Home / AravindanNeelakandan

AravindanNeelakandan


Author Profile: அரவிந்தன் நீலகண்டன்

Biography »


Publications »

ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in சமூகம்சினிமாமகளிர் on 9 December 2010
Stats: and 92 Comments

நல்ல கணவன் அமைய செய்யும் ஒரு பாரம்பரியமிக்க நோன்பைப் பற்றி, மிக மலினமான காம வார்த்தைகளால் நிரப்பி ஒரு பாடலை எழுதியிருக்கிறார் இந்த நடிகர்… ஆண்டாள் பாசுரங்களில் இருப்பதாக கூறப்படும் காமத்தையும், தமிழ் சினிமா பாடல் ஆபாசத்தையும் நாம் ஏன் ஒன்றாகக் கருத முடியாது?.. ஆபாச வியாபாரிகள் கலையின் பெயரால் நம் பண்பாட்டின் மீது செய்யும் தாக்குதலைக் கண்டு, நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?

சான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in சமூகம்புத்தக விமர்சனம்வரலாறு on 24 November 2010
Stats: and 9 Comments

நான்காவது வர்ணம்’, ‘சூத்திரர்’ என்கிற பதங்கள் கீழ்மையானவை என்கிற எண்ணம், நம் பொதுபுத்தியிலும், நமது அறிவுலக பொதுபுத்தியிலும் நன்றாக பதித்திந்திருக்கிறது. ஆனால் வரலாற்றின் யதார்த்த தரவுகள் இதற்கு மாறாக இருக்கின்றன… ஈழத்தமிழர் சந்தித்துள்ள பேரழிவுக்கு எது காரணம்? மாக்ஸ்முல்லர்-கால்டுவெல் கும்பல்கள் வித்திட்டு, காலனியம் வளர்த்து, காலனியம் உருவாக்கிய ‘வரலாற்று இனவுணர்வே’ காரணம்… உண்மையான வரலாற்றினைத் தம்முள் கொண்ட நம் தொன்மங்கள், நம் கதைப்பாடல்கள், நம் சடங்குகள்…

மறைந்த நதி: சரஸ்வதியைத் தேடி..
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in புத்தக விமர்சனம்பொது on 16 October 2010
Stats: and 14 Comments

பாரதத்தின் பண்டைய வரலாற்றினை அறிவது எப்படி என ஆர்வமுடனும் அறிவியல் கண்ணோட்டத்துடனும் அணுகும் எவருக்கும் இந்த நூல் ஒரு நல்ல கையேடு [...] ஹரப்பன் பண்பாடு என அழைக்கப்படும் அதன் பரிணாம வளர்ச்சியில் சரஸ்வதி நதி ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது [...] தனினோ சரஸ்வதி-சிந்து பண்பாட்டு வெளியில் நம்மை ஒரு பெரிய அகழ்வாராய்ச்சி சுற்றுப்பயணத்தில் அழைத்துச் செல்கிறார் [...] இந்த நூல் ஒரு அறிவியல் தேடல். தேடப்படும் பொருளோ நம் நரம்புகளில் இன்றும் பாய்ந்து கொண்டிருக்கும் ஒரு வாழும் பண்பாட்டின் மூல ஊற்றுக்களைத் தேடி…

விதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள்
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in அறிவியல்இந்து மத விளக்கங்கள்கேள்வி-பதில்தத்துவம் on 4 October 2010
Stats: and 28 Comments

மரணம் மட்டுமே மனிதத்தின் ஒரே நிச்சயமான விஷயம். இது மனிதனை வாழவே விடாமல் நிலைகுலையச் செய்யும்… விதி ஒரு மரப்பாச்சி பொம்மையாக- குறுகிய ஓர் உளவியல் ஆறுதலுக்காக- வைத்திருக்கலாமே தவிர அதனை வாழ்க்கை முழுவதும் வைத்துக் கொண்டிருப்பது சரியல்ல. மனிதனின் அடிப்படட உணர்ச்சியான ஞானத்தேடலில் அவன் விதி எனும் மரப்பாச்சி பொம்மையைத் தூக்கி எறிந்துவிட்டு முன்னேற வேண்டும்…

தண்ணீர் தேசக் கண்ணீரும் ஒரு ஹிந்துத்துவ எதிர்வினையும்
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in சமூகம்நிகழ்வுகள்பிறமதங்கள் on 9 September 2010
Stats: and 30 Comments

இணைய வக்கிரங்களை வைத்து நாம் இன்னும் கற்காலத்திலிருந்தே வெளிவரவில்லையா என ஆதங்கப்படுவது “கொஞ்சம் ஓவர்”…அட, இந்த வக்கிர மனநிலை ஓர் இறையியலாகவே ஆபிரகாமிய மதங்களின் மூலம் அந்த மத மக்கள் மனதில் வேரூன்றி இருக்கிறது… பாகிஸ்தானிய இயற்கைப் பேரழிவின் போதும் அங்கு காஃபீர் ஹிந்துக்களை கொடுமைப்படுத்தும் ஈமானியக் கடமையை இஸ்லாமியப் பெருமக்கள் துறக்கவில்லை. ஹிந்துக்கள் அகதிகள் முகாம்களிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள் என்கின்றன பல ஊடகச் செய்திகள்…

இரு பெண்களின் கதை
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in சமூகம்பொதுமகளிர் on 10 August 2010
Stats: and 13 Comments

ஜூலியா ராபர்ட்ஸ்களின் பேட்டிகளில் போகிறபோக்கில் அவர்கள் காட்டும் ஒரு வரி அங்கீகாரங்களால் அல்ல; ஊடக ஒளிவட்டங்கள் விழாத பல இலட்சம் பங்காரம்மாக்கள் அறத்துக்காகப் படும் வேதனைகளாலும் கண்ணீர் வெள்ளங்களாலும் தான் ஹிந்து தர்மம் வாழ்ந்து கொண்டிருக்கிறது…. படித்த ஹிந்துக்கள், ஹிந்து உணர்வாளர்கள், அத்தகைய ஹிந்துக்களாக நாம் இருக்கிறோமா என்பதை அறிந்திட காலம் உருவாக்கிய ஒரு முரண் சோதனைதான் ஜூலியா ராபர்ட்ஸின் பேட்டியும் பங்காரம்மாவின் போராட்டமும்.

ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in ஆன்மிகம்புத்தக விமர்சனம் on 27 July 2010
Stats: and 12 Comments

போலிப்பகுத்தறிவு பேசிய இனவாதிகள் ஆபிரகாமிய மத நம்பிக்கையை ஆதர்ச மத நம்பிக்கையாக நம் மக்கள் முன் வைத்தனர். இந்துக்களும் தமது இறைக் கோட்பாடுகளை ஆபிரகாமிய சட்டகத்தில் பிரதி எடுக்க ஆரம்பித்தனர். “நான் முருகனை நம்புகிறேன். நீ ஏசுவை/அல்லாவை நம்புகிறாய்” என மத-ஒப்புமை பேச ஆரம்பித்தனர். ஆனால் உண்மை வேறுவிதமானது; … ஒரு தொடக்க அறிதல் முறையாக சிருஷ்டியை ஒரு தேவன் செய்தான் என்கிற கோட்பாட்டை வைத்து விளையாடிவிட்டு அதனை வளரும் குழந்தை பொம்மைகளை உதறுவது போல உதறியிருக்கிறார்கள்…

தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in சமூகம்புத்தக விமர்சனம் on 22 July 2010
Stats: and 11 Comments

வாசிக்கும் போது மனதில் கசப்பும் அவமானமும் ஊறுகிறது. தமிழின் பெயரில் கூத்தடிக்கும் அரசியல் கோமாளிகள் ஒருபக்கம், அரசியல் வைராக்கியத்துடன் இந்திய வம்சாவளியினர் நலனைப் பாதுகாக்கும் முதுகெலும்பும் அக்கறையும் அற்ற மத்திய அரசு மறுபக்கம், நம்மக்கள் படும் துயரை புறக்கணிக்கும் ஊடகங்கள் மறுபக்கம், இவை எதிலும் அக்கறையில்லாமல் இலவசங்களுக்கும் ஆயிரங்களுக்கும் ஜனநாயகத்தையே அடகு வைக்கும் மந்தையாக நாம் மறுபக்கம். என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?… இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழர்கள் அயல்நாடுகளில் அனுபவிக்கும் அன்றாட வாழ்க்கை அவலங்களையும் காய்தல் உவத்தலின்றி முன்வைக்கும் முக்கியமான முயற்சி இது….

இங்கிலாந்து ஏழைகளுக்குக் கல்விக்கண் திறந்த இந்துப் பண்பாடு
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in சமூகம்பொதுவரலாறு on 22 June 2010
Stats: and 26 Comments

வெள்ளைக்காரர்களும் கிறிஸ்தவ பாதிரிகளும் இங்கு வந்து கல்வி சேவை செய்யாமலிருந்திருந்தால் இந்த மனுவாத பிராம்மணீய இந்து மதம் நம்மையெல்லாம் கல்வியறிவில்லாத மூடர்களாகவேதான் வைத்திருக்கும். இன்றைக்கு இந்த மண்ணின் கீழ்த்தட்டு மக்களுக்குக் கல்வி கிடைத்திருக்கிறது என்றால் அது கிறிஸ்தவமும் மிஷினரிகளும் போட்ட பிச்சை…. இது பல நேரங்களில் பல மேடைகளில் பேசிக் கேட்ட விஷயம்தான். …… அவர்கள் சொல்வதில் என்ன தவறு என்றுதான் பெரும்பான்மையான ஹிந்துக்கள் நினைத்துக்கொள்கிறார்கள்…..ஆனால், உண்மை என்ன என்பதைச் சிறிது ஆழமாக வரலாற்றைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

வரலாற்றாசிரியராக வீர சாவர்க்கர்
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in அரசியல்வரலாறுவழிகாட்டிகள் on 2 June 2010
Stats: and 23 Comments

அந்த இருள் அகல பாரதத்தின் வரலாற்றை ஆழ்ந்து பயின்றவர் வீர சாவர்க்கர். அவர் எழுதிய “பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்” ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் படிக்க வேண்டிய நூலாகும். தமிழர்களான நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் அதில் உண்டு… தமிழக மன்னர்களின் வீரத்தை, அன்னியர் ஊடுருவிட இயலாத தென்னக பாரதத்தின் மறத்தை, முதன் முதலில் புகழ்ந்தெழுதி ஆவணப்படுத்திய வரலாற்றாசிரியர் வீர சாவர்க்கரே ஆவர்.

சுவாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும்
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in இந்து மத மேன்மைசமூகம்வரலாறுவழிகாட்டிகள் on 27 May 2010
Stats: and 11 Comments

இறுதியில் ஆச்சாரவாதிகளிடம் ஹிந்து தர்மம் சிக்கியிருப்பதாக நம்பிய அம்பேத்கர் தமது மக்களை பௌத்தராக மாறும்படி கூறினார். ஆனால், அவர் இயற்றிய அரசியல் சட்டத்தில் பௌத்தர்களை ஹிந்து தர்மத்தின் ஒரு பிரிவாகவே அவர் அங்கீகரித்திருந்தார்.

சாதியம், தேசியம் ஆகியவை குறித்த பார்வையில் அண்ணல் அம்பேத்கருக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் வியக்கத்தகு ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம்.

வேற்றுக்கிரகவாசிகள்: வீண் வதந்திகளா? அறிவியல் உண்மையா?
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in அறிவியல்கேள்வி-பதில் on 22 May 2010
Stats: and 7 Comments

வேற்றுலகவாசிகள் என்றால் அறிவுடைய ஒரு பண்பாடாகத்தான் அவர்கள் இருக்க வேண்டுமென்பதில்லை. நிச்சயமாக நுண்ணுயிரிகளாவது இருக்க வாய்ப்புள்ளது அல்லவா? … அவர்களின் அறிவியலும் அறிதல் முறையும் எவ்வாறு இருக்கும்? அவர்களின் உலகில் இசை இருக்குமா? … விண்மண்டலங்களுக்கு இடையே, பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் விளங்கும் இரு வெவ்வேறு பண்பாடுகளுக்கு இடையே பிரபஞ்ச பொது மொழியாக கணிதம் அமையும். அத்வைதி இவ்வுண்மையை புன்னகையுடன் ஆமோதிப்பான்.

எது உழைப்பாளர் தினம்?
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in சமூகம்தேசிய விழாக்கள்பொதுவரலாறு on 1 May 2010
Stats: and 20 Comments

மே 1 உலக உழைப்பாளிகள் தினம் அல்ல. கோடானுகோடி மக்களை இரக்கமின்றி அழித்தொழிக்கும் ஒரு அரக்க சித்தாந்தம் அற உணர்ச்சி முலாம் பூசி நடிக்கும் ஒரு நாடக தினமே மே 1… நகரம்-கிராமம், ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி, உடல் உழைப்பு-மூளை உழைப்பு, விவசாயத் தொழிலாளி-ஆலைத் தொழிலாளி என்று பாகுபடாமல், இயற்கையும் மானுடமும் இணைந்து பணியாற்றும் ஒரு தினமாக அது கொண்டாடப்பட வேண்டும். நமக்கு எது அந்தத் தினம்?

பிரமிடின் அடித்தளத்தில் பொக்கிஷத்தைக் கண்டவர்: சி.கே.பிரகலாத்
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in சமூகம்பொருளாதாரம்வழிகாட்டிகள் on 30 April 2010
Stats: and 7 Comments

சமுதாய பிரமிடின் அடித்தளத்தில் வாழும் மிகவும் ஏழையான மக்களுக்கு தேவைப்படும் சேவைகளையும் பயன்பாடுகளையும் அளிப்பதன் மூலம், கார்ப்ரேட் அமைப்புகள் இலாபம் பெற முடியும், அதே நேரத்தில் வறுமையை ஒழிக்கவும் முடியும் என்றார் உலகப் புகழ்பெற்ற பொருளாதார பேராசிரியர் சி.கே பிரகலாத்… பணத்தை அள்ளிக் கொடுத்து உருவாக்கும் தாராள மனப்பான்மையால் விளைந்ததல்ல ஜெய்ப்பூர் செயற்கை கால்கள்; மாறாக அடித்தள மக்களின் தேவைகளிலிருந்து, அதன் அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்து உருவானது.

கூவாகம் கூத்தாண்டவர்: புத்தக விமரிசனம்
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in ஆன்மிகம்சமூகம்புத்தக விமர்சனம் on 1 April 2010
Stats: and 5 Comments

உலகின் பிற பாகங்களில் வாழும் அலிகளைக் காட்டிலும் இந்தியாவில் வாழும் அலிகள் கௌரவமாக வாழ்வதாகவும், இந்திய புராண இதிகாச மரபுகள் இதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அந்த ஆய்வாளர் கருதுகிறார்… தமிழ்நாட்டு அலிகள் நகர்ப்புற நாகரிகங்களிலும், திராவிடவாதிகளின் பிரச்சாரத்தையே முன்னெடுத்த திரைப்படங்களிலும், இழிவாகவே காட்டப்பட்டனர்… ஏசி அறை செமினார்களால் அல்ல, இத்தகைய பாரம்பரியங்களே இந்த மண்ணின் “விளிம்பு நிலை” மாந்தரை அழகுடனும் சுயமரியாதையுடனும் வாழ வைக்கிறது.

அங்காடித் தெரு - திரைப்பார்வை
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in சினிமா on 29 March 2010
Stats: and 25 Comments

‘அண்ணாச்சி’ முருக பக்தர் என்றாலும், அவருக்கு வேலுக்கும் சேவல் கொடிக்கும் நடுவில் இருப்பது முருகன் அல்ல, லாபம் மட்டும்தான். சுபம் அல்லாத லாபம்.. இரக்கமின்றி கண்காணிக்கப்பட்டு வதைத்தே விலங்குகளாக வைக்கப்படும் அந்த இடத்திலும், அனைத்து இயந்திரத்தனமான மானுடம் மறந்த மனிதர்களின் சிறைகளை உடைத்துக் கொண்டு, உயிர்த் துடிப்பு தன்னை, தன் சக்தியை வெளிப்படுத்துகிறது.

சிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரை
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in சமூகம்சைவம்நிகழ்வுகள்பண்டிகைகள்பொதுவீடியோ on 12 February 2010
Stats: and 30 Comments

ஒரு மிகப் பெரும் ஆன்மிக-சமுதாய-கலாசார நிகழ்வாக, மகா சிவராத்திரி அன்று குமரிமாவட்டத்தில் நிகழும் சிவாலய ஓட்டத்தில் சிவ பக்தர்கள் “கோபாலா கோவிந்தா” எனும் முழக்கத்துடன் குமரி மாவட்டம் முழுவதும் 12 சிவாலயங்களுக்கு ஓடுகின்றனர். இயற்கை எழில்கொஞ்சும் பகுதிகளில் அமைந்துள்ள பாரம்பரியமிக்க கோவில்கள் இவை. இதன் பின் உள்ள மகாபாரத ஐதிகக் கதையை விளக்கி, பன்னிரண்டு ஆலயங்களையும் வீடியோ காட்சிகளாகவும் அளிக்கிறது இந்தச் சிறப்புக் கட்டுரை.


Publications »

திருவள்ளுவர் கண்டுபிடித்த துப்பாக்கி!
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in சமூகம்பொருளாதாரம் on 3 February 2010
Stats: and 7 Comments

பிட்ஸாவும் பர்கரும் உண்டு மேற்கத்தியமாகி நம் உயிர் வாழ்தலின் அடிப்படையான பண்பாட்டு மரத்தையே வெட்டி வீழ்த்தி நம்மை நாமே “நீருக்கான உலகப் போரில்” அழிக்கும் மேற்கத்திய நாகரிக தலைமுறையாக நாம் முழுமையாக மாறுவதற்கு முன்னால் “உணவாகும் நீரை” கட்டிக்காத்த பண்பாட்டின் சுவடுகளையும் சிறிது பின்நோக்ககிப் பார்ப்பது நல்லது… நம் பண்பாட்டின் ஆகப்பழமையான பொறியியல் கலையின்-அறிவியலின் அடிப்படை அமைப்புகளில் ஒன்றாக குளங்கள் மற்றும் ஏரிகளின் வடிவமைப்பையே குறிப்பிடலாம்.

திரைப்பார்வை: அவதார்
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in சினிமா on 22 December 2009
Stats: and 27 Comments

ஆனால் இத்திரைப்படம் ஒரு ஹிந்துவுக்கு இந்த கிராபிக்ஸ் பிரம்மாண்ட ‘ஆஹா’க்களை மீறி சில செய்திகளை சொல்கிறது. ஒரு விதத்தில் இத்திரைப்படம் மேற்கத்திய பண்பாட்டின் ஒரு வாக்குமூலம் என்று சொல்லலாம்.

புரட்சியிலிருந்து வேதாந்தத்துக்கு
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in அறிவியல்வழிகாட்டிகள் on 11 December 2009
Stats: and 7 Comments

நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் ஒரு முக்கிய கருத்தியல் புரட்சிக்கான தொழில்நுட்ப விதை போடப்பட்டது. அதிகமாக பெயர் அறியப்படாத ஒரு கணிதப் பேராசிரியர் தான் வடிவமைத்த ஒரு பொருளை நகர சபையாரின் முன்னால் வைத்தார்,. சில அடிகளே உள்ள மரத்தாலான குழாயின் உள்ளே ஆடிச்செல்லுகளை வைத்து செய்யப்பட்ட அந்த அமைப்பு விரைவில் மேற்கின் கருத்தியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என யார்தான் நினைத்துப் பார்த்திருக்க முடியும்!

சோமபானம் என்னும் மர்மம்
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in வரலாறுவேதம் on 17 November 2009
Stats: and 30 Comments

இந்திய ஆன்மிக அனுபவம் என்பதை போதை என்பதாக மட்டுமே காணும் ஐரோப்பிய இனமையப் பார்வையையும் இங்கு காணலாம். மேலும் ஆரிய-படையெடுப்புக் கோட்பாட்டாளர்களுக்கு இந்தியாவுக்கு முழுக்க முழுக்க அன்னியமானதான ஒரு தாவரத்தைக் கண்டடைய வேண்டிய அவசியமும் இருக்கிறதென்பது விஷயத்தை இன்னும் சிக்கலாக்குகிறது…. ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டுக்கு நவீன ஆராய்ச்சி அளித்துள்ள மற்றொரு அடி.

ஹிந்து தர்மத்தின் அதிகாரி யார்?
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in இந்து மத விளக்கங்கள்சமூகம்பொது on 2 November 2009
Stats: and 44 Comments

என்னதான் மாபெரும் கருணை பொங்கும் இதயத்திலிருந்து மானுடத்துயரனைத்தையும் நீக்க உருவெடுத்ததாகத் தன்னைக் காட்டிக்கொண்டாலும், ஒற்றைப்பார்வைகளும், ஒற்றை அதிகார பீடங்களும் அழிவைத்தான் ஏற்படுத்தும் …ஹிந்து தர்மத்தில் சாஸ்திர சம்பிரதாயங்கள் உறைநிலை கொண்டவை அல்ல. அவை நெகிழ்ச்சித்தன்மை கொண்டவை. காலந்தோறும் பரிணாம மாற்றம் அடைபவை. மானுட நலத்தையே தம் இலட்சியமாகக் கொண்டவை. அனைத்துயிரும் அனைத்துலகும் இன்புற்றிருப்பதையே அவை நோக்குகின்றன. அவற்றின் நோக்கம் சனாதனமானது, அழிவற்றது. அதற்கான வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

நூல் அறிமுகம்: வரலாற்று ஆராய்ச்சி
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in புத்தக விமர்சனம்பொது on 23 October 2009
Stats: and 72 Comments

ஆரியப்படையெடுப்பு என்பது பொதுவாக இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டை பொறுத்தவரையிலும் ஒரு முக்கியமான அரசியல் கேள்வியாக ஆகியுள்ளது. ஏனெனில் சில முக்கிய அரசியல் இயக்கங்கள் தமது கோட்பாட்டின் அடித்தளமாகவே இந்த ஆரிய இனவாதத்தை முன்வைக்கின்றன. மேற்கத்திய பெரும் அகாடமிக் நிறுவனங்களில் பல இந்த கோட்பாட்டை வாழவைப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. இக்கோட்பாட்டின் முக்கிய மேற்கத்திய விமர்சகராக திகழ்பவர் டாக்டர்.எல்ஸ்ட். இவரது இந்நூல் குறித்து ஒரு அறிமுகமாக இக்கட்டுரையை தமிழ் ஹிந்து வெளியிடுகிறது.

மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in சமூகம்பொதுவழிகாட்டிகள் on 2 October 2009
Stats: and 161 Comments

ஹிந்து சிந்தனையை -ஒற்றைத்தன்மையற்ற பார்வையை- அவர் மானுடத்தின் சமுதாய பிரச்சனைகளுக்கு பயன்படுத்தினார். இதனால் கிடைத்த சாத்தியக்கூறுகளின் விதைகள் இன்னும் காந்திய சிந்தனையில் புதைந்து கிடக்கின்றன. அதனால் பணபலமும் அதிகாரபலமும் இல்லாமல் தர்மத்தை மட்டுமே நம்பி போராடும் எந்த மக்கள் கூட்டத்துக்கும் அவை மிகச்சிறந்த ஆயுதங்களாக உதவக்கூடியவை.

வேதாளம் சொன்ன கதை: குமரி மாவட்டத்தில் ஒரு பிள்ளையார் கோவில்
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in சமூகம்நிகழ்வுகள்பொதுவீடியோ on 27 September 2009
Stats: and 46 Comments

வேதாளம் எள்ளி நகைத்து “மகனே நீ ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய்? நீ உனக்காக கஷ்டப்படுகிறாயா அல்லது வேறு யாருக்காகவோவா? இந்த உலகத்தில் நன்றி கெட்டவர்கள் உண்டு அவர்கள் உன்னை பயன்படுத்திக்கொண்டு பிறகு அதிகாரத்துக்கு வந்த உடனேயே ஆதாயத்துக்காக உன் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு உனது நியாயமான கோரிக்கைகளை கூட நிராகரித்து விடுவார்கள். இதற்கு உதாரணமாக நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன் கேள் …

ஆண்டாள் என்னும் அற்புதம் - நல்லார் பொருட்டுப் பெய்யும் மழை!
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in இந்து மத விளக்கங்கள்இலக்கியம் on 1 September 2009
Stats: and 10 Comments

காம உணர்ச்சியிலிருந்து ஆன்மிக நிலைக்கு என்னும் நிலையிலிருந்து திருமண அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு கீழ்படிதல் என்பதாக அந்த உறவினை மாற்றி அமைத்தது. நவீன காலத்துக்கு முந்தைய திருமண அமைப்பில் பெண்ணின் கீழ்படிதல் நிலையே ஏசுவுக்கும்-சபைக்குமான உறவாகவும் அதன் அடுத்த கீழ்படிதலாக சபைத்தலைமைக்கும் அதன் உறுப்பினர்களுக்குமாக அது மாற்றப்பட்டது. இந்த மேற்கத்திய உருமாற்றம் பாரத பண்பாட்டில் ஏற்படவே இல்லை.

மதன்லால் திங்க்ராவின் மரண அறிக்கை - நூற்றாண்டு நினைவுகள்
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in நிகழ்வுகள்வரலாறுவழிகாட்டிகள் on 17 August 2009
Stats: and 12 Comments

” ஒரு ஹிந்து என்ற முறையில் என் தேசத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம் என் தெய்வத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம். என் தேசத்தாயின் சேவை ஸ்ரீ ராமனின் சேவை. அவளுக்கு செய்யப்படும் சேவை ஸ்ரீ கிருஷ்ணனுக்கு செய்யப்படும் சேவை” .. சிறைக் கம்பிகளுக்குள் மரணமெனும் மணப்பெண்ணுக்காகக் காத்திருந்த அந்த இளைஞனின் பெயர் மதன்லால் திங்க்ரா. அவரது இறுதி அறிக்கையைப் பெற்றுக்கொண்டு கனத்த இதயத்துடனும் இத்தகைய தியாகக் குழந்தைகளைப் பெற்ற பாரத மண்ணில் பிறந்ததற்காக சோகத்துடனான பெருமிதத்துடனும் ..

பகைவருக்கருள்வாய் நன்னெஞ்சே
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in ஆன்மிகம்கதைகள்சமூகம்பயங்கரவாதம்பொது on 30 July 2009
Stats: and 20 Comments

பல நூற்றாண்டுகளாக ஆப்கானிஸ்தானிலிருந்தும் அதற்கு அப்பாலிருந்தும் இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் பாரதத்தின் மீது படையெடுப்பதும் தாக்குவதும் கொள்ளை அடிப்பதும், அடிமைகளாக மக்களை சிறைபிடித்து செல்வதும் நடந்து வந்துள்ளன. மகாராஜா ரஞ்சித் சிங் காலத்தில்தான் இந்த கொடூரச்செயல்களை நிறுத்தும்படி ஆப்கானிஸ்தானம் பணியவைக்கப்பட்டது.

வேர்க்கடலைத் தோல்கள், வேதத்தின் காலம், விடுதலை வேள்வி …
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in அரசியல்வரலாறுவழிகாட்டிகள் on 24 July 2009
Stats: and 14 Comments

… இன்று வரலாறு அந்த நீதிபதியை மறந்துவிட்டது, இந்த வழக்கு நடந்த மும்பை உயர்நீதிமன்றத்தில், அந்த தீர்ப்பு வழங்கப்பட்ட அறையில் அந்த “குற்றவாளியின்” வார்த்தைகள் பொறிக்கப்பட்டு விளங்குகின்றன. அந்த குற்றவாளிதான் சுதந்திர கோஷத்தை இந்த தேசத்துக்குத் தந்த மகான்…. அவரது உற்ற நண்பராகவும் சீடராகவும் விளங்கிய ஜின்னா, அவரது மறைவு வரை அப்பழுக்கற்ற தேசியவாதியாகவே இருந்தார், அதன் பின்னரே பாதை தடுமாறி பிரிவினை வாதியானார்….

சுவாமி விவேகானந்தரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும்
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in அறிவியல்பொதுவழிகாட்டிகள் on 4 July 2009
Stats: and 17 Comments

”சில நேரங்களில் ஏசு என்று ஒரு மனிதர் வாழாமலே இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைப்பதுண்டு. வேறெந்தப் பெயரும் வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகாரத்துக்காக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதில்லை… மனித இனம் ஏசுவின் பெயரால் தனக்குத்தானே என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள் …..

தாமஸ் பெரி: சூழலியல் மூலம் பிரம்மத்தைத் தொட்ட கத்தோலிக்க துறவி
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in பிறமதங்கள்வழிகாட்டிகள் on 12 June 2009
Stats: and 8 Comments

… அவர் சீன மற்றும் இந்திய தத்துவங்களை படிக்க ஆரம்பித்தார். இது அவரை இயற்கையில் இருக்கும் இறை குறித்த உணர்வினை அளித்தது. பின்னர் அவர் தன்னை இறையியலாளன் (theologian) என கூறுவதை தவிர்க்க ஆரம்பித்தார். தன்னை பூமியியலாளன் (Geo-logian) எனக் குறிப்பிட ஆரம்பித்தார். பாரத ஞான மரபு கூறும் “மாறும் பிரபஞ்சத்தின் பின்னால் இருக்கும் மாறா உண்மை” - எனும் உண்மையை அவர் தம்முடைய சூழலியல் பார்வையின் அடிப்படையாகக் கொண்டார்… மானுடத்தின் காயங்களை குணப்படுத்தி ஒருங்கிணைக்கும் அந்த சக்தி பாரதப் பண்பாட்டில் உள்ளது என நாம் உறுதியாக நம்புகிறோம். அந்த நம்பிக்கையின் அக்கரை விகசிப்பாக தாமஸ்பெரியை நாம் காண்கிறோம்.

கிறிஸ்தவப் பல்கலைக்கழகத்தில் கீதை
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in இந்து மத மேன்மை on 11 June 2009
Stats: and No Comments

“என் தினத்தை உன்னதமாக்கியது பகவத் கீதை. நூல்களில் முதல் நூல் அது. ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் மகோன்னதம் நம்மிடம் உரையாடுவது போன்றதோர் மகத்துவம் அது - அதில் அற்பமானதென எதுவுமே இல்லை. ஆனால் மகா விசாலமானதும் அமைதி ததும்புவதும், சீரானதுமானதோர் ஆதி பேரறிவு மற்றோர் யுகத்திலிருந்து நாம் இன்று எதிர் நோக்கும் அதே கேள்விகளை உள்ளார்ந்து அறிந்து பதிலளித்துள்ளதாக அது அமைகிறது.” அமெரிக்காவின் மிகச்சிறந்த தத்துவ மேதையான ரால்ப் வால்டோ எமர்ஸன் (1803-1882) பகவத் கீதையை குறித்து எழுதிய வார்த்தைகள் இவை.

2009 இல் 1984?
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in அரசியல் on 4 June 2009
Stats: and 4 Comments

நினைத்துப் பாருங்கள். காம்ப்ரிட்ஜில் பொருளாதாரம் பயின்று முனைவர் பட்டம் பெற்று இந்தியாவின் தலை சிறந்த பொருளாதார மேதைகளில் ஒருவராக (சரியாகவோ தவறாகவோ) ,முன்னிறுத்தப்படுபவர், ஒரு இளைஞரை “தேசிய இளைஞர் தலைவர்” என புகழ்கிறார். புகழப்படுபவர் தமது எம்ஃபில் பட்டப்படிப்பில் தேசிய பொருளாதார திட்டமிடுதலிலும் கோட்பாட்டியல் எனும் பிரிவில் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை வாங்காதவர். இதனை வீண்புகழ்ச்சி என்று கருதுவீர்களென்றால் தவறு…இது அதைவிட மோசமானது. அரசியல் சக்தி கொண்டவரை வீண் புகழ்ச்சி செய்வதும் அவரது கை-கால் பிடிக்கும் [...]

நினைவஞ்சலி: பேராசிரியர் பரமசிவம்
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in சமூகசேவை on 28 March 2009
Stats: and 12 Comments

பேராசிரியர் படுகொலையில் இன்றளவும் நியாயம் கிடைத்திடாத அளவிலும் கூட அவரது நினைவு தினமும் மானுடத்துக்கு சேவை செய்யும் தினமாக மாறியுள்ளது, அன்னிய மதவெறியின் ஆதிக்க கொலைக் கரங்களுக்கு அப்பால் இன்றும் நம் இந்து தருமம் வாழ்வது இத்தகையோரின் தியாகங்களால்தாம்.

“…நல்லவர்கள் யாருமே நடமாட முடியாத சூழ்நிலை இப்போது இருக்கிறது. இதை அரசும் காவல்துறையும் சீர் செய்ய வேண்டும். இல்லையெனில் பரமசிவத்தைப் போல இன்னும் பலர் கொலை செய்யப்படலாம் என்ற நிலை உருவாகிவிடும்” என்றார்…

Publications »

கன்யாகுமரி மாவட்டத்தில் இந்துக்கள் படும் பாடு
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in வீடியோ on 27 March 2009
Stats: and 6 Comments

கன்யாகுமரி மாவட்டம் கிறிஸ்தவ மதமாற்றம் பெருமளவில் நடந்து வரும் தென்மாவட்டங்களில் ஒன்று. அங்கேயுள்ள பெருமாள்புரம் கிராமத்தில் ஒரு 20 குடும்பங்கள் கிறிஸ்தவர்கள் ஆனதும் அவர்கள் நேற்றுவரை சகோதரர்களாக இருந்த இந்துக்கள் மீதும் இந்துக் கோவில்கள் மீதும் வன்முறையை ஏவி விடத் தொடங்கிவிட்டனர். அப்பாவி இந்துக்கள் வருந்திச் சொல்வதைக் கேளுங்கள்:
[youtube]http://www.youtube.com/watch?v=i0gkD16-_GY[/youtube]
மின்அஞ்சலில் அனுப்ப, சேமிக்க, பகிர்ந்துகொள்ள..

டார்வின் - முருகன் வைத்த குட்டு
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in அறிவியல் on 18 March 2009
Stats: and 7 Comments

மிகப் பெரிய அளவில் இந்துக்களும் பௌத்த சமயத்தினரும் உயிர்களின் தோற்றம் குறித்த டார்வினிய அறிவியலை ஏற்றுக்கொள்கின்றனர்….
அகந்தையேறிய சிருஷ்டிக்கடவுளை தமிழ்கடவுள் முருகன் தலையில் குட்டி அடக்கினார் என்று சொல்லும் புராணம். ஞானக் கடவுள் முருகன். பிரபஞ்ச சிருஷ்டியின் இரகசியம் பிரணவம் என்று அந்த இரகசியத்தைத் தகப்பன் சாமியாகச் சொன்னவர். பல வாசிப்புக்களை நாம் விரித்துக்கொள்ள சாத்தியங்களை தரும் தொன்மம் இது…

ஒரு முட்டாள் கதையால் என்ன இலாபம்?
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in அறிவியல் on 10 March 2009
Stats: and 16 Comments

அந்த அரசாங்க அதிகாரியிடம் உடன் சென்றவர் சொன்னார், “இந்த மலைக்குன்றுக்கு மருத்துவாழ் மலை என்று பெயர். அனுமார் சிரஞ்சீவி மலையை கொண்டு வந்த போது ஒரு கல் இங்கே விழுந்ததாகவும் அதுதான் இந்த குன்று எனவும் ஐதீகம்.” அரசு அதிகாரியின் புருவங்கள் நெரிந்தன, “நம்மாளுங்க என்ன கதை விட்டாலும் நம்பிடுவாங்க பாருங்க, முட்டாப்பசங்க”

டாவின்ஸியின் அறிவியல்: நூல் அறிமுகம்
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in அறிவியல் on 11 February 2009
Stats: and 6 Comments

லியனார்டோவின் வாழ்க்கையை ஒரு மனிதராகவும் ஒரு அறிவியலாளராகவும் இந்நூல் காண்கிறது. அமைதிவாதியாக, போரின் வீண்தன்மையை உணர்ந்தவரான ஒரு கலைஞர் டாவின்ஸி. சமயம் தாண்டிய ஆன்மிக அறிஞர். ஓவியர். சிக்கலான அதிசயமான பொறியியல் கருவிகளை வடிவமைத்தவர். இவை எல்லாவற்றுடனும் அவர் அறிவியலின் பிதாமகர் எனும் கோணத்தில் காண்கிறார் காப்ரா.

மகாத்மாவின் வேர்கள்: “இருளர்கள் ஓர் அறிமுகம்” (நூல் அறிமுகம்)
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in சமூகம் on 13 December 2008
Stats: and 6 Comments

மகாத்மா காந்தி தனது வார்தா ஆசிரமத்தில் பாம்புகளைக் கண்டால் பத்திரமாக அவற்றைப் பிடித்து ஊருக்கு வெளியே அவற்றை விட்டுவிட்டு வர அவர் வைத்திருந்த Y வடிவக் கம்பையும் அதனுடனிருந்த பெட்டியையும் பார்த்து “பாம்பிடம் கூட இத்தனை அகிம்சையா?” என வியக்கலாம். பாம்பு இருக்கும் மூட்டையைக் காட்டி தன்னுடன் வந்த நகரவாசியிடம் “குழந்தை குட்டி நிறைய இருக்குற எடத்துல இது வரக்கூடாது. அதுக்கு ஏத்த குளிர்ச்சியான எடத்துல விட்டுட்டா அது பாட்டுக்கு கெடக்கும். அதான் இத நேத்து பார்த்தபோதே பிடிச்சு மூட்டைக் கட்டிட்டோம். [...]

அருட்திரு பாலபிரஜாபதி அடிகளார்: கட்டாய மதமாற்ற சலுகைகளை நிறுத்துக
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in பொது on 25 November 2008
Stats: and 1 Comment

தற்போது மாவட்டம்தோறும் சிறுபான்மையினர் நலவாரியம் மூலம் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கி வருகிறது. இதனால் இந்து நாடார் சமுதாயம் தனது நிலைப்பாட்டினை இழந்து வருகிறது. பிற்படுத்தப்பட்ட இந்து நாடார் சமுதாய ஏழைகள் சலுகைகள் பெறும் விதத்தில் பிற மதங்களுக்கு மாறுகிறார்கள். இது மதமாற்றத்துக்கு அரசே சலுகை கொடுப்பது போன்று அமைந்துவிடுகிறது. எவ்வளவு காலம் இட ஒதுக்கீடு முறை இருந்தாலும் யாரும் ஜாதி மாறி சலுகை பெற முடியாது. சலுகை காட்டி மதமாற்றம் என்பது வெள்ளையர் ஆட்சி காலத்தில் [...]

பச்சை பச்சையாகச் சில விஷயங்கள்
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in அறிவியல் on 18 November 2008
Stats: and 3 Comments

நமக்குப் பொதுவாக கிடைக்கும் சித்திரம் உலகெங்கும் பரவிய மேற்கத்திய நாகரிகத்தின் பிரதிநிதிகள் ஆங்காங்குள்ள செடிகொடிகள் விலங்குகளை ஆராய்ந்து அவற்றினை ஒரு அறிவியல் முறைப்படிப் பாகுபடுத்தி அந்த வகைப்படுத்தல் அறிவியலை உலகெங்கும் பரப்பினர் என்பதுதானே? … அறிவியல் வரலாற்றாசிரியர் க்ரூவின் கணிப்புப்படி தாவரவியல் ஆராய்ச்சியாளர் லின்னயஸ் இந்தியப் பகுப்பு முறையின் அடிப்படையிலேயே ஏறக்குறைய 240 தாவரங்களை தனித்தனியான தாவர இனங்களாக பாகுபடுத்த முடிந்தது… ஒவ்வொரு தாவரத்தையும் குறித்த தகவல்கள் அவற்றின் மருத்துவப் பயன்பாடுகள் செய்யுள் வடிவத்தில் மலபார் பகுதி ஈழவர்களால் தெரிவிக்கப்பட்டன. இவற்றுள் சில செய்திகள் மிகத் தொன்மையான பழஞ்சுவடிகளிலிருந்து வந்தவையாக இருந்தன. இந்தத் தாவரத் தொகுப்பியல் ஐரோப்பாவில் வெகுவாகப் பரவியது… “தாவரவியலின் இலக்கணம் குறித்து எழுதிய ஜான் ரே (John Ray) வான் ரீட்டினை வாசித்திருந்தார் என்ற போதிலும் உயிரினம் (species) குறித்த அறிவினை அவரிடம் சேர்த்த ஈழவர்களின் பங்களிப்புக்கு அவர் முக்கியத்துவமும் அளிக்கவில்லை…”

அழியட்டும் சாதியம் மலரட்டும் ஆன்மநேயம்
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in சமூகம் on 14 November 2008
Stats: and 7 Comments

அம்பேத்கர் சட்டக்கல்லூரி சம்பவம் தமிழ்நாட்டின் மனச்சாட்சியை உலுக்கியிருக்கும். கத்தியுடன் ஒரு மாணவன் பாய்வதும் பின்னர் மாணவர்கள் சூழ்ந்து கீழே கிடக்கும் ஒரு மாணவனை தடிகளால் அடிப்பதும் காவல்துறை அதிகாரிகள் அதனை வேடிக்கை பார்ப்பதும் - ஏறக்குறைய சினிமா காட்சியோவென தோன்றவைக்கும் ஒரு பயங்கரம். தாய் தந்தையர்கள் வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி தம் செல்வங்களை படிக்க பட்டணத்துக்கு அனுப்புகிறார்கள், அவர்கள் தங்கள் செல்வங்கள் படித்து பட்டம் வாங்கும் காட்சியை காணும் தருணத்துக்காக காத்துக்கிடக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு காணக் [...]

வனவாசிப் பழங்குடிகள் இந்துக்களே
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in இந்து மத விளக்கங்கள்சமூகம் on 20 October 2008
Stats: and 3 Comments

ஜவஹர்லால் நேருவின் தோழரான வீரியர் எல்வின் கிறிஸ்தவ மிஷினரி ஆவார். இந்திய வனவாசிகளை மதம் மாற்ற அவர் வந்தார். அவரது தொடக்க காலங்களில் வனவாசிகள் இந்துக்கள் அல்ல என்றும் இந்துமயமாக்கப்படுவதே வனவாசிகளுக்குப் பெரும் தீமை என்றும் அவர் பிரசாரம் செய்து வந்தார். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் வனவாசிகளுடன் வாழ்ந்த பின்னர் அவர் எழுதினார்: “பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நான் முதன்முதலில் ஆதிகுடிகளுடன் வாழ வந்தபோது அவர்கள் இந்துக்கள் அல்ல எனக் கருதினேன். ஆனால் பத்து ஆண்டுகள் அவர்களைக் குறித்து ஆழமாக ஆராய்ச்சி செய்தபோது நான் கொண்டிருந்த எண்ணம் தவறு என்பது நிரூபணமாகிவிட்டது.”…

புனித தோமா சினிமா: கத்தோலிக்கர்களே சிந்திப்பீர்!
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in வரலாறு on 5 August 2008
Stats: and 23 Comments

இந்தியாவுக்கு, குறிப்பாகத் தமிழகத்துக்கு, தோமா வந்ததாகக் கூறுகிற கத்தோலிக்க சபையாரும் கிறிஸ்தவப் பெருமக்களும் அதனைத் தங்கள் நம்பிக்கை என்ற அளவில் மட்டுமே கூறுவார்களெனில் அதில் கேள்வி கேட்க எவ்வித உரிமையும் எவருக்கும் இல்லை. ஆனால் அதனை வரலாறாக முன்வைத்து அவரைக் கொன்றதாக இந்துக்கள்மீது குற்றம் சாட்டுவார்களேயானால் நிச்சயமாக அவர்கள் கூறுவதன் வரலாற்றுத்தன்மையை ஆராய்வது ஒவ்வொரு தமிழ்-இந்துவின் கடமையாகிறது…

கீதை, சீதை, தாய் தெய்வம், பெண்ணடிமைத்தனம்: சில கேள்விகள்
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in கேள்வி-பதில்மகளிர் on 29 June 2008
Stats: and 5 Comments

ஸ்ரீ கிருஷ்ணர் “பெண்களும் பரகதி பெறுவர்” (கீதை 9.32) என கீதையில் கூறுகிற போது அவர் கூறுவது ‘பெண் தாழ்ந்தவள்’ எனும் மனநிலை படைத்த ஆணினை நோக்கி என்றே கருத வேண்டும். “அவளுக்கு ஞானமும் வீடுபேறும் கிடைக்கும்” என கீதை சொல்வது மிக உன்னத நிலையை இந்த பிறவியிலேயே அவள் அடைந்திட முடியும் என்னும் எக்காலத்துக்குமான உண்மையையும் எனப் புரிந்து கொள்ள வேண்டும்….சீதை எந்த இடத்திலும் சொன்னதைக் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்கும் ஒரு பெண்ணடிமைப் பாத்திரமாக சித்தரிக்கப் படவில்லை. மாறாக வலுவான பெண்ணியப் பார்வை கொண்ட, அதே நேரத்தில் சமுதாயத்துக்கு ஒரு தன்னிறைவு இலட்சியமாக திகழும் பாத்திரமாகவே அவள் காட்டப் படுகிறாள். குறுகிய எல்லைகளைக் கடந்து மானுடம் முழுவதையும் அரவணைக்கும் பார்வையை சீதை மூலமாக இராமாயணம் நமக்கு வைக்கிறது

சோதிடம் என்பது உண்மையா பொய்யா?
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in கேள்வி-பதில் on 17 June 2008
Stats: and 14 Comments

வாழ்க்கையை நலமும் அழகும் செய்யப் பயன்படும் வானநூல் சாத்திரங்களை, இந்து தருமம் ஏற்கிறது. இந்துக்களின் சடங்குகள், வாழ்க்கை நிகழ்ச்சிகள், விவசாய வேலைகள் ஆகிய அனைத்திலும் பஞ்சாங்கம் ஒரு முக்கிய இடத்தை பெறுகிறது.
ஆனால் இந்த அழகிய பண்பாட்டு அம்சம் மூடநம்பிக்கையாக மாறுவதை இந்து தருமம் தடுக்கிறது.

இந்து சேவை அமைப்புகளின் தொண்டு
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in சமூகசேவை on 12 June 2008
Stats: and 32 Comments

மாற்றுமத சகோதரர் ஒருவர் என்னிடம் ‘எங்கள் மதத்தில் பாருங்கள் எவ்வளவோ தொண்டு அமைப்புகள் உள்ளன. நாங்கள் மருத்துவம் கல்வி ஆகிய தொண்டுகளை ஏழைகளுக்காக செய்கிறோம். ஆனால் இந்து மதத்தில் அத்தகைய செயல்பாட்டை காணமுடியவில்லையே. இதற்கு காரணம் இந்து மதம் கர்மம் கோட்பாட்டினை அடிப்படையாக கொண்டிருப்பதுதான்’ என சொல்லுகிறார். அவர் சொல்வது சரியாகத்தானே இருக்கிறது. இந்துக்களின் தொண்டு நிறுவனங்கள் கூட மாற்றுமத அமைப்புகளின் தாக்கத்தால் ஏற்பட்டவைதானே? நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
~ சொர்ணப்பன், மேட்டுப்பாளையம்
இந்தக் கேள்விக்கு இந்து தர்மம் சார்ந்த [...]

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பேச்சு-தமிழாக்கம்
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in இந்து மத மேன்மை on 11 June 2008
Stats: and 9 Comments

“..நான் Hinduism என்பதன் வரையறை பார்த்த போது அது சிருஷ்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தினை தாங்கும், போஷிக்கும், ஒருங்கிணைத்து பாதுகாக்கும் தர்மம் என கண்டேன். அது இல்லாமல் இப்பிரபஞ்சமே பிரிந்து போய் அழிந்துவிடும். வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் தர்மம் ஒவ்வொரு விதமான செயல்பாடுகளை வலியுறுத்துகிறது…..

நான் என்றுமே ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த ஆன்மிக கருத்துக்களால் உத்வேகம் பெற்றுள்ளேன்.”

அமைதிக்கான நீண்ட துதி: ஜே.கிருஷ்ணமூர்த்தி
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in வழிகாட்டிகள் on 10 June 2008
Stats: and 1 Comment

“ஸமஸ்கிருதத்தில் அமைதிக்கான நீண்ட துதி ஒன்று உள்ளது. பற்பல நூற்றாண்டுகளுக்கு முன், அமைதியின் தேவையை முற்றிலும் உணர்ந்த ஒருவரால் இயற்றப்பட்டது. தவிர அவரது அன்றாட வாழ்க்கையும் அமைதியில் வேரூன்றியதாக இருந்திருக்க வேண்டும். - ஜே. கிருஷ்ணமூர்த்தி”

சாதி வெறியருக்கு சங்கரர் எழுதியது
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in இந்து மத விளக்கங்கள் on 27 May 2008
Stats: and 5 Comments

“இவன் பிராம்மணன் இவன் நாய்மாமிசம் உட்கொள்பவன் என்ற இந்த மகத்தான வேற்றுமை எனும் மோகம் எங்கிருந்து வந்தது?”

அலைஸ் கால்ட்ரோன் - உலக அமைதிக்காக உழைத்த இந்து
BY அரவிந்தன் நீலகண்டன்
Posted in புதிய இந்து on 6 May 2008
Stats: and 2 Comments

அமெரிக்க இசை கலைஞரும் சனாதன தருமத்தின் ஆன்மிக இசை பாரம்பரியத்தின் மூலமும் நாடு, இன மத பேதமின்றி உலக அமைதிக்காக உழைத்தவருமான இந்த பெண் கலைஞரினை உலக நன்மைக்கு உழைத்த இந்துக்கள் வரிசையில் தன் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துவதில் தமிழ்இந்து.காம் பெருமை அடைகிறது.

 சமூகம் »கார்கோகல்ட் ஹிந்துத்துவா

நாஸா சான்றாதாரம் தேடும் ஹிந்துத்துவர்களை நாம் இந்த வரைபடத்தில் எந்த புள்ளியில் நிறுத்தலாம்? முதலில் ஏன் நாஸா? இவர்கள் எப்போதும் சுதேசியை முன்வைப்பவர்கள் அப்படியிருக்க ஏன்

 இஸ்ரோவை தேர்ந்தெடுக்க கூடாது? ஏன் நாஸாவை தேர்ந்தெடுக்க வேண்டும்? தங்களை ஒரு உலகளாவிய வட்டத்தில் வைத்து பார்க்க முயல்கிறார்கள். அவர்களை அறியாமலே அதற்கான சிறந்த வெளிப்பாடாக அமெரிக்க அறிவியல் நிறுவனம் ஒன்றை தேர்ந்தெடுக்கிறார்கள். அதன் மூலம் தங்கள் பழமைக்கு ஒரு சான்றாதாரம் தேடுகிறார்கள்.

அறிவியல்சமூகம் »

மாய உறுப்புகள் நிறுவிய ஞான தரிசனம்

எதனை இந்த உலகத்தின் துயர் துடைக்காத தத்துவம் என்கிற மாதிரியாக ரூபர்ட் ஷெல்ட்ரேக்கும் எந்த தத்துவ சிந்தனையின் வெற்றியால் இந்தியாவில் அறிவியல் தேக்கநிலையை அடைந்தது என அவுட்லுக் கட்டுரையாளரும் கருதினார்களோ அதே தத்துவசிந்தனை துயர் துடைக்கும் செயல்முறையை உருவாக்கியதை நாம் காண்கிறோம். இந்திய தத்துவத்தின் ஒரு பெரிய கண்டடைதலே மாயை என்பது. இது உலகமே பொய் என்பதாக கடந்த இருநூறு ஆண்டுகளின் பொதுபுத்தியில் பதியவைக்கப்பட்டது. ஆனால் மாயை என்பது எப்படி நாம் புலன்களால் அடையும் ஒவ்வொன்றும் கட்டமைக்கப்படுகிறது என்பதை சுட்டுவது. அதனை தத்துவத்திலும் வாழ்க்கை முறையிலும் ஒரு கூறாக மாற்றியதன் மூலம் இந்திய ஞான மரபு ஒரு வலிமையான பண்பாட்டை உருவாக்கியது.


அறிவியல்சமூகம் »

அறிவியல் கல்விக்கான சமுதாயத்தேவை

பிராந்திய இயற்கை வளங்களையும் அதனுடன் தன் வாழ்வு பின்னிப்பிணைந்து கிடப்பதையும் சிறிதும் உணராமல் நம் மாணவர்கள் பள்ளிகளிலிருந்து வெளிவந்து பட்டமும் பெற்றுவிடுகிறார்கள். அவர்களுக்கு அறிவியல் என்பது முற்றிலும் மேற்கத்திய விஷயம்; வெள்ளைக் கோட்டுடன் வெள்ளைத் தோலுடன் இணைந்த ஒரு பண்பாட்டு அன்னியம்.




     RSS of this page