Home / Books List 15

Books List 15


கதம்பம் - 2

சொக்கன் எங்கள் ஆஸ்தான எழுத்தாளர். அவர் எந்த நிறுவனத்திலாவது வேலை செய்கிறாரா அல்லது முழு நேர எழுத்தாளரா என்று நான் பல நேரங்களில் சந்தேகப்பட்டதுண்டு.

இந்த ஆண்டு அவர் எங்களுக்கு எழுதிய புத்தகங்கள் முன் ஆண்டுகளைவிடக் குறைவுதான். அவற்றை இங்கே பட்டியலிடுகிறேன்.

2010-ல் சொக்கனின் முதல் புத்தகம் மணிமேகலை. கோவை செம்மொழி தமிழ் மாநாட்டுக்காக சில புத்தகங்களைச் செய்தோம். அதில் ஐம்பெருங்காப்பியங்களில் கதை அறியத் தெரிந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகிய மூன்றையும் முதலில் கொண்டுவர முடிவெடுத்தோம். சொக்கன் தவிர மீதி இருவரும் முதல்முறை எழுத்தாளர்கள். கே.ஜி.ஜவர்லால் சிலப்பதிகாரத்தையும், சொக்கன் மணிமேகலையையும் ராம் சுரேஷ் (எனப்படும் பெனாத்தலார்) சீவக சிந்தாமணியையும் எளிய தமிழில் கொண்டுவந்தனர். பாராட்டையும் பெற்றதோடு இந்தப் புத்தகங்கள் வேகமாக விற்பனையும் ஆயின என்பது சந்தோஷமான செய்தி. சொக்கன் ஏற்கெனவே முத்தொள்ளாயிரப் பாடல்களை எளிய தமிழில் எழுதிவந்தார். அது மடலாடற்குழுக்களிலா அல்லது தினம் ஒரு கவிதை குழுவிலா, எதில் வந்தது என்று இப்போது ஞாபகம் இல்லை. (உலா என்னும் தமிழ் பிரபந்த வகையின் ஆரம்பம் இதில்தான் உள்ளது.) பின்னர் ஜவர்லால் திருக்குறளை எளிய உரைநடை மாதிரியில் எழுதினார்.

இந்தப் புத்தகங்கள் ஒரு பியூரிடனுக்குக் கோபத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் எங்கள் நோக்கம், தமிழர்கள் தம் இலக்கிய வகைகளை சம்பிரதாயமான முறையில் அணுகாமல் அவற்றின் சுவைக்காகவும் கருத்துக்காகவும் அணுகவேண்டும் என்பது. அதற்கு, அதன் முந்தைய பழந்தமிழ் நடையை முற்றிலும் விலக்கவேண்டிய அவசியமாகிறது. புதிய வடிவ உத்திகளை மேற்கொள்ளவேண்டியதாகிறது. இந்த அளவுக்கு சுதந்தரத்தை எடுத்துக்கொள்ளும்போது சில தவறுகளும் அசம்பாவிதங்களும் ஏற்படலாம். அவை சுட்டிக்காட்டப்பட்டால் நிச்சயமாகத் திருத்திக்கொள்வோம். இந்த இலக்கியங்களை எந்தவிதமான ஐடியலாஜிகல் முன்முடிவுகளுடன் நாங்கள் அணுகவில்லை.




                


சொக்கன் சினிமா எடுப்பவராக இருந்தால், அம்பானி ட்ரைலாஜி எடுத்திருப்பார்! திருபாய் அம்பானி பற்றிய சொக்கனின் புத்தகம் சுமார் 40,000 பிரதிகளுக்குமேல் விற்றுள்ளது; 50,000-ஐத் தாண்டிவிட்டதா என்று தெரியவில்லை. பார்க்கவேண்டும். அடுத்து 2009-ல் முகேஷ் அம்பானி பற்றிய புத்தகத்தை எழுதியிருந்தார். அப்போதே அனில் அம்பானி பற்றி எழுதவேண்டுமா என்று யோசித்து, கைவிட்டு, பிறகு மீண்டும் தட்டி எடுக்கப்பட்டு எழுதப்பட்ட புத்தகம் இது.

சொக்கன் எழுதி 2010-ல் வராமல் 2011-ல் வரப்போகும் சில புத்தகங்கள் கைவசம் உள்ளன. அவற்றைப் பின்னர் பார்ப்போம். இந்த ஆண்டின் முக்கியமான கிழக்கு புத்தகங்களில் இரண்டில் ஒன்று அந்தமான் சிறை பற்றிய சொக்கனின் புத்தகம். பிரிட்டிஷ்காரர்கள் இந்தியா வந்ததும், அவர்களுடைய சில அரக்கத்தனங்களைக் கூடவே எடுத்துவந்தனர். மரணதண்டனை தராமல், ஆனால் அதேபோன்ற அளவுக்கு, அல்லது அதைவிடக் கடுமையான தண்டனையாக அவர்கள் உருவாக்கியதுதான் தொலைதூரத் தீவு ஒன்றில் ‘கைதி’களை அடைத்துவைப்பது. அப்படித்தான் அவர்கள் ஆஸ்திரேயாவைப் பயன்படுத்தினார். அதேபோல இந்தியக் கைதிகளுக்காக அவர்கள் உருவாக்கியதுதான் அந்தமான் தீவுச் சிறை. இந்தியாவின் சில முக்கியமான விடுதலைப் போராட்ட வீரர்கள் அந்தமானில் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள். சொக்கனின் புத்தகத்தில் இந்தச் சிறை பற்றிய முழுமையான வரலாற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

இதில் ஒரு சோகம் என்னவென்றால், இன்றும்கூட அந்தமான் இந்திய அரசால் சிலரை ஒளித்துவைக்கப் பயன்படுகிறது என்பதுதான். அந்தமானில் நடக்கும் பல நிழலான காரியங்களை இந்திய அரசு அல்லது அதன் உளவுத்துறையினர் நடத்துகின்றனர். அதன் சில குரூரங்களில் ஒன்றை நந்திதா ஹக்சரின் புத்தகமான வஞ்சக உளவாளியில் நீங்கள் படிக்கலாம்.

சென்ற ஆண்டு, சென்னை புத்தகக் கண்காட்சியில் சக்கைப்போடு போட்டது ராஜிவ் காந்தி கொலை வழக்கு பற்றிய ரகோத்தமனின் புத்தகம். இந்த ஆண்டு வெளியீடு சொக்கன் எழுதியுள்ள மகாத்மா காந்தி கொலை வழக்கு. மகாத்மா காந்தி கொலையில் பெரிய மர்மம் ஒன்றும் இல்லை. சுட்டது நாதுராம் வினாயக் கோட்சே என்பது அனைவருக்கும் தெரியும். பள்ளிக்கூடப் புத்தகத்தில் இதை நாம் படிக்காமல் பாஸ் பண்ணுவது இல்லை. அதனைத் தாண்டி மாலன் எழுதிய ஜனகணமன என்ற புதினத்தில் இது தொடர்பான பல செய்திகள் உள்ளன. இந்தப் புத்தகத்தில் சொக்கன், முழுக் கதையை, உயிரோட்டத்துடன் எழுதியுள்ளார். காந்தி கொலையில்தான் மர்மம் இல்லையே தவிர, ஏன் கொல்லப்பட்டார், இந்தக் கொலை அவசியம்தானா? கொலைகாரர்களும் குடத் திட்டமிட்டவர்களும், இந்தக் கொலையைத் தவிர்த்திருக்க முடியாதா? காந்தி என்ற முரட்டுப் பிடிவாதக்காரர் ஏன் தனக்கு யாரும் பாதுகாப்பு தருவதை விரும்பவில்லை? காந்தி உயிரோடு இன்னும் சில காலம் இருந்திருந்தால் இந்தியாவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்ற பல கேள்விகள் எழுவதைத் தடுக்க முடியவில்லை.

(தொடரும்)
திராவிட இயக்க வரலாறு

திராவிட-ஆரிய வரலாற்றாடல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இந்தியாவில் பெரும்பாலும் கேள்வி கேட்கப்படாமல் உருவான இருமைப் புலம் இது. இந்தியாவின் பிற பகுதிகளில் எப்படியோ, தமிழ்நாட்டில் கோலோச்சும் ஒரே கோட்பாடு இதுதான்!

ஆரியம் - திராவிடம் என்ற பிரிவு உண்மையா, யார் எங்கிருந்து வந்தனர், யாரது பண்பாடு எப்படிப்பட்டது என்பது பற்றிப் பேசவேண்டிய பதிவு இதுவல்ல. ஆனால் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பார்ப்பனர் அல்லாத சாதிப்பிரிவினர் சிலர் தாங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தும் பிரிட்டிஷ் அரசின் வேலைகளிலும் படிப்பிலும் மிகவும் பின்தங்கி இருப்பதையும், ஆனால் எண்ணிக்கையில் குறைவாக இருந்தும் பார்ப்பனர்கள் வேலைகளில் மிக அதிகமாக இருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து, அரசியல் உணர்ச்சியால் உந்தப்பட்டு ஓர் அமைப்பை உருவாக்கினார்கள்.

தமிழகத்தின் வரலாறு மாறியது.

ஜஸ்டிஸ் கட்சியாகத் தொடங்கிய திராவிட இயக்கம், பின்னர் பெரியார், அண்ணா என்று நீண்டு, தமிழகத்தின் அரசியலில் முக்கியமான இடம் வகிப்பதோடு இந்திய அரசியலின் போக்கையும் மாற்றியுள்ளனர் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். பெரியார், அண்ணா பெயர் சொல்லாத அரசியல் கட்சி தமிழகத்தில் வாக்குகளை வாங்கவே முடியாது; இடங்களைப் பிடிக்கவே முடியாது என்பதுதான் இன்று தமிழகத்தின் நிலவரம். காமராஜ் ஆட்சியை மீண்டும் கொண்டுவருவோம் என்று சூளுரைக்கும் காங்கிரஸ் கட்சி, திமுக, அஇஅதிமுக இரண்டுடன் மாறி மாறிக் கூட்டணி வைத்துப் பிழைக்கவேண்டியதுதான் நிலை. சமூகநீதி, இட ஒதுக்கீடு என்ற வார்த்தைகளைச் சொல்லாத கட்சி தமிழகத்தில் இருப்பதற்கே இடமில்லை.

ஆக, திராவிட இயக்கம் எனப்படும் இந்த நூறாண்டு கருத்தாக்கத்தின் வரலாறு என்ன? இதன் முக்கிய பாத்திரங்கள் எப்படி இந்த இயக்கத்தை வழிநடத்திச் சென்றனர். அவர்களுக்கு இடையேயான பூசல்கள் எப்படி வரலாற்றின் திசையை மாற்றின. இவற்றை விரிவாகச் சொல்லும் புத்தகம்தான் ஆர். முத்துக்குமாரின் திராவிட இயக்க வரலாறு - இரு பாகங்கள்.

முதலில் ஒரு பெரும் புத்தகமாகக் கொண்டுவருவதாகத்தான் முடிவு செய்திருந்தோம். சுமார் 900 பக்கங்கள் வருவதாக இருந்தது. பின்னர் வாசகர்களையும் அவர்களது மனிபர்ஸையும் மனத்தில் வைத்துச் சில மாற்றங்களைச் செய்யவேண்டியிருந்தது. இரண்டு தொகுதிகளாக, கெட்டி அட்டை இல்லாமல், பேப்பர் பேக் வடிவில் வருகிறது. இரண்டும் சுமார் 400, 400 பக்கங்கள். ஒவ்வொன்றும் விலை ரூ. 200/-

ராமச்சந்திர குஹாவின் எழுத்து நடையால் உந்தப்பட்டு முத்துக்குமார் இந்தப் புத்தகத்தில் ஒரிஜினல் மேற்கோள்களைக் கொண்டே கதையை நகர்த்திச் செல்கிறார். நீதிக்கட்சியைத் தோற்றுவித்தவர்கள் முதற்கொண்டு பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும், எம்.ஜி.ஆரும், பாரதிதாசனும், கண்ணதாசனும், சம்பத்தும், மதியழகனும், நெடுஞ்செழியனும், வைகோவும், ராமதாசும், இன்னும் பலரும் அவரவர் வார்த்தைகள் ஊடாகவே கதையை முன்னெடுத்துச் செல்கிறார்கள். 

புத்தாண்டில் நீங்கள் படிக்கவேண்டிய முக்கியப் புத்தகங்களில் இது கட்டாயம் இருக்கவேண்டும். இந்திய வரலாற்றுடன் தமிழகத்தின் தனி அரசியல் வரலாறையும் முழுமையாகக் கொண்டுவருவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

2011-ம் ஆண்டு மிக நல்ல ஆண்டாக அமைய உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

பாகம் 1 | பாகம் 2

கதம்பம் - 1

நாளை புத்தகக் கண்காட்சி ஆரம்பம். நேற்றே மழை பெய்துவிட்டது என்பதால் இனி மழை இருக்காது என்பது பிரசன்னாவின் கருத்து. அதுவும் நாளை அனுமத் ஜெயந்தியாம்! அதனால் அனுமன் எந்தவித இடையூறும் இல்லாமல் காப்பாராம். பொதுவாக புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவுக்கு நான் போகமாட்டேன். ஒன்று மழை பெய்யும். அல்லது கருணாநிதி வருவதால் தாங்கமுடியாத கெடுபிடியாக இருக்கும். இம்முறை போகலாம் என்றிருக்கிறேன். சென்றமுறை கருணாநிதி ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ புத்தகத்தைத் திட்டி அதற்கு பிரசித்தி தேடித் தந்தார். அதற்கு முந்தைய ஆண்டு, சென்னைக் காவல்துறையினர், பிரபாகரன் புத்தகத்தை அரங்கில் வைத்து விற்கக்கூடாது என்று தடைபோட்டுவிட்டுப் போனார்கள். இம்முறை சர்ச்சைகள் இல்லாத ஆண்டாக இருக்கும் என்று நம்புகிறேன். நானே ஒரு நாள் (10 ஜனவரி 2011) அரங்க நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்குகிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

இம்முறை தினம் ஒரு வீடியோ என்று புத்தகக் கண்காட்சியைப் படமெடுத்துப் போடலாம் என்றும் நினைத்துள்ளேன்.

***

குறிப்பிடவேண்டிய பல புத்தகங்கள் உள்ளன. எனவே புத்தகக் கண்காட்சி தொடங்கினாலும், என் புத்தகக் குறிப்புகள் தொடரும்.

பேய்! பேயை நம்பும் ஒரு சமூகமாகவே நாம் உள்ளோம். இப்போது நிறைய வயதானதற்குப்பின், பகுத்தறிவுத் திறன் வளர்ந்துள்ளது என்பதால் நான் பேயை நம்புவதில்லை. அமானுஷ்யம் என்பதே கிடையாது என்பது என் இப்போதைய கருத்து. ஆனால் எங்கள் அலுவலகத்தில் பேய் என்னும் கருத்தை நம்புபவர்கள்தான் அதிகம் என்று பா.ராகவன் ஒரு நாள் மதிய உணவின்போது கண்டுபிடித்தார். அதிலிருந்தே பேய் பற்றி ஒரு புத்தகம் வேண்டும் என்று முயற்சி செய்து சஞ்சீவி என்பவரைக் கொண்டு எழுதவைத்தார். சஞ்சீவி, பாக்யா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக இருந்தவராம். புத்தகத்தின் அட்டையைப் பற்றி மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள். அட்டையைப் பார்த்தாலே பகீர் என்று பயமாக இருக்கிறது; இதை வாங்க மக்கள் பயப்படலாம் என்கிறார்கள். எனக்கு இது விசித்திரமாகத் தோன்றுகிறது. அட்டையப் பார்த்தால் நீங்கள் பயந்தா நடுங்குகிறீர்கள்? பேயை நம்புபவரா நீங்கள்? நம்பினாலும் நம்பாவிட்டாலும் வாங்கிப் படித்துவிட்டு கருத்தைச் சொல்லுங்கள்!

மாமல்லபுரத்துக்கு கடந்த ஒரு வருடத்தில் 20 முறையாவது சென்று வந்திருப்பேன். அதுதவிர தமிழகத்தின் வேறு சில கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்றுவந்திருப்பேன். தஞ்சாவூரோ, கங்கைகொண்ட சோழபுரமோ, புகளூரோ, புதுக்கோட்டையின் எண்ணற்ற சிற்பக் களஞ்சியங்களோ, முத்தரையர்கள், அதியமான்கள் உருவாக்கிய திருச்சி, சேலம் மாவட்டக் கலைச்செல்வங்களோ, எதுவாக இருந்தாலும் அதுபற்றிய தகவல் அந்த இடங்களில் துளிக்கூட உருப்படியாக இருக்காது. ஓர் ஊருக்குப் போனால் அந்த ஊரில் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என்பது பற்றிய தகவல் சொற்பமே. இதில் ஒரு சிறு முயற்சியாக, மிக மிக அடிப்படை முயற்சியாக, ஒரு புத்தகத்தைக் கொண்டுவந்துள்ளோம். தமிழக சுற்றுலா வழிகாட்டி எனப்படும் இந்தப் புத்தகம் எங்கள் அலுவலகத்தின் ப்ராடிஜி தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக இருக்கும் தமிழ் சுஜாதா எழுதியது. (தமிழ்பேப்பரில் பெண் மனம் தொடரை எழுதுபவர்.) இனி வரும் நாள்களில் தனித்தனியாக, பல்வேறு தமிழக சுற்றுலா இடங்கள் பற்றி மிக விரிவான புத்தகங்கள் வெளியாகும். இந்தப் புத்தகத்தில் மேற்கொண்டு என்ன சேர்க்கலாம், எப்படி விரிவாக்கலாம் என்று நீங்கள் சொன்னால் நிச்சயம் அவற்றைப் பயன்படுத்திக்கொள்வோம்.

அரவிந்தன் நீலகண்டனின் நம்பக்கூடாத கடவுள், தமிழ்பேப்பரில் தினசரி வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. பொதுவாக எனக்கு தனிப்பட்ட முறையில் கட்டுரைத் தொகுப்புகள் வெளியிடுவதில் நம்பிக்கை குறைவு. எனக்குப் படிக்கப் பிடிக்கும் என்றாலும், பொதுவாக வாசகர்கள் கட்டுரைத் தொகுப்புகளை வாங்குவதில்லை என்பது வணிக நிதர்சனம். இலக்கியவாதிகள் எழுதும் கட்டுரைத் தொகுப்புகள் விற்பனை ஆவதுண்டு. ஆனால் அ-இலக்கியவாதிகள் விஷயம் அப்படி இல்லை. அரவிந்தன் நீலகண்டன் விஷயத்தில் வேறுவிதமாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். தமிழ்பேப்பரின் கட்டுரைகள் வெளியானபோது மிகுந்த சர்ச்சையை உண்டுபண்ணிய கட்டுரைகள் இவை. அரவிந்தன் நீலகண்டன், இந்துத்துவச் சிந்தனையாளர். நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் அதனை ஓர் இந்துத்துவப் பார்வையுடன் விமரிசிப்பவர். அவருடைய பல கொள்கைகள் எனக்கு ஏற்புடையவையல்ல. என் பல கருத்துகளுக்கு காட்டமான முதல் வினை அவரிடமிருந்து வந்துள்ளது. ஆனால் பொருட்படுத்திப் படிக்கவேண்டிய சிந்தனைகள் அவருடையவை என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. (இப்போது ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன் இருவரும் எழுதியுள்ள ஒரு பெரிய ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கத்தை எடிட் செய்துகொண்டிருக்கிறேன். ஜனவரியில் வெளியாகவேண்டும்.) தமிழ்பேப்பரின் கட்டுரைகள் அடங்கிய அரவிந்தனின் புத்தகம் ‘நம்பக்கூடாத கடவுள்’ என்ற பெயரில் வெளியாகிறது.

பாலா ஜெயராமன். இவரும் தமிழ்பேப்பரில் பத்தி எழுதுகிறார் (உலக மகா வில்லன்கள் பற்றி). அது அவரது மூன்றாவது கிழக்கு வெளியீடாக வெளியாகும். அதற்குமுன் இரண்டு, முழுமையான புத்தகமாக எழுதி வெளியாகியுள்ளன. ஒன்று: கடல் கொள்ளையர் வரலாறு. அடுத்தது அணுகுண்டின் அரசியல் வரலாறு.அவர் எழுதியுள்ள ஆங்கிலப் புத்தகம் ஒன்றும் என்.எச்.எம் வெளியீடாக 2011-ல் வெளிவரும்.

     

சமையல் புத்தகங்கள் பலவற்றை 2009-ல் பதிப்பித்தோம். 2010-ல் கொஞ்சமாக விடுமுறை. வெகுசில புத்தகங்கள்தான் கொண்டுவந்துள்ளோம். ஆனால், நேரடியான சமையல் புத்தகமாக இல்லாமல், மிக சுவாரசியமான புத்தகம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளோம். சமையல் சுல்தான் என்ற இந்தப் புத்தகத்தை எழுதியவர் ஃபைவ் ஸ்டார் செஃப் சுல்தான் என்பவர். இது தொடராக 1990-களில் ஆனந்தவிகடனில் வெளியானது. 2010-ல் ஒரு நாள் மதியம் சுல்தான் என்னைப் பார்க்க வந்தார். தன்னை அறிமுகம் செய்துகொண்டார். தான் ஷெராடன் குழுமத்தின் பணியாற்றியதாகவும் இப்போது தனியாளாக காண்ட்ராக்ட் வேலைகள் செய்வதாகவும் சொன்னார். உதாரணமாக தில்லி காமன்வெல்த் போட்டிகளின்போது சமையல் ஒப்பந்தம் பெற்ற ஒரு சிலரில் இவரும் ஒருவர். பில் கிளிண்டன், சதாம் ஹுசேன் போன்ற வெளிநாட்டுப் பிரபலங்கள் முதல், சென்னையின் பல அரசியல்வாதிகள், மந்திரிகள், நடிகர்கள் என்று பலருக்குச் சமையல் செய்துபோட்டிருக்கிறார். திப்பு சுல்தான் காலத்துச் சமையல் குறித்தும் பாண்டியர் காலத்துச் சமையல் குறித்தும் ஆராய்ச்சிகள் செய்துவருகிறார். அவ்வளவு சுவாரசியமான மனிதர். தன் அனுபவம் ஒவ்வொன்றுடன் ஒரு பிரத்யேக ரெசிப்பியும் சேர்த்துக் கொடுத்துள்ளார் இவர். சமைக்கத் தெரியுமோ அல்லது சாப்பிட மட்டும் தெரியுமோ, எப்படியாயினும் இந்தப் புத்தக்த்தை நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள்.

(தொடரும்)
சர்ச்சைக்குள் ஒரு சவாரி

2010ம் ஆண்டு இந்தியாவில் அதிகம் உச்சரிக்கப்பட்ட சொற்கள் மூன்று. ஸ்பெக்ட்ரம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆ. இராசா.

ஒரு லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் கோடி என்கிற எண் இதன்மூலம் இந்திய சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டது. நீரா ராடியா என்று தொடங்கி ராசாத்தி அம்மாளின் ஆடிட்டர் என்பது வரை இது தொடர்பான துணைக் கதாபாத்திரங்கள் வரிசைப்படுத்தப்பட்டு, குற்றச்சாட்டுகள், வழக்குகள், ஆவேசப் பேச்சுகள், ஆர்ப்பாட்டங்கள் என்று தேசமே அமர்க்களப்பட்டது. பேசாமல் விடுமுறை அறிவித்திருக்கலாம் என்று நினைக்குமளவுக்கு நாடாளுமன்றம் முற்றிலுமாக இயங்காமல் போனது.

நாடாளுமன்றத்தில்தான் பேச முடியவில்லையே தவிர நாடு முழுதும் இதே பேச்சுத்தான். ஆனால் யாருக்கு என்ன புரிந்தது என்பது பற்றி உறுதியாகச் சொல்ல முடியாது. ஆ. ராசா ஏதோ மிகப்பெரிய ஊழல் செய்துவிட்டார். வரலாறு காணாத தொகை. மாட்டுத்தீவன ஊழலோ, சவப்பெட்டி ஊழலோ, சொத்துக்குவிப்பு வழக்கோ இத்தனை பெரிய தொகையைச் சுமந்ததில்லை. இது பெரிது. மிகப்பெரிது. ஒன்றேமுக்கால் லட்சம் கோடி. ஆனால் எதில் ஊழல்? எப்படி ஊழல்?

ஸ்பெக்ட்ரம் என்பது ஏதோ ஒரு நிறுவனம் போலிருக்கிறது. போஃபர்ஸ் என்பது பீரங்கித் தயாரிப்பு நிறுவனத்தின் பெயராக இருப்பது போல. இல்லையா? வேறு? என்னவோ பங்கீட்டுப் பிரச்னை என்றல்லவா சொல்கிறார்கள்? நதி நீர்ப் பங்கீடு, நிலப் பங்கீடு போலவா? உரிமை? லைசென்ஸ்? ம்ஹும். ஒன்றும் புரியவில்லை. பேப்பரில் என்ன போட்டிருக்கிறார்கள், பார்ப்போம்.

நாளிதழ்கள் பக்கம் பக்கமாக எழுதின. வார இதழ்கள் வண்ணவண்ணமாக எழுதின. ஆ. இராசாவின் ஸ்பெக்ட்ரம் ஊழல். ஒண்ணே முக்கால் லட்சம் கோடி. ஆராசாவே, பதவி விலகு. எல்லா டெலிபோன் பேச்சுகளும் கேட்டாகிவிட்டது. இனி விவரிக்க ஒன்றுமில்லை. ஊழல் மன்னன் ஒழிக.

அவ்வளவுதானா? அவ்வளவுதான்.

அலைப்பரவல் என்றால் என்ன, அதில் பங்கீடு என்றால் என்ன, இதை எப்படிச் செய்கிறார்கள், ஏன் செய்ய வேண்டும், யாருக்குச் செய்கிறார்கள், இதில் ஏலம் எப்படி வருகிறது, ஊழலுக்கான சாத்தியங்கள் எங்கே இருக்கிறது, இப்போது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை என்ன, சி.ஏ.ஜி. அறிக்கை சொல்வதை யாராவது முழுதாக வாசித்திருக்கிறார்களா? வாசித்துவிட்டுத்தான் எழுதுகிறார்களா, பேசுகிறார்களா – மூச். ஊழல் நடந்துவிட்டது. தீர்ந்தது விஷயம்.

ஆனால் அத்தனை எளிதாகக் குற்றம் சாட்டிவிடக்கூடிய விஷயம் இல்லை இது. நிறைய நுணுக்கங்கள் கொண்ட மிகச் சிக்கலான விவகாரம். திறந்த மனத்துடன், பாரபட்சமின்றி அணுகும்போதுதான் இதன் சகல பரிமாணங்களையும் விளங்கிக்கொள்ள முடியும்.

பிரச்னை, நாம் எளிதில் உணர்ச்சிவசப்பட்டுவிடுவது. ஓங்கிக் குரல் கொடுத்ததே மறந்துபோய் வெகு விரைவில் இன்னொன்றைப் பிடித்துக்கொண்டு அதற்குக் குரல் கொடுக்க ஆரம்பித்துவிடுவது. அதான் ராசா பதவி விலகிவிட்டாரே? இனி என்ன, அடுத்த வேலையைப் பார்.

சிரிக்கத்தான் வேண்டும்.

0

ஸ்பெக்ட்ரம் சர்ச்சையின் முழுப் பரிமாணமும் புரியவேண்டுமானால் ஸ்பெக்ட்ரம் என்பதன் அறிவியல் முதலில் புரியவேண்டும். மொபைல் தொழில்நுட்பத் துறையில் இதன் முக்கியத்துவம் என்னவென்று உணரவேண்டும். இதிலுள்ள வர்த்தக சாத்தியங்கள் சாதாரணமானதல்ல. அதே சமயம், ஓர் ஒதுக்கீட்டைப் பெறுவதன்மூலம் மட்டுமே கோடிகளில் குளித்துவிடலாம் என்பதுமல்ல. ஐரோப்பாவில் அலைப்பரவல் இட ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் சில தலையில் துண்டைப்போட்டுக்கொள்ள நேர்ந்த குறுங்கதை ஒன்று இந்தப் புத்தகத்தில் வருகிறது. அந்தப் பகுதியை வாசிக்கும்போது இந்த உண்மை புரியும்.

இதற்கெல்லாம் பிறகுதான் இதில் அரசியல் வருகிறது. எனவே, அதற்கும் பிறகுதான் ஊழல்.

ஊழலுக்கான சாத்தியங்கள் தெளிவாக உள்ள விவகாரம்தான் இது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒன்றே முக்கால் லட்சம் கோடிகளுக்கு ஊழல் என்பது, விஷயத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு என்கிறார், நூலாசிரியர். சுய அபிப்பிராயத் திணிப்பு விருப்பமோ, சார்பு நிலையோ ஆசிரியருக்குச் சற்றும் கிடையாது. சி.ஏ.ஜி. அறிக்கையின் அடிப்படையில் இந்த விஷயத்தைப் படிப்படியாக விளக்குகிறார்.

அறிவியலில் தொடங்கி அரசியலில் முடிவுறும் இந்த விவகாரத்தில்தான் எத்தனை பெரும்புள்ளிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்! ஒவ்வொருவரின் தொடர்புக்கும் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது. ஆனால் அதுவல்ல; பிரச்னையைச் சரியாகப் புரிந்துகொள்ள முதல் முறையாகத் தமிழ் வாசகர்களுக்கு இந்நூல் ஒரு வாய்ப்பளிப்பதுதான் முக்கியமானது.

ஆ. இராசா ஊழல் செய்தாரா இல்லையா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். வெகு நிச்சயமாக ஒன்றே முக்கால் லட்சம் கோடிகளுக்கு இதில் ஊழல் நடைபெற்றிருக்க அறிவியல்பூர்வமாக வாய்ப்பே இல்லை என்பதை அறியவேண்டியதுதான் முக்கியம்.

அதைத்தான் விளக்குகிறது இந்நூல். ஊழலைப் புரிந்துகொள்வதுடன்கூட, ஸ்பெக்ட்ரம் என்னும் மின்காந்தப் பெருவெளியின் அறிவியலையும் நாம் மிக எளிதாக அறியமுடிவது இதன் சிறப்பம்சம்.

[சென்னை புத்தகக் காட்சி 2011ல் வெளியாகவுள்ள பத்ரியின் ‘ஸ்பெக்ட்ரம் சர்ச்சை’ நூலுக்கு எழுதிய முன்னுரை.]


இரு பெரும் பிரச்னைகள்? இரு முக்கியமான புத்தகங்கள்

இன்றைய இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன? யாரிடம் கேட்கிறீர்கள் என்பதைப் பொருத்து ஏகப்பட்ட பதில்கள் கிடைக்கும்.

ஊழல்? இந்து மதவாதம்? இஸ்லாமிய தீவிரவாதம்? மாவோயிச பயங்கரவாதம்? உலகமயத்தாலும் தாராளமயத்தாலும் ஏற்படும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பழங்குடியினர் வாழ்வாதாரப் பிரச்னை? காஷ்மீர் பிரச்னை, அதன் விளைவாக ஏற்படும் இந்தியா-பாகிஸ்தான் போர் அபாயம்? அஸ்ஸாம், பிற வட கிழக்கு இந்தியப் பிரச்னைகள்?

இன்னும் பலவற்றையும் பலர் சொல்வீர்கள். அவற்றில் இரண்டை மட்டும் பார்ப்போம்.

காஷ்மீர் பிரச்னையை நாம் முழுவதுமாகப் புரிந்துகொண்டிருக்கிறோமா என்று தெரியவில்லை. காஷ்மீர் (அல்லது ஜம்மு காஷ்மீர்) என்பது இந்தியாவின் பிரிக்கமுடியாத ஒரு பகுதி, இதில் மறு பேச்சுக்கே இடமில்லை என்பது ஒரு தரப்பு. இந்தியாவில் பெரும்பான்மையினரின் தரப்பும் இதுதான். ஆனால் இது நியாயமான ஒரு வாதமா? மறுபக்கம் அருந்ததி ராய் போன்றோரின் தரப்பு. எந்தப் பகுதி மக்களுக்கும் நியாயமான சுய நிர்ணய உரிமை இருக்கவேண்டும்; அப்படி அவர்களுக்கு அந்த உரிமையைத் தராமல் ராணுவத்தை அனுப்பி அவர்களை நசுக்குவது மனித உரிமை மீறல் என்னும் வாதம். உலகின் எந்த ‘ஆக்ரமிப்பு’ ராணுவமுமே கற்களுக்கு பதில் புல்லட்டையும் நியாயமான எதிர்ப்புக்கு பதில் சித்திரவதையையுமே கொடுத்துள்ளனர். இந்திய ராணுவம் இதற்கு விதிவிலக்கல்ல. மணிப்பூர் முதல் காஷ்மீர் வரை நாம் இதைத்தான் பார்த்துள்ளோம்.

காஷ்மீரிகள் நியாயமாக எதனை விரும்பினர்? ஹரிசிங் யார்? அவரது ‘லெகசி’ என்ன? 1947-ல் காஷ்மீருக்குள் ஊடுருவிய பதான்கள் ஏன் அங்கு வந்தனர், என்ன செய்தனர்? அதன் பின்விளைவுகள் என்ன? நேரு, சாஸ்திரி, இந்திரா முத;ல் இன்றுவரை இந்திய ஆட்சியாளர்கள் காஷ்மீர் பற்றி எந்தக் கொள்கைகளைக் கொண்டிருந்தனர்? நேருவுக்குப் பின் அது எப்படி மாற்றம் அடைந்தது? காஷ்மீர் இஸ்லாமியத் தீவிரவாத அலைக்குள் எப்படிச் சிக்கிக்கொண்டது? ஜம்மு பகுதியில் தீவிரமாக உள்ள ஆர்.எஸ்.எஸ் காஷ்மீர் பிரச்னையில் எடுத்துள்ள நிலை என்ன? ஷ்யாமா பிரசாத் முகர்ஜி என்பவர் யார்? அவருக்கு காஷ்மீரில் என்ன ஆனது?

இதற்கெல்லாம் முன்னதாக ஜம்மு காஷ்மீர் என்று நாம் அழைக்கும் பகுதியின் புவியியல் அமைப்பு என்ன? காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக், வடக்குப் பகுதிகள், பாக் ஆக்ரமிப்பு காஷ்மீர் அல்லது ஆஸாத் காஷ்மீர், சீனாவிடம் போன துண்டு துணுக்குப் பகுதிகள், இவை பற்றிய புரிதல்.

ஷேக் அப்துல்லா, காஷ்மீரின் சிங்கம் எனப்படுபவர். அவர் நேரு காலத்திலிருந்து ஏன் சிறையில் அடைக்கப்பட்டபடி இருந்தார்? காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும்தான் அவருக்கு செல்வாக்கு உண்டு என்பது தெரியுமா? அவரிலிருந்து தொடங்கி இன்று அவர் பேரன்வரை காஷ்மீர் பிரச்னையில் என்ன சொல்கிறார்கள்?

போராட்டம் அல்ல நாங்கள் செய்வது, விடுதலை அல்ல எங்கள் இலக்கு, எங்கள் இலக்கெல்லாம் ஜிஹாத் ஜிஹாத் ஜிஹாத் என்று காஷ்மீர் போராட்டத்தின் திசையையே மாற்றிய ஆஃப்கனிலிருந்து இந்தியா வந்த இஸ்லாமிய கூலிப்படை பற்றி நாம் என்ன தெரிந்துகொள்ளவேண்டும்?

சரி, இனி அடுத்து என்ன ஆகப்போகிறது? தீர்வுதான் என்ன?

பா.ராகவனின் காஷ்மீர் பற்றிய புத்தகம் உங்களுக்கு இந்தப் பிரச்னை பற்றிய நல்ல ஒரு புரிதலைத் தரும் என்று நம்புகிறேன்.

---

சமீபத்தில் ராகுல் காந்தி - விக்கிலீக்ஸ் ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ராகுல் காந்தி அமெரிக்கத் தூதரிடம் பேசியதை அவர் ஓர் அறிக்கையாக அமெரிக்கா அனுப்ப, அங்கிருந்து அது ஜூலியன் அஸாஞ்ச் மார்க்கமாக இணையவெளியில் பரவ, இந்தியப் பத்திரிகைகள் அதைக் கைமா செய்துவிட்டன. ராகுல் காந்தி என்னவோ இந்துக்கள்தான் இந்தியாவில் தீவிரவாதச் செயலைச் செய்கின்றனர், லஷ்கர்-ஈ-தோய்பாவை விட மோசமானவர்கள் அவர்கள்தான் என்று சொன்னதுபோலச் செய்திகள் பரவின. ராகுல் காந்தி சொன்னதுஇவ்வளவுதான்:
Responding to the Ambassador's query about Lashkar-e-Taiba's activities in the region and immediate threat to India, Gandhi said there was evidence of some support for the group among certain elements in India's indigenous Muslim community. However, Gandhi warned, the bigger threat may be the growth of radicalized Hindu groups, which create religious tensions and political confrontations with the Muslim community.
லஷ்கர்-ஈ-தோய்பா, இந்தியாவுக்குப் பிரச்னைதான். அதனால் உந்தப்பட்டு சில இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது பிரச்னைதான். ஆனால்... அதையெல்லாம் விடப் பெரிய பிரச்னை தீவிரவாதச் சிந்தனை கொண்ட இந்துக் குழுக்கள் உருவாகி, முஸ்லிம் சமூகத்துடன் அவை அரசியல்ரீதியாக மோதி, அதன் விளைவாக மதக் கலவரங்கள் ஏற்படுவதுதான்.

இது மிகச் சரியான சிந்தனை. இவ்வாறு பேசியதற்காக நாம் ராகுல் காந்தியைப் பாராட்டவேண்டும். மதரீதியாக இந்தியாவில் பிரச்னைகள் ஏற்பட்டு, இந்தியாவின் இதயத்தைக் கிழித்து ரத்தம் சிந்தவைத்துள்ளன. தேசப் பிரிவினைக்கு முன்பிருந்து தொடங்கி, பின் பிரிவினையில் அதன் உச்சத்தைத் தொட்டு, பின் கொஞ்சம் கொஞ்சமாக ஆறிய ரணம், அயோத்திப் பிரச்னையில் கொழுந்துவிட்டு எரிந்தது. அங்கிருந்து தொடங்கி, மும்பையில் ஏற்பட்ட தாவூத் கோஷ்டி குண்டுவெடிப்புகள், மும்பைக் கலவரங்கள், பின் கோத்ரா ரயில் எரிப்பு, தொடர்ந்து குஜராத்தில் நடந்த திட்டமிட்ட படுகொலைகள், இந்தியாவின் பல பெரு நகரங்களில் வைக்கப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகள், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் மும்பையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்... என்று இது இன்றும் தொடர்கிறது.

இந்த போலரைசேஷனுக்கு யார் காரணம்? தீவிரச் சிந்தனைகள்தான் தீவிரச் செயல்களுக்கு இட்டுச் செல்கிறது.

இந்தியா என்பது இந்து தேசமா? இங்கு இந்துக்களுக்கு மட்டும்தான் இடமா? தேசப் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்குச் சென்றிருக்கவேண்டியவர்கள் என்று முஸ்லிம்களை இன்றும் தொடர்ந்து ஊசிபோலக் குத்துவது யார்? முஸ்லிம்களை அவர்களுக்குரிய இடத்தில் வைக்கவேண்டும் என்ற எண்ணம் யாரிடமெல்லாம் இருக்கிறது?

ஆர்.எஸ்.எஸ் என்ற ஓர் அமைப்பு எதற்காகத் தொடங்கப்பட்டது? அதன் குறிக்கோள் என்ன? தேசம் என்பதற்கான அதன் வரையறைகள் என்ன? அதன் குறிக்கோளுக்கும் காந்தியின் கருத்துகளுக்கும் என்ன தொடர்பு அல்லது விலகல்? நவீன இந்திய தேசத்தின் வலுமிக்க அமைப்புகளை (அரசியல் அமைப்புச் சட்டம், நாடாளுமன்றக் குடியாட்சி முறை) உருவாக்கிய அம்பேத்கர், நேரு கருத்துகள் பற்றி ஆர்.எஸ்.எஸ் என்ன சொல்கிறது?

இன்று ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ராஷ்டிரிய சுவயம்சேவக் சங்கம் இந்தியாவில் அசைக்கமுடியாத ஓர் அமைப்பு. அதன் கருத்துகள் பழமைவாதம் பேசுபவையா? அல்லது வலுவான இந்திய தேசத்தை அமைக்க உதவுபவையா? இந்து-முஸ்லிம் பிரச்னைகள் அனைத்துக்கும் அடிப்படையில் இருப்பது ஆர்.எஸ்.எஸ்ஸா? ஆர்.எஸ்.எஸ் இருக்கும்வரை இந்த நாட்டில் அனைவரும் அமைதியாக இருக்கமுடியுமா?

கேள்விகள் என்னுடையவை. பா.ராகவனின் புத்தகத்தில் பதில்கள் இருக்கும். கட்டாயமாக வாங்கிப்  படித்துவிடுங்கள்.
---

முதல் இரவு, முதல் குழந்தை மற்றும்…

விருதகிரியைவிடக் கொடுமையான ஒரு விஷயம் உலகில் உண்டு. புத்தம்புதிதாக ஒருத்தரைக் கண்டுபிடித்து, ஒரு சப்ஜெக்ட் தீர்மானித்து, அவரை ஓர் உருப்படியான புத்தகம் எழுத வைப்பது. ஒவ்வொரு வருடமும் குறைந்தது பதினைந்து முதல் இருபது பேரிடமாவது நான் இந்த விளையாட்டை விளையாடுகிறேன். என்னைத் தோற்கடிப்பதில் அளப்பரிய ஆர்வம் கொண்ட நல்லன்பர்கள், சொல்லி சொல்லி அழவைத்து பதில் விளையாட்டு விளையாடுவார்கள். நானும் நிறுத்துவதில்லை, அவர்களும் விடுவதில்லை. இது ஒரு கிழக்கு காஃபி டாஃபி.

ஆனால் அபூர்வமாகச் சிலர் கற்பூரமாக அமைந்துவிடுவதுண்டு. சொல்லித்தரவே வேண்டாம். பெரிய முயற்சிகள் வேண்டாம். கொஞ்சம் அங்கே இங்கே தட்டிச் சரிசெய்தால் போதும், நானொரு சிற்பம் என்று எழுந்து நிற்கும் மாமல்லைக் கலைக்கற்கள்.

இந்த வருடம் கிழக்கில் அறிமுகமாகியிருக்கும் அப்படியொரு நல்ல எழுத்தாளர் பாலா ஜெயராமன். பாலாவை எனக்குப் பரிச்சயம் கிடையாது. அவர் ஒரு தமிழ் விக்கிபீடியாக்காரர் என்னும் அளவில் கொஞ்சம் பயம் மட்டும் இருந்தது. எனக்குத் தமிழ் விக்கிபீடியாவின் தமிழுக்கும் ஜெர்மானிய, இசுப்பானிய, இத்தாலிய மொழிகளுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது என்றொரு அபிப்பிராயம் உண்டு. உண்மையில், இந்த மனிதரின் தமிழ் எப்படி இருக்கப்போகிறதோ என்கிற அச்சத்துடன்தான் அவருடைய முதல் புத்தகமான கடல் கொள்ளையர் வரலாறை ஆரம்பித்தேன். ஆனால் அவர் புத்தகம் எழுத ஆரம்பிப்பதற்கு முன்னால் அனுப்பிய அத்தியாயச் சுருக்க அட்டவணையிலேயே தெரிந்துவிட்டது. கலப்படமில்லாத, சுத்தமான, அதே சமயம் வாசிப்பு சுவாரசியத்துக்கு ஊறு செய்யாத மொழி அவருடையது. தவிரவும் நிறையப் படிக்கிற மனிதர். எழுத்தைக் கூர்மையாக்க, படிப்பினைப் போல் சிறந்த உபாயம் வேறில்லை.

பாலாவின் கடல் கொள்ளையர் வரலாறு, இந்த வருடம் நான் ரசித்த புத்தகங்களுள் ஒன்றாகிப் போனது. புதிய களம். புதிய தகவல்கள். சரித்திரமும் சாகசமும் கைகோக்கும் வரலாறு. எடுத்தால் வைக்கமுடியாத விறுவிறுப்புடன் ஓடுகிற புஸ்தகம். இதைப் படித்த சூட்டில்தான் அவரை உடனே தமிழ் பேப்பரில் வில்லாதிவில்லன் எழுதச் சொன்னேன். நல்ல நான் – ஃபிக்‌ஷன் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.

பாலாவின் ‘அணுகுண்டின் அரசியல் வரலாறு’, புத்தகக் கண்காட்சிக்கு வரப்போகிற அவருடைய இரண்டாவது புத்தகம். அடுத்த வருடம் நான் மிக அதிகம் எதிர்பார்க்கிற எழுத்தாளர்களுள் பாலா முக்கியமானவராகிறார்.

இரண்டாவது நபர், கே.ஜி. ஜவார்லால். இப்படி ஒரு எழுத்தாளர் இணையத்தில் இருக்கிறார், படித்துப் பாருங்கள் என்று எனக்கு இவரை அறிமுகப்படுத்தியது சொக்கன். ஓசூரில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்த ஜவார்லாலை நான் அழைத்த நேரம், அவர் வி.ஆர்.எஸ். வாங்கிக்கொண்டு சென்னைக்கு இடம் பெயரத் தயாராகிக்கொண்டிருந்தார். எழுதுவதில் அவருக்கு இருந்த கட்டுக்கடங்காத ஆர்வம்தான் அவருடைய வி.ஆர்.எஸ்ஸுக்குக் காரணம் என்று தெரிந்தது. இசையமைப்பாளராகவேண்டும் என்று கூட ஓர் உபரி ஆர்வம் அவருக்கு இருந்தது. முதல் சந்திப்பில் அவர் இசையமைத்த பாட்டு ஒன்றை எனக்குப் போட்டுக்காட்டி எப்படி இருக்கிறது என்று கேட்டார். ‘நன்றாக எழுதுகிறீர்கள், கொஞ்சம் மெனக்கெட்டால் ரொம்ப நல்ல எழுத்தாளராக உங்களால் வரமுடியும்’ என்று மிக நேரடியாக பதில் சொன்னேன்.

புரிந்துகொண்டுவிட்டார் என்று நினைக்கிறேன். அவருடைய ஜென் கதைகள் புத்தகமும் திருக்குறள் வழியே உருப்படுபுத்தகமும் எழுதப்பட்ட கால அவகாசம் அறிந்தால் வாய் பிளப்பீர்கள். வேகமாக எழுதுவது, தரமான எழுத்துக்கு எந்த இடைஞ்சலும் தராது என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஜவார்லால். சரளமான, அழகான மொழி. சொல்ல வரும் விஷயத்தைச் சுற்றி வளைக்காமல் நேரடியாகச் சொல்லும் பாங்கு. முந்திரித் தூவலாக முறுவல் வரச்செய்யும் நகைச்சுவை. ஜவார்லாலின் ‘உருப்படு’, திருக்குறளை ஒரு சுயமுன்னேற்ற நூலாக மறு அறிமுகம் செய்யும் புத்தகம். தமிழின் முதல் சோம. வள்ளியப்பன் திருவள்ளுவர்தான் என்று சொல்கிறது இது. படிப்பதற்கு ரொம்ப ஜாலியாக இருந்தது.

அடுத்தவர் கலையரசன். எனக்கு இவருடன் பரிச்சயம் கிடையாது. படித்ததும் கிடையாது. வலையுலகில் இவருடைய எழுத்தைப் படித்து, புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் வாழ்க்கை நிலை குறித்த ஒரு புத்தகத்துக்காகப் பேசிக்கொண்டிருந்தது, மருதன். அந்தப் புத்தகம் எழுதப்பட்டுக்கொண்டிருந்தபோதுகூட எனக்குத் தெரியாது. எடிட்டிங்கில் இருந்ததையும் அறியேன். முழுக்க முடித்த பிறகு மருதன் எனக்கு அகதி வாழ்க்கை நூலின்பிடிஎஃப்பை அனுப்பிப் பார்க்கச் சொன்னான்.

இதுவரை சரியாகப் பேசப்படாத ஒரு வாழ்வின் சரியான, நேர்த்தியான, உண்மையான பதிவாக அந்த நூல் இருந்தது. கலையரசன், தமது சுய அனுபவங்களின் அடிப்படையில் எழுதியிருப்பது இந்நூலின் மிகப்பெரிய பலம். கலையரசன் இன்னொரு புத்தகமும் எழுதியிருக்கிறார் என்பது இதை எழுதிக்கொண்டிருக்கும்போதுதான் எனக்குத் தெரியும்.

அப்புறம், சஞ்சீவியின் பேய் என்சைக்ளோபீடியா. நீங்கள் பழைய பாக்யா வாசகராக இருப்பீர்களானால் சஞ்சீவியைத் தெரிந்திருக்கும். ஒரு நவீன பி.டி. சாமியாக அவருக்கு அங்கே ஒரு ஸ்பெஷல் வாசகர் வட்டம் இருந்தது. இவரையும் இந்தாண்டு, கிழக்குக்கு எழுத அழைத்து வந்தது மருதன் தான். அவரது ஹோம் கிரவுண்டான பேய் குறித்தே எழுத வைக்க முடிவு செய்தோம். ஆனால் வெறும் பேய்க் கதைகளாக அல்லாமல், பேய்களைக் குறித்த ஒரு குட்டி என்சைக்ளோபீடியா மாதிரி செய்யவேண்டும் என்று தீர்மானித்தோம். கதைகள், நம்பிக்கைகள், அறிவியல், உளவியல் நான்கும் கலந்த இந்த நூல், கிழக்கின் பாணிக்குச் சற்றே புதிது.

இந்தப் புத்தகத்தை எடிட் செய்யச் சொல்லி முகிலிடம் கொடுத்திருந்தபோது, அப்போதுதான் அவனுக்குத் திருமணமாகியிருந்தது. இப்படியெல்லாம் ஒரு சிறுவனை இம்சிக்கலாமா என்று அந்தராத்மா குடைச்சல் கொடுக்காமல் இல்லை. ஆனாலும் அந்தப் புத்தகத்துக்கு வேண்டிய அழகை அவனால்தான் கொடுக்க முடியும் என்று நம்பினேன். இதுவும் கண்காட்சிக்கு வருகிறது. படித்துவிட்டுச் சொல்லுங்கள்.

கட்டக்கடைசியாக என் ஜிகிரி தோஸ்துகள். வலைப்பதிவிலும் ட்விட்டரிலும் பல்லாண்டு காலமாக  மொக்கை போட்டுக்கொண்டிருந்த பெனாத்தலை ஒரு வழியாக இந்த வருடம் ராம்சுரேஷ் ஆக்கி, சீவக சிந்தாமணியை நாவல் வடிவில் எழுத வைத்தேன். கையோடு பிரபல வாரப் பத்திரிகைகளில் சிறுகதைகள், உலகப்பிரசித்தி பெற்ற ;) தமிழ் பேப்பரில் ஒரு தொடர்கதை, சூடு குறையாமல் இன்னொரு சூப்பர் நாவல் [கூடிய சீக்கிரம் வரப்போகிறது.] என்று மனிதர் பொளந்து கட்டிக்கொண்டிருக்கிறார். சீவக சிந்தாமணி மாதிரி பல சிடுக்குகள் கொண்ட ஒரு மகாப்பெரிய காவியத்தை மாசநாவல் வாசிக்கிற மாதிரி வாசிக்க வைக்க முடியும் என்பதே நம்புவதற்குச் சற்று கஷ்டமான விஷயம்.  [முன்னர் குறிப்பிட்ட ஜவார்லால் இந்த வரிசையில்  இந்த வருடம் எழுதிய இன்னொரு புத்தகம், நாவல் வடிவில் சிலப்பதிகாரம்.]

சுரேஷின் பலம், அவருடைய வெளிப்பாட்டு முறையும் பிரச்னையில்லாத தமிழும். வெகுஜன வாசிப்புத் தளத்தில் புனைவின்மீது ஆர்வம் செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துகொண்டிருக்கும்போது, சுரேஷ் போன்ற புதிய ஸ்டைலிஸ்டுகளால் மட்டுமே இந்த சேதாரத்தின் சதவீதத்தைக் குறைக்க முடியும் என்பது என் நம்பிக்கை.

கொத்தனாரின் ஈசியா எழுதலாம் வெண்பா பற்றி நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. ஒரு தோழமை மிக்க, மடிசஞ்சித்தனம் இல்லாத, நவீன தமிழ் வாத்தியார் கிடைத்ததற்குத் தமிழ் சமூகம் அவருக்குக் கிடா வெட்டி சாராயம் படைத்து நன்றி சொல்லவேண்டும். ‘இந்த வருஷம் உங்களுக்கு மூணு ஸ்டாலாமே? பத்துமாய்யா? என் புக்வேற இருக்குது?’ என்று இரண்டு நாள் முன்பு கேட்டார். இந்த நக்கலும் நகைச்சுவை உணர்வும் தமிழ் வாத்தியார் உலகம் அறியாதவை.

எழுதுவது சுலபமான விஷயம். நன்றாக எழுதுவது கொஞ்சம் கஷ்டம். ஒரு புத்தகமாக உருவம் கொடுத்து உட்கார்ந்து முழு மூச்சாக எழுதி முடிப்பது பேஜார். இதனால்தான் ஆர்வமுடன் ஆரம்பிக்கிற பலபேர் பாதி வழியில் காணாமல் போய்விடுகிறார்கள். நான் நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு ஆர்வமுடன் வருகிறவர்களுள் ஒருவர்கூட இன்னும் நான் விரும்பக்கூடிய ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கவில்லை. [சென்ற வருடம் வகுப்புக்கு வந்தவர்களுள் ஒருவர் மட்டும் தமது முதல் புத்தகத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டார். ஆனால் வெளியாகக் கொஞ்சம் நாளாகும். வரும்போது, அவரைப் பற்றியும் அவருடைய புத்தகத்தைப் பற்றியும் எழுதுகிறேன்.]

புத்தகம் எழுதத் திறமை மட்டும் போதாது. உழைப்பு அவசியம். மேலே சொன்ன திறமையும் உழைப்பும் மிக்க புதிய எழுத்தாளர்களுக்கு உங்களுடைய வாழ்த்துகளைச் சொல்லுங்கள். முதல் இரவு, முதல் குழந்தை மாதிரிதான், முதல் புத்தகமும், அது காணும் முதல் புத்தகக் கண்காட்சியும்கூட.


தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு
http://www.jeyamohan.in/?p=84
2000 வரையிலான சிறந்த தமிழ் நாட்டுத் தமிழ் நாவல்கள் இவை என்பது என் துணிபு. முழுமையான நாவல்கள் கிடைக்காத நிலையில் என் வாசிப்பு பற்றிய தன்னம்பிக்கை இலங்கைப் படைப்புகள் விஷயத்தில் உறுதிப்படவில்லை. எனவே அவை பற்றிய பட்டியல் தவிர்க்கப்பட்டுள்ளது. ஒரு சிறந்த இலங்கை விமரிசகர் அப்பட்டியலை தயாரிக்க வேண்டும்.நாவல் என்பதை வரையறுத்து நான் ஒரு நூல் எழுதியுள்ளேன் ‘நாவல் ‘ (1992), அவ்வரையறையை ஏற்கும், படைப்பூக்கத்துடன் மீறும் படைப்புகளே இங்கு பரிசீலிக்கப்பட்டுள்ளன.

இலக்கியம் கற்பனையை அறிதல் முறையாகப் பயன்படுத்தி வாழ்வை மதிப்பிட முயலும் ஒரு துறை. இதில் நாவல் என்பது வரலாற்றையும் தத்துவத்தையும் உள்ளடக்கி, வாழ்வு குறித்த முழுமையான தேடலை நிகழ்த்தும் ஒரு இலக்கிய வடிவம். இவ்வடிப்படையிலேயே இங்கு படைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மொழித்திறனும் வடிவ ஒழுங்கும் இருந்தாலும் கூட வாழ்வு குறித்த சுயமான தேடல் இன்றி வாசகனை மகிழ்விப்பதற்காக எழுதப்பட்ட படைப்புகள் பொழுதுபோக்கு எழுத்தாக கருதப்பட்டுள்ளன. இவற்றில் ஒவ்வொரு நூலைப்பற்றியும் தேவை ஏற்படின் ஒரு புத்தகம் அளவுக்கு என்னால் விவாதித்து நிறுவ முடியும் என்பதையே இப்பட்டியலின் ஆதாரவலிமை என்று கூறுவேன்; இவை வாசகனின் சிபாரிசுகளல்ல, விமரிசகனின் சிபாரிசுகள்.

–ஜெயமோகன்

முதற்பத்து
தர அடிப்படையில்

1) விஷ்ணுபுரம் – ஜெயமோகன்

2) பின் தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன்.

3) புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்.

4) ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி

5) மோகமுள் – தி.ஜானகிராமன்.

6) பொய்த்தேவு – க.நா.சுப்ரமணியம்.

7) ஜெ.ஜெ. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி.

 தலைமுறைகள் – நீல பத்மநாபன்.

9) கிருஷ்ணப் பருந்து – ஆ.மாதவன்.

10) மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்.

அ. விமரிசகனின் சிபாரிசு.

சிறந்த தமிழ் நாவல்கள்.

1.) பிரதாப முதலியார் சரித்திரம் — மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

இது முதல் தமிழ் நாவல் எனப்படுகிறது. மேற்கத்திய ‘ரொமான்ஸ் ‘ வகை எழுத்தை முன் மாதிரியாகக் கொண்டது. மேலோட்டமான விகடத் துணுக்குகள், (இந்தக் கடிதம் கிடைக்கவில்லை என்றால் பதில் எழுது. வேறு கடிதம் அனுப்புகிறேன்) அனுபவ விவரசனகள், நல்லு ஆகியவற்றுடன் ஒரு நிலப்பிரபுவின் கதையை, சுயசரிதை போல, கூறுகிறது.

1879ல் பிரசுரமாயிற்று.

2.) கமலாம்பாள் சரித்திரம் — ராஜம் அய்யர்.

இளம் வயதில் (24) இறந்துபோன இந்த வேதாந்தி பாரதம் இதழின் ஆசிரியராக இருந்தவர், விவேகானந்தரின் சீடர். முழுமை பெறாத கலைத்திறனும் முழுமைபெறாத வேதாந்தத் தேடலும் உடையதாயினும் ஆழ்ந்த கவனத்திற்குரிய முதல் நாவல். கதாநாயகனின் பாலிய விவாகத்தின் போது அவனது மறைமுகக் காமக் குமுறல்களை நளினமாகச் சுட்டியிருக்கும் இடம் ஆசிரியரின் நுண்ணுணர்வுக்கு ஆதாரம். ஆரு சாப்பட்டி அம்மையப்ப பிள்ளையின் சித்தரிப்பு அவரது நகைச்சுவையுணர்வுக்கும்.

1896ல் வெளிவந்தது.

3.) பத்மாவதி சரித்திரம் —– மாதவையா.

தமிழின் சமூக சீர்திருத்த நாவல்களின் முன்னோடி. இதிகாசவேர் உள்ள பெண்ணின் சோக வரலாறு. பத்மாவதியை கணவன் ஐயப்படும் இடங்களை இன்று படிக்கையில் நூறு வருடம் கழித்துக் கூட தமிழ்ச்சமூகச் சூழலும், ஆணின் மனநிலையும் மாறவில்லை என்று தெரிய வரலாம்.

1898ல் பிரசுரமாயிற்று.

4.) பொய்த்தேவு —— க. நா. சுப்பிரமணியம்.

தமிழின் முதல் நாவல் என்று ஐயமின்றி கூறலாம். நாவல் என்ற விசேஷ வடிவத்தைப் பற்றிய பிரக்ஞையுடன் எழுதப்பட்ட முதல் படைப்பு. சோமு முதலி என்ற கதாபாத்திரத்தின் முழுவாழ்க்கையை முன்வைத்து வாழ்வின் சாரமான பொருளென்ன என்று தேடும் படைப்பு ஒரு காலை வேதாந்தத்திலும் மறுகாலை இருத்தலியத்திலும் ஊன்றி நிற்கும் காத்திரமான ஆக்கம் சோமுவை சிறுவயது முதல் தொடரும் அந்த மணியோசை நாவலில் கவித்துவத்தின் அபாரசத்தியங்களைப் பற்றி தமிழுக்கு கற்பித்தது.

1946ல் பிரமாயிற்று.

5.) ஒரு நாள் ——- க.நா. சுப்பிரமணியம்.

குறுநாவல் என்று கூறலாம். மேஜர் மூர்த்தி என்ற முன்னாள் ராணுவ வீரன் உலகம் முழுக்க சுற்றிவிட்டு நூற்றாண்டுகளாக மாறாமல் இருக்கும் சாத்தூர் சர்வமானிய அக்ரஹாரத்திற்கு வந்து ஒரு நாளை கழிக்கிறான். விதவைகளும் வம்பு கிழவர்களும் கூரிய அவதானியப்புடன் சித்தரிக்கப்பட்டுள்ளனர். உலகம் சுற்றிய ஆண் அடுக்களை விட்டு வெளியேறாத பெண்ணுக்கு (மங்களம்) வாழ்நாள் முழுக்க கட்டுப்படப் போகிறான் என்ற நுட்பமான உட்குறிப்புடன் முடியும் இந்நூல் இத்தகைய குறிப்புணர்த்தல்கள் மூலமே பெரும் படைப்பாக ஆகிறது.

1950ல் பிரசுரமாயிற்று.

6.) வாடிவாசல் ——- சி.சு. செல்லப்பா.

உண்மையில் ஒரு நீண்ட சிறுகதை ஆனால் நாவலாகக் கூறப்படுகிறது. மதுரைப்பக்க கிராமம் ஒன்றில் உயிரைப் பணயம் வைத்து காளைகளுடன் மோதும் இளைஞர்களின் கதையை திகிலான சொல்லாட்சியுடன் கூறும் வேகமான கதை. தன் தந்தையைக் கொன்ற அடங்காத காரிக்காளையை ரத்தம் சிந்தி வெல்கிறான் பிச்சி. ‘ரோஷம் ஆகாது தம்பி, மனுசனுக்கானாலும் மாட்டுக்கானாலும் ‘ என்ற அசரீரிக் குரல் தமிழ மரபுமனத்தின், கிராமிய அகத்தின் வெளிப்பாடு.

1959ல் பிரசுரமாயிற்று.

7.) மோகமுள் ——- தி.ஜானகிராமன்.

அடிப்படையில் அழகிய கதை. நாவலுக்கான விரிவும் தீவிர அகஆராய்ச்சியும் இல்லை. ஆனால் சொகுசான நடை, தளுக்கான உரையாடல்கள், உள்ளே இறங்கி உலவி வரச்செய்யும் காட்சிச் சித்தரிப்புகள், மறக்கமுடியாதபடி மனதில் பதியும் கதாபாத்திரம் சித்தரிப்புகள் ஆகியவற்றுடன் தமிழ் மனதை கொள்ளை கொண்ட படைப்பு. இசையனுபவம் மொழியை சந்திக்குமிடங்கள் இந்நாவலின் உச்சங்கள். யமுனா என்ற (தி.ஜானகிராமன் முடிவின்றி காதலித்த இலட்சிய பெண்ணுருவான) மராட்டிய பேரிளம் பெண்ணை ஒரு தலையாக காதலிக்கும் பாபு என்ற இசைக்கலைஞனின் புரிந்து கொள்ள முடியாத (அவனால்) தாகத்தின் கதை.

1956ல் பிரசுரமாயிற்று.

8.) அம்மா வந்தாள். —- தி. ஜானகிராமன்.

மரபான தமிழ் ஒழுக்கவியல் மீது ஃபிராய்டியம் ஓங்கி அடித்ததின் விளைவு. அலங்காரத்தம்மாள் தன் ( நெறிதவறியதனால் விளைந்த) குற்ற உணர்வை வெல்ல மகன் அப்புவை வேத பண்டிதனாக்க முயல்கிறாள். நெறிகளுக்கு அப்பால் உள்ள காதலின் தூய்மையை அப்பு உணர்ந்து தன்னை விரும்பும் இளம் விதவை இந்துவை ஏற்கிறான். ஜானகிராமனின் படைப்புகளில் வரும் ‘காமம் கனிந்த ‘ அழகிய பெண்கள் தமிழ் வாசகனுக்குள் பகற்கனவை விதைத்தவை. பாலகுமாரன்கள் முளைக்கும் நாற்றங்கால்.

1967ல் பிரசுரமாயிற்று.

9.) ஒரு புளிய மரத்தின் கதை ——- சுந்தரராமசாமி.

தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்று. சுவாரஸியமான நடையில் அழகிய சித்தரிப்புகளுடன் அபூர்வமான சம்பவங்களுடன் ஒரு நகரத்து தெருச்சந்திப்பில் நிற்கும் புளியமரமொன்றின் வாழ்வையும் வீழ்ச்சியையும் கூறும் இந்நாவல் குறியீட்டு ரீதியான வாசிப்பில் இந்திய வரலாற்றில் இலட்சியவாதத்தின் யுகம் ஒன்றின் முடிவைக் குறிக்கிறது. காற்றாடித் தோப்பு தோட்டக் கலையாளனால் பூந்தோட்டமாக ‘ஒழுங்கு பண்ணப் படுவதைப் பார்த்தால் நேருயுகத்தின் யத்தனம் புரியக்கூடும் இன்றளவும் தொடரும் இந்திய சமூக அரசியல்த் தரப்புகளின் கச்சிதமான பிரதி விஷயங்களை இந்நாவலில் காணலாம்.

1966ல் பிரசுரமாயிற்று.

10.) ஜெ.ஜெ. சில குறிப்புகள். —— சுந்தரராமசாமி.

மேற்கத்திய இருத்தலியத்தையும் மேற்கத்திய எழுத்தாளனை மையமாக்கிய இலக்கிய வடிவத்தையும் பிரதியெடுத்து தமிழில் செய்யபட்ட முயற்சி. சலிப்பூட்டுமளவு அந்நியத்தன்மை கொண்டது, முன்னுதாரணங்களை படிக்கப் படிக்க இச்சலிப்பு ஏறுகிறது. அதேசமயம் அழகிய மொழியின் நுட்பமும் ஜாலமும் அபூர்வமான கவித்துவ வேகமும் இதை தவிர்க்க முடியாத படைப்பாக ஆக்குகிறது. ஜெ.ஜெயின் பிரச்சினைகள் ஃபிரான்ஸில் மட்டும் செல்லுபடியாகக் கூடியவை அவனது நடையோ தமிழின் சொத்து வடிவ அளவில் நாவலின் சாத்தியங்களை மிகவும் பயன்படுத்திய, கலைரீதியான விவாதம் என்று வர்ணிக்கத்தக்க படைப்பு.

1978ல் பிரசுரமாயிற்று.

11.) கோபல்ல கிராமம் ——- கி.ராஜநாராயணன்.

விக்ரமார்க்கன் கதை முதலிய கிராமிய சாயல் கொண்ட கதைக்கொத்துகளின் பாணியில் கரிசலின் பரிணாம வரலாற்றை உதிரிக் கதைகளின் தொகுப்பாக கூறும் நாவல். தொகுப்பம்சமாக இருப்பது ஆசிரியரின் கதை நாக்கு மட்டுமே. கிராமியம் சித்தரிப்புகளில் பெரும் கலைஞனுக்குரிய ‘கைமணம் ‘ உண்டு. விவசாய சமூகம் ஒன்று ‘உருவாகித் திரண்டு ‘ வருவதன் சித்திரம் அபூர்வமானது.

1976ல் பிரசுரமாயிற்று.

12.) நாகம்மாள் —– ஆர். ஷண்முகசுந்தரம்

தமிழ் இயல்புவாத (நாச்சுரலிச) நாவல்களுக்கு முன்னோடியான (குறு)நாவல். நாகம்மாள் ‘கெட்டிஎலும்புள்ள ‘ கிராமத்து விதவை. அவளுடைய காதல் கொலையில் முடிகிறது. கிராமத்து ‘இட்டேறிகளை ‘ , கானல் பறக்கும் கரிசல் மண்ணை, ராகம்போடும் கொங்குமொழியை ஆசிரியர் தன்னைப் பின்தொடர்ந்தவர்களைவிட சிறப்பாகவே அளித்திருக்கிறார்.

1942ல் பிரசுரமாயிற்று.

13. பிறகு —— பூமணி

தமிழ் தலித் நாவல்களின் முன்னோடி. ஆனால் பிரச்சார நெடியற்ற தகவல் செறிந்த, அதனாலேயே உத்வேகம் குறைவான, யதார்த்த நாவல். சுதந்திரத்திற்கு பிறகு என்ற தொனி வரும் கதை. ‘பிறகும்….. ‘ என்ற பொருள் படுகிறது.

1976 ல் பிரசுரமாயிற்று.

14.) நாளை மற்றுமொரு நாளே —— ஜி.நாகராஜன்.

பதற்றமில்லாத நடையில் தமிழன் பார்க்க மறுக்கும் அவல இருள்களை கூறிய, பரபரப்பூட்டிய நாவல். பரபரப்பு மங்கிவிட்டதற்கு இன்று தகவல்சார் இதழியல் இதைவிட அதிர்ச்சிதர ஆரம்பித்திருப்பதே காரணம். தமிழ் சமூகத்தின் எல்லா முகங்களும் இதழ்கள், முதல் மருத்துவம் வரை முகம்காட்டி எள்ளி நகையாடப்படுவதனாலேயே இன்று இப்படைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. கந்தன் என்ற ‘ரவுடி ‘யின் ஒரு நாளில் நமது சமூக கட்டுமானமே அவனை எதிர் கொள்கிறது. ஒளிவிடும் முகப்புகள் கொண்ட அழகிய ‘இல்லற ‘ வீடுகளைப் பார்த்தபடி தெருவில் ஏங்கி நடக்கும் கந்தனை சித்தரிக்குமிடத்தில் மட்டும் ஆசிரியர் தன் பார்வையை தானே தாண்டிச் செல்கிறார்.

15.) புத்தம் வீடு —— ஹெப்சிபா ஜேசுதாசன்.

எளிய நேரடியான நடையில் கிராமத்து காதல்கதை ஒன்றை கூறிய இந்நாவல் தமிழின் வணிகப் பாசாங்குகளுக்கு அப்பார்ப்பட்டு நின்று தன்னைத்தானே பார்க்கச் செய்யும் இலக்கியத்தின் வல்லமையை நிலைநாட்டிய படைப்பு. லிஸியின் மிகையற்ற சித்தரிப்பின் வழியாக அவளுடைய குணச்சித்திரத்தை மட்டுமின்றி ‘இற்செறிப்பை ‘ பேணும் கிராமிய சமூகவியலையும் துல்லியமாக காண முடிகிறது.

1964ல் பிரசுரமாயிற்று.

16.) தலைமுறைகள் —– நீல. பத்மநாபன்.

கதை சொல்லியே வட்டார வழக்கில் நேரடியாக பேசியதனால் கவனம் பெற்று பரபரப்பூட்டிய நாவல். இன்று இதன் முக்கியத்துவம் உறவுகளின் வலையில் ஒரு கண்ணியாக மட்டுமே இருத்தல் சாத்தியமான அன்றைய வாழ்வின் முழுச்சித்தரிப்பையும். இது தருகிறது என்பதுதான். தெரிந்ததை மட்டும் எழுதுவது நீல.பத்மநாபனின் பலம். தெரியாத இடங்களுக்குப் போக கற்பனையால் முயலாதது பலவீனம்.

1968ல் பிரசுரமாயிற்று.

17.) பள்ளி கொண்டபுரம். —– நீல. பத்மநாபன்.

மனைவியை மேலாளனுக்கு தாரைவார்க்க நேர்ந்த அனந்தன்நாயரின் உள்ளக்குமுறல்களை கொட்டி ஒருவகையில் ஆழமான மனபாதிப்பை உருவாக்கும் படைப்பு இது. சூடாறாத மனதுடன் நாயர் சுற்றிச்சுற்றி வரும் திருவனந்தபுரம் அவரது மனதின். புறத்தோற்றமேயாக மாறி குறியீடாக விரிகிறது.

1971ல் பிரசுரமாயிற்று.

18.) கிருஷ்ணப் பருந்து. —— ஆ. மாதவன்.

திருவனந்தபுரம் காலை பஜாரில் கடை வைத்திருக்கும் ஆ.மாதவன் நாற்பது வருடங்களாக திரும்பத்திரும்ப அதைப்பற்றி மட்டு எழுதுபவர். தெருவில் வாழும் ‘உயிர்வாழ்தல் போட்டி ‘ அதன் ஆழத்து இருள்சலனங்கள். இந்நாவலும் அதுவே. இந்நாவலில் வரும் சாமியார் தன் வீட்டில் மாட்டியுள்ள நிர்வாணப் பெண்ணின் படத்திலிருந்து நாவலை மீண்டும் புதிதாகப் படிக்கலாம். ஆ.மாதவனின் சாதனை என்றால் இப்படைப்புதான்.

19. பதினெட்டாவது அட்சக் கோடு —– அசோகமித்திரன்.

நகர்சார்வாழ்வை ‘எண்ணி எடுத்து வைக்கப்பட்ட’ சொற்களில் கூறும் அசோகமித்திரன் படைப்புகளில் முக்கியமானது இது. நகரம் வகுப்புவாதத்தால், அதிகாரப் போட்டியால், உள்ளூர கொதிக்கும் போது கதைசொல்லியான சிறுவன் கிரிக்கெட் விளையாடுகிறான்; சினிமா பார்க்கிறான். இரு இணைகோடுகளாக நகரும் இவ்விரு விஷயங்களும் இறுதியில் தொட்டுக் கொள்கின்றன. பையன் ‘முதிர்ச்சி ‘ அடைகிறான். அசோகமித்திரனின் அழகிய ‘செகன்ட்ராபாத்’ ‘லான்சர்பாரக் ‘ சுயசரிதைச் சிறுகதைகளுடன் இணைத்து வாசிக்கையில் மேலும் விரியும் பிரகாசமும் பெறும் படைப்பு.

1978ல் பிரசுரமாயிற்று.

20.) தண்ணீர் —- அசோகமித்திரனின்

‘மாலதி ‘ ‘மாறுதல்’ முதலிய குறுநாவல்களுடன் மானசீகமான தொடர்பு உடைய நாவல் இது. நகரத்துக் குடிநீர்ப் பஞ்சம். கூடவே ஜமுனாவின் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்ட அவல வாழ்வு. குடிநீர் குழாயில் சாக்கடை வரும் இடத்தில் இரு விஷயங்களும் பரஸ்பரம் தொட்டுக் கொள்ள தண்ணீர் விரிவடைகிறது. ஆழமான குறியீடாக ஆகிறது.

1973ல் பிரசுரமாயிற்று.

21.) தலைகீழ் விகிதங்கள் —— நாஞ்சில்நாடன்.

சமத்காரம் மிக்க கதைசொல்லியான நாஞ்சில்நாடனின் கூரிய அவதானிப்பு கதாபாத்திரங்களையும் சூழலையும் கண்முன் நிறுத்த, அங்கதம் அதில் ஊடுருவிச் செல்லும் படைப்பு இது. வேளாள வாழ்வின் பெருமிதமும் சரிவும் செழிப்பும் அற்பத்தனமும் மாறி மாறித் தெரிந்து நமது புதையுண்ட ஞாபகப் பதிவுகளை கிளர்த்துகின்றன. தங்கைகளை கரையேற்ற பணக்கார வீட்டில் பெண்ணெடுத்த சிவதாணு வீட்டோடு மாப்பிள்ளையாகி படும் அவமானங்களில் நாஞ்சில்நாடனின் பாசத்திற்குரிய கருவாகிய வறுமையின் அவமானம் கூர்மை கொள்கிறது.

22.) ஒரு கடலோர கிராமத்தின் கதை —- தோப்பில் முகமது மீரான்.

மீரான் கி.ரா வகையிலான ஆர்ப்பாட்டமான கிராமியக் கதை சொல்லி. அவருடைய கூரிய பார்வையில் வரும் கிராமத்தின் அகமானது புறச்சித்தரிப்புகளுக்கு அகப்படாதது. அறியாமையும் அடிமைத்தனமும் சுரண்டலும் ஒரு பக்கம் சுயமரியாதைக்கான போராட்டம், களங்கமற்ற ஆர்வம், பிரியம் நிரம்பிய உறவுகள் என்று இன்னொரு பக்கம். இவற்றுக்கு இடையேயான ஓயாத போராட்டம்— மீரானின் கிராமம் இதுதான். அவருடைய எல்லா நாவல்களும் கடலோர கிராமத்தின் கதைகளே.

1989ல் பிரசுரமாயிற்று.

23.) மானுடம் வெல்லும் —– பிரபஞ்சன்.

வரலாறு என்றால் ஐதீகம் என நம்பிய சமூகம் நாம். ஐதீகங்களை மறு ஆக்கம் செய்து வரலாற்று நாவல் என்றோம். தமிழில் தகவல்களினால் சமநிலைப் படுத்தப்பட்ட வரலாற்று சித்திரத்திலிருந்து உருவாக்கப்பட்ட முதல் நாவல் இது. வரலாற்றின் அபத்தமான, ஒருங்கிணைவில்லாத, சம்பவ நகர்வையும்; அதன் களத்தில் நிகழும் தீவிரமான அதிகாரப் போட்டியையும் காட்டும் நாவல் இது. ஐரோப்பிய ஒழுங்கு இந்தியனை ஆட்படுத்துவதும் நெறிப்படுத்துவதும் ஒரேசமயம் இந்நாவலில் தெரிகிறது. வரலாற்று மாந்தர் அதிமானுடர்களாக இல்லாமலிருப்பது அளிக்கும் தரிசனம் தமிழுக்கு மிகமிக முக்கியமானது.

1991ல் பிரசுரமாயிற்று.

24.) காகித மலர்கள் —— ஆதவன்

நகர வாழ்வின் அலுப்பையும் அதை வெல்ல மூளையை பயன்படுத்தும் போது ஏற்படும் எண்ணவலைப் பின்னலையும் நக்ர்புறக் கதாபாத்திரங்களின் கோழைத்தனத்தையும் சுயமையப் போக்கையும் அழுத்தமான எள்ளலுடன் சித்தரிக்கும் ‘டெல்லி ‘ நாவல்.

25.) ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன —- இந்திரா பார்த்தசாரதி.

அறிவுஜீவித்தனத்திற்கும் அன்றாட வாழ்வின் அபத்தத்திற்கும் இடையேயான இடைவெளியில் முன்நுனியால் கிண்டிப் பரிசோதித்தபடி நகரும் இந்திரா பார்த்தசாரதியின் பார்வை தமிழுக்கு முன்னோடியானது. அறிவு ஜீவி அன்றாட வாழ்வை நடிக்கிறார். இல்லை அன்றாடவாழ்விலிருந்தபடி அறிவுஜீவிதனத்தை நடிக்கிறாரா ? தீர்மானிப்பது சிரமம். ‘கடைசியில வழிதவறின புருஷன் பெண்டாட்டிட்டயே திரும்பி வரான் ‘ — மாமி, ‘அதான் அவனுக்குத் தண்டனையா ? ‘ —- அறிவுஜீவி மாமாவின் பதில் உரையாடல்களில் பாசாங்கற்ற துல்லியம் இந்திரா பார்த்தசாரதியின் பலம். பிற்பாடு வந்த நகர்சார் எழுத்தாளர்களின் இந்த ‘கையமைதி ‘ இழக்கப் பெற்றுவிட்டது. காரணம் சுஜாதாவின் ஆர்ப்பாட்டமான கூறல் முறையின் தவறான பாதிப்பு.

26.) அபிதா —- லா.ச.ரா.

நடனமாடும் நடையில் ஒரு சமகால ஐதீக கதை இது. ‘சரிக ரிகம…. சக்கு இப்போது எப்படியிருப்பாள்? ரீதி கெளளையின் ஒரு சொகுசு வளைவு ரீம் ம்… சக்கு – இப்போது — ‘ என்று தாவிச்செல்லும் நடையைத் தாண்டி செல்லாமலிருந்தால் ரசிக்கலாம்.

1970ல் பிரசுரமாயிற்று.

27.) ஒரு மனிதன் ஒரு வீடு ஒர் உலகம் —- ஜெயகாந்தன்.

மதமற்ற துறவு என்ற ஓர் இலட்சிய நிலை நோக்கி ஹென்றி எனும் வெள்ளையக் கதாபாத்திரத்தை ஏவுகிறார் ஜெயகாந்தன்.

1973ல் பிரசுரமாயிற்று.

28.) சில நேரங்களில் சில மனிதர்கள் —- ஜெயகாந்தன்.

நமது பாலியல் பாவனைகளுக்குப் பலியாகும் பெண்களின் வாழ்வு பற்றிய ஆய்வு எனத் தொடங்கி, சீதையில் தொடங்கும் இந்தியப் பெண்ணின் தனிமையை காட்டி முழுமை பெறுகிறது. இந்த நாவல் தீவிரமே இதன் பலம்.

1973ல் பிரசுரமாயிற்று.

29.) தாகம் —– கு. சின்னப்ப பாரதி.

கொங்கு மண்ணின் மண்ணையும் மண்ணில் முளைத்து எழுந்த மனிதர்களையும் காட்டும் மார்க்ஸிய நாவல் கோஷமிடத் தொடங்கும் இரண்டாம் பகுதிவரை அற்புதமாக உள்ளது. வெளியூர் சென்ற விவசாயி அங்கு தூறல் விழவே தன் ஊரில் மழை பெய்ததா என்று அறியும் பரபரப்புடன் மரங்களையும் மண்மணத்தையும் கவனித்தபடி பரபரப்புடன் திரும்பிவரும் காட்சியை தமிழிலக்கியத்தின் வெற்றிகளில் ஒன்று எனலாம்.

1975ல் பிரசுரமாயிற்று.

30.) சாயாவனம் —- சா. கந்தசாமி.

தொழிற்சாலைக்காக ஒரு புளியமரத்தோப்பு அழிக்கப்படுவதன் நுட்பமான விவரணை மட்டும்தான் இந்த நாவல். ஆனால் அதன் குறியீட்டுதன்மை மூலம் சமகால இந்தியாவின் ஆழமான அகச்சரிவு ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. மாயவரம் பக்கமுள்ள ஒரு ஊர் சாயாவனம், நிழல் காடு அவ்வூரின் இறைவனுடன் அழிக்கப்படும் இக்காட்டை தொடர்புபடுத்தும்போது மேலும் விரிவு கொள்கிறது.

1969ல் பிரசுரமாயிற்று.

31.) சூரிய வம்சம் —- சா. கந்தசாமி.

ஒரு அரசியல்வாதியின் எழுச்சி வீழ்ச்சியை புராணகால அசுரன் ஒருவரின் வளர்ச்சி வீழ்ச்சிபோல, மிகக்குறைவான விவரணைகளுடன் அடங்கிய தொனியில் கூறும் படைப்பு பெரியதோர் தார்மிக வீழ்ச்சி இத்தனை சாதாரணமாக கூறப்படுகையில் அதன் வீச்சு விரிவடைகிறது.

1978ல் பிரசுரமாயிற்று.

32.) வாசவேஸ்வரம் —- கிருத்திகா.

ஒரு குமரிமாவட்டக் கிராமத்தை பிராந்திய அடையாளங்களற்ற பெளராணிகச் சாயல் தந்து, ஆனால் நவீனத்தன்மை கெடாமல் சித்தரித்து அதன் ஒழுக்க, அறவீழ்ச்சியை ஆழ்ந்த அங்கத்துடன் கூறும் இந்நாவல் அதன் விசித்திரத்தன்மை காரணமாகவே முக்கியமானது.

1966ல் பிரசுரமாயிற்று.

33.) புயலிலே ஒரு தோணி —- ப.சிங்காரம்.

இரண்டே இரண்டு நாவல்கள் மட்டும் எழுதியவர் ப.சிங்காரம். போர்க்காலத்தில் ம்லேசியாவில் வியாபாரத்திற்குச் சென்று அன்றைய வரலாற்று அலைகளால் அடித்துச் செல்லப்படும் ஒரு இளைஞனின் சாகசக் கதை இது. ஆனால் அங்கத்தின் கூர்மை நுட்பமான மனத்தருணங்களை சென்றடையும் மொழிவீச்சு ஆகியவற்றின் அடிப்படையில் இது தமிழின் மிகச்சிறந்த நாவலாக பலரால் கருதப்படுகிறது.

34.) கடலுக்கு அப்பால் —- ப.சிங்காரம்.

புயலிலே ஒரு தோணியின் இரண்டாம் பாகம் போன்ற படைப்பு. புயலிலே ஒரு தோணியில் பொங்கி எழுந்த உணர்வுகள் மெல்ல மெல்ல வடிந்து வாழ்வின் சாரமென்ன என்னும் வினா நோக்கி குவிகிறது ஆசிரியர் பார்வை. ‘எல்லாம் எண்ணுகையில் உண்பதும் உறங்குவதுமாய் முடியும் ‘ என்ற தாயுமானவர் பாடலில் சென்று முட்டி முடிவடைகிறது இந்த சிறு (குறு?) நாவல்.

35.) நினைவுப்பாதை — நகுலன்.

நகுலனின் நினைவுப்பாதை ஒரு அந்தரங்க, ‘காமா சோமா ‘ டைரி. அதில் அவரே நகுலன் நவீனன் என்று இரண்டாக பிரிகிறார். ஒருவனுக்கு பைத்தியம் பிடிக்கிறது. ஒருவன் சுசீலாவை எண்ணி கவிதை எழுதுகிறான். லெளகீகர்களை கிண்டல் செய்கிறான். ஒரு படைப்பு என்ற வகையில் இதை முக்கியமானதாக ஆக்குவது அவ்வப்போது மொழி கொள்ளும் அபூர்வமான கவித்துவப் பாய்ச்சல். கூரிய அங்கதம்.

1972ல் பிரசுரமாயிற்று.

36. ) பாதையில் படிந்த அடிகள் —- ராஜம் கிருஷ்ணன்.

கள ஆய்வு செய்து எழுதுவது ராஜம் கிருஷ்ணனின் பாணி. அவரது பல கதைகளை மேலோட்டமான தகவல்களாக ஆக்குவது இந்த அம்சம். இவ்வம்சமே மணி அம்மாள் என்ற உண்மையான புரட்சிவாதியின் வரலாற்றை புனைவாக ஆக்கும் போது பெரிதும் கை கொடுக்கிறது.

37.) சிதறல்கள் —- பாவண்ணன்.

பாண்டிச்சேரி ரோடியர் மில் பூட்டப்பட்டபோது அதை நம்பி வாழ்ந்த மக்களின் படிப்படியான சிதவுலும் அழிவும் சித்தரிக்கப்படும் படைப்பு இது. அம்மக்கள் தொழில்யுகத்தை விவசாயிகளின் யுகத்தில் நின்று எதிர் கொள்கிறார்கள். மில் அவர்களுக்கு தொழில் கூடம் மட்டுமல்ல; மண்ணைப் போலத்தான். அதனுடன் உணர்வு ரீதியான உறவுண்டு அவர்களுக்கு. அது நஷ்டம் வந்தால் மூடப்படுவது தொழில்யுக நியாயம். கூடவே அம்மக்களும் அழியும் விவசாயயுக நியாயத்தை அதனால் புரிந்து கொள்ள முடியாது. தமிழ்/இந்திய மனதிற்கும் நவீனயுகத்திற்கும் உள்ள உறவை அவலச்சுவையுடன் கூறும் படைப்பு இது. ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் நிகழும் சோக வரலாறு. எளிமையான நேரடிச் சித்தரிப்பு.

1990ல் பிரசுரமாயிற்று.

38.) மற்றும் சிலர் —- சுப்ரபாரதி மணியன்.

புலம் பெயர்தல் தமிழனின் அடிப்படையான இயல்பு. ஏனெனில் தமிழகத்தில் விவசாயமும் நெசவும் அவனை காப்பாற்றவில்லை. இந்தியா முழுக்க புலம்பெயர்ந்த தமிழர்கள் பல லட்சம் அப்படி சென்று ஹைதராபாதில் கூடணைந்து அங்கு இழையவும் முடியாமல் விலகவும் முடியாமல் தன் மண் பற்றிய ஏக்கத்துடன் வாழும் ஒருவனின் எளிய நேரடியான கதை.

1991ல் பிரசுரமாயிற்று.

39.) தூர்வை —– சோ. தருமன்.

தலித் வாழ்க்கை பற்றிய நாவல்களில் ஒரு அம்சம் தூக்கலாக உண்டு அவர்களுடைய அவலவாழ்வை தார்மிக ஆவேசத்துடன் எடுத்து நம்முன் வீசும் தோரணைதான் அது. இந்நாவல் தலித்துகளுக்கு மட்டுமேயுரிய களியாட்டங்களையும் உயர்சாதி கலாச்சார மரபுகளை எள்ளிநகையாடும் அங்கத விளையாட்டுகளையும் மரபுகளையும் சடங்குகளையும் சித்தரிக்கிறது. அத்தியாயப் பகுப்பு இல்லாத நேரடியான கூறல் முறை ஒரு தலித்திடம் மூன்றுமணிநேரம் கதை கேட்ட உணர்வைத் தருகிறது.

1997ல் பிரசுரமாயிற்று.

40.) கோவேறு கழுதைகள் —– இமையம்.

அமெரிக்கப் பாணியில் எடிட்டர்களால் எழுத்தாளர் இயக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நாவல். அதன் விளைவான கனகச்சிதத்தன்மையே நாவலின் பலம். அதுவே ஒருவித அவநம்பிக்கையையும் உருவாக்குகிறது; இதன் யதார்த்த சித்தரிப்பு அம்சம் மேலோங்கி கதை வீச்சு சுருங்கிவிட்டது. ஆனால் இதன் ஒப்பாரிப் பகுதிகளில் தெரியும் மொழிவீச்சு கவித்துவமானது.

1996ல் பிரசுரமாயிற்று.

41.) கள்ளம் —– தஞ்சை பிரகாஷ்.

கலைத்துப் போடப்பட்ட வாழ்க்கைச் சித்திரங்களும் சம்பவக் குதறல்களும் நிரம்பிய இந்த ‘முதிராத ‘ நாவல் ஒரு அம்சத்தால் முக்கியமாகிறது தமிழ் மனதின் அகக் கோணலை, (பெர்வர்ஷன்) கூற முயன்றமையால்.

1997ல் பிரசுரமாயிற்று.

42.) ரப்பர் —– ஜெயமோகன்

தனித்தனி சித்தரிப்புகளை ஒரு சட்டத்தில் தொகுத்து குமரிமாவட்டத்தில் ஏற்பட்ட வரலாற்று, சமூக, பண்பாட்டு மாற்றத்தைச் சித்தரிக்கும் நாவல். உடனடிப் பழைய வரலாறு நினைவுகளாக, பழங்கால வரலாறு ஐதீகங்களாக, சமகால வரலாறு அதிகார ஆட்டமாக காட்டப்படுகிறது. இத்தகைய மாற்றத்தை சுட்டும் குறியீடாக குமரி மாவட்டத்திற்கு ரப்பர்ப்பயிர் வருகை தருவது எடுத்தாளப்பட்டுள்ளது. தமிழில் எண்பது தொண்ணூறுகளில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல் இது என்று விமரிசகர் என்.எஸ்.ஜெகன்னாதன் எழுதினார்.

1991ல் பிரசுரமாயிற்று.

43.) விஷ்ணுபுரம் —–ஜெயமோகன்

ஐதீகத் தொன்மை அணுகுமுறையின் வழியாக இந்திய வரலாற்றையும் தத்துவ மரபையும் ஆய்ந்து மாற்று சித்திரம் ஒன்றைத் தரும் முயற்சி. அதன் முழுமை, மொழியின் தீவிரம், குறியீட்டு கவித்துவம் காரணமாக பெரிதும் பாராட்டப்பட்டது. ‘நூறு வருடத் தமிழிலக்கியத் தளத்தில் செய்யப்பட்ட மிகப் பெரிய இலக்கிய முயற்சி’ என்று மதிப்பிட்டார் அசோகமித்திரன்.

1997ல் பிரசுரமாயிற்று.

44.) பின்தொடரும் நிழலின் குரல் —– ஜெயமோகன்.

சமகால வரலாற்றுத்தனம் வழியாக அற அடிப்படைகளின் பல்வேறு வினாக்களுக்குள் புகுந்து செல்லும் விரிவான கலவை வடிவ நாவல். சோவியத் ருஷ்யாவின் உடைவைப் பற்றியதாக இருப்பினும் இதன் அடிப்படை வினா வன்முறைக்கும் கருத்தியலுக்கும் இடையேயான உறவே. தமிழில் இதற்கிணையான அரசியல் படைப்பு ஒன்று எழுதப்பட்டதில்லை என்றார் விமர்சகரான ராஜமார்த்தாண்டன். உச்சகட்ட கவித்துவமும் அறிவுத்தள இயக்கமும் இணைவது என்றார் ஞானக்கூத்தன்.

1999ல் பிரசுரமாயிற்று.

45.) உபபாண்டவம் ——எஸ். ராமகிருஷ்ணன்.

மகாபாரதத்தை நுட்பமாக ஊடுருவி பல்வேறு கவித்துவ மறு வாசிப்பு தந்து தொகுக்கும் புதுவகை நாவல். ஏதலைவனால் அம்பு தொடுக்கப்பட்டு நாவறுந்து குரலிழந்த நாயின் மெளனத்தால் நிறையும் காட்டை இந்நாவலில் காணலாம். அது வியாசனுக்கு தரப்படும் வலுவான அடிக்குறிப்பு. அவ்வப்போது வரும் அபூர்வமான கவித்துவம் இதன் சிறப்பென்றால் கவனமற்றதும் சோர்வூட்டும்படி செயற்கையானதுமான மொழி நடையும் உதிரிகளின் தொகுப்பாக உள்ள வடிவமும் பலவீனங்கள்.

2000த்தில் பிரசுரமாயிற்று.

இரண்டாம் பட்டியல்

[பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள்.]

1) பசித்தமானுடம் — கரிச்சான் குஞ்சு

2) ஜீவனாம்சம் — சி.சு.செல்லப்பா

3) இதயநாதம் — ர.சிதம்பர சுப்ரமணியன்

4) புத்ர — லா.ச.ரா

5) நித்ய கன்னி — எம்.வி.வெங்கட்ராம்

6) வேள்வித்தீ — எம்.வி.வெங்கட்ராம்

7) வேரோட்டம் — கு.ப.ராஜகோபாலன்(முழுமையல்ல)

 செம்பருத்தி — தி.ஜானகிராமன்.

9) மலர் மஞ்சம் — தி.ஜானகிராமன்.

10) அன்பே ஆரமுதே — தி.ஜானகிராமன்.

11) கோபாலகிராமத்து மக்கள் — கி.ராஜநாராயணன்.

12) குழந்தைகள் ஆண்கள் பெண்கள் — சுந்தர ராமசாமி.

13) சட்டி சுட்டது — ஆர். ஷண்முக சுந்தரம்.

14) வெக்கை — பூமணி

15) குறத்தி முடுக்கு — ஜி. நாகராஜன்.

16) புனலும் மணலும் — ஆ.மாதவன்.

17) உறவுகள் — நீல பத்மநாபன்.

18) கரைந்த நிழல்கள் — அசோகமித்ரன்.

19) கடல்புரத்தில் — வண்ணநிலவன்.

20) மிதவை — நாஞ்சில்நாடன்.

21) என்பிலதனை வெயில் காயும் — நாஞ்சில்நாடன்.

22) சதுரங்க குதிரை — நாஞ்சில்நாடன்.

23) சாய்வு நாற்காலி — தோப்பில் முகமது மீரான்.

24) சமனன் தோப்பு — தோப்பில் முகமது மீரான்.

25) வானம் வசப்படும் — பிரபஞ்சன்.

26) மகாநதி — பிரபஞ்சன்.

27) என் பெயர் ராமசேஷன் — ஆதவன்.

28) தந்திர பூமி — இந்திரா பார்த்தசாரதி.

29) சுதந்திர பூமி — இந்திரா பார்த்தசாரதி.

30) பஞ்சும் பசியும் — ரகுநாதன்.

31) தேனீர் — டி. செல்வராஜ்.

32) மலரும் சருகும் — டி. செல்வராஜ்.

33) விசாரணை கமிஷன் — சா. கந்தசாமி.

34) அவன் ஆனது — சா. கந்தசாமி.

35) இடைவெளி — சம்பத்.

36) முப்பது வருஷம் — து.ராமமூர்த்தி.

37) நேற்றிருந்தோம் — கிருத்திகா.

38) புகைநடுவில் — கிருத்திகா.

39) தர்மஷேத்ரே — கிருத்திகா.

40) மெளனப்புயல் — வாசந்தி.

41) பிளம் மரங்கள் பூத்துவிட்டன. — வாசந்தி.

42) குருதிப்புனல் — இந்திரா பார்த்தசாரதி.

43) திக்கற்ற பார்வதி — ராஜாஜி.

44) ஆத்துக்குப் போகணும் — காவேரி.

45) நல்ல நிலம் — பாவை சந்திரன்.

46) ஈரம் கசிந்த நிலம் — சி.ஆர்.ரவீந்திரன்.

47) மானாவாரி மனிதர்கள் — சூரியகாந்தன்.

48) உப்பு வயல் — ஸ்ரீதர கணேசன்.

49) கொக்கு பூத்த வயல் — மோகனன்.

50) நிழல் முற்றம் — பெருமாள் முருகன்.

தமிழின் சிறந்த பொழுது போக்கு நாவல்களுக்கும் ஒரு பட்டியல் அவசியம். கறாரான இலக்கணப்படி இவை நாவல்கள் அல்ல, ரொமான்ஸ் எனப்படும் எழுத்துக்களே. மிடு கற்பனை அல்லது உணர்ச்சிக் கற்பனை படைப்புகள் என மொழி பெயர்க்கலாம்.

தமிழில் இவை இரண்டுவகை. வரலாற்று ஐதீகங்களின் மறு ஆக்கமாக வருபவை வரலாற்று மிகு கற்பனை படைப்புகள். (Historical Romances) பிறபடைப்புகளை சமூக மிகு கற்பனை படைப்புகள் (Social Romances) என்று கூறலாம்.

வரலாற்று மிகு கற்பனைப் படைப்புகள்

1) பொன்னியின் செல்வன் — கல்கி.

2) சிவகாமியின் சபதம் — கல்கி.

3) மன்னன் மகள் — சாண்டில்யன்.

4) யவன ராணி — சாண்டில்யன்.

5) கடல்புறா — சாண்டில்யன்.

6) வீரபாண்டியன் மனைவி — அரு. ராமநாதன்.

7) ஆலவாய் அழகன் — ஜெகசிற்பியன்.

 திருவரங்கன் உலா — ஸ்ரீ வேணுகோபாலன்.

9) வேங்கையின் மைந்தன் — அகிலன்.

10) மணிபல்லவம் — நா. பார்த்தசாரதி.

வரலாற்று மிகு கற்பனை படைப்புகள்

இரண்டாம் பட்டியல்

1) பார்த்திபன் கனவு — கல்கி.

2) ஜலதீபம் — சாண்டில்யன்.

3) கன்னிமாடம் — சாண்டில்யன்.

4) மூங்கில் கோட்டை — சாண்டில்யன்.

5) ராஜ முத்திரை — சாண்டில்யன்.

6) கயல்விழி — அகிலன்.

7) வெற்றித்திருநகர் — அகிலன்.

 ரத்தம் ஒரே நிறம் — சுஜாதா.

9) கோபுர கலசம் — SS. தென்னரசு.

10) ராணி மங்கம்மாள் — நா. பார்த்தசாரதி.

11) ரோமாபுரிப் பாண்டியன் — மு. கருணாநிதி.

12) தென்பாண்டி சிங்கம் — மு. கருணாநிதி.

13) பத்தினிக் கோட்டம் — ஜெகசிற்பியன்.

14) நந்திபுரத்து நாயகி — விக்ரமன்.

15) திருச்சிற்றம்பலம் — ஜெகசிற்பியன்.

சிறந்த சமூக மிகுகற்பனைப் படைப்புகள்

1) தியாகபூமி — கல்கி.

2) பிரேம உறாரம் — பி. எஸ். ராமையா.

3) அலைஓசை — கல்கி.

4) மலைக்கள்ளன் — நாமக்கல் கவிஞர்.

5) தில்லானா மோகனாம்பாள் — கொத்தமங்கலம் சுப்பு.

6) கேட்டவரம் — அனுத்தமா.

7) உயிரோவியம் — நாரணதுரைக்கண்ணன்.

 அழகு ஆடுகிறது — கு. ராஜவேலு.

9) முள்ளும் மலரும் — உமா சந்திரன்.

10) கல்லுக்குள் ஈரம் — ர.சு. நல்ல பெருமாள்.

11) அணையா விளக்கு — ஆர்வி.

12) கள்ளோ காவியமோ — மு. வரதராசன்.

13) கண்கள் உறங்கவோ — மாயாவி.

14) சின்னம்மா — எஸ். ஏ. பி.

15) மலர்கின்ற பருவத்தில் — எஸ். ஏ. பி.

16) பிறந்த நாள் — எஸ். ஏ. பி.

17) கூந்தலிலே ஒரு மலர் — பி. வி. ஆர்.

18) ஜி. எச் — பி. வி. ஆர்.

19) குறிஞ்சித்தேன் — ராஜம் கிருஷ்ணன்.

20) வளைக்கரம் — ராஜம் கிருஷ்ணன்.

21) இன்பப்புதையல் — பி. எம். கண்ணன்.

22) படகு வீடு — ரா. கி. ரங்கராஜன்.

23) பரபசர் மித்ரா — ரா. கி. ரங்கராஜன்.

24) ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது — புஷ்பா தங்கத்துரை.

25) குறிஞ்சிமலர் — நா. பார்த்தசாரதி.

26) பொன்விலங்கு — நா. பார்த்தசாரதி.

27) சமுதாய வீதி — நா. பார்த்தசாரதி.

28) பாவைவிளக்கு — அகிலன்.

29) சித்திரப்பாவை — அகிலன்.

30) பெண் — அகிலன்.

31) கல்லும் மண்ணும் — க. ரத்னம்.

32) பனிமலை — மகரிஷி.

33) அரக்குமாளிகை — லட்சுமி.

34) காஞ்சனையின் கனவு — லட்சுமி.

35) தரையிறங்கும் விமானங்கள் — இந்துமதி.

36) பாலங்கள் — சிவசங்கரி.

37) ஒரு மனிதனின் கதை — சிவசங்கரி.

38) நிற்க நிழல் வேண்டும் — வாசந்தி.

39) ஜெய்ப்பூர் நெக்லஸ் — வாசந்தி.

40) வாஷிங்டனில் திருமணம் — சாவி.

41) ஆயிரத்தொரு அப்புசாமி இரவுகள் — பாக்கியம் ராமசாமி.

42) மிஸ்டர் வேதாந்தம் — தேவன்.

43) கரையெல்லாம் செண்பகப்பூ — சுஜாதா.

44) அனிதா இளம் மனைவி — சுஜாதா.

45) பிரியா — சுஜாதா.

46) மெர்க்குரிப் பூக்கள் — பாலகுமாரன்.

47) கரையோர முதலைகள் — பாலகுமாரன்.

48) பந்தயப்புறா — பாலகுமாரன்.

49) அது ஒரு நிலாக்காலம் — ஸ்டெல்லா புரூஸ்.
50) வாழ்வெனும் மகாநதி — கண்ணன் மகேஷ். 

தமிழ்ச் சிறுகதை : திறனாய்வாளன் பட்டியல்
http://www.jeyamohan.in/?p=214
February 2nd, 2007
1 அ. மாதவையா

1 கண்ணன் பெருந்தூது [தமிழின் முதல் சிறுகதை]

2 சுப்ரமணிய பாரதி

1 ரயில்வே ஸ்தானம்

3 புதுமைப்பித்தன் [புதுமைப்பித்தன்கதைகள். காலச்சுவடு]

1 கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்,
2 கயிற்றரவு
3 செல்லம்மாள்
4 சிற்பியின்நரகம்
5 கபாடபுரம்
6 ஒருநாள்கழிந்தது
7 அன்றிரவு
8 சாமியாரும் குழந்தையும் சீடையும்
9 காலனும் கிழவியும்
10 சாபவிமோசனம்
11 வேதாளம் சொன்ன கதை
12 பால்வண்ணம் பிள்ளை

4 மௌனி [மௌனியின் கதைகள் ]

1அழியாச்சுடர்
2பிரபஞ்ச கானம்
3.மாறுதல்

5. கு.ப.ராஜகோபாலன் [கு.ப.ராஜகோபாலன் கதைகள் ]

1.சிறிதுவெளிச்சம்
2.விடியுமா
3.ஆற்றாமை
4.பண்னைச்செங்கான்

6. ந.பிச்சமூர்த்தி [ந பிச்சமூர்த்தி படைப்புகள். மருதா பதிப்பகம்]

1 காவல்
2 அடகு
3 விதைநெல்
4 ஒருநாள்
5 தாய்
6 ஞானப்பால்

7 எம்.எஸ்.கல்யாணசுந்தரம் [பொன்மணல். தமிழினி]

1 மீன்சாமியார்
2 பொன்மணல்

8. சி.சு.செல்லப்பா

1 சரசாவின் பொம்மை
2 வெள்ளை

9 க.நா.சுப்ரமணியம் [கநாசு படைப்புகள். காவ்யா]

1.தெய்வ ஜனனம்

10 லா.ச.ராமாமிருதம் [ லா.ச.ரா கதைகள். வானதி ]

1 பாற்கடல்
2 பச்சைக்கனவு
3 ஜனனி
4 புற்று
5 ராஜகுமாரி
6 அபூர்வராகம்

11 தெளிவத்தை ஜோசப்*

1.மீன்கள்

12 வ.அ.ராசரத்தினம்*

1.தோணி

13. எஸ்.பொன்னுத்துரை [ஆண்மை எஸ்பொ மித்ர வெளியீடு ]*

1 அணி
2 ஆண்மை 13

14 கு.அழகிரிசாமி [கு.அழகிரிசாமி கதைகள். சாகித்ய அகாதமி வெளியீடு ]

1 அன்பளிப்பு
2 ராஜாவந்திருக்கிறார்
3 அழகம்மாள்
4 இருவர்கண்டஒரே கனவு
5 பெரிய மனுஷி
6 பாலம்மாள் கதை
7 சிரிக்கவில்லை
8 தரிசனம்

15 தி ஜானகிராமன் [தி.ஜானகிராமன் படைப்புகள். ஐந்திணை]

1 தீர்மானம்
2 சிலிர்ப்பு
3 பாயசம்
4 பரதேசிவந்தான்
5 கடன் தீர்ந்தது
6 கோதாவரிக்குண்டு
7 தாத்தாவும் பேரனும்
8 மாப்பிள்ளைத்தோழன்

16 .கி.ராஜநாராயணன் [கி.ராஜநாராயணன் கதைகள். அகரம்]

1 கன்னிமை
2 பேதை
3 கோமதி
4 கறிவேப்பிலைகள்
5 நாற்காலி
6 புவனம்
7 அரும்பு
8 நிலைநிறுத்தல்
.
17 மு.தளையசிங்கம் *

1.தொழுகை
2. ரத்தம்
3. கோட்டை

18 .சுந்தர ராமசாமி [காகங்கள். சுராகதைகள். காலச்சுவடு]

1 ஜன்னல்
2 வாழ்வும்வசந்தமும்
3 பிரசாதம்
4 பல்லக்குதூக்கிகள்
5 ரத்னாபாயின் ஆங்கிலம்
6 கோயில்காளையும் உழவுமாடும்
7 காகங்கள்
8 கொந்தளிப்பு

19 அசோகமித்திரன் [அசோகமித்திரன் கதைகள். கவிதா ]

1 விமோசனம்
2 காத்திருத்தல்
3 காட்சி
4 பறவை வேட்டை
5 குழந்தைகள்
6 காலமும் ஐந்து குழந்தைகளும்
7 புலிக்கலைஞன்
8 காந்தி
9 பிரயாணம்
10 பார்வை
11 மாறுதல்
12 குகை ஓவியங்கள்

20 பிரமிள் * [பிரமிள் படைப்புகள். அடையாளம் வெளியீடு ]

1 காடன் கண்டது
2 நீலம்

21 சார்வாகன் [எதுக்குச் சொல்றேன்னா... க்ரியா]

1 யானையின் சாவு

22 வல்லிகண்ணன்

1. சிவப்புக்கல் மூக்குத்தி

23 எம்.வி.வெங்கட் ராம்

1 பைத்தியக்காரப் பிள்ளை

24. ந.முத்துசாமி

1 நீர்மை
2 செம்பொனார்கோயிலுக்கு போவது எப்படி
3 படுகளம்
4 பிற்பகல்

25. அ.முத்துலிங்கம்* [அ.முத்துலிங்கம் கதைகள். தமிழினி]

1 கறுப்பு அணில்
2 ரி
3 கொழுத்தாடு பிடிப்பேன்
4 ஒட்டகம்
5 ராகு காலம்
6 பூமாதேவி

26. சா.கந்தசாமி [சா.கந்தசாமி கதைகள். கவிதா]

1 தக்கையின்மீது நான்கு கண்கள்
2 ஹிரண்யவதம்
3 சாந்தகுமாரி

27. ஆதவன்

1 ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும்
2 முதலில் இரவு வரும்
3 சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல்…
4 லேடி

28. ஜி.நாகராஜன் [ஜி.நாகராஜன் படைப்புகள். காலச்சுவடு]

1 டெரிலின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்
2 யாரோ முட்டாள் சொன்ன கதை

29.கிருஷ்ணன் நம்பி [ கிருஷ்ணன்நம்பி கதைகள். ]

1 மருமகள் வாக்கு
2 தங்க ஒரு…
3 சத்திரத்து வாசலில்

30. ஆர்.சூடாமணி

1 டாக்ரம்மா அறை

31. இந்திரா பார்த்தசாரதி

1 குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும்
2 இளஞ்செழியன் கொடுத்த பேட்டி
3 ஒரு கப் காபி

32 . ஆ.மாதவன் [ஆ.மாதவன் கதைகள் தமிழினி]

1 நாயனம்
2 பூனை
3 பதினாலுமுறி
4 புறாமுட்டை
5 தண்ணீர்
6 அன்னக்கிளி

33 சுஜாதா [தேர்ந்தெடுத்த சிறுகதைகல். சுஜாதா.. உயிர்மை]

1 நகரம்
2 குதிரை
3 மாஞ்சு
4 ஓர் உத்தம தினம்
5 நிபந்தனை
6 விலை
7 எல்டொரோடா

34 ஜெயகாந்தன் [ஜெயகாந்தன் சிறுகதைகள். கவிதா]

1 யாருக்காக அழுதான்?
2 குருபீடம்
3 எங்கோ யாரோ யாருக்காகவோ
4 நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ
5 நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்
6 முன்நிலவும் பின்பனியும்
7 அக்கினிப்பிரவேசம்
8 இறந்தகாலங்கள்

35 சு.சமுத்திரம்

1 திரிசங்குநரகம்
2 மானுடத்தின்நாணயங்கள்
4 பனையேறி குடும்பத்தில் பிறந்தவள்

36 தோப்பில் முகம்மது மீரான்

1 வட்டக்கண்ணாடி
2 சுருட்டுப்பா
3 அனந்தசயனம் காலனி

37 மா. அரங்கநாதன்

1 சித்தி
2 மெய்கண்டார் நிலையம்

38 வண்ணதாசன் [ வண்ணதாசன் கதைகள். ]

1 தனுமை
2 நிலை
3 சமவெளி
4 தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள்
5 போய்க்கொண்டிருப்பவள்
6 வடிகால்

39. வண்ணநிலவன் [வண்னநிலவன் கதைகள்]

1 எஸ்தர்
2 பலாப்பழம்
3 துன்பக்கேணி
4 மிருகம்

40. நாஞ்சில்நாடன் [நாஞ்சில்நாடன்கதைகள். தமிழி¢னி]

1 பாம்பு
2 வனம்
3 மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறுவீடும் வெஜிடபிள் பிரியாணியும்
4 பாலம்
5 சாலப்பரிந்து

41 அ.யேசுராஜா * [தொலைவும் இருப்பும். அலை வெளியீடு]

1 ஓர் இதயம் வெறுமைகொள்கிறது

42 பூமணி [பூமணிகதைகள். ராஜராஜன் பதிப்பகம்]

1 நொறுங்கல்
2 தகனம்
3 கரு

43 பிரபஞ்சன் [பிரபஞ்சன் கதைகள். கவிதா]

1 மனசு
2 கருணையினால்தான்
3 அப்பாவின் வேட்டி

44 ராஜேந்திர சோழன் [ராஜேந்திரசோழன் கதைகள் தமிழினி ]

1 பாசிகள்
2 புற்றில் உறையும் பாம்புகள்
3 வெளிப்பாடுகள்

45 திலீப்குமார் [வயல். திலீப்குமார் கதைகள். க்ரியா ]

1 தீர்வு
2 மூங்கில் குருத்து
3 கடிதம்
4 அக்ரஹாரத்தில்பூனை

46 சுரேஷ் குமார இந்திரஜித் [சுரேஷ்குமார இந்திரஜித் கதைகள். காலச்சுவடு]

1 விரித்த கூந்தல்
2 பிம்பங்கள்

47 விமலாதித்த மாமல்லன்

1 சிறுமி கொண்டுவந்த மலர்

48. அம்பை [வீட்டின் மூலையில் ஓர் அமையலறை. க்ரியா]

1 அம்மா ஒருகொலைசெய்தாள்
2 வீட்டின்மூலையில் ஒரு சமையலறை
3 கறுப்புக் குதிரைச்சதுக்கம்

49 கந்தர்வன் [கந்தர்வன் கதைகள். வம்சி புக்ஸ்]

1 சாசனம்
2 காளிப்புள்ளே
3 கதைதேசம்
4 பத்தினி
5 உயிர்
6 மங்களநாதர்

50. கோபிகிருஷ்ணன்

1 மொழி அதிர்ச்சி
2 காணிநிலம் வேண்டும்

51. ச.தமிழ்ச்செல்வன் [ச தமிழ்ச்செல்வன் கதைகள். கலைஞன்]

1 வெயிலொடு போய்
2 வாளின் தனிமை

52 ரஞ்சகுமார் * [மோகவாசல்- யதார்த்தா, யாழ்ப்பாணம்]

1 கவரக்கொயாக்கள்
2 கோளறுபதிகம்
3 கோசலை

53 சட்டநாதன்* [ சட்டநாதன் கதைகள்- சவுத் ஏசியன் புக்ஸ் ]

1 மாற்றம்
2 நகர்வு

54 திசேரா*

1 நோகாத உயிரும் நில்லாத வாழ்க்கையும்

55 உமாவரதராஜன்*

1 அரசனின் வருகை

56. விக்ரமாதித்யன் [ திரிபு . வஉசி நூலகம்]

1 திரிபு

57 எக்பர்ட் சச்சிதானந்தம்

1 நுகம்
2 பிலிப்பு

58. பாவண்ணன்

1 பேசுதல்
2 முள்

59 சுப்ரபாரதிமணியன்

1 ஒவ்வொருராஜகுமாரிக்குள்ளும்
2 உறைவிடங்கள்

60. கோணங்கி [மதினிமார்கள் கதை- அகரம், கொல்லனின் ஆறு பெண்மக்கள்- வம்சி புக்ஸ்]

1 மதினிமார்கள் கதை
2 கோப்பம்மாள்
3 கம்மங்கருது
4 கருப்பன்போனபாதை
5 கறுத்தபசு
6 தாத்தாவின் பேனா
7 மலையின் நிழல்
8 கருப்புரயில்

61 ஜெயமோகன் [ ஜெயமோகன் கதைகள் உயிர்மை]

1 திசைகளின் நடுவே
2 போதி
3 படுகை
4 மாடன் மோட்சம்
5 கடைசிமுகம்
6 முடிவின்மைக்கு அப்பால்

62 .எஸ்.ராமகிருஷ்ணன் [ எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள். கிழக்கு]

1 தாவரங்களின் உரையாடல்
2 வேனில்தெரு
3 பறவைகளின் சாலை

63. எம்.யுவன் [ ஒளிவிலகல் - காலச்ச்சுவடு , ஏற்கனவே - உயிர்மை பதிப்பகம் ]

1 தாயம்மாபாட்டி சொன்ன நாற்பத்தொரு கதைகள்
2 ஒளிவிலகல்
3 ஊர்சுற்றிக் கலைஞன்
4 அவரவர் கதை
5 நார்ட்டன் துரையின் மாற்றம்
6 கடல்கொண்டநிலம்

64 பிரேம் ரமேஷ்

1 கனவில் பெய்த மழையைப்பற்றிய இசைக்குறிப்புகள்
2 மூன்று பெர்நார்கள்

65 பொ.கருணாகரமூர்த்தி * [கிழக்குநோக்கிய சில மேகங்கள் -ஸ்நேகா / பொ கருணாகரமூர்த்தி கதைகள் உயிர்மை]

1 கிழக்குநோக்கிய சில மேகங்கள்
2 கலைஞன்

66 பவா செல்லத்துரை [ சத்ரு - வம்சி புக்ஸ்]

1 ஏழுமலைஜமா
2 ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்

67 சு.வேணுகோபால் [ கூந்தப்பனை, களவுபோகும் புரவிகள் தமிழினி]

1 மறைந்த சுவடுகள்
2 மீதமிருக்கும் கோதும் காற்று
3 களவுபோகும் புரவிகள்
4 தங்கமணல்

68 உமா மாகேஸ்வரி [மரப்பாச்சி தமிழினி . தொலைகடல் தமிழினி]

1 மரணத்தடம்
2 மரப்பாச்சி

69. யூமா வாசுகி [தமிழினி]

1 வேட்டை
2 உயிர்த்திருத்தல்
3 ஜனனம்

70. வேல ராமமூர்த்தி [ இருளப்பசாமியும் இருபத்தொரு கிடாய்களும் - அகரம்]

1. அன்னமயில்
2. இருளப்பசாமியிரும் இருபத்தொரு கிடாய்களும்

71 பெருமாள் முருகன்

1. நீர்விளையாட்டு
2. திருச்செங்கோடு

72. எம்.கோபாலகிருஷ்ணன் {சூத்ரதாரி} [ பிறிதொரு நதிக்கரை. வைகறை ]

1 ஒற்றைச்சிறகு
2 வலியின் நிறம்

73. கண்மணி குணசேகரன்[ ஆதண்டார் கோயில் குதிரை. தமிழினி பதிப்பகம்]

1 வண்ணம்
2 ஆதண்டார் கோயில் குதிரை

74 அழகியபெரியவன் [ தீட்டு . தமிழினி பதிப்பகம்]

1 விலங்கு
2 வனம்மாள்

75. லட்சுமணப்பெருமாள் [பாலகாண்டம். தமிழினி பதிப்பகம்]

1 கதைசொல்லியின்கதை
2 நீதம்

* முத்திரையிடப்பட்டவர்கள் ஈழப்படைப்பாளிகள்

வரலாறு
=======

தமிழ்ச்சிறுகதைவரலாறு : சிட்டி சிவபாதசுந்தரம் . க்ரியா வெளியீடு
தமிழ்ச் சிறுகதை வரலாறு : எம் .வேதசகாயகுமார்

கட்டுரையைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்
-----------------------------------------

ஊர்வாசம்

ந.முருகேச பாண்டியன் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய விமர்சகர். தேர்ந்த படிப்பாளி. தமிழில் மொழிபெயர்ப்பாகியுள்ள புத்தகங்களைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர், புதுக்கோட்டையில் வசிக்கும் அவர் நாடகம். சிறுபத்திரிக்கை. கல்வி. நூலகத்துறை என்று விரிந்த தளங்களில் இயங்குபவர்.

உயிரோசை இணைய இதழில் அவர் தொடர்ச்சியாக எழுதி வந்த கிராமத்து தெருக்களின் வழியே என்ற கட்டுரைகளின் தொகுப்பை வாசித்தேன், தனது கிராம வாழ்வின் நினைவுகளை துல்லியமாக, அதே நேரம் மிகை உணர்ச்சியின்றி அழகாக சித்தரித்திருக்கிறார்

வாசிக்கும் ஒவ்வொருவரும் அவரவர் பால்ய நாட்களுக்குச் சென்று திரும்பும் அனுபவம் பெறுவது உறுதி, நினைவு எவ்வளவு வலியது என்பதை இந்தப் புத்தகம் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது

சொந்த ஊரைப்பற்றி பேசுவதை ஏதோ நாஸ்டர்ல்ஜியா என்று நினைக்கிறார்கள், அது தவறு , இது தனிநபரின் ஆதங்கமில்லை, காலம் எப்படி உருமாறி வருகிறது என்பதன் அனுபவச் சாட்சி. எப்படி உருவானோம், எது நம் அகத்தை உருவாக்கியத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது என்று சுயபரிசோதனை செய்து கொள்வது . நினைவுகள் இப்படி பல்வேறு விதங்களில் மீள் பரிசீலனை செய்யப்படுகிறது

முருகேச பாண்டியன் தனது சொந்த அனுபவங்களின் வழியே சமயநல்லூர் என்ற மதுரையை அடுத்த சிறிய ஊரின் சமூக கலாச்சார சூழல்களையும் அதை உருவாக்கிய காரணிகளையும். இன்றைய மாற்றத்தையும் அடையாளம் காட்டுகிறார், அத்துடன் சாதிய அடக்குமுறை. வன்முறை. மூடத்தனம் போன்றவற்றை நேரடியாக விமர்சிக்கவும் செய்கிறார்

வாசிக்கையில் சொற்களின் வழியே கடந்தகாலம் நுரையோடு ததும்பி வருவதை நன்றாக உணர முடிகிறது

கடந்த காலம் என்பது முடிவுற்ற ஒன்றில்லை, அது நினைவில் எப்போதும் வாழ்ந்து கொண்டேயிருக்க கூடியது என்பதையே இவரும் சுட்டிக்காட்டுகிறார்

ஒரு ஊரின் ஐம்பதாண்டுகாலச் சாட்சியாக தன்னை உணரும் முருகேச பாண்டியன் தனக்கு ஊரோடு உள்ள ஈரமான உறவைச் சித்தரிப்பதில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறார். வெறுமனே ஊர் நினைவுகளை பெருமிதமாக அடையாளம் காட்டாமல் அது பண்பாட்டு ரீதியில் எவ்வாறு அமைந்திருந்தது, தமிழ் வாழ்க்கை எப்படி காலம் தோறும் உருமாறி வருகிறது என்று சுட்டிக்காட்டுவது இதன் சிறப்பு

ஊரின் இயற்கைவளங்கள் அழிக்கப்பட்டு வணிகமயமான சூழல் உருவாகி போனதையும். மக்கள் தங்களுக்கான சுயஅடையாளங்கள். கலைவெளிப்பாடுகளை இழந்து மொண்னையாகி வருவதையும் விரிவாகவே எடுத்துக்காட்டுகிறார்

வாசிக்கையில் எவ்வளவு கிராமிய விளையாட்டுகள். கலைகள். விழாக்கள், மனிதஉறவுகள். எளிய இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை நாம் இழந்திருக்கிறோம் என்பதை உணர முடிகிறது,  

கிராமத்தை கொண்டாடும் மனநிலையில் இருந்து இது எழுதப்படவில்லை, மாறாக ஒரு வாழ்வியல் வெளி புறக்காரணங்களால் எப்படி கட்டமைக்கபடுகிறது, வீதிகள் வீடுகள் துவங்கி மனித மனம்  கூட எப்படி காலமாற்ற்த்தோடு தன்னை  உருமாற்றி கொள்கிறது, ஏன் இயற்கை விவசாயம். நாட்டார் கலைகள். கூட்டுவாழ்வை காரணமின்றி கைவிட்டோம். என்ற கேள்வியை எழுப்புகிறது

விவசாயம். சக உயிர்களோடு இணைந்த வாழ்க்கை. கிராம நம்பிக்கைகள். சிறார் விளையாட்டுகள். திருமணமுறைகள். வேடிக்கை விநோதங்கள். தீட்டு . கிராமிய மருத்துவம். போதை. கிராமிய கலைகள் என்று பதினெட்டு கட்டுரைகள் இந்த தொகுப்பில் உள்ளன

இது ஒரு கிராம வாழ்வின் ஐம்பது ஆண்டுகால மாற்றங்களை விரிவான ஆவணப்பட்ம் போல  நமக்குக் காட்டுகிறது.

பண்பாட்டு மாற்றங்களை அதிலிருந்து விலகியிருந்து பாரபட்சமின்றி எழுத்தில் பதிவு செய்வது எளிதானதில்லை, அதில் முருகேச பாண்டியன் வெற்றி பெற்றிருக்கிறார்

கிராமத்து தெருக்களின் வழியே  ந. முருகேச பாண்டியன்

உயிர்மை பதிப்பகம் 11/ 29 சுப்ரமணியம் தெரு அபிராமபுரம் சென்னை18 தொலைபேசி 24993448

விலை ரூ 90 பக்கங்கள  182


கொடியில் ஏந்திய குழந்தை

இந்த வ

ருட

ம் என்னை செமத்தியாக பெண்டு நிமிர்த்திய புத்தகம், ஆர். முத்துக்குமாரின் திராவிட இயக்க வரலாறு. பொதுவாக எத்தனை பெரிய புத்தகமாக இருந்தாலும் எடிட்டிங்கில் என்னிடம் 

இரண்டு மூன்று நாள்களுக்குமேல் நிற்காது. இந்தப் புத்தகம் கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்கு என்னை இழுத்துக்கொண்டுவிட, வழக்கமான காரியங்கள் பலவற்றை இதனால் நிறுத்திவைக்க வேண்டியதானது. [இதற்கு முன்னால் அதிகநாள் எடிட் செய்த புத்தகம் அநீயின் ஹிந்துத்துவம் - ஓர் எளிய அறிமுகம். அதன் வத்திக்குச்சி சைஸுக்குப் பதினைந்து நாள் எடிட்டிங் என்பது அராஜகத்தின் உச்சம். ஆனால் அரவிந்தன் மாதிரி ஒரு அதிபயங்கர, ஹிந்துத்துவ அறிவுஜீவியின் எழுத்தைக் கண்ணில் க்ரூட் ஆயில் விட்டுக்கொண்டுதான் படித்தாக வேண்டியிருக்கிறது.]

ஏற்கெனவே வேறொரு காரணத்துக்காக நான் திராவிட இயக்க வரலாறு தொடர்பான புத்தகங்களைக் கொஞ்சம்போல் வாசித்திருக்கிறேன். கொஞ்சம் அடிப்படை தெரியும். தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் நெஞ்சுக்கு நீதி பாகங்கள் ஒன்றிரண்டையும் படித்திருக்கிறேன். ஆனால் என்னுடைய தலைமுறைக்குப் பிறகு அந்த இயக்கத்தில் நிகழ்ந்த சம்பவங்கள், பிளவுகள், அதன் அடிப்படைக் காரணங்கள் பற்றிய எழுத்துப் பதிவுகள் அதிகமில்லை என்று நினைக்கிறேன். [நெஞ்சுக்கு நீதியின் அடுத்த பாகங்களில் ஒருவேளை இருக்கலாம். நான் வாசிக்கவில்லை.] டி.எம். பார்த்தசாரதி, முரசொலி மாறனுடைய புத்தகங்களெல்லாம் என் அப்பா காலத்துக் கதையோடு முடிந்துவிடுகின்றன. இந்தப் புத்தகம்தான் முதல் முதலில் முழுமையான நூறாண்டு சரித்திரத்தைப் பேசுகிறது [1909 - 2009] என்ற வகையில் எனக்கு இது முக்கியமானதாகிறது.

ஒரு பத்திரிகையாளனாக முத்துக்குமாரின் நேர்மைமீது எனக்குச் சற்றும் சந்தேகம் கிடையாது என்றாலும் அவனுடைய குடும்பப் பின்னணி கொஞ்சம் கழகப் பின்னணி கொண்டது. அவன் பிறந்தபோது, குழந்தையை ஏந்துவதற்கு ஓடிச் சென்று அவனது தந்தை ஒரு கட்சிக்கொடியை எங்கிருந்தோ கொண்டு வந்த வரலாறு, கிழக்கு அலுவலகத்தில் ஒரு நாடோடிக் கதையாகிவிட்ட விஷயம். இப்படியொரு பாரம்பரியப் பெருமை கொண்டவன், நடுநிலையுடன் திராவிட இயக்க வரலாறு எழுத இயலுமா என்ற கேள்வி எங்கள் அலுவலகத்தில் பலருக்கு இருந்தது. ஆனால், ஓரிடத்தில்கூட சார்பெடுக்காமல், உணர்ச்சிவசப்படாமல் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த பெரும் வரலாற்றை அவன் நிதானம் தவறாமல் எழுதி முடித்திருக்கிறான். முந்தைய ஆசிரியர்கள் எடுத்துக் காட்டியிராத பல முக்கிய ஆவணங்களை, சம்பவங்களை, மிகப் பொருத்தமான இடங்களில் கவனமாகச் சேர்த்திருக்கிறான். கலைஞரைக் கூட, கலைஞர் என்று இந்நூல் குறிப்பிடுகிற இடம் மிகக் கடைசியில்தான் வருகிறது. பெரியார், வெறும் ராமசாமியாக இருந்து, நாயக்கராகி, ஈ.வெ.ராவாகி, பெரியாராகி, தந்தை பெரியாரானதை ஒவ்வொரு கட்டமாக கவனித்துப் புரிந்துகொள்வதன் ஊடாகவே அவர் வளர்த்த இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியை விளங்கிக்கொள்ள இயலும்.

பிராமணர் 

அல்லாதோர் சங்கமாகத் தொடங்கி, ஜஸ்டிஸ் கட்சி வழியே திராவிடர் கழகமாகி, பின்னர் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணத்தால் அண்ணா பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியது, பின்னர் அதில் உருவான சிக்கல்கள், பிளவுகள், கலைஞர்-எம்.ஜி.ஆர். காலம், எம்.ஜி.ஆருக்குப் பிந்தைய அ.தி.மு.கவின் உட்கட்சிப் பூசல்கள், ஜானகி காலம், ஜெயலலிதா காலம், தி.மு.கவிலிருந்து வைகோ பிரிந்தது, கலைஞர்-ஜெயலலிதா காலம் என்று இந்நூலில் ஒரு முழுமை இருக்கிறது. திராவிட நாடு கோரிக்கை, இந்தி எதிர்ப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து முக்கியத் தருணங்கள் குறித்தும் விரிவான அலசல் இருக்கிறது. சர்க்காரியா முதல் சமகால ஊழல்கள் வரையிலான ஒரு பாரம்பரியத்தின் வரலாறு இருக்கிறது. அனைத்துவித அவலங்களையும் மீறித் தமிழக மக்கள் எதனால் தொடர்ந்து திராவிட இயக்கங்களுக்கு ஆதரவளித்துக்கொண்டிருக்கிறார்கள் என்னும் வினாவுக்கான விடை, பல நீண்ட விசாரணைகளின்மூலம் கிடைக்கிறது.

இந்த

ப் பெரிய வரலாறில் என் ஆர்வத்தை மிகவும் கவர்ந்த விஷயம் ஒன்று உண்டு. அது, சில துணைப் பாத்திரங்களின் வார்ப்பு. பாரதிதாசன், நெடுஞ்செழியன், மதியழகன், ஈ.வெ.கி. சம்பத், எஸ்.டி.எஸ் போன்ற சில பெயர்கள் திராவிட இயக்க வரலாறில் எப்போதும் இடம்பெறுபவை. ஆனால்

 பெயர்களாக அல்லாமல் பாத்திரங்களாக இவர்கள் பெரிய அளவில் முதன்மையுற்றதில்லை.

முத்துக்குமாரின் புத்தகத்தில் இந்த இரண்டாம் வரிசைத் தலைவர்களின் உடல், மனம், ஆன்மா அனைத்தும் சுருக்கமாக – அதே சமயம் துல்லியமாக

 வெளிப்பட்டுவிடுகிறது.

பாரதிதாசனுக்கு நிதி கொடுக்கவேண்டும் என்று, பெரியாரையே எதிர்த்துக்கொண்டு அண்ணா முனைந்து வசூலித்து விழா எடுத்துச் சிறப்பிக்கிறார். அதே பாரதிதாசன், அதே அண்ணாவுக்கு எதிராகத் திரும்பி நின்று கோல் போடுகிற கட்டங்கள் மிகப்பெரிய நகைமுரண். சம்பத், மதியழகன் போன்றவர்களால் ஏன் கட்சியில் முன்னிலைக்கு வர முடியவில்லை என்ற கேள்விக்குப் பலரும் பல்வேறு விதமான பதில் சொல்லக்கூடும். இந்தப் புத்தகம், தலைமைக்கு வந்தவர்களை நுணுக்கமாக அணுகி அலசி, எந்தப் பண்பு அவர்களை அந்த இடத்துக்குக் கொண்டுவந்து நிறுத்தியது என்பதை மிக அநாயாசமாகச் சுட்டிக்காட்டிவிடுகிறது.

திராவிட இயக்க வரலாறு என்பது கிட்டத்தட்ட தமிழகத்தின் சமகால அரசியல் வரலாறு. இதை இந்தளவு நடுநிலைமையுடனும் எளிமையாகவும் சுவாரசியமாகவும் விளக்க இன்னொரு புத்தகம் இப்போதைக்குக் கிடையாது.

நேற்று இந்நூலின் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. புத்தகக் கண்காட்சிக்குக் கண்டிப்பாக வந்துவிடும். [இரண்டு பாகங்கள். தலா 200 ரூபாய் விலை.]




     RSS of this page