Home / AirtelJeMo

AirtelJeMo



The below incident would have got amplified more than that if it had happened to India's leading bloggers who are writing in English! (atleast TOI would have allotted 2 columns in its first page!)
Since Jeyamohan writes in Tamil, I believe the damage would have been lesser to Airtel!
If you have time (15-20 min) read all the below links in full!

ஏர்டெல்லும் இந்தியாவும்
கடைசியில் குத்துமதிப்பாக பதில்சொல்லிவிட்டார்கள். பணத்தை முகவர்கள் ஏர்டெல்லுக்கு கட்ட விட்டுப்போயிருப்பார்கள். மறந்திருக்கலாம், அல்லது எடுத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் போனபணம் போனதுதான். ரோஷன் அளிக்கும் ரசீதுக்கெல்லாம் ஏர்டெல் பொறுப்பு அல்ல. ரோஷனும் பொறுப்பல்ல. ஏனென்றால் அவர்கள் எனக்கு சர்வீஸ் தரவில்லை. ஒன்றுமே செய்யமுடியாது. நெருக்கினால் ஏர்டெல் ஏதாவது கணக்கு ஒன்றை அனுப்பும், பணம் வராது. மூவாயிரம்தானே, விட்டுவிடுங்கள். மாதம் மூவாயிரம்ரூபாய்க்குமேல் பில் கட்டும் உங்களுக்கு இது ஒரு தொகையா?
......
மூவாயிரம் ரூபாயை இப்படி நாட்கணக்கில் மனதளவில் சுமந்து அலைவது எனக்கும் கடினம். ஒன்றுசெய்யலாம், ஏர்டெல்லை மாற்றிவிடலாம். மீண்டும் அங்கே சென்று மிஞ்சியிருக்கும் பணத்தை முழுக்க கட்டினேன்.மீண்டும் இரண்டாயிரம் ரூபாய். வோடபோனுக்கு போகலாம் என்றார்கள். ‘அதுவும் ஒரு மனநிம்மதிக்காத்தான் சார். நாம மாத்துறோம்னு ஒரு சமாதானம். அங்கயும் இப்டித்தான்’ என்றார் நண்பர். இதுதான் இந்தியா. இங்கே சர்வீஸ் என்றால் மோசடி என்று பொருள். அரசியல் என்றால் ஊழல் என்பதுபோல
ஒரு நாள், அவர் ஒரு டிவிடி ப்ளேயர் வாங்கி வருகிறார். அது வேலை செய்ய வில்லை. அதைப் பற்றிய ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுக்க தொலை பேசுகிறார்.. அது ஒரு வெள்ளி மாலை.. தொலைபேசியில் வரும் பெண், அழகான ஆங்கிலத்தில், திங்கள் காலையில் தான் முடியும் – ஏனெனில், வெள்ளி மாலையோடு, சர்வீஸ் செண்டர் ஆட்கள் வேலை செய்வதை நிறுத்திவிடுவார்கள்.. எனச் சொல்கிறார். வார இறுதியில், சினிமா பார்க்கும் கனவு தொலைந்து போய்க் கடுப்பாகிறார். அந்த வார ஞாயிறு காலையில், மின்சாரம் போகிறது.. மின் வாரியத்துக்குப் போன் செய்கிறார்.. அந்தப் பக்கம் போனை எடுக்கும் நபர், எரிச்சலான குரலில், “நெறய கம்ப்ளெயிண்ட் இப்போதான் வந்து, ஆட்கள் வெளியே போயிருக்கிறார்.. ஒரு மணி நேரத்துக்குள்ளாக ஆள் வருவார் எனச் சொல்கிறார்..” ஒரு மணி நேரத்துக்குள் ஆள் வரவில்லை. ஞாயிறு காலை ஒரு வேலையும் ஓடாத கடுப்பில், மீண்டும் போன் செய்ய, போனை எடுக்கும் நபர் குலைக்கிறார்.. பின்ன சற்று நேரம் கழித்து, ஒரு அழுக்கான நபர் வந்து மின்சார இணைப்பை சரி செய்து விட்டுத் தலை சொறிகிறார்.. காசு கிடையாது எனச் சொல்லி எரிச்சலில் விரட்டி விடுகிறார்.
அவரது டிவிடிக்காக திங்கள் காலை மீண்டும் போன் செய்ய – அந்தப் புறத்தில் இருக்கும் அம்மணி, அவரது பில் விவரங்களைக் கேட்டு விட்டு, இன்னொரு அலுவலகத்துக்குப் போன் செய்யச் சொல்கிறார். இப்படியாகப் பல அலுவலகங்களுக்குப் போன் செய்து, நான்கு வாரங்களுக்குப் பிறகு, அவரது டி.விடி உயிர் பெறுகிறது.
....
உண்மைதான். நான் நெடுங்காலம் தனியார்மயம் என்பது இங்கு அரசுத்துறைகளில் உள்ள மெத்தனத்தை இல்லாமலாக்கும் என நினைத்திருந்தேன். போட்டி சேவையை செம்மையாக்கும் என்று நம்பினேன். முதலாளித்துவத்தின் அடிப்படை விதி அது. ஆனால் நடைமுறையில் நேர்மாறாகவே நிகழ்கிறது. மிகச்சிறந்த உதராணம் இந்த ஏர்டெல் தான். மீண்டும் பி.எஸ்.என்.எல்லுக்கே செல்ல எண்ணியிருக்கிறேன்.
....
சேவையை மேம்படுத்துவது நேர்வழி. அது கடினமான பாதை. அதைவிட எளியது ஒன்று சேவைக்குச் செலவிடும் பணத்தைக் குறைப்பது. ஆகவே தகுதியான ஊழியர்களை வேலைக்கு வைக்கமாட்டார்கள். எந்தத் தகுதியும் இல்லாத ஊழியர்கள் எந்தப்பொறுப்பும் திறனும் இல்லாமலிருப்பார்கள். மாதாமாதம் மாறிக்கொண்டும் இருப்பார்கள்
....
ஏர்டெல்லுக்கு புகார்மேல் புகார் அனுப்பினேன். இந்தக் கட்டுரையை அனுப்பினேன். ஒருவழியாக நேற்று ஒரு கடிதம், அந்த ரசீதை ஸ்கேன் செய்து அனுப்பவும் என்னும் ஒற்றை வரி, அவ்வளவுதான். அவர்களுக்குத்தெரியும், இந்தியாவில் நுகர்வோர் ஒன்றுமே செய்யமுடியாது
ஏர்டெல் இணையதளத்திற்கு புகார் அளித்ததன் உடனடி பலன் ஒன்றே. ஐந்து நிமிடங்களுக்கு ஓரு குறுஞ்செய்தி. அவர்களின் நாட்டுநலன் திட்டங்கள் இன்ன பிற விளம்பரங்கள்…
இரண்டாவது கட்டுரை வந்தபின்னரும் எந்த எதிர்வினையும் இல்லை. அக்கட்டுரையின் இணைப்பை அனுப்பினேன். அதன்பின்னர் அந்த பில்லின் ஸ்கான் காப்பி அனுப்பவும் என ஒற்றைவரி. மேலிடங்களுக்கு மேலும் மின்னஞ்சல் செய்தேன். இவர்கள் என்ன செய்வார்கள் என நன்றாகத்தெரியும். பார்ப்போமே என ஓர் ஆர்வம், அவ்வளவுதான்
.....
‘உங்கள் நிறுவனத்தின் ரசீதுபுத்தகத்தை எடுத்து இன்னொருவர் பணம் பெற்றுக்கொள்வார்களா என்ன? அப்படி பணம்பெற்றுக்கொண்டால் நீங்கள் உடனடியாக போலீஸில் புகார்செய்யவேண்டும்” என்றேன். “இல்லை நீங்கள் எங்களிடம்தான் செய்தீர்களா என்று பார்க்கவேண்டும்” என்றார். “பணம்பெற்றது மட்டுமல்லாமல் எண்ணுக்கு இண்டர்நேஷனல் ரோமிங் அப்டேட்டும் நீங்கள்தானே செய்திருக்கிறீர்கள்” என்றேன். “நீங்களே வந்தீர்களா? எங்கே எப்படி செய்தீர்கள் என்று அடையாளம் காட்டமுடியுமா?” என்றார். நான் சத்தம்போட்டதும் போனை வைத்துவிட்டார்
.....
வழக்கமாக அப்படி ரசீதுகளைப் பேணும் மனநிலை கொண்டவன் அல்ல. ரசீது இல்லாவிட்டால் ‘சரிதான் போ’ என்பதுதான் பதில். இப்போது ரசீதுடன் நேரில் வா என்கிறார்கள். நேரில் சென்றால் அடுத்த திங்கள் கிழமை வரமுடியுமா என்பார்கள். நானே சலித்து விட்டுவிடவேண்டும். மீண்டும் மீண்டும் பகல் முழுக்க கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சாராம்சம் ஒன்றுதான் ‘உன் காசு வராது. சும்மா வெறுக்கடிப்போம், பேசாமல் இரு’
.....
இதை எழுத ஓர் இணையதளம் எனக்கு இருக்கிறது. பிறர் இதைக்கூடச் செய்யமுடியாது. இப்படி எத்தனை ஆயிரம், லட்சம் ரூபாயை ஆட்டைபோட்டிருப்பார்கள்!
.....
ஒருவழியாக பணம் வந்துவிட்டது. ஏர்டெல் நிறுவனத்தைத் தலைமுழுகிவிட்டால் தொல்லை ஓய்ந்தது.அவர்களின் ‘வாடிக்கையாளார் சேவை’ போல ஒரு ஏமாற்றை இதுவரை கண்டதில்லை. அனைத்து மட்டங்களிலும் புகார் அளித்துவிட்டேன். இதுவரை கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் இந்த கட்டுரைகளை வாசித்துவிட்டார்கள். ஏர்டெல் நிறுவனம் அலட்டிக்கொள்ளவே இல்லை. அந்த மூவாயிரம் ரூபாயை விட அதிகமான பாதிப்பு நிகழ்ந்துவிடலாம் என்னும் சாதாரண வணிகநோக்கு கூட அவர்களிடமில்லை. ஏனென்றால் அப்படி எண்ணக்கூடிய எவரும் அங்கே இல்லை
திரு மாயவரத்தான் அவர்களின் செய்திகள் டாட் காம் நிறுவனம் இதைப்பற்றி விரிவான செய்தி வெளியிட்டு தொடர்விசாரணையையும் செய்தது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
செய்திகள் காம் - http://www.seythigal.com/?p=7504
செய்திகள் ஃபேஸ்புக் - https://www.facebook.com/seythigal?fref=nf



     RSS of this page