், கலையுலகைச் சார்ந்த பல்வேறு சேகரிப்புகள், தமிழ்த் திரைப்படங்கள் குறித்த கிடைத்தற்கரிய விவரங்கள் ஆகியவற்றை சேகரித்து வைத்துள்ளதாகவும் இவையனைத்தும் எதிர்கால சந்ததியினருக்கு பயன்படும் வகையில் தமிழக அரசு பெற்றுக் கொண்டு ஒரு தொகையை தனக்கு உதவியாக வழங்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அவர் கோரியிருந்தார்.

மேலும் இந்த தகவல்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் `சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு' என்னும் நூலை எழுதியுள்ளதாகவும், அதனை வெளியிட நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

பிலிம் நியூஸ் ஆனந்தனின் இந்த கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சர் ஜெயலலிதா, ஆனந்தன் சேகரித்து வைத்துள்ள அரிய தகவல்கள் மற்றும் அவர் எழுதியுள்ள நூலின் சிறப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நூலை அச்சிட்டு வெளியிட 5.5 லட்சம் ரூபாயும், அவரது சேவைக்காக 10 லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் 15.5 லட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கினார்.

நூல் வெளியிட தமிழக முதலமைச்சர் வழங்கிய நிதி உதவியின் மூலம் பிலிம் நியூஸ் ஆனந்தன் `சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு' என்னும் பெயரில் தமிழ்த் திரைப்பட உலகைப் பற்றிய விவரங்கள் அடங்கிய தகவல் களஞ்சியமாக நூலை உருவாக்கியுள்ளார்.

இந்த சிறப்புமிகு நூலை தமிழக முதலைச்சர் நேற்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். இந்த நூலின் முதல் பிரதியை திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் பெற்றுக் கொண்டார்.

தமிழக முதலைச்சர், ஏவி.எம்.சரவணனிடத்தில் `இந்த நூல் பிலிம் நியூஸ் ஆனந்தனின் நீண்டநாள் கனவு. அந்த கனவு இன்று நனவாகி நூல் வடிவம் பெற்று வெளியாகியுள்ளது. அதன் முதற் பிரதியை உங்களிடம் நான் வழங்குகின்றேன்' என்று தெரிவித்தார். அப்போது ஏவி.எம்.சரவணன், தமக்கு இந்த வாய்ப்பை வழங்கியமைக்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

முதல்வர் ஜெயலலிதா, பிலிம் நியூஸ் ஆனந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

பிராமண எதிர்ப்பை பற்றிய ஒரு நூல் விமர்சனம்

பார்பனிய எதிர்ப்பு என்ற பெயரில் வெறும் பிராமண எதிர்ப்பு எப்படி முற்போக்கு சிந்தனை ஆகாது என்பதை தெளிவாக விளக்கும் இந்த விமர்சகர் என்னை கவர்ந்துள்ளார்
-தியாகு
 
முற்போக்கு பேசும் பிராமணர்கள் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். ஒருவகையில் பிராமணர்கள் என்ன செய்தாலும் அது நடிக்காகவே இங்கு கருதப்படுகிறது எனலாம்.
எவ்வளவு உண்மையாக முற்போக்கு பேசி, எத்தனை தூரத்தில் தன்னை ஜாதியில் இருந்து
பிரித்து வைத்துக்கொண்டாலும், பிறப்பால் ஒருவன் பிராமணனனாக
இருக்கும்பட்சத்தில், அவன் எப்போதும் இச்சமூகத்தால் பூணூலாலேயே
பிணைக்கப்பட்டிருக்கிறான். நிகழ்காலத்தில் ஞாநியிலிருந்து கமல்ஹாசன் வரை இதற்கு
எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியும். ஒருவகையில் ஞாநி, கமல்ஹாசன் போன்றவர்கள்
பிராமணர்களாலும், பிராமணர்களின் எதிர்த்தர்ப்பாலும் ஏற்கபடவும்
புறக்கணிக்கப்படவும் ஆளாகிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் சொல்லும் கருத்துகளை
வைத்து அவர்கள் மீது தம் எண்ணத்தை ஏற்றுவதை இச்சமூகம் செய்துகொண்டே இருக்கிறது.
கருணாநிதிக்கு வயதாகிவிட்டதற்காக ஞாநியும் தசாவதாரம் படத்திற்காக கமலும் பல
இடங்களில் பிராமணனாக்கப்பட்டார்கள். இதற்கான எதிக்கருத்தும் பதிவு
செய்யப்பட்டதும் உண்மையே. இன்றைய இந்நிலையை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக
எழுதியிருக்கிறார் இந்திரா பார்த்தசாரதி.

திராவிடர் கழகம் முன்னிறுத்தியது போல பிராமணர்கள் அனைவரும் எத்தர்கள் அல்ல.
அதேபோல் பிராமண ஆதரவாளர்கள் பிராமணர்களை முன்னிறுத்துவதுபோல் அவர்கள்
அப்பாவியுமல்ல. இதையே நாவலின் எல்லா இடங்களிலும் கதாபாத்திரங்கள் வழியே
பேசியபடியே செல்கிறார் இபா. இபா பிறப்பால் ஒரு பிராமணர் என்பதால் அவரை
விடுத்து, நாவலை வெறும் கற்பனையாகப் பார்க்கமுடிவதில்லை. அதனால்
கதாபாத்திரங்கள் சொல்லும் அனைத்து வசனங்களையும் இபாவின் விவாதமாகவே என்னால்
எடுத்துக்கொள்ளமுடிகிறது. எந்த ஒரு சமூகத்தையும் பிரதிபலிக்கும் மனிதர்களைப்
போலவே பிராமண சமூகத்தையும் அம்மக்கள் பிரதிபலிக்கிறார்கள். பிராமணன்
ஏமாற்றுகிறான் என்பது பிரதானமாகிறது என்பதைவிட, எச்சமூகத்திலும் நிலவும்
பல்வேறு வகைப்பட்ட மனிதர்கள் போலவே பிராமண சமூகத்திலும் மனிதர்கள்
இருக்கிறார்கள் என்று சொல்லலாம். இதுவே கழகக்காரர்கள் பிராமணியம்
என்றழைக்கப்படுகிறது. எப்போதெல்லாம் நாம் மனதில் பட்டதைச் சொல்லத்
துவங்குகிறோமோ அப்போது அதற்கு பிராமணியச் சாயமும், ஹிந்த்துவச் சாயமும்
பூசப்படுவது புதியதல்ல. இதிலிருந்து இன்றைய நிலையில் விடுபடுவது கடினம். ஒரு
கருத்தைச் சொல்லிவிட்டு, உங்கள் மேல் சாயம் பூசப்படுமுன் நீங்கள் அதற்கெதிரான
கருத்தைச் சொல்லியே தீரவேண்டும் என்கிற ஒரு கட்டாய நிலையிலேயே நிகழ் சமூக நிலை
இருக்கிறது. இந்தக் கட்டாயத்தை மீறும்போது வேறு வழியே இன்றி நீங்கள் என்னவாக
இருக்கப் பிறர் தீர்மானிக்கிறார்களோ அவராக மாறியே தீரவேண்டிய கட்டாயம்
ஏற்பட்டுப்போகிறது. இதோடு சேர்ந்து துரத்தும் வாழ்தல் தொடர்பான அவசியங்கள் வேறி
வழியில்லாமல் உங்கள் மனதோடு தொடர்பே இல்லாத சில முடிவுகளை
எடுக்கவேண்டியிருக்கிறது. இது போன்றவர்கள் ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள்.
வேறு வழியின்றி வாழ்தல் பொருட்டு ஒருவர் எடுக்கும் முடிவின் மீதான அவரது
பங்கைவிட அவர்கள் மேல் அவர்கள் சார்ந்த சமூகம் செலுத்தும் பங்கு அதிகம்
எனலாம். வேர்ப்பற்றின் கதாநாயகன் இத்தகைய ஒரு முடிவுக்குத் தள்ளப்படுகிறான்.
வாழ்தல்வேண்டி அவன் பூணூலானாக வேண்டியிருக்கிறது.

வேர்பற்று நாவல் 1946ல் இருந்து 1952 வரை, ஓர் ஆசார பிராமணக் குடும்பத்தில்
பிறந்த, சாதிகளை மறுக்கும் ஓர் இளைஞனை மையமாக வைத்துச் சொல்லப்படுகிறது.

ஆசாரமான குடும்பத்தின் பிராமண வாழ்க்கையும், அக்குடும்பத்தில் உழலும் பிராமணக்
குழந்தைகள் எதிர்கொள்ளும் வெளி உலகமும் ஒன்றோடு ஒன்று சிறிதும் தொடர்பில்லாதவை.
அதனால் தன்னை வெளி உலகத்தில் ஒரு வினோத மனிதனாக, பிராமணனாகப் பிறந்த ஒரு இளைஞன்
நினைப்பது தவிர்க்கமுடியாதது. இதைத் தொடர்ந்து அவன் சிந்திக்கத் தொடங்கினால்
அவனுக்கு பைத்தியம் பிடிக்கலாம் அல்லது மார்க்ஸிடம் சரணைடையலாம். இதுவே
வேர்ப்பற்றின் கேசவனுக்கு நிகழ்கிறது. பிராமணன் என்கிற சாதியிலோ, அது சார்ந்த
சின்னங்களிலோ சற்றும் நம்பிக்கையில்லாத கேசவன் தன்னை கம்யூனிஸ்டாக அறிகிறான்.
தன் தந்தையை மீறி, தன் சாதிக் கட்டுப்பாடுகளை மீறி ஒரு கம்யூனிஸ்ட்டாக
மாறுகிறான். புத்தகங்களில் இருக்கும் சித்தாந்தங்களின் வழியாக அவன் கண்டடையும்
கம்யூனிஸம் அவனைக் கிறங்கடிக்கிறது. ஒரு கம்யூனிஸ்டாக கல்லூரிக்குள் நுழையும்
கேசவன், கல்லூரியில் நடக்கும் கழக - கம்யூனிஸ மோதலுக்குப் பின்
கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறான். மன்னிப்பு கேட்டால் மீண்டும்
கல்லூரியில் சேரலாம் என்கிற நிலையில், அவன் மன்னிப்பு கேட்பதை கேவலமாக
நினைக்கிறான். ஆனால் அவனுடன் சேர்ந்து போரிட்ட கம்யூனிஸ்ட்டுகள் மன்னிப்பு
கேட்டுவிட்டு கல்லூரியில் சேர்ந்துவிட, அவனுக்கு கம்யூனிஸத்தின் மீதிருக்கும்
அபரிமித ஈர்ப்பு விலகுகிறது. அதோடு காந்தியின் மரணம் அவனுக்குள் தரும்
சலனங்களைக் கண்டு அவனே அரண்டு போகிறான். காந்தியின் மீது தனக்கிருந்து
வெறுப்பின் கீழே, மிக அடியாழத்தில் குடிகொண்டிருந்த காந்தியின் பிம்பம்
விஸ்வரூபம் எடுக்கும்போது அவன் காந்தியைப் புதியதாகக் கண்டடைகிறான். அவனது
கம்யூன் நண்பர்கள் அவனுக்கு, 'நாம காந்திய கெட்டவர்னு சொல்லலே, நல்லவர்னுதான்
சொல்றோம்' என்று புதுவிளக்கம் கொடுக்கிறார்கள். தொடர்ந்து கம்யூனிஸ்டாகவே வலம்
வரும் கேசவனின் உலகம், கல்லூரியில் நடக்கும் கலகத்திற்குப் பின் தடம்
புரள்கிறது.

எல்லா பிராமண இளைஞர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினையின் வழியிலேயே செல்லும்
கேசவன் அடுத்த எதிர்நிலையாக ஆன்மிகத்தில் செல்ல முடிவெடுத்து, துறவறம்
மேற்கொள்ள சிந்திக்கிறான். ஒரு பிராமண இளைஞன் தவிர்க்கவே முடியாத இன்னொரு
புள்ளி இது என்பதை இபா மிகத் தெளிவாக, மிக இயல்பாகச் சொல்லிச் செல்வது நன்றாக
வெளிப்பட்டிருக்கிறது. துறவறம் கொள்வது கல்லூரியில் இடம்பெறுவது போன்றதல்ல
என்பது அவனுக்கு விளங்குகிறது. வெளியில் தன்னை பிராமண துவேஷியாகக்
காட்டிக்கொள்ளும் ஒரு பெரியாரிஸ்ட், கேசவனுக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறார்.
ஒன்று கேசவன் பிராமணனாக இருக்கவேண்டும், இல்லையென்றால் கலப்பு மணம்
செய்துகொண்டு கிறிஸ்துவனாகவேண்டும் என்கிற நிலை வரும்போது, பிராமணனாக இருப்பதே
எளிதானது என்கிற முடிவுக்கு வரும் கேசவன் பிராமணனாக்கப்படுகிறான். அவனது
அறுபதாவது வயதில் திருச்சூர்ணத்துடனும், பஞ்சகச்சத்துடனேயுமே அவன்
உலவேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது.

நாவலின் போக்கில், கதாபாத்திரங்களின் பேச்சில் பல்வேறு வரலாறு தொடர்பான
விஷயங்கள் அலசப்படுகின்றன. குறிப்பாக 1947ல் நிலவிய கழக எழுச்சியும், கம்யூனிஸ
ஆதரவும் அதற்கு உண்டான போட்டியும். கழகங்களும் கம்யூனிஸமும் கல்லூரிகளில்
அப்போதிருந்தே வன்முறையையே முன்வைத்திருக்கின்றன போலும். இன்றுவரை அரசியலில்லாத
கல்லூரி தேர்தல்களை நாம் பார்த்துவிடமுடியாது. வீரிய விதை.

அதேபோல் நாவல் முழுவதும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் ஒரு விஷயம்
பிராமணனுக்குத் தமிழ் எதற்கு என்பது. கேசவனைக் காணும் ஒவ்வொருவரும், பிராமணர்,
பிராமண ஆதரவாளர்கள், பிராமண எதிர்ப்பாளர்கள் என்கிற பேதமில்லாமல், அவன் தமிழ்
படிப்பதற்கு கேலி செய்கிறார்கள் அல்லது உபதேசிக்கிறார்கள். அதில் பிராமண
எதிர்ப்பாளர் கேட்கும் கேள்வி ருசிகரமானது, "இதையும் நீங்க எடுத்துக்கிட்டா
நாங்க என்னதாண்டா பண்றது?" தடையை எல்லாம் மீறி தமிழ் படிக்கும் கேசவன்
வேலைக்காக வேறு வழியே இன்றி பிராமணனாக மாறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுப்
போகிறது. தமிழோ சமிஸ்கிரதமோ அல்ல, கடைசிவரை வரப்போவது ஜாதியே என்கிற உண்மை
அவனுக்கு முகத்தில் அறைகிறது.

நாவலில் சில இடங்களில் மட்டுமே தென்பட்டாலும், இபாவின் நகைச்சுவை உணர்வு
அசரவைக்கிறது. ஏங்கெல்ஸ் பற்றியும் மார்க்ஸ் பற்றியும் கேசவன் சொல்லும்போது
முருகேசன் (கேசவனின் கம்யூன் தோழன்) என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறும்
இடம் (பக் 62), கழகக்காரர்கள் போல அடுக்குமொழியில் கவிதை எழுதும் ஒரு
கம்யூனிஸ்ட்டைச் சுற்றிய விவாதங்கள் (பக். 73), நேரு, ராஜாஜி உள்ளிட்டோர்கள்
பேசிய ஆங்கிலத்தால்தான் சுதந்திரம் கிடைத்ததோ என்பது (பக். 81), ஒரு பெரிய
கதையில் தமிழாசிரியர் ஒற்றுப் பிழைகளைக் கண்டுபிடிப்பது, கதையில் கம்பனைப்
பற்றிக் குறிப்புகள் இல்லை என்று வருத்தப்படுவது (பக். 97), கேசவனின் அப்பா
மகானாக்கப்படும் தருணங்கள், இப்படி பல இடங்கள்.

பிராமண இளைஞனின் கதையில் பிராமணர்களைப் பற்றி எல்லா வகையிலும்
யோசித்திருக்கிறார் இபா. அவர் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களிடமிருந்து இதைக்
கொண்டிருந்திருக்கவேண்டும். கேசவனின் தந்தையின் கதாபாத்திரம் ஒரு கட்டத்தில்
விஸ்வரூபம் எடுக்கிறது. தன் வீட்டில் வேலை பார்க்கும் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப்
பெண்ணை கையைப் பிடித்து இழுக்கும் ஒரு பிராமணருக்கு எதிராகப் பேசாமல் எல்லா
பிராமணர்களும் அமைதியாக இருக்கும்போது, கேசவனின் அப்பா பிராமணனாக இருப்பதைவிட
முக்கியம் நேர்மையானவனாக இருப்பது என்று முடிவெடுக்கிறார். இச்சம்பத்தில்தான்
தன் தந்தையை தானே கண்டடைகிறான் கேசவன். ஒரு கம்யூனிஸ்ட்டுக்கான சிந்தனையை ஓர்
ஆசார பிராமணரிடத்தில் காணும் அவன் அதற்குப் பின் தன் தந்தையைப் பற்றிய
பெருமையான தருணங்களையே தொடர்ந்து தரிசிக்கிறான். கேசவனின் பெரியப்பா பல்வேறு
பெண்களிடம் தொடர்பு வைத்துக்கொண்டு சொத்தை இழந்து திரும்ப வருகிறார். அதற்குப்
பின் அவர் கொள்ளும் நிலையில் பெரும் ஆன்மிக அமைதி காணக்கிடைக்கிறது. இத்தகைய
பெரியப்பாவை வைத்து காசு பார்க்க அவர் குடும்பத்தவர்கள் முயலும்போது கேசவனின்
தந்தை அப்போதும் நேர்மையே முக்கியம் என முடிவெடுக்கிறார். இப்படி ஒரு
சமூகத்தில் நிலவும் எல்லாவிதமான மனிதர்களையும் வெளிப்படுத்துவதில் முழுவெற்றி
காண்கிறார் இபா.

இக்கதையில் வரும் இடறல்கள் எனச் சிலவற்றைச் சொல்லலாம். முதல் விஷயம், இது ஒரு
நாவலுக்கான கட்டமைப்பைப் பெறுவதைவிட, தொடருக்கான மனோநிலையிலேயே
எழுதப்பட்டுள்ளது என்பது. திடீரென மாறும் காட்சிகளுக்குள் தொடர்பு இல்லாமல்
போவது முதல் சறுக்கல். ஒரு கதாபாத்திரம் வரும்போது அதைப்பற்றிய இரண்டு வரிகள்
தந்தே தீரவேண்டிய கட்டாயம் தொடர்களுக்கு ஏற்படுவதுண்டு. இதை இபாவால்
சமாளிக்கமுடியவில்லை. அடுத்தது கதையில் அரசியல் நிகழ்ச்சிகள் உக்கிரம் கொள்ளும்
சமயத்தில் அது தடாரெனத் தடம் விலகி, கிருஷ்ணன் (கேசவனின் கல்லூரி நண்பன்)
மற்றும் கேசவனின் ஈகோவில் முட்டி நிற்பது. இதிலிருந்தும் விலகும் கதை கேசவனின்
பெரியப்பா வழியாக ஆன்மிக வழிக்குச் செல்கிறது. இதையாவது, கேசவன் கடைசியாக
ஆன்மிக வழியை அடைவதற்கான முகாந்திரம் என்ற அளவில் ஏற்கலாம். கேசவனின்
பெரியப்பாவும் கேசவனும் பேசிக்கொள்ளும் விஷயங்கள் அதிகமாக பாலகுமாரனை
நினைவுபடுத்துகின்றன. வெகுஜன எழுத்தாளர்களாக அறியப்படுபவர்களில் (மாலன், ஆதவன்,
சுப்ரமண்ய ராஜு போன்றோர்) பாலகுமாரனே சிறந்தவர் என்பது என் எண்ணம். இபாவின்
பாலகுமாரத்தனமான வசனங்களைப் படிக்கும்போது, மீண்டும் பாலகுமாரனைப் படித்து,
நாஸ்டால்ஜியாவை மீட்டெடுக்கலாம் என்று தோன்றிவிட்டது. :)அதேபோல் நாவலுக்கான
முடிவு என்பது ஒருவித எதிர்பார்த்த முடிவு என்பது தெரிந்துவிடுகிறது. ஆனால்
இன்றளவும் இது யதார்த்தமாக இருப்பதால், இம்முடிவைத் தவிர்க்கமுடியாததாகவும்
எடுத்துக்கொள்ளலாம். என் பெயர் ராமசேஷன் நாவலின் முடிவு இத்தகைய தன்மை கொண்ட
ஒன்று. அதாவது எதிர்பார்த்த ஒன்று; ஆனாலும் யதார்த்தமானது என்கிற அளவில்.

1994ல் எழுதப்பட்ட நாவல் இன்னும் நூறாண்டுகளுக்குப் பொருத்தமாக இருக்கப்போகிறது
என்பதுதான் இதன் முக்கியத்துவம்.

வேர்ப்பற்று, நாவல், இந்திரா பார்த்தசாரதி, கிழக்கு பதிப்பகம், விலை: 120 ரூ.

31வது சென்னை புத்தகக் கண்காட்சி 2008 யில் நான் வாங்கிய புத்தகங்கள்

1. அசரீரி - சுப்பிரமனிய சந்திரன் - சாரதா பதிப்பகம்
2. வந்தார்கள் வென்றார்கள் - மதன் - கிழக்கு Audio Book.
3. நான் வித்யா - 'லீவ் ஸ்மைலிங்' வித்யா - கிழக்கு பதிப்பகம்
4. யூதர்கள் - முகில் - கிழக்கு பதிப்பகம்
5. திப்பு ச்ல்தான் -மருதன் - Prodigy
6. ஔரங்கசீப் - முகில் - Prodigy
7. பவுத்த மதம் - மருதன் - Prodigy
8. அக்பர் - முகில் - Prodigy
9. கம்யூனிசம் - இரா.ஜவாஹர் - நக்கீரன் பதிப்பகம்
10. சடங்குகளின் கதை ( இந்து மதம் எங்கே போகிறது ?- பாகம் 2) - அக்னிஹோத்ரம் ராமானிஜ தாத்தாச்சாரியர் - நக்கீரன் பதிப்பகம்
11. True Story of Jesus
12. இயேசு மறிந்தது எங்கே ? - ஜே.டி. ஷம்ஸ்
13. நாத்திகன் நான் ஏன் ? - Bhakath Singh - வ.உ.சி புத்தக நிலையம்

இரண்டாம் உலகப் போர்

இரண்டாம் உலகப் போர் – சுப்பிரமனியன் சந்திரன்
- விலை. 150. சாந்தி பதிப்பகம்

போலந்து தாக்குதல் தொடங்கி அணுகுண்டு தாக்குதல் நடந்து முடியும் வரை எல்லா தாக்குதலில் விபரங்களையும் சேகரித்து நூலாக கொடுத்துள்ளார் நூலின் ஆசிரியர். ஒவ்வொரு தாக்குதலிலும் என்ன ஆயுதங்கள் பயன் படுத்தப் பட்டன, எத்தனை பேர் இறந்தார்கள், என்ன திட்டங்கள் போடப் பட்டன போன்ற பல விபரங்கள் இதில் உள்ளன. சென்னை புத்தகக் கண்காட்சி 2007 சாந்தி பதிப்பகத்தில் வாங்கிய நூல், சமிபத்தில் தான் எனக்கு படிக்க நேரம் கிடைத்தது. ஆறு வருடங்களாக நடந்த இந்த யுத்தத்தை நிச்சயமாக ஒரு மாதத்திலோ அல்லது இரண்டு மாதத்திலோ எழுதி இருக்க முடியாது. பல செய்தித்தாள்கங்கள், இணைய தளங்கள் போரட்டி செய்தியை மிகவும் சிரம பட்டு சேகரித்திருப்பார். அதை எல்லாம் சேகரித்து ஒரு நூலாய் கொடுப்பது மிக பெரிய விஷயம்.

இந்த நூலில் சோவியத் படை தன்னை நெருங்கி வருவதை உணர்ந்த ஹிட்லர், தன் படைகளை சோவியத் வரும் வழியையில் அதிக பாதுகாப்பையும், பிரிட்டன் வரும் வழியில் குறைவான படைகளை வைந்திருந்தை கூறுகிறார். ஒரு வேளை.... பிரிட்டன் படை முதலில் ஜெர்மனியை அடைந்திருந்தால் ஹிட்லர் சரணடைந்திருப்பாரோ என்னவோ...? ஹிட்லர் கொல்ல அவர்கள் தளபதிகள் செய்யும் முயற்சிகள், ஜப்பான் தளபதிகள் பிடிவாதமாக போரை தொடர்வது, மேகமுட்டம் காரணமாக ஹிட்லர் பிரிட்டனை தாக்குவதை தள்ளி போட்டது போன்ற இரண்டாம் உலகப் போரி மிக முக்கிய திருப்புனைகளை கூறுகிறார்.


இரண்டாம் உலகப்போரை பற்றி தெரிந்துக் கொள்ள விரும்புவர்களுக்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும்.

அசரீரி

சுப்பிரமனியன் சந்திரன்
விலை. 75. சாந்தி பதிப்பகம்

'அசரீரி' பெயரை கேட்டதும் எதோ ஆன்மீக நூலோ என்று எடுத்து பார்த்தேன். நூலில் உள்ள 24 அத்தியாயங்களும் முழுக்க வரலாற்று சிறுகதைகள். வரலாற்றில் நடந்த மிக முக்கிய நிகழ்வுகளை சிறு கதைகள் வடிவில் கொடுத்திருக்கிறார் நூலின் ஆசிரியர். பொழுது போக்குகாக சிறுகதை படிப்பவர்கள் மட்டுமில்லாமல் சரித்திர விரும்பியர்கள் இந்த சிறுகதையை படித்தால் பல தகவல்கள் கிடைக்கும்.

இந்த நூலில் ஹிட்லர் பற்றிய மூன்று சிறுகதைகளும், அணுகுண்டு தாக்குதல் பற்றிய சிறுகதையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். ஜப்பான் மீது அணுகுண்டு வீசும் டிப்பெட்ஸ் எப்படி உணர்ந்தார் என்று 'கலான்' சிறுகதையில் சொல்லியிருக்கிறார். இன்று, பல அமெரிக்காவின் பொருளாதர வளர்ச்சியை பற்றி வாய்யை பிளப்பவர்கள் இரண்டாம் உலகப் போர் முன்பு பல அமெரிக்கர்கள் வேளையில்லாமல் திண்டாடியதை இன்னொரு சிறுகதையில் சொல்லியிருக்கிறார்.

சிறுகதையில் கற்பனை கலந்து சொல்பவர்கள் மத்தியில் சரித்திரத்தை சிறுகதையை மாற்றி அமைத்ததற்கு பாராடியாக வேண்டும்.

சடங்குகளின் கதை

( இந்து மதம் எங்கே போகிறது ? - பாகம் 2 )
- அக்னிஹோத்ரம் ராமானிஜ தாத்தாச்சாரியர் -
விலை.100. நக்கீரன் பதிப்பகம்

'அக்னிஹோத்ரம் ராமானிஜ தாத்தாச்சாரியர்' பெயரை கேட்டவுடன் எந்த பிரிவை சேர்ந்த மனிதர் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.'சடங்குகளின் கதை' என்றவுடன் சடங்குகள் பற்றிய மகத்துவத்தை சொல்ல போகிறார் என்று நீங்கள் எதிர்பார்த்தால்... நீங்கள் ஏமாற்றம் தான் அடைவீர்கள். இன்று பல சடங்குகள் அர்த்தம் புரியாமல் செய்கிறார்கள் என்று தாத்தாச்சாரியர் அவர்கள் நமக்கு விளக்குகிறார்.நூறு வயதை தாண்டியும் இவரின் எழுத்து இளமையாக தான் உள்ளது.

'விவாகம்' என்றால் திருமணம் என்று தானே இதுவரை நாம் எண்ணியிருந்தோம். ஆனால், 'விவாகம்' என்றால் பெண்ணை இழுத்துக் கொண்டு போவது என்று சொல்கிறார். இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்தால் இனிமேல் யாரும் திருமண அழைப்பிதழில் யாரும் 'விவாகம்' என்ற வார்த்தையே போடமாட்டார்கள்.

அருங்கதி எப்படிபட்ட கற்புகரசி என்று அவர் கூறும் கதை மிகவும் அருமை. மணபந்தலில் மாப்பிள்ளை அருமையான மனைவியை தனக்கு கொடுத்ததற்கு பஞ்ச பூதங்களுக்கு நன்றி சொல்வது போல் வாத்தியார் சொல்ல சொல்வார். அதுவும் பெண்ணை பெற்ற தந்தை முன்... இதை சொல்லும் போது நமக்கே சிரிப்பு வரும்.

மந்திரங்கள், ஸ்லோகங்கள் இப்போது வாத்தியார்களுக்கே அர்தம் தெரியாமல் சொல்கிறார்கள் என்று தாத்தாச்சாரியர் அவர்கள் சொல்கிறார் .

தாத்தாச்சாரியர் - வேதங்களை எல்லாம் கற்ற மனிதர். இவரை தவிர யாராலும் வேதங்களில் உள்ள தவறுகளை சுட்டி காட்ட முடியாது. பிரமணராக இருந்தாலும் அவர் எழுத்துக்கள் பகுத்தறிவு சிந்தனை கொண்டதாக உள்ளது.

இவர் இன்றும் nakheeran.com இணையத்தளத்தில் எழுதிக் கொண்டு இருக்கிறார்.

நான் வித்யா



'லிவிங் ஸ்மைல்' வித்யா
விலை.100. கிழக்கு பதிப்பகம்

எந்த எழுத்தாளருக்கும் கிடைக்காத பெருமை 'லிவிங் ஸ்மைல்' வித்யாவுக்கு உண்டு. தன் முதல் நூலிலையே மூன்று மொழியில் ( தமிழ், மலையாளம், ஆங்கிலம்) ஒரே சமயத்தில் வெளிவருவது என்பது எந்த எழுத்தாளருக்கும் கிடைக்காத பெருமை. தன் சொந்த வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களை சொல்லிருக்கிறார் வித்யா.

அப்தூல் கலாம், பெரியார், பீடல், சே போன்றவர்களை பற்றி வாழ்க்கை அனுபவங்களை படித்தால் பல செய்திகள் கிடைக்கும். யார் இந்த 'லிவிங் ஸ்மைல்' வித்யா..? இவர் வாழ்க்கை பற்றி தெரிந்துக் கொண்டு நமக்கு என்ன பயன் என்று நினைக்கலாம்?

அதற்கு பதில்... இந்த நூலை எழுதிய 'லிவிங் ஸ்மைல்' வித்யா - ஒரு திருநங்கை. தான் ஆண்ணின் உடலில் இருந்து கொண்டு பெண்ணுக்கு உரிய உணர்வுகளை உணர்ந்ததை சொல்லியிருக்கிறார். இந்த புத்தகம் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரு நண்பனின் டைரி படிப்பது போன்ற உணர்வு வரும். காரணம், புத்தகம் முடிக்கும் போது நாமும் 'லிவிங் ஸ்மைல்' வித்யா நண்பனாகி உதவ வேண்டும் என்று தோன்றும்.

எம்.ஏ பட்டம் பெற்று புனேவில் பிச்சை எடுத்து திரிந்த அனுபவத்தை நமக்கு படம் பிடித்து காட்டியுள்ளார். தன் பெயர் மாற்றத்திற்காக இரண்டு வருடங்காக போராடியவர் இவர் ஒருவராக தான் இருக்க வேண்டும். இவரைப்போல பல திருநங்கைகளுக்கு அரசாங்கத்தால் முகவரி இல்லாமல் தான் இருக்கிறார்கள். பால்மாற்று அருவை சிகிச்சை பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அந்த அருவை சிகிச்சையில் உயிர் கூட போக வாய்ப்புள்ளது என்று தெரிந்துக் கொண்டு அந்த சிகிச்சை செய்து கொண்டார். தன் நண்பர்கள் பரும் அறிவுரை கூறினாலும் தன் மனசாட்சிப்படி நடந்து கொள்ள விரும்புவதால் அவர் பால்மாற்று அருவை சிகிச்சை செய்துள்ளார். "நான் தம்பியில்ல.... உங்க தங்கச்சி. இப்போதாவது என்ன பொண்ணா பாருங்க... என்ன உங்க பொண்ணா ஏத்துக்கோங்க அப்பா" என்று தன் உறவினர்களிடம் கூறும் போது...நம் கண்கள் கலங்குகின்றன...!

கை, கால், கண் இழந்தால் பரிதாபமாக பார்க்கும் உலகம் திருநங்கைகளை மட்டும் ஏன் தவறாக பார்க்கிறது என்று அவர் கேட்கும் கேள்வி நியாயம் தான்.

'நான் வித்யா' - ஒரு புத்தகமல்ல... உணர்வுகள். எந்த ஆயுதமுமில்லாமல் பலர் திருநங்கையர்களின் சமுகத்தை வாட்டும் குமுறல்கள். இரத்தம் சிந்தாத வலி... இப்படி பல வர்ண வார்த்தைகள் சொல்லலாம். ஆனால் வித்யாவின் அனுபவங்களுக்கு இந்த வார்த்தைகள் மிகவும் குறைவு தான்.

எத்தனையோ பேர் இரண்டில் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருந்திருக்கிறார்கள். இரண்டு பக்கம் ஆதரவு தர முடியாமல் நடு நிலையாக சில அரசியல் கட்சிகளும் இருக்கிறது. இரண்டு பெண்களை யாரை தேர்வு செய்து காதலிப்பது என்று குழப்பத்தில் சில இளைஞர்கள் இருகிறார்கள். இவர்கள் போல திருநங்கைகள் .... ஆண்,பெண் என்று இரண்டும் சேர்ந்து நடுநிலையில் தான் வாழ்கிறார்கள். ஆனால், சமுகமும், அரசாங்கமும் இவர்களை ஏற்க வேண்டும் என்று ஒரு மனிதனாக விரும்புகிறேன்.

இவர்களை 'அவன்','அவள்'
என்று அழைக்க முடியாதது தான் !
'அது' என்று அழைக்காமல்...
'அவர்கள்' என்று அழைப்போம் !!

இவரின் வரைத்தளம் : http://livingsmile.blogspot.com

அன்புள்ள அப்பாவுக்கு...

'சோலை' தமிழினியன்
விலை.30. சோலை பதிப்பகம்.

தி.மு.க கட்சி எழுத்தாளராக இருந்தாலும் 'அம்மா'வை பற்றி எழுதாமல் யாரும் இருக்கமாட்டார்கள். நம்மை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த அன்னையை பற்றி ஒவ்வொரு எழுத்தாளரும் எழுதியிருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் தந்தைக்கு முக்கியதுவம் கொடுத்து எழுதுவதில்லை. 'அன்புள்ள அப்பாவுக்கு...' நூலில் 68 கவிஞர்கள் தங்கள் அப்பாவை பற்றி எழுதிய கவிதையை 'சோலை' தமிழினியன் தொகுத்துள்ளார். அது என்ன 68 கவிஞர்களின் கவிதை....? 'சோலை' தமிழினியனின் தந்தை 68 ஆவது வயதில் காசு நோயில் இறந்தார். தன் தந்தைக்கு இந்த 'அன்புள்ள அப்பாவுக்கு...' கவிதை தொகுப்பு நூலை காணிக்கையாக்கிருக்கிறார்.

'அன்புள்ள அப்பாவுக்கு...' நூலில் இடம் பெற்ற 68 கவிதைகளில் நான் எழுதிய கவிதையும் ஒன்று. இந்த நூலில் நான் எழுதிய கவிதை..

அதிகாரம் செய்வதில் ஹிட்லர்
அன்பு காட்டுவதில் புத்தர்
இரு கலவை செய்த உத்தமர்
என் அப்பா என்பவர் !

விரும்பும் பொருளை
வாங்கி தரும் நிதி அமைச்சர் !
வருடம் முழுக்க பாடம்
சொல்லிக் கொடுக்கும் கல்வி அமைச்சர் !
பள்ளியில் விட்டு
செல்வதில் போக்கு வரத்து அமைச்சர் !
வீட்டு நிர்வாகத்தை அம்மாவிடம் கொடுக்கும்
எங்கள் வீட்டு முதல் அமைச்சர்
என் அப்பா என்பவர் !

நடைபயில கை கொடுத்தவர்
நாகரிகமாக பேச கற்று தந்தவர்
நன்மைகள் செய்ய சொல்லி தந்தவர்
நல்லவன் என்ற பெயர் எடுத்த
என் அப்பா என்பவர் !

லட்ச கணக்கில் லஞ்சம் வாங்கும் இடத்தில்
லட்சியத்தை லஞ்சமாக கொண்டவர்
நேர்மையில்லாதவர் மத்தியில்
பிழைக்க தெரியாதவர் பெயரெடுத்த
அரசாங்க ஊழியர்
என் அப்பா என்பவர் !

தலைமுறை இடைவேளையில் நட்பாய் !
கட்டளையை மீறும் போது கண்டிப்பாய் !
அறிவுரை வழங்கும் போது அன்பாய் !
ஆண் உருவில் இருக்கும் தாயாய்
இருக்கும் என் அன்புள்ள அப்பாவுக்கு....

இந்த அவசர உலகத்தில்
வார்த்தைகளுக்கு இடம் குறைந்த போதிலும்
இடமாறாத அப்பா அன்பு
என்றும் இருக்கும்!!


கவிதைகளுக்கு லைப்ரரி ஆர்டர் கிடைக்காமல் இருக்கும் சமயத்தில் கவிதை நூலை வெளியீடுவதை ஒவ்வொரு பதிப்பகமும் தவிர்த்து வருகிறது. ஆனால், தமிழியன் துணிச்சலாக கவிதை நூலை வெளியீட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் 'அன்புள்ள அப்பாவுக்கு...' இரண்டாம் பாகம் நூல் வெளியீட போவதாக 'சோலை' தமிழினியன் கூறியுள்ளார். அவர் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

யூதர்கள்


முகில்.
விலை ரூ.100, கிழக்கு பதிப்பகம்.

5000 வருட வரலாற்றில் இரத்ததால் எழுதப்பட்ட சரித்திரம். உலகின் மிக பழைமையான மதம் தான் - யுதமதம். ஆனால் அவர்களுக்கு என்று இஸ்ரேல் நாடு உருவானது நவம்பர் 29,1947ல் தான். அதற்கு முன்பு வரை அவர்கள் நாடோடியாக தான் வாழ்ந்தார்கள். தனி நாடு கிடைத்த பின்பும் அவர்கள் பிரச்சனை ஓய்ந்த பாடுடில்லை. இன்றும் பாலஸ்தீனத்துடன் யுத்தம் நடத்திக் கொண்டு தான் இருக்கிறது.

இஸ்லாம் மதம் முன்பே யூதர்கள் தான் கடவுளுக்கு உருவம் இல்லை என்று வழிப்பட்டவர்கள். கிறித்துவ மதத்தினர் வணங்கும் இயேசு ஒரு யூதர். உலகில் எல்லா மூலை முடுக்குகளிலும் இஸ்லாம், கிறித்துவம் பறவிவிட்டது. ஆனால், யூதன் என்றால் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என்று தான் சரித்திரம் காட்டியுள்ளது.

'யுதர்கள்' - இந்த நூல் நான்கு பாகங்களாக எழுதியுள்ளார் முகில் அவர்கள். யூதாஸ் இயேசுவை காட்டிக் கொடுத்த கதையில் இருந்து நூல் துவங்குகிறது. அந்த ஒருவன்(யூதாஸ்) காட்டிக் கொடுத்ததால் சரித்திரம் யூதர்கள் என்றால் காட்டிக் கொடுப்பவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டது. அதன்பின் பைபிள் காலத்தின் தேவ தூதரான மோசஸ், தாவீத், சாலமோன் ஆலயம் பற்றி மிக அழகாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார்.

நிகழ்காலத்தில் இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்சனை இருந்தாலும், வரலாற்று சுவடுகளில் நபி அவர்கள் " யூதர்களும் இஸ்லாமியர்களுக்கு இணையாக உரிமை படைத்தவர்களாகவே நடத்தப்படுவர். யூதர்களின் மதச் சுதந்திரத்துக்கு எந்த விதத்திலும் தடையில்லை. அவர்கள் தங்கள் எண்ணப்படி வழிபடலாம். இந்த தேசம் இஸ்லாமியர்கள் யூதர்களோடு கைகோர்த்து உருவாக்கும் தேசம்' என்று தான் கூறியுள்ளார்.

இந்த நூல் யூதர்கள் வரலாற்றூ கதையோடு நிர்க்கவில்லை. அவர்களின் மத நம்பிக்கை, பண்டிக்கைகள், சமூகம், சடங்குகள், இந்தியாவில் யூதர்கள் என்று நான்காவது பாகத்தில் கூறியுள்ளார்.

யூதர்கள் பற்றீய நூல் என்பதால் முழுக்க முழுக்க ஆசிரியர் முகில் அவர்கள் வக்காளத்து வாங்கவில்லை. ஏன் யூதர்களை எல்லா காலத்திலும் வெருக்கப்படுகிறார்கள் ? என்பதையும் இடை இடையே கூறியும் இருக்கிறார். உலகில் உள்ள எல்லா மதங்களை விட தங்கள் மதம் தான் சிறந்தது என்ற எண்ணம் யூதருக்கு உண்டு. உலகத்திற்கு 'வட்டி' என்பதை அறிமுகம் படுத்தியவர்கள் யூதர்கள். 'இருக்க இடம் படுக்க பாய் கேட்கும் குணம்' யூதர்களுக்கு உண்டு. அப்படி தான் ஒவ்வொரு நாட்டிலும் குடி புகுந்து அதன் பிறகு விரட்டப்பட்ட காரணமும் இது தான். 'ஹமாஸ்' தாக்குதலை மிகைப்படுத்தி அமெரிக்க ஆதரவு பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கெட்ட குணங்கள் சொல்லும் முகில், நல்ல குணங்களையும் சொல்லியிருக்கிறார். ஒரு யூதனுக்கு வாய்ப்பு வந்தால் அதை சரியாக பயன்படுத்தி கொள்வார். தான் முன்னேறுவதோடு தன்னுடன் மற்ற யூதர்களை முன்னேற்றும் குணம் யூதர்களுக்கு உண்டு.

இத்தனை யூதர்கள் கொலை செய்ய வேண்டும் டார்கெட் வைத்துக் கொண்டு தான் இன்றும் ஹமாஸ் இயக்கத்தில் சேருகிறார்கள். அன்று முதல் இன்று வரை யாராவது ஒருவர் யூதர்களை அழிபதை லட்சியமாக கொண்டவர்கள் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நூல் யூதர்களுக்கு ஆதரவாகவுமில்லை, எதிராகவுமில்லை. அவர்களை நமக்கு புரிய வைத்திருக்கிறார்கள்.

முசோலினி


வெ.சாமிநாத சர்மா
விலை.60., ராமையயா பதிப்பகம்

இரண்டாம் உலகப்போரின் நாயகன் ஹிட்லரின் தோழனாக இருந்த முசோலினியின் வாழ்க்கை சரித்திரம். இந்த நூலை படித்து முடிக்கும் போது முசோலினி வாழ்க்கையை பற்றிய முதல் பாகமாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. காரணம், முசோலினி தன் சொந்த மருமகனை கொன்றது, இரண்டாம் உலகப்போரில் ஹிட்லருடன் கூட்டனி செர்ந்தது, ஹிட்லர் இராணுவத்தால் காப்பற்றப்பட்டு ஜெர்மனிக்கு கொண்டு செல்லுதல் போன்ற செய்திகள் எல்லாம் இந்த நூலில் இல்லை. இவ்வளவு ஏன் ? முசோலினி உடல் மக்கள் பார்வைக்கு தொங்கவிட்ட செய்தி கூட இல்லை. முசோலினி வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் இல்லாமல் முசோலினி வாழ்க்கை சரித்திரம் உள்ளது.

இந்த நூல் முசோலினி ஆரம்ப வாழ்க்கையை மட்டுமே பிரதிபலிக்கிறது. முசோலினியின் படிப்பு, ஸுசர்லாந்தில் வாழ்க்கை, பத்திரிக்கை ஆசிரியர் பொருப்பு, இறுதியாக இத்தாலி சர்வாதிகாரத்தை அடைவது வரை முசோலினி பற்றிய குறிப்புகள் உள்ளன.

முசோலினி பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு இந்த நூல் உதவதாது. ஒரு வேளை இந்த நூல் முதல் பாகம் என்றால் ஏற்றுக் கொள்ளலாம். இதில் முகம் சுழிக்க வைக்கும் விஷயம் என்னவென்றால் சர்வாதிகாரி முசோலினியை கதாநாயகம் அளவிற்கு அலங்கரித்து எழுதியது தான். முசோலினிக்காக வக்காலத்து வாங்குவது போல் தான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலி சுவையானதை பற்றி சொல்ல வேண்டும் என்றால் முசோலினி வேளையில்லாமல் கஷ்டப்பட்டு திரிவதை அழகிய கதை படிப்பது போல் இருந்தது. மற்றப்படி பெரிதாக சொல்வதற்கு இந்த நூலில் எதுவுமில்லை.

6 (சிக்ஸ்) சிக்மா


விலை.70. சிபி கே. சாலமன்.
கிழக்கு பதிப்பகம்

இன்று வெற்றி பெற்ற பல நிறுவனங்களின் மந்திரச் சொல் - சிக்ஸ் சிக்மா. ‘பிரம்மாண்ட வெற்றியின் ஃபார்முலா சிக்ஸ் சிக்மா’ என்று முன் அட்டையிலும், ‘பாடப்புத்தகம் போல் பாட்டிக்காமல், ரசித்துப் படித்து பயன் படுத்திக் கொள்ளலாம்’ என்று பின் அட்டையிலும் உள்ளது.

முதல் முன்று, நான்கு அத்தியாயத்தில் பள்ளியில் படித்த Standard Deviation (SD), Mean, Mode பற்றி எல்லாம் விளக்குகிறார். அதன் பின் Operation Researchயில் படித்த Chi-Square பணியில் சில டெபில்களும்,Sampling போனறவற்றை குறிப்பிடும் போது ஆங்கிலத்தில் படித்தை தமிழில் படிக்கும் உணர்வு தான் ஏற்பட்டது. இந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு தெளிவாக சொல்லியிருக்கிறார். தெரிந்தவர்கள் படித்தால் தொய்வாக தான் இருக்கும்.

இந்த நூலில் செய்தி சொல்லும் அளவிற்கு கதைகளும் அதிகம். ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்தில் சொல்லும் கதைகளும், செய்தி துணுக்குகளும் மிகவும் சுவாரஸ்யம். இவை எல்லாம் ரசிக்கக் கூடியதாக இருந்தாலும் புத்தகம் படித்து முடிக்கும் போது பாதி தான் படித்தது போன்ற உணர்வு. சிக்ஸ் சிக்மா பற்றி தெரிந்துக் கொள்வதற்காக வாங்கியதில் முழு திருப்தியில்லை.

'பெல்ட் பேர்வழிகள்' அத்தியாயத்தில் கிரீன் பெல்ட், பிளாக் பெல்ட், மாஸ்டர் பிளாக் பெல்ட், சாம்பியன்ஸ் பற்றி படம் போட்டு தெளிவாக விளக்கியிருக்கிறார். DMAIC அத்தியாயத்தில் ஒவ்வொரு பிரிவையும் உதாரணங்களோடு எல்லோரும் புரியும் வகையில் கூறியிருக்கிறார் சாலமன். Risk Plan பற்றி விளக்கும் போது சொல்லும் கதையும், துணுக்கும் மிக அருமை.

ஒரு சில தமிழ் திரைப்படங்கள் முதல் பாதி மெதுவாக நகர்த்திருந்தாலும், இரண்டாவது பாதியில் வேகமாக கதையை நகர்த்தி வெற்றி பெற்றுவிடும். அதே போல் இந்த நூலில் முதல் பாதியில் தெரிந்ததை படிக்கிறோம் என்ற உணர்வு வந்தாலும், இரண்டாவது பாதியில் சிக்ஸ் சிக்மா விஷயங்களை எளிய முறையில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சிக்ஸ் சிக்மா பற்றி எல்லா செய்திகளும் தர படவில்லை என்று இறுதி பகுதியில் ஆசிரியரே கூறுகிறார். மேலும் சிக்ஸ் சிக்மா பற்றி தெரிந்துக் கொள்ள சில இணையத்தளங்கள் விபரங்களையும் கொடுத்திருக்கிறார். சிக்ஸ் சிக்மா பற்றி அறிமுகமாக தான் இந்த நூல் இருக்கிறது. முழுமையான நூல் இல்லை. எனினும் சிக்ஸ் சிக்மா பற்றி பல ஆங்கில நூல்கள் வரும் வேளையில் தமிழ் வாசகர்களுக்காக இந்த நூலை எழுதியத்திற்கு சிபி கே. சாலமன் அவர்களை பாராட்ட வேண்டும்.

வரலாறு என்றால் என்ன ?


அ.கருணாந்தன்
விலை.5. பக்கங்கள்: 32
பாரதி புத்தகலாயம்


2007ல் புத்தக கண்காட்சியில் இந்த நூலை வாங்கினேன். சிறிய நூல் என்றாலும், ஒன்றரை வருடம் கலித்து தான் இந்த நூலை படிக்க இப்போது நேரம் கிடைத்தது. புத்தகத்தின் வாங்க 'வரலாறு' இந்ததால் இந்த நூலை வாங்க தூண்டியது. இதில் கூறும் விஷயங்களை படிக்கும் போது அதன் விலை மிகவும் குறைவு தான்.

வரலாறு புதினம் எழுதும் எழுத்தாளர்கள் இந்த நூலை படிக்கும் படித்தால் நிச்சயம் மன உறுத்தல் எற்படும். " நாம் வரலாற்றில் கதாநாயகர்களையும், கதாநாயகிகளையும் பிரமிக்க வைக்கும் அவர்களது சாகசங்களையும் தேடவில்லை. மாறாக உண்மையைத் தேடுகிறோம்" என்று ஒரு இடத்தில் கூறுகிறார். வரலாறு நூல் எழுதுபவர்கள் தங்கள் கதாநாயகர்களின் வெற்றியை மட்டும் குறிப்பிடுகிறார்கள், அவர்களின் தோல்வியை மறைக்கிறார்கள். இன்னொரு இடத்தில் "எந்த கல்வெட்டும் அதை வெளியிட்ட மன்னனின் தோல்விகளையும் தவறுகளையும் பட்டியலிடுவதில்லை" . கல்வெட்டில் கூட சில வரலாறு உண்மைகள் மறைக்க படுவதை துணிச்சலாக சொல்லியிருக்கிறார்.
இதை சொல்லும் எழுத்தாளரின் துணிச்சலை பாராட்டாமல் இருக்க முடியாது.

தற்பெருமை நேர்மையான வரலாறாவதில்லை என்பது உண்மை. அதை நூலின் ஆசிரியராக தெளிவாக கூறுகிறார்.

இந்த நூலின் குறை என்றால் சிறிய நூல் என்பது தான். மிக பெரிய விஷ்யத்தை நான்கு வரியில் சொல்ல முயற்சிக்கிறார். உதாரணத்திற்கு... ஜான்ஸி ராணி ஒய்வூதியத்திற்காக தான் ஆங்கிலேயரை எதிர்த்தார் என்று கூறுகிறார். அவரது வீரம் போற்றுதல் குரியது. ஆனால், அவரது தேசபக்தி, தேசீய நோக்கு கேள்வி கேள்விக்குரியது. சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமாக சொல்லியிருக்கிறார். இன்னும் சில இடங்களில் ஆரிய்ச் அராஞ்களையும் எழுயுள்ளார். ஆனால், 300, 400 பக்கங்கள் சொல்ல வேண்டிய விஷ்யத்தை 32 பக்கங்கள் சொல்லியிருக்கிறார் என்பது தன் சிறு வருத்தம். இதே நூலை அதிக பக்கங்கள் கொண்டு இன்னும் விளக்கி சொல்ல வேண்டும் என்ற வேண்டுக்கோள்ளை ஆசிரியருக்கு விடுப்போம்.

லொள்ளு தர்பார்


முகில்,
விலை. 60. பக்கங்கள் : 158
கிழக்கு பதிப்பகம்

இரண்டாவது முறையாக முகில் எழுதிய நூல் இந்த வலைப்பூவில் இடம் பெறுகிறது ( முதல் நூல் 'யூதர்கள்' ). 'தினமணி கதிரில்' எழுதிய நகைச்சுவை கட்டுரைகளை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். இந்த நூலில் தொடக்கம் முதல் இறுதி வரை முழுக்க முழுக்க லொள்ளு தான். இந்த நூலை சமர்ப்பணம் யாருக்கு என்று பார்த்தால் அந்த 'லோள்ளே வேணாம்' என்று லொள்ளு பண்ணுகிறார்.

லொள்ளுக்காக சினிமாவை எடுத்து அந்த கதையை கலாட்டா செய்யாமல் நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்களை எடுத்து லொள்ளு மழை பொழிந்திருக்கிறார். முதல் அத்தியாயமே பத்திரிக்கையில் வரும் நூல் விமர்சனங்களை லொள்ளுக்கு எடுத்துக் கொண்டுள்ளார். சுவாமி சுனாமியானந்தா எழுதிய " மனம் is மனம்" என்ற நூலை லொள்ளு பண்ணும் போது 'விகடனில்' யாரோ மனதை பற்றிய சுவாமியை மனதில் வைத்துக் கொண்டு எழுதியது போல் உள்ளது. ( முகிலுக்கு அவர் மீது என்ன கோபமோ... :) )

பாட்டம் 9 மூவிஸ்யில் தயாரிப்பாளர் கொடுத்த பொட்டியை கை நீட்டி வாங்கி விட்டதால் பத்தாவது இடம் கொடுப்பது என்று சொல்வது படு சுப்பர். 'செல் பேசும் வார்த்தைகள் !" பலர் நிச்சயமாக forward mail ல் படித்திருப்பார்கள். மீண்டும் ஒரு முறை படித்தாலும் தவறில்லை. இதை படிக்கும் பிறகு நம் செல்போனை பார்க்கும் போதெல்லாம் நமக்கே சிரிப்பு வரும். அதே போல் 'மைக் ஸ்பீக்கிங்' அத்தியாயமும் அப்படி தான். மைக் முன் பேசும் போது நம்மால் சிரிப்பை அடக்க முடியாது.

'நடிகை ருசிஷாவுடன் ஒரு நாள்' ( வேறு தலைப்பை வைத்திருக்கலாம். தலைப்பை படித்தவுடன் மனதில் வேறு மாதிரியான சிந்தனை வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை). "இப்படிதான் இருக்க வேண்டும் எக்ஸாம்" சர்தார்ஜி எக்ஸாம் பேப்பரை நியாபகம் படுத்துகிறது.

லொள்ளு என்று சொல்லும் போது லொள்ளு பண்ணும் அரசியல்வாதிகள் இல்லாமலா ? " ஆட்சியை அமுக்குவது யார்" என்ற கட்டுரையில் 2006 நடந்த தேர்தலில் பங்கு பெற்ற முக்கியமான பிரமுகர்கள் பண்ணிய அலும்புகளை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார். 'தும்பிகளோடு அலையும் துப்பட்டாக்காரி' வரும் எழுத்துபித்தன் பண்ணும் கலாட்டா 'சின்ன கலைவானர்' விவேக் அந்த கதாபாத்திரத்திற்கு சரியா இருப்பார் என்று சொல்லும் அளவிற்கு ஓவராக பேசுகிறார்.

லொள்ளு பண்ண நினைப்பவர்கள் 'லொள்ளு தர்பார்' நூலை படியுங்கள். லொள்ளு நூல் என்பதால் லொள்ளான பார்வை...

எனது கீதை



குகன்.
விலை -ரூ40.00. பக்கம்-112
நாகரெத்னா பதிப்பகம்.
சென்னை.

நான் எழுதிய நூலை பற்றி நானே சொன்னால் எப்படி...? முத்துகமலம் இணையத்தளத்தில் புத்தக பார்வை பகுதியில் இடம் பெற்றுள்ளத்தை இந்த வலைப்பதவில் ஏற்றியுள்ளேன்.

( நூல் பற்றிய சிறு குறிப்பு : மே 26,2006 அன்று "எந்து கீதை" நூல் வெளியீடப்பட்டது. இந்த நூலை நீதியரசர். வேணுகோபால் அவர்கள் வெளியீட, முதல் பிரதியை 'கலைமாமணி' டி.கே.ஸ்.கலைவாணன் அவர்கள் பெற்றுக் கொண்டார். மறைந்த உவமை கவிஞர் சுரதா அவர்கள் இறுதியாக அணித்துரை எழுதியது இந்த "எனது கீதை" நூலுக்கு தான்.)

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இடம் பெறும் கல்வி, முயற்சி, வேலை, உழைப்பு, பணம், அனுபவம், காதல், திருமணம், குழந்தை, நட்பு, காலம், குடும்பம், ஒற்றுமை, வெற்றி தோல்வி, நம்பிக்கை, நகைச்சுவை, மகிழ்ச்சி, கடவுள் என்பது போன்ற 25 தலைப்புகள். இந்தத் தலைப்புகள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவசியமான ஒன்றாக இருந்தாலும் இவை ஒவ்வொருவரிடமும் வேறுபட்டுப் போயிருப்பதற்கான காரணம் என்னவாயிருக்கும் என்கிற எண்ணத்தில் நூலாசிரியர் சிந்திக்க முற்பட்டிருக்கிறார். அவருக்கு அவர் படித்த புத்தகங்கள், கிடைத்த நட்பு போன்றவை ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறது. அந்த விளக்கங்களை, அனுபவங்களை நூலாக்க முயற்சித்து வெற்றியும் கண்டிருக்கிறார்.

ஒவ்வொரு கட்டுரைக்கும் அவருடைய கருத்தைத் தெரிவிக்கும் நூலாசிரியர் அதற்கு ஆதாரமாக தான் படித்த அல்லது கேட்ட குட்டிக்கதைகள் மற்றும் தனக்கு மின்னஞ்சலில் வந்த கதைகளை இடையிடையே சொல்லி படிப்பதற்குச் சுவையாக்கி இருக்கிறார். இந்நூலில்,

"வேலை" எனும் தலைப்பின் கீழ் வரும் "தனக்கு பெயர் கிடைக்கும் என்பதற்காக செய்ய முடியாத வேலையை எல்லாம் ஒத்துக் கொண்டு இறுதியில் எந்த வேலையும் செய்ய முடியாமல் ஓய்ந்து பொகும் அளவிற்கு உழைக்கக் கூடாது."

"குடும்பம்" என்கிற தலைப்பில் "நாம் செய்யும் வேலை குடும்பத்தை உயர்த்தும்படியாக இருக்க வேண்டுமே தவிர, குடும்பத்தை ஒதுக்கும்படியாக இருக்கக் கூடாது"

"முயற்சி" எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ள "தோற்பவர்கள் பாதுகாப்பைத் தேடுகிறார்கள். வெற்றி பெறுபவர்கள் வாய்ப்பைத் தேடுவார்கள். தோல்வி என்பது குற்றமல்ல, நம் முயற்சிகளில் உள்ள பிழை."

"ஒற்றுமை" எனும் தலைப்பில் இடம்பெற்றிருக்கும் "என்னதான் தனி மனிதன் சிந்தனை, முயற்சி, தன்னம்பிக்கை என்று சொன்னாலும், சில இடங்களில் சாதித்து வெற்றிகளைக் குவிப்பது ஒற்றுமையான முயற்சிதான்."

"நம்பிக்கை" எனும் தலைப்பில் இருக்கும் "தன்னம்பிக்கை வந்தவுடன் கடவுள் மீது நம்பிக்கை குறைந்து விட்டது. எந்தப் பிரச்சனையானாலும் நானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். கடவுளிடம் சென்று முறையிடுவதைக் குறைத்து விட்டேன்."

-என்கிற வாசகங்கள் நன்றாக இருக்கிறது. இந்த வாசகங்கள் பலருக்கும் பொருத்தமானதாக இருக்கலாம்.

குகன் எழுதியிருக்கும் இந்த "எனது கீதை" நூலை வெளியிட்டுள்ள சென்னை, நாகரெத்னா பதிப்பகம் ஒவ்வொரு தலைப்பையும் தனிப்பக்கத்தில் துவக்காமல் தொடர்ச்சியாகக் கொண்டு சென்றிருப்பதும், பல பக்கங்களில் அதிகமான அளவில் இடம் பெற்றிருக்கும் எழுத்துப் பிழைகளைக் கவனிக்காமல் விட்டிருப்பதும் இந்நூலின் குறைகளாகத் தெரிந்தாலும், நாம் தெரிந்து கொள்ள நிறைய தகவல்களும் இருக்கின்றன.

நடை பாதை

குகன்,
விலை -ரூ40.00,பக்கம்-112
வனிதா பதிப்பகம்,
11, நானா தெரு,
பாண்டி பஜார்,
தி.நகர்,
சென்னை-600 017.
தொலைபேசி: 044-42070663.



நூலாசிரியர் பல்வேறு தமிழ் இணைய தளங்களில் எழுதிய இந்த சிறுகதைகள் அச்சின் மூலம் நூலாக்கப்பட்டு இருக்கிறது. நூலாசிரியர் கணினித் துறையில் மென்பொருள் பொறியாளராக இருப்பதால் இந்த நூலில் இருக்கும் பல சிறுகதைகள் கணினித்துறையில் இருப்பவர்களையும் அவர்களுக்கு வரும் பிரச்சனைகளையும் சார்ந்து இருக்கிறது.

இந்த நூலில் இருக்கும் 24 சிறுகதைகளில் பொதுவாக, கணிப்பொறி யுகத்தில் வளர்ந்து வரும் இன்றைய சமுதாயத்தில் அதிகமானவர்களிடம் இருக்கும் எண்ணங்களான வெளி நாடுகளுக்குச் சென்று அதிகமாகப் பணம் சம்பாதித்தல், அதனால் வரும் அடுத்த நாட்டு ஆடம்பர மோகத்தில் தமிழ்ப் பண்பாடுகள் சிதைக்கப்படுதல், வெளிநாட்டில் வசிக்கும் தங்கள் பிள்ளைகளால், இங்கே இருந்து வரும் வயது முதிர்ந்த பெற்றோர்களுக்கு வரும் கடைசி கால எதிர்பார்ப்புகள் அவை கிடைக்காமல் போவதால் வரும் ஏமாற்றங்கள் போன்றவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சில சிறுகதைகளில் தற்போதைய சமூகத்தில் இருக்கும் சில குறைபாடுகள் அதனால் வரும் விளைவுகள் என்று இன்றைய சமுதாயத்திற்குத் தேவையான பல விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

சென்னை வனிதா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் குகன் எழுதியிருக்கும் இந்த நடைபாதை (சிறுகதைகள்) நூலில் சமூக மேம்பாட்டிற்கான பல கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால் இந்த வலியுறுத்தல்கள் சில இடங்களில் வலிமையில்லாமல் பலவீனமாய்ச் சொல்லப்பட்டுள்ளது. மேலும் சில சிறுகதைகளில் இடையிடையே சிறுகதைக்கான எழுத்து நடையிலிருந்து விலகி நாடக வடிவிலான எழுத்து நடைக்கு மாற்றமாகி பின்பு திரும்ப வருவதாக இருக்கிறது. இது போன்ற ஒரு சில குறைகளை மட்டும் விலக்கி விட்டால் இந்த நடைபாதை கணினித் துறையிலிருப்பவர்களுக்கு மட்டுமின்றி இந்த சமுதாயத்திற்கும் அதன் பண்பாடுகளுக்கும் வழிகாட்டும் சரியான பாதையாக இருக்கும்.

என் நாடு, என் மக்கள், உன் ரத்தம் !

ஜி.எஸ்.எஸ், பக்கங்கள் - 120
தங்கதாமரை பதிப்பகம்,
அடையாறு, சென்னை - 20.

கன்னிமரா நூலகத்தில் எடுத்த நூல்களில் முதலில் இருந்து இறுதி வரைக்கும் படித்த நூல் இது தான் (பெரும்பாலான நூல்கள் பாதியிலேயே அலுப்பு தட்டிவிடுகிறது).’கல்கி’யில் காஷ்மீர் குறித்து குறுந்தொடராக எழுதியதை மேலும் சில பகுதிகளை சேர்த்து நூலாக எழுதியுள்ளார் ஜி.எஸ்.எஸ். அவர்கள். இதை படிக்கும் போது காஷ்மீர் பற்றி தெரியாத உண்மைகளையும், தற்போது உள்ள நிலவரங்களையும் மிக சிறப்பாக எடுத்து காட்டியுள்ளார்.

இந்த குறிப்பிட்டு சொல்ல வேண்டிய வரிகள்...

1.'காஸ்யபுரம்; என்பதை தான் காலப்போக்கில் 'காஷ்மீர்; என்று மாறியதாக கூறுகிறார். சமஸ்கிருதத்தில் 'காஷ்மீர்' என்பதன் அர்த்தம் நீரை வெளியேற்றுதல் போன்ற துணுக்கு செய்திகள் சுவையாக உள்ளன.

2.ஜம்மு காஷ்மீர் சட்டங்களை பற்றி சொல்லும் போது அதிர்ச்சியாகவும், வெடிக்கையாகவும் உள்ளது. இந்தியாவை பொருத்தவரையில் 'காஷ்மீர்' ஒரு ஸ்பெஷல் மாநிலம். இந்திய தேசிய கோடியை எரித்தால் கூட தண்டனை இல்லையாம். காரணம், அவர்கள் சட்டம் தெளிவாக கூறிப்பிடவில்லை.

3.பல விஷங்களில் தனிச்சையாக முடிவு எடுக்க காஷ்மீர் அரசு உரிமை உண்டு. அங்கு வியாபாரம் செய்பவர்களுக்கு ஐந்து வருடத்திற்கு வரி சலுகை உண்டு. வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் இங்கு நிலம் வாங்க முடியாது. உயிருக்கு உத்திரவாதம் இல்லாத ஊரில் என்ன சலுகை கொடுத்தாலும் யார் தான் வருவார்கள்.

4.600 கோடி ரூபாய் வருமானம் வரும் காஷ்மீரில் 7000 கோடி நிதியை இந்தியா காஷ்மீருக்கு அளித்து வருகிறது. இந்த பணமும் அவர்களுக்கு போதவில்லை என்பது தான் வருத்தம்.

5.வாரிசு அரசியல் கூடாது என்று போராடிய ஷேக் அப்துல்லாவின் மகன் ஃபரு அப்துல்லாவும், பேரன் உமர் அப்துல்லா காஷ்மீர் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று சுச்சகமாக எழுதியுள்ளார். (நேரு பரம்பரைக்கு அடுத்து அப்துல்லாவின் பரம்பரை வாரிசு அரசியலில் இரண்டாவது இடம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.)

6.லால் பகதூர் சாஸ்திரியின் மர்மான மரணத்தை இந்திய அமைச்சர்கள் அலட்சிய படுத்தியதை ஒரு செய்தியாக கூறியுள்ளார். இன்னும் கொஞ்சம் விளக்கம் கொடுத்திருக்கலாம்.

இரத்தம் நிறைந்த வரலாறு படைத்த பூமியை பற்றி குறைந்த இரத்ததில் எழுதியிருக்கிறார்.

இந்த எனக்கு ரொம்பவும் பிடித்த வரி

"காஷ்மீர் -இந்தியாவின் தலை மாநிலமட்டுமல்ல... தலைவலி மாநிலம் அது தான்."

லெனின் : முதல் காம்ரேட்

வர வர நான் கம்யூனிஸ்டாக மாறி விடுவேனோ என்ற சந்தேகம் எனக்கே வந்துவிட்டது. கம்யூனிஸ புத்தகங்கள் கண்ணில் படும் போது என்னால் படிக்காமல் இருக்க முடியவில்லை. அதுவும் 'கிழக்கு பதிப்பகம்' நூல் என்றால் சொல்லவே வேண்டாம். படித்து விட்டு தான் மறு வேலை பார்ப்பேன். சரி... இந்த புத்தகத்திற்கு வருவோம்.

ரஷ்யர்களால் மட்டுமல்ல... இந்த உலகத்தில் இருப்பவர்கள் யாராலும் மறக்க முடியாத ஒருவர் தான் 'லெனின்' அவர்கள். ஜார் ஆட்சியை ஒழித்து, ரஷ்ய மக்களின் உழைப்புக்கு உருவம் கொடுத்தவர். ஜார் அகராதியில் மக்களுக்கு இன்னொரு பெயர் ‘Serfs’; அதாவது அடிமைகள். நிலங்களை வாங்கும் போதும், விற்கும் போதும் அந்த நிலப் பகுதியில் வேலை செய்யும் அடிமைகளையும் சேர்த்தே விலை பேசுவார்கள்.இந்த நிலைமையை மாற்றியவர்.

captialist, socialist என்று பாகுபாடே இல்லாமல் எல்லோருமே தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய நபர் தான் லெனின்.

அவரை பற்றி இந்த புத்தகத்தில் சில குறிப்புகளை சொல்லியாக வேண்டும்

1.லெனின் சகோதரர் அலெக்ஸாந்தர் ஸிம்பெர்ஸ்க் பல்கலைக்கழகத்திலிருந்து தங்க மெடல் வாங்கியவர். ஜார் மன்னர் கொலை செய்யும் முயற்சியில் தோல்வி பெற்று தூக்கு தண்டனை பெற்றார். அக்காலக்கட்டத்த்லில் ரஷ்யாவில் பள்ளிக்கூடம் நடத்துவது தேசத் துரோகமாக கருதினர். ஆடுகள், மாடுகள், அடிமைகள் கொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

2.முதல் சந்திப்பிலேயே லெனினை வசீகரித்தவிட்டார் நதேஷ்தா. தன்னுடைய அழகினால் அல்ல. தொழிளார்கள் மீது கொண்ட மெய்யான கரிதத்தால்.

3.லெனின் தொடங்கிய அமைப்பின் பெயர் தொழிலாளி வர்க்க விடுதலைப் போராட்ட ஐக்கியம் (The League of Struggle for the Emancipation of the Working Class)

4.முதலாளித்துவம் எங்கெல்லாம் உச்சத்தில் இருக்கிறதோ, அங்கெல்லாம் இது போன்ற பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதைத் தவிக்க இயலாது என்பதை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினார்.(இப்போதைய அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி இது தான் காரணமோ !!)

5.லெனினை ஏற்றுக் கொண்டவர்கள் போல்ஷ்விக்குகள் என்றும், எதிர்ப்பவர்கள் மென்ஷ்விக்குகள் என்றும் அழைத்தனர். முதல் உலகப் போரை வெளிப்படையாக எதிர்த்தவர் லெனின்.

6.ஜார் ஆட்சிக்கு பிறகு ஸ்டாலின் தலைமையில் செம்படை (Red Army) அமைத்தார் லெனின்.

7.மொத்தம் 15 கோடி ஹெக்டேர் நிலம் பறிமுதல் செய்யப்பட்டு, குடியானவர்களுக்கு பிரித்துக் கொடுத்து நில புரட்சியை ஏற்ப்படுத்தினார்.

8.மார்ச் 21, 1921 புதிய பொருளாதாரத் திட்டம் (New Economic Policy) நடைமுறைக்கு வந்தது.

ஒரு முறை லெனினை, பன்யா கப்லான் (Fanya Kaplan)என்ற பெண் கொலை செய்ய முயற்சிக்க அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இது எல்லாவற்றிக்கும் மேலாக லெனின் மரணத்தின் போது பேசிதாக கீழ் கண்ட வாசகங்கள் எழுதியது மிகவும் அருமை.

லெனின் மரணத்தின் போது……

நண்பர்கள் கருத்து :
லெனின் நினைவுகள் போது. உடல் வேண்டாம்

எதிரிகள் கருத்து :
லெனினின் நினைவுகள் கூட ஆபத்தானவை. அவர் உடல் அதை விட ஆபத்தானது. எரித்துவிடுங்கள்.

மக்கள் கருத்து :
தோழர் லெனினின் நினைவுகள் வேண்டும். தோழர் லெனினும் வேண்டும்.

அடுத்த இரண்டு மாதங்கள் எந்த கம்யூனிஸ புத்தகங்கள் படிக்க கூடாது என்ற கட்டுப்பாட்டில் இருந்த போது... என் கண்ணில் 'மாவோ' புத்தகம் கண்ணில் பட்டது. நல்ல வேளை வாங்க என் கையில் பணமில்லை. கிரடிட் கார்ட் அந்த புத்தகக்கடையில் வாங்க மாட்டார்களாம். தப்பித்தேன். இன்னும் என் விரதத்திற்கு ஒரு மாதம் இருக்கிறது.

மருதன்.
விலை- 70, பக்கங்கள்- 174
கிழக்கு பதிப்பகம்.

மோதிப் பார் ! : ஹியூகோ சாவேஸ்

இந்த நூலை படிக்கும் வரை ஹியூகோ சாவேஸ் யார் என்று கூட எனக்கு தெரியாது. ஆனால், இப்போது இவருக்கு ஒரு ரசிகர் மன்றமே அரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த நூலை படித்த பிறகு சாவேஸ் பற்றி நான் தெரிந்துக் கொண்ட விஷயங்கள் :- எந்த வித புரட்சியிலும் இறங்காமல், கெரில்லாத் தாக்குதல் நடத்தாமல் தேர்தல் மூலமாக தான் ஆட்சியை பிடித்தார். பின்தங்கியிருந்த தனது நாட்டை வளரும் நாடாக மாற்றியவர். இருப்பத்தோராம் நூற்றாண்டில் புரட்சிக்கு வேறு கோணத்தை கொடுத்தவர்.




இவர் துணிச்சலை பற்றி இரண்டு சம்பவங்களை சொல்லியாக வேண்டும்.
1.ஐ.நா சபையில் பூஷ்யை “சாத்தான்” என்று தைரியமாக விமர்சித்தவர் ஹியூகோ சாவேஸ் அவர்கள். ஐ.நா.வை பேசாமல் ஜெரூசலமுக்கோ அல்லது வேறு ஒரு வளரும் நாட்டுக்கோ மாற்றிவடலாம் என்று யோசனை கூறியவர்.
2."மூன்று வேளை உணவு கிடைக்காமல் எத்தனையோ அமெரிக்கர்கள் சிரமப்படு கொண்டு இருக்கிறார்கள். மருத்துவ வசதி எல்லோருக்கும் கிடைக்கவில்லை. எத்தனையோ எழைகள் வீடில்லாமல் அலைந்துக் கொண்டு இருக்கிறார்கள். இத்தனை இருக்கு அமெரிக்க 500 மில்லியன் டாலர் பணத்தை ஆயுதம் வாங்க செலவு செய்கின்றது. இந்த பணத்தை மிச்சம் பிடித்தால் அமெரிக்காவில் உள்ள ஏழைகள் மட்டுமல்ல, ஆப்ரிக்காவில் உள்ள ஏழை மக்கள் மறுவாழ்வு பெறுவார்கள்" ஒரு பேட்டியின் போது கூறினார்.

இந்த புத்தகத்தை எடுத்து படித்த முக்கிய காரணம், இதன் மேலட்டையில் காஸ்ரோவுக்கு அடுத்த லத்தின் அமெரிக்க தலைவர் என்று குறிப்பிட்டதால் தான். இவர்கள் இருவரும் சேர்ந்து ரேடியோ நிகழ்ச்சியில் ஒன்றாக பாடினார் என்று படிக்கும் லத்தின் அமெரிக்கர்களின் ஒற்றுமையை காட்டுகிறது. லத்தின் அமெரிக்கா நாடுகளில் இருக்கும் வளங்களை உட்கார்ந்து நின்று அழித்த பெருமை அமெரிக்காவை எதிர்க்கும் இன்னொரு நாயகன் தான் ஹியூகோ சாவேஸ் .

ஒரு நாடு வளர்கிறது என்றால் அமெரிக்கர்களுக்கு வயறு பத்திக் கொண்டு எரியும். காஸ்ட்ரோவுக்கு பிறகு ஹியூகோ சாவேஸ் விஷயத்தில் அமெரிக்காவுக்கு இரத்த கோதிப்பே வந்திருக்கும் என்று நினைக்கிறேன். தன் உள்நாட்டு கலவரத்திற்கு அமெரிக்கா தான் காரணம் என்று ஆதாரத்துடன் நிருப்பித்துள்ளார் (பூஷ் அரசு சாவேஸ் அரசை கவிழ்க்க சி.ஐ.ஏ ஏஜென்டுக்களான எலியட் ஆப்ரம்ஸ் (Eliot Abrams) மற்றும் ஓட்டோ ரிச் (Otto Reich) நியமித்துள்ளனர்). ஹியூகோ சாவேஸ் கொல்ல யோசனை சொன்னவர் ரிவரெண்ட் பாட் ராபர்ட்ஸன் (அமெரிக்க பாதரியார்)

இவரை பற்றி சுவையான சில தகவல்கள் :

1.ஜூலை 24,1983, பொலிவரின் 200வது பிறந்த நாளைக் கௌரவிக்கும் வகையில் MBR 200 (Bolivar Revoltionary Army 200) தொடங்கினார்.
2.La Causa Radical சுருக்கமாக Causa R (1971ல் தொடங்கப்பட்ட இயக்கம்) சாவேஸ் இயக்கத்துடன் இணைந்தது. ஆனால், புரட்சியின் போது இறுதி கட்டத்தின் ஓதுங்கி கொண்டனர். மனம் தளராமல் புரட்சியில் இறங்கி இரண்டு வருடம் சிறை சென்றார்.
3.அரசாங்கம் சந்திக்கும் முதல் பெரும் செலவு இராணுவத்துறை தான். ஆனால், சாவேஸ் தனது இராணுவ வீரர்கள் நாட்டு வளர்ச்சிக்காக பயன் படுத்தினார். மீன் பிடிக்கவும், வீட்டை கட்டிக் கொடுக்கவும், பள்ளிப் பாடம் எடுக்கவும் இராணுவ வீரர்கள் உதவியாக இருந்தனர்.
4.நில சீர்திருத்த சட்டத்தால் 21 நபர்கள் 612289 ஹேக்டேர் நிலத்தை சுருட்டி இருப்பதை கண்டு பிடித்து, அந்த இடங்களை எல்லாம் அரசுக்கு சொந்தமாக்கினார்.
5.வளைகுடா போருக்கு பிறகு சதாமைச் சந்தித்த ஒரே தலைவர் இவர் தான். அவர் வேண்டுக்கொள்ளை ஏற்று OPEC அமைப்பு 25 டாலர் விலையில் இருந்து 60 டாலராக உயர்த்தியது.
6.காஸ்ட்ரோவை முன்னோடியாக கொண்டு ஆட்சி செய்தாலும் இவர் கம்யூனிஸ்ட் இல்லை.
7."மீனுக்கு தண்ணீர் ; இராணுவத்துக்கு மக்கள் " – மாவோ வழி நடப்பவர்.

தன் நாட்டையும் கவனித்துக் கொண்டு அமெரிக்கவையும் சமாளிக்கும் ஒரு போராளியின் வாழ்க்கையை மருதன் அவர்கள் நன்றாக எழுதியுள்ளார். ஒவ்வொரு அரசியல்வாதிகளும் ஹியூகோ சாவேஸ் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும்.


மருதன் : பக்கங்கள் :126
விலை.60. கிழக்கு பதிப்பகம்

கமான் அப்புசாமி கமான் !

ஜ.ரா. சுந்தரேசம் இயற்பெயர் கொண்ட பாக்கியம் ராமசாமி அவர்கள் குமுதம் பத்திரிக்கையில் 37 ஆண்டுகளாக உதவி ஆசிரியராகவும், துணை ஆசிரியராகவும் பணிபுரிந்துவர். அப்புசாமி - சீதாப்பாட்டி கதாப்பாத்திரங்கள் பெற்றி பேசினாளே எழுதியவர் பாக்கியம் ராமசாமி தான் என்று எல்லோருக்கும் தெரியும். இந்த கதாப்பாத்திரங்களின் நகைச்சுவை அந்த அளவிற்கு பிரபலம்.

தமிழில் நகைச்சுவை கதைகள் பற்றி ஆய்வு செய்ய நினைத்தால், அதில் நிச்சயம் பாக்கியம் ராமசாமி அவர்கள் எழுதிய நூல்கள் இடம் பெற்று இருக்கும். ஒவ்வொரு கதையிலும் அப்புசாமியை வறுத்து எடுப்பதும், சீதாப்பாட்டி ஆங்கில கலந்த தமிழ் பேசுவதும் நமக்கு சிரிப்பு வர வழைக்கிறது. பீமாராவ், கீதாப்பாட்டி, வித்தைக்காரன், பட்லர், உஸ்காத்கான் என்று ஒவ்வொரு கதைகளிலும் ஒரு காதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தி படிப்பவர்களை சிரிக்க வைக்கிறார்.

இந்த நூலில் எனக்கு மிக பிடித்த நகச்சுவை கதை அப்புசாமி வித்தைக்காரனிடம் மாட்டி கொண்டு தவிக்கும் கதை தான். வித்தைக்காரன் தன் கையில் இருக்கும் காகிதத்தை அப்புசாமி கொண்டு பதில் சொல்ல வைப்பது படு ஜோரான காமெடி. இன்னொரு கதையில், இசை கச்சேரியில் அப்புசாமி ஏப்பம் விடும் போது இசை கலைஞர் உஸ்காத்கான் கீழ் ஸ்தாயியை தொட்டுக்காட்டி பாட உதவியதாக கூறுவது நகைச்சுவை ப்ளஸ்.

பட்லருடன் ஒப்பந்த காகிதத்தில் மாட்டுக் கொண்டு அப்புசாமி தவிக்கும் போதும், அதை சீதாப்பாட்டி தன் புத்திசாலி தனத்தால் மீட்பதும் சூப்பர். வெள்ளித்திரையில் வடிவேலு மாட்டிக் கொள்வது போல் அப்புசாமியும் அடிக்கடி மாட்டிக் கொள்கிறார். ஆனால், அப்புசாமி அடிவாங்குவதற்கு முன் சீதாப்பாட்டி காப்பாற்றி விடுகிறார்.

மேலும், அப்புசாமி நகைச்சுவை கதைகளை பற்றி தெரிந்துக் கொள்ள www.appusami.com இணையத்தளத்தை பாருங்கள்.

பாக்கியம் ராமசாமி,
விலை.45, பக்கங்கள் : 186
பூம்புகார் பதிப்பகம், சென்னை - 108

ஒரு கல்கோனா / இரண்டு கமர்கட்டு :  யுகபாரதி.நில் நிதானி காதலி : யுகபாரதி பார்வையில்

அ.

அரைகிலோ கத்திரிக்காய், நூறு கிராம் துவரம் பருப்பு, இருநூறு கிராம் நல்லெண்ணெய், எட்டணாவுக்கு பச்சை மிளகாய், கொசுறாகக் கருவேப்பிலை, கொத்தமல்லித் தளை. இந்தப் பட்டியலோடு கடைக்குப் போய் பொருள் வாங்கி வந்ததுண்டு. எதற்காக இதை அம்மா வாங்கி வரச் சொன்னாள் என புத்தியால் யோசித்ததில்லை. யோசித்தாலும் சமைப்பதற்கென்று மட்டும் நினைக்கத் தோன்றும். அரைகிலோ கத்திரிக்காய்க்குப் பதிலாக ஒருகிலோவோ, நூறு கிராம் துவரம் பருப்புக்குப் பதிலாக ஐம்பது கிராமோ வாங்கத் தோன்றுவதில்லை. எனில் அம்மாவின் கட்டளையை அது மீறுவதாகும்.

காதல் கவிதைகளை வாசிப்பதிலும் எனக்கு இந்த மாதிரியான ஒரு அணுகுமுறை தான். எழுதியவனின் கட்டளையை மீறியோ, குறைத்தோ யோசிக்கத் தோன்றவில்லை. திருமணத்துக்குப் பிறகும் சேவியர் எழுதுகிற காதல் கவிதைகள் யாரைத் திருப்திப்படுத்துமோ ? எந்தெந்த அளவுக்கு எதை எதை சேர்க்க வேண்டுமென்கிற பக்குவம் தெரிந்த அம்மா போல எதற்கு எழுதுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். எத்தனையோ கவிதைகள் எழுதிவிட்ட பிறகும் காதலின் தொடக்கம் கவிதையில் மையம் கொள்கிறது. தெற்கத்தி சமையலில் கடுகுபோல பொரியும் சத்தமே பிரதானம் இலக்கியப் பசிக்கு.

ஆ.

மூணு பேண்ட், எட்டுச் சட்டை, இரண்டு போர்வை, ஒர் பட்டுப்புடவை மொத்தம் சலவை செய்த துணிக்கு முப்பது ரூபாய். முன்பிருந்த பாக்கியை சேர்த்து அறுபத்தி ஏழு ரூபாய். துண்டு சீட்டில் எழுதி வருகிற சலவைக்காரரிடம் நான் அல்லது நாம் கேட்பதில்லை. ஒரே தொழிலைச் செய்வதில் அலுப்பு வரவில்லையா ? வந்தாலும் இதை அவன் செய்யவே வேண்டும் எனில் அது அவனது ஜீவனம். இல்லாவிட்டால் வாழ முடியாது. கவிதை எழுதாவிட்டால் செத்து விடுவோமோ சேவியர் ? எழுத முடியாமல் போனதற்காக தற்கொலை செய்ததுண்டா யாராவது ?

இ.

கடுமையான காய்ச்சல். குமட்டலெடுக்கிறது. தலைபாரம். தூக்கம் வரவில்லை. மருத்துவரிடம் எதற்காகப் புலம்புகிறோம் ? மருந்து உண்டு எனத் தெரிந்தும் உடம்பு சரியில்லை என்பதற்காக ஏன் ? எதற்காகத் துக்கப் படுகிறோம் ?காதலித்தவள் வராது போன துக்கம் மறு நாள் வருகையில் தீரும் தான். எனினும் எதற்காகக் குமைகிறோம் ?

தெரிந்தும் தெரியாமலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
புரிந்தும் புரியாமலும் தவித்துக் கொண்டிருக்கிறோம்
வருந்தியும் வருந்தாமலும் இந்த வாழ்வை ரசித்துக் கொண்டிருக்கிறோம்.
வாழ்க்கை காதலைப் போல வாட்டம் கவிதையைப் போல.



நிற்பதற்குள் நிதானமிழந்து விடுகிறது காலம். நினைப்பதற்குள் நெருங்கி வருகிறது மெளனம். மெளனமும் காலமும் இரட்டைக் குழந்தைகள். காதல் மெளனம், கவிதை காலம்.

காதலையும் நேரத்தையும்
வைத்து
நிறையக் கவிதைகள்.
எனக்கு
அதற்குக் கூட நேரமில்லை
உன்னைச் சந்தித்தபின்.

பரீட்சைக்குப் பணம் கட்டணும்பா, இன்றைக்குத் தான் கடைசி தேதி கட்டாட்டி பரீட்சை எழுத முடியாது. வாத்தியார் வீட்டுக்கு அனுப்பிச்சிருவார். வறுமை கல்வியைத் தின்கிறது. கல்வி பொறுமையிடம் வம்பு செய்கிறது. காலத்தால் மானப் பெரிது என்பது பரீட்சையின் போது எழுதுகோலுக்கு மை கொடுப்பது என்றார் என் வாத்தியார். மை அன்பு, எழுதுகோல் கவிதை. சேவியரிடம் இருக்கிறது காதலுக்கான கவிதைகள் நிரம்பி வழியும் நீரூற்று.



காளிமார்க் சோடா, ஒரு எலிமிச்சை அல்லது கொஞ்சம் உப்பு, இஞ்சி டீ, வசதியிருப்பின் ஸ்பெஷல் டீ, ரோட்டுக்கடையில் ரெண்டு புரோட்டா கூடவே ஆம்லெட், மிளகு தூவிய ஆகப்பாயில் , உணவு செரிக்க ஒரு வாழைப்பழம் - எந்த நேரத்தில் எது பிடிக்கும் ? பரிமாறுபவரிடம் பட்டியல் கேட்டு அடுத்த நொடியே ஆணையிடுகிறோம். எல்லாவற்றிலும் பிடிப்பதல்ல இருப்பவற்றில் பிடித்த அணுகுதல் அது. போலவே தான் வாழ்க்கை. கிடைத்தது உண்டு, கிடைத்ததை நினைத்து, கிடைப்பதோடு கழிகிறது நாள். கவிதை அவ்விதமில்லை. நினைப்பதைக் கிடைக்கச் செய்வது, உண்பதை வரவழைப்பது, கழிப்பதற்காக உருவாக்குவது.
வலிமையில்லாமல் எதுவும் சாத்தியமில்லை பூமியில்; கவிதையைத் தவிர. சேவியரின் கவிதைகள் மென்மையை ஆடையாக, முகப் பூச்சாகக் கொண்டிருக்கின்றன. இந்த மென்மை எத்தகையது ? குழாய் நீரின் வேக சத்தத்திற்கும் பயந்து விடுகிற மென்மை. தமாதமானாலும் நிதானமாகச் செயல்படுகின்ற காதல்.



இறுதியாக சேவியரின் கவிதைகள் படித்து நான் போடும் பட்டியல் . பத்து கிலோ சர்க்கரை, பதினாறு குடுவை தேன், முப்பது கிலோ கற்கண்டு, இருபத்தியாறு கிலோ நாட்டு வெல்லம், ஒரு கிலோ பாதாம் பருப்பு , நூற்றி எட்டு ரூபாய் முந்திரிக்காய், மேல் தூவ பதப்படுத்திய திராட்சை, வாசத்துக்கு ஏலக்காய். இத்தனை சேர்த்தும் தெவிட்டாதக் காரணம் அது காதலாயிருக்கிறது. காதலோடு இருக்கிறது. காதலை உடுத்தி, காதலைத் தேடி கண்ணாமூச்சி ஆடுகிறது. இவை எனக்குப் பிடிப்பதற்கு நிறையக் காரணமுண்டு.

சேவியரின் அன்புக்கு என்னைப் பிடிக்கிறது.
எதையும் காப்பாற்றுபவருக்குத் தான் சேவியர் என்று பெயர்
நிறைய பிரியமுடன்
யுகபாரதி

பின் குறிப்பு : நில், நிதானி, காதலி என்னும் எனது கவிதை நூலுக்காக யுகபாரதி எழுதிய முன்னுரை இது. சுவாரஸ்யமாக இருந்ததால் இங்கே பதிவு செய்கிறேன் ?

இந்த ஆண்டின் சிறப்பான தமிழாக்கம்? - http://www.nagorerumi.com/?p=47

கேண்டீட். வோல்ட்டேர். நாவல். ஆங்கிலம் வழி தமிழில்: பத்ரி சேஷாத்ரி. முதல் பதிப்பு ஆகஸ்ட் 2008. 160 பக்கங்கள். விலை ரூபாய் 100/-.

வோல்ட்டேர். ஆங்கில இலக்கியம் படிக்கும் காலத்தில் அடிக்கடி உச்சரிக்கப்பட்ட பெயர். ஃப்ரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டவர். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோஷத்தின் தந்தை என்றெல்லாம் சொல்வார்கள். எல்லாம் கேள்விப்பட்டதுதான். ஆனால் வோல்ட்டேரைப் படித்ததில்லை. ஒரு டிகிரி வாங்குவதற்காக ஆங்கில இலக்கியம் படிக்கும் காலத்தில்  உண்மையிலேயே ஆங்கில இலக்கியம் படித்தவர்கள்தான் யார்?! அதுவும் வோல்ட்டேர் ஃப்ரெஞ்சு இலக்கியவாதி. யார் படிப்பார்கள்? எனவே நான் படிக்காதது ஒன்றும் ஆச்சரியமில்லை. (படிக்கின்ற காலத்தில் படிப்பவர்களும் உண்டுதான். ஆனால் அவர்கள் விதிவிலக்குகள். நான் ‘மெயின் ஸ்ட்ரீம்’ மாணவன். தேசிய நீரோட்டத்தில் கலப்பதில்தான் எனக்கு விருப்பமிருந்தது. நானாக விரும்பி தேர்வுக்கு இல்லாத நாவல்களையும், நாடகங்களையும் படித்தது வேறு கதை).

சரி போகட்டும். இப்போது அதற்கு என்ன வந்தது என்கிறீர்களா? வந்துதான் விட்டது. நேற்று பத்ரி அவர் மொழிபெயர்த்த வோல்ட்டேரின் காண்டீட் நாவலைக் கொடுத்து படிக்கச் சொன்னார். வீட்டுக்கு வந்து படிக்க ஆரம்பித்தேன். ஒரே மூச்சில், ஒரே வீச்சில் படித்து முடித்து விட்டேன்!

ரொம்ப வருத்தமாக இருந்தது. வோல்ட்டேரை முன்னாலேயே படிக்காமல் இருந்துவிட்டேனே என்று.

நாவலில் கதை என்று பெரிசாக ஒன்றுமில்லை. இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லாமல் உள்ளது. கதை இங்கே முக்கியமில்லை. கதை சொல்லப்படும் விதமும், கதையின் ஊடாக சொல்லப்படும் விஷயங்களும்தான் அதி முக்கியமானவை. கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னதாக இது எழுதப்பட்டது என்பதை நம்பவே முடியவில்லை. தமிழில் எழுதுபவர்கள் கற்றுக் கொள்ள நிறைய, நிறைய இருக்கிறது இந்த நாவலில்.

கேண்டீட் என்ற ஒரு அப்பாவி ஒரு உயர் குடிப்பெண்ணைக் காதலித்து — இந்தக் காதல் விஷயத்தை முதன் முதலில் விவரிக்கும் விதமே அற்புதமாக உள்ளது — பின் நாட்டை விட்டு விரட்டப்பட்டு, ஊர் ஊராக, நாடு நாடாகச் சுற்றி அலைவதுதான் கதை. ஒவ்வொரு நாட்டிலும் என்ன நடக்கிறது? கேண்டீடின் மனதில் இருக்கும் அப்பாவித்தனத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றும் விதத்தில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

மதத்தின் பெயரால், அதிகாரத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளையும் வன்முறையும் அக்கறையற்ற ஒரு தொனியில் இந்த நாவல் விவரிக்கிறது. குறிப்பாக ‘இன்க்விசிஷன்’ என்ற பெயரில் தன் நம்பிக்கைகளோடு ஒத்துப் போகாதவர்களை சித்திரவதைப் படுத்தியது, எரித்தது, தூக்கில் போட்டது போன்ற விஷயங்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால், இந்த நூலின் பின் அட்டையில் சொல்லி இருப்பது மாதிரி,  மனித நேயத்துக்கு எதிரான கொடுமைகள். வழிநெடுகிலும் கொடுமைகள். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது ரயில் பெட்டிகள் முழுவதிலும் பிணங்களாக இருந்தது போல.

ஆனால் இந்த எல்லாவற்றையுமே சொல்லிச் செல்லும் விதம்தான் வோல்ட்டேரின் சிறப்பாக இருக்கிறது. குழந்தைகளுக்குக் கதை சொல்லும் பாணி, அங்கதம், கேலி இவற்றோடு அசாத்திய எளிமை கலந்து இந்த நாவல் எழுதப்பட்டடுள்ளது. எனக்குத் தெரிந்து பெரிய விஷயத்தை மிக எளிமையாகக் கிண்டல் செய்து எழுதியவர் ஜார்ஜ் ஆர்வெல். அவருடைய Animal Farm என்ற நாவல் கம்யூனிசத்தின் மீது வைக்கப்பட்ட மிகக்கடுமையான விமர்சனம். ஆனால் ஒரு குழந்தைகூட விரும்பிப் படிக்கும் விதத்திலும், அதே சமயம் எடுத்துக் கொண்ட விஷயத்தின் கனத்திற்கு எந்தக் குந்தகமும் வந்துவிடாமலும் அந்த நாவல் எழுதப்பட்டிருக்கும். வோல்ட்டேரின் காண்டீன் படித்ததும் எனக்கு அதுதான் ஞாபகம் வந்தது.
எளிமையாகவும் கேலியாகவும் எழுதியுள்ளார் என்று சொன்னால் அது சரியல்ல. அங்கதச் சுவையின் தந்தை என்று வர்ணீக்கலாம். அப்படிப்பட்ட கிண்டல். வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்த்தை, வாக்கியத்துக்கு வாக்கியம். இப்படிக்கூட ஒருவரால் எழுத முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருந்தது.

ஒவ்வொரு அத்தியாயம் தொடங்குமுன் ஓரிரு வாக்கியங்களில் அதன் சுருக்கம் சொல்லப்படும். பொதுவாக ஒரு கேள்வியுடன்.  உதாரணமாக, “ஓர் அற்புதமான கோட்டையில் வாழ்ந்து வந்த கேண்டீட், அங்கிருந்து துரத்தப்பட்டது எதனால்?” என்ற கேள்வியுடன் துவங்குகிறது முதல் அத்தியாயம். இப்படியே ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒரு சுருக்கக் கேள்வி கொடுக்கப்படுகிறது. (மொத்தம் 30 அத்தியாயங்கள். அத்தியாயம் ஒவ்வொன்றும் பெரும்பாலும் இரண்டு மூன்று பக்கங்களுக்குள் முடிந்துவிடுமாறு அமைத்திருப்பது இன்னொரு சிறப்பு).

ஜமீந்தாரின் சகோதரிக்கும் ஒருவனுக்கும் ஏற்பட்ட கள்ளத் தொடர்பில் பிறந்தவன் கேண்டீட். ஆனாலும் அவனைத் திருமணம் செய்து கொள்ள அவள் மறுத்துவிடுகிறாள். ஏன் தெரியுமா?

அந்த ஆளின் பூர்வீகத்தில் 71 தலைமுறைக்கு மட்டுமே உயர்குடி ரத்தம் இருந்ததாலும், பிற பூர்வீகம் பற்றிய தகவல் காலத்தால் அழிந்துபோனதாலும், ஜமீந்தாரின் சகோதரி அவரை மணக்க மறுத்துவிட்டாராம் (பக்கம் 7).

ஜமீந்தார் குடும்பம் பற்றி:

ஜமீந்தார்…பகுதியிலேயே பெரிய மனிதர். ஏனெனில் அவரது கோட்டையில் கதவுடன் ஜன்னல்களும் இருந்தன..ஜமீந்தாரின் மனைவி 350 பவுண்டு எடை கொண்டவர். அதனால் கனம் பொருந்தியவர்.(8)

ஜமீந்தாரின் மகள் குனிகொண்டே ஒருநாள் அவர்களின் குலகுரு பாங்க்லாஸ் என்பவர் தன் அம்மாவின் வேலைக்காரியை ஒரு புதர் மறைவில் புணர்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறாள். அது எப்படி எழுதப்படுகிறது தெரியுமா?

குனி கொண்டே ஒருநாள் கோட்டைக்கு அருகிலிருந்த காட்டில் நடந்து வந்தபோது, பக்கத்தில் புதர் மறைவில், தனது தாயின் மிக அழகான, மிகச்சாதுவான வேலைக்காரி ஒருத்திக்கு, டாக்டர் பாங்க்லாஸ் இயற்கைத் தத்துவத்தில் பாடம் நடத்திக் கொண்டிருப்பதைக் கவனித்தாள். குனிகொண்டேவுக்கு அறிவியலில் நாட்டம் இருந்ததால், மீண்டும் மீண்டும் தொடரும் அந்தப் பரிசோதனைகளைச் சத்தம் எழுப்பாமல் பார்த்தாள். டாக்டர் பாங்க்லாஸின் காரணங்கள், விளைவுகள், காரியங்கள் ஆகியவற்றின் பின்னணியில் இருந்த தாக்கத்தைப் புரிந்து கொண்டாள்…தனக்கு கேண்டீடும், அவனுக்குத் தானும் சரியான காரணமாக இருக்கக் கூடும் என்று எண்ணினாள். (பக் 9).

அதன்பிறகு கேண்டீடும் குனிகொண்டேயும் காதலில் இணவதை ஜமீந்தார் பார்த்துவிடுகிறார். “காரணத்தையும் காரியத்தையும் நன்கு புரிந்துகொண்டு, கேண்டீடின் புட்டத்தில் நான்கு உதை கொடுத்து அவனைக் கோட்டையிலிருந்து துரத்தினார்” (பக் 1). இனிமேல் காரண காரியம் என்ற வார்த்தையைக் கேட்டாலோ பார்த்தாலோ சிரிப்புதான் வரும்.

தப்பித்துச் சென்ற கேண்டீட் பசி மிகுதியால் ஒருவனிடம் உணவு பிச்சை கேட்கிறான்.  அப்போது நடக்கும் உரையாடல்.

நண்பனே, போப், ஒரு சாத்தான் என்பதை நீ நம்புகிறாயா?

அப்படி நான் கேள்விப்பட்டதில்லை. அவர் அப்படி இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? எனக்குத் தேவை உணவு என்றான் கேண்டீட்.

நீ சாப்பிடுவதற்கே லாயக்கற்றவன். ஓடிப்போ பொறுக்கியே என்றார் அவர் (பக் 17).

குறிப்பிட்ட கொள்கைகளையும் கோட்பாடுகளையும் திணிப்பதற்கு பசியைக்கூட அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற விமர்சனத்தை இதைவிட சிறப்பாகச் சொல்லமுடியுமா என்ன?

தன் காதலி மூலமாக பால்வினை நோயைப் பெற்றுக்கொண்ட பாங்க்லாஸ் அதைப்பற்றி கேண்டீடுக்கு விளக்குகிறார். கிட்டத்தட்ட ஒரு பாரா முழுக்க, யார் யாரிடமிருந்து யார் யார் பெற்றார்கள், அதை மற்றவர்களுக்கு எப்படிப் பரப்பினார்கள் என்று பட்டியல் கொடுக்கிறார்!  ஜமீந்தாரின் வேலைக்காரியிடமிருந்து அவருக்கு, ஒரு பாதிரியாரிடமிருந்து அவளுக்கு, பாதிரியாருக்கு ஒரு கிழட்டு ஜமீந்தாரினியிடமிருந்து, அவளுக்கு ஒரு ராணுவ கேப்டனிடமிருந்து, அவனுக்கு இன்னுமொரு ஜமீந்தாரினியிடமிருந்து, அவளுக்கு ஒரு வேலைக்காரனிடமிருந்து, அவனுக்கு ஒரு ஜெசுயிட் பாதிரியிடமிருந்து (!) — இப்படிச் செல்கிறது பட்டியல்.அதுபற்றி கேண்டீடின் அப்பாவித்தனமான கருத்து:

ஓ பாங்க்லாஸ், இந்த நோய்க்குத்தான் என்னதொரு கண்ணியமான பரம்பரை! (பக். 21). ஒழுக்கம் கெட்ட சமுதாயத்தின் மீதான சாடல்தான் எவ்வளவு எள்ளலும் துள்ளலுமாக உள்ளது!

எல்டொராடோ என்ற இலட்சிய ஊரின் விவரணை:

அவர்கள் ஒரு சாதாரண வீட்டை அடைந்தனர். அதன் கதவு வெறும் வெள்ளியால் செய்யப்பட்டிருந்தது. கூரை வெறும் தங்கத்தால் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. ஆனால் மிகவும் அழகான வேலைப்பாடுடன், பணக்கார வீடுகளுக்கு இணையாக இருந்தது. (பக்.80).

“என்ன, இங்கே பாடம் நடத்த, சண்டை போட, ஆள, சூழ்ச்சி செய்ய, ஒத்த கருத்தில்லாதவர்களை எரிக்க பாதிரியார்களே இல்லையா? (பக். 83)

ஹோமரின் இலியட் பற்றிய விமர்சனம் ஓரிடத்தில் வருகிறது. பண்டைய இலக்கியங்களை எவ்வளவு அறிவுப்பூர்வமாக வோல்ட்டேர்  அணுகியிருக்கிறார் என்பதை அது காட்டுகிறது:

ஒன்றைப்போலவே இன்னொன்றும் இருக்குமாறு திரும்பத் திரும்ப வரும் சண்டைகள், எதையும் தெளிவாகச் செய்யாமல், ஆனால் எப்போதும் எதையாவது செய்து கொண்டிருக்கும் கடவுள்கள், சண்டைக்குக் காரணமாக இருக்கும் ஹெலன் எங்குமே காட்சிக்குள் வராமல் இருப்பது, வெகுகாலமாக முற்றுகை இடப்பட்டிருந்தாலும் கைப்பற்றப்படாமல் இருக்கும் ட்ராய் நகரம் — இவையெல்லாம் சேர்த்து எனக்கு கடுமையான அலுப்பைத் தந்தன (பக். 131.)

மறுக்க முடியாத கேள்விகள்.

பத்ரியின் தமிழாக்கம்

தமிழாக்கம் ரொம்ப யோசித்து அக்கறையுடன் செய்யப்பட்டிருக்கிறது. உதாரணமாக இன்க்விசிஷன் என்பதை மதமிரட்டல் கட்டப்பஞ்சாயத்து (27) என்பதையும் காட்மதர் என்பதை ப் (காட்மதர்) என்பதையும் குறிப்பிடலாம். ஒரு இடத்தில் போடாங்கோத்தா (26) என்று வருகிறது. ஆங்கிலத்தில் என்ன வார்த்தை ப்யன்படுத்தப்பட்டிருந்தாலும் சரி, இந்த இடத்தில் அப்படிச் சொல்வதுதான் சரி. உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு செய்யப்பட்ட தமிழாக்கமாக இருப்பது இதன் சிறப்பு என்று சொல்வேன். நண்பர் பத்ரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எனினும் சில கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன. பாப்ட்டிஸம் செய்யாத என்பதை ஞானஸ்நானம் செய்யாத’ என்று போட்டிருக்கலாம். வன் புணர்ந்தபின் என்று ஒரு இடத்தில் அல்லது சில இடங்களில் வருகிறது. இப்படி வினைச் சொல்லாக ஒரு பயன்பாடு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. வன் புணர்ச்சி செய்தபின் என்று நானாக இருந்தால் தமிழாக்கம் செய்திருப்பேன். ஒரே ஒரு இடத்தில் ஹம்மிங் பேர்ட் என்று வருகிறது. அதையும் ஹம்மிங் பறவை என்று மாற்றலாம். (தப்பித்து வந்துவிட்டது என்று நினைக்கிறேன்).

ஒரு இடத்தில் அவருக்கு சிறிய வயதானபோது (பக் 21) என்று வருகிறது. இது எப்படி சாத்தியம்? ‘பெரிய வயதானபோது’ என்றால் சரி, எப்படி ஒருவருக்கு சிறிய வயதாகும்? ‘அவருடைய சிறிய வயதில்’, அல்லது ‘அவர் சிறியவராக இருந்தபோது’, இப்படி ஏதாவது இருந்திருக்கலாம். ஆங்கில மூலத்தை நான் ஒப்பிட்டுப் பார்க்கவில்லை. எனினும் இதுபற்றி பத்ரி விளக்கம் சொல்லலாம். போப் அர்பன் 10-க்கும். (பக் 45) என்பது பத்தாவது போப் அர்பனுக்கும் என்று இருந்திருக்கலாம்.

நல்ல மொழிபெயர்ப்பின் ஒரு அம்சம் என்னவெனில், சில வார்த்தைகளை மொழிபெயர்க்காமல் விட்டுவிடுவதுதான். ஆமாம். அதையும் தமிழ்ப்படுத்தியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செய்வது தமிழைப் படுத்துவதாகிவிடும். அந்தத் தப்பை இதில் பத்ரி செய்யவே இல்லை. ஜெசுயிட், லீக் போன்ற சொற்களை அப்படியே அவர் பயன்படுத்தியிருப்பதுதான் சரி,  அவைகளைத் தமிழாக்கம் செய்ய எண்ணினால் அது அபத்தமாகிவிடலாம்.

மிகச் சிறப்பாக உள்ளது. எந்த இடத்திலும் நெருடல் இல்லை. நீரோட்டமாகவே செல்கிறது. அன்று கூட்டத்தில் பேசிய சாரு நிவேதிதா தமிழில் மொழிபெயர்ப்புகள் திருப்திகரமாக இல்லை என்று குறைபட்டுக் கொண்டார். (அப்போது பத்ரி என்னைப் பார்த்து புன்னகைத்தார். அது எனக்குக் கிடைத்த விருது). அவருக்குக் கொடுக்கப்பட்ட நினைவுப் பரிசில் இந்த நூலிம் இருந்தது என்று நினைக்கிறேன். இதைப் படித்த பிறகு அவர் தன் கருத்தை மாற்றிக் கொள்ளலாம்.

பிரெஞ்சு இலக்கியத்திலேயே மிக அதிகமாக கல்லூரிப் பாடமாக வைக்கப்பட்டிருக்கும் புத்தகம் இதுதான் என்கிறது முன்னுரை. வைக்க வேண்டிய புத்தம்தான்.

நாகூர் ரூமி

http://parisalkaaran.blogspot.com/2008/09/blog-post_20.html?showComment=1221887280000#c1482313142316061259
    //ஃபெவிகாலின் எல்லா விளம்பரங்களும் எனக்கு மிகப் பிடிக்கும். //
O & M நிறுவனத்தின் சீப் கிரியேட்டிவ் டைரக்டர் ப்யூஸ் பாண்டே உருவாக்கியவை அவை. பெரும் புகழ்பெற்ற ஹட்ச் விளம்பரங்களும் இதே நிறுவனத்தின் கைவணனம் தான்.
    //வித்தியாசமான விளம்பரங்களின் (மேலே இருப்பது போல) தொகுப்பு புத்தகம் பற்றிய தகவல்களை லக்கிலுக் போன்ற அத்துறையில் இருப்பவர்கள் தந்தால் மகிழ்வேன்! (கஷ்டப்பட்டு, காசு சேர்த்து வாங்கத்தான்..!)//

   தமிழில் விளம்பரத்துறை குறித்து அறிய போதுமான புத்தகங்கள் இல்லை. இத்துறை எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள கூட ஆங்கிலத்தை தான் நாடவேண்டும். ஆங்கில புத்தகங்களில் நம்ம ஊரு நேட்டிவிட்டி இருக்காது.
    எனக்கு தெரிந்து ரமேஷ்பிரபா இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஜூ.வியில் தொடராக வந்தவை அவை இரண்டும்.

    1) எப்படி ஜெயித்தார்கள்?
    2) விளம்பர உலகம்

    இந்த இரண்டு புத்தகங்களையுமே அவர் கல்கத்தா ஐஐஎம்மில் மாணவராக இருந்தபோது எழுதினார் என்று நினைக்கிறேன். சொல்லிக்கொள்ளும்படி சூப்பராக எல்லாம் இருக்காது :-( இப்போது எழுதினால் கலக்கலாக எழுதுவார். குங்குமம் லாஞ்சிங் கேம்பைனுக்கு அவர் எழுதிய ‘புதுசு கண்ணா புதுசு' தமிழின் மிக முக்கியமான விளம்பரத் தொடர்.

    விளம்பரத்துறை பற்றி அறிய David Ogily எழுதிய Ogilvy on Advertising வாசிப்பது அவசியம். Copywriters manual என்ற இன்னொரு புத்தகம் அற்புதமானது. ஆங்கிலத்தில் நிறைய புத்தகங்கள் இதுபோல உண்டு. நான் குறைந்தபட்சம் 30 புத்தகங்களை(எல்லாமே பெரிய சைஸ் புத்தகங்கள்) டிக்‌ஷனரி துணையோடு வாசித்திருக்கிறேன்.

http://parisalkaaran.blogspot.com/2008/09/blog-post_20.html?showComment=1221887820000#c6302253876634634034
    ராமானுஜம் ஸ்ரீதர் எழுதியிருக்கும் One land One billion minds புத்தகம் Branding குறித்தான அற்புதமான புத்தகம். எளிமையான ஆங்கிலத்தில் நகைச்சுவையாக எழுதப்பட்டிருக்கும். இதை வாசிக்க நமக்கு டிக்‌ஷனரி தேவைப்படாது.

    ஆனால் விளம்பரம் குறித்த போதுமான அறிவு பற்றாதவர்கள் இந்த புத்தகத்தை வாசித்தால் மண்டை காயும் :-)

    நீங்கள் சென்னை வரும்போது Ogilvy on advertising மற்றும் One land One billion minds இரண்டும் தருகிறேன். வாசித்துவிட்டு மறக்காமல் திருப்பி தாருங்கள்.

    Advertising குறித்த புத்தகங்களுக்கு நீங்கள் செலவு செய்ய ஆரம்பித்தால் உங்களுக்கு ஏதாவது சொத்து, பத்து இருந்தால் அதை விற்றுத்தான் செலவழிக்க வேண்டும்.

    நான் நண்பர்களிடம் இரவல் வாங்கி தான் பல புத்தகங்கள் வாசித்தேன்.

வடகரை வேலன் said... http://parisalkaaran.blogspot.com/2008/09/blog-post_20.html?showComment=1221904440000#c1437143368241883156
லக்கி,

அலிக் பதம்ஸீ இந்திய விளம்பரத்துறையில் ஒரு மறக்க முடியாத ஆளுமை.

அவரது double life புத்தகம் படித்திருக்கிறீர்களா? அவர் கிரியேட் செய்த பிராண்டுகள்( லலிதாஜி, சன்லைட், சர்ஃப், லிரில், காமசூத்ரா) பற்றி விளக்கமாக எழுதியிருப்பார்.

அவரை ஒரு எக்ஸெண்ட்ரிக் என்பார்கள். எனக்கு உடன்பாடு இல்லை கலைஞன் என்பவன் கட்டுபாட்டுக்குள் அடங்காதவனே. அவரை ஒரு ரிபெல் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

Saturday, September 13, 2008

The pasha of pulp

With his all-polyester clothes, huge half-tinted glasses, and a rising plume of hair, Rajesh Kumar, a short man approaching 60, looks like he wishes the 1980s had never ended—and not just for its rad fashions.

In that decade, an extended purple patch for Tamil pulp fiction, Kumar held a full-time job and still wrote five novels a month, selling more than 100,000 copies of each. “Somebody called it the Rajesh Kumar Yugam — the Era of Rajesh Kumar,” he explains, with the matter-of-factness of a man who is arguably the most prolific novelist in the world.

The Era of Rajesh Kumar began with a casual college prank. In 1968, when he was studying for his degree in botany, Kumar’s class was asked for fiction contributions for their college magazine. “I had never written a thing in my life, and I didn’t plan to,” he says. “But the boy next to me shouted out and volunteered my name. At the time, I could have murdered him.”

The short story that he submitted reluctantly the next day was the first of more than 2,000 he would go on to write, in addition to more than 1,500 novels. Kumar is, one of his fellow authors says, “the superstar of the Tamil pulp fiction industry”.

In the present age, as original novels begin to dry up and authors direct their talents to the lucrative field of screenplay writing for television and cinema, Kumar is also at the head of a pack of writers that stays faithful to its lurid craft.

The classic Tamil pulp novel runs between 100 pages and 150 pages and is printed on cheap paper as a monthly magazine. In 1987, a novel cost Rs. 2; it now costs around Rs. 25, still a price that can call out to browsers at the corner teashop, retirees, homemakers, train passengers and other devoted readers.

The flavours of this genre are uniformly sensational but otherwise eclectic. They can include the science-fiction thrillers — more fiction than science — of Kumar, the romances of Ramani Chandran, the detective knockabouts of Pattukottai Prabhakar and Suba, the religious tales of Indira Soundara Rajan and the social dramas of Pushpa Thangadorai.

“But many authors have, of late, shifted to writing for films and television,” Kumar says. “Not me, though. I’m allergic to cinema, and I don’t want to move to Chennai. Plus, I find these movie producers highly immoral people.”

His allergies have worked well for his readers, who can still amble down to the teashop or bus station every few weeks to find a new Kumar novel. For those treading water financially, a teashop will even act as an informal lending library, charging Rs. 2 to take a book home for a day or two.

It is heartening that people who cannot afford a Rs. 15 novel are still willing to put down Rs. 2 to read, and Kumar takes no little pride in that fact. “It was us writers who made sure that there were books hanging from shop ceilings instead of shampoo sachets,” he says. We led people to read, he preens — and he more than others, considering his staggering output.

Even in the Rajesh Kumar Yugam, other authors were less staggeringly productive but did just as well. Ramani Chandran, a homemaker, wrote 125 novels in 30 years. “But I type with two fingers, you know,” she says, and even those two fingers are beset by carpal tunnel syndrome. “If I’d been able to type faster, I might have published a novel a month.”

Suresh and Balakrishnan, the two authors writing jointly under the pen name Suba, held full-time bank jobs until 1999, wrote their novels every day till 1am, and sold 70,000-100,000 copies of each of their 40-odd novels per year. “It was all possible — we just had to cut down on our quota of sleep,” Balakrishnan says.

But even as they bemoan losing many readers to television megaserials, Suresh and Balakrishnan have themselves migrated to the promised land of screenplay writing. “Film directors approached us even earlier, but we didn’t want to begin until we’d retired from our banks, simply for stability’s sake,” Suresh says. “Now, we don’t have the time to write fresh stories. We manage maybe six or seven novels a year.”

As authors such as Suba have moved on, they have left huge shoes that are yet to be filled. “It’s very sad that no new writers have come into this field,” Suresh says. “Either they’re not enthusiastic, or they’re lazy — they don’t want to work hard, but they want to see their names on the teashop racks immediately.”

The solution to this sudden drought, on the part of the 10-12 serious pulp publishers who are still in the game, has been to issue reprints of old novels. S. P. Ramu, who publishes Suba and Ramani Chandran under the Super Novels imprint, understands his authors’ dilemma, even if it’s depriving him of fresh fiction.

“It’s human nature — people go where the pay is better,” Ramu says. An author can retain copyright of his work and still earn up to Rs. 30,000 per monthly novel; a marquee author such as Kumar makes even more, although his publisher, G. Asokan, won’t reveal exactly how much that is. “It was four figures back then. It’s five figures now,” is all he’ll say. But it’s still small change in the face of a screenplay pay cheque for a few lakhs.

“You know, even today, when we print new novels, the sales are good — 60,000 or so. It shows there’s still a hunger for that kind of literature,” Ramu says. The reprints sell only 10,000-20,000 copies each. “It’s a profitable business, but there needs to be a revolution in style, in content, in presentation. Otherwise, it’ll just keep getting duller.”

Kumar’s pace of writing, too, has slowed, but only by his steroidal standards. Even today, in a spartan room on the terrace of his large house, he writes 10-12 pages of a new story every day, in perfectly lettered Tamil longhand. “At this pace, I do a novel a month, and some short stories and some serialized stories.”

Every Kumar tale passes through an in-house censor: His wife. “I give her all but the last six pages or so, and ask her to guess the ending,” he says, smiling. “If she gets it wrong, it means the story is a success. Sometimes she even reminds me if I’ve used a particular strategy or plot twist before.”

By his own admission, Kumar’s writing has changed over the years. “Earlier, there would be all sorts of description. The sun rose, the wind blew, that sort of thing,” he says. “Now, nobody has patience for that kind of thing. So I jump right into the action.”

Next to his writing room is the unofficial Rajesh Kumar archive — a little storeroom exploding with his published novels. Books sit in teetering piles on the floor, or cram themselves into shelves. To pick one out, Kumar has to wade gingerly into the room to avoid stepping on books; it’s as if he were walking through a minefield.

A few years ago, when his publisher threw him a party to mark the publication of his 1,000th novel (“Many actors came — T. Rajendar, and also Vijayakanth!”), Kumar began to wonder if he was setting any sort of precedent.

Through a fellow Coimbatore resident — a gentleman whose bid for the world record in walking backwards ended abruptly at 7km — he applied to the Guinness World Records to be recognized as the world’s most prolific novelist. “They’ve responded that my books aren’t strictly as long as the novels in the West, but that they could be considered short novels, or novellas,” the novelist says. “We’re still discussing that point, but they are certainly interested.”

Kumar dismisses any talk of an imminent decline of the genre. “People still read, don’t they? As long as they travel by buses and trains, they will buy these books to read,” he says. Then, after mentioning that he’d once met a university vice-chancellor who avidly read his books, he launches into what is obviously a favourite, much-told anecdote.

“Back when we built this house, this part of Coimbatore was still deserted, cut off from the city,” Kumar says. Today, a well-maintained white Zen sits on his equally well-maintained driveway. But in 1989, when he was still working a full-time job as a sales executive, he drove to his office every day on a scooter.

One day, on a particularly lonely stretch of road, his scooter broke down, and the only help at hand was a boy, around 14 years old, driving a herd of goats ahead of him. “The boy told me there were some mechanics further down the road, and he offered to watch my scooter for me while I went to fetch them.”

As Kumar set off, he happened to look back once over his shoulder. “Out of his shirt pocket, the boy had pulled out a slim book,” he says. “And he sat down by the side of the road and began to read.”

Even from a distance, Kumar recognized the book. It was a Rajesh Kumar novel.



Published in Mint, September 7, 2008

(Categories: Books and Literature)
posted by Samanth | Saturday, September 13, 2008

கிழவனும் கடலும் - நூல் விமர்சனம்




வெகு நாட்களாய் படிக்க நினைத்திருந்த "கிழவனும் கடலும்" நூல் படிப்பதற்கு நேற்றுதான் நேரம் கிட்டியது. புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வேயின்(The old man and the sea by Ernest Hemingway) படைப்பை தமிழில் எம்.எஸ் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு கிழவனுக்கும் அவனது தூண்டிலில் அகப்படும் ராட்சத மீனுக்கும்(marlin வகை) இடையேயான போராட்டம்தான் கதை. முழுக்க முழுக்க கடலில் நடப்பதால் வாசிப்பவர்களும் கடலில் பிரயாணம் செய்தது போன்ற அனுபவத்தை தருகிறது. 1952ல் இந்தப் படைப்பு வெளியானபோது இருநாட்களில் 5.3 பில்லியன் பிரதி விற்றுத்தீர்ந்தது. இலக்கியத்திற்கான நோபல் பரிசும்,புலிட்சர் விருதும் பெற்றது.


பலநாட்களாய் கடலுக்கு சென்று வெற்றுக்கையுடன் திரும்புகின்ற கிழவனுக்கு ஆறுதலாய் இருப்பது ஒரு சிறுவன்.
இன்றாவது நான் உன்னுடன் கடலுக்கு வருகிறேன் என்று சொல்லும்போது தடுத்துவிட்டு கிழவன் மட்டும் தனித்து பயணிப்பதில் ஆரம்பிக்கிறது கதை. நடுக்கடலில் தூண்டிலிட்டு மீனுக்காக காத்திருக்கையில் ஏதோவொரு பெரிய மீன் சிக்கிவிடுகிறது. அதன்பிறகு இருநாட்களாய் தனி ஆளாய் அந்த மீனுடன்(கிழவனின் படகைவிட பெரிய மீன்) போராடி
அதைக்கொன்று, படகுடன் சேர்த்து கட்டிக்கொண்டு கரை திரும்பும் வழியில் அந்த மீனை சுவைக்க வரும் சுறாக்களுடன் மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கிறது. குத்தீட்டியால் சில சுறாக்களை கொல்வதும்,பின் ஒரு சுறா குத்தீட்டியுடன் தண்ணீரில் முழ்கியதும் தன்னிடமுள்ள கத்தியால் தாக்க வரும் சுறாக்களுடன் போராடுவதும் கிழவனின் வீரத்தை பறைசாற்றுகிறது.

அவ்வப்போது "அந்தச் சிறுவன் இருந்தால் நன்றாய் இருந்திருக்குமே" என்று தனியே அரற்றுவதும்...தூண்டிலை இறுகப்பற்றியதால் இடது கை மரத்துப்போகையில் இடக்கையுடன் தனியே பேசுவதும் கிழவன் மீது ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இருநாட்களாய் கடலில் உணவின்றி சிறுமீன்களை பிடித்து பச்சையாக தின்னும்போது "நான் ஒரு முட்டாள்,அடுத்த முறை கண்டிப்பாக எலுமிச்சையும்,உப்பும் கொண்டுவரவேண்டும்" என்று புலம்புவதும்
சோர்கின்ற போதெல்லாம் "என்னால் முடியும் எத்தனை முறை வென்றிருக்கிறேன்" என்று தனக்குத்தானே தைரியமூட்டிக்கொள்வதும் கிழவனின் மீது ஒரு ஈர்ப்பை உருவாக்குகிறது.

நடுக்கடலில் மீனுடன் நடக்கும் பலமணி நேர போராட்டத்திற்கு நடுவிலும் தன் நகரத்தில் நடக்கின்ற பேஸ்பால் போட்டியில் யார் வென்றிருப்பார்கள் என்று எண்ணுவதும், தன்னுடைய மனம் கவர்ந்த பேஸ்பால் வீரன் டிமாகியோ கால் ஆணியால் அவதிப்படுவதை பற்றி சிந்திப்பதும் கிழவனுக்கு பேஸ்பால் மீதிருந்த தணியாத ஆர்வத்தை மிக அற்புதமாய் எடுத்துரைக்கிறது.

அயல்நாட்டு இலக்கியத்தின் நடையையும்,அந்த கடலோர மீனவர்களின் வலியையும் கதை முடியும் தருவாயில் உணர முடிகிறது. இது நாவலா சிறுகதையா என்கிற குழப்பத்தை கிழவனும்,சிறுவனும்,மீனும் மறக்கடித்துவிடுகிறார்கள். மொழிபெயர்ப்பு நூல் என்கிற எண்ணம் வெகு சில இடங்களில் மட்டுமே தோன்றுகிறது. போராட்டங்கள் மிகுந்த வாழ்க்கை என்னும் கடலில் எதிர்நீச்சலிட்டு வெற்றி பெற விரும்பும் ஒவ்வொரு இளைஞனுக்கும் இந்த கிழவன் ஒரு முன்மாதிரி.வெகு நாட்களுக்கு பின் ஒரு நல்ல புத்தகம் படித்த திருப்தியை இப்புத்தகம் தருகிறது.


கிழவனும் கடலும்

ஆசிரியர் : எர்னெஸ்ட் ஹெமிங்வே

தமிழில்: எம்.எஸ்

பக்கம் 104, விலை ரூ.50

காலச்சுவடு பதிப்பகம்

இணையத்தில் வாங்க:
http://www.anyindian.com/product_info.php?manufacturers_id=15&products_id=12008
படியுங்கள் கைம்மண் அளவாவது

" If you want to Direct, you got to write, " என்று  Francil Ford Cuppola  என்ற இயக்குநர் George Lucas என்ற (பின்னாளில் புகழ்பெற்ற இயக்குநராக வந்த) திரைப்படக் கல்லூரி மாணவரிடம் கூறினார். , " If you want to write, you got to read" என்று நான் எனது மாணவர்களுக்குச் சொல்லி வருகிறேன். இக்கால இளைஞர்களுக்குப் படிக்கும் பழக்கம் குறைவாக இருப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கும் விஷயம். ஆயினும், நான் என்னவெல்லாம் படித்தேன் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் என்னிடம் குறைவாகவே உள்ளன என்பதுவும், எனக்குத் தலை குனிவுதான். என்னுடைய பழைய டைரிகளின் முதல்பக்கம் முழுதும் எழுதப்பட்டதாயும், இரண்டாம் பக்கம் பாதியளவும், மூன்றாம் பக்கம் ஒரு வரியும், மற்றப் பக்கங்கள் வெறுமையுடனும் காட்சியளிப்பதைக் காணும்போது, அந்தக் கால கட்டத்தில் படித்த புத்தகங்கள் பற்றி, சிறு குறிப்பாவது, எழுதாமல் போய் விட்டோமே என்று என் மீதே கோபமாய் வருகிறது. மறதி என்னை வாட்டும் நேரங்களில் இந்தக் கோபம் சுய நிந்தனையைத் தூண்டுகிறது.

"மறந்து போனது, மறக்கப்பட வேண்டியது தானோ என்னவோ?" என்று சுந்தர ராமசாமி ஒரு முறை கூறியதாக" அக்கிரகாரத்தில் பெரியார்" என்ற தலைப்பில் வந்துள்ள புத்தகத்தின் பி.ஏ. கிருஷ்ணன் எழுதியிருந்தார். கிரிக்கெட்டில் இந்தியா தோற்றுப் போனதும், 'சரிதான்' என்று 'சேனலை' மாற்றி வடிவேலு காமெடியில் 'செட்டில்' ஆகிவிடக்கூடிய மனோநிலை இருந்தால்தான் அது சாத்தியம் என்று தோன்றுகிறது. மறதி தரும் துக்கம் எனக்கு நிழலைப் போல. அதிலும், படித்த புத்தகங்கள், பார்த்த சினிமாக்கள் மற்றும் அவற்றின் படைப்பாளிகள் குறித்து ஏற்படும் மறதி என்பது சாயங்காலத்து நிழல் மாதிரி.

எனவே, இப்போது ஞாபகம் இருக்கும் போதே முதலில், மேலே குறிப்பிட்ட "அக்கிரகாரத்தில் பெரியார்" என்ற புத்தகத்தைப் பற்றி எழுதி விடுகிறேன். இந்தப் புத்தகதின் தலைப்பு, இதில் அடங்கியுள்ள பல கட்டுரைகளில், ஒன்றின் தலைப்பு. எதனால் இந்தத் தலைப்பை வைத்தார் என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை, இத்தலைப்பு சற்று (Mis-leading) திசை திருப்பும் தலைப்பாக இருக்கிறது.

இந்தப் புத்தகத்தின், 'நிச்சயமான வாசகர்கள், ஒரு வேளை இந்தப் புத்தகத்தை வாங்காமல் போய்விடலாமோ என்ற கவலை ஏற்படுகிறது. "வேண்டாதது என்று எதுவும் இல்லை" (படிப்பதைப் பொறுத்தவரை) என்கிற எனது குணாதிசயம்தான் நான் இப்புத்தகத்தை வாங்கக் காரணமாக இருந்தது.

உள்ளபடியே, தலைப்புக் கட்டுரையை விடச் சிறந்த கட்டுரைகள் பல இருக்கின்றன. குறிப்பாகத், "தமிழும் அறிவியலும்" என்ற கட்டுரை, " இந்த விஷயம் குறித்து, இன்னும் நிறையப் படிக்க வேண்டும். என்ற சிந்தனையை ஏற்படுத்துகிறது.

மேலே, சுந்தர ராமசாமியைப் பற்றி குறிப்பிடும் போதே நினைவிற்கு வந்தவை. அவருடைய "ஒரு புளிய மரத்தின் கதை மற்றும் ஜே.ஜே. சில குறிப்புகள் "ஒரு புளிய மரத்தின் கனவு", கதை சொல்லும் வடிவத்தினை, (story telling format) ஒரு பாவனையாகக் கொண்டு, உண்மையில் வாழ்க்கை, மனிதர்கள் மற்றும் காலம் ஆகிய இரண்டிலும், பின்னப்படுபவை ஓர் அற்புத அனுபவமாகத் தரும் படைப்பு. ஆனால், 'ஜே.ஜே. சில குறிப்புகள்",   Expressive Cinema   என்று நான் குறிப்பிடுவதற்கு ஈடான  Expressive writing   எழுத்தை ஓர் உணர்வு வெளிப்பாட்டுச் சாதனமாகப் பயன்படுத்த முடியும் என்பதற்கான சாட்சிகளில் இதுவே மிகவும் பிரமாண்டமானது. இதற்கு முற்றிலும் மாறுபட்ட காலங்களில் இருந்தாலும், என்று நான் கருதும் இன்னும் இரண்டு படைப்புகள், எம்.வி.வெங்கட்ராம் எழுதிய 'காதுகள்', ஜெயகாந்தன் எழுதிய 'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்' சாதாரண மனிதனின் பாலியல் விழைவை, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் எழுத்தாளர் பற்றி "ஜே.ஜே." வில் ஓரிடத்தில் வரும். இதே பாலியல் விழைவு, ஒரு வித ஆத்ம விசாரம் போல், எம்.வி.வெங்கட்ராமின் "காதுகள்" குறிப்பிடும். 

ஆனால், பெண்ணின் பாலியல் விழைவு குறித்து 'கிருத்திகா' எழுதியுள்ள 'வாசவேச்வரம்' ஓர் ஆச்சரியமான படைப்பு. இந்நாவல் 1966-ல் எழுதப்பட்டது என்பது, இந்த ஆச்சரியத்தை அதிகப்படுத்தும் விஷயம். இந்தப் புத்தகங்களை நீங்கள் படிக்க வேண்டும் என்று உளமாற விரும்புகிறேன். அதற்கு, நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய :  

பழைய எண் 216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
சென்னை 600 005.
தொலைபேசி: 91-44-28481662, 91-44-42155972.
மின்னஞ்சல்: kalachuvadu@gmail.com

பெண்ணின் பாலியல் விழைவு குறித்து எழுதியவர்களில் முக்கியமான இன்னொருவர் உஷா சுப்பிரமணியன். பிரச்சார கூப்பாடு எதுவும் இல்லாமல் அதே சமயம் ஒரு நேர்மையாளனின் மனதில் மிகுந்த தாக்கத்தை உண்டாக்கிய இவரது சிறுகதைகளில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்னும் சிறுகதையில் ஒரு ஆண் கீழ்க்கண்டவாறு ஒரு விளம்பரம் கொடுக்கிறான்.

ஐம்பத்தெட்டு வயதான, இளமையும் துடிப்பும் வாழ்வை அனுபவிக்கும் ஆசையும் உள்ள மனிதருக்குப் பயணத்தின் போது கம்பெனி கொடுக்க ஒரு பெண் தேவை

இந்த விளம்பரத்திற்கு வரும் பதில்களில் இருந்து தேர்ந்தெடுக்கும் பெண் கீழ்க்கண்டவாறு எழுதுகிறாள்.

ஒரு துடிப்புள்ள, ஆர்வமுள்ள மன இளமை பொங்கும், ரசனைமிக்க, பெண்ணின் தோழமையை நீங்கள் வரவேற்றால், என்னுடன் தொடர்பு கொள்ளலாம். முப்பது ஆண்டுகளாக ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் ரசனையற்ற வாழ்வில் அலுத்துவிட்ட எனக்கு இந்த வாய்ப்பு வரப்பிரசாதமாக இருக்கும்.

மேற்படி விளம்பரத்தை கொடுத்த ஆண் தேர்ந்தெடுத்த மேற்படி பதிலை எழுதிய பெண், அவனுடைய மனைவிதான் என்று கோடிட்டு காட்டி விட்டு , கதையை முடித்து விடுகிறார் உஷா சுப்பிரமணியன்.ஆண் குற்ற உணர்வு ஏதும் இன்றி செய்யும் காரியங்களை பெண்ணும் செய்தால் அது சமூகத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. இந்த நேர்மையற்ற போக்கை எந்த ஆண்மகனால் எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியுபம்?

உஷா சுப்பிரமணியன் கதைகள் என்னும் இந்த சிறுகதை தொகுதியை படிக்க நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி;

ராஜராஜன் பதிப்பகம்,
         19 கண்ணதாசன் சாலை,
         தியாகராய நகர்,
         சென்னை-600017


நினைவிற்கு எட்டியவரை ஓர் அரசியல் சுயசரிதை ; ஜோதிபாசு

ஜோதிபாசு

புத்தக வெளியீடு

அழைப்பிதழில் இருந்து.....

வெள்ளையரை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட புகழ்பெற்ற தலைவர்களில் இன்றும் நம்மிடையே வாழும் அரசியல் ஞானி (Stateman) ஜோதிபாசு ஒருவர் மட்டுமே. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை, அதன்பின்பு காங்கிரஸின் அடக்குமுறையை, வகுப்புவாத சக்திகளின் வெறியாட்டத்தை தொடர்ந்து எதிர்த்துப் போராடி, மேற்குவங்க மக்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தைப்ப் பெற்றவர். கம்யூனிஸ்ட இயக்கத்தின் முன்னோடியாக, தொழிற்சங்கவாதியாக, அரசியல் வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டவர்.

உழைக்கும் மக்களின் பேராதரவைப் பெற்று உலக பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக தொடர்ந்து 5 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக 23 ஆண்டு காலம் செயற்பட்டவர். இந்திய இடதுசாரி இயக்கத்தின் சிறப்பு மிகு அத்தியாயமாக விளங்கும் அவரது அரசியல் வாழ்க்கை இப்போது உங்கள் முன்னே நூலாக விரிகிறது.

முன்னுரையிலிருந்து.....

சுரண்டலற்ற, வர்க்கபேதம் அற்ற ஒரு சமுதாயத்தை, அதாவது சோஷலிஸத்தை உருவாக்குவது என்ற நோக்குடன் தங்களது சமூக, பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளை செயற்படுத்தும் தோழர்களுக்கும், மக்களுக்கும் இந்நூல் ஓரளவு பயனுள்ளதாக அமையும் என்றே நம்புகிறேன். இந்த சுரண்டலற்ற சமூகத்தை நிறுவுவதற்கு நீண்ட காலம் ஆகலாம். ஆனாலும் இறுதியில் வெல்லப்போவது முதலாளித்துவம் அல்ல ; சோஷலிஸம் மட்டும்தான். எங்களது பல ஆண்டு கால அனுபவமானது நமது தோழர்களுக்கும், மக்களுக்கும் உதவிகரமாக இருக்குமென் நம்புகிறேன். பின்னாட்களில் மிகவும் செறிவானதொரு அனுபவத்தை நாங்கள் அடைந்தோம். ஒரு மாநிலத்தின் அதிகாரங்கள் மிகக் குறுகியதாக இருந்தபோதும் கூட, தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பிற்குள்ளேயே புதியதொரு வரலாற்றை எங்களது தோழர்களும் மக்களும் உருவாக்கினார்கள் ......
- ஜோதிபாசு

500 பக்கங்களைக் கொண்ட இந்நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ 125.00 இற்கு கிடைக்கும்.

தமிழிற்கு இந்நூலை மொழிபெயர்த்தவர் ; வீ.பா.கணேசன்

தமிழில் : நினைவிற்கு எட்டியவரை ஓர் அரசியல் சுயசரிதை ; ஜோதிபாசு

பதிப்பகம் ; பாரதி புத்தகாலயம்
421, அண்ணா சாலை,
தேனாம் பேட்டை,
சென்னை 600021

மின் அஞ்சல் ; thamizhbooks@gmail.com

தொலைபேசி ; 044 - 24332424

Labels:



http://www.cinemaexpress.com/archaics/151104/cinimini/cinimini5.asp
தமிழ் திரைப்பட வரலாறு

கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் சினிமா பற்றிய சகலமான செய்திகளையும், அரிய புகைப்படங்களையும், அபூர்வமான தகவல்களையும் புள்ளி விவரங்களுடன் வழங்குபவர். அதனால்தான் அவரை சினிமாத் துறையினர் திரைப்பட உலகின் பல்கலைக் கழகம் என்றும், திரைத்துறை அகராதி என்றும் போற்றுகின்றனர்.

"சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு' என்ற அரிய நூலினை பிலிம் நியூஸ் ஆனந்தன் மிக மிக சிரமப்பட்டு - கடுமையாக உழைத்து - தகவல்களைச் சேகரித்து - தயாரித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கரங்களால் வெளியிடச் செய்துள்ளார். அந்நூலை முதல்வரிடமிருந்து திரு. ஏவி.எம். சரவணன் அவர்கள் பெற்றுக் கொண்டுள்ளார்.

  இந்த அரிய கலைப் பொக்கிஷத்தில் தேசிய விருது பெற்ற படங்கள், பால்கே விருது பெற்றவர்கள், 1931 முதல் வெளியான படப் பட்டியல், தமிழ்த் திரைப்பட வரலாறு, ஆண்டுதோறும் வெளியான படங்களின் எண்ணிக்கை, திரை உலகில் முதன்மை, திரை உலகில் பெண்கள் பங்கு, திரை உலக சாதனையாளர்கள், தமிழக அரசு விருது பெற்ற படங்கள், திரை உலக சங்கங்கள்... இன்னமும் பல அரிய செய்திகளை - புகைப்படச் சான்றுகளுடன் இடம் பெற்றுள்ளன. 

இந்த நூலுக்கு முதல்வர் வழங்கியுள்ள அணிந்துரையில் ""கடந்த 52 ஆண்டுகளில் தனி மனிதனாக இருந்து - தமிழ் திரை உலகம் பற்றிய செய்திகளை சேகரிக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளும், அயராத உழைப்பும், குறையாத ஆர்வமும் பாராட்டத்தக்கவை'' என்று பாராட்டியுள்ளதுடன் - தமிழக அரசின் சார்பில் இந்நூலின் தயாரிப்புக்காக நிதிஉதவியும் வழங்கியிருக்கிறார்.

தமிழக அரசின் உதவியுடன் தமிழ் திரை உலகம் பற்றிய தகவல் களஞ்சியமாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. முதல்வர் அவர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல இந்த நூல் திரைத்துறைப் பற்றி ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருப்போருக்கும் சினிமா நேயர்களுக்கும் நிச்சயமாகப் பயன்படும்.  குறிப்பாக 1931-லிருந்து வெளியான படப் பட்டியலில் பல அரிய, அபூர்வமான புகைப்படங்களும் இடம் பெற்றிருப்பது பெரிதும் போற்றத்தக்கது.

இந்தக் கலைக் களஞ்சியத்தில் அக்காலம் முதல் இக்காலம் வரை கலை உலகில் பணியாற்றிய அனைத்துக் கலைஞர்களின் புகைப்படங்களும், தகவல்களும் இடம் பெற்றுள்ளன.  சினிமாவின் அரிய தகவல் களஞ்சியமான இந்த வரலாற்று நூலைத் தயாரித்து வழங்கியுள்ள பிலிம் நியூஸ் ஆனந்தனின் பணியை எத்தனை பாராட்டினாலும் தகும். இதில் இடம் பெறாத நடிகர், நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர், தொழில்நுடபக் கலைஞர்கள் எவருமில்லை. 

மிகுந்த சிரத்தையுடன் - கடுமையாக உழைத்துப் பாடுபட்டு இந்நூலை வெளியிட்டு சாதனை படைத்துள்ள பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு மத்திய அரசு "பத்மஸ்ரீ' விருதினை வழங்கி கெüரவிக்க வேண்டும்.  சிறந்த முறையில் - உயர்ந்த காகிதத்தில் அச்சடிக்கப்பட்டு வெளிவந்துள்ள இந்நூலில் 738 பக்கங்கள் உள்ளன.

விலை ரூ. 500/-.  வெளியீடு : சிவகாமி பப்ளிகேஷன்ஸ், 42, டாக்டர் ராதாகிருஷ்ணன் மெயின்ரோடு, ராதாகிருஷ்ணன் நகர், திருவான்மியூர், சென்னை - 600041.

  இந்நூல் பிலிம் இன்ஃபர்மேஷன் சென்டர், 208, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 600014 என்ற விலாசத்திலும் கிடைக்கும். தொலைபேசி : 28523711.

http://yalisai.blogspot.com/2008/08/blog-post_21.html
யாழிசை..ஓர் இனிய இலக்கிய பயணம்
வண்ணநிலவனின் "கம்பா நதி"
எப்பொழுதும் எனக்கு எண்பதுகளின் மீது ஒரு பிரியம் உண்டு,இளையராஜாவின் இசையை தவிர்த்து மற்றும் ஒரு காரணம் வண்ணதாசன்,வண்ணநிலவனின் கதைகளும் அதன் மாந்தர்களும் அக்காலகட்டதினரே..இக்கதைகளில் விவரிக்கப்படும் புன்னை,வாதாம்,நாகலிங்க மரங்கள் ,மலை,அருவி,சாலை,தெருக்கள்,ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லாவற்றோடும் மிக நெருக்கமாய் உணர்வேன்.வண்ணநிலவனின்/வண்ணதாசன் கதை மாந்தர்கள் மிக இயல்பானவர்கள்,பகட்டான பெண்களோ,சாகசம் புரியும் ஆண்களோ அல்லாமல் நம்மில் ஒருவராய் நுண்ணறிவு கொண்டவர்களாய் நடமாடுபவர்கள்.
வண்ணநிலவன் படைப்புகளில் குறிப்பிடதக்கவை "எஸ்தர்" ,"ரைநீஸ் ஐயர் தெரு" ,"தாமிரபரணி கதைகள்"(சிறுகதை தொகுப்பு) மற்றும் "கம்பா நதி". திருநெல்வேலி வட்டார மொழியாடளோடு தாமிரபரணி நதி சார்ந்த பகுதிகளின் நிகழ்வாய் இக்கதைகள் சொல்லபட்டிருக்கும்.கம்பா நதி ஒரு நடுத்தர குடும்பத்தின் அன்றாட நிகழ்வுகளோடு அவர்களுக்குள்ளான விருப்பங்கள்,தேவைகள்,சிக்கல்கள்,பிரியம்,காதல்,ஏக்கம் என சகல உணர்வுகளின் பிரதிபலிப்பு.

வேலை தேடும் பாப்பையாவின் தந்தைக்கு இரு மனைவிகள்,அக்கா சிவகாமி,விருப்பம் கொண்ட காதலி கோமதி - இவர்களுக்குள்ளான பிரியம்,உறவு,சம்பாஷனைகள் என நாவல் முழுவதும் உறவுகளின் ஊடே பயணிக்கிறது.நெருக்கடி மிகுந்த நடுத்தர குடும்ப வாழ்கையின் அன்றாட நிகழ்வுகளை மிகுந்த கற்பனை இன்றி அதன் போக்கில் வெகு இயல்பாய் விவரித்துள்ள பாங்கு நன்று.

நாவலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இடம் படித்து முடித்து வேலை தேடும் படலத்தில் ஈடுபடும் காலங்கள்,அப்போதைய நமது மனநிலை.ஒவ்வொரு முறையும் தோல்வியை சந்தித்த பிறகும் வெற்றிக்கான தேடல் நீங்காது தொடரும் அந்நாட்கள் எளிதில் மறக்கக்கூடியது அல்ல.பாப்பையா வேலை தேடும் நாட்களில் கொள்ளும் கசப்பான மனநிலை,வேலை பெற்று வெளி ஊரில் இருக்கும் நண்பர்கள் குறித்த ஏக்கம்,பிரியத்திற்குரிய பெண்ணிடம் பழக அஞ்சி ஒதுங்கும் நிலை ஆகியவை சொல்லப்பட்டுள்ள விதம் நன்று.

தாமிரபரணி நதியோடு அம்மக்கள் கொண்டுள்ள நெருக்கம் சற்றே பொறாமைக்குரியது.நதிகளை காண்பதே அறிதான இந்நாட்களில் நதியோடு குளித்து,துவைத்து நதி கரையிலும்,கல் மண்டபங்களிலும் நண்பர்களோடு பேசி சிரித்து மகிழ்ந்த அன்றைய பொழுதுகளின் விவரிப்பு வாசிப்பதற்கே மகிழ்வாய் உள்ளது.கம்ப நதி நாவலிலும் ரைநீஸ் ஐயர் தெரு குறித்து வருகிறது.எப்பொழுதும் மழை நனைத்த சுவடோடு தோன்றுவதாய் அத்தெருவை குறிப்பிட்டு இருப்பது மிகசரியே!!அத்தெருவும்,அதன் மனிதர்களும் அதுபோலவே.
வண்ணநிலவனின் ஆரம்பகால எழுத்துக்கள் வாசிப்பதற்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை தரவல்லவை,மழையோடு கொண்ட நெருக்கத்தை போல!! கம்பா நதியும் அது போலவே..
நாவல் வெளியீடு - அன்னம் பதிப்பகம் | விலை - 22 ரூபாய் | கீழ் கண்ட இணையத்தளத்தில் இந்நூலை பெறலாம்
http://www.anyindian.com/index.php?cPath=1_40&osCsid=2d94af152a0d96cf0bf5456e76fc1dc4




     RSS of this page