Home / Books List 10

Books List 10


விதுஷி வித்யா சங்கரின் இரு புத்தகங்கள் - ஒரு பார்வை

இவ்வருடம் மறைந்த இசைக் கலைஞர்கள் பட்டியலில் விதுஷி வித்யா சங்கர் ஜூன் 29-ம் தேதி இணைந்து கொண்டார்.

ஒருவர் மறைந்தவுடன் அஞ்சலிக் கட்டுரை எழுதுபவருக்கு, மறைந்தவரின் பரிச்சயம் நிச்சயம் இருக்க வேண்டும். நேரடிப் பழக்கமோ அல்லது அவர் மீதான உண்மையான ஆர்வமும், அவர் படைப்புகளில் நல்ல பரிச்சயமுமோ  இருத்தல் அவசியம். அப்படி பரிச்சயம் இல்லாதவர் எழுதும் கட்டுரை நிச்சயம் ஒரு சடங்குக்காக எழுதப்பட்டதே அன்றி, உண்மையான அஞ்சலி ஆகாது.

வித்யா சங்கர் என்ற இசைக் கலைஞரைப் பற்றி தெரிந்து கொள்ள இணையத்தில் நிறைய தளங்கள் உதவக் கூடும். அவையெல்லாம் போதாது என்று நினைப்பவர்கள் ‘ஸ்ருதி’ பத்திரிக்கையின் May 2007 இதழை வாங்கிப் பார்த்துக் கொள்ளலாம். (ஸ்ருதி அலுவலகத்தில் பழைய இதழ்களும் விற்பனைக்கு உண்டு).

vidyashankar_vina2000_web_thuஎனக்கு விதுஷி வித்யா சங்கர் என்ற மனிதரிடமோ, அவருடைய இசையிடமோ பரிச்சயம் கொஞ்சம் கூட இல்லை. ஆனால் வித்யா சங்கர் என்ற ஆய்வாளரிடம் பரிச்சயம் உண்டு. அவர் எழுதிய புத்தகங்களைப் பல முறை படித்துப் பெரும் பயனடைந்திருக்கிறேன். முறையாக இசை கற்காமல், நிறைய கேட்டும் படித்தும் இசை கற்க முனைந்த எனக்கு அவரின் இரு நூல்கள் மிகவும் உதவியாய் இருந்தன/இருக்கின்றன.

சடங்குக்காய் திருமதி வித்யா சங்கரைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து ஒரு கட்டுரையை அமைக்காமல், அவர் மறைந்த இவ் வேளையில் அவர் எழுதியுள்ள அற்புத புத்தகங்கள் இரண்டினைப் பற்றி பகிர்ந்து கொள்வதே அவருக்கு நான் செய்யக் கூடிய சிறந்த அஞ்சலி என்றெண்ணுகிறேன்.

ஒரு பாமர ரசிகனுக்கு இசையின் அழகை (aesthetics) ரசிக்க அதனுள் பொதிந்திருக்கும் அறிவியல் (scientific aspects) சார் விஷயங்கள் தேவைப்படுவதில்லை. இசை ரசனையில் முதல் நிலையைக் கடந்து அடுத்த நிலைக்குச் செல்லும் போது, ரசிகானுபவம் அழகுணர்ச்சி மட்டுமின்றி அறிவியல் பார்வையையும் சார்ந்துள்ளது. இவை அற்புதமானவை, இவை புதியவை, இவை அரியவை என்று நம்மால் அழகுணர்ச்சியின் துணை கொண்டே உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், அவை ஏன் அற்புதமானவை/புதியவை/அரியவை/ என்று விளங்கிக் கொள்ள அறிவியல் பின் புலம் இன்றியமையாததாகிறது. “The more scientific, classicism is presented, the more aesthetic and sublime it becomes”, என்று வித்யா சங்கரே ஒரு கட்டுரையில் அழகாகக் கூறுகிறார்.

ஒரு கலையை கலையாகவும், அக் கலைக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் நியதிகளாகவும், இவ்விரு பரிமாணங்கள் இணைத்துப் பெரும் உருவாகவும் அணுகுதல் சுலபமன்று. இப் பரிமாணங்களை வெளிக் கொணரும் நோக்கோடு பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வுகள் விளக்கும் அறிவியல் உண்மைகள் பண்டிதரிடையே புழக்கத்தில் இருப்பினும், அவற்றை இசையில் ஓரளவு தேர்ச்சியுடைய ரசிகன் கூட புரிந்து கொள்வது கடினம். எப்படி பலருக்கு கார் ஓட்டத் தெரிந்தாலும், கார் ஓடுவதற்கு பின் இருக்கும் அறிவியல் விஷயங்களை காருடன் கொடுக்கப்படும் துணை நூலைக் கொண்டு மட்டும் உணர்ந்து கொள்ள முடிவதில்லையோ, இசையிலும் இசையை ரசிப்பவர்களால் அதன் பின்னால் இருக்கும் விஷயங்களை ஆய்வுக் கட்டுரைகளை மட்டும் வைத்துக் கொண்டு புரிந்து கொள்வது கடினம்.

அப்படியெனில் இசை பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள என்னதான் வழி?

அறிமுக நூல்கள் மூலமே இவ்விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

அறிமுக நூல்கள் என்றால்?

அடிப்படை விஷயங்கள் தெளிவாக விளக்கப்படிருக்கும் நூல்கள். விஷயமும் இருக்க வேண்டும் பயமுறுத்தாமலும் இருக்க வேண்டும். சொல்கிற விஷயம் எத்தனை சிக்கலானதாக இருந்தாலும் சொல்லப்பட்ட விதத்தில் சிக்கலின்று இருத்தல் அவசியம். சாத்தியமா?

சத்தியமாய் சாத்தியம். “The Art and Science of Carnatic Music” என்ற தலைப்பில் 18 கட்டுரைகள் கொண்ட நூல் மேற் சொன்ன இலக்கணங்களில் கச்சிதமாய் பொருந்துகிறது.

இந் நூலில் இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான கட்டுரைகள் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வித்யா சங்கர் வழங்கிய பொழிவுகளின் தொகுப்பே. தன் பொழிவுகளின் நோக்கங்களைக் கூறும் போது, “initiate them (young lay music lovers) into the fundamental aspects of the structure, science and art of Carnatic music, so as to enable them to appreciate the art better”, என்கிறார் வித்யா சங்கர்.

70-களின் கடைசியில் முதன் முறையாகக் நிகழ்த்தப்பட்ட இப் பொழிவுகள் பெரும் வரவேற்பைப் பெற்றதனால், தொடர்ந்து இப்பொழிவுகளை பல இடங்களில் நிகழ்த்தப்பட்டன. 1983-ல், இப் பொழிவுகளின் தொகுப்பை நூலாக மியூசிக் அகாடமி வெளியிட்டது. “Her success in expressing the most subtle thoughts on the subject of Carnatic Music, her exposition of the delicacies of patterns of several ragas supporting her thesis with illustrations from the composers is masterly”, என்று எழுத்தாளர் தி.ஜானகிராமன் தனது பாராட்டுக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

தன் புத்தகத்தை ‘ஒலி’ என்கிற பதத்திலிருந்து தொடங்கியுள்ளார் வித்யா சங்கர். ‘இனிமையான ஒலியே நாதம்’ என்று விளக்கி, ஒலிக்கும் இசைக்கும் உள்ள நுண்ணிய வேறுபாட்டை விளக்குகிறார். தன் விளக்கங்களுக்கு அடித்தளமாய் சங்கீத ரத்னாகரம் போன்ற நூல்களை குறிப்பிடுவதோடன்றி, இன்று புழக்கத்தில் இருக்கும் பாடல்களிலும் சொல்லப்பட்டிருக்கும் அதே கருத்துகளையும் உடனுக்குடன் குறிப்பிட்டு இருப்பது வெகு நேர்த்தியாய் அமைந்துள்ளது.

ஒலி, அதனின்று உருவாகும் நாதம்,நாதத்தின் கூறுகள், நாதத்துக்கு ஆதாரமாய் விளங்கும் ஸ்ருதி, ஸ்ருதியுடன் இணைந்து இசைக்கும் கருவிகள், அக் கருவிகளில் இசை பிறக்கத் தேவைப் படும் ஸ்வரஸ்தானங்கள், ஸ்வரஸ்தானங்களுக்கும் ஸ்வரங்களுக்கும் உள்ள வேறுபாடு, ஸ்வரங்கள் கையாளப்பட வேண்டிய முறைகள் என்று அடுத்தடுத்து தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு சரளமாய் புத்தகத்தின் எந்த ஒரு வாசகனாலும் பயணிக்க முடியும்.

அடிப்படைகள் தெளிவானதும், ஸ்வரக் கோவைகளான ‘Scales’, அவை உருவான விதம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து இந்திய இசைக்கே உரியதான ராகங்கள் பற்றி விரிவாக இடம் பெற்றுள்ளது. தானாகத் தோன்றிய ஸ்வயம்பு ராகங்கள், அவற்றிலிருந்து கிருஹ பேதம் மூலம் பிறக்கும் ராகங்கள், காலப்போக்கில் அட்டவணைப்படுத்தப்பட்ட மேளகர்த்தா முறை, தாய் ராகங்களில் இருந்து பிறக்கும் ஜன்ய ராகங்கள் என்று பல விவரங்கள் இப்பகுதியில் நுணுக்கமாய் தொகுக்கப்பட்டுள்ளன.

விவரங்களின் அடுக்காக மட்டுமே அல்லாமல், அவ்விவரங்களின் பயன்பாட்டையும் தெரிவித்திருப்பது இப்புத்தகத்தின் தனிச் சிறபபாகும். உதாரணமாக, 12 ஸ்வரஸ்தான நியதிப் படி இரண்டு ரிஷபம் ஆனால் 22 ஸ்ருதிகள் அடிப்படையில் பார்க்கும் போது ரிஷபத்தில் நான்கு வகையுண்டு என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவற்றின் பயன்பாட்டை புழக்கத்தில் இருக்கும் ராகங்களான பைரவியிலும், கரஹரப்ரியாவிலும் வரும் ரிஷபத்தைக் கொண்டு விளக்கியிருக்கிறார். இவ்வாறு செய்யும் போது, புத்தகத்தைப் படிக்கும் மாணவன் வெறும் விவரங்களை நெற்று அடிக்கிறோம் என்று எண்ணாமல், படிக்கும் விஷயத்தில் பொதிந்திருக்கும் பயன்பாட்டையும் சேர்த்து உணரக் கூடும்.

பெரும்பாலான சமயங்களில் பண்டிதர்களால் தங்கள் நிலையை விட்டு இறங்கி பாமரனுக்காய் பேசுவதென்பது முடியாத காரியமாய் இருக்கிறது. பல்லாண்டு காலம் இசையிலும், ஆய்விலும் ஊரிய வித்யா சங்கர், தன் பாண்டித்யத்தை பறை சாற்றுவதில் கிஞ்சித்தும் ஈடுபடாதிருப்பதே இந் நூலின் எளிமைக்கு முக்கிய காரணம்.

வித்யா சங்கரின் மற்றொரு பிரபலமான நூல், “Aesthetic and Scientific Values in Carnatic Music”.

இந் நூலில் 1946-லிருந்து 1996 வரை மியூசிக் அகாடமியில் வித்யா சங்கர் அளித்துள்ள செயல்முறை விளக்கங்களின் தொகுக்கப்பட்டுள்ளன. (இதன் இரண்டாம் தொகுதியும் வெளியாகியிருப்பது சமீபத்தில்தான் தெரிந்தது.) 50 வருட உழைப்பின் பயனாய் 20 கட்டுரைகள் இந் நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் பல கட்டுரைகள் தமிழ்க் கட்டுரைகள்.

1946-ல் டைகர் வரதாச்சாரியாரின் தலைமையில் படிக்கப்பட்ட ‘தியாகராஜரைப்’ பற்றிய கட்டுரை, இள வயதிலும் வித்யா சங்கருக்குள் இருந்த ஆய்வு நோக்கைப் பறை சாற்றும் விதமாக அமைந்துள்ளது. ஷ்யாமா சாஸ்திரி, கமகங்கள், வீணை கற்றுக் கொடுக்கும் முறை, மேளராகமாலிகை என்று பலதரப்பட்ட தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இது போன்ற கட்டுரைகள் பெரும்பாலும், அனுபவம் பகிர்தலாகவோ, அரிய விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் முயற்சிகளாகவோ அமைந்துள்ளன.

இவை தவிர, வித்யா சங்கர் என்ற ஆய்வாளரின் தனிப்பட்ட ஆராய்ச்சிகளின் பதிவாய் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள் இரண்டு.

முதல் கட்டுரை - “Derivation and Application of additional srutis.” ஒரு ஸ்தாயிக்குள் 22 ஸ்ருதிகளை தேர்ந்த காதுகளால் தெளிவாக பாகுபடுத்திவிட முடியும் என்பது பரவலான கூற்று. இந்த 22 ஸ்ருதிகளில், பிரக்ருதி ஸ்வரங்களான ஷட்ஜம், பஞ்சமம் தவிர, ஐந்து விக்ருதி ஸ்வரங்களான ரிஷபம், காந்தாரம், மத்யமம், தைவதம், நிஷாதம் ஆகியவை நான்கு நிலைகளில் இடம் பெற்றுள்ளன. அனைத்தையும் சேர்ப்பின் 2+(2*2*5) = 22.

வித்யா சங்கர் தன் ஆய்வில், இந்த 22 ஸ்ருதிகளைத் தவிரவும் வேறு ஸ்ருதிகள் உபயோகத்தில் உள்ளதையும், அவற்றை சரியாக பாகுபடுத்த முடியும் என்றும், அந்த ஸ்ருதிகளின் Relative Frequency-ஐயும் நிறுவியுள்ளார். ஏற்கெனவே இருந்த 22-ஐத் தவிர 10 ஸ்ருதிகளை எப்படி நிறுவினார் என்பதை சுருக்கமாய் விளக்குதல் முடியாத காரியம். ஆர்வம் இருப்பவர்கள் புத்தகத்தை வாங்கிப் படிப்பதே சாலச் சிறந்தது. “The calculation of sruti intervals constitutes the author’s own contribution to Musicology”, என்கிறார் டி.எஸ்.பார்த்தசாரதி.

இவ்வாய்வுக்காக ‘ஸ்ருதி வீணை’ என்றொரு வகை வீணையை தானே வடிவமைத்துள்ளார்.

அந்த வீணையின் வடிவமைப்பின் விவரமே முன் சொன்ன இரு கட்டுரைகளுள் இரண்டாம் கட்டுரை. ‘Sruti Vina’ என்ற தலைப்பில் 1985-ல் படிக்கப்பட்ட கட்டுரையில் இந்த வீணையில் எந்தெந்த இடத்தில் fret-கள் அமைக்க வேண்டும் என்று நிறுவியிருக்கும் விதம் ஸ்வாரஸ்யமானது. கையால் வரையப்பட்ட தெளிவான அட்டவணைகளையும் கட்டுரையுடன் சேர்த்து வெளியிட்டிருப்பது நிச்சயம் மாணவர்களுக்குப் பயனுள்ளதாய் இருக்கும். வேண்டா வெறுப்பாய் படித்த Theory of Vibration-ம், மாய்ந்து போய் போட்ட சிறு வயது L.C.M கணக்குகளும் ஓர் உன்னத இசைக் கருவி உருவாக்க உதவியாய் இருக்கும் அதிசயத்தை எண்ணி அறிவியலில் ஈடுபாடுள்ளவர்கள் நிச்சயம் மகிழ்வர்.

இசை ஆய்வாளர்களுள் பலர் செயல் முறை விளக்கங்களை சிறப்பாகச் செய்யக் கூடியவர்கள். அவற்றை நேரில் கேட்கும் போது சுலபமாகவும், தெளிவாகவும் விளங்கும். ஆனால், அதே விளக்கத்தை நேரில் கேட்காமல் கட்டுரையாகப் படிக்கும் போது, பல விஷயங்கள் விளங்காமல் போகும். வித்யா சங்கரைப் பொறுத்த மட்டில், அவரது செயல்முறை விளக்கங்கள் தொகுக்கப்பட்டிருக்கும் இரு புத்தகங்களிலும், வாசகனை சென்றடைவதில் சுலபமாய் வெற்றியடைந்துவிடுகிறார்.

பாவம்! காலன்தான் என் செய்வான். அவனால், தொண்ணூறு வயதில் உடல் தளர்ந்த பெண்மணியைத்தான் வீழ்த்த முடியும். அந்தப் பெண்மணி வாழ்ந்த காலத்தில் சாதித்தையா வீழத்த முடியும்?


English is a living language, and no dictionary, not even so-called online ones, have succeeded in capturing the essence of not just what is right/wrong but also what is beautiful/inappropriate.
The dictionary is right now relegated to just two increasingly-irrelevant things.
- to learn the etymology of words
- to learn the spelling of words
For everything else, I think, the Internet, Google, and a score of other well-researched and well-maintained blogs and websites serve us better..
And, if you want to learn what is the best word to use in a particular occasion, here are some tips.
- Watch Hollywood movies.
- Read newspaper editorials.
- Read authentic, famous, well-maintained news blogs from BBC, CNN, NYT, The Hindu...
- Make mistakes. The more you sweat in peace, as they say, the less you bleed in war.
- Develop listening/observing skills. If you can watch the micro-reactions of your audience carefully and dynamically evolve and modify what you say and how you say it, you will be pretty much safe most of the time.
No two words in English are EXACTLY the same - for the other one would have been superfluous and not there in the first place. Subtleties abound. Only practice will hone your skills in word choice.
Finally, if you are really serious about this, and are the "book-reader" type here are two books I really liked, for their breadth and depth on the subject.
http://www.rdasia.co.in/rd/rdhtml/en/estore/shop_detail.jsp?mcid=0001&ecid=1010&epid=0410444
and
http://www.readersdigest.com.sg/rd/rdhtml/en/estore/shop_detail.jsp?mcid=0001&ecid=1010&epid=0410407
The distraction, the tail and the dog

Mark Frauenfelder, a leading voice of the post-industrial age, has a new book out today.

It's not what you expect, and it provoked quite a few thoughts.

  • The book is about the increasing insulation between modern life and the idea of actually making/growing/fixing things. As Mark chronicles his journey into the world of tinkering, I realized that this is a spiritual journey, not merely a hobby. Tweaking, making and building are human acts, ones that are very easy to forget about as we sign up to become cogs in the giant machinery of consumption and production.
  • Mark has shepherded the world's most popular blog for eons. What do we owe him for that? Even if the book is merely good, shouldn't it sell a million copies, if only as a gratuity? Of course it's not merely good, it's foundation-shaking, at least for me.
  • Is it any surprise that Publisher's Weekly didn't like it? Of course not. The anonymous reviews in this dying trade publication are almost always diametrically opposed to what the book delivers and whether it's interesting enough for a bookstore to sell. Almost all bestselling books are surprise bestsellers, because it's the surprise part that makes them bestsellers in the first place.
This book won't resonate with everyone, but Mark's honest retelling of his repeated failures to be brilliant at all times made me smile, and his relentless and joyous embrace of actually making things was an inspiration.

ஒரு ஊரின் கதை - வலம்புரி ஜான்ப்ளாக் வைத்திருப்பதன் உயரிய நோக்கங்களில் ஒன்று எழுதுபவன் (எழுத்தாளன் என்ற பதத்தைத் தவிர்க்கும் என் அடக்கம் யாருக்கு வரும்?) முன்னெப்போதோ கிறுக்கிய லாண்டரிக்குறிப்பு வரை வருங்கால சந்ததியினருக்கு பாதுகாத்து வைப்பது.

படித்த நூல்களைப் பற்றி எழுதுவது அபாய சாத்தியங்கள் உள்ள நல்ல பழக்கம். எழுதுவதற்காகப் படிக்க உந்தினால் நல்ல பழக்கம். "உன் வாசக அனுபவம் இவ்வளவுதானா?" என்று படிப்பவர்கள்/ படிக்கப்போகிறவர்கள் (மேற்சொன்ன வருங்கால சந்ததியர்) சொல்லிவிடக்கூடிய அபாயமும் உண்டு.

'உலகம் இதன்மேல் கவனத்தைக் குவித்தாகவேண்டும்' என்ற நூல்களைப் பற்றி எழுதினால் தான் இந்தப் பிரச்சினை. கிட்டத்தட்ட 'உள்சுழற்சிக்கு மட்டும்' என்ற வகை புத்தகத்தைப் பற்றி எழுதினால் ஒரு மாதிரி சமாளித்துவிடலாம்.

ஒரு ஊரின் கதை - வலம்புரி ஜான்

சில மாதங்களுக்கு ஒரு முறை எனக்கு கொஞ்சம் ஒழுங்கு பிடித்து அப்பாவின் புத்தக அலமாரியை அடுக்க முயல்வேன். அனேகமாக ஏதோ ஒரு புத்தகம் கிடைத்து, ஒழுங்குபடுத்தும் முனைப்பு மழுங்குவதோடு அது நின்றுபோய், மறுபடியும் புத்தகங்கள் கலைந்து கிடக்கும். இதை ஒரு சாரார் (அம்மா) 'திருப்பதி வேலை' என்றும் ஒரு சாரார் (அப்பா) 'அறிவுச்செறுக்கு' என்றும் சொல்வதுண்டு. அறிவுச்செறுக்கில் ஓரிரு மாதங்களில் தூசி படிந்து ஒழுக்கச்சக்கரம் மீண்டும் தொடங்கும்.

இந்தமுறை ஒரு இண்டு-இடுக்கிலிருந்து ஒரு ஒல்லிப் புத்தகம் கிடைத்தது: வலம்புரி ஜானின் 'ஒரு ஊரின் கதை'. இது புதினம் அல்ல. தனது சொந்த ஊர் (உவரி) பற்றியும், அதன் அருகில் உள்ள (தான் வளர்ந்த) தனக்குப் பழக்கப்பட்ட ராதாபுரம் போன்ற ஊர்களைப் பற்றி என்று. பதிவு போல ஊர்க்கதை, நையாண்டி, மனிதச் சித்திரங்கள், அரசியல், மதம் (தத்துவமாக அல்ல, வாழ்க்கை முறையாக) என்று எளிய நடையில் எழுதப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்டு சொல்லவேண்டியது புத்தகம் நெடுக இருக்கும் ஒரு எள்ளல் தொனி. இதை ரசித்துப்படிக்கும் படி செய்வது அது தான். மற்றொரு விஷயம் பாதிரிமார்களையும், அம்மக்களின் மீது மத அமைப்புகள் செலுத்தும் அதிகாரத்தையும் கடுமையாக தாக்கி ஜான் எழுதியிருப்பது. (நூலின் முன்குறிப்பு : இந்நூலில் வரும் இடங்களும் சம்பவங்கள் யாவும் கற்பனையல்ல, ஒரு சிலரையாவது புண்படுத்துவதற்காகவே எழுதப்படுகிறது) .

அதேபோல அவ்வூர் மக்களிடையே உள்சண்டையும், கலவரங்கள் வருவதையும் எழுதியிருக்கிறார். சில சமயம் கடிந்துகொள்ளும் தொனியில் , பல சமயம் அதையும நகைப்புக்குரிய விஷயமாக்கும் ஒரு கீழ்நோக்குப் பார்வையில்.

ஊரை விட்டு ஓடிவிடும் இளசுகள் ஒருசில நாட்களில் திரும்பி வந்துவிடுவதை சொல்ல: "சில நாளில் குறுகுதும்" என்ற கம்பராமாயண வாக்கியத்தை சொல்கிறார்.இதை குகனிடம் சொன்ன ராமன் 'சில நாட்களில்' வரமுடியாமல் பல பிரச்சனைகளை எதிர்கொண்டான். இனி இங்கு வருவதில்லை என்று உதரிச்சென்ற சிறுசுகளும் அது போல எதிர்பாராத மாற்றங்களை தங்கள் வாழ்க்கையில் சந்தித்திருப்பார்கள் என்பதை அழகாக, கச்சிதமாக ஒரு எதிர்-உதாரணத்துடன் சொல்கிறார். இதைப்போல போகிறபோக்கில் அவர் படிப்பு வெளிப்படுகிறது - பல சமயங்கள் இயல்பாகவே.

தான் எம்.பி ஆன பின் நிகழும் ஒரு சில அரசியல் அனுபவங்களையும் சுவையாக எழுதியிருக்கிறார். கழுதைவாலை உள்ளூர் பையன்கள் தீவைப்பது அனுமன் வாலால் இலங்கைக்கு தீவைப்பதை நினைவுபடுத்துவது, "இலங்கைக்கு போன அனுமன் இடையே எங்கள் ஊரின் நின்று டீ குடித்ததாக நம்பப்படுகிறது" என்றெல்லாம் மிக் சகஜமாக எழுதியிருக்கிறார்.

70-80 களில் கூட இவ்வளவு சகஜமாக எழுத முடிந்திருக்கிறது. காவியக்கதைக்களை மிக இயல்பாக நாம் எல்லாரும் உள்வாங்கிக்கொண்டுள்ளோம். மதத்தைத் தாண்டிய பொது கலாசார விஷயங்கள் இவை.ஆனால் இன்று இப்படி ஒரு கிறுஸ்தவ பிரமுகர் எழுதினால் "காழ்ப்புணர்ச்சி", தெருப்புழுதி என்று குதிப்பார்கள். இவற்றையெல்லாம் அந்நியமாகப் பார்த்து, 'மரியாதை'யுடன், மிகுந்த பிரக்ஞையுடன், கவனமாக அணுக/எழுத நிர்பந்திக்கும் ஒரு 'நாகரிகத்துக்கு' இன்று வந்துவிட்டோம்.

எழுத்து ஒரே சீராக இல்லை ஒரு சில இடங்களில் பாய்கிறது, தேங்குகிறது. கடைசியில், படிப்பதற்கு பாளையங்கோட்டை வந்தது, திருச்சியில் வேலைசெய்தது பிறகு சென்னைக்கு வந்தது என்று ஓரிரு பத்திகளில் அவசரமாக முடித்துபோல இருந்தது. அதனால் நானும்...

வெறும் நாற்பத்திசொச்ச பக்கங்கள் தான். ஜானின் மென்மையான எள்ளல் நடைக்காகவே ஒரு முறை படிக்கலாம். ஆனால் எங்கும் கிடைக்காது.

இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள் - புத்தகம்

எந்த நிமிடமும் பேப்பரை விட்டு தாவி குதித்தோடிவிடுமோ என்ற பயம் என் சிறுவயது நண்பன் கோகுலின் ஓவியங்களைப் பார்த்தால் தோன்றும். பத்து வயதிலேயே புராணக் கதைகள், விளையாட்டு காட்சிகள் போன்ற ஓவியங்களை நுணுக்கமான நேர்த்தியுடன் தத்துரூபமாக வரைவான். தேரோட்டி அர்ஜுனன், மானைத் தேடும் ராமன், மைதானத்தில் நடக்கும் கிரிகெட் போட்டியில் பார்வையாளர்களின் ஆரவாரம், ஸ்பைடர்மேன், மாண்ட்ரேக் மாயாவி என விதவிதமாகப் `படம்` போடுவதில் அவனுக்கு ஆர்வம் அதிகம். வண்ணங்களை குறைவாக உபயோகித்தாலும், காட்சிகளில் ஒரு தேஜஸ் காணப்படும். பென்சிலால் அவன் வரைந்த புதுச்சேரி புனித மேரி ஆலயம் பல வருடங்கள் கடந்து இன்றும் துள்ளி்யமாக என் நினைவில் உள்ளது. ஒரு விதத்தில் பார்த்தால் நல்ல கலைக்கு இதுவே அளவுகோல். என் போன்ற அரைகுறை ஞாபகக்காரர்களுக்குக்கூட தேவையான நினைவுமீட்டலை எக்காலத்திலும் கலையால் கொண்டுவர முடியும்.

Wheel 
 
(மேலும் பல வண்ணப்படங்களுக்கு படத்தை சொடுக்கவும்)

பழைய ஞாபகங்களை கொண்டுவருவதில் ஓவியங்களின் பங்களிப்பு என்ன? அவற்றிலிருந்து பண்டைய சமூக வரைபடத்தை தீட்டமுடியுமா?

வான்கோ, மோனே, பிகாஸோ போனறோரின் ஓவியங்கள் உலகப்புகழ் பெற்றவை. அடிப்படையில் இவை ஐரோப்பிய பாணி ஓவியங்கள். அருங்காட்சியகங்கள், நூல்கள் மூலம் பரவலான கவனத்தைப் பெற்ற ஐரோப்பிய ஓவியங்கள் பல நூற்றாண்டுகால மரபுத் தொடர்ச்சி பெற்றவை. எல்லா நாட்டு ஓவிய பாணி போல, குகை ஓவியங்களில் ஆரம்பித்த மரபு மெதுவாக இறையியல், நடைமுறை வாழ்வியல் முறைகள், போர் என நீட்சி கொண்டு வளர்ந்தது. ஆனாலும், ஐரோப்பிய பாணி என்ற வகை விமர்சகர்களால் உருவாக்கப்பட்ட கலை. தொடர்ச்சியான பாரம்பரியம் இருந்ததால் பலகோணங்களில் விமர்சனம் உருப்பெற்று வளர்ந்தது. இவ்வளர்ச்சி இன்று நவீன ஓவியங்கள்,கொலாஜ், அன்றாட பொருட்களைக்கொண்டு உருவாக்கப்படும் பிளாஸ்டிக் ஓவியங்கள் என பல புது வகை ஓவிய/கலை பாணிக்கு வழிவகுத்துள்ளது.

இந்திய ஓவியப் பாரம்பரியத்தை இப்படிப்பட்ட எளிமையான தொடர்புறுத்தல் மூலம் நிலைநாட்ட முடியாது. அது சாத்தியமும் அல்ல. பல சமூகங்களில் தோன்றி, உருப்பெற்று, புது சமூக பாணியுடன் கலந்து தேக்க நிலை அடைந்துள்ள பல பாணிகளே இங்குள்ளன. பல கலாசாரங்கள் ஒன்றாக வளர்ந்த சூழலில் ஒரு குறிப்பிட்ட பாணியை இந்திய பாணி என வரையறுக்கவும் முடியாது. வெளித் தெரியாத சமூக பழக்கவழக்கங்கள் ஒரு தடையாக இருந்ததென்றால், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் பலமொழிச் சிக்கல்களும் ஒரு பொதுவான விமர்சன தளம் உருவாகவிடாமல் தடுத்தது. தஞ்சாவூர் ஓவியங்கள் பிற மாநிலங்களுக்கு பரவாமல் இருந்தது ஒரு உதாரணம். அதேபோல் ராஜஸ்தானி ஓவிய பாணி தென்பகுதியை வந்து சேர பல நூற்றாண்டுகள் ஆனது.

இதனாலேயே `இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்` என்ற தலைப்பில் ஓவியர் அரவக்கோன் எழுதிய கட்டுரை தொகுப்பை `இந்திய பாணி` என ஒட்டுமொத்தமாக வரையறுத்துக் கூறுவது கடினம்.

இந்தியாவின் பல வளர்ச்சிகளைப் போல், ஓவியமும் பல கிளைகளாக வளர்ந்து ஆங்காங்கே பரந்து விரிந்து நிற்கிறது. ஆனாலும் இவை அனைத்தும் ஒரே விதையிலிருந்து தோன்றியவை அல்ல. இந்தியா என்ற குடைக்குக் கீழே பல சிறு குழுகளாக வளர்ந்தவை. இப்பாணிகளை பக்தி சார்ந்த ஓவியங்கள், சமூக நிகழ்வுகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் என ஒரு பொதுவான தளத்தில் மட்டுமே ஒன்றாக கொண்டு வர முடியும்.

இப்படிப்பட்ட புரிதலை அடிப்படையாகக்கொண்டு பல குழுக்களின் ஓவிய பாணிகளைப் பற்றி அரவக்கோன் விரிவாக எழுதியுள்ளார்.

பண்டைய இந்தியாவில் ஓவியக்கலை உச்சாணிக்கொம்பில் இருந்த சாட்சிகள் இருந்தாலும், அதிலிருந்து கிளைத்த ஒற்றை மரபு என எதுவும் இல்லை.இது இந்திய ஓவிய பாணிக்கு பெரிய இழப்பாகும். குறிப்பிடத்தக்க இந்திய ஓவிய பாணி என்பது பெளத்த பிக்குகள் வரைந்த அஜந்தா,எல்லோரா ஓவியங்களில் தொடங்குவதாக குறிப்பிடுகிறார். மூன்று நூற்றாண்டுகளாக கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை வரையப்பட்ட இந்த ஓவியங்கள் பண்டைய இந்தியாவின் வாழ்வு முறைகளைப் பற்றி கூறாவிட்டாலும்,நம் பண்டைய கலை மரபின் அளவுகோலை நிர்ணயிக்கிறது.

ஓவிய வரலாற்றுடன் இயற்கையிலிருந்து தயாரிக்கப்பட்ட வண்ணங்கள், அவற்றின் வகைகள், அவை உருவாக்கப்பட்ட முறைகள் என தெளிவாக இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.பசுக்களின் சிறுநீரிலிருந்து தயாரிக்கப்படும் இந்திய மஞ்சள், நாணலிலிருந்து பெறப்பட்ட கருநீலம், மரத்திலிருந்து கிடைக்கும் பச்சை, கோந்து போன்றவை இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் பெர்சிய நாட்டு ஓவியர்கள் இத்தயாரிப்பு முறையிலிருந்து பெரிதும் பயன்பெற்றிருக்கிறார்கள். பண்டைய இந்தியா உலகுக்கு அளித்த கொடையாகவே இது கருதப்படுகிறது.

இந்தியாவின் கையடக்க கோட்டோவியங்கள் பற்றிய கட்டுரை மிகத் தெளிவாக அமைந்திருக்கிறது. ஜகதீஷ் மிட்டல் போன்ற ஓவியர்களில் பாணியாக அமைந்த கோட்டோவியங்கள் பதினேழாம் நூற்றாண்டில் தொடங்கியவை. இதன் தொடர்ச்சியாக கும்பினி பாணி ஓவியங்கள் அமைந்தன.மேலும் முகலாய பாணி ஓவியங்கள் என நாம் இன்று பார்க்கும் ஓவியங்களின் பிறப்பிடமாக கையடக்க ஓவியங்கள் இருந்திருக்கின்றன. இவை அளவில் சிறிதாக இருந்தாலும், கையால் தயாரிக்கப்பட்ட தாளில் வரையப்படுவதால் சிக்கலான முறையாக அமைந்திருக்கிறது.

ராஜஸ்தான், நேபாளம், வங்காளப் பகுதிகளில் இறை வடிவ ஓவியங்கள் பிரதானமாக வரையப்பட்டன. பல நூற்றாண்டுகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கலைஞர்கள் இப்பாணியை பின்பற்றியுள்ளனர்.விஷ்ணுவின் பத்து அவதாரங்கள், புத்தரின் அருள் மொழிகள், தாந்திரிக வழிபாட்டு முறை ஓவியங்கள் என மக்களுக்கான நல்லொழுக்க விதிகளைத் தாங்கிய ஓவியங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை வரையப்பட்டன.

சீக், மதுபானி, காளிகாட் ஓவியங்கள் என சிதறுண்ட ஓவியப்பாணியே இந்தியாவில் பல மூலைகளிலிருந்து நமக்கு கிடைத்துள்ளன.ஓவியங்கள் மட்டுமல்லாது,வானளாவிய கோபுரங்கள், கோயில் சிலைகள் என பல கலைகளின் முறைகள் செழிப்பாக இருந்திருந்தாலும் அவை உருவான முறை பற்றி நமக்குத் தெளிவில்லாத சித்திரமே மிஞ்சுகிறது.

ஒரு உத்தமனின் கைபெருவிரல் ஒரு அளவெனக் கொண்டால், அப்படிப்பட்ட இருபத்து நான்கு விரல்கள் ஒரு கோலாகும். இப்படியாக ஏழு கோல் நீளம், அதே அளவு உயரம் போன்ற நுணுக்கமான அளவுகோள்களால் மாதவியின் நாட்டிய மேடை அமைக்கப்பட்டிருந்தது என சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதை செய்யுள் கூறுகிறது. இப்படி மிக விரிவாக கட்டிடக்கலையைப் பற்றி தொகுத்த நம் பாடல்கள்,கண்டிப்பாக ஓவிய பாணியையும் தொகுத்திருக்கும். இன்று அவை நமக்குக் கிடைக்காமல் இருப்பது வருத்தமான விஷயமாகும்.

இந்தியாவின் பல ஓவிய பாணியைப் பற்றித் தெரிந்து கொள்ள தகுந்த ஆரம்ப நிலை புத்தகமாக இது அமைந்துள்ளது. அதே சமயம் புத்தகத்தின் நோக்கம் பல இடங்களில் தடம் புரண்டிருக்கிறது. தஞ்சாவூர் ஓவியங்கள் பற்றிய கட்டுரை மேலும் விரிவாக இருந்திருக்கலாம். பல கட்டுரைகள் ஆங்கிலக் கட்டுரைகளை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. ஓவியக்கண்காட்சிகளின் விமர்சனமாக இருக்கும் மூல கட்டுரைகளை தமிழாக்குபோது அதிக விவரணைகளைச் சேர்த்திருக்கலாம். இதனாலேயே சில கட்டுரைகள் (பாட்னா கலம்,சுவடி ஓவியங்கள்) சொல்லவரும் விஷயங்கள் பிடிபடவில்லை.

இந்தியவில் நவீன ஓவிய பாணி எழுச்சி கொண்டு முதன்முறையாக வங்காளத்தில் உருவானது.Indian Society of Oriental Art போன்ற குழுக்கள் மூலம் Cubism,Impressionism போன்ற பாணிகள் வங்கத்தில் அடியெடுத்து வைத்தன. இவற்றைப்பற்றியும் முழுமையாக சொல்லாமல்,மேலோட்டமான செய்திக்கட்டுரையாக எழுதப்பட்டுள்ளது.

தங்குதடையில்லாமல் சுவாரஸ்யமாகப் படிக்க இக்குறைகளை அடுத்த பதிப்பில் கண்டிப்பாக நீக்க முயல வேண்டும்.

முன்னுரையில் அரவக்கோன் எழுதியிருப்பதுபோல், இக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் தனித்தனி புத்தகங்களாக ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. தமிழில் இத்தொகுப்பு முதல் முயற்சி மட்டுமல்லாது நல்லதொரு ஆரம்ப நிலை புத்தகமாகவும் அமைந்துள்ளது. செழுமையான முயற்சிக்காக அரவக்கோனுக்கும், இப்புத்தகத்தை வெளியிட்ட எனி இந்தியன் பதிப்பகத்துக்கும் நன்றி.

பல புகைப்படங்கள் கருப்பு-வெள்ளையில் இருப்பதால், எனி இந்தியன் தளத்தில் பல ஓவியங்களை வண்ணத்தில் தொகுத்துள்ளனர்.

இக்கட்டுரைகளைத் தாண்டி இந்திய ஓவிய மரபைப்  பற்றிய மேலதிக விவரங்களுக்கு ஆங்கில மூலத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை.


nanjil-nadan1சமீபத்தில் அக்கினிநட்சத்திர வெயில் உக்கிரமாய்க் காய்ச்சிக் கொண்டிருந்த ஒரு வைகாசி நாளில், நண்பர் செழியனின் புதுமனை புகுவிழாவுக்காக மரபின்மைந்தன் முத்தையா, செளந்தர் வல்லதரசு அண்ணா ஆகியோருடன் தஞ்சாவூர் போயிருந்தேன். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக பதிப்புத்துறை விற்பனைப்பிரிவில் எனக்குச் சில புத்தகங்கள் வாங்க வேண்டியிருந்தது. தோதாக, ஒருநாள் முன்பாகவே தஞ்சாவூரில் இருந்தேன். நான் தேடிய புத்தகங்கள் - உரையுடன் சங்க இலக்கியங்கள், பெருஞ்சொல் அகராதி இதுவரை வெளியான நான்கு தொகுதிகள், சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் நான்கு தொகுதிகள், பேராசியரியர் கு.சீநிவாசன் எழுதிய ‘சங்க இலக்கியத் தாவரங்கள்’ என்பன.

தங்கியிருந்த விடுதியில் இருந்து நடக்கின்ற தூரம்தான். என்றாலும், கத்திரி வெயில் களைப்பேற்படுத்தியது. ஒருகாலத்தில் 44 டிகிரி செண்டிகிரேட் வெயிலில் நாக்பூர், அக்கோலா, வார்தா, ஹிங்ஙன் காட் என்று அலைந்தவன்தான் என்றாலும் அந்தப் பருவம் வேறு. ATM-ல் பணம் எடுத்துக் கொண்டு, பதிப்புத்துறை விற்பனைப்பிரிவு போய்ச் சேர்ந்தேன். புத்தக விற்பனைப் பிரிவுக்கான எந்த அடையாளமும் அற்று, வேஸ்ட் காட்டன் மில் பஞ்சுக் கிடங்கு போலிருந்தது. தூசியிலும், வியர்வையிலும் கசகசத்துத் தேடியபோது, பெருஞ்சொல் அகராதி நான்கு தொகுதிகளில் இரண்டும் நான்கும் கிடைத்தன. சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் நான்கு தொகுதிகளில் மூன்றாம் தொகுதி மட்டும் இல்லை. உரையுடன் சங்க இலக்கியங்கள் எதுவும் இல்லை. முக்கியமாக நான் தேடிவந்த ‘சங்க இலக்கியத் தாவரங்கள்’ இல்லவே இல்லை. எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு, ‘வெறுவாக்கலியம் கெட்டவன் விறகுக்குப் போனா, விறகு கிடைத்தாலும் (கட்டுகிற) கொடி கிடைக்காது’ என்று. என் யோகம் எப்போதும் அப்படித்தான். ஆனால் அரசியல்வாதி ஒருவர் எழுதிய, ஆய்வுக்கும், அறிவுக்கும் எந்த விதத்திலும் உதவாத புத்தகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஆளுயரத்துக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ‘நஞ்சு நானாழியா வேணும்?’ என்றொரு பழமொழியும் ஞாபகம் வந்தது. எவ்வாறாயினும் கிடைத்ததை விடவேண்டாம் என்று, பெருஞ்சொல் அகராதி தொகுதி இரண்டும் நான்கும், சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் தொகுதிகள் ஒன்றும், இரண்டும், நான்கும் வாங்கினேன். விற்பனை செய்யும் ஊழியர் பெருந்தன்மையுடன் இருபத்தைந்து விழுக்காடு கழிவு செய்து பில் கொடுத்தார். மேலதிகம் தகவல் ஒன்றும் சொன்னார். பேரறிஞர், மாமேதை, இன்னாட்டு இங்கர்சால், தென்னாட்டு பெர்னாட் ஷா என்றெல்லாம் அறியப்பட்ட அண்ணாதுரை பிறந்த செப்டம்பர் மாதம் மட்டும் ஐம்பது சதமானம் தள்ளுபடி என்று. வேறு எந்தத் தமிழ்க் கொம்பன் பிறந்த மாதமானாலும் இருபத்தைந்து விழுக்காடுதான். வரும் செப்டம்பரில் வரவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். நமக்கென்ன, மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை சொல்வது போல, ‘அப்பம் தின்னவோ அலால் குழி எண்ணவோ?’.

பஞ்சுக்கிட்டங்கி பக்கத்திலேயே பதிப்புத்துறை இயக்குநர் அலுவலகம். புரட்சித்தலைவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், முதல் துணைவேந்தராக இருந்த, தகுதி சால் பேராசிரியர், ஆய்வறிஞர் வ.அய்.சுப்ரமணியம் வாங்கிப் போட்ட லைனோ அச்சு இயந்திரம் கீழ்த்தளத்தில். எதற்கும் தகவல் பரிமாறிப் போவோம் என்று, அனுமதி பெற்று அறைக்குள் நுழைந்தேன். இயக்குநர் நம் பெயர் அறிந்தவராக இருந்தார், உற்சாகமாக உரையாடினார். செம்மொழி மாநாட்டுக்காக அறுபத்தெட்டு நூல்கள் மறுபதிப்பு அச்சாகி வருவதாகவும் நான் தேடுவன கிடைக்கும் என்றும் சொன்னார். மனதுக்கு உற்சாகமாக இருந்தது.

‘விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலைகாண்பது அரிது’

எனும் திருக்குறள் ஞாபகம் வந்தது.

செம்மொழித் தமிழ்க்குடிமகனுக்கு, திருக்குறள் பொருள் விளங்குவது அரிது என்பதால் G.V.பிள்ளை என்று அழைக்கப்பட்ட, திருச்சி பேரறிஞர் கோ.வன்மீகநாதன் பிள்ளையின் ஆங்கில மொழிபெயர்ப்பு பின்வருமாறு:

‘Unless the drops from the sky fall, it would be impossible to see even a sprout of green grass!’

இனி இந்த மொழிபெயர்ப்பு எங்கு கிடைக்கும் என்பதையும் உங்களுக்குச் சொல்ல வேண்டும் அல்லவா? திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடம், ‘திருக்குறள் உரைக்கொத்து’ என்றொரு நூல் மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காலிங்கர் உரைகளும், கோ.வன்மீகநாதன் பிள்ளையின் ஆங்கில மொழிபெயர்ப்பும். அறத்துப்பால் ஆறாம்பதிப்பு 1993, பொருட்பால் மூன்றாம் பதிப்பு 1990, காமத்துப்பால் நான்காம் பதிப்பு 1991, மூன்று தொகுதிகளும் 1093 பக்கங்கள், டெமி அளவு, சாதாக்கட்டு. கோவை விஜயா பதிப்பகத்தின் வாசகர் திருவிழாவில் 1996-ல் வாங்கினேன். எழுத்தாளர் எனும் தகுதிக் கழிவு பதினைந்து விழுக்காடு நீக்கி, நான் கொடுத்த விலை ஐம்பத்தோரு ரூபாய்தான் என்றாலும் என்னிடம் இருக்கும் பெருஞ்செல்வம் அது.

தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்துப் புத்தகவிற்பனைப் பிரிவில் ’சங்க இலக்கியத் தாவரங்கள்’ கிடைக்காதது ஏமாற்றமாக இருந்தது என்று சொன்னேன். என்னிடம் ஏற்கனவே ஒரு படி இருக்கிறது. நூலக இரவல், திருப்பித் தர வேண்டும் கட்டாயமாய். சிலமுறை வாசித்து விட்டேன் என்றாலும் சொந்தமாய் ஒரு படி வைத்துக் கொள்ள, ஆர்வமாய்த் தேடிக் கொண்டிருக்கும் ‘ஓசை’ நண்பர் திரு.காளிதாசுக்கும் புலவர் இரணியனுக்கும் பரிசளிக்க சில படிகள் வாங்க எண்ணினேன்.

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், வெளியீட்டு எண். 73, 1987-இல் வெளியிட்ட புத்தகம் இது. இருபத்து மூன்று ஆண்டுகளாய் மறுபதிப்பு இல்லை. 810 பக்கங்கள், காலிக்கோ கட்டு, அன்றைய விலை ரூ.120-00. ஆசிரியர் முனைவர் கு.சீநிவாசன், எம்.எஸ்.சி, பி.எச்.டி தொல் அறிவியல் துறை. இன்று நிச்சயம் ஓய்வு பெற்றிருப்பார். சீவித்திருக்கிறாரா, சிவலோக பதவியோ வைகுந்த பிராப்தியோ சேர்ந்து விட்டாரா என்னும் தகவலும் இல்லை. எனக்கு அவரை அறிமுகம் கிடையாது. பதிப்புத்துறை இயக்குநரிடம் கேட்டிருக்கலாம். எதிர்மறைப் பதிலுக்கு அஞ்சி கேட்கத் துணியவில்லை. மேலும் உண்மையான அறிஞர்களைத் தடயமற்று மறப்பதுதானே செம்மொழிப் பண்பு!

மிக அற்புதமான ஆய்வு நூலது. அரிய தகவல்கள், மேற்கோள்கள், விஞ்ஞானபூர்வமான செய்திகள் கொண்டது.

’சங்கத் தமிழ் இலக்கியங்களில் 210 மரம், செடி, கொடிகளின் பெயர்கள் காணப்படுகின்றன. இவை 150 தாவரங்களையே குறிப்பிடும். என்னையெனில் ஒரே தாவரத்துக்கு வெவ்வேறு புலவர்கள் வெவ்வேறு பெயர்களைக் கூறியுள்ளமையின் என்க’ என்கிறார் ஆசிரியர், முன்னுரையில். உண்மைதானே! மஞ்சணத்தி என நான் அறிந்த மரம்தான் நுணா என்றறிய எனக்கு ஐம்பது ஆண்டுகள் பிடித்தன. மைனா எனும் பறவைதான் நாகணவாய்ப் புள் என்று அறியும்போது எனக்கு அறுப்பத்திரண்டு வயதாகிவிட்டது.

இந்த 151 தாவரங்களின் சங்க இலக்கியப் பெயர், சங்க இலக்கியத்தில் வேறு பெயர், உலக வழக்குப் பெயர், தாவரக்குடும்பம், தாவரப்பெயர், ஆங்கிலப்பெயர் எனும் அனைத்துத் தகவல்களும் தருகிறார். மேலும் தாவர இயல்வகை, தாவரத் தொகுதி, தாவரக் குடும்பம், தாவரப் பேரினப் பெயர், தாவரச் சிற்றினப் பெயர், தாவர இயல்பு, தாவர வளரியல்பு, உயரம் அல்லது நீளம், கிளைத்தல், வேர்த்தொகுதி, தண்டுத்தொகுதி, சிற்றிலை, நுனிச்சிற்றிலை, மஞ்சரி, மலர், புல்லி வட்டம், அல்லி வட்டம், மகரந்த வட்டம், சூல் தண்டு, காய், கனி, மகரந்தச் சேர்க்கை, பயன், வளர்ப்பு என அநியாயத்துக்குத் தகவல்களா என ஆசிரியர் கால்கள் பற்றிக் கதறத் தோன்றும் சில சமயம்.

குறிஞ்சிப்பாட்டில் கபிலர் தொகுத்துக் கூறும் மலர்களின் பெயர்கள் தொண்ணூற்று ஒன்பது. ஒரு காலத்தில், மாணவராக இருந்த கா.காளிமுத்து, பின்னாளில் சட்டசபைத் தலைவராக இருந்தவர், திராவிட முன்னேற்றக் கழக மேடையில் இந்த மலர்களின் பெயர்கள் தாங்கிய குறிஞ்சிப் பாட்டின் பாடல்வரிகளை மனப்பாடமாகச் சொல்லும்போது மெய்சிலிர்க்கக் கேட்டதுண்டு. ஆனால் அங்கேயே தங்கிப் போகாத அரசியல்வாதி அவர். இறக்கும்வரை, நவீன இலக்கியப் புத்தகங்களை விரும்பி, வாங்கி, உடனே வாசிப்பவர். அவருடன் உரையாட நேர்ந்த பல பொழுதுகளில் அதை நான் உணர்ந்திருக்கிறேன்.

குறிஞ்சிப்பாட்டு குறித்துள்ள பல மலர்களை இன்னது என்று யாராலும் இன்றும் அறுதி இட்டுச் சொல்ல முடியவில்லை என்கிறார் கு.சீநிவாசன்.

sangupushpamபல தாவரங்களின் இலைகள், மலர்களின் கருப்பு-வெள்ளை புகைப்படங்கள் தாவரங்கள் பற்றிய நமது அறிவை ஒப்பிட்டுப் பார்க்க உதவுகின்றன. எடுத்துக்காட்டுக்கு, சங்கு புஷ்பம் என்று பரவலாக அழைக்கப்படும் கொடிப்பூவை நாமறிவோம். வெள்ளை, கருநீலம் என இருநிறங்களில் பூக்கும். ஈதொரு மூலிகைக் கொடியும் ஆகும். இதை நூலாசிரியர் கருவிளை, செருவிளை எனும் தலைப்பில் ஆராய்கிறார். கருவிளை என்பது கருங்காக்கணம், செருவிளை என்பது வெண்காக்கணம்.

‘காதலர் பிரிந்த கையறு மகளிர்
நீர்வார் கண்ணின் கருவிளை மலர’

- என்று அகநானூற்றின் 294-ஆவது பாடலை மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர்.

‘தன்புனக் கருவிளை கண்போன் மாமலர்’

- என்பது நற்றிணையின் 262-ஆவது பாடல் மேற்கோள்.

திருக்குறளில் நான்கு பாடல்களில் குறிப்பிடப்படும் ‘அனிச்ச மலர்’ பற்றிய கட்டுரை சுவாரசியமானது.

குவளை, கழுநீர், செங்கழுநீர், நீலம், காவி, செங்குவளை, நெய்தல், பானல், சிந்திவாசம், நீலப்பூ எனப்படும் நீலோற்பலம் பார்த்ததுண்டா, கேட்டதுண்டா? சில ஆண்டுகளுக்கு முன்பு, கவிஞர் சல்மா எழுதிய ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ எனும் நாவலுக்கு, இந்து நாளிதழில் பிரசன்னா ராமசாமி எழுதிய ஆங்கில மதிப்புரை வாசித்தேன். அதில் நாவலாசிரியர் கண்களை நீலோற்பல மலருக்கு ஒப்பிட்டிருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது. இலக்கியத் திறனாய்வு எடுக்கும் புதிய பாடம்!

அடிப்படையில் கிராமத்து மனிதனான நான், பல தாவரங்களை, புகைப்படங்களைக் கொண்டு இந்த நூலின் மூலம் அடையாளம் கண்டேன். எடுத்துக்காட்டுக்கு ‘அழிஞ்சில்’. இஃதோர் சிறுமரம். இதன் தொல்காப்பியப் பெயர் ‘சே’. பிற்கால இலக்கியப் பெயர் அழிஞ்சில்.

நாஞ்சில்நாட்டு உழவர், ஏர் அடிக்கும்போது, ஏர் மாடுகள், குறிப்பாக எருமைக்கடாக்களை முடுக்க, உழவு கம்பு வைத்திருப்பார்கள். அதன் நுனியில் தார் இருப்பதால் அது தார்க்கம்பு. தார் என்பது, கம்பின் நுனியில் அடித்து இறுக்கி, நுனி கூராக அராவப்பட்ட வேப்பிலைக் காம்பு கனமுள்ள ஆணி.சிலர் கிராமபோன் காந்த ஊசியைப் பயன்படுத்துவார்கள். அந்த ஊசியினால் குத்தி, கடாவின் புட்டியில் புண் ஆனால் ஆறுவது கடினம் என, இரக்கமுள்ள உழவன் காந்த ஊசி பயன்படுத்துவதில்லை. கோணல் இல்லாத, கைப் பெருவிரல் கனமுள்ள, நீண்ட கம்பு அது. மாட்டை ஓங்கி அடித்தாலும் கீறாத, நுனி வெடித்துச் சிதறாத, காட்டுக் கம்பு. அதன் தன்மை அது. உழவு கம்பால் அடி வாங்காமல் உழவன் வீட்டில் எந்தச் சிறுவனும் வளர்ந்து ஆளானதில்லை. ‘உழவன் கணக்குப் பார்த்தால் உழவு கம்புதான் மிச்சம்’ எனும் பழமொழி நினைவில் தட்டும்போது காட்சிப்படுவது இந்த அழிஞ்சில் கம்புதான். அதை நாங்கள் அழிசங்கம்பு என்போம். அதன் இலை, வரிசை எனக்கு அடையாளம் தெரியும். அழிசு என்பதும் அழிஞ்சில் என்பதும் ஒன்றேதான் என்றறிய எனக்கு அதிக நேரமாகவில்லை.

அதுபோல் எனக்கு இன்னொரு அதிசயம் ‘மராஅம்’ எனப்பட்ட செங்கடம்பு. யாமறிய கடம்பு இருவகை - மஞ்சள் கடம்பு மற்றும் செங்கடம்பு. ‘உடம்பை முறித்துக் கடம்பில் போடு’ என்பது பழமொழி. கடம்ப மரத்தில் செய்யப்பட்ட கட்டில் உடல்வலி போக்கும் என்பது குறிப்பு. முருகனைக் குறிக்க ‘கந்தா, கடம்பா, கதிர்வேலா’ எனப் பாடல் உண்டு. சிவனைக் கடம்பவனத்தான் என்பார்கள்.

schoolkidsசிறுவயதில், உயர்நிலைப் பள்ளிக்கு, எங்கள் சிற்றூரின் கிழக்கே ஒரு கல் எமக்கு நடக்க வேண்டும். அவ்விதம் நடக்கும்போது கடுக்கா மூடு, புங்க மூடு, பூவத்தான் கோயில், புதுக்குளம் என்று சில ஈட்டான்களில் ஆயக்கால் போட்டு நின்று பேசுவோம்.

அவ்விதம் ஆயக்கால் போட்டு நின்று பேசுவது பற்றி லால்குடி, சப்தரிஷி ராமாமிர்தம் எனும் லா.ச.ரா ஓரிடத்தில் குறித்துச் சொல்வார். கடுக்கா மூடு என்றழைக்கப்பட்ட ஈட்டான், சாலையோரம் நின்ற ஒற்றைக் கடுக்காய் மரம். இந்த மரத்தைப் பல இடங்களில் பழையாற்றங்கரையில், சில குளத்தங்கரைகளில் கண்டிருக்கிறேன். ‘சங்க இலக்கியத் தாவரங்கள்’ எனும் இந்த நூலில் தரப்பட்டிருக்கும் இலை, பூங்கொத்தின் புகைப்படம் பார்த்து, நான் அறிந்து கொண்டது. ஐம்பது ஆண்டுகளாய் நான் கடுக்காய் மரம் என அறியாமல் நம்பி வந்திருந்த மரம் செங்கடம்பு என்பது. உங்களுக்குத் தோன்றலாம் இதில் என்ன அதிசயம் இருக்கிறது என. ஆனால் எனக்கு மயிர்க் கூச்செறிந்தது.

‘கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் கொண்ட வெறிமனை வந்தோய்’

எனும் நற்றிணைப் பாடல் எனக்குப் புதியபொருளுடன் விளங்கியது.

எத்தனையோ சொல்லிக் கொண்டே போகவியலும். ஓரளவுக்குத் தாவரங்களின் மேல் ஈடுபாடு உடையவர், கிராமங்களில் பிறந்து வளர்ந்தவர், இயற்கை மீது ஆர்வம் கொண்டவர் பலருக்கும் இந்த நூல் ஒரு புதையல். நூல் கிடைப்பதும், கிடைக்காமற் போவதும் உங்கள் ஊழ்வினை.


க. நா. சு.வின் படித்திருக்கிறீர்களா?


க.நா. சுப்ரமண்யம்

க.நா. சுப்ரமண்யம்

தன ரசனையின் அடிப்படையில், தனக்கு பிடித்த புத்தகங்களை பற்றி இங்கே க.நா.சு. பேசுகிறார். நான் தமிழில் இதற்கு முன் புத்தகங்களை பற்றி பேசும் வேறு புத்தகங்களை படித்ததில்லை – நற்றினை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் மாதிரி இலக்கியங்கள் பற்றி நிறைய கிடைக்கும். ஆனால் அதை எல்லாம் எவன் படிப்பது?

எனக்கு இந்த புத்தகம் ஒரு eye opener. தமிழிலும் சாண்டில்யன், லக்ஷ்மி தரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் நிறைய உண்டு, அவற்றை பற்றி பேசவும் எழுதவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று இதை படிப்பதற்கு முன் எனக்கு தெளிவாக தெரியாது. ஏதோ கொஞ்சம் நல்ல புத்தகங்கள் இருக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். தமிழில் நல்ல எழுத்துகளுக்கான என் தேடலுக்கு வழி காட்டிய முதல் புத்தகம் இதுதான். செகந்தராபாதில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அந்த காலத்தில் வருஷா வருஷம் ஒரு தமிழ் புத்தக கண்காட்சி நடத்துவார். அங்கே இதை வாங்கிவிட்டு வராந்தாவிலேயே படித்ததும், இதில் உள்ள புத்தகம் எல்லாம் வருவதில்லை என்று அவர் சொன்னதும் ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவிருக்கிறது. (எஸ்.வி.வி. எழுதிய உல்லாச வேளை மட்டும் கிடைத்தது.)

இதில் குறிப்பிடப்பட்ட புத்தகங்களில் எனக்கு இன்னும் முக்கால்வாசி கிடைக்கவில்லை. ஆனால் இன்னும் தேடுவதை நான் நிறுத்தவில்லை.

க.நா.சு.வின் லிஸ்ட் கீழே. எனக்கு ஏதாவது தெரிந்தால் அதையும் சுருக்கமாக சொல்லி இருக்கிறேன்.

1. புதுமைப்பித்தனின் காஞ்சனை - புதிய கூண்டு, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சுப்பையா பிள்ளையின் காதல்கள், செல்லம்மாள், சாப விமோசனம் ஆகிய கதைகள் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் என்று யாராவது தொகுத்தால் கூட போடலாம். சுப்பையா பிள்ளையின் காதல்கள் ஜேம்ஸ் தர்பர் எழுதிய Secret Life of Walter Mitty என்ற அருமையான கதையை நினைவுபடுத்தலாம். தர்பர் கதையை படித்து எழுதினாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் அப்படியே எழுதி இருந்தாலும் கூட இது ஒரு அற்புதமான கதை என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

2. தீபனின் அரும்பிய முல்லை – நான் படித்ததில்லை. தீபன் டி.கே.சி.யின் புதல்வர். அவர் எழுதிய கதை, கவிதை, விமர்சனம், கடிதங்களிலிருந்து சில பகுதிகள் இங்கே தொக்குக்கப்பட்டிருக்கின்றன. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

3. சிதம்பர சுப்ரமணியனின் இதய நாதம் – படித்ததில்லை. இவர் எழுதிய எதையுமே நான் படித்ததில்லை. இந்த புத்தகம் பற்றி க.நா.சு. எழுதியதை படித்த பின்னர் இது கிடைக்காதா என்று பெரிய ஏக்கமே உண்டு. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

4. எஸ். வையாபுரிப் பிள்ளையின் தமிழ் சுடர்மணிகள் – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
வையாபுரிப் பிள்ளையைப் பற்றிய போஸ்ட்கள் இங்கேஇங்கே மற்றும் இங்கே.

5. லா.ச.ரா.வின் ஜனனி – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
லா.ச.ரா. கொஞ்சம் pretentious என்று நான் நினைக்கிறேன். அவர் எழுத்துகள் உணர்ச்சி பிரவாகம். ஆனால் அவர் எழுதிய பாற்கடல், புத்ர இரண்டும் எனக்கு பிடிக்கும். கண்ணாடியில் பிம்பம் விழும் ஓசை என்று அவர் எழுதிய ஒரு வரி மிக பிரபலம். (நல்ல வரியும் கூட. பூப்பூக்கும் ஓசை பாட்டின் வரிகள் மாதிரி இல்லை?) அந்த வரி வரும் கேரளத்தில் எங்கோ என்ற புத்தகத்தை நான் தேடித் பிடித்து படித்திருக்கிறேன். இந்த ஒரு வரி தவிர வெறும் ஒன்றுமே அதில் கிடையாது. :-)

6. எஸ்.வி.வி.யின் உல்லாச வேளை – எஸ்.வி.வி. இதில் கலக்கி விடுவார். நகர்ப்புற, மேல் மத்திய தர வர்க்க, பிராமண milieu. படிக்க உண்மையிலேயே உல்லாசமாக இருக்கும். “படித்திருக்கிறீர்களா” புத்தகம் படித்துவிட்டு அந்த கண்காட்சியில் தேடியபோது கிடைத்து ஒரே புத்தகம் இதுதான்.கல்கியின் நகைச்சுவை மாதிரி இருக்கும். ஆனால் அவரது பிற புத்தகங்கள் எனக்கு ரசிக்கவில்லை (ராமமூர்த்தி)

7. வ.வே.சு. ஐயரின் மங்கையர்க்கரசியின் காதல் – நான் இந்த புத்தகத்தை படித்ததில்லை. ஆனால் இதில் வரும் குளத்தங்கரை அரசமரம் நல்ல சிறுகதை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

8. யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள் – படித்ததில்லை. யதுகிரி அம்மாள் பாரதியாரின் நண்பர் (மண்டயம் திருமலாச்சாரியார்?) ஒருவரின் மகள். பாண்டிச்சேரியில் சிறுமியாக இருந்தபோது பாரதியாரை அருகில் இருந்து பார்த்தவர். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

9. வ.ரா.வின் நடைச்சித்திரம் – வாழ்க்கையில் உள்ள மனிதர்களை பற்றி ஒன்றிரண்டு பக்கங்களில் நன்றாக எழுதி இருப்பார். போஸ்ட்மன் பொன்னம்பலம், காய்கறிக்காரி அம்மாக்கண்ணு, தமிழ் வாத்தியார் முத்துசாமி என்று இருக்கும். சின்ன வயதில் படித்திருக்கிறேன். சமீபத்தில் என்னிடம் இருக்கும் காப்பியை தேடித் பிடித்து திருப்பியும் படித்தேன், அப்போதும் பிடித்திருந்தது.

10. சங்கரராமின் மண்ணாசை – படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று க.நா.சு. ஏக்கப்பட வைக்கிறார். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

11. ஏ.கே. செட்டியாரின் உலகம் சுற்றும் தமிழன் – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

12. தி. ஜானகிராமனின் கொட்டுமேளம் – சிறுகதை தொகுப்பு. படித்ததில்லை. சிலிர்ப்பு என்ற அருமையான சிறுகதையை வேறு எங்கேயோ படித்திருக்கிறேன். தி.ஜா.வின் மோக முள், அம்மா வந்தாள் இரண்டும் எனக்கும் பிடித்த நாவல்கள். மரப் பசு சிலாகிக்கப்படுகிறது. சில இடங்கள் நன்றாகவும் இருக்கும். ஆனால் என் கண்ணில் அது ஒரு தோல்வி. தி.ஜா.வுக்கு அந்த காலத்து வாசகனை அதிர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் இருந்திருக்க வேண்டும். இந்த காலத்து வாசகர்கள் அதிர்ச்சி அடைய மாட்டார்கள். :-)

13. மு.வ.வின் கரித்துண்டு – படித்ததில்லை. மு.வ.வின் நாவல்கள் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. மு.வ.வை பற்றிய ஒரு பதிவு இங்கே. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

14. தி.ஜ.ர.வின் பொழுதுபோக்கு – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

15. டி.எஸ்.எஸ். ராஜனின் நினைவு அலைகள் – படித்ததில்லை. ராஜன் அந்த காலத்தில் மந்திரியாக இருந்தவர். சுதந்திர போராட்டத்தில் சிறை சென்றவர். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

16. ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் – படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று க.நா.சு. ஏக்கப்பட வைக்கிறார். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

17. கு. அழகிரிசாமி கதைகள் – அழகிரிசாமி அற்புதமான எழுத்தாளர். இந்த தொகுப்பை நான் படித்ததில்லை. ஆனால் இதில் வந்திருக்கும் ராஜா வந்திருக்கிறார், திரிவேணி இரண்டு சிறுகதைகளையும் வேறு எங்கோ படித்திருக்கிறேன். மிக அருமையானவை. என்னிடம் அவர் எழுதிய எல்லா சிறுகதைகளும் தொகுக்கப்பட்டது ஒரு காப்பி இருக்கிறது. இன்னும் படித்து முடிக்கவில்லை. எங்கே என்றுதான் தெரியவில்லை. :-)

18. அ. சுப்ரமணிய பாரதியாரின் ஜடாவல்லவர் – இவர் மகாகவி பாரதியார் இல்லை. இன்னொருவர். இந்த புத்தகத்தை படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

19. கல்கியின் சங்கீத யோகம் – தமிழிசை இயக்கம் பற்றி கல்கி எழுதியவை. படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

20. பாரதிதாசன் கவிதைகள் – எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம். ஏதாவது படித்திருப்பேன், என்ன என்று கூட தெரியாது. முனைவர் மு. இளங்கோவன் மாதிரி யாராவது பாரதிதாசனின் கவிதை வீச்சு, தாக்கம் பற்றி எழுதினால் என்னை போன்ற ஞான சூன்யங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஆனால் பாரதிதாசனுக்கு சந்தம் கை வந்த கலை – எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று சொல்லிப் பாருங்கள்! இல்லை கொடு வாளினை எடடா பல கொடியோர் செயல் அறவே என்று சொல்லிப் பாருங்கள்! அவருக்கு நல்ல sense of humor உண்டு.இருண்ட வீடு என்ற சிறு காவியத்தை படித்து பாருங்கள். இல்லை என்றால் தமிழ் சினிமாவின் நிலை பற்றி அவர் எழுதியதிலிருந்து ஒரு வரி – பத்தினிக்கு இன்னல் வரும், பழையபடி தீரும்

21. கு.ப.ராவின் கனகாம்பரம் – சிறுகதை தொகுப்பு. திரை, பண்ணை செங்கான், விடியுமா ஆகியவை மிக நல்ல கதைகள். கு.ப.ரா. மிகவும் subtle ஆக எழுதக்கூடியவர். கு.ப.ராவின் எல்லா கதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றை அல்லையன்ஸ் பதிப்பகம் தொகுத்து ஏழெட்டு வால்யூம்களை ஒரு நாலைந்து வருஷத்துக்கு முன் வெளியிட்டது. இப்போதும் கிடைக்கலாம். என்னிடம் கூட ஒன்றிரண்டு வால்யூம்கள் எங்கேயோ இருக்கிறது.

இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1957-இல வந்தது. அதற்கு முன் வந்த புத்தகங்களை பற்றித்தான் அவர் இங்கே எழுதி இருக்க முடியும். Obviously. விலை என்ன தெரியுமா? இரண்டே முக்கால் ரூபாய்!




     RSS of this page